PDA

View Full Version : படித்ததில் பிடித்தது



mgandhi
01-09-2007, 06:00 PM
ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள்?

ஒரே அம்மா
அருமை மனைவி
எதிர்வீட்டு அக்கா
குடைபிடித்த டீச்சர்
பழைய காதலி & என
அழகான பெண்கள்
அருகருகே இருக்கிறார்கள்.

அந்தப் பெண்மை
எப்போது அசல் அழகாகிறது?
மேல்சட்டை கூட்டுக்கு
கையசைத்துவிட்டு
தாவணிப் பந்தலுக்குள்
தஞ்சம் புகுவாளே, அப்போதா?

தெரு மணலில்
நீள கோடுகள் இழுத்து
பாவாடை சொருகி
பாண்டியாடுவாளே, அப்போதா?

தாய்
தலையில் விழுந்த
சிக்கவிழ்க்கையில்
சிரச்சேதம் செய்வதாக
அழுது மடிவாளே, அப்போதா?

சூடான குழம்பை
ருசி பார்க்க முனைந்து
உதடு சுட்டு & நாவை
உஷ் என்றிழுப்பாளே, அப்போதா?

சூரியனுக்கு முன்விழித்து
ஈரமாய் தலைகுளித்து
கூந்தலில் துண்டு சுற்றி
குளுகுளுவென சிரிப்பாளே, அப்போதா?

கரு உண்டான தகவலை
முதலில்
மணந்தவனுக்குச் சொல்வதா?
மாமியாருக்குச் சொல்வதா? & என
சிக்கிச் சிரிப்பாளே, அப்போதா?

வேலைக்குப் போகும்
வேகாத அவசரத்திலும் & ஓர்
ஒற்றை ரோஜாப்பூவை
படக்கென்று பறித்துச் சூடி
பளிச்சென்று நடப்பாளே, அப்போதா?

சமையல் அறையினூடே
கடுகு பொரியும் புகையில்
மேக மண்டல நிலவாய்
மெச்சப்பணி செய்வாளே, அப்போதா?

களிப்பையும் களைப்பையும்
கண்ணோரம் குடிவைத்து
புதுத் திருமணப் பெண்ணாய்
வெட்கம் வெடிக்க இருப்பாளே,
அப்போதா?

இடுப்பு பெருத்து
இளங்காது பெருத்து
வயிற்றைத் தள்ளிக்கொண்டு
வீடெங்கும் திரிவாளே, அப்போதா?

பாசத்தின் அழுகையோ
பாசாங்கு அழுகையோ
குழாய் திறந்தது மாதிரி
பொலபொலவென
குளிர்விழிகள் நனைப்பாளே,
அப்போதா?

முன்னழகு திருத்தி
இடுப்பில் ஒரு சின்ன
இடக்கரம் ஊன்றி
கண்களில் திமிர்தொனிக்க
கணமுறைப்பு முறைப்பாளே,
அப்போதா?

உடம்பெல்லாம் விறைக்க
உயிர்ப்பாதை திறக்க
வெளியேறும்
உதிரம்படிந்த சிசுபார்த்து
ஒருமூச்சு விடுவாளே, அப்போதா?

இன்னும் எத்தனையோ
தருணங்களில் & பெண்
அழகாய் மிளிர்ந்தாலும்
என்னை ஈர்த்தது
இரண்டு தருணம்தான்!

ஊன் உயிர் தரித்து
குழவியாய் கிடக்கையில்...
கூன்மயிர் விழுந்து
கிழவியாய் சிரிக்கையில்...
பேரழகாகிறாள் பெண்!

பா.விஜய்

ஓவியன்
01-09-2007, 06:15 PM
அழகாக கையாளப் பட்டிருக்கும் வார்த்தைப் பிரயோகம் பிரமிக்க வைக்கின்றது

இங்கே பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா!

இந்த மன்ற உறுப்பினர் தவிர்ந்தோரின் படைப்புக்களை இந்த பகுதியில் வைப்பதே வழமை என்பதனால் இங்கே நகர்த்தியுள்ளேன் அண்ணா!.

mgandhi
01-09-2007, 06:38 PM
அழகாக கையாளப் பட்டிருக்கும் வார்த்தைப் பிரயோகம் பிரமிக்க வைக்கின்றது

இங்கே பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா!

இந்த மன்ற உறுப்பினர் தவிர்ந்தோரின் படைப்புக்களை இந்த பகுதியில் வைப்பதே வழமை என்பதனால் இங்கே நகர்த்தியுள்ளேன் அண்ணா!.


தங்கள் உதவிக்கு நன்றி

மனோஜ்
01-09-2007, 06:40 PM
அருமையான கவிதை பெண்ணின் மொத்த வாழ்வும் கவிதையாக தரப்பட்டது அருமை
பகிந்தமைக்கு நன்றி காத்திஅண்ணா

ஓவியா
01-09-2007, 08:36 PM
பிரமாதம்.

கவிதை மனதை கொள்ளையடிக்கின்றது!!

நன்றி: பா.விஜய்
நன்றி: காந்தியண்ணா.

தளபதி
02-09-2007, 08:06 AM
அட அட அட!! கலக்கியிருக்கிறார். பா. விஜய்.

ஒவ்வொரு முறை இது அழகா? இது அழகா? என்று கேட்கும்போது அட அது அழகுதான் என்று எண்ணத் தோன்றுகிறது. நன்றிங்கண்ணோவ்.

paarthiban
02-09-2007, 08:43 AM
வாவ், அருமை. பா விஜய் நல்லா எழுதியிருக்கார்.

மாதவர்
02-09-2007, 04:14 PM
எத்தனை எத்தனை பெண்கள்

mgandhi
02-09-2007, 07:19 PM
கரைகளே...
நெருப்பாய் இருந்தால்
நதிக்கொன்றும்
நஷ்டம் இல்லை...
நண்பா.. உனக்கு
நம்பிக்கை இருந்தால்
தடைகளொன்றும்
கஷ்டம் இல்லை...

