PDA

View Full Version : கடையேழு வள்ளள்களின் சரித்திரம்

pathman
31-08-2007, 09:47 AM
நண்பர்களே எனக்கு கடையேழு வள்ளள்களின் சரித்திரம் மற்றும் அவர்களின் கொடை போன்ற விபரங்கள் வேண்டும் தெரிந்தவர் தரவும்

அல்லது எந்த தளத்தில் தேடினால் கிடைக்கும் என்று தெரிவிக்கவும்

தங்கவேல்
31-08-2007, 01:11 PM
தெரிந்தவர் சொல்லுங்களேன். எனக்கும் ஆர்வம்...

அண்ணன்
31-08-2007, 01:21 PM
வள்ளல் பாரி என்ற மன்னன் சங்க காலத்தை சேர்ந்த பறம்பு மலைப்பகுதிகளை அரசாண்டு வந்தவன்.தற்போது பிரான்மலை என சிவகங்கை மாவட்ட எல்லைக்குள் அதைவிட சுலபமாக சொன்னால் மதுரை சென்னை சாலையில் கொட்டாம்பட்டிக்கு கிழக்கே மூன்று மைல் தொலைவில் இருக்கிறது அம்மலையும் ஊரும். கட்டபொம்மன் புதுக்கோட்டை ராஜா ரகுநாதனால் வெள்ளையரிடம் காட்டிகொடுக்கும் முன்னர் இந்த மலையில் பத்து நாட்கள் ஒழிந்து இருந்தான்.

மலை மேல் பாரிமன்னன் ஆண்ட*கோட்டைகள்எதுவும்இல்லை.ஆனால் அவன் வணங்கிய முருகன் கோவில் இருக்கிறது.
அவன் எப்படி வள்ளலானான் எனில் தேரில் போய்க்கொண்டு இருக்கும்போது முல்லைக்கொடி ஒன்று படர ஒரு ஆதரவின்றி இருந்ததால் அவன் தேரில் இருந்து இறங்கி முல்லைக்கு பற்றி வளர தேரை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டான்.

அடுத்தாற்போல் அதியமான் கடவுள் கொடுத்த நீண்ட நாள் வாழ பலன் கொடுக்கும் ஒரு அதிசய நெல்லிக்கனியை தானுன்னாது தமிழ்ப்பணி செய்யும் அவ்வைக்கு கொடுத்த வள்ளல்.தற்போது அவன் ஆண்ட பிரதெசம் திருவண்ணாமலை என அழைக்கப்படுகிறது.

காரி, ஓரி, ஆய், பேகன் இன்னும் ஒருவர் நினைவு வரவில்லை.

mukilan
09-09-2007, 10:40 AM

அதியமான் தகடூர் எனப்படும் தர்மபுரியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிரேன். புதிய தகவல்.

சிவா.ஜி
09-09-2007, 11:48 AM
அதியமான் தகடூர் எனப்படும் தர்மபுரியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிரேன். புதிய தகவல்.

ஆம் முகிலன் தகடூர்தான் அதியமான் ஆண்ட பிரதேசம்.அவர் காலத்து சில பழம் பொருட்கள் தர்மபுரியிலுள்ள அரும்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.

அக்னி
11-09-2007, 11:10 PM
தமிழகத்தின் பல பகுதிகளில் குறுநில மன்னர்களும் ஆட்சி புரிந்தனர். இவர்கள் வேளிர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
வேளிர்களில் மிகச் சிறந்தவர்கள் கடையேழு வள்ளல்கள் ஆவார்கள்.
பாரி, ஓரி, காரி, எழினி, பேகன், ஆய், நள்ளி ஆகியோர் கடையெழு வள்ளல் ஆவார்.
கபிலர், அவ்வையார், நல்லாதனார், பெருஞ்சித்திரனார் போன்ற தமிழ்ப் புலவர்களை இவர்கள் ஆதரித்தனர்.
நன்றி: அறிய தந்த இணையத்திற்கு...

ஓவியன்
15-09-2007, 06:15 AM
கடையேழு வள்ளல்கள் எல்லோருமே வேளிர்களா அக்னி...?

வேளிர்கள் சோழர்களில் ஒரு பகுதியினர், சோழப் பேரசில் இந்த வேளீர்களின் சிற்றரசுகள் உள்ளடங்கி இருந்தன........