PDA

View Full Version : என்றும் உனக்காக இவன் !!



farhan mohamed
30-08-2007, 09:01 PM
காதல் என்ற
காவியக் கொடி
என்னை
பற்றுமுன்
நான் நினைக்கவில்லை
காதல் ஒரு
சுகமான
துன்பம் என்று!!

துன்பம் என்று
தெரிந்தும்
என்னால் அந்த
சுகமான
துன்பத்தை
இழக்க விரும்பவில்லை!!

காதல் அதன்
அர்த்தங்கள்
எத்தனை
எது அதன்
உண்மை
அர்த்தம் என்னால்
புரிய முடியவில்லை!!


துன்பம் பல
கண்டேன் - என்
காதலில்
இருந்தும்
என்னால்
காதலை
வெறுக்க முடியவில்லை
மாயம் தான்
புரியவில்லை.
ஆனால் என்றும் உனக்காக இவன்!!!

வசீகரன்
31-08-2007, 05:17 AM
ஆம் நன்பரே காதல்..... ஒரு அருமையான உனர்வு
உன*ர்ன்து பார்த்த*வ*ர்க*லுக்கு அது புரியும்,,,
உங*ல் க*விதை ந*ய*ம்ப*ட* உன*ர்த்திய*து....!

பாராட்டுக்க*ல் ந*ன்ப*ரே....!

Narathar
31-08-2007, 05:46 AM
உங்களுக்கு மட்டுமல்ல முழு உலகத்துக்குமே அது மாயம் தான்

மாயா மாயா.................... மாயா எல்லாம் மாயா
சாயா சாயா...................... சாயா எல்லாம் சாயா

அரசன்
31-08-2007, 06:43 AM
காதல்! − ஆம் அது ஒரு இனிமையான* ஃபீலிங்க்ஸ். காதலிக்காதவன் அந்த ஃபீலிங்க்ஸ்க்காக தவிக்கிறான். இருப்பவன் மீள முடியாமல் துடிக்கிறான். எது எப்படியோ காதல் ஒரு துன்பமான இன்பம் தான்!

வைர வரிகள் வாழ்த்துக்கள்.

ஓவியா
01-09-2007, 12:44 AM
அன்பின் பிரதிபலிப்புதான் காதல், அன்பை எப்படி வெறுக்க முடியாதோ அது போல் காதலையும் ஒதுக்க முடியாது, அது ஒரு முறையாவது வந்து போகும். சிலரிடம் நிரந்தரமாக தங்கிவிடும், சிலருக்கு பை பைதான்.

ஆனாலும் காதல் இல்லாமல் வாழ்வதும் ஒரு பாவம்தான்.

சுவையான* உண*ர்வினை வ*ரிக*ளில் வ*டித்து வைத்துள்ளீர்க*ள். பாராட்டுக்க*ள்.

farhan mohamed
01-09-2007, 07:02 PM
காதல் என்பது யாரோ சொன்னதுபோல உச்சரிக்கப்படாத வார்த்தைக்குள் ஒழிந்திருகிறது.யாருக்கத்தான் வெறுப்புவரும் அப்படியானாலும் வெறுப்போர் யார்.அர்த்தம் தான் புரியவில்லை நாரதர்,வசீகரன்,அரசன்,ஓவியா அனைவருக்கும் நன்றிகள்.

இணைய நண்பன்
01-09-2007, 08:09 PM
காதலின் வேதனை பற்றி நெஞ்சிலே பட அழகிய கவிவரியில் கொட்டி விட்டீர்கள்.நன்றாக இருக்கிறது.உங்கள் இலக்கியப்பணி தொடர வாழ்த்துக்கள்.(சந்தோசமாக 100 ஐகாசு தருகிறேன்)