இளசு
02-09-2007, 08:46 PM
நல்ல கவிதை!

பா.விஜய் அவர்களுக்கு பாராட்டுகள்..

காந்தி அவர்களுக்கு நன்றி..

mgandhi
03-09-2007, 07:49 AM
நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை

அரசன்
03-09-2007, 01:51 PM
கவிதை படைத்த பா. விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்களையும், எங்களுக்கு கொடுத்த காந்தி அண்ணா அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். கவிஞரின் கவிதைகளில் வரும் ஒவ்வொரு தருணத்திலும் பெண் அழகாகவேதான் தோற்றமளிக்கிறாள்.

mgandhi
06-09-2007, 07:09 PM
தமிழர் !

கணவர் ஓர் இனம் !

மனைவி ஓர் இனம் !

மகனும் மகளும்

ஓர் இனம் !



ஒரு மனைக்குள்ளேயே

பல இனங்கள்!

ஒருமைப்பாடு

மருந்துக்குமில்லை!



சங்கத்தில்

தலைமைப்பதவி

இருக்கும் வரை

சங்கம் வளர்த்த தமிழ்

என்றுரைப்பான் !



கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில்

முன்தோன்றி மூத்த தமிழ் என்பான்



கல்வியில் முன்னேறி

மன்றிலே உட்கார்ந்து

தான்தோன்றியாக

நடந்துகொள்வான்!



ஒற்றுமை ஒற்றுமையென

வாய்கிழிய கதைப்பான்

வேற்றுமையில் ஒற்றுமை காண

மறுத்துவிடுவான்!



இப்படி

ஆளுக்கொருபக்கம்

சொல்லொன்று செயல்வேறாக

உலகில்

தமிழன் வாழ்ந்தால்

தமிழர் ஒற்றுமை

எப்படி மலரும் ?

இளசு
06-09-2007, 08:28 PM
இதை எழுதியது எந்தத் தமிழர்?

mgandhi
13-09-2007, 06:28 PM
அம்மா என்றால் அன்பு

உன்னைக்
கழுத்து நிறைய நகையோடு
கட்டிக் கொடுத்தார்களாம்.......
புகைப்படத்தில் பார்த்திருக்கிறேன்,

நாங்கள் படிப்பதற்கு
ஒரு நகை குறைந்தது
அப்பாவுக்கு தொழில் கஷ்டம்
இன்னொரு நகை குறைந்தது
அக்காவுக்கு திருமணம்
மொத்த நகையும் போனது
மஞ்சள் கயிறுதான் மிச்சம்!

இன்னமும் நீ
மாறாத அதே புன்னகையுடன்
புகைப்படத்தில் பார்த்ததுபோல!

mgandhi
25-09-2007, 07:49 AM
சுவாசமே.. என் சுவாசமே!



எங்கோ எதுவாகவோ

என்னில் நிறைந்தாய்

உன்னை எதனோடு ஒப்பிட?



நெருப்பின் தன்மை

எரிப்பதென்பதால்

வேண்டாம்...



எதிலூற்றினாலும் அதன் தன்மை

மாறுமென்பதால் நீரும்

வேண்டாம்...



உலகமே பார்த்து

ரசிக்குமென்பதால் ஆகாயம்

வேண்டாம்...



உருவமென்றொன்று

பிரதானமன்று

எப்போது நுழைந்தாய்

எப்படி நிறைந்தாய்

என்றே புரியாமல்...

நீ என்னில் உள்ளவரை

நான் மண்ணில் வாழச் செய்யும்

காற்று நீ...



ஆம்... என்

சுவாசக் காற்று நீ!

mgandhi
05-10-2007, 06:56 PM
முதிர் கன்னி!

தன் கூந்தலில்
குடியிருக்கும்
மலர்களுக்கு
ஆணை பிறப்பித்தாள்.
என்னை
பெண் பார்க்க
மாப்பிள்ளை வருகிறார்
அவர் அறிந்திடாதபடி
மறைத்து விடுங்கள்
வெள்ளி முடியை...

mgandhi
05-10-2007, 07:00 PM
பகல்கள் என்னைப்பார்த்து
பல்லிளிக்கிறது
இரவுகள் என்னைப்
பார்த்து ஏளனம்
செய்கிறது உன்னை
நினைத்து கொண்டே
பகலில் தூங்கி இரவில்
எழுவதால்...

rajaji
06-10-2007, 05:32 AM
அனைத்துமே சிறந்தவை..... எனக்கும் மிகவும் பிடித்துள்ளது....

அதிலும் தமிழினம், அம்மா, அழகு இம்மூன்று கவிதைகளையும் மீண்டும் மீண்டும் படித்தேன்....

இக் கவிதைகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே...
தொடருங்கள் இந் நல்ல பணியை....

mgandhi
11-10-2007, 11:18 AM
நன்றி என்பது மனித நேயத்தின் ஒரு அளவுகோலாக இருக்கிறது. நன்றியற்ற சமுதாயம் களர் நிலமாகக் காட்சியளிக்கும். வேரில் உறிஞ்சிய நீரைத் தலை வழியாகத் தென்னை தருகிறது என்பது பைந்தமிழ்ப் பாடல். வேர்களுக்கு நன்றி செலுத்தத்தானே மலர்கள் மரங்களின் பாதத்தில் உதிர்ந்து விழுகின்றன. இயற்கையின் ஒவ்வொரு செயலும் நன்றியறிதலினால் நிகழ்கிறது. வாழ்க்கை என்பது தனித்திருப்பதல்ல. சார்ந்திருப்பது. ஒருவரையே சார்ந்திருப்பதல்ல. ஒருவருக்கு ஒருவர் சார்ந்திருப்பது. பரஸ்பரம் புன்னகைப் பூக்களை உதிர்த்துக் கொள்வது. மகி,ழ்ச்சியை, அன்பை, நல்ல எண்ணங்களை, இனிய சொற்களை, இயல்பாக வலிந்து திணிக்காமல் பறிமாறிக் கொள்வது. கைகளை அன்போடு உள்ளங்கைகளில் வைத்து மவுனத்தின் மூலம் உள்ளத்தை உணர்துவது.

