PDA

View Full Version : துவைத்துக் கொடுத்து



ஆதவா
31-08-2007, 08:37 AM
எதிர்வீட்டுக் குடியானவன்
துவைத்துக் கொடுத்து
என் மானத்தைக்
காயப்போட்டான்.

praveen
31-08-2007, 08:48 AM
இன்னும் சற்று வரிகள் இருந்தால் எனக்கு புரிந்திருக்குமோ என்னமோ?, நமக்கு கவிதை (அதிலும் புதுக்கவிதை எட்டிக்காய்) ரொம்ப தூரம்.

எதிர்வீட்டு சலவைத்தொழிலாளி
எனது துனியை துவைத்து
எனது (துனியின்) மானத்தை
காய போட்டான்.

இப்படித்தான் அர்த்தம் எடுத்துக்கொண்டேன். சரியா ஆதவா, கொஞ்சம் சொல்லிக்கொடுங்கள்.

சாராகுமார்
31-08-2007, 08:58 AM
எதிர்வீட்டுக் குடியானவன்
துவைத்துக் கொடுத்து
என் மானத்தைக்
காயப்போட்டான்.

புதுக்கவிதை அருமை.
என் மானத்தைப்
பிழிந்து காயப்போட்டான்.

ஆதவா
06-09-2007, 12:46 PM
இன்னும் சற்று வரிகள் இருந்தால் எனக்கு புரிந்திருக்குமோ என்னமோ?, நமக்கு கவிதை (அதிலும் புதுக்கவிதை எட்டிக்காய்) ரொம்ப தூரம்.

எதிர்வீட்டு சலவைத்தொழிலாளி
எனது துனியை துவைத்து
எனது (துனியின்) மானத்தை
காய போட்டான்.

இப்படித்தான் அர்த்தம் எடுத்துக்கொண்டேன். சரியா ஆதவா, கொஞ்சம் சொல்லிக்கொடுங்கள்.

தெரியவில்லை... இன்னும் அதிகம் கொடுத்திருந்தால் விளக்கம் அதிலே சேர்ந்த்ருக்கலாம்.... எனினும்...

ஒரு சிலர் வீட்டில் அம்மா தன் மகனை துவைக்கச் சொல்லி வற்புறுத்துவார்கள். மகனுக்கோ பிடிக்கவே பிடிக்காது.. அந்த சூழ்நிலையில் அவனை ஒத்த வயதுடைய எதிர்விட்டுப் பையன் அவன் வீட்டுக்கு துவைத்துக் கொடுப்பான். அது இவனுக்கு மானக்கேடாக இருக்கும்....

எல்லாம் வாழ்வில் நடந்தவை தான்.....

நன்றிங்க அசோ

ஆதவா
06-09-2007, 12:47 PM
புதுக்கவிதை அருமை.
என் மானத்தைப்
பிழிந்து காயப்போட்டான்.

நன்றிங்க சாராகுமார்...

சிவா.ஜி
07-09-2007, 04:58 AM
துவைத்துக் காயப்போட்ட ஆடையின் கிழிசல் அவன் மானத்தை வாங்கியதோ.அல்லது அம்மா சொல்லியும் தன் ஆடை துவைக்காத இந்த கவிதையின் நாயகனுக்கு....அழுக்குத்துவைத்தல்..இழுக்கல்ல என்று துவைத்து உணர்த்தினானோ...அந்த எதிர்வீட்டு சலவைத்தொழிலாளி....எப்படியோ மானைத்தைக் காயப்போட்டுவிட்டான்...உலர்ந்ததும் இவன் உடுத்திக்கொள்ளட்டும்....மானத்தையும் சேர்த்து.பாராட்டுக்கள் ஆதவா.

சுகந்தப்ரீதன்
08-09-2007, 11:40 AM
எதிர்வீட்டுக் குடியானவன்
துவைத்துக் கொடுத்து
என் மானத்தைக்
காயப்போட்டான்.

என்னமோ எழுதுரிங்க...ஆதவரே....
வாழ்த்துக்கள்...உங்களுக்கும் அந்த குடியானவனுக்கும்...!

ஷீ-நிசி
08-09-2007, 12:10 PM
குட்டிக்கவிதை..


கருத்து செறிவு... வீரியம் குறைவு....

தொடருங்கள் ஆதவா...

lolluvathiyar
09-09-2007, 12:20 PM
ஒரு சிலர் வீட்டில் அம்மா தன் மகனை துவைக்கச் சொல்லி வற்புறுத்துவார்கள்.

மாத்தி சொல்லரீங்களே ஆதவா? மனைவிதா துவைக்க சொல்லி வற்புருத்துவாள். சரி உங்களுக்கு தான் அனுபவம் இல்லையே

அமரன்
10-09-2007, 09:21 AM
காயப்படவன் கவிதை அருமை.
சாயப் பூச்சுகளில்லா கவிதை.
தோலுரித்த வாழைகனியாக சுவைத்தாலும் பிடிமானம் இல்லாததால் புக சிரமப்படுகிறது.
~~அமரன்

ஆதவா
18-09-2007, 12:07 PM
காயப்படவன் கவிதை அருமை.
சாயப் பூச்சுகளில்லா கவிதை.
தோலுரித்த வாழைகனியாக சுவைத்தாலும் பிடிமானம் இல்லாததால் புக சிரமப்படுகிறது.
~~அமரன்

சில நேரங்களில் இம்மாதிரி குப்பைகளும் பயன்படுமா என்று சோதிப்பதுண்டு...... நன்றி அமரன்..