PDA

View Full Version : ஆன்மீக கதைகள்alaguraj
29-08-2007, 12:24 PM
சிலம்பை மட்டுமே அறிந்த லட்சுமணன்!


சீதாபிராட்டியை ராவணன் தூக்கிச் சென்றபோது, தன்னைத் தூக்கிச் செல்லும் வழி ராமனுக்குத் தெரியவேண்டும் என்பதற்காகத் தன்னுடைய ஆபரணங்களைக் கழற்றிப் போட்டுக்கொண்டே சென்றாள் சீதை.


அனுமன் அவற்றை ஒவ்வொன்றாகச் சேகரித்து வைத்திருந்து கிஷ்கிந்தாபுரிக்கு ராமர்&லட்சுமணர் வந்தபோது கொடுத்தான்.


அந்த ஆபரணங்கள் ஒவ்வொன்றையும் ஊன்றிக் கவனித்த ராமர், அவை சீதை அணிந்திருந்தவைதான் என்பதை உணர்ந்து மிகவும் வருந்தினார். காதணி, கழுத்து ஆபரணம், கைவளையல்கள் என ஒவ்வொன்றிலும் சீதையின் முழுவடிவம் மனக்கண் முன் தோன்றி ராமரை மேலும் வருத்தியது.


தம்பி லட்சுமணா, இந்த ஆபரணங்களைப் பார்! இவை அனைத்தும் உன் அண்ணி அணிந்திருந்தவை அல்லவா? எனத் தாங்கொணாத் துயரத்துடன் தம்பியிடம் கேட்டார்.


லட்சுமணன் கலங்கிய கண்களுடன் காதணியை எடுத்தான். உடனே விலக்கி அப்பால் வைத்தான்! வளையல் களை எடுத்தான். விலக்கி அப்பால் வைத்தான்! கழுத்தில் அணியும் ஆபரணத்தை எடுத்தான். அதையும் அப்பால் வைத்தான்! அடுத்து காலில் அணியும் சிலம்பை எடுத்தான்.

உடனே,

அண்ணா... இது அண்ணியினுடையதுதான். சந்தேகமே இல்லை என்று குரலில் வருத்தம் தோயச் சொன்னான்.


அண்ணியின் பாதங்களைத் தவிர திருவுருவத்தை அவன் ஏறெடுத்தும் பார்க்காதவன். பாதசேவை மாத்திரம் செய்தவன். எனவே, பிராட்டியின் மற்ற ஆபரணம் எதையும் அவன் பார்த்ததில்லை. திருவடியில் அணிந்திருந்த சிலம்பை மாத்திரம் அடையாளம் கண்டு சொன்னான்.

puppy
29-08-2007, 12:28 PM
அண்ணி அம்மாவுக்கு சமம்....அம்மாவை எதுக்கு அப்படி பார்க்க வேண்டும்??????????

பப்பி

alaguraj
29-08-2007, 12:28 PM
அந்த விரல் வேண்டும்

கடவுள் ஒரு நாள் ஓர் ஏழையைக் காண பூலோகம் வந்தார். அந்த ஏழையைச் சந்தித்து,

உனக்கு என்ன வேண்டும்?என்று கேட்டார்.

ஏழையோ மிகுந்த ஆசையுடன், எனக்கு பணம், தங்கம், வைரம் எல்லாம் வேண்டும் என்றார்.

கடவுள் ஒரு விரலை நீட்டி அங்கிருந்த பீரோவைத் தங்கமாக்கினார். ஆனால், ஏழை பேசாமல் இருந்தான். கடவுள் மறுபடியும் விரலை நீட்டி அந்த வீட்டிலிருந்த எல்லாப் பொருட்களையும் தங்கமாக்கினார். அப்போதும் அவன் பேசாமல் இருந்தான். மீண்டும் கடவுள் விரலை நீட்டி அந்த வீட்டிலிருந்த பாத்திரங்களை எல்லாம் தங்க மாக்கினார். அப்போதும் அவன் சிரிக்கவே இல்லை. சோர்ந்துபோன கடவுள் ஏழையிடம்

இன்னும் உனக்கு என்னதான் வேண்டும்?என்றார்.

ஏழையோ, அந்த விரல் வேண்டும்! என்றான்.

கடவுள் மயங்கிக் கீழே விழுந்தார்.

ஆசைக்கு அளவுண்டு. ஆனால், பேராசைக்கு அளவேது?

தாமரை
29-08-2007, 12:30 PM
சிலம்பை மட்டுமே அறிந்த லட்சுமணன்!


சீதாபிராட்டியை ராவணன் தூக்கிச் சென்றபோது, தன்னைத் தூக்கிச் செல்லும் வழி ராமனுக்குத் தெரியவேண்டும் என்பதற்காகத் தன்னுடைய ஆபரணங்களைக் கழற்றிப் போட்டுக்கொண்டே சென்றாள் சீதை.


அனுமன் அவற்றை ஒவ்வொன்றாகச் சேகரித்து வைத்திருந்து கிஷ்கிந்தாபுரிக்கு ராமர்&லட்சுமணர் வந்தபோது கொடுத்தான்.


அந்த ஆபரணங்கள் ஒவ்வொன்றையும் ஊன்றிக் கவனித்த ராமர், அவை சீதை அணிந்திருந்தவைதான் என்பதை உணர்ந்து மிகவும் வருந்தினார். காதணி, கழுத்து ஆபரணம், கைவளையல்கள் என ஒவ்வொன்றிலும் சீதையின் முழுவடிவம் மனக்கண் முன் தோன்றி ராமரை மேலும் வருத்தியது.ஆமாங்க, மரவுரி தரித்து ஆரண்யம் புகுந்த சீதா அத்தனை நகைகளை ஏன் கொண்டுசென்றார்?

puppy
29-08-2007, 12:33 PM
அந்த ஆளு நம்ம இளசுன்னு நினைக்கிறேன்......நான் சொல்றது சரி தானே......

alaguraj
29-08-2007, 12:34 PM
மரவிழுதா மலைப்பாம்பா?

