PDA

View Full Version : முகமூடி மனிதர்கள்..!!



பூமகள்
31-08-2007, 06:46 AM
http://img27.picoodle.com/img/img27/9/8/30/poomagal/f_r20104704m_13123fb.jpg

மெல்லிய புன்னகை
வாஞ்சை பேச்சு
வஞ்சனை உள்ளம்
வசிய மனிதர்..!

நிஜ முகம் களைந்து
பொய் முகங்களின்
பேரூர்வலம்
தெருவெங்கும்.....

நிஜ முகங்கள் தேடி
நிதம் வாடும்
என் மனம்....!!

முகத்தில் சிரிப்பு
மொத்தத்தில் வெறுப்பு
முகம் காட்டா
அகம் ஏராளம்.....!!

யாரிடமும்
மெய்முகம் காட்ட
மறுப்பதென்ன
மானிடா???

உண்மையாய்
உறைவது
உறுத்துதோ
உனக்கு....??????????

உள்மன
அழுக்கை அகற்றி
ஆழ்மன அழகில்
லயித்துப்பார்
கொஞ்சம்........

ஆன்மா பேசும்
அமைதி மொழி...!
அறிந்து கொள்
அது நல் வழி...!

Narathar
31-08-2007, 06:51 AM
வண்ண வண்ண எழுத்துக்களில்
உண்மையாக ஒரு கவிதை..............

கவிதைக்கு பொய்யழகு என்பார்கள்
ஆனால் உண்மையை அழகாக தருவதில் பூமக்ளுக்கு நிகர் பூமகளே

பூமகள்
31-08-2007, 07:01 AM
வண்ண வண்ண எழுத்துக்களில்
உண்மையாக ஒரு கவிதை..............
கவிதைக்கு பொய்யழகு என்பார்கள்
ஆனால் உண்மையை அழகாக தருவதில் பூமக்ளுக்கு நிகர் பூமகளே

மிக்க நன்றிகள் அன்பு சகோதரர் நாரதரே....!
எல்லாம் தங்கள் சித்தம் நாராயணா........!:icon_wink1:

ஆதவா
31-08-2007, 08:19 AM
யக்கோய்!! அப்பால தாரென் பின்னூட்டம்....

ஓவியன்
31-08-2007, 06:10 PM
யாரிடமும்
மெய்முகம் காட்ட
மறுப்பதென்ன
மானிடா???

உண்மையாய்
உறைவது
உறுத்துதோ
உனக்கு....??????????


முகமூடிகளுக்காக நீங்கள் கண்டு கொண்ட காரணம் ஒரு சாட்டையடி பூமகள்.....
உண்மையாய் உறைய உறுத்துவதாலும், உண்மையாய் உலாவ உறுத்துவதாலும் சாயம் பூசி அலைகின்றனர் பலர் நம்மிடை.....

எவனொருவன் தன் உண்மை முகத்தோடு உண்மையாக உலகத்தில் போராடத் துணிகிறானோ அவனே உண்மையில் வாழ்வில் ஜெயிக்க முடியும். முகமூடி மனிதர்களின் முகமூடிகள் ஆரம்பத்தில் வெற்றி பெற்றன போலிருந்தாலும் என்றாவது ஒரு நாள் அந்த முகமூடிகள் கிழியும் என்பது உறுதி, ஆகவே முகத்தை மூடி சாயம் பூசி வருபவர்களை நாமாகவே இனம் கண்டு விலகி நடப்பதே நமக்கு நல்லது.

வேறுபட்ட கோணத்திலே ஒரு அருமையான கருவைக் கவியாக்கியமைக்குப் பாராட்டுக்கள் பூமகள்!. :nature-smiley-008:

மனோஜ்
31-08-2007, 06:36 PM
உண்மை என்றும் நிலைக்கும் பல மனிதர்களின் மனதை தவிர
அழகான கவிதை வடித்த பூமகளுக்கு வாழ்த்துகளுடன் நன்றிகள்

ஓவியா
01-09-2007, 01:17 PM
பூமகள்,
நல்ல சமூக சிந்தைக்கு முதல் பாராட்டுக்கள்,
இரண்டாவதாக வார்தைகளின் கோர்வைக்கு, அற்புதம்,
மூன்றாவதாக அழகிய எழுத்துகளின்ல் பொதிந்த கருவிற்க்கு
நான்காவது மாயை வேண்டாம் மன்திற்க்கு கட்டுப்படு என்ற அறிவுறைக்கு,
ஐந்தாவதாக நீ நீயாகவே இருக்கும் பொழுது ஆன்மா அமைதியில் லயிக்கும் என்ற உலக தத்துவத்திற்க்கு.

