PDA

View Full Version : மாறும்............காதல்

மனோஜ்
30-08-2007, 02:28 PM
மாறும்........காதல்

மனங்கள் ஒன்றாய், நன்றாய்
மலர்ந்து விரிந்து மகிழ்ச்சியில்
துள்ளித்திரிந்து இன்பத்தில் உழன்று
உறவினில் கலந்து
உச்சத்தைஅடைந்து

உரசல்கள் இன்றியும்
பிரிவினில் அடையவே
மலருக்கு வந்தது மோகம் மாறியது தேன்
அடுத்துவந்த அழகியவண்டு
அடித்துசென்று மகிழ்ந்தது
முதல்வண்டுக்கு மனம் உண்டு மார்க்கமில்லை

உண்மையை உணர்ந்தது
அன்பு பெற்றோரில் கலந்தது
ஒரு கணம் மீறினும் உலகில் நீ இல்லையே
மனதினில் கொண்ட உறுதியே
நின்று நிலைத்து வாழவே
இறைவா கொடுத்த உறுதியில்
நிலைக்க செய் என்றுமே

ஓவியன்
30-08-2007, 03:23 PM
மனம் உண்டானால் மார்க்கம் உண்டென்பது பழ மொழி.....
இங்கே மனோஜ் படைத்தது மனமிருந்தும் மார்க்கமின்றிப் போன காதல் புது மொழி...............

பாராட்டுக்கள் மனோஜ்!

இன்னும் இன்னும் படையுங்க.........! :nature-smiley-008:

இலக்கியன்
30-08-2007, 03:37 PM
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் கவிதைகள்

மனோஜ்
31-08-2007, 06:12 PM
மனம் உண்டானால் மார்க்கம் உண்டென்பது பழ மொழி.....
இங்கே மனோஜ் படைத்தது மனமிருந்தும் மார்க்கமின்றிப் போன காதல் புது மொழி...............

பாராட்டுக்கள் மனோஜ்!

இன்னும் இன்னும் படையுங்க.........! :nature-smiley-008:

மிக்க நன்றி தங்களின் சேவை எனக்கு தோவை
இன்னும் இன்னும் படைக்க நன்றி ஓவியரே

மிக்க நன்றி இலக்கியன்

இளசு
31-08-2007, 07:36 PM
உயிர் தரும் பயன்களில்
ஒரு பாகமே காதல்..
இனிப்பான பாகந்தான்..
இதுவே முழுதுமன்று..

ஒரு இழப்பை ஈடுகட்ட
அதுபோல் இன்னொன்று..
அதைவிட மற்றவையென்று
எத்தனை உலகில்!

இன்னொரு துணை..
இனிய பெற்றோர், நண்பர்
நல்ல பணி, இசை, வாசிப்பு
நல்லது செய்ய வாய்ப்பு, வசதி..

இழந்ததை எண்ணி வருந்தாதே
இருப்பதை வளர்க்கத் தயங்காதே!

நல்ல கவிதை மனோஜ்..
பாராட்டுகள்!

ஓவியன்
31-08-2007, 09:40 PM
இழந்ததை எண்ணி வருந்தாதே
இருப்பதை வளர்க்கத் தயங்காதே!

அழகான பின்னூட்டமும் அருமையான கருத்துக்களும் அண்ணா!.

அக்னி
31-08-2007, 10:28 PM
மனிதனின் கடிவாளம்,
மனதிடம்...
மனமோ முழுதுமாக,
காதல்வசம்...
காதல் இருந்தால், கடிவாளம் தட்டிக் கொடுக்கும்...
காதல் இழந்தால், கடிவாளம் கழுத்தை நெரிக்கும்...

வாழ்க்கைப் புத்தகத்தின் சகல பக்கங்களும்,
காதல் என்ற ஒரு பக்கத்தில் கட்டப்படுதல்,
தவிர்க்கப்படவேண்டும் என்றாலும், பொதுவாக தவிர்க்க முடியாததாகவே,
மனிதனைக் கட்டிப்போடுகின்றது...

பாராட்டுக்கள் மனோஜ்...

ஓவியா
01-09-2007, 12:21 AM
மிகவும் அழகான கவிதை, இந்த வரிகள் என்னை கவர்ந்தன.

மலருக்கு வந்தது மோகம் மாறியது தேன்
அடுத்துவந்த அழகியவண்டு
அடித்துசென்று மகிழ்ந்தது
முதல்வண்டுக்கு மனம் உண்டு மார்க்கமில்லை

உங்க*ள் த*மிழ் வ*ள*ம் மிக*வும் பெருகியுள்ள*து.

அக்னியின் காத*ல் ஒரு த*விர்க முடியாத* நோய் என்ப*து மிக*வும் அப்ப*ட்ட*மான* உண்மை.

