PDA

View Full Version : நம்பிக்கைaren
30-08-2007, 02:48 AM
ஒரு சிறுவன் கென்னி நகரத்திலிருந்து கிராமத்திற்கு குடிபெயர்ந்தான். வந்தவுடன் ஒரு விவசாயிடமிருந்து 100/- டாலர் கொடுத்து ஒரு கழுதையை விலைக்கு வாங்கினான். அந்த விவசாயி கழுதையை மறுநாள் வந்து கென்னியிடம் ஒப்படைப்பதாக வாக்குறிதி கொடுத்தான். கென்னியும் சரியென்றான்.

அடுத்த நாள் விவசாயி கென்னியிடம் வந்து, மகனே என்னை மன்னிக்கவேண்டும், ஒரு துக்கமான செய்து, நேற்று இரவு கழுதை இறந்துவிட்டது.

கென்னி உடனே, அப்படியானால் என்னுடைய பணத்தை எனக்கு திருப்பிக்கொடு என்றான்.

அதற்கு அந்த விவசாயி, என்னால் முடியாது, ஏனென்றால் நான் அந்தப் பணத்தை செலவுசெய்துவிட்டேன் என்றான்.

கென்னி உடனே, அப்படியானால் சரி, அந்த இறந்த கழுதையை இங்கே கொண்டுவந்து இறக்குங்கள் என்றான்.

விவசாயி உடனே, அந்த இறந்த கழுதையை வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியும் என்றான்.

நான் ஒரு குழுவைக்கூட்டி லாட்டரி போடப்போகிறேன் இந்த கழுதையை விற்பதற்கு என்றான் கென்னி. ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து டிக்கெட் வாங்கவேண்டும் என்றான்.

விவசாயி உடனே, எப்படி இந்த இறந்த கழுதையை லாட்டரி போட்டு விற்கமுடியும், உன்னால் முடியாது என்றான்.

கென்னியும் உடனே, நிச்சயம் என்னால் முடியும், நீங்கள் பாருங்கள்,
நான் யாரிடமும் இந்த கழுதை இறந்துவிட்டதாகச் சொல்லமாட்டேன் என்றான்.

ஒரு மாதம் கழித்து அந்த விவசாயி கென்னியை சந்தித்து என்ன ஆச்சி அந்த இறந்த கழுதை என்றான்.

கென்னி உடனே, நான் அதை லாட்டரியில் விற்றுவிட்டேன். 550 லாட்டரி டிக்கெட் போட்டு ஒவ்வொரு டிக்கெட்டம் இரண்டு டாலருக்கு விற்றேன், பிறகு மொத்த லாபமாக 998/- டாலர்கள் கிடைத்தது எனக்கு என்றான்.

யாரும் இதை வாங்க பிரச்சனை செய்யவில்லையா என்று வினவினான் விவசாயி.

வெற்றி பெற்றவன் மட்டும் கொஞ்சம் பிரச்சனை செய்தான், அவன் கொடுத்த இரண்டு டாலரை அவனுக்குத் திருப்பிக்கொடுத்துவிட்டேன் என்றான் கென்னி.

கென்னி வளர்ந்து பின்னாளில் ஒரு மிகப்பெரிய அமெரிக்க எரிபொருள் தயாரிக்கும் கம்பெனியின் நிரிவாகியானான்.

இதன்மூலம் என்ன தெரிகிறது என்றால்:

நம்பிக்கை என்பது நீங்கள் உங்களுக்குத் தெரியாத/புலப்படாத காரியத்தை செய்வது
வெற்றி என்பது நீங்கள் உங்களுக்குத் தெரியாத/புலப்படாத காரியத்தை நம்பி செய்தது


FAITH is To believe what you do not see ,

the reward of which is you see what you believed .

நன்றி வணக்கம்
ஆரென்

aren
30-08-2007, 02:49 AM
மேலே சொன்ன விஷயங்கள் பப்பி அவர்கள் எனக்கு அனுப்பி என்னை இங்கே பதிவு செய்யச் சொன்னார்கள். அனைத்து பின்னூட்டங்களும் அவர்களையே சேரும்.

தமிழ் சரியாக இல்லையென்றால் அந்தத் தவறு என்னுடையது.

நன்றி வணக்கம்
ஆரென்

தங்கவேல்
30-08-2007, 04:03 AM
வாவ் பப்பி சூப்பர்...

மன்மதன்
30-08-2007, 05:03 AM
அருமையான கதை.. வாழ்க்கையில் வெற்றியடைய இதுவே தாரக மந்திரம்...

இளசு
30-08-2007, 05:47 AM
இருட்டிலும் நம்பி உறுதியாக நடந்தால்
நம்பித் தேடியது வெளிச்சமாகும்..!

மூலக்கதை வழங்கிய பப்பிக்கும், திரைக்கதை அமைப்பாளர் அன்பின் ஆரெனுக்கும் நன்றி!

பலருடைய சிறு நஷ்டம்
ஒருவருக்கு செம லாபம்..

புத்திமட்டும் இருந்தால்
செத்த கழுதையும் பயன் தரும்..


(வசனத்துக்கு இளசுவை கூப்பிட்டிருக்கலாமோ?)

puppy
30-08-2007, 05:53 AM
(வசனத்துக்கு இளசுவை கூப்பிட்டிருக்கலாமோ?)


