PDA

View Full Version : கந்தலான கதாநாயகன்



சிவா.ஜி
02-09-2007, 02:06 PM
அப்போதுதான் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகியிருந்தது.மனைவியுடன் மும்பையில் வாசம்.சில பல பொருளாதாரப் பிரச்சனைகளால் வாங்கும் சம்பளம் போதவில்லை.அதனால் ஏதாவது துணைத் தொழில் செய்து கொஞ்சம் சம்பாதிக்கலாம் என்று நினைத்து..நன்பர்கள் மூலமாக முயற்சி செய்து கொண்டிருந்தேன்.நான் ஏற்கனவே நாடகங்களில்(வெறும் டீ வடைக்கு மட்டும்தான்)நடித்துக்கொண்டிருந்ததால்,அதே நாடகத்தில் எங்களுடன் நடித்துக்கொண்டிருந்த சுமதி ஆண்ட்டி ஒருநாள்
"சிவா FILM DIVISION OF INDIA-ல ஒரு டாக்குமெண்ட்ரி படம் எடுக்கப்போறாங்களாம்,அதுல உனக்கும் எனக்கும் ஒரு ரோல் கெடைச்சிருக்கு நாளைக்கு போய் அந்த இயக்குநரைப் பார்த்துவிட்டு வரலாம்" என்று சொன்னார்.நடிப்பதில் எந்த பிரச்சனையுமில்லை...மத்திய அரசின் நிறுவனமென்பதால் பணம் குறைவாகக் கிடைக்குமே என்ற சின்ன தயக்கத்தில் அவரிடமே கேட்டேன்."அதெல்லாம் நாளைக்கு டைரக்டர் சொல்வார்,பேசாம என் கூட வா' என்று சொல்லிவிட்டு"நாளைக்கு காலையில ரெடியா இரு"என்று கொஞ்சம் அதட்டலாகவே(அவர் எப்போதுமே அப்படித்தான்..Dominating character..)சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
என் மனைவி என்னை ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு ஒரு பார்வை பார்த்தாளே....இன்னைக்கு வரைக்கும் அப்படி ஒரு பார்வையை இன்னொரு முறை பாக்கல.அத விடுங்க....ராத்திரியெல்லாம் பாதி தூக்கத்துல புரண்டு புரண்டு படுத்துட்டு,கனவுல தாவணிக்கனவுகள் பாக்யராஜ் மாதிரி கலர் கலரா ஜிகினா ட்ரெஸ்ஸெல்லாம் போட்டு அவுட் ஆஃப் ஃபோகஸ்ல தெரிஞ்ச கதாநாயகியோட டூயட் பாடி...எழுந்து,ஒரு வழியா 9 மணிக்கு சுமதி ஆண்ட்டிகூட மலபார் ஹில்ஸ்ல இருக்கற அந்த ஸ்டுடியோ மற்றும் அலுவலகம் இணைந்த கட்டிடத்துக்குள் நுழைந்தோம்.இயக்குநர் சின்ன பையனாக இருந்தார். சென்னை Film Institute−ல் படிச்சிட்டு அப்பதான் புதுசா வேலையில சேர்ந்திருந்தார்.நல்ல தமிழ்நாட்டுக்கலர்ல இருந்தார்,தென்தமிழ்நாட்டுப் பக்கத்து பேருன்னு நினைகிறேன்.இப்ப சரியா நினைவில்லை.எங்களோட பின்ன*னியை விசாரித்து விட்டு, ஏதாவது வசனம் பேசுங்கள் என்றதும்,எங்கள் நாடக வசனத்தையே இருவரும் கொஞ்சம் அதிகமாகவே பில்டப் குடுத்து பேசினோம்.

