PDA

View Full Version : 500வது படைப்பு-கொக்கரக்கோகுமாங்கோ பூமகளைக



பூமகள்
01-09-2007, 05:25 PM
கொக்கரக்கோகுமாங்கோ பூமகளைக் காணலைங்கோ......!!

மன்றம் தந்த அன்பாலும் ஆசியாலும் மன்றத்தில் இன்று எனது 500 வது பதிப்பை தருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

எனக்கு என் மழலைப் பருவத்தில் நடந்த சுவையான சம்பவத்தை உங்களோடு பகிர விரும்புகிறேன். இந்தச் சம்பவம் என் வாழ்வில் மறக்கவே முடியாத ஒன்று.

என் ஆரம்பக் கல்வி ஒரு ஆங்கில வழி பள்ளிக் கூடத்தில் எல்.கே.ஜி (ப்ரி கே. ஜி எல்லாம் அப்ப இல்லீங்க மக்களே...!)ஆரம்பித்தது. முதலாம் வகுப்பு வரை அங்கு பயின்றேன். என் குடும்பத்தின் தமிழ் பற்று காரணமாக நான் இரண்டாம் வகுப்பில் பள்ளி மாற்றப்பட்டேன். ஏதும் அறியாமல் விழி பிதுங்கி மழலை உள்ளத்தோடே உள் சென்றேன் அரசு பள்ளிக்கு.

தரையில் அமர்ந்து படிப்பு, புதிய முகங்கள், நாலணா நெல்லிக்காய், காரமான மாங்கா துண்டு,பத்து பைசா தேன் மிட்டாய் என்று எல்லாமே எனக்கு புதியதாக இருந்தது. அப்போதெல்லாம் அம்மா தான் எப்போதும் பள்ளி முடிந்து என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்வார்.

இரண்டாம் வகுப்பின் ஆரம்ப நாட்கள். முதல் இரண்டு நாட்கள் வந்து அழைத்துச் சென்றார். எனக்கு அரை நாள் மட்டுமே வகுப்புக்கள் நடந்தன. முதல் வரிசையில், தரையில் கரும்பலகை அருமே அமர்ந்து நிமிர்ந்து பார்த்து படிப்பது விசித்திர அனுபவம் எனக்கு.

அப்போது தான் அந்த நாள் வந்தது.

முத்தான புதன் கிழமை. பள்ளிக்கு எப்போதும் போல் புறப்பட்டு சென்றேன் அம்மாவுடன். அம்மா புதிதாக ஒரு கட்டளை இட்டார். பள்ளி முடிந்ததும் என்னையே திரும்பி வரச் சொன்னார். ஏனெனில் அது நான் முதலில் சென்ற பள்ளி செல்லும் வழியிலேயே இருந்தது தான். நானும் சரி என்று சொல்லி வைத்தேன் விழித்துக் கொண்டே. அன்றைய காலங்களில் சாலையில் செல்வது மிகப் பெரிய சாதனையாக நினைப்பேன். சாலையில் செல்லும் பலதரப்பட்ட மனிதர்கள், விர் என்று பறக்கும் வாகனங்கள், வாகன நச்சுப்புகை, வாகன ஒலிப்பான்கள் எல்லாம் பூச்சாண்டி காட்டி பயமுறுத்தும் என் பிஞ்சு மனத்தை.

அன்று காலை வகுப்புகள் நன்றாகச் சென்றன. காலம் கரைந்து கொண்டிருந்தது. காலை இடைவேளை மணி அடித்தது. எல்லோரும் வெளி சென்று தேன் மிட்டாயும் எனக்குப் பிடித்த நெல்லிக்காயும் வாங்கி ருசித்தவண்ணம் இருந்தோம். புதிய முகங்களின் அறிமுகம் மட்டுமே இருந்தது. நான் புதிதாகையால் யாருடனும் ஒட்டவில்லை மனம் அப்போது.
நட்பு பாராட்ட ஆளின்றி தனி தேவதையாய்(சும்மா தாங்க சொன்னேன்....... கோவிச்சுகாதீங்க... குழந்தைகள் தெய்வம் தானுங்களே...) பள்ளியைச் சுற்றி(புதிய பள்ளியாகையால்) வலம் வந்த வண்ணம் இருந்தேன்.

இடைவேளை முடிந்தது. வகுப்புக்கள் மீண்டும் கூடின. எனது முதல் இருக்கை தேடி சென்று அமர்ந்து கொண்டேன். பின் பாடங்கள் நடத்தி முடிந்து மீண்டும் மணி அடித்தது. எல்லோரும் வெளியில் சென்றனர்.அனைவரோடும் நானும் சென்றேன். யாரோடும் அறிமுகம் இல்லாததால் எனக்கு திக்கு தெரியாத காட்டில் விட்டதாய் உணர்ந்தேன். சிட்டாய் பறந்தனர் என் வகுப்பு மாணவர்கள். என்னுடன் வகுப்பில் அப்போது படித்துக் கொண்டிருந்த பரிச்சயமே சரியாக ஆகாத முகங்களை நினைவில் நிறுத்தி பள்ளிக்குள் தேட முற்பட்டு தோற்றுபோனது என் உள்ளம்.

