PDA

View Full Version : உன்னையேЕ. நீ அறிவாய்



роЗройро┐ропро╡ро│рпН
29-08-2007, 07:00 PM
புத்தம் புதிதாய் மலரயிருக்கும்
பூமியில் கால் பதிப்பதற்கு
உன் பாதங்களைத் தூய்மையாக்கு
சிந்தனையில் தெளிவும் மனதில் உறுதியும்
கொண்டு உன் நெஞ்சமதனை
ஒரு கணம் தட்டிக்கேள்.... !

உன்னுள் உறைந்து இருக்கும்
புதிய ரக சிந்தனையினை
வடிகால் கொண்டமைத்து
வழிசமைத்து ஒடவிடு
அப்போது உன்னையே நீ அறிவாய்... !

உன்னுள் புதைக்கப்பட்ட
ஒவ்வொரு ஞானச் சிதைவுகளை
சிரத்தையோடு தோண்டியெடு....
உயிரோடு உரசிச்செல்லும்
உணர்வுகளுக்கு மதிப்பளிப்பாய்... !

காலத்தின் தேவைக்காய்
கருணையோடு ஒப்பிவித்து
கலங்கியழும் கல்லறை மீதினில்
சிறு தீபமென எரியும்
மெழுகுவர்த்தியாய் நீயிரு
மனிதத்தின் நாயகனாய்
உன்னையே நீ அறிவாய்..... !

роЖродро╡ро╛
29-08-2007, 07:08 PM
உன்னுள் புதைக்கப்பட்ட
ஒவ்வொரு ஞானச் சிதைவுகளை
சிரத்தையோடு தோண்டியெடு....
உயிரோடு உரசிச்செல்லும்
உணர்வுகளுக்கு மதிப்பளிப்பாய்... !

அருமையான வரிகள்..... மீண்டுமொரு அறிவுரைக் கவிதை... வாழ்த்துக்கள்..

роЗро│роЪрпБ
29-08-2007, 08:35 PM
உறைந்ததை மறைந்ததை
உருக்கிச் செதுக்கினால்
உன் விலை நீ அறிவாய்!

சபாஷ் இனியவள்!
நல்ல அதிர்வுகள் தரும் நற்கவிதை!

роЕроХрпНройро┐
06-09-2007, 11:01 AM
எனக்கு நானே சிற்பியானால்,
தற்காலிக வலிகள் என்றாலும்,
செதுக்கல் முடியும்போது,
உலகம் போற்ற நிலையாவேன்...

பாராட்டுக்கள் இனியவள்...
உணர்வுள்ள வரிகள்...

роЗро▓роХрпНроХро┐ропройрпН
06-09-2007, 01:58 PM
அழகானவரிகள் கொண்ட நற்கவிதை பாராட்டுக்கள் இனியவள்

роУро╡ро┐ропройрпН
07-09-2007, 04:13 AM
ஒரு பாடல் வரிகள் வரும்...........

"உன்னையறிந்தால் நீ, உன்னை அறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்..........."
அது எவ்வளவு உண்மையான உயர்வான வரிகள்.........
அதே கருவுடன் வந்த இனியவளின்
வரிகளும் உயர்வுடன், உண்மையாக..........

பாராட்டுக்கள் சகோதரி!.