PDA

View Full Version : பறக்கும் கார்



தங்கவேல்
31-08-2007, 04:09 AM
டாக்டர் முல்லர் மீடியாவிடம் பேசும்போது நம்மிடம் மிகவும் அருமையான இயற்கை வழங்கி இருக்கும் பாதை தலைக்கு மேலே இருக்கின்றது. யாரும் அதிகம் பயன்படுத்தாத பகுதி அது என்று வான வெளியை பார்த்து சொன்னார்.

அவரின் மூளையில் உதித்த குழந்தை தான் பறக்கும் கார் அல்லது பறக்கும் சாஸர் அல்லது எம் 200 என்ற வான ஊர்தி. சாத்தியப்படுத்தி விட்டார்கள் இன்று உண்மையிலே. அமெரிக்க அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் சொன்னார்.

கிட்டதட்ட முப்பத்தாறு லட்ச ரூபாய்க்கு பறக்கும் கார் விற்பனைக்கு விரைவில் வந்து விடும்.. எட்டு எஞ்ஜின்களுடன் பெட்ரோல், டீசல் மற்றும் எத்தனாலில் இயங்குமாறு வடிவமைக்கப் பட்டுள்ளதாகவும் பிபிசியிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் டாக்டர் முல்லர்.
புராணங்களில் சொல்லப்பட்டு இருக்கும் பறக்கும் தேர்கள் சாத்தியமாகி வருகின்றன...

மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குங்கள் www.moller.com

praveen
31-08-2007, 04:47 AM
புதிய தகவல் நண்பரே, அப்படியே படம் இருந்து போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

ஏன் ஏற்கன்னவே உள்ள, கெலிகாப்டர்களுக்கு. கிளைடர்களுக்கு என்ன பெயர்.

தங்கவேல்
31-08-2007, 04:55 AM
படம் இருக்கு எப்படி பதிவேற்றுவது என்று தெரியவில்லை.

praveen
31-08-2007, 05:06 AM
போட்டோ பக்கட் சென்று ஒரு கணக்கு துவங்கி படத்தை அங்கு ஏற்றி அதன் IMG என்று ஆரம்பிக்கும் சுட்டியை இங்கே பதிந்தால், உங்கள் திரி இன்னும் மற்றவர் கண்ணைக்கவரும்.

Narathar
31-08-2007, 05:50 AM
http://www.moller.com/files/m400-flag.jpg


இதோ ஒரு சின்ன படம்

Narathar
31-08-2007, 05:57 AM
படம் இருக்கு எப்படி பதிவேற்றுவது என்று தெரியவில்லை.



அன்பரே உங்களுக்கு விருப்பமான படத்தை Photobucket பக்கத்தில் பதிந்து அதன் லிங்கை இங்கு கொடுக்கலாம்.....

இப்போது Photobuckt இல் படத்தை ஏற்றிவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம்..... அப்படத்தின் மீது ரைட் கிளிக் செய்து ப்ரொபெர்டீஸுக்கு சென்று அப்படத்தின் லிங்கை பெறுங்கள்

அதை Copy செய்து கொள்ளுங்கள்

அந்த லிங்குக்கு முன்னால் என்றும்

பின்னால் என்றும் டைப் செய்யுங்கள்

இப்போது படம் மன்றத்தில் தெரியும்


EX:

----http://www.moller.com/files/m400-flag.jpg---


சிவப்பு இடைவெளியை விடாதீர்கள்


சொல்லிக்கொடுத்ததற்கு இ−பணம் ஒன்றும் கேட்கமாட்டேன்
நீங்கள் தந்தால் வாங்காமலும் விடமாட்டேன் ஹீ ஹீ

தங்கவேல்
31-08-2007, 06:02 AM
நாரதரே... இபணம் தானே கொடுத்துட்டாப்போச்சு. வாங்கிக்கங்க 10 இபணம்...

Narathar
31-08-2007, 06:09 AM
நாரதரே... இபணம் தானே கொடுத்துட்டாப்போச்சு. வாங்கிக்கங்க 10 இபணம்...



ந*ன்றி ந*ன்றி ந*ன்றி ந*ன்றி ந*ன்றி ந*ன்றி ந*ன்றி ந*ன்றி ந*ன்றி ந*ன்றி

praveen
31-08-2007, 06:29 AM
நாரதரே, பலே ஆள் தான் நீங்கள் :0), நான் 4வது போஸ்டில் சொன்னதை மெருகேற்றி இபணம் பெற்று விட்டீர்கள், நான் இபணம் கேட்காததால் நண்பர் தங்கவேல் அதை சதாரணமாக நினைத்து விட்டார். ஆனால் நான் சொன்ன முறை படி பதிவேற்றினால் அந்த படத்திற்கு கீழே உள்ள இமேஜ் சுட்டியை காப்பி செய்து இங்கு பதித்தாலே போதும்.

நாம் பதிவேற்றாத வேறு தள சுட்டியை பதிப்பதற்கு தான் உங்கள் முறை பொருந்தும், அதையும் மிக எளிதாக மேலே உள்ள டூல்பாரில் உள்ள http://www.tamilmantram.com/vb/images_pb/editor/insertimage.gif என்ற சிம்பலை அழுத்தி வரும் ரெகொஸ்ட் பாக்ஸில் வேறு தளத்தில் எந்த படத்தை இங்கு பதிக்க வேண்டுமோ அதன் (அந்த படத்தை ரைட் கிளிக் செய்து வரும் ப்ராபெர்டிஸ்) அட்ரசை அதில் இட்டாலே போதும்.

நாரதரே இப்போது நீங்களும் தங்கவேலும் தான் எனக்கு இபணம் தரவேண்டும்.

Narathar
31-08-2007, 06:37 AM
நாரதரே இப்போது நீங்களும் தங்கவேலும் தான் எனக்கு இபணம் தரவேண்டும்.


சரி அவர் தந்ததை நான் திருப்பித்தருகின்றேன்