PDA

View Full Version : 5000ம் மன்றத்தின் சுடர் − ஆலோசனைகள்



ஓவியா
01-09-2007, 10:50 AM
இந்த 5000 பதிவுகளுக்கு மேல் பதிந்த மன்ற உருப்பினர்களிக்கு வேறு ஏதாவது பட்டம் கொடுக்கலாமே!! முன்னோடிகளின் சேவைக்கு இது ஒரு கவ்ரவிப்பாகுமே!!

முக்கியமாக எழுத்துச்சுடர் பரம்ஸ், இளவல் இக்பால் அண்ணா, நகைச்சுவை தலை மணியா, கவிஞர் பூ, எழுத்தாளர் ராகவன் என எந்த பதவியிலும் இல்லாத இவர்களின் சேவையை பாராட்டுவோம்.

2000 ம் மன்றத்தில் தூண்
5000 ம் மன்றத்தின் சுடர், (யாராவது வேறு ஒரு நல்ல பட்டமா சிபாரிசு செய்யுங்கள்)

இல்லனா குத்து விளக்கு, கோபுர விளக்கு, அப்படி இப்படினு ஏதாவது கொடுங்களேன், யாராவது தலைவருகிட்ட சிபாரிசு பண்ணி ஒரு நல்ல பதவிய இவர்களுக்கு வாங்கி கொடுங்களேன்,

வாருங்கள் புது நிர்வாகத்தின் முதல் சலுகையாக, பழைய மன்ற முன்னோடிகளை புது பட்டம் கொடுத்து கவ்ரவிக்கலாமே!!!!!!


ஒரு ஆலோசனைதான்.

இதுவரை வழிமொழிந்தவர்கள்.
இதயம், மலர், நல்லவாத்தியார், சிவா.ஜி, மனோஜ், மதி, தளபதி, பூமகள், சாராக்குமார்


நன்றி
வணக்கம்.


***************************************************************************
இல்ல நம்ப தலைக்கும் அதே தூண்னுனு கொடுத்திட்டு,
நேற்று வந்த வால் எனக்கு அப்படிதான் என்றால் எப்படி மக்கா??
(மணியா அங்கில பார்க்க பாவமாதான் இருக்கு :Christo_pancho:!!)

மலர்
01-09-2007, 11:12 AM
5000ம்,10000 பின்னூட்டங்களுக்கு மேல் பதிந்த பதிவாளர்களுக்கு ஏதாவது ஒரு வித்தியாசமான பட்டம் கொடுத்தால் இன்னும் நல்லாயிருக்கும்.....

ஓவியா அக்காவின் கருத்தை நான் வழிமொழிகறேன்.....

lolluvathiyar
01-09-2007, 12:04 PM
ஓ கொடுக்கலாம்
5000 பதிவுகளை தாண்டியவர்களை மன்றத்தின் ஐயா என்றும்
10000 பதிவுகளை தாண்டியவர்களை மன்றத்தின் பக்தா என்றும்
அழைக்கலாம் என்று பரிந்துரைகிறேன்

இதயம்
01-09-2007, 12:36 PM
மன்றத்தின் சொத்து, மன்றத்தின் பெருமை, மன்றத்தின் தளபதி, மன்றத்தின் மந்திரி, மன்றத்தின் பெட்டகம், மன்றத்தின் புதையல், மன்றத்தின் சூரியன் ஆகியவற்றை பயன்படுத்த பரிந்துரைக்கிறேன்.

மதி
01-09-2007, 01:53 PM
வழிமொழிகிறேன்...
பேர் வைக்கலாம் தெரியாது...
பெரியவங்களா பாத்து ஒரு முடிவெடுத்தா சரி..

சிவா.ஜி
01-09-2007, 02:00 PM
மன்றத்தின் சொத்து, மன்றத்தின் பெருமை, மன்றத்தின் தளபதி, மன்றத்தின் மந்திரி, மன்றத்தின் பெட்டகம், மன்றத்தின் புதையல், மன்றத்தின் சூரியன் ஆகியவற்றை பயன்படுத்த பரிந்துரைக்கிறேன்.

மன்னிக்கவும் ஓவியன்..இதையே நானும் வழிமொழிகிறேன்.