தேடிக்களைத்து சோர்ந்து இருக்கையில் வகுப்புக்கள் மீண்டும் கூடும் நேரம் ஆரம்பித்தது. எனக்கு முதலில் படித்த பள்ளியின் நியாபகம் வரவே..அதே போல் மணி அடித்ததும் மதியமும் வகுப்பு தொடங்கும் என நினைத்து என் வகுப்பு அறையிலேயே அமர்ந்து கொண்டேன். அப்போது மதிய நேரத்திற்கான வகுப்பு ஆரம்பித்தது.

நேரம் ஓடிக்கொண்டு இருந்தது. வீட்டிற்கு என் வகுப்பில் அனைவரும் சென்றுவிட்ட நிலையில் மீண்டும் புதிய முகங்கள் என்று அறியாமல் மதிய வகுப்பு பிள்ளைகளுடன் அமர்ந்து கொண்டேன் அதே முதல் வரிசையில்.

2 மணி நேரம் ஓடியிருக்கும். வகுப்புக்கள் நடந்த வண்ணம் இருந்தன. நான் மும்முறமாக வகுப்புக்களை கவனித்துக் கொண்டு இருந்தேன். என் அம்மா என் முன் கலங்கிய கண்களுடன் பள்ளிக்கு என் வகுப்பிற்கு தேடி வந்திருந்தார் தனியாய். என்னைப் பார்த்து மேலும் அழத்தொடங்கினார். ஒன்றும் புரியாமல் விழித்தேன் இப்போதும்.

நடந்தது இது தான்.

பள்ளி விட்டு வீடு வராததால் அம்மா தவித்து,புலம்பி, அழுதவண்ணம் சாலையில் எல்லா இடத்திலும் தேடி பின் கடைசியாய் என் பள்ளி வந்து தலைமை ஆசிரியரை சந்தித்துக் கூறியிருக்கிறார். அவரும் கனிவான குரலில் உங்கள் மகள் எங்கும் சென்றிருக்க மாட்டாள். பள்ளியில் உள்ள எல்லா வகுப்புக்களையும் சென்று பார்த்து வாருங்கள் என்று கூறியிருக்கிறார்.
அம்மாவும் ஒவ்வொரு வகுப்பாக தேடி அழுதழுது வந்திருக்கிறார்.
கடைசியாய் என் வகுப்பிற்கு வந்து வகுப்பு நடத்திக் கொண்டிருந்த ஆசிரியையிடம் பேசி என்னை அழைத்துச் சென்றார்.

மதிய உணவு பற்றிய எண்ணமோ... பசியோ என்னை ஆட்கொள்ளாது இருந்தது ஆச்சர்யமாய் இருந்தது எனக்கு இன்று வரை. வகுப்பு கவனித்த வண்ணமே அனைத்தையும் மறந்து கிடந்தேன் என்று அம்மா சொல்லி இன்றும் கேளி செய்வதுண்டு.

அன்று முதல் என் அம்மாவே வந்து என்னை பள்ளியிலிருந்து கூட்டிச் சென்றது வேறு விசயம். நான் இதற்காக அடிவாங்கவே இல்லை என்பது கூடுதல் சிறப்பு.

கலங்கிப் போன அம்மாவின் முகம் இன்னும் என் கண்முன் நிழலாடுகிறது.
அவரின் நேசத்தை மிக வலுவாக என்னும் விதைத்தது இந்த நிகழ்ச்சி.

ஓவியன்
01-09-2007, 05:43 PM
ஐநூறு கடந்த அன்புத் தங்கைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் முதலில்.................! :natur008:

ரொம்பவே இரசித்தேன் பூமகள் உங்கள் கொக்கரக்கோகுமாங்கோவை..........!

நட்பு பாராட்ட ஆளின்றி தனி தேவதையாய்
சரி, சரி அப்படியே வைச்சுக்குவோம்...........! :icon_hmm:

நல்ல தமிழில் நகைச்சுவை கலந்து சம்பவத்தை விபரித்த விதம் அருமை பூமகள்!. :icon_good:

தொடர்ந்து இணைந்திருந்து கலக்கிக் சிறப்பிக்க ஓவியனின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!. :icon_good:

ஓவியா
01-09-2007, 05:46 PM
சுவையான 500 பதிவு, மழலை சம்பவம், மிகவும் சுவாரஸ்யமாக எழுதி அசத்தியுள்ளீர்கள். பாராட்டுக்க*ள் :icon_good::icon_good:

அன்றைய அப்பாவி பிஞ்சுகளின் எண்ணங்கள் எவ்வளவு பசுமையாக இருக்கும் தெரியுமா!! ஆனால் இன்றோ!! ம்ம் எல்லாம் படுகில்லாடிகலா இருக்குங்கோ!!! :redface::redface:


அம்மாவின் அன்பு, அக்கறை இவை இரண்டிற்க்கும் சரிநிகர் எதுவுமே இப்பூவுலகில் இல்லை.