காற்றுக்கும் தென்றலுக்கும் இருக்கும் உறவு போல் மென்மையாக ஒன்றை ஒன்று சார்ந்து, பிணைந்து இயங்கும் தன்மை பிரபஞ்சம் முழுவதும் உண்டு. நன்றி சொல்வது என்பது சொற்களால்தான் என்று அல்ல. நெகிழ்ந்த ஒரு பார்வையால், கனிவு கசியும் கண்களால், ஈரம் நிறைந்த இதயத்தால், திருப்தி தெறிக்கும் முக பாவனையால் ஆயிரம் நன்றிகளைப் பேசாமலேயே சொல்ல முடியும். அடுத்தவர்கள் அந்த அதிர்வுகளை உணர்ந்து கொள்ளவும் முடியும். நன்றி சொல்வது அடுத்தவர்களுக்குத் திருப்தி ஏற்படுவதற்காக மட்டுமல்ல. அது அவர்களைத் தொடர்ந்து உற்சாகமாகப் பணியாற்ற அளிக்கும் ஊக்கம். சில நேரங்களில், தான் செய்த உதவி சரியான நபரை அடைந்திருக்கிறதா என்பதை அறிய உதவும் தெர்மாமீட்டர். வார்த்தைகளால் சொல்லப்படும் நன்றியைக் காட்டிலும் மேன்மையானது செய்கைகளால் உண்ர்த்தப்படும் நன்றி.

உதவியை மறக்காமல் இருப்பது முதல் வகை. உதவிக்கு ஏதாவது கைம்மாறு செய்வது இரண்டாம் வகை. தான் ஒருவரிடம் பெற்ற நல்ல செயல், தன்னை உயர்த்தியதை உணர்ந்து தன்னிடம் வருபவர்களிடமெல்லாம் அன்புடனும், அனுசரணையுடனும் இருப்பது இன்னும் மேம்பட்டு மூன்றாவது வகை. நன்றி என்று சொன்னவுடன் மேற்கத்தியக் கலாசாரம் போல் எதற்கெடுத்தாலும் "நன்றி" என்று சொல்லி அந்தச் சொல்லை நீர்த்துப் போகச் செய்வது அல்ல. மாறாக, சொல்லாமல் சொல்லித் தன் எண்ணத்தை வெளிப்படுத்துவது. தான் எதிர்பார்க்காத நேரத்தில் உதவி வரும்போது ஒருவன் கண்கள் கலங்குவதில் மகிழ்ச்சியில் விழிகள் பனிக்கும்போது, முகத்தில் அன்பு கொப்பளிக்கும் போது நன்றி கம்பீரமாகத் தன்னைத் தாழ்த்திக் கொள்ளாமல் நடை போடுகிறது. நன்றி என்பது நினைத்துக் கொள்ளுதல், அன்பு என்னும் பரந்த குடையை விரித்து அதன் பரந்த நிழலில் பலரையும் தங்க வைத்தல்.

நாம் உணர வேண்டியதெல்லாம் நன்றி உதடுகளிலிருந்து உதிர்கின்ற சொற்களில் இல்லை. மாறாக உள்ளத்திலிருந்து குதிக்கின்ற உணர்வுகளில்தான் அடங்கி இருக்கிறது

இறையன்பு அவர்களின் ஓடும் நதியின் ஓசை என்ற புத்தகத்தின் "நன்றி வாலில் இல்லை" என்ற கட்டுரையிலிருந்து சில பகுதிகள்)

mgandhi
11-10-2007, 06:37 PM
நிமிர்ந்த நடையும்,

நேர்கொண்ட பார்வையும் என்னும்

பாரதியாரின் கவிதைகளை

குணிந்து கொண்டுதான்

எழுதுகிறார்கள்

durai
13-10-2007, 05:01 PM
சந்தர்ப்பம் என்பது கடவுளுக்கு ஒரு புனை பெயர்" என்பதாகத் தற்கால அறிஞர் ஒரு கூறியிருக்கிறார். கடவுள் தாம் செய்யும் காரியத்தைத் தாம் செய்தது என்று காட்டிக் கொள்ள விரும்பாத போது "சந்தர்ப்பம்" என்னும் புனை பெயரைச் சூட்டிக் கொள்ளுகிறாராம்! உலக சரித்திரத்தில் மிகப் பிரசித்திபெற்ற வீரர்கள், அரும் பெரும் காரியங்களைச் சாதித்த மகான்கள், - இவர்களுடைய வரலாறுகளைப் பார்க்கும்போது, சந்தர்ப்பம் இவர்களுக்கு மிக்க உதவி செய்திருக்கிறது என்பதை அறியலாம். அவர்களிடம் கடவுள் விசேஷ கருணை காட்டி அத்தகைய சந்தர்ப்பங்களை அனுப்புவதாகச் சிலர் கூறுவர். அவரவர்கள் பிறந்த வேளையின் மகிமை; ஜாதகத்தின் பலன், பிரம்மா எழுதிய, பூர்வஜன்ம சுகிர்தம், -என்றெல்லாம் வாழ்க்கையில் ஏற்படும் அநுகூலமான சந்தர்ப்பங்களுக்குக் காரணங்கள் கற்பிப்போரும் உண்டு.

