PDA

View Full Version : இந்த நாள் எப்போது



இலக்கியன்
30-08-2007, 03:17 PM
http://img210.imageshack.us/img210/6564/beijingsummerpalacebzy2.jpg (http://imageshack.us)

யுத்த மேகங்கள்
கலைந்து-வானில்

குண்டு மழைகள்
ஓய்ந்து-அடங்கி

மரணத்தின் ஓலங்கள்
மறைந்து-ஓடி

இரத்ததின் ஆறுகள்
இமைகள்- மூடி

நரபலி மனிதனின்
பற்கள்-விழுந்து

புரையோடிய மக்கள்
கொள்கைகள்-மாறி

இன்றுதான் பிறந்தோம்
என்று-கூறி

பறவைகள் வானில்
இனியகானம்-பாடி

பொன்மணி நெற்கள்
கொழித்து-விளைந்து

பிறந்த பூமியில்
உறவுகள்-கூடி

இனிமையாகும்
அந்நாள்-எந்நாள்

ஓவியன்
30-08-2007, 03:26 PM
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் நின்று போகவென ஒரு யுத்தம் செய்வோம்.......

கவிதை அழகு+அருமை இலக்கியா........

நானும் உங்களுடன் சேர்ந்து பிரார்த்திக்கின்றேன் அப்படி ஒரு உலகம் மலரட்டுமென்று........!

இலக்கியன்
30-08-2007, 03:30 PM
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் நின்று போகவென ஒரு யுத்தம் செய்வோம்.......

கவிதை அழகு+அருமை இலக்கியா........

நானும் உங்களுடன் சேர்ந்து பிரார்த்திக்கின்றேன் அப்படி ஒரு உலகம் மலரட்டுமென்று........!

ஆம் ஓவியன் எல்லோருடை விருப்பமும் அதுதான் பின்னேட்டத்துக்கு நன்றி

அக்னி
06-09-2007, 10:16 AM
உலகமே, சுடுகாடாக...
சுடர்கின்றது...
இது பிரகாசமல்ல...
கருக்கும் கொடுந்தீ...
மனிதர்கள் நாம் மூட்டிய
நெருப்பில்,
நாமே வேகின்றோம்...
மாற்றம் வேண்டி தகிக்கின்றோம்...
மாறுமா..?

பாராட்டுக்கள் இலக்கியன்...

இலக்கியன்
06-09-2007, 02:11 PM
அக்னியின் பின்னூட்டம் சிறப்பு நன்றி