ஒரு யோச*னை இருந்துச்சு...குடுக்கலாம்ன்னு.......ஆனால் உங்க* கால்ஷீட் கிடைக்காதுன்னு சொல்லிட்டாங்க*....அது தான்......

இளசு
30-08-2007, 05:56 AM
ஏவிஎம் அழைத்தால் தேதி அட்ஜஸ்ட் செய்தபடி ஓடிவராதவர்கள் உண்டா?

பென்ஸ்
30-08-2007, 06:06 AM
நன்றி ஆரென், பப்பி...
கதை வாசிக்க நல்லாதான் இருக்கு,
கடைசியா சொன்ன கருத்தும் அழகுதான்.... ஆனா,
கதை ஏமாற்றுறதுக்கு சொல்லி கொடுக்குதோ..??? (எஸ்கேப் :sport009:)

mania
30-08-2007, 06:13 AM
அதெல்லாம் சரி.....இப்போ எங்கே அந்த கழுதை....????:icon_wacko::icon_wacko:
அன்புடன் ஆசையுடன்
மணியா

ஓவியன்
30-08-2007, 06:23 AM
ஆகா அழகான கருத்து ஆனால் பென்ஸ் அண்ணாவின் வழியே என் வழியும் உழைப்பும் நம்பிக்கையும் எப்போதும் நேர்வழியாக இருக்க வேண்டும்.........
:nature-smiley-003:
அரென் அண்ணாவுக்கும் பப்பி அவர்களுக்கும் இந்த கதைக்கு உருக் கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள்!.

சிவா.ஜி
30-08-2007, 06:40 AM
கதை அருமை.சாதாரணனுக்கு வேண்டுமானால் இது ஏமாற்றுவதாகத்தெரியலாம்.ஏனென்றால் அவர்கள் எதையுமே ஒரு நேர்வழியில் செய்தே பழக்கப்பட்டுவிட்டதால்..இதைப்போல எண்ணங்கள் தோன்றக்கூட செய்யாது. ஆனால் வியாபார புத்தியுள்ளவர்கள் வித்தியாசமாக யோசிப்பார்கள் வெற்றியுமடைவார்கள். திருபாய் அம்பானியும் அப்படி செய்துதானே இந்த சாம்ரஜ்யத்தை அமைத்திருக்கிறார்.தன் மேல் நம்பிக்கை வைப்பது எப்போதுமே நல்லது என்பது இந்த கதை வாயிலாக தெரிகிறது. நன்றி பப்பி மற்றும் ஆரென் அவர்களுக்கு.

தளபதி
30-08-2007, 10:24 AM
எந்த நிலையிலிருந்தும் முன்னேறிவிடலாம் அதற்கு புத்திசாலித்தனம் தேவை. நன்றி ஆரன் மேலும் பப்பி. (பப்பி − வித்தியாசமான பெயர். ரசிக்கிறேன்)

aren
07-09-2007, 01:50 PM
இந்த கென்னிதான் பின்னாளில் என்ரான் என்ற கம்பெனியின் நிரிவாகியான கென்னத் லேயா என்று தெரியவில்லை. அப்படியானால் என்ரான் கம்பெனியை மேலே தூக்கியவரும் இவரை, அதை வேரோடு சாய்த்தவரும் இவரே. பப்பி அவர்கள்தான் வந்து இதற்கு விடை சொல்லவேண்டும்.

அறிஞர்
07-09-2007, 07:47 PM
நன்றி பப்பி.... ஆரென்...

சிந்திக்க வைக்கும் கதை.... நம்பிக்கையுடன் செயல்பட்டால்.. என்றும் வெற்றி நமக்கே...

அறிஞர்
07-09-2007, 07:48 PM
இந்த கென்னிதான் பின்னாளில் என்ரான் என்ற கம்பெனியின் நிரிவாகியான கென்னத் லேயா என்று தெரியவில்லை. அப்படியானால் என்ரான் கம்பெனியை மேலே தூக்கியவரும் இவரை, அதை வேரோடு சாய்த்தவரும் இவரே. பப்பி அவர்கள்தான் வந்து இதற்கு விடை சொல்லவேண்டும்.

யானைக்கும் அடி சறுக்கும் என்று சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்..

இளசு
07-09-2007, 08:44 PM
. பப்பி அவர்கள்தான் வந்து இதற்கு விடை சொல்லவேண்டும்.

ஓடிவந்த வேகமென்ன வெள்ளிநிலவே.. − நீ
உடனடியாய் :music-smiley-019:மறைந்ததென்ன வெள்ளிநிலவே!!

alaguraj
07-09-2007, 08:52 PM
அதெல்லாம் சரி.....இப்போ எங்கே அந்த கழுதை....????:icon_wacko::icon_wacko:
அன்புடன் ஆசையுடன்
மணியாநீங்க அன்புடன் கேட்டாலும் ஆசையுடன் கேட்டாலும் அந்த கழுதை பற்றி தொரியனும்னா நீங்களும் அந்த லாட்டரிய வாங்கணும்.

சூரியன்
30-09-2007, 10:21 AM
நல்ல தகவல் இது..
நம்மிக்கை மற்றும் முயற்சி இருந்தால் வெற்றி எப்போதும் நம் பக்கமே..