PDA

View Full Version : சேலம் கோட்டத்தை `மடக்க' கேரள அரசு...புது வியூ



ஜோய்ஸ்
02-09-2007, 07:15 AM
சேலம் கோட்டத்தை `மடக்க' கேரள அரசு...புது வியூகம்! * புதிய மண்டலம் கேட்டு மத்திய அரசிடம் அடம்

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டு குழு அமைக்க கேட்டும், அரசு மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே கமிட்டி ஏற்பட உள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும் பார்லிமென்ட்டின் இரு சபைகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மூன்றாவது அணி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.



சேலம் கோட்டம் கட்டுமானப் பணிகள் இன்னும் இரண்டு நாட்களில் முடிந்து விடும் என்பதால், புதிய மண்டலம் அமைத்தே தீர வேண்டும் என்று `அடம்' பிடிக்கத் துவங்கி விட்டது.திருப்பத்துாரில் இருந்து மங்களூரு வரை பரந்து விரிந்திருந்த பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் 843 கி.மீ., துார ரயில்பாதையைப் பிரித்து, சேலம் ரயில்வே கோட்டம் அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. சேலம் கோட்டத் திற்கு முதற்கட்டமாக ரூ. 30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.போத்தனுார், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பத்துார் வரை புதிய சேலம் கோட்டத்தின் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 14ம் தேதி புதிய கோட்டம் அதிகார பூர்வமாக துவங்கும் என ரயில்வே இணை அமைச்சர் வேலு அறிவித்திருந்தார். பாலக்காடு கோட்டத்தைப் பிரிக்க எதிர்ப்பு ஏற்பட்டதால் அதை முறியடிக்க தமிழகத்தில் ரயில் மறியல் உட்பட போராட் டங்கள் நடத்தப்பட்டன.சேலம் கோட்டத்தை அமைக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் கொடுத்து விட்டது.

கோட்டம் துவங்குவதற்கு தேவையான கண்காணிப்பு அறை கட்டும் பணி நடந்து வந்தது. இத்துடன் வர்த்தகம், தொழில்நுட்பம், மின்சார வினியோகம், பொறியியல், கணக்குத் துறை, உற்பத்தி உட்பட எட்டு பிரிவுகள் துவங்கப் பட்டுள்ளன. இவற்றுக்கு கட்டடம் கட்டும் பணி இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைகிறது. இந்த பிரிவுகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். திருச்சி, மதுரை, சென்னை உள் ளிட்ட ரயில்வே கோட்டங்களில் பணி செய்வோர் புதிய கோட் டத்தில் பணி செய்ய அழைக்கப் பட்டுள்ளனர். பாலக்காடு கோட்டத்தில் உள்ள 120 பணியாளர்கள் சேலம் கோட் டத்தில் பணியாற்ற விருப்பம் தெரிவித்த போதிலும், இதுவரை யாரையும் ரயில்வேத் துறை விடுவிக்கவில்லை.புதியக் கோட்டம் துவக்க விழா பற்றிய ஆலோசனை கூட்டம் நேற்று அமைச்சர் வேலு தலைமையில் சென்னையில் நடந்தது. சேலம் கோட்டத்தில் பணியாற்ற விரும் பும் பணியாளர்களை உடனடியாக விடுவிக்கக் கேட்டுக் கொள்ளப் பட்டது. இன்னும் 12 நாளில் புதிய ரயில்வே கோட்டத்திற்கான துவக்க விழா நடப்பதால், சேலத்தில் இறுதிகட்ட பணிகளில் தீவிர கவனம் செலுத்துவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக முதல் வர் மற்றும் அமைச்சர்கள், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் பங்கேற்கத் திட்டமிடப் பட்டது.

சேலம் ரயில்வே கோட்டம் திட்டமிட்டபடி துவங்கினாலும், இதில் தமிழக மக்களுக்கு முழு வெற்றி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், `நீங்கள் அறிவித்தபடி சேலம் கோட் டத்தைத் துவங்கி கொள்ளுங்கள். அதே நேரத்தில் திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்ட `வெஸ்ட் கோஸ்ட்' ரயில்வே மண்டலத்தை அமைக்க உத்தரவிட வேண்டும்' என பாலக்காடு அரசியல்வாதிகள் கேட்டுள்ளனர்.இந்த புதிய ரயில்வே மண்டலத்தில் திருவனந்தபுரம், பாலக் காடு, சேலம் ரயில்வே கோட் டங்கள் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சேலம் கோட்டம் மட்டுமே நமது லட்சியம் என கருதி, புதிய ரயில்வே மண்டலத்திற்கு அனுமதி கொடுக்கப்படும் என தெரிகிறது.தமிழகத்திற்கு புதிய ரயில்வே கோட்டம் கொடுப்பதும், கேரள மக்களை சமாதானப்படுத்த புதிய ரயில்வே மண்டலம் அமைப்பதும் ஒரே நேரத்தில் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. சேலம் கோட்டம் துவங்கிய சில நாட்களில் புதிய ரயில்வே மண்டல அறிவிப்பும் வெளியிடப்படும் என ரயில்வே வட்டாரம் தெரிவித்தது.