முரடனாயிருந்த தன் மகனுக்கு அரண்மனையில் வேலை வாங்கித் தந்தார் தந்தை. மகனுக்கோ வேலை பிடிக்கவில்லை. எனவே, உடனே தன் மனைவியைத் தேடி ஓடினான் மகன். வழியெங்கும் பேய்மழை. ஊரெல்லாம் வெள்ளம். கும்மிருட்டில் தட்டுத்தடுமாறி, ஆற்றைக் கடந்து, மரம் ஏறி வீட்டை அடைந்து கதவைத் தட்டினான். கதவைத் திறந்த அவன் மனைவிக்கு பகீர்என்றது. கணவன் நனைந்து வந்திருப்பதைக் கண்டாள்.

இந்த மழையில் ஆற்றைக் கடந்து எப்படி வந்தீர்கள்?என்றாள்.

ஒரு கட்டையைப் பிடித்து.

கட்டையா... வெள்ளத்தில் பிணங்களல்லவா மிதந்து போய்க் கொண்டிருக்கின்றன? சரி, மாடிக்கு எப்படி வந்தீர்கள்? கீழே கதவு பூட்டியிருந்ததே?

மர விழுதைப் பிடித்து ஏறி வந்தேன்.
மரவிழுதா? மரவிழுது ஏது எங்கள் வீட்டுக்கு? என்று வியந்து
கைவிளக்கை எடுத்து வெளியே பார்த்தாள். மரத்தில் ஒர் மலைப்பாம்பு தொங்கிக் கொண்டிருந்தது.

அப்படி என்ன அவசரம்? என்றாள்.

உன்மேல் உள்ள அவ்வளவு ஆசை!

அழியப்போகும் இந்த உடம்பின் மீது அவ்வளவு ஆசையா? இவ்வளவு ஆசையையும் ராமநாமத்தின் மீது வைத்திருந்தால் நல்ல கதியாவது கிடைக்குமே!

ஒரு கண நேரம் அவளது வார்த்தையைக் கேட்ட அவன் உள்ளத்திலும் \ வானத்திலும் ஒரே நேரத்தில் மின்னல்வெட்ட உண்மையை உணர்ந்தான்.

ராமநாம மகிமையைஉளப்பூர்வமக உணர்ந்து அமர கவியானான்.

அவர்தான் பின்னாளில் துளசிதாசஸர் என்ற பெயரில் ராம பக்தராகப் போற்றப்பட்டார்.

அவர் வடமொழியில் எழுதியதுதான் துளசி ராமாயணம் என்ற பிரசித்தி பெற்ற காவிய நூல்!

alaguraj
29-08-2007, 12:54 PM
எள்ளைத் தின்றவன்

வரகுண பாண்டியன் ஆட்சிக் காலத்தில் ஒரு நாள் திருவிடைமருதூர் சிவன்கோயிலுக்காக விளைந்த எள்ளை, கோயிலின் எதிரே காயவைத்திருந்தனர்.

ஒருவன் வந்து ஒரு கைப்பிடி எள்ளை எடுத்து வாயில் போட்டபோது, மன்னன் பார்த்துவிட்டான். ஆனால், எள்ளை அள்ளியவனோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதைச் சாப்பிடுவதிலேயே குறியாயிருந்தான்.


மன்னன் அவனை அழைத்து, சிவாலயத்தின் எள்ளைச் சாப்பிட்டால் தண்டனை கிடைக்கும், தெரியுமா?என்றான்.

தெரியும் என்று நிதானமாகச் சொன்னதுடன் கிடைக்கப் போகும் தண்டனையை அனுபவிக்கக் காத்திருந்தவனைப் போல் சலனமில்லாமல் காணப்பட்டான்.

உனக்கான தண்டனை என்னவென்று தெரியுமா? என்று கேட்டான் அரசன்.


தெரியும்... அடுத்த பிறவியில் எருதாகப் பிறந்து, இந்த ஆலயத்தின் வேலைகளுக்காகப் பயன்படுவேன்! என்றான் மகிழ்வோடு.

வாயைத் திற! என்றான் அரசன் அதட்டலாக. சொல்பவன் அரசனாயிற்றே என்று பயந்து, நடப்பது நடக்கட்டும் என்று வாயைத் திறந்தான் அவன்.

பாண்டியன் உடனே அவன் வாயில் விரலைவிட்டு நாலு எள்ளை எடுத்துத் தன் வாயில் போட்டுக் கொண்டு சொன்னான்:

நீ எருதாகப் பிறந்து ஆலயத்துக்கு உழைக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால், நானும் உன் வாயிலிருந்த எள்ளை முழு மனதோடு எடுத்துத் தின்றேன்.

நானும் எருதாகப் பிறந்து உனக்கு ஜோடியாக வந்து நாமிருவரும் சிவாலயத் தொண்டுசெய்து மகிழலாம் என்றான்.

எள்ளைத் தின்றவன், வரகுணபாண்டியனின் மேன்மையான உள்ளத்தை நினைத்து, வியந்து வாயடைத்துப் போய் நின்றான்.

alaguraj
29-08-2007, 01:33 PM
[COLOR="Red"]அழியா ஊர் அண்ணா மலை[/COளோற்]


கன்னட தேசத்தில் வீரசைவர்கள் அதிகம்.

வங்காளம் காளியையும்,
மகாராஷ்டிரம் கணபதியையும்,
கேரளா மகாவிஷ்ணுவையும்,
தமிழ்நாடு முருகனையும்

அதிகமாகக் கொண்டாடுகிற மாதிரி,
கர்நாடகம் சிவ வழிபாட்டில் ஆர்வம் உடையது. கழுத்திலேயே லிங்கத்தை அணிந்துகொள்ளும் லிங்காயத்துகள் கன்னடத்தில் அதிகம்.

இப்படிப்பட்ட வீரசைவ ராக விளங்கிய ஒருவரை அண்ணாமலையின் அக்கினி ஈர்த்தது. அவர்தான் குகை நம சிவாயர்.

அண்ணாமலையில் குகைகள் அநேகம். அதில் குடியிருந்து தவம் செய்த பல மகான்களில் ஒருவரே குகை நமசிவாயர். அவர் பெருமை அறியாத அவ்வூர் மக்கள் அவருக்கு இழைத்த துயரங்கள் அதிகம்!