அருமையான கவிதைக்கு எனது பஞ்சபாராட்டுகள்,


படமும் கவிதையும் நல்ல ஒத்துப்போகின்றன*.

சிவா.ஜி
01-09-2007, 02:12 PM
நிறம் மாறும் பச்சோந்திகளை வர்ண வரிகளிலேயே வடித்துக்காட்டிய விதம் அருமை.முகமூடிக்குப் பின்னால் ஒரு அசிங்க முகத்தை வைத்துக்கொண்டு தினம் நிழல்முகம் காட்டும் இந்த முகமூடி மனிதர்,மூடிவைத்திருப்பது முகம் மட்டுமல்ல...தங்கள் மனதையும்தானென்று உரக்கச்சொல்லும் உயர்ந்த கவிதை.
ஓவியா சொன்ன பஞ்சபாராட்டுக்களுடன் என்னுடைய பஞ்சமில்லா பாராட்டுக்கள் பூமகள்.

பூமகள்
01-09-2007, 02:26 PM
முகமூடிகளுக்காக நீங்கள் கண்டு கொண்ட காரணம் ஒரு சாட்டையடி பூமகள்.....
எவனொருவன் தன் உண்மை முகத்தோடு உண்மையாக உலகத்தில் போராடத் துணிகிறானோ அவனே உண்மையில் வாழ்வில் ஜெயிக்க முடியும்.
வேறுபட்ட கோணத்திலே ஒரு அருமையான கருவைக் கவியாக்கியமைக்குப் பாராட்டுக்கள் பூமகள்!. :nature-smiley-008:

மிக்க நன்றிகள் ஓவியன் அண்ணா.
உங்களின் புரிதல் அற்புதம்.
சிந்தனையை அழகாக விளக்கினீர்.

பூமகள்
01-09-2007, 02:27 PM
உண்மை என்றும் நிலைக்கும் பல மனிதர்களின் மனதை தவிர
அழகான கவிதை வடித்த பூமகளுக்கு வாழ்த்துகளுடன் நன்றிகள்

மிக்க நன்றிகள் மனோஜ் அண்ணா தங்களின் பின்னூட்டத்திற்கும் பாராட்டுதலுக்கும்..!!

பூமகள்
01-09-2007, 02:32 PM
அருமையான கவிதைக்கு எனது பஞ்சபாராட்டுகள்,
படமும் கவிதையும் நல்ல ஒத்துப்போகின்றன*.

அன்பு ஓவியா அக்காவின் கடைக்கண் பட்டதா என் கவிதை..???!!!!! :thumbsup:
மிகுந்த மகிழ்ச்சி அக்கா...அழகான பின்னூட்டம் தந்தீர்...! என்ன சொல்வதென்றே தெரியவில்லை..! :angel-smiley-026:
உங்களின் ஆசி எனக்கு என்றும் வேண்டும்..! :082502now_prv:
உங்களது அருமையான கவி அலசலுக்கும் மற்றும் பின்னூட்டத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அக்கா.

தொடந்து உங்களின் கடைக்கண் பார்வை பட ஏங்கும் என் கவிதைகள்...!:icon_rollout:

ஓவியா
01-09-2007, 02:33 PM
நிறம் மாறும் பச்சோந்திகளை வர்ண வரிகளிலேயே வடித்துக்காட்டிய விதம் அருமை.முகமூடிக்குப் பின்னால் ஒரு அசிங்க முகத்தை வைத்துக்கொண்டு தினம் நிழல்முகம் காட்டும் இந்த முகமூடி மனிதர்,மூடிவைத்திருப்பது முகம் மட்டுமல்ல...தங்கள் மனதையும்தானென்று உரக்கச்சொல்லும் உயர்ந்த கவிதை.
ஓவியா சொன்ன பஞ்சபாராட்டுக்களுடன் என்னுடைய பஞ்சமில்லா பாராட்டுக்கள் பூமகள்.

அண்ணா ஒரு கவிதைக்கு ஒரு பாராட்டு போடுவதே தில்லாலங்கடி வேலையா இருக்கு!! அப்படியே எதிர் கட்சிக்கு :icon_rollout::icon_rollout:தாவி எண்ணில்லா பாராட்டுக்களை அள்ளி தெளித்து நீங்க அடிச்ச செஞ்ச*ரிக்கு நன்றி.