எனக்கு 10வயசிலிருந்தே அம்மாயில்லை அதனால் உங்களை காண கொஞ்சம் பொறாமையாதான் இருக்கு!!! :icon_08:

எழுத்துலகில் தங்களுக்கு சிறந்த எதிர்காலமுண்டு, என் ஆசிகள்.

பூமகள்
01-09-2007, 05:53 PM
அன்பு ஓவியன் அண்ணா தான் என்னை முதன்முதலில் வரவேற்றது. இப்போதும் எனது 500 வது பதிப்பிற்கு முதல் பதில் அவரிடம் இருந்து வந்தது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

உங்களின் ஆசியுடன் தொடர்கிறேன் இனிதே நம் மன்றத்தில்.

உங்களின் 500 இ−பணம் அன்பளிப்பிற்கு மிகுந்த நன்றிகள் அண்ணா.
நன்றிகளோடு,

பூமகள்
01-09-2007, 06:00 PM
நிஜம் தான் அக்கா. இன்றும் அந்த மழலை பருவ நினைவுகள் பசுமரத்தாணி போல் பதிந்து போய் கிடக்கின்றன.
அதன் வெளிப்பாடே இந்த படைப்பு. எனக்கு கவி தவிர இப்படி படைப்பது புதிது. பயத்துடனே தான் படைத்தேன். ஆனால் உங்களால் ரசிக்கப்பட்டது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
நன்றிகள் ஓவியா அக்கா.


எனக்கு 10வயசிலிருந்தே அம்மாயில்லை அதனால் உங்களை காண கொஞ்சம் பொறாமையாதான் இருக்கு!!!

உங்கள் மனத்தை என் படைப்பு காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் அக்கா. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்....:traurig001:
உங்களுக்கு அன்பான மகிழ்வான வாழ்க்கை அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

என்னை உங்கள் தங்கையாக பாவிக்க வேண்டும் என்பது என் ஆசை. ரக்சா பந்தன் திரியில் என் பெயரை சகோதரி லிஸ்டில் நீங்கள் விட்டு விட்டீர்கள்.........! ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்............... போங்க கா...:medium-smiley-100:

இணைய நண்பன்
01-09-2007, 06:22 PM
பூமகளே....உங்கள் அம்மா ரொம்பத்தான் பாசமாய் இருக்கிறார்.உங்கள் 500 வது பதிப்பை அழகாக வழங்கி இருந்தீர்கள்.உங்கள் இலக்கியப்பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்

பூமகள்
01-09-2007, 06:29 PM
மிக்க நன்றிகள் இக்ராம் அண்ணா. அம்மாவென்றாலே பாசம் தானே..!
அனைத்து அம்மாக்களும் அப்படித்தான்.
உங்களின் பாராட்டுதலுக்கு நன்றிகள் சகோதரரே..!

மனோஜ்
01-09-2007, 06:31 PM
அன்பு பூமகள் அருமையான படைப்பு ஒவ்வேரு மனிதனுக்கும் குழுந்தை பருவம் ஒரு அமிர்தம் அதை ஞபாகத்தில் வைத்து எழுதியது மிக மிக அருமை சம்பவங்கள் மனதில் எவ்வளவு அழமாக பதிந்துள்ளது என்று உங்கள் கதையில் அழகாக வெளிபடுத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் தொடர்ந்து இதை பொன்ற அருமை படைப்புகள் தர

பூமகள்
01-09-2007, 06:36 PM
மிக்க நன்றிகள் மனோஜ் அண்ணா. உங்கள் அனைவரது பள்ளிபருவத்தையும் ஒரு கணம் கண்முன் என் படைப்பு கொண்டுவந்தால் அதுவே எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கும்.
உங்களின் உடன் ஊக்கத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் அண்ணா.

ஓவியா
01-09-2007, 08:14 PM
நிஜம் தான் அக்கா. இன்றும் அந்த மழலை பருவ நினைவுகள் பசுமரத்தாணி போல் பதிந்து போய் கிடக்கின்றன.
அதன் வெளிப்பாடே இந்த படைப்பு. எனக்கு கவி தவிர இப்படி படைப்பது புதிது. பயத்துடனே தான் படைத்தேன். ஆனால் உங்களால் ரசிக்கப்பட்டது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
நன்றிகள் ஓவியா அக்கா.