தளபதி
01-09-2007, 02:03 PM
நல்ல விசயமாகத்தான் இருக்கு. ஒவ்வொரு மைல் கல்லையும் கடக்கும்போதும் அனைவருக்கும் சந்தோசம் வருவது இயற்கை.

இதற்கு ஓவியாவின் கருத்து நல்ல விசயமாகத் தெரிகிறது.

நல்ல பெயர் என்ன கொடுக்கலாம். தன்னம்பிக்கை திலகம், மன்றத்தின் தென்றல், கருத்துபுயல், இப்படி ஏதாவது.

மனோஜ்
01-09-2007, 02:25 PM
நல்ல யோசனை பதிவுகள் இடுவதில் இன்னும் ஆர்வம் வரும்
என் சார்பில் மன்றதின் விளக்கு அல்லது ஒளி

பூமகள்
01-09-2007, 02:41 PM
நான் "தமிழ்மன்றத் தென்றல்", "தமிழ்த்தேர்", "கவிஞாயிறு" என்ற பெயர்களைத் தரலாம் என்று பரிந்துரைக்கிறேன்.

சாராகுமார்
01-09-2007, 02:53 PM
5000ம்,10000 பின்னூட்டங்களுக்கு மேல் பதிந்த பதிவாளர்களுக்கு ஏதாவது ஒரு வித்தியாசமான பட்டம் கொடுத்தால் இன்னும் நல்லாயிருக்கும்.....

ஓவியா அக்காவின் கருத்தை நான் வழிமொழிகறேன்.....

ஆமாம் நானும் வழிமொழிகிறேன்.பட்டம்−சுடர் ஜோதி.

ஓவியன்
01-09-2007, 05:56 PM
இந்த திரியின் நலன் கருதி சில பின்னூட்டங்களை இங்கே இருந்து அரட்டைப் பகுதிக்கு மாற்றியுள்ளேன் நண்பர்களே......!

ஓவியா
13-09-2007, 04:30 PM
நன்றி ஓவியன்.

ஆனால் இந்த திரியின் கரு எந்த அளவு அலசப்டுகிறது, அல்லது பட்டுள்ளது???

இதுவரை அட்மீன் டீம் ஏதேனும் பரிசீலனை செய்திருந்தால் நல்லதுதான்.

அட்மீன் குழுவிற்க்கு முன் நன்றிகள்.

சூரியன்
13-09-2007, 04:33 PM
இந்த ஆலோசனையை நானும் ஆதரிக்கிறேன்..

அறிஞர்
13-09-2007, 05:36 PM
பெயரை முடிவு செய்துவிடுங்கள்..... ஆலோசகர்களிடம் கலந்து பேசிவிட்டு அமல்படுத்திவிடுகிறேன்.

ஓவியா
13-09-2007, 06:13 PM
இதுவரை


ஓவியா : மன்றத்தின் சுடர், செந்தமிழ்ச் சுடர், தமிழ்ச்செல்வர், மொழி மைந்தர், தமிழ்தொண்டர்,

லொள்ளுவாத்தியார் : மன்றத்தின் ஐயா

இதயம் அண்ணா : மன்றத்தின் சொத்து, மன்றத்தின் பெருமை, மன்றத்தின் தளபதி, மன்றத்தின் மந்திரி, மன்றத்தின் பெட்டகம், மன்றத்தின் புதையல், மன்றத்தின் சூரியன்.

தளபதி : தன்னம்பிக்கை திலகம், மன்றத்தின் தென்றல், கருத்துபுயல்,

மனோஜ் : மன்றதின் விளக்கு அல்லது மன்றதின் ஒளி

பூமகள் : தமிழ்மன்றத் தென்றல், தமிழ்த்தேர், கவிஞாயிறு

சாராக்குமார் : சுடர் ஜோதி.

அனைவரையும் கலந்துக்கசொல்லி மற்றவர்களின் பரிந்துரை பெயர்களையும் பார்ப்போம்.

மிக்க நன்றி சார்

மனோஜ்
13-09-2007, 06:21 PM
வாக்கேடுப்பு நடத்தலாமே
ஓவியா யக்க ரிட்டனுக்கு வாழத்துக்கள்

அமரன்
13-09-2007, 06:27 PM
5000 உடன் 10000 பதிவுக்கும் சேர்க்கலாமே...!
5000- மன்றச் சுடர்
10000-மன்ற மாமணி.