ஓவியா
01-09-2007, 02:35 PM
அன்பு ஓவியா அக்காவின் கடைக்கண் பட்டதா என் கவிதை..???!!!!! :thumbsup:
மிகுந்த மகிழ்ச்சி அக்கா...அழகான பின்னூட்டம் தந்தீர்...! என்ன சொல்வதென்றே தெரியவில்லை..! :angel-smiley-026:
உங்களின் ஆசி எனக்கு என்றும் வேண்டும்..! :082502now_prv:
உங்களது அருமையான கவி அலசலுக்கும் மற்றும் பின்னூட்டத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அக்கா.

தொடந்து உங்களின் கடைக்கண் பார்வை பட ஏங்கும் என் கவிதைகள்...!:icon_rollout:



அய்க்கோ ரொம்ப புகழ்றீங்களே!!! என் பஞ்ச பாராட்டிற்க்கு பஞ்ச வ*ரியிலே நன்றியா!!

மன்றத்தில் தொடர்ந்து அசத்த என் ஆசிகள்.

பூமகள்
01-09-2007, 02:42 PM
மிக மிக மகிழ்ச்சி அக்கா... மிக்க நன்றிகள் மறுபடியும்..!!

அக்னி
03-09-2007, 10:08 PM
தவறுகள் மட்டுமல்ல, உணர்வுகளும்..,
இன்பங்கள் மட்டுமல்ல, மகிழ்ச்சிகளும்..,
அழுகைகள் மட்டுமல்ல, சிரிப்புக்களும்..,
சூழ்ச்சிகள் மட்டுமல்ல, எழுச்சிகளும்...
கூட புதைந்து போகின்றனவே..,
முகமூடிகளின் பின்னால்...
உணர மறுப்பதேன்..,
முகம்மூட முன்னால்..?

பாராட்டுகள் பூமகள்...
அனைவரது பின்னூட்டங்களும் அசத்தல்... பாராட்டுக்கள்...

இலக்கியன்
04-09-2007, 07:46 AM
அழகான வரிகளில் நியங்களை சிறைப்பிடித்தீர்கள். கவிதையில்
முகத்திரை கிழித்தது வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் கவி மலர்கள்

பென்ஸ்
04-09-2007, 04:34 PM
பூமகள்....

கவிதை நன்று.... தாங்கள் வாடித்த கவிதைகளில்
பஞ்சு மேகம்
சத்தமாய்.
மன்ற்றூம் இந்த முகமூடி மனிதர்கள் இவற்றை வாசித்தேன்....

பஞ்சு மேகம் கவிதைக்கு முன்பே பின்னுட்டம் இட்டிருந்தேன்.... இந்த கவிதைகள் வாசித்தபோது எனக்கு உங்கள் கவிதைகளின் வடிவும், சாரமும் ஒன்றாய் இருப்பது போல் ஒரு உணர்வு.... வார்த்தைகளை அழகாக உபயோகித்து சொல்லவந்ததை சரியாக சொல்லும் நீங்கள் இதிலும் கொஞ்சம் கவணம் செலுத்தலாம் என்பது என் கருத்து.....

பூமகள்... நிஜ முகம் காண வேண்டாதிர்கள்... மனிதனின் நிஜ முகம் மிக மிக அசிங்கமானது... அந்த அசிங்கத்தை இந்த முகமூடிகள் நல்லவனாய், வீரனாய், பண்பாளனாய் பொய் சொல்லி கொடுப்பதால் மட்டுமே சகித்து கொள்ளமுடிகிறது.....

தொடரட்டும் உங்கள் உளதேடல்கள்...

இளசு
04-09-2007, 09:21 PM
பாராட்டுகள் பூமகள்!

பொதுவாய் பென்ஸ் விமர்சனம் தந்துவிட்டபின் நான் வாசித்தால்
நான் எழுதவேண்டியதை அவர் ஏற்கனவே எழுதிவிட்டதாய் படும்..

இங்கும் அதே.. நன்றி பென்ஸ்!

ஷீ-நிசி
05-09-2007, 04:19 AM
முகமூடி மனிதர்கள்!
முகமூடியே வாழும் மனிதர்கள்!

முன்னதை கழற்றி வீசியெறிய முடியும்....
பின்னதை....வீசியெறிய* முடிவ*தில்லை...

ஒவ்வொருவ*ருக்கும், ஒவ்வொரு முக*மூடிக*ளை ம*ன*ம் சேமித்துக்கொண்டேதான் இருக்கிற*து.....

காலியாக*ட்டும் ம*ன*க்கிட*ங்கில் உள்ள* முக*மூடிக*ள்...