ந*ன்றி ம*க்க*ளே

தங்கவேல்
01-09-2007, 12:46 AM
ஒன்னும் புரியவில்லை. கருத்து என்னவென்று சொல்லுங்கள்...

மனோஜ்
01-09-2007, 07:39 AM
ஒன்னும் புரியவில்லை. கருத்து என்னவென்று சொல்லுங்கள்...

ஒரு பெண்ணை ஒரு வன் காதலிக்கிறான் அவளும் காதலிக்கிறாள் ஆனால் வீட்டில் எதிர்ப்பு மேலும் பிரிவு இதனால் அந்த பெண் மற்ற ஒரு வனை காதலிக்கிறாள் இவனும் மாறி பெற்றோர் முடிவுக்கு விட்டுவிடுகிறான் இது தான் கரு

சிவா.ஜி
01-09-2007, 08:22 AM
கிட்டாதெனில்..வெட்டென மற...சொல்வது சுலபம்..செயலாக்குவதில் அல்லவா இருக்கிறது ஆயிரம் வேதனை. ஆனால் இந்த கவிதையின் நாயகன்..அதையெல்லாம் தாங்கி..அடுத்த கட்டத்தை எதிர்நோக்கியிருப்பது பாராட்டப் படவேண்டியது. அக்னி சொன்னதைப்போல தவிக்கமுடியாத இந்த காதல் நோயை,கட்டுப்பாட்டுடன் இருந்து அந்த நோயால் பாதிக்கப்படாமல் வாழ்க்கையை வாழத்தொடங்கியவன் வாழ்க.வாழ்த்துக்கள் மனோஜ்.

மனோஜ்
01-09-2007, 04:52 PM
உயிர் தரும் பயன்களில்
ஒரு பாகமே காதல்..
இனிப்பான பாகந்தான்..
இதுவே முழுதுமன்று..

ஒரு இழப்பை ஈடுகட்ட
அதுபோல் இன்னொன்று..
அதைவிட மற்றவையென்று
எத்தனை உலகில்!

இன்னொரு துணை..
இனிய பெற்றோர், நண்பர்
நல்ல பணி, இசை, வாசிப்பு
நல்லது செய்ய வாய்ப்பு, வசதி..

இழந்ததை எண்ணி வருந்தாதே
இருப்பதை வளர்க்கத் தயங்காதே!

நல்ல கவிதை மனோஜ்..
பாராட்டுகள்!
அண்ணாவின் அறிவுரை கவிதை அருமை மிக்க நன்றி

மனோஜ்
01-09-2007, 04:53 PM
மனிதனின் கடிவாளம்,
மனதிடம்...
மனமோ முழுதுமாக,
காதல்வசம்...
காதல் இருந்தால், கடிவாளம் தட்டிக் கொடுக்கும்...
காதல் இழந்தால், கடிவாளம் கழுத்தை நெரிக்கும்...

வாழ்க்கைப் புத்தகத்தின் சகல பக்கங்களும்,
காதல் என்ற ஒரு பக்கத்தில் கட்டப்படுதல்,
தவிர்க்கப்படவேண்டும் என்றாலும், பொதுவாக தவிர்க்க முடியாததாகவே,
மனிதனைக் கட்டிப்போடுகின்றது...

பாராட்டுக்கள் மனோஜ்...

நன்றி அக்னி கவிதைவரிகள் உண்மையை உணர்த்துகிறது

மனோஜ்
01-09-2007, 04:55 PM
மிகவும் அழகான கவிதை, இந்த வரிகள் என்னை கவர்ந்தன.
உங்க*ள் த*மிழ் வ*ள*ம் மிக*வும் பெருகியுள்ள*து.

அக்னியின் காத*ல் ஒரு த*விர்க முடியாத* நோய் என்ப*து மிக*வும் அப்ப*ட்ட*மான* உண்மை.

ந*ன்றி ம*க்க*ளே

அழகான விமர்சனம் தந்த ஒவியக்காவுக்கு நன்றி

ஷீ-நிசி
02-09-2007, 12:06 PM
கவிதையில் நல்ல முன்னேற்றம் மனோஜ்... நல்ல கருவும் கூட. தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்!

சுகந்தப்ரீதன்
03-09-2007, 04:31 AM
யாதர்த்தம் சில நேரம் இடரத்தான் செய்கிறது.....மனமொத்த மனமிரண்டை.... இருந்தும் எழுந்து செல்ல வேண்டிதான் இருக்கிறது... இவரின் கவிபோல..... இருப்பதை எண்ணி மகிழ்வதே மகிவான வாழ்வு....

வாழ்த்துக்கள் நண்பரே....!