காந்தி மகான் தென்னாப்பிரிக்கா போவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படாதிருந்திருந்தால் அவர் மனித குல சிரேஷ்டர் என்றும், அவதார புருஷன் என்றும் மக்களால் போற்றப்படும் நிலையை அடைந்திருக்க முடியுமா? சந்திரகுப்தன் விக்கிரமாதித்தன், ஜூலியஸ் ஸீஸர், நெப்போலியன், டியூக் ஆப் வில்லிங்டன், ஜார்ஜ் வாஷிங்டன், ஜோஸப் ஸ்டாலின் போன்ற மகா வீரர்களின் வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் எவ்வளவோ உதவி செய்திருக்கின்றன என்பதை அறிந்திருக்கிறோம். இதிலிருந்து, ஆண்டவன் அவ்வளவு பாரபட்சமுள்ளவர் என்று முடிவு கட்டுதல் தவறாகும். சரித்திரத்தில் புகழ்பெற்ற மகான்களையும் வீரர்களையும் தவிர இன்னும் எத்தனையோ பேருக்கும் ஆண்டவன் சந்தர்ப்பங்களை அனுப்பிக் கொண்டுதானிருக்கிறார்.

ஆனால் அந்தச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்வது மனிதனுடைய சமயோசித அறிவையும், சரியான சமயத்தில் சரியான முடிவு செய்யும் ஆற்றலையும் பொறுத்தது. சந்தர்ப்பங்களைக் கை நழுவ விடுகிறவர் கோடானுகோடிப் பேர் பெயரும் புகழும் இல்லாமல் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து உலகைவிட்டுச் செல்கிறார்கள். சந்தர்ப்பங்களைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்கிறவர்கள் சரித்திரத்தில் தங்கள் பெயரை நிலைநாட்டிவிட்டுச் செல்கிறார்கள். ஒரே நாளில், ஒரே நேரத்தில் பிறக்கிறவர்களின் வாழ்க்கைத் தரம் எவ்வளவோ வித்தியாசமாயிருப்பதற்குக் காரணம் வேறு என்ன சொல்லமுடியும்?

கல்கி பொன்னியின் செல்வன் நூலிலிருந்து

mgandhi
13-10-2007, 07:24 PM
அம்மா.

நீ சுமந்த பத்து திங்கள் வரலாறுதான் - தாயே
அனுபவித்த வலிகள் எல்லாம் எரிமலைகள்தான்.

நெஞ்சுதைத்த பாதங்கள் பாவங்கள்தான் - தாயே
மார்பு கடித்த பற்கள் நான்கும் கோழைகள்தான்.

மடி கிடந்து தவழ்ந்த முல்லை தவிக்கின்றதே
தாய் பாசம் தனை வேண்டி துடிக்கின்றதே.

உள்ளங்கை சோறெடுத்து எனக்கூட்டினாய்
உயிராற நீர் குடித்து பசியாற்றினாய்.

நான் பிறந்த நாள் கொண்டு விரதம் கொண்டாய்
நான் உயரப்படியாகி உதிரம் தந்தாய்.

ஆராரோ பாட்டு சொன்ன ஆனந்தமே
யார் யாரோ வந்தாலும் நீயாகுமா.

தோழ் சுமந்த பிஞ்சு ஒன்று காயானதே
குளிர் தேசத்தில் நின்று அழுகின்றதே.

மடிசாய நிமிஷங்கள் எதிர் பார்க்கிறேன்
அந்த நிமிசங்கள் யுகமாக வழி பார்கிறேன்

mgandhi
14-10-2007, 04:23 PM
''பெண்ணுக்கு ஞானத்தை
வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்
- பாரதி

பெண் அடிமையானாளா? அடிமை யாக்கப்பட்டாளா? என்கிற நம்
கேள்விக்கு மேலே சொன்ன செய்தி ஒரு வகையில் விடைசொல்லும். மனிதகுல வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் பெண் எப்படி அடிமையாக்கப்பட்டாள் என்கிற உண்மை நமக்குப் புலனாகும்.
கருத்தரித்தல் கருச்சுமத்தல், பாதுகாப்பான பிள்ளை வளர்ப்புக்கான பொறுப்புடன் இருத்தல் என்கிற பெண்மையின் இயற்கை விதியே அவளை மெள்ள மெள்ள அடிமையாக்கிவிட்டது. இப்போது போல் ஒரே ஒரு பிள்ளை, அதிக பட்சம் இரண்டு என்பதெல்லாம் அறியாது கூட்டம் கூட்டமாகப் பிள்ளை பெற்ற அந்தக் காலத்தில் −இடைவிடாது
கருத்தரிக்கும் பிள்ளைப்பேறு இயந்திரமாகப் பெண் பயன்படுத்தப்பட்டாள். அதனால் உடற்சோர்வும், மனச்சலிப்பும்
கொண்டவளாய் குடும்பத்திற்கு அடிமையானாள் பெண். பத்து பெற்றால்தான் மூன்றோ நான்கோ தங்கும் என்கிற பயத்தால் அடுத்தடுத்து பிள்ளை பெறுவதைத் தடுக்கும் எண்ணமே முன்னர் ஏற்படவில்லை. அதனால் பெண்ணுக்குப் பெருமைசேர்க்கும் கருப்பைதான் அவளை அடிமையாக்கும் சுருக்குப்பை ஆகிப் போனது.

இரண்டாவதாக இயல்பாகவே பெண்ணுக்கு அமைந்த பொறுப்புணர்ச்சி அவளை மேலும் அடிமையாக்கியது. ஆம், சிலரது சிறப்பியல்புகளே அவர்களது முன்னேற்றத்திற்குத் தடையாகி விடுவது போல ஒரு
பெண்ணின் இயல்பான கடமையுணர்ச்சியே, அவளை மேலும் மேலும் அடிமையாக்கியது. அப்பட்டமாக உடைத்துச் சொல்லவா?