வாழ்த்துக்க*ள் பூம*க*ள்!

lolluvathiyar
05-09-2007, 08:29 AM
கவிதை
படம்
எழுத்து அனைத்தும் பூமகளின் அவதாரை போலவே கலர் கலராக இருக்கு.
பூமகள் சும்மா படம் போடரீங்க*

ஆதவா
06-09-2007, 11:27 AM
சிலர் முகமூடி அணிந்தே ஆகவேண்டிய சூழ்நிலை.... வழியில்லை. மன அழுக்குகளை உறை அணிந்து மூடிக் கொள்ளும் சூழ்நிலை... அவர்களுக்கு இந்த கவிதை பொருந்தாது.... எல்லாரும் ஒருவித முகமூடித்த்னத்தில்தான் திரிகிறோம்... எல்லாரும் நாடக நடிகர்கள் தானே!!

கவிதை உரைப்பது பல.... வாழ்த்துக்கள்....

பூமகள்
07-09-2007, 12:29 PM
தவறுகள் மட்டுமல்ல, உணர்வுகளும்..,
இன்பங்கள் மட்டுமல்ல, மகிழ்ச்சிகளும்..,
அழுகைகள் மட்டுமல்ல, சிரிப்புக்களும்..,
சூழ்ச்சிகள் மட்டுமல்ல, எழுச்சிகளும்...
கூட புதைந்து போகின்றனவே..,
முகமூடிகளின் பின்னால்...
உணர மறுப்பதேன்..,
முகம்மூட முன்னால்..?

மிக்க நன்றிகள் சகோதரரே...
அழகான பின்னூட்டக் கவி.... பின்னிவிட்டீர்கள்... !
நன்றிகள் கோடி அக்னியாரே...!

பூமகள்
07-09-2007, 12:32 PM
அழகான வரிகளில் நியங்களை சிறைப்பிடித்தீர்கள். கவிதையில்
முகத்திரை கிழித்தது வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் கவி மலர்கள்
மிக்க நன்றிகள் இலக்கியரே...!! :nature-smiley-002:

பூமகள்
07-09-2007, 12:37 PM
பஞ்சு மேகம் கவிதைக்கு முன்பே பின்னுட்டம் இட்டிருந்தேன்.... இந்த கவிதைகள் வாசித்தபோது எனக்கு உங்கள் கவிதைகளின் வடிவும், சாரமும் ஒன்றாய் இருப்பது போல் ஒரு உணர்வு.... வார்த்தைகளை அழகாக உபயோகித்து சொல்லவந்ததை சரியாக சொல்லும் நீங்கள் இதிலும் கொஞ்சம் கவணம் செலுத்தலாம் என்பது என் கருத்து.....
தொடரட்டும் உங்கள் உளதேடல்கள்...
மிக்க நன்றிகள் பென்ஸ் அண்ணா.
என் கவிதைகள் மீது உங்களின் பார்வையும் அதற்கான அலசல்களுடனான விமர்சனமும் என்னை சந்தோசத்தால் திணரடிக்கின்றன.

உங்களின் கருத்திற்கு மிக்க நன்றிகள் அண்ணா....!:nature-smiley-002:

பூமகள்
07-09-2007, 12:40 PM
பாராட்டுகள் பூமகள்!
பொதுவாய் பென்ஸ் விமர்சனம் தந்துவிட்டபின் நான் வாசித்தால்
நான் எழுதவேண்டியதை அவர் ஏற்கனவே எழுதிவிட்டதாய் படும்..
இங்கும் அதே.. நன்றி பென்ஸ்!

உங்களின் பாராட்டுதலுக்கும் கருத்திற்கும் நன்றிகள் இளசு அண்ணா. :nature-smiley-002:

பூமகள்
07-09-2007, 12:47 PM
முகமூடி மனிதர்கள்!
முகமூடியே வாழும் மனிதர்கள்!
முன்னதை கழற்றி வீசியெறிய முடியும்....
பின்னதை....வீசியெறிய முடிவதில்லை...
ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு முகமூடிகளை மனம் சேமித்துக்கொண்டேதான் இருக்கிறது.....
காலியாகட்டும் மனக்கிடங்கில் உள்ள முகமூடிகள்...


உண்மை தான் ஷீ−நிசி அன்பரே..!
உங்களின் பின்னூட்டமும் கவிதையும் அருமை.
நன்றிகள் கோடி.......!:nature-smiley-002:

பூமகள்
07-09-2007, 12:53 PM
பூமகள் சும்மா படம் போடரீங்க
நன்றிகள் அன்புச் சகோதரர் வாத்தியாரே...!
அப்போ.... என் படம் மட்டும் தான் சூப்பர்னு சொல்லுறீங்களா................................????!!!!!!!!!!!!!!!!!!! :medium-smiley-100:

பூமகள்
07-09-2007, 12:55 PM
மிக்க நன்றிகள் அன்புத் தம்பி ஆதவா..!
பூமி எனும் மேடையில் அனைவரும் நடிகர்கள் தான்..!