மனோஜ்
04-09-2007, 08:00 AM
கிட்டாதெனில்..வெட்டென மற...சொல்வது சுலபம்..செயலாக்குவதில் அல்லவா இருக்கிறது ஆயிரம் வேதனை. ஆனால் இந்த கவிதையின் நாயகன்..அதையெல்லாம் தாங்கி..அடுத்த கட்டத்தை எதிர்நோக்கியிருப்பது பாராட்டப் படவேண்டியது. அக்னி சொன்னதைப்போல தவிக்கமுடியாத இந்த காதல் நோயை,கட்டுப்பாட்டுடன் இருந்து அந்த நோயால் பாதிக்கப்படாமல் வாழ்க்கையை வாழத்தொடங்கியவன் வாழ்க.வாழ்த்துக்கள் மனோஜ்.

சிறப்பான அறிவுரை நன்றி சிவா

பென்ஸ்
04-09-2007, 10:11 AM
மனோஜ்...

கதை சொல்லுவது போல ஒரு கவிதை சொல்லி, அழகாக அருமையாக...
ஆனால் பூக்களை விட காதலே மேலாய் மனிதனில்...
பூவும் காய்வது காய் ஆகவே...
காயும் கனியும்....

இளசு ... மீண்டும் ஒரு முத்திரை பின்னுட்டம்...

lolluvathiyar
09-09-2007, 12:27 PM
கருத்துகள் நன்றாக இருகிறது மனோஜ் ஆனால் கவிதை நடையில் வரவில்லையே.
கடவுள்− பெற்றோர் − காதல் இவற்றிலிருந்து மாறி
காதல்− பெற்றோர் −கடவுள் இப்படி கவிதை சென்று இருகிறது

சாராகுமார்
10-09-2007, 04:55 PM
மாறும்...காதல்..
மருகும் காதலாகி.

மனோஜ் உங்கள் கவிதை அருமை.

அமரன்
13-09-2007, 01:22 PM
கவிதையும் தொடர்ந்த பதிவுகளும்
கவர்ச்சியும் கருத்தும் நிறைந்து..
கரும்புச்சாறு போல் இனிக்கிறது
பாராட்டுக்கள் அனைவருக்கும்.

மனோஜ்
13-09-2007, 01:43 PM
கவிதையில் நல்ல முன்னேற்றம் மனோஜ்... நல்ல கருவும் கூட. தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்!

நன்றி ஷீ :)

மனோஜ்
13-09-2007, 01:44 PM
யாதர்த்தம் சில நேரம் இடரத்தான் செய்கிறது.....மனமொத்த மனமிரண்டை.... இருந்தும் எழுந்து செல்ல வேண்டிதான் இருக்கிறது... இவரின் கவிபோல..... இருப்பதை எண்ணி மகிழ்வதே மகிவான வாழ்வு....

வாழ்த்துக்கள் நண்பரே....!

சரியாக சொன்னீர்கள் நண்பா இதைதான் கருவாக்கினேன்
நன்றி

மனோஜ்
13-09-2007, 01:46 PM
மனோஜ்...

கதை சொல்லுவது போல ஒரு கவிதை சொல்லி, அழகாக அருமையாக...
ஆனால் பூக்களை விட காதலே மேலாய் மனிதனில்...
பூவும் காய்வது காய் ஆகவே...
காயும் கனியும்....

இளசு ... மீண்டும் ஒரு முத்திரை பின்னுட்டம்...

நன்றி அண்ணா இன்றைய உண்மைநிலை இது
பலர் குடும்பத்திற்காக விட்டு கொடுக்கதான் செய்கிறார்கள்

மனோஜ்
13-09-2007, 01:49 PM
கருத்துகள் நன்றாக இருகிறது மனோஜ் ஆனால் கவிதை நடையில் வரவில்லையே.
கடவுள்− பெற்றோர் − காதல் இவற்றிலிருந்து மாறி
காதல்− பெற்றோர் −கடவுள் இப்படி கவிதை சென்று இருகிறது

கடவுள் பெற்றோர் காதல் இது அனைத்து கவிதையிலும் வரும்
அனால் இது காதலித்த ஒரு வன் தன் பெற்றோருக்கா விட்டு கொடுக்கிறான் அதன் கவிதை மாறி வருகிறது

மனோஜ்
13-09-2007, 01:50 PM
மாறும்...காதல்..
மருகும் காதலாகி.

மனோஜ் உங்கள் கவிதை அருமை.

நன்றி சாராகுமார் மருகுவதும் மெருகேரத்தான்

இலக்கியன்
13-09-2007, 02:32 PM
இளசு அக்னி இருவரின் பின்னூட்டக்கவிதைகளும் நன்றாக உள்ளது பாராட்டுக்கள்