அவமானப்படுத்தும் ஆர்வத்தில் அவருடன் மோதியவர் அநேகம்!

அத்தனையும் கடந்து அனலாக அமர்ந்தவர் குகை நமசிவாயர்.

அவரது வாழ்க்கை நிகழ்ச்சிகளில் இருந்து சம்பவம் ஒன்று சொல்வார்கள். ஆடு வளர்க் கும் இடைக்குலத்தார் ஒருவரது சினையாடு இறந்துவிட்டது. அதன் வயிற்றில் இரண்டு குட்டிகள் இருந்தன.

குட்டிகளைப் பிரசவிக் குமுன் சினையாடு இறந்துவிட்டதால், இடையருக்குப் பெருநஷ்டம். எனவே, யாராவது அதன் மாமிசம் விரும்பி வாங்குவாரா என்று விலை பேச முயன்றார்.

அந்த ஊர் மக்களில் வம்பன் ஒருவன், குகை நமசிவாயரைக் கேவலப்படுத்த நினைத் தான்.

மலைமேல் உள்ள சாமியார் மாமிசப் பிரியன். ஆட்டை அவனுக்கு நல்ல விலைக்கு விற்கலாம்என்றான்.

ஆடு மேய்ப்பவரும் அறியாமையுடன் குகை நமசிவாயரிடம் ஆட்டை விற்க வந்தான். வந்தவனது அறியாமையை உணர்ந்த நமசிவாயர், நாளை வந்து ஆட்டின் விலையை வாங்கிக் கொண்டு போ! என்று அனுப்பினார்.

அண்ணாமலையார் ஆக்ஞை இல்லாமல் இறந்த ஆடு தம்மிடம் கொண்டு வரப்படவில்லை என்று உணர்ந்த குகை நமசிவாயர், கருணைக் கடலாகிய அண்ணாமலையாரை நினைத்து வெண்பா பாடினார்.

விபூதியை இட்டார். துள்ளி எழுந்தது தாய்ஆடு. குட்டிகளை ஈன்றது. அதைத் தடவிக் கொடுத்து இலைதழைகளை உணவாக இட்டார் நமசிவாயர்.

மறுநாள் ஆட்டின் விலை வாங்க வந்த இடையர் ஆனந்தக் கண்ணீர் விட்டார். குட்டிகளைத் தோள்மேல் சுமந்துகொண்டு தாயாட்டுக்குத் தழைகள் போட்டபடி ஊருக்குக் கூட்டி வந்தார்.

ஊரே அதிசயம் உற்றது. ஆனால், இடையரைச் சுவாமிகளிடம் ஏவிவிட்ட வம்பனுக்கு இது வருத்தம் அளித்தது. சுவாமிகளை மட்டம்தட்ட அடுத்து ஒரு திட்டம் போட்டான். தனக்கிணையான வம்பர் ஏழெட்டு பேரைத் திரட்டிக்கொண்டு ஒரு நாடகம் நடத்தினான். ஆரோக்கியமான வாலிபன் ஒருவனை இறந்த மாதிரி பாடையில் படுக்க வைத்தான். சுவாமிகள் முன்வைத்து அவன் இறந்த மாதிரி அழுது நடித்தான். ஆட்டை எழுப்பிய மாதிரி இவனையும் எழுப்பித் தரவேண்டும் என்று வேண்டினான். அவ்வளவும் நாடகம். அவனைச் சுவாமிகள் எழுப்பியதும், அவன் சாகவே இல்லை என்பதைச் சொல்லி சுவாமிகளைக் கேவலப்படுத்த நினைத்தான்.

பச்சை ஓலையில் படுத்திருந்த இளைஞனைப் பார்த்த குகை நமசிவாயர் அனைத்தையும் உணர்ந்தார். அலட்சியமாக, போனவன் போனவன்தான்... யார் இவனை எழுப்ப முடியும்? என்று கைகளைத் தட்டிவிட்டு நகர்ந்துவிட்டார். ஹே! என்று அவரைக் கேலி செய்துவிட்டு எழுந்திரு... எழுந்திரு... இவன் சாகவே இல்லை!என்று கூத்தாடினான் வம்பன். அந்தோ... படுத்தவன் படுத்தவன்தான்... எழுந்திருக்கவே இல்லை. சுவாமிகள் வாக்கின்படி போயே விட்டான்!


இப்படிப் பலர் குகை நமசிவாயர் மனம் நோக நடந்தபோதும் அண்ணாமலையைவிட்டு நீங்க அவருக்கு மனம் வரவில்லை.

ஒருநாள் சீண்டல் அதிகமாகவே அந்த ஊர் மீது கோபம் வந்து, பாவிகள் வாழும் ஊர். கொலை செய்தாலும் கேள்வி கேட்க ஆள் இல்லாத கொடுமையான ஊர். வலிமைமிக்க இளைஞர்கள்கூட அழுது புலம்பும் ஊர். பாதகர் வாழும் ஊர் என்று திட்டித் திட்டிப் பாடிவிட்டு அழியும் ஊர் அண்ணாமலை என்று பாட அடியெடுத்தார் குகை நமசிவாயர்.

சிவபெருமானோ குறுக்கிட்டு, அடேய்... நாம் இவ்வூரில் இருக்கிறோம்... பார்த்துப் பாடு! என்று குரல் கொடுத்ததும், உருகிப் போய் மனம் கசிந்து பாட்டை மாற்றி அழியா ஊர் அண்ணாமலை என்று பாடினார்.

கோளர் இருக்குமூர், கொன்றாலும் கேளா ஊர்
காளை யரே நின்று கதறும் ஊர் நாளும்
பழியே சுமக்கும் ஊர். பாதகரே வாழும் ஊர்
அழியா ஊர் அண்ணா மலை

சொல்வேந்தர் சுகி சிவம் திருவண்ணாமலையில் ஆற்றிய சொற்பொழிவில் சொன்ன கதை இது..

alaguraj
29-08-2007, 01:44 PM
வாசுகியும் ஊசியும்!திருவள்ளுவர் தினமும் உணவருந்தும்போது தன் மனைவி வாசுகியை அழைத்துத் தவறாமல் இலையின் அருகில் ஒரு கிண்ணத்தில் நீரும், அதனோடு ஓர் ஊசியையும் வைக்கச் சொல்வார்.

