PDA

View Full Version : நீங்காத உறவு

இலக்கியன்
29-08-2007, 06:32 PM
ஊர்கள் இழந்து
உறவுகள் மறந்து
உயிர்கள் சுமந்த
உடல்கள்

முகங்கள் அழிந்து
தமிழை மறந்து
கால்கள் போன
தேசம்

கண்கள் கலங்கி
நெஞ்சம் உருகி
வெடிக்குது ஈர
இதயம்

பந்தம் அறுந்து
சொந்தம் விலகி
கிளைகள் விழ்ந்த
விருட்சம்

இறக்கைகளின்றி
பறக்க துடிக்கும்
பாசம் என்னும்
வேகம்

உள்ளம் உருகி
வெள்ளம் பெருகி
ஓடட்டும் அன்பு
ஊற்றாய்

நினைவுகள் யாவும்
நிழலாய்த் தொடரும்
நீங்கிடது உங்கள்
உறவு

இனியவள்
29-08-2007, 06:39 PM
இலக்கியன் அழகிய கவிதை

உணர்வுகளை அழகாய் பிரதிபலிக்கின்றது

அழகிய கவிதையை தந்த இலக்கியனுக்கு வாழ்த்துக்களோடு
1000 இ−பணம் அன்பளிப்பு

ஆதவா
29-08-2007, 06:40 PM
வெளிநாடுவாழ் மக்கள்... ஆனால் இம்மாதிரி கவிதைகள் பல வந்துவிட்டன இலக்கியன்... எனினும் உங்களுடையது சற்றே வித்தியாசம்தான்.. வாழ்த்துக்கள்.

தமிழ் என்ற சொல்லை சேர்த்தாமல் எழுதியிருந்தால் இந்த கவிதை எல்லா நாட்டவருக்கும் பொருந்தியிருக்கும்..

நீங்கிடது உங்கள் - இதற்கு அர்த்தம் விளங்கவில்லை..

கவிதை அருமை.

இணைய நண்பன்
29-08-2007, 06:45 PM
நல்ல கவிதை.வாழ்த்துக்கள்

இளசு
29-08-2007, 06:48 PM
இருக்கும் வரை இறுதிவரை
ஈரம் உலரா சோகம்..
இந்த புலம் பெயர்ந்த சோகம்..

கவிதைக்கு பாராட்டுகள் இலக்கியன்!

இலக்கியன்
29-08-2007, 06:53 PM
இலக்கியன் அழகிய கவிதை

உணர்வுகளை அழகாய் பிரதிபலிக்கின்றது

அழகிய கவிதையை தந்த இலக்கியனுக்கு வாழ்த்துக்களோடு
1000 இ−பணம் அன்பளிப்பு

நன்றி உங்கள் வாழ்த்துக்கும் இ பணத்துக்கு

இலக்கியன்
29-08-2007, 06:56 PM
வெளிநாடுவாழ் மக்கள்... ஆனால் இம்மாதிரி கவிதைகள் பல வந்துவிட்டன இலக்கியன்... எனினும் உங்களுடையது சற்றே வித்தியாசம்தான்.. வாழ்த்துக்கள்.

தமிழ் என்ற சொல்லை சேர்த்தாமல் எழுதியிருந்தால் இந்த கவிதை எல்லா நாட்டவருக்கும் பொருந்தியிருக்கும்..

நீங்கிடது உங்கள் - இதற்கு அர்த்தம் விளங்கவில்லை..

கவிதை அருமை.

நீங்கி விடாது என்பது அதன் பொருள் கருத்துக்கு நன்றி அதவா

இலக்கியன்
29-08-2007, 06:59 PM
இக்ராம் இளசு அண்ணா இருவரின் பின்னூட்டத்துக்கு நன்றி

அக்னி
06-09-2007, 02:22 PM
தாயின் கருவறையில்
இருந்து வெளிவந்தோம்...
உறவுகள் பெற்றோம்...

தாய்நாட்டின் எல்லைகள்
தாண்டி புலம்பெயர்ந்தோம்...
உறவுகள் இழந்தோம்...

பாராட்டுக்கள் இலக்கியன்...

ஓவியன்
07-09-2007, 04:43 AM
நினைவுகளில் கனவுகளைத் தேக்கி இயந்திர உலகமதில் பொருளாதார முன்னேற்றத்திற்கும், சொந்த நாட்டிலே உழைக்க இயலாத அவலத்திலும்..........
இலக்கியனுடன் நானும் ஒருவனாக............