ஆதவா
07-09-2007, 01:23 PM
மிக்க நன்றிகள் அன்புத் தம்பி ஆதவா..!
பூமி எனும் மேடையில் அனைவரும் நடிகர்கள் தான்..!

நீங்கள் நடிகை தானே?

ஜெகதீசன்
02-02-2008, 08:17 AM
என் இனிய சகோதரியே :icon_b:

முதல் முறை உஙகள் கவிதையில்
படித்து மெய்சிலிர்க்கிறேன். நன்றி.

ஆனால் வாழ்க்கை ஓர்
திறந்த புத்தகமாகிவிட்டால்
பலர் அதில் கைவைத்து அழுக்காக்கி விடுவார்களே :confused:?
சிலர் புத்தகத்தையே திருடிவிடுவார்கள்.:confused:

இதற்கு தாங்களின் அழகான பதிலை எதிர்பார்க்கிறேன்.:icon_rollout::icon_rollout::icon_rollout:

பூமகள்
02-02-2008, 09:35 AM
நீங்கள் நடிகை தானே?
ஹா ஹா..! :lachen001:

நான் நடிகை அல்ல...!

நிஜத்தின் நங்கை..! :)

பூமகள்
02-02-2008, 09:42 AM
என் இனிய சகோதரியே :icon_b:

முதல் முறை உஙகள் கவிதையில்
படித்து மெய்சிலிர்க்கிறேன். நன்றி.

மிக மிக நன்றிகள் சகோதரர் ஜெகதீசன். :)

ஆனால் வாழ்க்கை ஓர் திறந்த புத்தகமாகிவிட்டால் பலர் அதில் கைவைத்து அழுக்காக்கி விடுவார்களே :confused:?
திறந்த புத்தகமாக இருக்க வேண்டாம்.. ஆனால், உண்மையாய் இருக்கலாமே..! ஏன் போலியாய் நடிக்க வேண்டும் என்று தான் கேட்கிறேன்.

சிலர் புத்தகத்தையே திருடிவிடுவார்கள்.:confused:
அந்த சிலரிடம் நாம் பழகும் முறையில் தானே எல்லாமே இருக்கு. அப்படியே திருடுவோர் எனில், விலகி இருத்தல் தான் நலம் பயக்கும்.

ஓரளவு, உங்கள் கேள்விக்கு நான் விடையளித்திருப்பதாய் உணர்கிறேன்.

பின்னூட்டமிட்டு பாராட்டியமைக்கு நன்றிகள் சகோதரரே..! :)

நாகரா
02-02-2008, 10:43 AM
மெல்லிய புன்னகை
வாஞ்சை பேச்சு
வஞ்சனை உள்ளம்
வசிய மனிதர்..!

நிஜ முகம் களைந்து
பொய் முகங்களின்
பேரூர்வலம்
தெருவெங்கும்.....

நிஜ முகங்கள் தேடி
நிதம் வாடும்
என் மனம்....!!

முகத்தில் சிரிப்பு
மொத்தத்தில் வெறுப்பு
முகம் காட்டா
அகம் ஏராளம்.....!!

யாரிடமும்
மெய்முகம் காட்ட
மறுப்பதென்ன
மானிடா???

உண்மையாய்
உறைவது
உறுத்துதோ
உனக்கு....??????????

உள்மன
அழுக்கை அகற்றி
ஆழ்மன அழகில்
லயித்துப்பார்
கொஞ்சம்........

ஆன்மா பேசும்
அமைதி மொழி...!
அறிந்து கொள்
அது நல் வழி...!



மனித சாயலில்
மண்ணில் நடமாடும்
இரு கால் மிருகங்கள்
உண்மை மனிதராய்ப் பரிணமிக்க
வழி காட்டும்
அருள் வாக்கு

செஞ்சுடர்ப் பூவாய்
பூமியில் பூத்திருக்கும்
பூமகளே!
எம்மைச்
சுட்டித் திருத்தவும்
சுட்டுத் திருத்தவும்
உம்மைப் போல்
செஞ்சுடர்ப் பூக்கள் பல
பூமியில் பூக்கட்டும்