ஒரே சமயத்தில் இரண்டு மூன்று மனைவிகளைத் திருமணம் செய்து கொண்டு ஏககாலத்தில் இரண்டு மூன்று குடும்பங்களின் தலைவர்களாக ஆண்கள் அராஜகம் செய்த மாதிரி பெண்கள் எப்போதாவது செய்தது உண்டா? செய்ய முடியுமா? கற்பனையிலாவது இது சாத்தியமா?
இல்லையே. பாஞ்சாலிக் கதை மாதிரி ஒன்றிரண்டு விதிவிலக்குகள் வேண்டுமானால் கண்ணில் தட்டுப்பட முடியும். ஆனால் சர்வசகஜமாக
இரண்டு மூன்று குடும்பங்களின் தலைவனாக ஏக காலத்தில் வெகுசாதாரணமாகப் பல ஆண்கள் விளங்கினார்கள். இப்போதும்
விளங்குகிறார்கள். இந்தச் செய்தி என்ன சொல்கிறது? ஆண் ஒரு குடும்பத்தின் மிக இன்றியமையாத நபர் அல்ல. அவனது விருப்பும்
இல்லாமையும் ஒரு பெரிய விஷயமே அல்ல. அதாவது நேரடி மேற்பார்வை குடும்பத்திற்கு அவ்வளவு முக்கியம் அல்ல. அவனது
பொறுப்புகள் முழுவதையும் மனைவியே பார்த்துக் கொள்வதால் அவன் வீட்டிற்கு வந்து போகும் ஒரு நபராக மட்டுமே விளங்கினாலும் கூட போதுமானது. பொறுப்பு குறைந்த ஒரு நபர் சுதந்திரமானவராக
விளங்க முடிந்ததும், பொறுப்புகள் கூடிய நபர் (அதாவது மனைவி) அடிமையாக விளங்குவதும் தவிர்க்க முடியாததாகிவிட்டது. பொறுப்புகளைச் சுமப்பவர்கள் அடிமையாவதும் பொறுப்பு
குறைந்தவர்கள் சுதந்திரமாகத் திரிவதும் −இயல்பு தானே? பெண் அடிமையானதற்கு −இது ஒரு மிக முக்கிய காரணம். குடும்பத்தின்
இன்றியமையாதமையப் புள்ளியாகப் பெண்ணே விளங்கினாள்.

பெண்ணின் அடிமைத்தனத்திற்கு இப்போது, ஆண்களின் பங்களிப்பு என்ன என்பதை விளக்குகிறேன். ஆதியிலிருந்தே, பெண்ணை
உயிருடைய உணர்வுடைய சகநபராக ஆண்கள் மதித்தது இல்லை. நமது பழைய கதைகளைப் பாருங்களேன். அரிச்சந்திரன் மனைவியை
விலைக்கு விற்றிருக்கிறான். தருமபுத்திரன், (பெயர்தான் தர்மபுத்திரன்) சூதாட்டத்தில் பணயம் வைத்திருக்கிறான். அட, உத்தம மனிதன் என்று அடையாளம் காட்டப்படும் ராமனே கூட அக்னியில் இறங்கவைத்து தனது அல்ப மனுஷத்தன்மையை அடையாளம் காட்டி இருக்கிறான்.
இத்தனைக்கும் அரிச்சந்திரன், தர்மபுத்திரன், ஸ்ரீராமன் எல்லோருமே உயர்வான ஆண்களாகவே கொண்டாடப்பட்டவர்கள். உயர்ந்த
ஆண்களின் லட் சணமே இப்படி என்றால் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்ல? ஸ்ரீராமன் ஏக பத்தினி விரதன், பெண்ணை மதிப்பவன் என்ற பெருமையைக் கவிஞர் கபிலன் ஒரே வரியில் ஒழித்துக்கட்டி
இருக்கிறார். அவருக்கு ராமன் மீது என்ன கோபம் பாருங்கள்.

அப்பனுக்கு ஆயிரம் மனைவிகள்

ஆனாலும் ஒரு சந்தேகமும் இல்லை.

மகனுக்கு ஒரே மனைவி

என்றாலும் ஆயிரம் சந்தேகங்கள்

என்று ஒரே பந்தில் ராமனை க்ளீன் போல்டு ஆக்கி விடுகிறார். நான் படித்த −இன்னொரு கவிதை பாருங்கள்.

அன்றைய சீதைக்கு

அக்னிப் பிரவேசம் ஒருமுறைதான்

அலுவலகம் போகும் இன்றைய சீதைக்கு

அன்றாடமல்லவா அக்னிப் பிரவேசம்?

என்று அலுவலகம் போகும் பெண்களின் அவல நிலையைப்
படம்பிடிக்கிறது இது. இருக்கட்டும்.

பெரிய புராணத்தில் இயற்பகை நாயனார் தம் மனைவியைச் சிவனடியார் கேட்டார் என்று பரிசாகத் தருகிறார். மனைவியின் அனுமதியோ விருப்பு வெறுப்போ ஒரு பொருட்டாகவே மதிக்கப்படவில்லை. நாயன்மார் என்றால் நாயகியை மதிக்க வேண்டியதில்லை என்று சுதந்திரம் தரப்பட்டுள்ளதா?

மகாபாரதத்தில் பாருங்கள் அம்பை என்கிற இளவரசியின் சுயம்வரம் நடந்த போது அம்பையை அலட்சியப்படுத்தி விட்டு பீஷ்மர் அவளைத்
தேரில் தூக்கிக் கொண்டு பறக்கிறார். இத்தனைக்கும் தான் மணப்பதற்காக அல்ல; தன் தம்பிக்குத் திருமணம் செய்து வைக்க. எத்தனை பொரிய கொடுமை −இது? பெண் வெறும் உடைமையாய் ஆணின் அனுபவ பாத்யதைக்குரிய சொத்தாக மட்டுமே மதிக்கப் பட்டிருக்கிறாள். அவளுக்கென்று ஒரு மனம் உண்டு. மனத்தில் உணர்வுகள் உண்டு என்று காலம் காலமாகக் கணக்கில் கொள்ளப்படவில்லை என்று நமது
இலக்கியங்கள் செய்தி வெளியிடுகின்றன.