அப்படியே செய்து வந்தார். எதற்கு இப்படி வைக்கச் சொல்கிறீர்? என்று ஒரு நாளும் தன் கணவரை அவர் கேட்டதில்லை.

திருவள்ளுவர் முதுமையில் தளர்வுற்றிருந்தபோது வாசுகியை அருகில் அழைத்து, நான் தினமும் உணவருந்தும்போது இலையின் அருகில் ஒரு கிண்ணத்தில் நீரும், அதன் அருகில் ஒரு ஊசியையும் வைக்கச் சொல்வேன்.

நீயும் இதுநாள்வரை தவறாமல் வைத்து வந்தாய். நான் எதற்கு அவ்வாறு வைக்கச் சொல்கிறேன் என்று நீ இதுவரை என்னைக் கேட்டதில்லை.

அதன் காரணத்தை இப்போது கூறுகிறேன். நீ எனக்கு தினமும் உணவு பரிமாறும்போது அதில் ஒன்றிரண்டு கீழே சிந்திவிட்டால் அதை இந்த ஊசியால் எடுத்து, கிண்ணத்திலுள்ள நீரில் நன்றாக சுத்தம் செய்து இலையில் போட்டுக்கொள்ளத்தான் அப்படிச் செய்தேன்.

ஆனால், அந்த ஊசிக்கான வேலை இதுவரை ஏற்பட்டதில்லை. ஒரு நாள்கூட உணவைக் கீழே சிந்தாமலேயே நீ பரிமாறியிருந்தாய் என்றார்.

சிவா.ஜி
29-08-2007, 03:45 PM
ஹீம்..அதெல்லாம் அந்தக்காலம்.....இப்பல்லாம் துணைவியார் சீரியல் பார்த்துக்கொண்டே......."பசிச்சா போய் போட்டு சாப்பிடவேண்டியதுதானே...நல்ல கட்டத்துல நொய் நொய்ன்னுகிட்டு"−இப்படித்தான் சொல்கிறார்கள். என்னத்த செய்ய..திருமணத்தன்று மட்டும் வள்ளுவனும் வாசுகியும் போல வாழ்கன்னு வாழ்த்தறாங்க.

இளசு
29-08-2007, 08:40 PM
அந்த ஆளு நம்ம இளசுன்னு நினைக்கிறேன்......நான் சொல்றது சரி தானே......

ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆ!

பப்பி, எனக்கு அவ்வளவு வெவரம் பத்தாதுங்கோ!!

ஆதவா
29-08-2007, 08:46 PM
ஆமாங்க, மரவுரி தரித்து ஆரண்யம் புகுந்த சீதா அத்தனை நகைகளை ஏன் கொண்டுசென்றார்?

அது புதுசா துறவரம் தரிச்சா அப்படித்தான்... ரூல்ஸ் தெரியாம நகையெல்லாம் கொன்டு போயிருக்காங்க.

alaguraj
30-08-2007, 06:30 AM
கணவன் மனைவி அண்ணன் தம்பி காட்டுக்குப் போவது துறவு அல்ல..
அவர்கள் அங்கே போய் முனிவர்கள் போல் தவம் செய்யவும் போகவில்லை.

இளசு
30-08-2007, 07:16 AM
சின்ன சின்ன கதைகள் சொல்லும் சேதிகள் பெரிது.

நன்றி அழகுராஜ் அவர்களே!

lolluvathiyar
30-08-2007, 07:19 AM
அனைத்து கதைகளும் அருமையாக இருந்தது அழகுராஜ் தொரர்ந்து சொல்லி வாருங்கள்

வாசுகியும் ஊசியும்!
நீ எனக்கு தினமும் உணவு பரிமாறும்போது அதில் ஒன்றிரண்டு கீழே சிந்திவிட்டால் அதை இந்த ஊசியால் எடுத்து,

இப்பத்த பேசன் சிந்தாத உனவையே போர் என்னும் ஊசியால் எடுத்து சிந்தி சாப்பிடுவார்கள்

mathura
31-08-2007, 10:57 AM
சிறந்த நீதி கதைகள் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்

alaguraj
02-09-2007, 01:21 PM
துறவி

முல்லா வசித்துவந்த ஊரில் ஒரு நாத்திகன் வசித்து வந்தான்.
கொஞ்சமும் தெய்வ நம்பிக்கை இல்லாதவன்.
தெய்வ நம்பிக்கை உடைய முல்லா போன்றவர்களை எப்பொழுது பார்த்தாலும் கேலியும் கிண்டலும் செய்து பரிகசித்துக்கொண்டிருப்பான்.
ஓரு நாள் சந்தைக் திடலில் அந்த நாத்திகன் நின்று கொண்டிருந்தான்.
அந்தப் பக்கமாக முல்லா நடந்து வந்து கொண்டிருந்தார். அங்கே திரளாகக் கூடியிருந்த மக்களுக்கு மத்தியிலே முல்லாவை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணினான்.

முல்லா அருகே வந்ததும், ஏய் முல்லா உலகத்திலேயே நீதான் முற்றம் துறந்த துறவி என்று மக்கள் பேசிக்கொள்கிறhர்களே ? அப்படி எதை நீர் துறந்து ஞானியானீர் என்று நாத்திகன் கேலியாகக் கேட்டான்.

எந்த முட்டாள் அந்த மாதிரி சொன்னான்? என்னைவிட மிகவும் மகத்துவம் வாய்ந்த துறவி ஒருவர் இருக்கிறாரே என்றார் முல்லா.

நாத்திகனுக்கு மட்டுமல்ல அங்கு நடமாடிக் கொண்டிருந்த மக்களகட்க்கும் முல்லா சொன்ன தகவல் ஆச்சரியத்தை விளைவித்தது. முல்லாவையும்விட மேலான தறவி இந்த ஊரில் யார் இருக்க முடியும் என்று அவர்களுக்கு விளங்கவில்லை.