உங்கள் மனத்தை என் படைப்பு காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் அக்கா. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்....:traurig001:
உங்களுக்கு அன்பான மகிழ்வான வாழ்க்கை அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

என்னை உங்கள் தங்கையாக பாவிக்க வேண்டும் என்பது என் ஆசை. ரக்சா பந்தன் திரியில் என் பெயரை சகோதரி லிஸ்டில் நீங்கள் விட்டு விட்டீர்கள்.........! ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்............... போங்க கா...:medium-smiley-100:

அடடே, எனக்கு அம்மா இல்லை என்று நான் வருந்தினாலும் என்றும் மற்றவர்களின் அனுதாபத்தை தேடியதில்லை, உங்கள் கருணைக்கு நன்றி.

ஓ மை லவ், ரக்ஷ பந்தன் என்ற பண்டிகை ஆண்களுக்கு, ஒரு சகோதரனின் கடமையை மறக்க கூடாது என்று சொல்லவே அந்த பண்டிகை கொனண்டாடப்படுகின்றது.

அறிஞர்
01-09-2007, 11:28 PM
அம்மாவின் பாச மழை இன்னும் தொடரட்டும்.....

பூமகளின் பதிவு மழை இங்கு இன்னும் தொடரட்டும்.

தங்கவேல்
02-09-2007, 01:18 AM
அடடா, அம்மாவின் அன்பும், குழந்தையின் தவிப்பும் ஒரு காவியத்தையே படைத்து விட்டது. பூமகள். 500வது பதிப்பு அசத்தல்...

பூமகள்
02-09-2007, 03:55 AM
மிக்க நன்றிகள் அன்பு அறிஞர் அண்ணா.:icon_rollout:
உங்களின் ஆசியுடன் தொடர்ந்து படைக்க விழைகிறேன்.

பூமகள்
02-09-2007, 03:59 AM
மிக்க நன்றி தங்கம் அண்ணா. :icon_rollout:
உங்களின் ஊக்கம் என்னை மீண்டும் பல படைப்புக்களைத் தருவதற்கு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

நன்றிகளோடு,

சிவா.ஜி
02-09-2007, 04:12 AM
500−ஐ எட்டிய மன்றத்தின் கவிதாயினி பூமகளுக்கு மனம்நிறந்த வாழ்த்துக்கள்.
பசுமைநிறைந்த அந்த பள்ளி காலத்துக்கு எங்களையும் அழைத்துச் சென்ற உங்கள் ஆரம்பப்பள்ளி அனுபவம் மிகச்சிறப்பாக இருக்கிறது. சம்பவங்களை வெகு நேர்த்தியாக கோர்த்துக் கொடுத்துள்ள விதம் பிரமாதம்.கற்றுக்கொள்ளும் ஆர்வம் அந்த வதிலேயே உங்களிடம் இருந்ததில் வியப்பில்லை.அம்மாவின் பாசம்...ஹீம்...அதற்கு ஈடுண்டொ வேறெதுவும் இந்த உலகில்.நல்லதொரு பதிவைத்தந்து எங்களையும் மகிழ வைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் பூமகள்.என்றும் இந்த மன்றத்தின் உறவாய் நீடித்திக்க வேண்டும்.

தளபதி
02-09-2007, 04:16 AM
:angel-smiley-026:மீண்டும் குழந்தைப்பருவத்தை ஞாபகப்படுத்திவிட்டீர்கள்.:082502now_prv:
குழந்தைப் பருவம் பல மெல்லிய கணங்களைக் கொண்டதுதான். அதன் இனிய நினைவுகள் மனதுக்கு என்றும் இனிமையையும் இளமையையும் தரும். :thumbsup:

இந்த நாள் இனியதாக இருக்கட்டும்.:icon_b:

பூமகள்
02-09-2007, 04:53 AM
மிக்க நன்றிகள் சிவா அண்ணா...... :icon_blush:
நான் நிச்சயம் உங்களின் அன்புச் சகோதரியாய் மன்றத்தில் வலம் வருவேன். மன்றத்தின் பாசமிக்க உள்ளங்களை விட்டு எங்கு செல்வேன் அண்ணா....????!!!!:082502now_prv: :icon_rollout:

பூமகள்
02-09-2007, 04:57 AM
உண்மைதான் தளபதியாரே...!!
இளமைப் பருவத்து நினைவுகளை,அந்த வெள்ளை உள்ளத்து கனவுகள் சுமந்த
ஞாபகங்களை யாரால் மறக்க முடியும்????!!!!
உங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் சகோதரரே........!:icon_rollout:
உங்களுக்கு இந்த நாளும் இனி வரும் நாள் அனைத்தும்
இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.....!!