திட்டமிட்டபடி விழா நடக்கும்: இணை அமைச்சர் வேலு உறுதி:`சேலம் ரயில்வே கோட்டம் தொடங்குவதற்கான முறையான விழா திட்டமிட்டபடி நடக்கும்' என ரயில்வே இணை அமைச்சர் வேலு கூறினார். தென்னக ரயில்வே தலைமை அலுவலகத்தில் நேற்று அமைச்சர் வேலு நிருபர்களிடம் கூறியதாவது:மானாமதுரை-ராமேஸ்வரம் இடையே 114 கி.மீ., துாரம், புதுக்கோட்டை-காரைக்குடி இடை யே 37 கி.மீ., துாரம் மீட்டர் கேஜ் பாதைகள் அகல ரயில் பாதைகளாக மாற்ற தற்போது ரயில்வே துறை ஒப்புக் கொண்டிருக்கிறது. தென்காசி-செங் கோட்டை இடையே 8 கி.மீ., விருத்தாசலம்-சேலம் இடையே 135 கி.மீ., அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு ஆய்வுக்கு காத்திருக்கிறது. சென்னையில் மேம்பால ரயில் திட்டத்தில் திருவான்மியூர்-வேளச்சேரி இடையே பணி முடிந்து, சில மாற்றங்களை செய்து வருகின்றனர். விரைவில் முதல்வர் கருணாநிதியின் தேதி கேட்டு தொடக்க விழா நடத்தப்படும். திருநெல்வேலி-திருச்சி இடையே 62 கி.மீ., நீளத்திற்கு மீட்டர் கேஜ், அகல ரயில் பாதையாக மாற்றும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும். காட்பாடி-வேலுார் இடையே 10 கி.மீ., துாரத்திற்கு மின்மயமாக்கல் பணியுடன் அகல ரயில் பாதையாக மாற்றும் பணி அக்டோபர் 31ம் தேதிக்குள் முடிந்து விடும். திருவாரூர்-நாகூர் இடையே 30 கி.மீ., துார பணியும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும்.காரைக்குடி-மானாமதுரை இடையே 60 கி.மீ., மயிலாடுதுறை- விழுப்புரம் இடையே 121 கி.மீ., பணிகள் மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்கப்படும். விழுப்புரம்-செங்கல்பட்டு இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க ரூ.250 கோடி மதிப்பீட்டில் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு உள்ளது.

சேலம் ரயில்வே கோட்டம் அமைக்கும் பணி கடந்த பிப்ரவரியில் தொடங்கி நடந்து வருகிறது. சேலம் கோட்டம் தொடங்குவதற்கான முறைப்படியான விழா திட்டமிட்டபடி நடைபெறும். சேலம் கோட்டம் அமைக்க வேண்டும் என்று அங்கு போராட்டம் நடத்தப்பட்ட போது, பெரிய அளவில் பாதிப்பு, சேதம் எதுவும் ஏற்படவில்லை. சிக்னல் விளக்குகள் மட்டும் உடைக்கப்பட்டன.இவ்வாறு அமைச்சர் வேலு கூறினார்.
நன்றி: தினமலர்

சிவா.ஜி
02-09-2007, 07:33 AM
ச*மீபத்திய தகவலின்படி மத்திய அரசு திருவனந்தபுரம் கோட்டத்தை நிராகரித்து விட்டது...இருந்தாலும் இன்னும் பல வழிகளில் கேரளத்தவர் முயற்சி செய்வார்கள்...ருசி கண்ட பூனைகளல்லவா....எப்படியோ போகட்டும்...நரி இடம் போனாலென்ன..வலம் போனாலென்ன..மேலே விழுந்து கடிக்காமல் இருந்தால் சரி.

தளபதி
02-09-2007, 07:45 AM
எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது.
எது நடக்குமோ அது நல்லதாகவே நடக்கும் − என்ற கீதை மொழி ஞாபகம் வருகிறது.

lolluvathiyar
03-09-2007, 06:46 AM
கேட்பவர்கள் 1000 கேட்கலாம். கொடுப்பவர்கள் கொடுக்க வேண்டுமே

தனி மன்டலம் அமைப்பது அவ்வளவுன் சுலபமல்ல. அமைக்கவும் மாட்டார்கள். இது சும்மா மீசையில் மன் ஒட்டவில்லை என்று கேரளா தன்னை சமாதன படுத்த செய்யும் செயல் அவ்வளவுதான்