PDA

View Full Version : அரசாங்க அலுவலக பிரச்சனைகளை பதிக்க வெப்சை



தளபதி
30-08-2007, 08:41 AM
நமக்கு அரசாங்க அலுவலகங்களில் ஏற்படும் வருத்தங்கள், பிரச்சனைகள், கவனிப்பு இன்மைகளைப் பதிக்க நமது அரசாங்கம் ஒரு வெப்சைட்டை ஏற்படுத்தியுள்ளது.

http://darpg-grievance.nic.in/

பாஸ்போர்ட் அலுவலகம், மின்வாரியம், தொலைபேசி, ரயில் நிலையம் போன்ற அரசாங்க அலுவலகங்களில் மக்கள் அவர்களின் பிரச்சனைகளை சரிசெய்ய செல்லும்போது மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், லஞ்சம், கவனிப்பு இன்மைகளைப் பதிக்க இந்த வெப்சைட்டை பயன்படுத்த அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

அனைத்து அரசாங்க அலுவலகத்திலும் நாம் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய நாம் குரல் கொடுக்கமுடியாது. அது நமக்கும் நமது வேலைக்கும் பங்கமாக மாற வாய்ப்புள்ளது. எனவே, இந்த வெப்சைட் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுபோல் இருக்காதா?? என்று மக்கள் காத்திருந்தது வீணாகவில்லை. அரசாங்கம் இதையும் கவனித்துள்ளது.

எனவெ, நாமும் இதைப் பயன்படுத்துவோம், மேலும் இது அறியாத மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் பயன்படுத்த உதவுவோம். இது நமது பிரச்சனைகளைக் குறைப்பதுடன், பிரச்சனைகளை உருவாக்கும் கொடுக்கும் அரசாங்கத்துக்கு உண்மையில்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கும் உதவியாக இருப்போம்.

தங்கவேல்
30-08-2007, 01:25 PM
மிகவும் நல்ல தளம் இது. தகவலுக்கு நன்றி தளபதி...

சிவா.ஜி
30-08-2007, 01:28 PM
தளம் நல்லது...பயன் இல்லை தளபதி மற்றும் தங்கவேல் அவர்களே....இதில் கொடுக்கப்படும் புகார்களையும் செயல் படுத்தப்போவது அதே அரசாங்க அதிகாரிகள்தான்.இனம் இனத்தைக் காக்கும்.

தங்கவேல்
31-08-2007, 03:11 AM
கன்சுயூமர் சம்பந்தமான சில வழக்குகளுக்கு தளத்தை பயன்படுத்தலாம்.
குறைகளை தெரிவித்த பிறகு, அரசு அதிகாரிகள் பிரச்சனையை சரி செய்யவில்லை எனில் அதற்கான அத்தாட்சியாய் இந்த வசதியினை பயன்படுத்தலாம் அல்லவா ?

தளபதி
31-08-2007, 04:34 AM
தளம் நல்லது...பயன் இல்லை தளபதி மற்றும் தங்கவேல் அவர்களே....இதில் கொடுக்கப்படும் புகார்களையும் செயல் படுத்தப்போவது அதே அரசாங்க அதிகாரிகள்தான்.இனம் இனத்தைக் காக்கும்.

இந்த வெப்சைட்டை ஏற்படுத்திய உடன் இதை பற்றியும் அரசாங்கமும் யோசிக்கும், எனவே அதற்கு தகுந்தாற்போல் அமைப்பு ஏற்படுத்தலாம். நன்மை நடக்கும் என்று நம்புவோம், நடக்கும்.