lolluvathiyar
02-09-2007, 05:49 AM
பூமகளின் 500 ஆவது படைப்பு, தனது இயல்பிலிருந்து வித்தியாசமாக மாற முயற்ச்சி, கவிதை நடையில் இல்லை என்பது தான் மிஸ்ஸிங் ஆனால் உனர்ச்சிகளை வடிப்பதில் காட்டும் அக்கரை மட்டும் மாறவில்லை. அதுவும் மழலை காலத்து அனுபவங்கள். நாம் குழந்தைகளாக இருக்கும் போது அனுபவித்த ஆயிரகனக்கான அனுபவங்களில், ஒரு சிலது மட்டும் அப்படியே ஞாயபகம் இருக்கும். அது போன்ற ஒன்றை பாசத்துடன் காட்டீருகிறார்,
அருமை பூமகள், வாழ்த்துகள்
அரசாங்க பள்ளியில் படித்தவர் என்று குறிப்பிட்டுருகிறீர், ஆனால் அதிக தமிழறவு வைத்திருகிறீர்கள் . அது தான் ஆச்சரியமாக இருகிறது.
பாராட்டுகள்

பூமகள்
02-09-2007, 05:55 AM
மிக்க நன்றிகள் வாத்தியாரே.. கவி தவிர்த்து படைக்க எண்ணியே இதனைப் படைத்தேன். உங்களின் எதிர்பார்ப்பு கண்டு மகிழ்கிறேன்.

ஆம்.. அரசு பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி தானே அண்ணா வழங்குகிறார்கள். ஆகையால் கூட தமிழ் தெரிந்திருப்பது சற்று அதிகம் போல் உங்களுக்குத் தெரியலாம்.

தமிழ் வழிக் கல்வி எவ்விதத்திலும் நம் வளர்ச்சிக்கு தடையாய் இருக்காது என்பதற்கு பலர் உதாரணமாக இருக்கிறார்கள்.
உங்களின் அன்பிற்கு மிக்க நன்றிகள் அண்ணா.

kampan
02-09-2007, 05:59 AM
அழகான பதிப்பு,
நாமெல்லாம் சிறு வயதில் இப்படி பாடங்களை கவனித்திருப்போம். ஆனால் பாருங்கோ பெரிய வகுப்பில் பாடங்களை கவனிப்பதே குறைவு.
ஏனென்று எம் நண்பர்களுக்கு புரியும்.

ஓவியன்
02-09-2007, 06:07 AM
ஏனென்று எம் நண்பர்களுக்கு புரியும்.

உங்க நண்பர்கள் யாரென்று சொன்னால் அவர்களிடமிருந்து ஏன் என்று அறிந்து கொள்ளலாமே.....?:lachen001:

இளசு
02-09-2007, 06:24 AM
நெல்லிக்காய் சம்பவம் − பின்பு
நினைவு நீர் அருந்தும்போதெல்லாம்
நெஞ்சு வரை இனிக்கும்..


இனிய பதிவுக்கும் − அரை ஆயிரம் சுவையான பதிவுகளை எட்டியமைக்கும் சேர்த்து
இரட்டை வாழ்த்துகள் பூமகள்!

பூமகள்
02-09-2007, 06:40 AM
மிக்க நன்றிகள் கம்பரே..!
ஆமாம்... நீங்கள் ஒருவேளை பாடம் கவனிக்காமல் வேறு

பாட(ர்)ம் தான் கவனித்திருப்பீரோ ????!!!!!!!:sport-smiley-013: :icon_rollout:

பூமகள்
02-09-2007, 06:43 AM
மிக்க நன்றிகள் இளசு அண்ணா.:icon_rollout:
உங்களைப் போன்றோரின் ஊக்கத்தின் பிரதிபளிப்பே எனக்கு இந்த எண்ணிக்கையை எட்ட வைத்தது.
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..!!:082502hi_prv:

kampan
02-09-2007, 08:02 AM
மிக்க நன்றிகள் கம்பரே..!
ஆமாம்... நீங்கள் ஒருவேளை பாடம் கவனிக்காமல் வேறு

பாட(ர்)ம் தான் கவனித்திருப்பீரோ ????!!!!!!!:sport-smiley-013: :icon_rollout:

உமக்கு புரிகிறது இந்த ஓவியனுக்கு புரிய மாட்டேங்கிறதே?

praveen
02-09-2007, 08:20 AM
500 வது பதிவில் உங்களைப்பற்றிய சிறுவயது சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ளது, சுவையாக உள்ளது, ஆரம்பத்தில் உள்ள முன்னுரையை பார்த்து என்னமோ ஏதோ என்று பதைபதிப்புடன் முழுதும் பார்த்தால், நல்லவேளை வேறு எதும் இல்லை. பள்ளியிலே பத்திரமாக தங்கி விட்டீர்கள்.

பூமகள், இன்னும் பலநூறு பதிவுகள் இட வாழ்த்துக்கள்.

பூமகள்
02-09-2007, 08:30 AM
உங்களின் அன்பிற்கு மிகுந்த நன்றிகள் ஆஸோ அண்ணா...!!
உங்களைப் போன்றோர் இருக்கையில் நான் எப்படி காணாமல் போவேன்??!!!