காலப்போக்கில் பெண்கள் தங்களுக் கென்று சுயமாகச் சிந்திக்க, தேர்வு செய்ய, விருப்பு வெறுப்புக்களைச் சமூகத்தில் வெளியிட உரிமையில்லை என்கிற சிந்தனைப் போக்கிலேயே முடங்கிப் போனார்கள். அந்தச் சுருக்கத்திலேயே வாழ்வை அமைத்துக் கொள்ளப் பழகிப் போனார்கள். கூண்டுக் கிளியின் இறகுகளை −இரண்டு மூன்று முறை வெட்டி விட்டால் இறகு வளர்ந்த பிறகும் கிளிகள் பறக்க முயல்வதில்லை. காரணம்
பறக்கும் சக்தியே தங்களிடமிருந்து பறிக்கப் பட்டு விட்டதாக அவை முடிவு செய்து விடுகின்றன. முயற்சியை மூலைக்குத் தள்ளிவிட்டு முடங்கிப் போய்விடுகின்றன. இந்தக் கூட்டுக் கிளியின் கதைதான் வீட்டுக்
கிளிகளின் கதையும்.

சுகிசிவம்

mgandhi
18-10-2007, 06:49 PM
வாழ்ந்து பார்க்க வேண்டும் ...

வாழ்ந்து பார்க்க வேண்டும் - அறிவில்
மனிதனாக வேண்டும்
வாசல் தேடி உலகம் - உன்னை
வாழ்த்திப் பாட வேண்டும்!

நாடு காக்க வேண்டும் - முடிந்தால்
நன்மை செய்ய வேண்டும்
கேடு செய்யும் மனதை கண்டால்
கிள்ளி வீச வேண்டும்!

தமிழும் வாழ வேண்டும் - மனிதன்
தரமும் வாழ வேண்டும்
அமைதி என்றும் வேண்டும் - ஆசை
அளவு காண வேண்டும்!

காற்று வீச வேண்டும் - பெண்கள்
காதல் பேச வேண்டும்
காதல் பேசும் பெண்கள் - வாழ்வில்
கவிதையாக வேண்டும்!

மானங்காக்க வேண்டும் - பெண்களை
மதித்து வாழ வேண்டும்
உண்மை நண்பர் வேண்டும் - இருவர்
ஒருவராக வேண்டும்! (வாழ்ந்து)

கண்ணதாசன்

mgandhi
21-10-2007, 06:37 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/p68.gif

mgandhi
05-11-2007, 05:06 PM
அப்பா, நீயின்றி நான் ஏது...
இறு திங்கள் மட்டும் சுமப்பவள் தாய்....
ஆனால், நீயோ இறுதிவரை சுமப்பவன்....
நீ அல்லவா போற்றக்கூடியவன்....

நான் கடக்கும் பாதை இன்று பூத்துக்குளங்க..
உன் பாதத்தில் சுமந்த முற்கள் அல்லவ காரணம்....
நான் சுகம் காணே...
நீ சுமைகளை ஏதுனாயே....

நான் இளமையில் இன்பமாக வாழ...
நீ உன் இளமையை வறுத்தாய்யே....
நான் கண்ட கணவை நினைவாக்க...
உன் கண்களை மறந்தாயே.....

நான் ஒய்யாரமாக துங்க...
நீ ஓய்வின்றி துளிர்தாயே...
நீ செய்த கடமைகள்..
நான் பெற்ற கடன்கள் அல்லவா...

இவற்றை அடைக்க நான் செல்லும் காலம்தான் எத்தனையோ...
உன் பாசத்திற்கு கொடுக்கும் விலைதான் என்னவோ.....
கோடி வைரங்கள் கொடுத்தாலும்...
நீ சிந்திய வியர்வைக்குஈடாகுமா....

நீ தந்த வாழ்வை மறதின்றி நன்றி சொல்ல...
உன்னை தினமும் தொழுவேன்...
நான் வளரே நீ வைத்த உன் இளமை கடனை....
நான் உன் மூதுமையில் திருப்பிடுவேன்....

தவம் செய்தாளும் உன்னை போல் அப்பா பேறுவேனா......

gans5001
07-11-2007, 12:59 AM
[B]
உடம்பெல்லாம் விறைக்க
உயிர்ப்பாதை திறக்க
வெளியேறும்
உதிரம்படிந்த சிசுபார்த்து
ஒருமூச்சு விடுவாளே, அப்போதா?



எனக்கென்னவோ இந்த கணம்தான் அழகின் சிகரமாய் தோன்றுகிறது

mgandhi
07-11-2007, 05:52 PM
எனக்கென்னவோ இந்த கணம்தான் அழகின் சிகரமாய் தோன்றுகிறது

நன்றி gans5001

mgandhi
08-11-2007, 03:58 AM
வருங்கால

அப்துல்கலாம்களின்

கனவுகள் மெய்ப்படட்டும்!

குழந்தைத் தொழிலாளிகளைத்

தடுப்பதில் நாமும்

அரசின் முயற்சிகளில்

பங்கெடுப்போம்!

அறியாமை இருளகற்ற

கல்வியெனும்

அகல் விளக்கு

ஏற்றிடுவோம்!

mgandhi
09-11-2007, 06:03 PM
பூங்காவில்

துங்குகிறவர்களைப் பார்த்தால்

எனக்குப் பரிதாபமாக இருக்கும்



சிரித்திருக்கிற பூக்களை

இவர்கள் வெறித்துப் பார்க்கலாம்



விளையாடவரும் சிறுவரோடு

விளையாடி மகிழலாம்...



காலாற நடந்து போகலாம்

கண்ணெதிர்ப்படுகிற

மனிதர்களைப் பார்த்துப்

புன்னகை பூக்கலாம்.



படிக்கலாம்

பாட்டுகேட்கலாம்

தனியாக இருந்தால்

சிந்நதிக்கலாம்...

தனியாக இருந்தால்.

சிந்திக்கலாம்...



தோழர்களையெல்லாம் அங்கே

வேறெந்த வேலையில்லாவிட்டாலும்

வேடிக்கையாவது பார்க்கலாம்

துங்குவதற்காகவா பூங்காவைத்

திறந்து வைத்திருக்கிறார்கள்?

அடுத்தமுறை வருகிறபோது

ஒரு காதலியோடு வாருங்கள்

கனவுகளோடு போவீர்கள்....