அவரும் திருப்தியாகி "ஓகே இன்னும் ரெண்டு நாளைக்கப்புறம் ஷூட்டிங்,ரெண்டு பேரும் இங்க வந்துடுங்க.எல்லோரும் சேர்ந்து ஸ்பாட்டுக்கு போயிடலாம்" என்று சொன்னதும் சுமதி ஆண்ட்டி முகம் அப்படியே சூரியகாந்தி மாதிரி மலர்ந்துவிட்டது.உன் மூஞ்சி எப்படி இருந்ததுன்னு கேக்கறீங்களா..?என் கவலை எனக்கு,மெதுவாக ஆண்ட்டியின் முழங்கையை சொறிந்தேன்.இரண்டு முறை தட்டி விட்டும்..மனம் தளரா விக்ரமாதித்தன் போல மீண்டும் சொறிந்தேன்.பட்டென்று திரும்பி என்ன என்பதுபோல் கண்ணாலேயே கோபமாகக் கேட்டார்."எவ்ளோ பணம் தருவாங்கன்னு இன்னும் சொல்லவேயில்லையே" என்று கிசு கிசுப்பாகக் கேட்டதும்..என் முகத்தைப் பார்த்து அவருக்கே பரிதாமாக இருந்திருக்கும் போல...."இரு அவங்களே சொல்லுவாங்க"என்று அமைதியாக சொன்னதும், நான் அடுத்து அந்த இயக்குநர் வாயிலிருந்து வரும் வார்த்தைகளையெல்லாம் வெகு உன்னிப்பாக கேட்க ஆரம்பித்தேன்.ஒரு வழியாக அவர் திருவாய் மலர்ந்தருளினார். ஒருநாள்தான் ஷூட்டிங் ஆளுக்கு 1000 ரூபாய் என்று.

கேட்டவுடன் உள்ளுக்குள் உற்ச்சாகம் கொப்பளித்தது.மாதம் முழுவதும் வேலை செய்தாலும் அரசாங்கம் எனக்கு சம்பளமாகத்தருவது 4500 ரூபாய்தான்.இதில் ஒரு நாளைக்கே ஆயிரமா...அந்த கணமே கற்பனையில் என் புது மனைவியைக்கூட்டிகொண்டு மார்கெட்டுக்குப் போய்விட்டேன்.
அடுத்து அந்த இயக்குநர் எங்கள் இருவரின் கேரக்டர் பற்றி சொன்னதும்,வசனத் தாள்களை ஆண்ட்டியிடம் கொடுத்து படித்துவிட்டு வரும்படி சொன்னதும்...எல்லாமே ஆண்ட்டி வீட்டுக்கு வந்து விளக்கமாக சொன்ன பிறகுதான் மூளையில் உறைத்தது.

அந்த சுபயோக சுபதினமும் வந்தது.பணம் கண்டிப்பாக கிடைக்குமென்ற நம்பிக்கை வந்த பிறகு,இப்போது என்னுடன் கதாநாயகியாக நடிக்கப்போகும் அந்த நடிகை எப்படி இருப்பாரென்று கற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டேன்....அட*டா இது வரைக்கும் டாக்குமெண்ட்ரி எதைப் பற்றி என்று சொல்லவில்லையே....டயரியா வந்த குழந்தைகளுக்கு,கிராமத்தில் மந்திரித்து விடுவது மூடப்பழக்கம்,அதற்கு ORS என்ற Electrolyte கொடுக்கப்பட வேண்டுமென்று அறிவுரை சொல்லி,எப்படி என்பதையும் விளக்கும் படம்தான் அது.அதில் மொத்தமே 5 கேரக்டர்கள்தான்.ஒரு கணவன் மனைவி,குழந்தை,கணவனின் தாயார் மற்றும் ஒரு சமூக சேவகர்.இதில் நான்தான் கணவன்,சுமதி ஆண்ட்டி என்னுடைய தாயார்.என் மனைவிதான் யாரென்று தெரியவில்லை.அவர் பெயர் சுஜாதா என்பது மட்டும்தான் தெரிந்தது.அவருக்காக சிறிது நேரம் அங்கே காத்திருந்துவிட்டு..அவர் வந்தால் இந்த முகவரிக்கு அவரை அனுப்பி விடுமாறு அங்கிருந்த ஒரு கடைநிலை ஊழியரிடம் முகவரி எழுதிய துண்டுச்சீட்டைக் கொடுத்துவிட்டு நாங்கள் அனைவரும் ஸ்பாட்டுக்கு வந்து விட்டோம்.