தொடரட்டும் உம் அருள் வாக்கு
மலரட்டும் எம்மில் மனிதம்

சுட்டியதால் எம் மன அழுக்கைத் தெரிந்து
சுட்டதால் அதை அகற்றித் திருந்தி
ஆழ்மன அழகே
எம் முகமாக
உமக்கு எம் முகம் காட்டி
உம் அருங்கவிக்கு
நன்றி சொல்வோம்
பூமகளே!
அம்முகம் கண்டு
உம் மன வாட்டம் நீங்கிக்
களிப்பீர் நீர் நிச்சயமாய்ச்
சத்தியமாய்
உறுதி சொல்லி முடிக்கிறேன்
நான்

rocky
02-02-2008, 11:45 AM
அன்புள்ள மன்றத்தோழி பூமகளுக்கு,

கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது, இந்தக்கருவில் நானும் ஒரு கவிதை எழுதுவதாக இருந்தேன், தலைப்பு கூட தேர்வு செய்து விட்டேன், "முகம் தொலைத்த மனிதர்கள்". என்று ஆனால் இப்போது உங்களின் கவிதையை கண்டவுடன் நான் எழுதும் எண்னத்தை விட்டுவிட்டேன். "அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது நிச்சயம் ஒரு நாள் பொய்யாகிவிடும் என்றே தோன்றுகிறது. காரணம் உலகில் அனைவரும் ஏதொ ஒரு சமயத்திலாவது பொய் முகத்தை காட்டிவிடுகிறார்கள், உலகம் ஒரு நாடக மேடை என்று சேக்ஸ்பியர் சொன்னது நாம் எப்போதாவது பொய் சொல்லி நடிக்கும் போது உண்மையாகிவிடுகிறது. கவிதை மிகவும் அருமை தோழி. நன்றி.

பூமகள்
07-02-2008, 09:05 AM
மனித சாயலில்
மண்ணில் நடமாடும்
இரு கால் மிருகங்கள்
உண்மை மனிதராய்ப் பரிணமிக்க
வழி காட்டும்
அருள் வாக்கு

செஞ்சுடர்ப் பூவாய்
பூமியில் பூத்திருக்கும்
பூமகளே!
எம்மைச்
சுட்டித் திருத்தவும்
சுட்டுத் திருத்தவும்
உம்மைப் போல்
செஞ்சுடர்ப் பூக்கள் பல
பூமியில் பூக்கட்டும்
அப்பப்பா.. எப்போதோ நானெழுதிய கவிதைக்கு ஒரு பொன்னாடையாக மீண்டும் ஒரு பின்னூட்டம். மிக்க நன்றிகள் நாகரா அண்ணா.
உங்களைப் போல பலர் இருந்தால் நிச்சயம் மனிதம் மலர்வதை யாராலும் தடுக்க இயலாது. :)

பூமகள்
07-02-2008, 09:11 AM
கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது, உலகம் ஒரு நாடக மேடை என்று சேக்ஸ்பியர் சொன்னது நாம் எப்போதாவது பொய் சொல்லி நடிக்கும் போது உண்மையாகிவிடுகிறது. கவிதை மிகவும் அருமை தோழி. நன்றி.
ஏன் உங்கள் கவிதை எழுதவில்லை. ஒரே தலைப்பாயின் என்ன, நீங்களும் எழுதுங்கள். உங்களின் கருத்துகளையும் நாங்கள் அறிய ஆசைப்படுகிறோம்.
அழகான பின்னூட்ட ஊக்கம் தந்தமைக்கு நன்றிகள் ராக்கி.

யவனிகா
07-02-2008, 09:32 AM
மூகமூடிகளுக்காக
தேவைகள்
ஏராளம்....


இரண்டு இன்ச் அதிகம் சிரித்தால்
அடுத்தநாள் அவன் பார்வை
கண்ணைத் தாண்டி இன்னும் கீழிறங்கும்...
அதனால் தேவைபடுகிறது
உதடு பிரியா ஒட்டுச் சிரிப்பு முகமூடி....

கோபமே வரவில்லை
என் நிலை சாந்தம் தான்...
ஆனாலும் கூட
பொறுமையாய்ச் சொன்னால்
அதே தவறை மீண்டும் செய்வான்
கீழுள்ள ஊழியன்...
தேவைப் படுகிறது கோப முகமூடி...

தோழியின் தொண்ணூறு வயது
பாட்டி, மரித்தவிடம்...கல்யாணச் சாவு...
மனதில் துளிகூடத் வருத்தமில்லை...
ஆனாலும் சாவெடுக்கும் இடம்
தேவை வருத்த முகமூடி...