நாத்திகனும் அந்தத் தகவலைக் கேட்டு வியப்படைந்து முல்லா இந்த ஊரில் உள்ள அந்த மகத்துவம் வாயந்த துறவி யார் ? என்ற கேட்டான்.

அந்தத் துறவி நீர் தான் என்று முல்லா கூறியதைக் கேட்ட நாத்திகன் அதிர்ச்சியடைந்து விட்டான்.

நானா அந்தத் துறவி அது எப்படி ? என்று கேட்டான். என்னைப் போன்ற சாதாரணத் துறவிகள் கேவலம் உலகத்தில் இருக்கும் பொருட்களைத் தான் துறப்பது வழக்கம் நீரோ கடவுளையே துறந்து விட்ட துறவியாயிற்றே உம்மை மிஞ்சக் கூடிய துறவி உலகத்தில் ஏது ? என்று முல்லா பதிலளித்தார்.

அங்கே சூழ்ந்திருந்த மக்கள் நாத்திகனைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்க ஆரம்பித்தனர். நாத்திகன் தலைகுனிந்தவாறு அந்த இடத்தை விட்டு வேகமாக அகன்று விட்டான். அன்று முதல் அவன் முல்லாவை ஏளனம் செய்வதை அடியோடு விட்டுவிட்டான்.

alaguraj
02-09-2007, 01:26 PM
உன் சந்தோசம் உன்னிடமே...
முல்லாவின் வீட்டிற்கு அருகில் ஒரு செல்வந்தன் வீடு இருந்தது.

அவனிடம் ஏராளமான பணமும் மற்றும் வீடு வாசல், தோட்டம் துறவு என சொத்துக்களும் நிறைய இருந்தன.

ஆனால் அந்த செல்வந்தன் ஒருநாள் கூட மகிழ்ச்சியாக இருந்ததில்லை. முல்லாவை சந்திக்கும் போதெல்லாம், என்னால் ஒரு நிமிஷங்கூட மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை. எப்பொழுது பார்த்தாலும் கவலையாகவும், கலக்கமாகவும் அல்லவா இருக்கிறது.

நான் கொஞ்ச நேரமாவது மகிழ்ச்சியுடன் இருக்க முல்லா அவர்களே எனக்கு ஒரு யோசனை கூறக் கூடாதா ? என்று பரிதாபமாகக் கேட்டார். செல்வந்தன் ஒரு பெரிய பேழையில் தன்னுடைய பணத்தையெல்லாம் சிறுசிறு மூட்டைகளாகக் கட்டிப் போட்டு வைத்திருந்தான்.

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவன் அந்தப் பணப் பைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துப் பார்த்து வைப்பான். முல்லா அவன் வீட்டுக்கு அடிக்கடி சென்று அவனுடன் பொழுது போக்காகப் பேசிக் கொண்டிருந்து விட்டு வருவது வழக்கம். அன்றும் அவர் வழக்கம்போல செல்வந்தன் வீட்டுக்கு வந்தார்.

அந்தச் சமயத்தில் செல்வந்தர் பணப் பெட்டியைத் திறந்து பணமூட்டைகளை எடுத்துப் பார்த்து விட்டு வைத்துக் கொண்டிருந்தார். என்ன ஐயா செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டவாறு பணப்பெட்டி இருக்குமிடத்தை நோக்கி நடந்தார் முல்லா.

முல்லா வீட்டுக்குள் வருவதைக் கண்ட செல்வந்தன் அவசர அவசரமாகப் பணப் பைகளைப் பெட்டியில் வைத்துப் பூட்டத் தொடங்கினான்.

அப்போது அவனுடைய பணப் பைகளில் ஒன்று செல்வந்தன் அறியாமலே பணப் பெட்டிக்கு அருகாமையில் கீழே விழுந்து விட்டது. செல்வந்தன் அதைக் கவனிக்கவில்லை ஆனால் முல்லா கவனித்தார். உடனே அவர் பாய்ந்து சென்று பணப் பையைத் தூக்கிக் கொண்டு வெளியே ஒடினார். ஐயோ என் பணப்பை போய் விட்டதே என்று கூக்குரலிட்டவாறு முல்லாவைத் துரத்திக் கொண்டு செல்வந்தன் ஒடினான். முல்லா இரண்டொரு தெருக்கள் வழியாக வேண்டுமென்றே ஒடினார். செல்வந்தன் பணம் போய் விட்டதே என்று கூக்குரலிட்ட வண்ணம் முல்லாவைப் பின் தொடர்ந்து ஒடினான்.

முல்லா கடைசியாக செல்வந்தன் வீட்டுக்கே ஒடி வந்தார். பணப்பையை அவனுடைய பணப் பெட்டியின் மீது தொப்பெனப் போட்டார். செல்வந்தன் ஒடி வந்து பணப் பையைத் தூக்கிக் கொண்டு அப்பாடி இப்பொழுது தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற மலர்ந்த முகத்துடன் கூறினான்.

இப்பொழுது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா ? என்று எங்கிருந்து வந்தது இந்த மகிழ்ச்சி என்று முல்லா கேட்டார்.

இப்போது உங்கள் பணம் சிறிது கூட அதிகரிக்கவில்லை இருந்தாலும் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள். உங்கள் மகிழ்ச்சி உங்களிடமே இருக்கிறது அதை யாரிடமிருந்தும் நீர் பெறமுடியாது என்றார்.

alaguraj
02-09-2007, 01:27 PM
கடவுள் காப்பாற்றுவார்...

ஒரு கிராமத்தில் ஒருத்தன் கடவுளை நினைக்காமலோ, ஆராதிக்காமலோ எதுவும் செய்ய மாட்டான். ரொம்பவும் பக்திமான்.

அந்தக்கிராமத்தில் மழை நாட்கள் வந்த போது நதி உடைப்பு எடுத்து ஊருக்குள் வெள்ளம் சூழ்ந்தது. அப்போது எல்லாரும் கிராமத்தை விட்டுக் காலி செய்யும்படி அரசு உத்தரவு போட்டது.