பாராட்டுக்கள் இலக்கியா.........!!!

அமரன்
23-09-2007, 05:59 PM
புலம்பெயர்ந்துவாழும் மக்களின் வாழ்வின் ஒரு பகுதி..இன்னொரு எச்சமாக புதிய உறவுகள், புதிய பரிணாமம் என்னும் சாதகங்களும் உள்ளன..தேசம் திரும்பும்போது வளமாக இருப்போம். வளமாக்குவோம் என்னும் சிந்தனையை வலிந்து இழுத்தால் வலிகள் குறையும் சாத்தியம் உண்டு..பாராட்டுகள் இலக்கியன்.

ஊசி இலைகளின்
தூசித்துகள்களில்
புளுதி வாசம்.

தேசத்தில் தொடங்கி
கடந்தும் முடியாத
எமது ஓட்டத்தால்.

பூமகள்
23-09-2007, 06:13 PM
புலபெயர்வு வாழ்வின் சோகம் ததும்பும் கவி வரிகள்.
அப்பட்டமாய் பரைசாற்றுகிறது தேசம் கடந்து வாழும் தமிழர் நிலையை..!
அழகுக் கவி..!
பாராட்டுக்கள் இலக்கியரே...!!

aren
24-09-2007, 06:01 AM
உறவுகளின் உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கிறது உங்கள் கவிதை வரிகள். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

இலக்கியன்
25-09-2007, 09:49 AM
தாயின் கருவறையில்
இருந்து வெளிவந்தோம்...
உறவுகள் பெற்றோம்...

தாய்நாட்டின் எல்லைகள்
தாண்டி புலம்பெயர்ந்தோம்...
உறவுகள் இழந்தோம்...

பாராட்டுக்கள் இலக்கியன்...

உறவுகளாக இருக்கும் போது புரிவது இல்லை பிரிவின் வேதனை
நன்றி அக்னி உங்கள் பின்னூட்ட வரிகளுக்கு

இலக்கியன்
25-09-2007, 09:52 AM
நினைவுகளில் கனவுகளைத் தேக்கி இயந்திர உலகமதில் பொருளாதார முன்னேற்றத்திற்கும், சொந்த நாட்டிலே உழைக்க இயலாத அவலத்திலும்..........
இலக்கியனுடன் நானும் ஒருவனாக............

பாராட்டுக்கள் இலக்கியா.........!!!

ஆனாலும் உழைப்பு என்பதை விட நாட்டு நிலமைகள்தான் புலம் பெயர்வு வாழ்வுக்கும் பிரிவுகளுக்கும் வடிகால் அமைத்தன என்பது மறுக்க முடியாதது உங்கள் பின்னூட்டக்கருத்துக்கு நன்றி

இலக்கியன்
25-09-2007, 09:53 AM
புலம்பெயர்ந்துவாழும் மக்களின் வாழ்வின் ஒரு பகுதி..இன்னொரு எச்சமாக புதிய உறவுகள், புதிய பரிணாமம் என்னும் சாதகங்களும் உள்ளன..தேசம் திரும்பும்போது வளமாக இருப்போம். வளமாக்குவோம் என்னும் சிந்தனையை வலிந்து இழுத்தால் வலிகள் குறையும் சாத்தியம் உண்டு..பாராட்டுகள் இலக்கியன்.

ஊசி இலைகளின்
தூசித்துகள்களில்
புளுதி வாசம்.

தேசத்தில் தொடங்கி
கடந்தும் முடியாத
எமது ஓட்டத்தால்.

உங்கள் பின்னூட்டக்கருத்துக்கு நன்றிகள்

இலக்கியன்
25-09-2007, 09:55 AM
புலபெயர்வு வாழ்வின் சோகம் ததும்பும் கவி வரிகள்.
அப்பட்டமாய் பரைசாற்றுகிறது தேசம் கடந்து வாழும் தமிழர் நிலையை..!
அழகுக் கவி..!
பாராட்டுக்கள் இலக்கியரே...!!

ஆம் தோழி நியம் சொல்லும் அந்த உணர்வுகள்
உங்கள் பின்னூட்டகருத்டுக்கு நன்றி

இலக்கியன்
25-09-2007, 09:55 AM
உறவுகளின் உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கிறது உங்கள் கவிதை வரிகள். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

உங்கள் பின்னூட்டகருத்டுக்கு நன்றி ஆரென்