ஸ்பாட் என்பது ஒரு அபார்ட்மெண்டின் ஒரு அறைதான் அதைத்தான் கிராமியச்சாயலில் படுதாவெல்லாம் வைத்து அமைத்திருந்தார்கள் கேமரா,லைட்டிங்,சவுண்ட் எல்லாம் ரெடி...கதாநாயகி மட்டும் இன்னும் வந்த பாடில்லை.இயக்குநரோ பயங்கர டென்ஷனில்..நானும்,ஆண்ட்டியும் மேக்கப் போட்டுக்கொண்டு,ரோஸ்பவுடர் வழிந்து வாய்க்குள் போய்விடாமலிருக்க கஷ்டப்பட்டு வாயை அஷ்டகோணலாக்கிக் கொண்டு வழிமேல் விழி வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

ஒரு வழியாய் அதே வழியில் அந்த நாயகியும் வந்தார்.அத்தனை பேர் முகத்திலும் ஒரே மாதிரி உணர்ச்சி...அதாவது அதிர்ச்சி,,,,காரணம் நாயகி சுஜாதாவுக்கு வது 45.....எனக்கோ 25...ரோஸ் பவுடரெல்லாம் போட்டுக்கொண்டு ராமராஜன் கெட்டப்புல சிலுக்கு சட்டையோட.....எல்லாம் ரெடி இனி என்ன செய்வது என்று மேக்கப்மேனைக் கூப்பிட்டு,"அண்ணே அந்தம்மாவ எப்பிடியாவது ஒரு 20 வயசு குறைத்துக் காட்டிடுங்க' என்று இயக்குநர் சொன்னதும்...மேக்கப்மேனும் தனக்குத்தெரிந்த எல்லா வித்தைகளையும் முயற்சி செய்து பார்த்து விட்டு கண்ணீர் விடாத குறையாக வந்து தன் இயலாமையை இயக்குநரிடம் சொன்னார்.கொஞ்சநேரம் கண்மூடி யோசித்துவிட்டு என்னை ஒரு தாயின் பரிவோடு பார்த்த அந்த இயக்குநர்"அண்ணே வேற வழியில்ல இவர அந்தம்மா ரேஞ்சுக்கு மாத்திடுங்க..கல்யாணமாகி லேட்டா குழந்தை பொறந்ததுன்னு டயலாக்குல கொஞ்சம் மாத்திடலாம்,என்ன பண்றது கைக்குழந்தைய மாத்த முடியுமா" என்று சொல்லிவிட்டு என்னைப்பார்த்து "ஸாரி சிவா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க"என்று இரக்கமே இல்லாமல் சொல்லிவிட்டு போய்விட்டார்.

அவ்வளவு நேரமாக பாதுகாத்து வைத்திருந்த ரோஸ்பவுடரையெல்லாம் வழிச்சு கொட்டிட்டு..சுருக்கம் தெரியற மாதிரி மூன்று நான்கு கோடுகளை என் முகத்தில் போட்டு,ஒரு கை வைத்த பனியனை மாட்டிவிட்டு,நாலு முழம் வேட்டியை கட்டிவிட்டு......25 -ஐ 45 ஆக்கிவிட்டு...என்னை விட்டுட்டு போய்ட்டார் மேக்கப்-மேன்........

இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த டாக்குமெண்ட்ரியை நானும் என் மனைவியும் மட்டும் இன்னும் பார்க்க முடியவில்லை.ஏனென்றால் படம் எடுத்து முடிந்ததும் தமிழ்நாட்டு திரையரங்குகளில் வெளியிட மும்பையிலிருந்து கொண்டுபோகப்பட்டுவிட்டது.என் மாமியார் ஏதோ ஒரு திரைப்படம் பார்க்கப்போய்,மெயின் படத்துக்கு முன் இந்தப்படம் போடப்பட,அதில் என் முகமும் குளோஸப்பில் தெரிய..பக்கத்து சீட்டுக்காரியை சந்தோஷத்தில் முதுகில் அறைந்து...அய்யோ இது என் மருமகன் என்று கத்தி,அதற்காகவே காசு கொடுத்து பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட்டிகிட்டுப் போய் காண்பித்தது எல்லாம் இந்த சம்பவத்தின் பின் நடந்தவை.