இல்லையேல்

காகிதத்தோடு வாருங்கள்

கவிதையோடு போவீர்கள்.

mgandhi
13-11-2007, 05:41 PM
இன்றைய சமுதாயம்

இன்றைய
இளைய
இதயங்கள்
இதமான வசந்த காலங்களை
காதலிப்பதை விட
இலையுதிர் காலங்களையே
விரும்புகின்றன!

இவர்களின்
விரல்கள் கூட
சோக வீணையே
மீட்டுகின்றன!

இவர்கள்
நினைவுகளில்
இருப்பதைவிடஷ
கனவுகளில்
மிதப்பதே அதிகம்!

இவர்கள்
நிஜங்களை
நேசிப்பதைவிட
நிழல்களையே
அதிகம் நேசிக்கின்றனர்!

இவர்களின்
மணவறைகள்
அலங்கரிக்கப்படுவதை விட
கல்லறையே அதிகம்
அலங்கரிக்கப்படுகிறது!


இவர்கள் வேலை தேடுகின்றபோது,
தேடலே வேலையாகி
விடுகின்றது!!

இளைஞனே
நீ எழுந்து நின்றால்
இமயம் தொடும்
உன் தோள்கள்.

இளசு
13-11-2007, 07:21 PM
நல்ல படைப்புகள்.. நன்றி காந்தி..

படைப்பாளிகள் பெயர் அறிந்தால் நிச்சயம் கொடுங்கள்..

mgandhi
14-11-2007, 04:37 PM
வாழ்க்கை என்பது

காதல் தோல்விகளும்
கடன் தொல்லைகளும்
கயிற்றை மாட்டவைக்கின்றன
கழுத்தில்..
காலம் முடியுமுன்னே
காலனை வரவைப்பது
கையாலாகாத்தனமல்லவா..,
ஊனம் உள்ளவன்கூட
உயிர்வாழும்போது
தானே உயிரை மாய்ப்பது
தலைகுனிவல்லவா
உன்னைப் படைத்தவனுக்கு.. !

விலைமதிப்பில்லா உயிரை
விடைகொடுத்து அனுப்பவேண்டாம்,
கடமையைச் செய்தால்
கலங்காது செய்தால்..
விலங்கல்ல வாழ்க்கை,
விபரம் புரிந்தால்
விலகும் திரைகள்,
இலகுவாய் வெற்றி
இனிதாய் உனக்கு,
இல்லைநேரம் சாவை நினைக்க..
வாழ்க்கை என்பது
வாழ்ந்திடத்தானே!

--செண்பக ஜெகதீசன்

ஆதி
15-11-2007, 11:44 AM
இந்த இழையில் நான் படித்ததில் எனக்கு பிடித்த ஒரு கவிதையையும் நுற்கோர்க்கிறேன்..

முதிர்கன்னிகள்

பாபர்மசுதி போலதான்
நாங்களும்
இடிப்பதற்கு பலபேர்
வருகிறார்களே தவிர
கட்டுவதற்கு ஒருவரும்
வருவதில்லை..

mgandhi
17-11-2007, 03:42 AM
நம்பிக்கை

காலடிகள் பதியாமல்
கனக்கின்ற வீதிகளே!
கோலங்கள் காணாமல்
ஓலமிடும் முற்றங்களே!


நீரள்ள யாருமின்றி
பாழான கிணறுகளே!
யார்வந்தும் திறவாமல்
கொடிபடர்ந்த படலைகளே!


மனிதமொழி மறந்துவிட்ட
என்தேச காற்றுகளே!
தனிமைதந்த சோகத்திலே
விரக்தியுற்ற வீடுகளே!


மாணவர்கள் காணாமல்
மௌனமான பள்ளிகளே
கோயில்வரும் பக்தரின்றி
கண்கலங்கும் தெய்வங்களே


போர்வந்து ஊர்ச்சனங்கள்
போய்விட்ட பூமியிலே
யாரிங்கே மீதமாய்
நம்பிக்கை அதைத்தவிர


மீண்டுமிங்கே அமைதிவரும்
மீண்டுமிங்கே மகிழ்ச்சிவரும்
மீண்டுமிங்கே கவிதைகளில்
வாழ்வுபற்றி வார்த்தைவரும் என்ற


நம்பிக்கை மட்டும்தான்
நகராமல் இருக்கிறது
நம்பிக்கை மட்டும்தான் என்றும்
நம்மண்ணில் வாழ்கிறது.

முரளீஸ்வரன், மட்டக்களப்பு

mgandhi
06-12-2007, 05:49 PM
அரவாணி

மொழி அகராதிக்குள்
முடங்கிக்கிடக்கும்
சில
கலைச்சொற்கள் மாதிரி
நானும்.

என்னை
விடுவிப்பாருமில்லை
விளங்கிக்கொள்வாருமில்லை.


இது
ஊமைவலி
உரைக்கமுடிவதில்லை
ஆனாலும்
உணர்த்தவேண்டும்.

யாரிடம்
பெண்ணிடமா,
ஆணிடமா
இல்லை
ஆண்டவனிடமா?

ஏனிந்த
வஞ்சனை இறைவா!

பெண்ணா,
ஆணாவென்று
உன்னை
பிரபஞ்சத்திற்கு பிரதிபலிக்க
என்னைத்
தேர்ந்தெடுத்தது ஏன்?

இந்தமுறை
உன்னை
நான் மன்னிக்கிறேன்
நிறுத்திக்கொள்
படைப்புப் பிழையை
இயலவில்லையேல்
விட்டுவிடு
உன் உயிரை!