மனது முழுதும் பாரம்...
நேற்றைய பிரச்சனையின் தாக்கம்....
எப்போது மீள்வேன் என்றே சிந்தனை...
எதிர்பாராதா விருந்தாளியின் வருகை
தேவை மலர்ச்சி உபசரிப்பு முகமூடி...

இவ்விடம் அழுகையே தேவையில்லை...
ரௌத்திரம் தான் தேவை...
அழுதால் தான் அடங்கும்
எதிர்க்கண்ணின் கோபக் கனல்
கோபத்தால் காரியம் கை மிஞ்சக்கூடும்
தேவை அழுகை முகமூடி....

முகமூடிகள் கழட்டி வைக்க
தேவையில்லை...
நம் முகங்களை உள்ளே
நினைவு வைத்திருந்தால்
மட்டும் போதும்.

பாராட்டுகள் தங்கையே....

மதி
07-02-2008, 09:46 AM
அட...
இன்று தான் படித்தேன்... பாராட்டுக்கள்..
கவிதையை படிக்கையில் என்னென்ன தோன்றியதோ... அதை அக்காவின் கவிதையாய் கண்டேன். ஆச்சர்யம்..
முகமூடிகள் உண்மையாய் தேவைப்படுகிறது..இவ்வுலகில்.
ஏற்கனவே யோசித்திருந்த விஷயம் தான்..
எல்லோரும் உண்மையாய்..வெளிப்படையாய் இருக்க முயற்சிப்பின் மனிதமே இந்நேரம் அழிந்திருக்கும்.

நானும் அணிகிறேன்.. முகமூடி..
வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு உருவங்களில்..
தப்பாய்த் தோன்றவில்லை எனக்கு..
பிறரை அது பாதிக்காத வரை..
பாதிப்பதாய் தெரிந்தால்
அணிகிறேன் வேறொரு முகமூடி
உண்மையான நான் யார்...?
இன்னும் தெரியவில்லை...

இப்போதெல்லாம் தனித்திருக்கையில்
கண்ணாடி பார்க்கிறேன்...
முகமூடிகளின் சூட்டில்
வெந்து கரியதாய் தெரிந்தது
எப்போதோ சின்ன வயதிலேயே
தொலைத்த நிஜமான
என் முகம்..

சுகந்தப்ரீதன்
07-02-2008, 12:01 PM
உலகம் ஒரு நாடக மேடை...!
நாமெல்லாம் அதில் நடிகர்கள் என்றான் ஒரு கவிஞன்...!
அது முழுக்க முழுக்க உண்மை என்பதை..இங்கே நாம் அனைவரும் உணர்ந்த ஒன்றுதான்....!
மற்றவரை பாதிக்காமல் அதே சமயம் நன்மையும் பயக்குமெனில் அரிதாரம் பூசுவதில் தவறொன்றுமில்லை..!!
நானும் போட்டிருக்கிறேன்.. அவ்வப்போது சில வேடங்கள்..! அதில் மகிழ்ந்தவர் எத்தனை பேர்.. மனம் நொந்தவர் எத்தனை பேர் நானறியேன்...?! சூழ்நிலை குயவனின் கையில் தினம் தினம் விதவிதமாக வடிக்கப்படுகிறது என் முகமூடி.. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் என் முகத்தில் அணிவிக்கப்படுகிறது... என் அனுமதியின்றி அவ்வப்போது...?! முகமூடி அணிந்து வெளியில் சிரித்து உள்ளுக்குள் அழும் உள்ளங்களும் உலகத்தில் இல்லாமல் இல்லை..! அணியும் இடம் பொறுத்துதான் இருக்கிறது முகமூடியின் அவசியமும் அனாவசியமும்..!!

வாழ்த்துக்கள்...பூ...!! எல்லாருடைய ஏக்கத்தையும் கவிதை வடிவில் கொண்டுவந்து கொட்டிய உன் திறமைக்கு...!!

பூமகள்
09-02-2008, 09:29 AM
மூகமூடிகளுக்காக
தேவைகள்
ஏராளம்....
பாராட்டுகள் தங்கையே....
மிக்க நன்றிகள் அக்கா..! :)

இரண்டு இன்ச் அதிகம் சிரித்தால்
அடுத்தநாள் அவன் பார்வை
கண்ணைத் தாண்டி இன்னும் கீழிறங்கும்...
அதனால் தேவைபடுகிறது
உதடு பிரியா ஒட்டுச் சிரிப்பு முகமூடி....
சூப்பர்.. நச்..!! :icon_b:
பல முறை கண்ட நிதர்சனம்..!

என் கவிதைக்கு எதிர்மறையாக கருத்து வந்தாலும், பல முறை இவ்வகை முகமூடிகள் நமக்கு தேவைப்படுவதை உங்கள் மூலம் அறியப் பெற்றேன்.