சாராகுமார்
02-09-2007, 02:13 PM
அருமையான அனுபவம்.உங்கள் மாமியார் செய்தது உண்மையிலே பெருமையான விசயம்.அருமை.

சிவா.ஜி
02-09-2007, 02:17 PM
மிக்க நன்றி சாராகுமார்.சுடச்சுட பின்னூட்டமிட்டதற்கு...

மனோஜ்
02-09-2007, 03:23 PM
மிக அருமையான கதை சிவா வாழ்த்துக்கள் தொடர்ந்து இதைபோன்ற கதைகள் தர

பாரதி
02-09-2007, 03:39 PM
ஆஹா... பெயரில் மட்டுமில்லை... நடிப்பிலும் கூட சிவா.ஜி சிவாஜிதான்! எத்தனை திறமை வாய்ந்த நண்பர்கள் இங்கே..!! உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சி சிவா... அந்த படம் சிறிதென்றால் - கிடைக்குமென்றால் நானும் காண ஆவலாய் இருக்கிறேன்.

இளசு
02-09-2007, 03:43 PM
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா!

எனக்கு முன்னமே மனதில் பட்டது − நம்ம சிவா ஒரு ஹீரோ என்று!

நான் அந்த விவரணப்படம் பார்த்திருக்கலாம் என நினைக்கிறேன் சிவா!

மருத்துவ உலகில் என்னைப்பொறுத்தவரை உயர் பத்து கண்டுபிடிப்புகளில் ஒன்று இந்த ஓ.ஆர்.எஸ்!

சின்னக் கண்டுபிடிப்பு...மகாப்பெரிய பலன்!

பலகோடி பிஞ்சு உயிர்கள் பல நூறு நாடுகளில் காப்பாற்றப்பட்ட உதவிய நவீன அமுதம் அது!

''காலோடு'' போவது நிற்கலையேன்னு நம்ம தாய் −பாட்டிக்குலங்கள்
இதன் மகிமையை குறைத்து மதிப்பிடுகிறார்கள்..

போனது போனாலும், உயிர்தரிக்க, நீரும் தனிமங்களும் உள்ளனுப்பும்
ஜீவத் திரவம் இது என எடுத்துச்சொன்ன உங்கள் குழுவுக்கு நன்றி..

(உங்களுக்கு 20 வயது கூட்டிச் சொன்னதற்கு செல்லக்கண்டனத்துடன்..)

இப்போது ''போவதையும்'' மட்டுப்படுத்தி கெட்டியாக்கி, நம் மக்களின் மனத்திருப்தி கூட்டி, பயன்பாட்டை அதிகரிக்க சூப்பர் ஓ ஆர் எஸ் முயற்சிகளில் நம் மருத்துவர்கள்.. ( வேலூர் சிஎம்சி இதில் முன்னோடி)

ஓ ஆர் எஸ் இல்லையென்றால் −

ஒரு டம்ளர் சுட்டாறிய சுத்த நீர் + ஒரு தேக்கரண்டி சர்க்கரை + ஒரு விரல் விள்ளல் சமையல் உப்பு + (தேவையென்றால் ஒரு துளி எலுமிச்சை சாறு)..


இதுவே ஓ.ஆர்.எஸ்..

அரோரூட் மாவு, வடிகஞ்சி − சேர்த்தால் சூப்பர் ஓஆரெஸ்..

பேதியாகும் குழந்தைக்கு வாந்தி இல்லாமல் இருந்தால்..
இதைக் கொடுத்துக்கொண்டே இருக்கணும்...
நீரிழப்பு, சிறுநீரகம் பழுது, உயிரிழப்பு என சேதம் நேராமல் தடுக்க
ஓ ஆரெஸ்ஸே சிறந்த ஆபத்பாந்தவன்!

தங்கவேல்
03-09-2007, 02:23 AM
வாவ் சிவா நான் இன்னும் பார்க்கலியே...

ஓவியன்
03-09-2007, 03:04 AM
"ஸாரி சிவா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க"என்று இரக்கமே இல்லாமல் சொல்லிவிட்டு போய்விட்டார்.


ஹா,ஹா,ஹா!