- சிலம்பூர் யுகா

mgandhi
03-01-2008, 05:36 PM
முரண்பாடுகள்

போதிமரம் போதும்
புத்தனைப் புதைத்துவிடு

கொடிகள் காப்பாற்று
தேசத்துக்குத் தீயிடு

சின்னங்கள் முக்கியம்
சித்தாந்தம் எரித்துவிடு

கவிஞனுக்குச் சிலை
கவிதைக்குக் கல்லறை

உரைபோதும் பிழைப்புக்கு
மூலம் கொளுத்திவிடு

மன்னனுக்கு மகுடமிடு
மக்களுக்கு லாடமடி

நீதிமன்றம் சுத்தம்செய்
நீதிக்குக் குப்பைக்கூடை

கற்றது மற
பட்டத்துக்குச் சட்டமிடு

பெட்டி தொலைத்துவிடு
சாவி பத்திரம்

தலைவனைப் பலியிடு
பாதுகை வழிபடு

அகிம்சை காக்க
ஆயுதம் தீட்டு

பத்தினிக்கு உதை
படத்துக்குப் பூ

காதல் கவியெழுத
காமம் நாமெழுத

கற்பு முக்கியம்
கருவைக் கலை

பசியை விடு
கடிகாரம் பார்த்துண்

ஜனநாயகம் காப்பாற்று
ஜனங்களைக் கொன்றுவிடு

முரண்பாடே நடைமுறையாய்
நடைமுறையே முறண்பாடாய்ச்
சென்றுதேய்ந்திறுகின்ற சிறுவாழ்வில்
முரண்பாடெனக்குள் யாதென்று
மூளைபுரட்டி யோசித்தேன்

மிருகத்தைக் கொல்லாமல்
தேவநிலை தேடுகிறேன்

-எழுதியவர்: வைரமுத்து

ரவிசங்கர்
05-01-2008, 01:53 PM
அருமையான கவிதை, பா.விஜய் படைப்புகள் எப்போதும் அருமையாக இருக்கும். நன்றி நண்பரே, வாழ்த்துக்கள்.

மலர்
05-01-2008, 04:32 PM
அழகான தொகுப்புகள்.... காந்தி அண்ணா...
பாராட்டுக்கள்...
முதல் கவி.. அருமை..
ஒவ்வொன்றும் தேடிக்கிடைத்த அழகிய தொகுப்பு...

mgandhi
05-01-2008, 05:10 PM
அருமையான கவிதை, பா.விஜய் படைப்புகள் எப்போதும் அருமையாக இருக்கும். நன்றி நண்பரே, வாழ்த்துக்கள்.

நன்றி

mgandhi
05-01-2008, 05:11 PM
அழகான தொகுப்புகள்.... காந்தி அண்ணா...
பாராட்டுக்கள்...
முதல் கவி.. அருமை..
ஒவ்வொன்றும் தேடிக்கிடைத்த அழகிய தொகுப்பு...

மிக்க நன்றி மலர்

mgandhi
06-01-2008, 12:28 PM
இப் புத்தாண்டிலாவது உணருமா?

அச்சு ஊடகம்
காட்சி ஊடகம்
எதைத் திறந்தாலும்
கொலை கொள்ளை
கடத்தல் கற்பழிப்பு
நாச வேலைகள்
அத்துமீறல்கள்
அராஜகங்கள்
ஆக்கிரமிப்புகளென
நாள்தோரும்
நெஞ்சைப் பதைக்கும்
செய்திகளாய்
அழிவுச்சக்திகளின்
ஆதிக்கம்!

" ஒரு கன்னத்தில்
அறைந்தால்
மறு கன்னத்தைத்
திருப்பிக் காட்டு"
என்றார் ஏசுபிரான்!
அவரின் போதனைகளைக்
காற்றில் விட்டதின்
விளைவே
இந்நிகழ்வுகளின்
பிரவாகம்!

அஹிம்சையைக்
கடைபிடித்ததுடன் -அதைப்
போதிக்கவும் செய்தார்
மஹாத்மா காந்தி!
இந்தியாவும் கடைபிடித்தது!
அதன் மகத்தான
சாதனையே
இந்தியாவின் விடுதலை!
உலகமே கண்டு
வியந்து போற்றும்
இப் பேருண்மையை
விடுதலைக்காக இன்னும்
போராடிக் கொண்டிருக்கும்
நாடுகள்
இப் புத்தாண்டிலாவது
உணருமா?
-இமாம்.கவுஸ் மொய்தீன்

mgandhi
09-01-2008, 10:40 AM
மகனின் பெருமை பேசினாள்...
அனாதை விடுதியில் அம்மா

எட்டு பொருத்தம்
பார்த்தார்கள் வெடித்தது ஸ்டவ்

திரைச்சிலையை
விலக்கினேன் தெருவில்
அம்மனச் சிறுவர்கள்.

நோயால் இறந்த கோழி
வருந்தினான்
சமைக்க முடியாத்தால்.

இதயம்
09-01-2008, 12:49 PM
யாரிடம்
பெண்ணிடமா,
ஆணிடமா
இல்லை
ஆண்டவனிடமா?



வரிகளில் கொண்டு வர முடியாத திருநங்கைகளின் வேதனையை அதிக பட்சம் சொல்லும் கவிதை இது..! காட்சிப்பொருளாகிப்போன உயிர்களின் உள் வேதனையை உயிர் துடிப்போடு சொல்வதை புரிய முடிகிறது. இதை விதி என்பதா? கடவுளின் தண்டனை என்பதா..? எதுவாக இருந்தாலும் அநீதி என்பதும் நிஜம்..!!

பகிர்வுக்கு நன்றி காந்தி..!

mgandhi
09-01-2008, 04:20 PM
வரிகளில் கொண்டு வர முடியாத திருநங்கைகளின் வேதனையை அதிக பட்சம் சொல்லும் கவிதை இது..! காட்சிப்பொருளாகிப்போன உயிர்களின் உள் வேதனையை உயிர் துடிப்போடு சொல்வதை புரிய முடிகிறது. இதை விதி என்பதா? கடவுளின் தண்டனை என்பதா..? எதுவாக இருந்தாலும் அநீதி என்பதும் நிஜம்..!!

பகிர்வுக்கு நன்றி காந்தி..!
மிக்க நன்றி இதயம்