PDA

View Full Version : 3. காதல்விரதம்.. (காதல் கீழ் கணக்கு...)

rambal
11-06-2003, 03:31 PM
3. காதல்விரதம்.. (காதல் கீழ் கணக்கு...)

என் காதல்
சொல்ல
உதடு ஒத்திகை
பார்த்த வார்த்தைகள்
வேலை நிறுத்தம்
மேற்கொள்கின்றன
உன்னைக் கண்டதும்...

தற்காலபணியாளர்கள்
போல் அனுபவம் இல்லா
தொழிலாளர்களாய்
ஏதேதோ வார்த்தைகள்
வந்து விழுகின்றன
அதன்பின்..

ஆளுங்கட்சி அறிவித்த
பந்த்தாய்
எப்போதும் மூடிக்கிடக்கின்றன
உன் உதடுகள்..

கடை உடைக்க
கலவரக்காரனுக்கு
துணிவில்லை
உன்னிடம்..

உண்ணாவிரதமாய்
வார்த்தைவிரதம்
இருக்கிறாய் நீ..

பழச்சாறு கொடுத்து
உண்ணாவிரதம்
முடிக்கமுடியாமல்
திணறுகிறேன் நான்..

இப்படியாகத்தான்
நீயும் நானும்
சொல்லவில்லை
நம் காதலை
இன்றுவரை..

karikaalan
11-06-2003, 03:41 PM
இப்படியும் காதல் இருக்க முடியும். எத்தனையோ காரணங்களால் வெளிப்படையாகச் சொல்ல இயலாமல் அப்படியே பொசுங்கிப்போய்விடும். எல்லாம் முடிந்தபின், "ஓ.. இப்படிச் சொல்லியிருக்கலாமோ? அப்படி விளங்க வைத்திருக்கலாமோ?" என்றெல்லாம் மனம் ஏங்கும். காதலுக்கு மட்டுமே இச்சக்தி! வாழ்க காதல்!

===கரிகாலன்

aren
12-06-2003, 02:06 AM
நம் மக்களில் பலர் வெளிப்படையாக கேட்பதற்கு அச்சப்பட்டு நிறைய காதல்கள் நிறைவேறாமல் போய்விட்டன. கேட்டால் கிடைக்கும் என்ற நியதியில் மனிதன் செயல்பட்டால் எல்லோருக்கும் ஜெயம்தான்.

பாலமுருகன்
12-06-2003, 11:36 AM
இல்ல ஆரென்... கேட்டாலும் கிடைக்காது என்பது என் விசயத்தில் உறுதியாகிவிட்டது. என்ன ஒன்னு எனக்கு அந்த புலம்பல்களும் வராது. அதுக்காக விடப்போவதில்லை... அடாது மறுத்தாலும் விடாது என் காதல் தொடரும்..... ரகசியமாக... எறும்பு ஊர கல்லும் தேயும்.... காதலில் கஜினி முகமது....

பாலமுருகன்

aren
12-06-2003, 03:09 PM

அதுக்காக தாடியெல்லாம் வளர்த்துக்கொண்டு சோகமாக இருக்கவேண்டாம். கஜினிமுகமது மாதிரி கடைசியில் வெற்றி கிடைக்கவில்லையென்றால், கோரி முகமது மாதிரி வேறு இடத்திற்குச் செல்லுங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்க என் வாழ்த்துக்கள்.

poo
12-06-2003, 03:33 PM
காதல் என்பதே போராட்டம்தானே... என்ன போராட்டம் வெற்றியடைந்தபின்னும் பிரச்சிணைகள் தொடர்வதுதான் பரிதாபம்..

பாலமுருகன்
13-06-2003, 04:03 AM
அதுக்காக தாடியெல்லாம் வளர்த்துக்கொண்டு சோகமாக இருக்கவேண்டாம். கஜினிமுகமது மாதிரி கடைசியில் வெற்றி கிடைக்கவில்லையென்றால், கோரி முகமது மாதிரி வேறு இடத்திற்குச் செல்லுங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்க என் வாழ்த்துக்கள்.

தாடியா? சோகமா? அதெல்லம் ஒரு காலம் ஆரென்.. இப்போது யார் தாடி வத்துக்கொண்டு "உலகே மாயம்" என்று சொல்லி திரிகிறார்கள். இந்த சவால் நிறைந்த உலகத்தில் யாரொருவன் ஒருத்திக்காக காத்திருந்து தன்னை இழக்கிறானோ அவனை விட ஒரு சிறந்த முட்டாள் இருக்க முடியாது
நன்றி ஆரென் உங்கள் வாழ்த்துக்களுக்கு

பாலமுருகன்

Narathar
13-06-2003, 04:22 AM
ராம் "பால்" குடித்து
விரதத்தை முடியுங்கள்

Nanban
13-06-2003, 04:33 PM
ஒருவருக்கொருவர் சொல்லாமலே போன பின் அதை எப்படி தோல்வி என்று கொள்வது? சொல்லி தோற்றால் தான் அது காதல் தோல்வி. சொல்லாமலே விட்டுப் போனால் முயற்சிக்கவில்லை இருவருமே என்று தானே ஆகும். ?