என்ன ஒரு வரிகள் சிவா, இந்த வரிகளிலேயே அடங்கி இருக்கிறது இங்கே நீங்கள் பதிவாக்கிய சம்பவத்தினது சுருக்க விளக்கம். :natur008:

அன்பின் சிவா, உங்கள் பதிவு என்னை சிரிக்க வைத்ததென்றால், அந்த பதிவுக்கு பின்னூட்டமாக வந்த இளசு அண்ணாவின் பதில் சிந்திக்க வைத்தது. ஒரு நல்ல ஒரு படைப்புக்கு நல்ல ஒரு விமர்சகரிடமிருந்து பின்னூட்டம் கிடைக்கும் போது கிடைக்கும் சந்தோசமே அலாதி தானே.! :natur008:

பாராட்டுக்கள் சிவா.......! :icon_good:

மதி
03-09-2007, 03:23 AM
அட...இங்க ஒரு ஹீரோ...
சிவா.. அதற்கப்புறம் நடித்தீர்களா..? பல சமயங்கள்ல நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று. நல்ல சம்பவம்..

சிவா.ஜி
03-09-2007, 04:20 AM
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா!

எனக்கு முன்னமே மனதில் பட்டது − நம்ம சிவா ஒரு ஹீரோ என்று!

நான் அந்த விவரணப்படம் பார்த்திருக்கலாம் என நினைக்கிறேன் சிவா!

மருத்துவ உலகில் என்னைப்பொறுத்தவரை உயர் பத்து கண்டுபிடிப்புகளில் ஒன்று இந்த ஓ.ஆர்.எஸ்!

சின்னக் கண்டுபிடிப்பு...மகாப்பெரிய பலன்!


இதை வாசிக்கும்போது எத்தனை சந்தோஷமாக இருக்கிறது என்பதை என்னால் விவரித்து சொல்ல முடியவில்லை.மனம் நெகிழ்ந்த நன்றி இளசு.அதுவுமில்லாமல்,இப்படிப்பட்ட அருமையான மருத்துவ விளக்கத்துடன் கூடிய இந்த பின்னூட்டம் மிக மிக அருமை.ஒரு பின்னூட்டம் பலருக்குப் பயன்தரும் வகையில் அமைவதென்பது எத்தனை சிறப்பு.அந்த படத்தை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது இளசு.1989−ல் அது தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது.அதனோடு இன்னும் இரண்டு விவரணப்படத்திலும் நான் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது.மிக்க நன்றி இளசு.

சிவா.ஜி
03-09-2007, 04:22 AM
வாவ் சிவா நான் இன்னும் பார்க்கலியே...

நானே பார்க்கலியே தங்கவேல்...என்ன கொடுமை இது.....

சிவா.ஜி
03-09-2007, 04:25 AM
மிக அருமையான கதை சிவா வாழ்த்துக்கள் தொடர்ந்து இதைபோன்ற கதைகள் தர

நன்பரே மனோஜ்...இது கதையல்ல...உண்மைச் சம்பவம்..இதுபோல இன்னும் நிறைய இருக்கிறது...ஒவ்வொன்றாய் தருகிறேன்.போலீஸிடம் மாட்டி லாக்கப்பிலிருந்த ஒரு அனுபவமும் இருக்கிறது.(ஒரு செக்கிங் இன்ஸ்பெக்டரை அடித்ததால்..)

சிவா.ஜி
03-09-2007, 04:27 AM
நன்றி ஓவியன்.மிகச்சரியாகச் சொன்னீர்கள் நல்ல ஒரு பின்னூட்டம் அந்த பதிவுக்கு ஒரு முழு பரிமாணத்தைக் கொடுத்து விடுகிறது.அந்த வகையில் நம் மன்றத்தின் உறவுகளிடமிருந்து கிடைக்கும் அத்தனை பின்னூட்டங்களும் நம்மை மூன்னேற்றுவதாகவே உள்ளது.

சிவா.ஜி
03-09-2007, 04:31 AM
ஆஹா... பெயரில் மட்டுமில்லை... நடிப்பிலும் கூட சிவா.ஜி சிவாஜிதான்! எத்தனை திறமை வாய்ந்த நண்பர்கள் இங்கே..!! உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சி சிவா... அந்த படம் சிறிதென்றால் - கிடைக்குமென்றால் நானும் காண ஆவலாய் இருக்கிறேன்.