எல்லாரும் காலி செய்து கொண்டு இருந்தார்கள். நம் பக்திமான் கடவுள் நினைப்பிலேயே இருந்து வந்தார். அவர் பக்கத்து வீட்டுக்காரர் நீங்கள் வரவில்லையா என்று கேட்டதற்கு என்னைக் கடவுள் காப்பாற்றுவார் என்று பதில் சொன்னார்.

கொஞ்ச நேரம் ஆனது வெள்ளம் அதிகமாகச் சூழ்ந்தது. பக்திமான் முதல் மாடியில் ஏறி நின்று கொண்டார். அப்போது ஒரு படகு வந்தது. படகுக் காரர்கள் ஊரில் யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டு வந்தவர்கள் இவரைப் பார்த்து விட்டுச் சத்தம் போட்டுக் கூப்பிட்டார்கள்.

இவர் திரும்பவும் "நான் வரவில்லை, கடவுள் வருவார், என்னைப் பாதுகாக்க" என்று சொல்லி விட்டார். படகுக்காரர்கள் கெஞ்சினார்கள். அவர் அசைந்து கொடுக்கவில்லை. நேரம் சென்று கொண்டே இருந்தது. முதல் மாடியும் தண்ணீரால் சூழ்ந்தது. மேலே மொட்டை மாடிக்குப் போனார். தூரத்தில் ஒரு ஹெலிகாப்டர் வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

சற்று நேரத்துக்கு எல்லாம் நம்ம பக்தர் இருக்கும் இடத்தைப் பார்த்து விட்டு அங்கே வந்து வட்டமிட்டது. ஹெலிகாப்டரில் இருந்து ஒரு ஏணி இறக்கப்பட்டது. ஒரு ஆளும் கூடவே இறங்கினான். " என்ன செய்கிறீர்கள், தனியாக, ஊரில் யாருமே இல்லை, சீக்கிரம் இந்த ஏணியில் ஏறுங்கள்" என்றான்.

நம்ம பக்தர் மறுத்து விட்டார். "என்னைக் கடவுள் காப்பாற்றுவார் அப்பனே, நீ போய் உன்னைக் காப்பாற்றிக் கொள்" என்றார். அவன் எவ்வளவு கெஞ்சியும் அவர் மறுத்து விட்டார்.

பின் அவனும் போய் விட்டான். ஊரை வெள்ளமும் சூழ்ந்தது. நம்ம பக்தர் வெள்ளத்தோட அடித்துச் செல்லப் பட்டார்.

அப்போ அவன் நினைச்சான். " நாம் இவ்வளவு வேண்டியும் கடவுள் நம்மைக் காப்பாற்றவில்லையே" என்று நினைத்தான். அப்போது கடவுள் அவன் முன் கடவுள் தோன்றி "அப்பனே, நான் மூன்று முறை வந்தேன், உன்னைக் காப்பாற்ற, நீதான் இடம் கொடுக்கவில்லை" என்றார். "ம்ஹும், நீங்கள் எங்கே வந்தீர்கள்?" என்று கேட்டான்.

கடவுள் சொன்னார். "அப்பனே, முதலில் நான் பக்கத்து வீட்டுக் காரனாக வந்தேன். பின் படகுக்காரனாக வந்தேன். பின் ஹெலிகாப்டரில் வந்தேன். மூன்று முறையும் என் உதவியை நீதான் மறுத்தாய்" என்றார்.

alaguraj
02-09-2007, 01:41 PM
பயம்

ஒர் செல்வந்தனுக்கு திடீர் மரணம் வரும் என்று அவனது ஜோசியன் சொல்லிவிட்டான். அவன் நாலு பக்கமும் ஒரு பெரிய சுவர் கட்டி, சுற்றிலும் பாதுகாப்புக்கு ஆட்களை போட்டிருந்தான். ஒரு சுவற்றில் இரண்டே இரண்டு ஜன்னல்களை மட்டும் வைத்திருந்தான். யாருமே உள்ளே வரமுடியாது.

அந்த வழியே சென்ற ஒரு பிச்சைக்காரன் அதைப் பார்த்து சிரித்தான். ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த செல்வந்தனுக்கு கோபம் வந்தது. "ஏன் சிரிக்கிறாய்" என்று கோபமுடன் கேட்டான்.

"நீங்கள் இரண்டு ஜன்னல்கள் ஏன் வைத்திருக்கிறீர்கள்?"

அரசன், "ஜன்னல்கள் இல்லையென்றால் நான் புழுக்கத்தினால் செத்துவிட மாட்டேனா?" என்றான் கோபத்துடன்.

பிச்சைக்காரன் சாவதானமாகச் சொன்னான், "இப்போது மட்டும் என்ன? தினம் தினம் பயத்தால் செத்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள்!" என்று.

lolluvathiyar
03-09-2007, 07:20 AM
அனைத்து கதைகளும் நன்றாக இருகிறது அழகு.
காப்பாற்ற வரும் மனிதர்கள் கடவுளின் படைப்பு என்று கூட அறியாமல் இருக்கும் ஆண்மீகவாதிகளை பற்றி எழுதிய கதை நன்றாக இருந்தது

alaguraj
04-09-2007, 08:50 AM
கொங்கண முனிவரைப் பற்றி நினைக்கும்போது, ஒரு கொக்கின் நினைப்பும் சேர்ந்தே வரும்.

ஒரு முறை கொங்கண முனிவர் மகாயாகம் வளர்த்து அதற்குரிய பலன்களால் பல சித்திகள் கைவரபொற்றவர்.

அவர் கோபப் பார்வை பார்த்தாலே பச்சை மரமும் பற்றி எரியும். அப்படி ஒரு சக்தியுடன் ஒருநாள் தெருவில் நடந்தபடி இருந்தவர் மேல், வானில் பறந்து கொண்டிருந்த கொக்கானது எச்சமிட்டுவிட்டது.

அவ்வளவுதான்அதை கொங்கணர் கோபத்துடன் பார்க்க, அது எரிந்து பஸ்பமானது. கொங்கணரிடமும் ஒரு கர்வம். நான் மாபெரும் தவசி.. என் மேலா எச்சமிட்டாய்? என்பது போல ஒரு கர்வத்துடன் நடந்தார்.