அக்னி
13-09-2007, 06:53 PM
மன்றத்தின் மாடம்
மன்றத்தின் ஆரம்

அக்னி
13-09-2007, 07:13 PM
ஓவியா : செந்தமிழ்ச் சுடர், தமிழ்ச்செல்வர், மொழி மைந்தர், தமிழ்தொண்டர்,

லொள்ளுவாத்தியார் : மன்றத்தின் ஐயா

இதயம் அண்ணா : மன்றத்தின் சொத்து, மன்றத்தின் பெருமை, மன்றத்தின் தளபதி, மன்றத்தின் மந்திரி, மன்றத்தின் பெட்டகம், மன்றத்தின் புதையல், மன்றத்தின் சூரியன்.

தளபதி : தன்னம்பிக்கை திலகம், மன்றத்தின் தென்றல், கருத்துபுயல்,

மனோஜ் : மன்றதின் விளக்கு அல்லது மன்றதின் ஒளி

பூமகள் : தமிழ்மன்றத் தென்றல், தமிழ்த்தேர், கவிஞாயிறு

சாராக்குமார் : சுடர் ஜோதி.

அமரன் : மன்றச்சுடர், மன்றமாமணி

அக்னி : மன்றத்தின் மாடம், மன்றத்தின் ஆரம்

நன்றி: தொகுத்துத் தந்த ஓவியா அக்காவுக்கு...

பின்னர் வந்த சிபாரிசுகளையும் இணைத்துள்ளேன்...

மனோஜ்
13-09-2007, 07:30 PM
அனைத்தையும் வாக்கேடுப்பு நடத்தி முதல் வருவது 10000 திற்கும் இரண்டாவது வருவது 5000திற்கும் ஏற்பாடுத்தலாமே

lolluvathiyar
14-09-2007, 07:15 AM
10000 பதிவுகளை தாண்டியவர்களை மன்றத்தின் தாதா என்று அழைக்கலாம் என்று புதிய பெயரை பரிந்துரைகிறேன்

ஷீ-நிசி
14-09-2007, 07:20 AM
10000 பதிவுகளை தாண்டியவர்களை மன்றத்தின் தாதா என்று அழைக்கலாம் என்று புதிய பெயரை பரிந்துரைகிறேன்

10,000 தாண்டினால்
மன்றத்தின தாத்தா என்பது இன்னும் பொருத்தமாக இருக்குமே வாத்யாரே ;)

டமாஷு

ஜெயாஸ்தா
15-09-2007, 03:53 PM
5000 - மன்றத்தின் ஞாயிறு, மன்றத்தின் கலங்கரைவிளக்கம்
10000- மன்றத்தின் உயிர், மன்றத்தின் விடிவெள்ளி

namsec
15-09-2007, 05:34 PM
எனது சிபாரிசு மன்றத்தின் மகுடம்

ஜெயாஸ்தா
16-09-2007, 02:59 AM
எனது சிபாரிசு மன்றத்தின் மகுடம்

இது நல்ல பெயராக இருக்கிறதே... நானும்இதை வழிமொழிகிறேன்.

ஓவியா
24-04-2008, 07:22 PM
இந்த 5000 பதிவுகளுக்கு மேல் பதிந்த மன்ற உருப்பினர்களிக்கு வேறு ஏதாவது பட்டம் கொடுக்கலாமே!! முன்னோடிகளின் சேவைக்கு இது ஒரு கவ்ரவிப்பாகுமே!!

முக்கியமாக எழுத்துச்சுடர் பரம்ஸ், இளவல் இக்பால் அண்ணா, நகைச்சுவை தலை மணியா, கவிஞர் பூ, எழுத்தாளர் ராகவன், பிரதீப், சிவாஜி என எந்த பதவியிலும் இல்லாத இவர்களின் சேவையை பாராட்டுவோம்.

