PDA

View Full Version : என் பயணத்தில்....!



வசீகரன்
30-08-2007, 05:45 AM
தனியொரு சாலையில் தனியனாய்
நான் நடக்கையில்....

இடையினிலே வந்தாய்....
இணைந்திட்டே உடன் நடந்தாய்....

பாதை அது தூரம்.... தாங்காது
பாவை நிந்தன் பாரம் என்றேன்

கரம் பற்றி கொள்வேன்.....!
உன் வடம் பற்றி வருவேன்....

தூரம் என்பது பாதைக்குதான்
துணையாய் நீ இருக்க
தூவானம் அருகில்தான் என்றுரைத்தாள்....!

என் பாதையில் சாரல்களும் உண்டு.....
சரளைகளும் உண்டு...! சலங்கைகால்கள்
சந்திக்குமா...

முட்களும் உண்டு... பூக்களும் உண்டு...!
பூந்தளிர் மேனி புண்படுமா....
போய் விடுவாளோ என ஏக்கத்துடனே
வினவினேன்.....

கால்கள் களைத்தால் எனை அள்ளிக்கொள்ள
மாட்டாயா....
கண்கள் களைத்தால் உன்மடியில் துயில் உறங்க
கூற மாட்டாயா...!

நிறைந்த அவள்தம் காதல் முகம்
நிறைத்தன என் காதல் மனம்...!

இளசு
30-08-2007, 06:07 AM
காதலே ஒரு வசீகரம்..
வசீகரன் கவிதை வரிகளில் கூடுதலாய்!!!!

வாழ்த்துகள்!

ஓவியன்
30-08-2007, 06:14 AM
காதல் பயணத்தில் சரளைகளூடும் முற்களிடையும் பூக்களைத் தேடும் வசீகரனின் கவிதைகள் கதலைப் போலவே அழகு........!

இரசித்தேன்.........!
பாராட்டுக்கள் வசீ....! :nature-smiley-003:

சிவா.ஜி
30-08-2007, 06:44 AM
இணைந்து வரும் துணைக்கு இன்னல் வருமே என காதலனின் பரிதவிப்பும்,துன்பத்தில் தாங்க நீயிருக்கிறாயே என்ற காதலியின் நம்பிக்கையும்,இந்த காதலை வளப்படுத்துகிறது. வசீகரனின் வரிகள் ஆனந்தம்.வாழ்த்துக்கள்.

பூமகள்
30-08-2007, 07:12 AM
மனம் வருடும் காதல் கவி.

காதலின் பலமே இருவரின் அன்பு தான்.. வாழ்வின் எந்தத்தடை வந்தாலும் உயிரானவர் துணையிருந்தால் பாலையும் சோலையாகும்.
உண்மை தான்.. காதலில் மட்டுமே அது சாத்தியம்.

நன்றாக வடித்திருந்தீர் வசீ.
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்....!! :nature-smiley-003:

மாதவர்
30-08-2007, 07:28 AM
இணையை
துணையை
நினைத்தால் இன்பம் தான்

மனோஜ்
30-08-2007, 07:43 AM
காதல் மனதில் வந்தால் பயணம் இனிமைதான் அருமைகவிதை வசீகரரே

Narathar
30-08-2007, 08:04 AM
வசீகரிக்கிறது உங்கள் வார்த்தைகள்

இலக்கியன்
30-08-2007, 09:19 AM
ஓவியனுக்கு நன்றி நல்ல முயற்சி நன்றிகள் பல
வசீகரா உன் கவி நயம் வசீகரம் வாழ்த்துக்கள்

வசீகரன்
30-08-2007, 01:26 PM
காதலே ஒரு வசீகரம்..
வசீகரன் கவிதை வரிகளில் கூடுதலாய்!!!!

வாழ்த்துகள்....!

ந*ன்றி நன்ப*ரே...!

வசீகரன்
30-08-2007, 01:36 PM
காதலே ஒரு வசீகரம்..
வசீகரன் கவிதை வரிகளில் கூடுதலாய்!!!!

வாழ்த்துகள்!
எனை வாழ்த்திய கவிதை காதலர்கலே மனம் நெகிழ்ந்து நன்றி நவில்கின்ரேன்

வசீகரன்

வசீகரன்
30-08-2007, 01:44 PM
நெஞ்சார்ந்த நன்றிகளை சொல்கிரேன் அனைவர்க்கும்.....! நன்பர்கலே

வசீகரன்,

சுகந்தப்ரீதன்
03-09-2007, 10:03 AM
நிறைந்த அவள்தம் காதல் முகம்
நிறைத்தன என் காதல் மனம்...!

வசிகரா....வசிகரிக்கிறது உன் கவிதை வரிகளும்....அதில் வரும் காதல் மணமும்....மீண்டும் வேண்டும் இந்த மணம்.....கிடைக்குமா என் தோழனே?!