கொக்கை எரித்த கோபத்தோடு அடுத்து அவர் ஒரு வீட்டின் முன் யாசகம் கேட்டுச் சென்று நின்றார். , அந்த வீட்டுப் பெண்மணி சற்று தாமதமாகவே அவருக்குப் பிச்சை இடும்படி ஆனது.

புரியாத கொங்கணர், வெகு நேரமாக பசியோடு நான் காத்திருக்கிறேன் உனக்குத்தான் என்ன ஒரு அலட்சியம் என்று அந்த பெண்ணை அனல் பார்வை பார்த்தார்.

ஆனால், அந்த பெண்ணுக்கு எதுவும் ஆகவில்லை. மாறாக அவள் அந்தப் பார்வையின் பொருள் புரிந்து கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா? என்று திருப்பிக் கேட்க கொங்கணர் அதிர்ந்தார். தனது கோபத்திற்கும் கர்வத்திற்காகவும் வெட்கி தலை குனிந்தார்.

கொங்கணர் யாகம் கேட்டுச்சென்ற இடம் திருவள்ளுவர் வீடு.

தவப்பயன் வாசுகியால் எப்படித் தன்னையறிய முடிந்தது?

ஹோமம் வளர்ப்பது, யாகம் புரிவது, தவம் செய்து சித்தியடைவது அனைத்தையும் விட மேலான ஒரு செயல், தானென்ற அகந்தை துளியும் இன்றி சேவை செய்வது, தனக்கென வாழாமல் இருப்பது என்பதே அது!

துர்வாசரின் கோபம் மிகப்பிரசித்தம். அதனால் அவர் பட்டபாடும் கொஞ்ச நஞ்சமல்ல.. விசுவாமித்திரரின் தாழ்வுமனப்பான்மையும் அதன் எதிரொலியான கோபமும்தான் அவரை திரிசங்கு சொர்க்கம் அமைக்கவே தூண்டியது.

எனவே ஆறுவது சினம்..

alaguraj
05-09-2007, 09:50 AM
சுவாமி விவேகானந்தர் சொன்ன குட்டிக்கதை

அன்புக்கான முதல் சோதனை, அது பேரம் பேசுவதை அறியாது என்பதே. ஏதாவது ஒன்றைப் பெறுவதற்காக ஒருவன் மற்றவனை நேசித்தால், அது அன்பல்ல; வியாபாரம். கொடுக்கல்& வாங்கல் பேச்சு வந்து விட்டாலே, அது அன்பாக இருக்க முடியாது. எனவே, இறைவனிடம், எனக்கு இதைக் கொடு... அதைக் கொடு என்று கேட்பது அன்பு ஆகாது. அது எவ்வாறு அன்பாக முடியும்? நான் உங்களிடம் ஒன்றைக் கேட்கிறேன்; நீங்கள் பதிலாக வேறொன்றைத் தருகிறீர்கள். அது போல்தான் இதுவும். வெறும் வியாபாரம்!

மன்னன் ஒருவன் காட்டில் வேட்டையாடச் சென்றான். அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவருடன் சிறிது நேரம் பேசியதிலேயே மிகவும் மகிழ்ந்த அவன், தன்னிடமிருந்து ஏதாவது பெற்றுக் கொள்ளுமாறு அவரிடம் வேண்டினான்.

அதற்கு அந்த முனிவர், எனக்கு எதுவும் வேண்டாம். இப்போது நான் திருப்தியாகவே உள்ளேன். இந்த மரங்கள், நான் உண்பதற்குப் போதிய பழங்களைத் தருகின்றன.

இந்த அழகிய, தெள்ளிய நீரோடைகள் எனக்கு வேண்டிய நீரைத் தருகின்றன. இந்தக் குகைகளில் நான் நிம்மதியாக உறங்குகிறேன். நீ மன்னாதி மன்னனானாலும் நீ தருபவற்றை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்? என்று கூறினார்.

அதைக் கேட்ட மன்னன், என்னைத் தூயவ னாக்க, எனது திருப்திக்காகவாவது ஏதாவது ஒன் றைப் பெற்றுக் கொள்ளுங்கள். என்னோடு நகருக்கு எழுந்தருளுங்கள்! என்று வேண்டினான்.

இறுதியில் மன்னனோடு செல்ல இசைந்தார் முனிவர். அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான் மன்னன். பொன், மணி, பளிங்கு என்று அந்த அரண்மனை விலை மதிப்பற்ற பொருட்களால் நிறைந்திருந்தது. செல்வமும் ஆற்றலும் எங்கும் வெளிப்பட்டன.

மன்னன், முனிவரைக் காத்திருக்குமாறு சொல்லி விட்டு, ஒரு மூலைக்குச் சென்று, இறைவா... எனக்கு இன்னும் செல்வமும், மக்களும், நாடும் தந்தருள்வாய்! என்று பிரார்த்திக்கத் தொடங்கினான். இதைக் கேட்ட முனிவர் எழுந்து வெளியே செல்லத் தொடங்கினார். அவர் செல்வதைக் கண்ட மன்னன், அவரைப் பின்தொடர்ந்து, சுவாமி... நில்லுங்கள். நீங்கள் எனது நன்கொடையைப் பெறாமல் செல்கிறீர்களே? என்று கூறினான்.

முனிவர் அவனிடம், மன்னா, பிச்சைக்காரனிடம் நான் யாசிப்பதில்லை. உன்னால் எனக்கு என்ன கொடுக்க முடியும்? நீயே பொழுதெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறாய்! என்றார்.

சரிதானே... அன்பின் மொழி அதுவல்ல. இதைத் தா... அதைத் தா! என்று நீ இறைவனிடம் வேண்டுவாயானால் அன்புக்கும் வியாபாரத்துக்கும் என்ன வேறு பாடு?

அன்பின் முதல் பரிசோ தனை, பேரம் பேசுவது எதுவும் அதில் இல்லாததுதான். அது எப்போதும் கொடுக்கிறது. கொடுப்பதைத் தவிர, எடுப்பது அதற்குத் தெரியாது.