2000 ம் மன்றத்தில் தூண்
5000 ம் மன்றத்தின் சுடர், (யாராவது வேறு ஒரு நல்ல பட்டமா சிபாரிசு செய்யுங்கள்)


வாருங்கள் புது நிர்வாகத்தின் முதல் சலுகையாக, பழைய மன்ற முன்னோடிகளை புது பட்டம் கொடுத்து கவ்ரவிக்கலாமே!!!!!!


ஒரு ஆலோசனைதான்.


நன்றி
வணக்கம்.


***************************************************************************
இல்ல நம்ப தலைக்கும் அதே தூண்னுனு கொடுத்திட்டு,
நேற்று வந்த வால் எனக்கு அப்படிதான் என்றால் எப்படி மக்கா??
(மணியா அங்கில பார்க்க பாவமாதான் இருக்கு :Christo_pancho:!!)

இந்த திரி துவங்கி ஒரு வருடத்திற்க்கு மேலாகி விட்டது.
5000க்கு பட்டம் கொடுகறீங்களா இல்லையா சான்றோர்களே?

பலர் இதில் பங்கெடுத்து வழிமொழிந்துள்ளார்கள்,
மன்றம் கவணிக்கவும்.

நன்றி.

அறிஞர்
24-04-2008, 07:31 PM
5000 - மன்றத்தின் சுடர்
10,000 - மன்றத்தின் மகுடம்

என இன்னும் சில நாட்களில் அமல்படுத்துகிறேன்.
வேறு பெயர்கள் சூட்ட வேண்டுமென்றால்... தெளிவாக சொல்லுங்கள்.

ஓவியா
24-04-2008, 08:31 PM
:Dமிக்க நன்றி சார்.

அப்பாடா நான் திரியின் முதல் பின்னூட்டத்தில் பரிந்துரைத்த மன்றத்தின்ச் சுடரே அமல் படுத்த படுகின்றதா!!! :eek::eek: சந்தோஷம். :D:D

நாம்செக் அண்ணாதான் மன்றத்தின் மகுடம் என்று பரிந்துரைத்துள்ளார்.

இன்னும் நல்ல பெயர்கள் இருந்தால் சொல்லுங்கள் மக்களே, கலந்து ஆலோசித்து அறிஞர் அமல் படுத்துவார். :)


***********************************************************************

Today, 09:31 PM

ஓவியா
மன்றத்தின் சுடர்
பண்பட்டவர்

Join Date: 27 Apr 2006
Location: LONDON
Posts: 7,282
iCash Credits: 218.2


ஓவியா: :eek::eek: அமல் படுத்தியபின் முதல் பட்டமே எனக்கு மட்டுந்தான் கொடுத்துள்ளார்கள்!!!
அடடா, நாந்தான் முதல் சுடரா!!! :D:D

அறிஞர்: இல்லை ஓவியா சும்மா டெஸ்டிங் பன்னுரோம்!! :lachen001::lachen001:

ஓவியா: :cool::cool:

அறிஞர்
24-04-2008, 09:11 PM
விரைவில் டைட்டில் கலரை மாற்ற முயலுகிறேன்.

அமரன்
25-04-2008, 07:17 AM
இளசு மன்ற ஆலோசகர்
அறிஞர் நிர்வாகி
அமரன் பொறுப்பாளர்
ஓவியன் பொறுப்பாளர்
மன்மதன் மன்ற ஆலோசகர்
பரம்ஸ் மன்றத்தின் மகுடம்
***************************************
pradeepkt மன்றத்தின் சுடர்
aren மன்ற ஆலோசகர்
ஆதவா பொறுப்பாளர்
ஓவியா மன்றத்தின் சுடர்
gragavan மன்றத்தின் சுடர்
mania மன்றத்தின் சுடர்
poo மன்றத்தின் சுடர்
அக்னி பொறுப்பாளர்
சிவா.ஜிமன்றத்தின் சுடர்
அன்புரசிகன் பொறுப்பாளர்
தாமரை மன்ற ஆலோசகர்
இக்பால் மன்றத்தின் சுடர்

ஆறு மன்றத்தின் மகுடம்
(அச்சச்சோ எனது பெயருக்கு கீழே காணலையே)
பன்னிரண்டு பேர் மன்றத்தின் சுடர்..

யக்கோவ்..
நீங்க எப்போ மகுடம் ஆவது..