மிக்க நன்றி பாரதி சார். ஏதோ ஒரு தனியார் நிறுவனமாக இருந்தால் கூட பரவாயில்லை அதன் பிரதி கிடைத்துவிடும்.இது மத்திய அரசு நிறுவனமென்பதால் அதைப் பெற முடியவில்லை.இருந்தாலும் அடுத்தமுறை மும்பை செல்லும் போது மீண்டும் மூயற்சிக்கிறேன்.சிறிய படம்தான் மொத்தமே 12 நிமிடங்கள்தான் திரையில் வரும்.

சிவா.ஜி
03-09-2007, 04:38 AM
அட...இங்க ஒரு ஹீரோ...
சிவா.. அதற்கப்புறம் நடித்தீர்களா..? பல சமயங்கள்ல நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று. நல்ல சம்பவம்..

ஹீரோ..... ஆமாம்..நிஜமாகவே கந்தலான கதாநாயகன்தான்.அத்ற்குப் ப்பிறகும் இன்னும் இரண்டு டாக்குமெண்ட்ரி படங்களில் நடித்தேன்...அதற்குப் பிறகு வேறு துறையில் நுழந்து விட்டேன். மும்பையில் எடுக்கப்பட்ட விளம்பரப் படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்தபோது..பின்னனி குரல் கொடுப்பது.இதில் வருமானம் கொஞ்சம் அதிகம்.அதனோடு சின்னத்திரை தயாரிப்புகளில் மேடை அலங்காரம்,டைட்டில் தயாரிப்பு என்று அந்த வேலைகளையும் செய்துவந்தேன்.இப்போது எதுவுமில்லாமல்...கேரட்டை துரத்தும் குதிரையாக பணத்தை துரத்திக்கொண்டு பாலைவனத்தில் இருக்கிறேன்.

தளபதி
03-09-2007, 05:59 AM
தலைவரே!! சிவா!! நல்ல விசயங்கள் நிறைய செய்திருக்கிறீர்கள். :icon_08:

ஒரு போட்டாவாவது எடுத்து வைத்திருந்திருக்கலாம்.:icon_hmm:

சிவா.ஜி
03-09-2007, 06:28 AM
ஆமாம் தளபதி...ஆனால் அவர்கள் வீடியோ டேப்பில் பதித்துத் தருவதாகச் சொன்னதால் போட்டோ எடுத்து வைக்கவில்லை.பார்க்கலாம் மீண்டும் முயற்சி செய்கிறேன்.

lolluvathiyar
03-09-2007, 06:30 AM
அருமையான அனுபவம்
எப்படியோ உங்கள் வயசுக்கு தகுந்த ரோல் தந்து விட்டார்கள்
நானும் ஒரு டாக்குமன்டரி எடுக்கலாம் என்று கருதுகிறேன்
அதுல ஒரு 65 வயசு தாத்தா ரோல் இருக்கு. அதில் நடிக்க உங்களுக்கு தகுதி இருகிறது. லொள்ளு தாத்தா ரோல் கூட இருக்கு அதை இதயத்துக்கு தந்திர*லாம்

சிவா.ஜி
03-09-2007, 06:35 AM
அருமையான அனுபவம்
எப்படியோ உங்கள் வயசுக்கு தகுந்த ரோல் தந்து விட்டார்கள்
நானும் ஒரு டாக்குமன்டரி எடுக்கலாம் என்று கருதுகிறேன்
அதுல ஒரு 65 வயசு தாத்தா ரோல் இருக்கு. அதில் நடிக்க உங்களுக்கு தகுதி இருகிறது. லொள்ளு தாத்தா ரோல் கூட இருக்கு அதை இதயத்துக்கு தந்திர*லாம்
இதுக்குப் பேர்தான் கோயம்புத்தூர் குசும்புங்கறது......இருங்க இருங்க எனக்கு அந்த 65 வயசு தாத்தா ரோல் கிடைச்சா..பேரன் ரோலுக்கு உங்களை சிபாரிசு பண்ணி.....கையில வெச்சிருக்கிற தடியாலாயே நாலு போடு போடறேன்.....ஹா..ஹா..ஹா....