அழகிய ஆழமான பின்னூட்ட கவிதைக்கு..
நன்றிகள் கோடி அக்கா..!! :)

அமரன்
09-02-2008, 09:47 AM
மூகமூடிகளுக்காக
தேவைகள்
ஏராளம்....


இரண்டு இன்ச் அதிகம் சிரித்தால்
அடுத்தநாள் அவன் பார்வை
கண்ணைத் தாண்டி இன்னும் கீழிறங்கும்...
அதனால் தேவைபடுகிறது
உதடு பிரியா ஒட்டுச் சிரிப்பு முகமூடி....

கோபமே வரவில்லை
என் நிலை சாந்தம் தான்...
ஆனாலும் கூட
பொறுமையாய்ச் சொன்னால்
அதே தவறை மீண்டும் செய்வான்
கீழுள்ள ஊழியன்...
தேவைப் படுகிறது கோப முகமூடி...

தோழியின் தொண்ணூறு வயது
பாட்டி, மரித்தவிடம்...கல்யாணச் சாவு...
மனதில் துளிகூடத் வருத்தமில்லை...
ஆனாலும் சாவெடுக்கும் இடம்
தேவை வருத்த முகமூடி...

மனது முழுதும் பாரம்...
நேற்றைய பிரச்சனையின் தாக்கம்....
எப்போது மீள்வேன் என்றே சிந்தனை...
எதிர்பாராதா விருந்தாளியின் வருகை
தேவை மலர்ச்சி உபசரிப்பு முகமூடி...

இவ்விடம் அழுகையே தேவையில்லை...
ரௌத்திரம் தான் தேவை...
அழுதால் தான் அடங்கும்
எதிர்க்கண்ணின் கோபக் கனல்
கோபத்தால் காரியம் கை மிஞ்சக்கூடும்
தேவை அழுகை முகமூடி....

முகமூடிகள் கழட்டி வைக்க
தேவையில்லை...
நம் முகங்களை உள்ளே
நினைவு வைத்திருந்தால்
மட்டும் போதும்.

பாராட்டுகள் தங்கையே....

பாராட்டுகள் யவனிகா...
மன்றம் வந்த புதிதில் பூமகள் எழுதிய கவிதை. உங்கள் எண்ண ஓட்டம் அப்போது என்னுள். புதியவர்கள் எதிர்மறைக் கருத்துகளை எப்படி எடுத்துக்கொள்வார்களோ என ஒரு சஞ்சலம். முகம்காணா அவர்கள் எழுத்துகளில் அழுத்தி விட்டுச்செல்லும் அவர்களை கண்டறித்து பதிலிடலாம் என்ற எண்ணம் இன்னபிற காரணங்கள் தள்ளிபோடும் பதிலிடல்களை.. அப்படியான ஒரு கவிதை இது.. இப்போ எனது பதில் தேவை இல்லை என்னும் அளவுக்கு உங்கள் கருத்துக் கவிதை..நன்றி என் மழுங்கிய மூளைக்கும் வேலை வைக்காததற்கு..

பூமகள்
09-02-2008, 10:20 AM
அட...
இன்று தான் படித்தேன்... பாராட்டுக்கள்..
நானும் அணிகிறேன்.. முகமூடி..
வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு உருவங்களில்..
தப்பாய்த் தோன்றவில்லை எனக்கு..
பிறரை அது பாதிக்காத வரை..
பாதிப்பதாய் தெரிந்தால்
அணிகிறேன் வேறொரு முகமூடி
சூப்பர்..:icon_b: அக்காவும் தம்பியும் போட்டு போட்டுட்டு எழுதுறீங்க..!!:cool:
ரொம்ப அழகான கருத்துகள்..!:icon_rollout:
மறுக்க இயலுமா என்ன??:rolleyes:

மிக்க நன்றிகள் மதி..! :)

பூமகள்
09-02-2008, 10:23 AM
அணியும் இடம் பொறுத்துதான் இருக்கிறது முகமூடியின் அவசியமும் அனாவசியமும்..!!
வாழ்த்துக்கள்...பூ...!! எல்லாருடைய ஏக்கத்தையும் கவிதை வடிவில் கொண்டுவந்து கொட்டிய உன் திறமைக்கு...!!
அருமை ப்ரீதன்..! :icon_b:
எல்லாருடைய வண்ண வண்ண கருத்துகளால் எனது கவிதைக்கு அழகுக்கு அழகு சேர்ந்துவிட்டது. :)