ஓவியா
25-04-2008, 07:22 AM
இளசு மன்ற ஆலோசகர்
அறிஞர் நிர்வாகி
அமரன் பொறுப்பாளர்
ஓவியன் பொறுப்பாளர்
மன்மதன் மன்ற ஆலோசகர்
பரம்ஸ் மன்றத்தின் மகுடம்
***************************************
pradeepkt மன்றத்தின் சுடர்
aren மன்ற ஆலோசகர்
ஆதவா பொறுப்பாளர்
ஓவியா மன்றத்தின் சுடர்
gragavan மன்றத்தின் சுடர்
mania மன்றத்தின் சுடர்
poo மன்றத்தின் சுடர்
அக்னி பொறுப்பாளர்
சிவா.ஜிமன்றத்தின் சுடர்
அன்புரசிகன் பொறுப்பாளர்
தாமரை மன்ற ஆலோசகர்
இக்பால் மன்றத்தின் சுடர்

ஆறு மன்றத்தின் மகுடம்
(அச்சச்சோ எனது பெயருக்கு கீழே காணலையே)
பன்னிரண்டு பேர் மன்றத்தின் சுடர்..

யக்கோவ்..
நீங்க எப்போ மகுடம் ஆவது..


அமரன் நன்றாக வகுத்து கொடுத்துள்ளாய், நன்றி.

அமாரா, நீ என்ன்லே சிவாஜியண்ணாவ மொத்தமா சுடரில் சுட்டு விட்டாய்? :lachen001::lachen001:

நான் ஒரு பெண்தான் சுடர் தொகுப்பில் இருக்கேன், அதானல் கொஞ்சநாள் இருந்து நல்லா அனுபவித்துவிட்டு அப்புறம் மகுடம் வாங்குறேன். :D:D

ஓவியன்
25-04-2008, 07:24 AM
ஆறு மன்றத்தின் மகுடம்
(அச்சச்சோ எனது பெயருக்கு கீழே காணலையே)..

வாவ், வாவ், வவ் ( நன்றி மலர்......!! :D)
என் பெயரின் கீழேயும் காணலையே.......!!! :icon_rollout:

ஓவியா
25-04-2008, 07:25 AM
வாவ், வாவ், வவ் ( நன்றி மலர்......!! :D)
என் பெயரின் கீழேயும் காணலையே.......!!! :icon_rollout:

ஒரு பதவியும் இல்லதவர்களுக்கு மட்டுமே 'வெட்டி ஆபீசர்' சுடர்னு பதவி கொடுக்கறாங்கோ. :D

ஓவியன்
25-04-2008, 07:29 AM
ஏன் மலருக்கு நன்றி!!!!

ஹீ, ஹீ......!!

வாவ், வாவ், வவ் என்பது மலரின் பிரெத்தியேக வார்த்தைப் பிரயோகமாக்கும்....!!! :icon_cool1:

க.கமலக்கண்ணன்
23-05-2008, 04:45 AM
வாருங்கள் புதிய நண்பரே இங்கு தமிழை தவிர மற்ற மொழிகளில் பதிக்கக் கூடாது... பொறுப்பாளர்களே இதை சரிசெய்ய அன்புடன் வேண்டுகிறேன்...

அனுராகவன்
23-05-2008, 05:05 AM
கமல் இந்த நபர் தமிழ் தெரியாத நபர் போல தெரிகிறார்..
காரணம் சைனீஸ் போன்ற எழுத்துக்களும் வருது..
எல்லா பதிவுகளும் ஆங்கிலத்திலே உள்ளது..

க.கமலக்கண்ணன்
23-05-2008, 05:15 AM
கமல் இந்த நபர் தமிழ் தெரியாத நபர் போல தெரிகிறார்..
காரணம் சைனீஸ் போன்ற எழுத்துக்களும் வருது..
எல்லா பதிவுகளும் ஆங்கிலத்திலே உள்ளது..

ஆம் அனு அனைத்துபதிவுகளும் ஆங்கலம் மற்று சைனீஸ் கலந்து எழுதுகிறார்... பொறுப்பாளர்கள் கவனிக்க வேண்டும்...

aren
23-05-2008, 05:28 AM
நான் மன்றத்து பொறுப்பாளர்களை கவனிக்கச் சொல்லியிருக்கிறேன். இந்த நபர் தடைசெய்யப்படுவார்.