மலர்
02-09-2007, 09:16 AM
அன்புத்தோழி பூமகளின் 500வது பதிப்பு இப்போது தான் படித்தேன்...அருமையாக உள்ளது....
சிறு வயது கண்முன்னாக மீண்டும் நினைவுக்கு வருகிறது...
பூமகள் இன்னும் பல்லாயிரம் பதிவுகளை தர என்னுடைய வாழ்த்துக்கள்...

பூமகள்
02-09-2007, 09:20 AM
மிக்க நன்றி அன்பு தங்கச்சி..மலர்.:natur008:
எல்லோருக்கும் அவரவர் பள்ளி நாட்கள் இந்த திரி படிக்கையில் நியாபகம் வரும் நிச்சயமாக.:icon_v:
தங்கையின் வாழ்த்துக்கு அக்காவின் இதயத்திலிருந்து பூ போன்ற நன்றிகள்..!:icon_08:

ஷீ-நிசி
02-09-2007, 11:45 AM
மழலை மாறாத வயதில் நிகழ்ந்த நிகழ்வு, இந்த 500−வது பதிவாய் எங்களுடனான பகிர்வு.. மிக சுவையான தொகுப்பு பூமகள்....

தொடர்ந்து இணைந்திருங்கள்..

சாராகுமார்
02-09-2007, 01:57 PM
உங்களின் 500 வது பதிப்புக்கு வாழ்த்துக்கள்.அம்மா என்றால் அன்பு .அந்த அன்பை மறக்காமல் நினைவு படுத்தி உங்களின் பசுமையான நினைவை எங்களுடன் பகிர்த்துக்கொண்டதற்க்கு நன்றி.

இலக்கியன்
04-09-2007, 08:35 AM
பசுமையான அழகு நாட்களை எனக்கும் நினைவுபடுத்தியது உங்கள் அழகான படைப்பு வாழ்த்துக்கள் கோடி

உங்கள் கன்னி கட்டுரைக்கு என் அன்பளிப்பு 500 இ பணம்

ஆதவா
06-09-2007, 11:46 AM
அப்படியே காணாம போயிருந்தா இன்னிக்கு ஒரு பூமகள் நமக்கு கிடைச்சுருக்க மாட்டாங்க... (என்ன செய்யறது? மன்றம் எல்லாத்தையும் தாங்கிட்டு இருக்கே!)

பள்ளி நினைவுகள் எல்லாமே அருமை... ஆனா நீங்க எங்க காணாம போனீங்க? பள்ளியிலேயேதானே இருந்தீங்க? நீங்க பார்க்கறதுக்கு குண்டா இருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஹி ஹி.... இல்லைன்னா மதிய சாப்பாடு சாப்படணும்னு கொஞ்சம் கூட தோணலை உங்களுக்கு.. (சும்மா லுலுவாயி.)

நல்ல அனுபவம்... இனிமேலாவது பார்த்து இருங்க... காணாம போயிடாதீங்க.. அப்பறம் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புனு நானே போடவேண்டியிருக்கும்...

இந்த பதிவிற்கு என்னால் முடிந்த ஐகாசுகள் 3

அக்னி
06-09-2007, 12:04 PM
இனியவர் பூமகள் ஆனதற்கு முதலில் வாழ்த்துக்கள்...

உங்களது பதிவு, ஒரு ஞாபக மீள்பதிகை என்றாலும்,
அதில் உங்களது கல்வியார்வமும்,
உங்கள் பெற்றோரின் தமிழார்வமும்,
வெளிப்பட்டாலும், எல்லாவற்றிற்கும் மேலாக,
தாய்மையின் ஆழமான பாசத் தேடலை உணர்த்துகின்றது...

பூமகள்
07-09-2007, 07:30 PM
மிக்க நன்றிகள் ஷீ−நிசி அண்ணா.
உங்களின் ஊக்கத்திற்கு நன்றிகள் கோடி..!

பூமகள்
07-09-2007, 07:32 PM
உங்களின் 500 வது பதிப்புக்கு வாழ்த்துக்கள்.அம்மா என்றால் அன்பு .அந்த அன்பை மறக்காமல் நினைவு படுத்தி உங்களின் பசுமையான நினைவை எங்களுடன் பகிர்த்துக்கொண்டதற்க்கு நன்றி.

மிக்க நன்றிகள் சகோதரரே..! உங்களின் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நான் ஒரு வாரம் மன்றம் வர இயலவில்லை.. ஊருக்கு சென்றிருந்தேன்.