Narathar
23-05-2008, 10:13 PM
சுடர். மகுடம் ஆஹா என்ன அருமையான பட்டங்கள்
எப்படியோ ஓவியா பட்டம் வாங்கியாச்சு... அதை நினைத்தால் சந்தோஷமே... நாராயணா!!!!

மனோஜ்
25-05-2008, 03:47 PM
மாற்றத்திற்கு போராடிய ஓவியாக்காவிற்கும்
செயல் படுத்திய அறிஞர் அண்ணாவிற்கும் நன்றி

பூமகள்
25-05-2008, 04:05 PM
ஆஹா.. எனக்கு எப்போ மன்றத்தின் சுடர் கிடைக்க போகிறது??!!

இன்னும் 344 பதிவிருக்கே??!! :-(

சரி சரி.. மெல்லமா வாங்கிக்கறேன்.. அதுக்குள்ளே கலரெல்லாம் தயாரிச்சி பத்திரமா சுடரை வைச்சிருங்க மன்ற மைந்தர்களே..!! :D:D

புதுப்பேரு கொடுத்த அக்காவுக்கும் நிர்வாகக்குழுவுக்கும்

நன்றி.. நன்றி.. நன்றி..

ஓவியா
28-07-2008, 01:43 PM
சுடர். மகுடம் ஆஹா என்ன அருமையான பட்டங்கள்
எப்படியோ ஓவியா பட்டம் வாங்கியாச்சு... அதை நினைத்தால் சந்தோஷமே... நாராயணா!!!!

நன்றி நாரதராண்ணா :lachen001::lachen001::lachen001:



மாற்றத்திற்கு போராடிய ஓவியாக்காவிற்கும்
செயல் படுத்திய அறிஞர் அண்ணாவிற்கும் நன்றி

நன்றி மனோஜ் :D:D



ஆஹா.. எனக்கு எப்போ மன்றத்தின் சுடர் கிடைக்க போகிறது??!!

இன்னும் 344 பதிவிருக்கே??!! :-(

சரி சரி.. மெல்லமா வாங்கிக்கறேன்.. அதுக்குள்ளே கலரெல்லாம் தயாரிச்சி பத்திரமா சுடரை வைச்சிருங்க மன்ற மைந்தர்களே..!! :D:D

புதுப்பேரு கொடுத்த அக்காவுக்கும் நிர்வாகக்குழுவுக்கும்

நன்றி.. நன்றி.. நன்றி..



நன்றிமா.
அடடே பூ மன்றத்தில் சுடர் பட்டியளில். வாழ்த்துக்கள். :D

பூமகள்
30-07-2008, 04:25 PM
நன்றி அக்கா... எப்படியோ எனக்கும் ஒரு சுடர் கொடுத்தீங்களே...!! ;) :)

அன்புரசிகன்
30-07-2008, 04:29 PM
அதை நீங்க உடனடியாக காணக்கூடியதாக இருக்காதே...

http://img26.picoodle.com/img/img26/4/7/30/f_Capturem_e0986c8.jpg

கலைவேந்தன்
30-07-2008, 05:04 PM
ம்ஹூம் .........நாங்க எல்லாம் எப்ப சுடர் கிடர்னு பேரு வாங்கறது???
( எண்ணிக்கையை பாருங்கைய்யா :( )

அன்புரசிகன்
30-07-2008, 05:25 PM
ம்ஹூம் .........நாங்க எல்லாம் எப்ப சுடர் கிடர்னு பேரு வாங்கறது???
( எண்ணிக்கையை பாருங்கைய்யா :( )

உங்களுடைய ஒவ்வொரு பதிவும் ஜோதியாய் ஜொலிக்கும் போது சுடராகவில்லை என்ற கவலை எதுக்கு அண்ணலே....

shibly591
01-08-2008, 05:33 AM
ம்ஹூம் .........நாங்க எல்லாம் எப்ப சுடர் கிடர்னு பேரு வாங்கறது???
( எண்ணிக்கையை பாருங்கைய்யா :( )

அதே ஆதங்கம்தான் எனக்கும்