பூமகள்
07-09-2007, 07:44 PM
அப்படியே காணாம போயிருந்தா இன்னிக்கு ஒரு பூமகள் நமக்கு கிடைச்சுருக்க மாட்டாங்க... (என்ன செய்யறது? மன்றம் எல்லாத்தையும் தாங்கிட்டு இருக்கே!)
ம்.... :icon_hmm:அன்புத் தம்பி ஆதவா....
இதற்கு பேர் தான் வஞ்சப் புகழ்ச்சி அணியோ.....????!!!!!!:violent-smiley-010:


பள்ளி நினைவுகள் எல்லாமே அருமை... ஆனா நீங்க எங்க காணாம போனீங்க? பள்ளியிலேயேதானே இருந்தீங்க? நீங்க பார்க்கறதுக்கு குண்டா இருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஹி ஹி.... இல்லைன்னா மதிய சாப்பாடு சாப்படணும்னு கொஞ்சம் கூட தோணலை உங்களுக்கு.. (சும்மா லுலுவாயி.)

ஆமாம்... நான் காணாமலே போகலை... அது நினைத்து உமக்கு ரொம்ப வருத்தம் என்பது புரிகிறது ஆதவா....!!:icon_tongue:
அதற்காக நீ என்னை குண்டென்று சொல்வது கொஞ்சமும் நல்லாயில்லை.. ஆமாம்.... :waffen093:


நல்ல அனுபவம்... இனிமேலாவது பார்த்து இருங்க... காணாம போயிடாதீங்க.. அப்பறம் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புனு நானே போடவேண்டியிருக்கும்...

சரி தான்... இங்கே கண்டிப்பா காணாம போக மாட்டேன்.. ஏன்னா... நான் மன்றத்திலேயே தான் அமர்ந்து கவனித்துக் கொண்டிருப்பேன்..வகுப்பை கவனித்தது போலவே....:sport-smiley-018:
ஹி ஹி...!:sport009:


இந்த பதிவிற்கு என்னால் முடிந்த ஐகாசுகள் 3

உன் வள்ளல் தன்மையை என்னென்று புகழ்வேன்..???!!!!:ohmy:
வாழ்க உன் கொடைத் திறன்..!:icon_tongue:

pradeepkt
09-09-2007, 02:35 AM
சுவையான 500 பதிவு, மழலை சம்பவம், மிகவும் சுவாரஸ்யமாக எழுதி அசத்தியுள்ளீர்கள். பாராட்டுக்க*ள் :icon_good::icon_good:

அன்றைய அப்பாவி பிஞ்சுகளின் எண்ணங்கள் எவ்வளவு பசுமையாக இருக்கும் தெரியுமா!! ஆனால் இன்றோ!! ம்ம் எல்லாம் படுகில்லாடிகலா இருக்குங்கோ!!! :redface::redface:


அம்மாவின் அன்பு, அக்கறை இவை இரண்டிற்க்கும் சரிநிகர் எதுவுமே இப்பூவுலகில் இல்லை.

எனக்கு 10வயசிலிருந்தே அம்மாயில்லை அதனால் உங்களை காண கொஞ்சம் பொறாமையாதான் இருக்கு!!! :icon_08:

எழுத்துலகில் தங்களுக்கு சிறந்த எதிர்காலமுண்டு, என் ஆசிகள்.
ய*க்கா இத்த*னை வ*ருச*மா ப*ழ*கினுக்கீரோம், எங்க*ளுக்கெல்லாம் உங்க* ஆசிக*ள் கிடையாதா??? ஹூம்...

pradeepkt
09-09-2007, 02:37 AM
பூமகள், அருமையான பதிவு...
பள்ளிக்கால நினைவுகளைச் சொல்லும்போது மட்டும் பலருக்கும் நம் நினைவுகளே ஒத்துப்போவது என்ன புதுமை பார்த்தீர்களா...
வாழ்த்துகள்

ஓவியன்
09-09-2007, 02:54 AM
ஐய்!!!

நம்மா அண்ணா வந்திருக்காரு..........
வந்த வேகத்திலே அப்படியே மணியா அண்ணாவின் ஆ பத்து கேள்விகளுக்கு விடையைத் தாங்க அண்ணாச்சி!!!.

சூரியன்
09-09-2007, 04:57 AM
நல்ல படைப்பு பூமகள்.

பூமகள்
09-09-2007, 05:41 AM
பூமகள், அருமையான பதிவு...
பள்ளிக்கால நினைவுகளைச் சொல்லும்போது மட்டும் பலருக்கும் நம் நினைவுகளே ஒத்துப்போவது என்ன புதுமை பார்த்தீர்களா...
வாழ்த்துகள்

ஆம் அண்ணா. உங்களின் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள் அண்ணா.:icon_blush:

சூரியன்
09-09-2007, 05:46 AM
பள்ளிக்கால நினைவுகளை நினைக்கும் போது அனைவருக்கும் ஒரு பள்ளியில் எப்படியெல்லாம் இருந்தோம் என்று உற்சாகமும்,இனி அந்த வாய்ப்பு கிடைக்காதே என்று வருத்த்டமும் தோன்றும்.

பள்ளி நினைவுகள் ஒரு தனி மகிழ்ச்சியை தரும்.

பூமகள்
09-09-2007, 05:48 AM
உண்மையான வார்த்தைகள் சகோதரர் சூரியன்.
உங்களின் பாராட்டுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் பல..!

pradeepkt
09-09-2007, 01:26 PM
ஐய்!!!

நம்மா அண்ணா வந்திருக்காரு..........
வந்த வேகத்திலே அப்படியே மணியா அண்ணாவின் ஆ பத்து கேள்விகளுக்கு விடையைத் தாங்க அண்ணாச்சி!!!.

அதெல்லாம் கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்தாச்சு அப்பு...
போயிப் பாரு. :062802sleep_prv:

ஓவியன்
09-09-2007, 01:29 PM
அதெல்லாம் கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்தாச்சு அப்பு...
போயிப் பாரு. :062802sleep_prv:

பாத்துட்டம்ல.......!
ஆனா அங்கே ஆப்பு வைச்ச மாதிரி தோணலையே......
ஆப்பிலே மாட்டின மாதிரிலே தோணுது.............! :D

பிச்சி
10-09-2007, 08:10 AM
உங்கள் நினைவுகள் மிக அருமை.

பூமகள்
10-09-2007, 08:12 AM
நன்றிகள் அன்புத்தங்கை பிச்சி.
வாருங்கள் சகோதரி.
ரொம்ப நாள் மன்றம் வரவில்லையே.. பிச்சி???
இனி தொடர்ந்து வாருங்கள்.. உங்கள் படைப்புகளைக் காண ஆவலாய் உள்ளது மன்றம்...

அமரன்
10-09-2007, 08:17 AM
அரை ஆயிரம் பதிவுகள் கடந்தமைக்கு தாமதமான வாழ்த்துக்கள் தங்கையே...!
கவிதைகளில் மின்னிய நட்சத்திரம் பின்னோக்கி நகர்ந்து குழந்தை நட்சத்திரமாக மனம் திறந்துள்ள பதிவு நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளமைக்கு இங்கே சிதறியுள்ள முத்துப்பின்னூட்டங்களே சாட்சி. இப்பதிவில் விளையும் பயிரை முளையிலேயே தெரிந்தது என்பதா ?விதைத்தவர் தவிப்பை, பதைப்பை உரைத்தது என்பதா? இரண்டும் கலந்த கலவைக்கு பாராட்டுச்சொல்லி இன்னும் வளர வாழ்த்துகின்றேன்.
~~அமரன்

பிச்சி
10-09-2007, 08:40 AM
நன்றிகள் அன்புத்தங்கை பிச்சி.
வாருங்கள் சகோதரி.
ரொம்ப நாள் மன்றம் வரவில்லையே.. பிச்சி???
இனி தொடர்ந்து வாருங்கள்.. உங்கள் படைப்புகளைக் காண ஆவலாய் உள்ளது மன்றம்...

என்ன பண்றது அக்கா? எனக்கு நேரமே கிடைக்க மாட்டேங்குது! அப்பப்ப வருவேன். கவிதை மட்டும் படிப்பேன். ஏதோ வித்தியாசமா இருந்ததாலதான் படிச்சேன் அக்கா. விரைவில் கவிதையோட வரேன். வீட்ல நெட் கொடுத்தா எப்போவும்போல வருவேன்.

பாசத்துடன்
பிச்சி

அன்புரசிகன்
10-09-2007, 09:05 AM
உங்கள் 500 வது படைப்பை அழகாக தந்துள்ளீர்கள். உங்கள் எனது ஆரம்பகால அனுபவங்களும் வந்து சென்றன... நினைவூட்டிய பூமகளுக்கு நன்றிகள்.

பூமகள்
10-09-2007, 09:08 AM
வாங்க பிச்சி.. வந்து கலக்குங்க மன்றத்தை...!

பூமகள்
10-09-2007, 09:09 AM
மிகுந்த சந்தோசம் அன்பு அண்ணா.
உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றிகள்.

இனியவள்
29-09-2007, 04:20 PM
சிறு வயது நினைவுகள் பசுமரத்தாணி போல்
மனதினில் ஆழமாய் பதிந்து விடும்..

அழகாய் அமைந்தது உங்கள் இந்த ஆக்கம்
அழகிய நினைவுகள் சேமித்து வைத்திருக்கும்
அழிக்க முடியாத பெட்டகம் இதயம்

வாழ்த்துக்கள் தோழியே

பூமகள்
29-09-2007, 04:47 PM
உண்மை தான் இனி...
பசுமரத்தாணி போல் படர்ந்த நினைவுகளை என்னாலும் மனத்தை விட்டு நீக்க இயலாது.
உங்களின் பின்னூட்டம் கண்டு மிகுந்த மகிழ்ச்சி.