இறைவன் திருவுள்ளம் அதுவானால் என்னிடமுள்ள எல்லாவற்றையும் அவருக்கு அளிப்பேன். அவரிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டாம். பிரபஞ்சத்திலுள்ள எதுவும் எனக்குத் தேவையில்லை. அவரிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன். அதனால் அவரை நேசிக்கிறேன். பிரதியாக எனக்கு எதுவும் வேண்டாம்.

alaguraj
05-09-2007, 10:10 AM
ஒரு முறை நாரதர் காட்டு வழியே பயணம் செய்யும்போது, ஒருவன் ஆழ்ந்த தவத்தில் இருப்பதைக் கண்டார்.
நாரதரிடம், தேவரிஷியே... எங்கு செல் கிறீர்கள்? என்று கேட்டான் அந்த தவ சீலன்.

பூமியை சுற்றிப் பார்த்துவிட்டு, சொர்க்கத்துக்கு செல்வேன்! என்றார் நாரதர்.

அப்படியானால், கடவுள் எனக்கு எப்போது முக்தி அளிப்பார் என்று மறக்காமல் கேட்டு வாருங்கள் என வேண்டினான். நாரதர் அதை ஏற்றுக் கொண்டார்.

மற்றோரிடத்தில் ஒருவன் ஆடிப்பாடிக் கொண்டிருந்தான். நாரதரைக் கண்டதும், நாரதரே, எங்கே போகிறீர் கள்? என்றான். அவனது பேச்சில் ஒருவித அதிகாரமும் இறுமாப்பும் தொனித் தன.

நாரதர், சொர்க்கத்துக்கு! என்றார்.

அப்படியானால், நான் எப் போது முக்தி அடைவேன் என்று கடவு ளிடம் கேட்டு வாருங்கள்! என்றான்.

சரி! என்ற நாரதர், சொர்க்கம் சென்றார்.

மறுபடியும் பூவுலகத்துக்கு வந்த நாரதர். கடந்த முறை, பார்த்த தவசீலரை சந்தித்தார். நாரதரின் வரு கையை உணர்ந்த அந்த தவசீலர் கண் விழித்தார். சந்தோஷப்பட்டார். சுவாமி... என்னைப் பற்றி கட வுளிடம் கேட்டு வந்தீர்களா? என்றார்.

நாரதர் புன்சிரிப்புடன், ஆமாம், தவசியே... நீ இன்னும் நான்கு தடவை பூமியில் பிறந்த பிறகுதான் உனக்கு முக்தி என்று கடவுள் கூறிவிட்டார்! என் றார். உடனே, தவசீலர் அழத் துவங்கினார்.

இதற்காக ஏன் அழுகிறாய்? என்றார் நாரதர்.

சுவாமி... நான் இவ்வளவு கடுமையாக விடா முயற்சியுடன் கடுந்தவம் செய்தும் கடவுள் இன்னும் மனம் இரங்கவில்லை. இந்த நிலையில் நான் மேலும் நான்கு பிறவிகள் எடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டாரே! அப்படியானால், நான் பெரும் பாவியல்லவா? அதை நினைத்துதான் அழுதேன்! என்றான்.

நாரதர் அங்கிருந்து நகர்ந்தார். ஆட்டமும் பாட்டமுமாக முன்னர் சந்தித்த மனிதனிடம் வந்தார். அவன் நாரதரிடம், என்ன நாரதரே! என் விஷயத்தைக் கடவுளிடம் கேட்டீர்களா? என்றான்.

நாரதரும் கேட்டேன்... கேட்டேன் என்றார்.

என்ன சொன்னார்?

நாரதர் அமைதியாக, அதோ! அந்த புளிய மரத்தைப் பார். அதில் எத்தனை இலைகள் இருக்கின்றனவோ, அத்தனை பிறவிகள் உனக்கு இன்னும் உள்ளன. எனவே, அதன் பிறகுதான் முக்தி என்று கடவுள் திட்டவட்டமாகக் கூறிவிட்டார் என்றார் நாரதர்.

ஆஹா, இது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம். எனக்கு இவ்வளவு விரைவில் முக் தியா? என்னால் நம்ப முடியவில்லையே என்றபடி ஆடிப் பாடினான் அவன். இதைக் கண்ட நாரதர் திகைத்தார். அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது.

அன்பு மகனே, நான் உனக்கு இக்கணமே முக்தி தந்தேன்! அவன் முக்தியடைந்தான்.

நாரதர் அசரீரியிடம் கேட்டார்:

உங்கள் செயலின் அர்த்தம் எனக்கு விளங்க வில்லையே?

விருப்பு&வெறுப்பு அற்றவன்தான் உண்மை யான ஞானி. அவனை கவலை, மகிழ்ச்சி, பயம், துக்கம், பாவ&புண்ணியம் எதுவும் பாதிக்காது. அவன் இறைவனுக்குச் சமமானவன். இந்த மனிதன் தன்னுடைய ஆட்டம் பாட்டம் கூத்து போன்றவற்றை விடாப்பிடியாகச் செயல்படுத்தினான். நீர் அவனுக்கு புளிய மரத்தின் இலைகள் அளவுக்குப் பிறவி எடுத்த பின்தான் முக்தி என்றீர். அதற்காகவும் அவன் கலங்கவில்லை. ஆனால், தவசியோ நான்கு பிறவிகள் எடுப்பதையே கடினம் என்றான். ஆகவே, அழுது, கடவுளே இல்லையென்றும் எண்ணினான். ஆனால், இரண்டாவது மனிதனுக்கோ சகிப்புத் தன்மையுடன், பொறுமையும் இருந்தது. அதற் காகவே அவனுக்கு உடனடியாக முக்தி வழங்கி னேன். என்றது அசரீரி. இந்த பதிலைக் கேட்ட நாரதர் மௌனமானார்.

இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை!

alaguraj
05-09-2007, 10:20 AM
ஒருவர், ஆடு ஒன்றை விலைக்கு வாங்கிச் சென்றார். இதை கவனித்த மூன்று திருடர்கள், எப்படியாவது அந்த ஆட்டை அபகரிக்கத் தீர்மானித்தனர்.

முதலில் ஒருவன் அவரை நெருங்கி, என்னய்யா... நாயைக் கொண்டு செல்கிறீரே? என்றான்.

அவர், அதைப் பொருட்படுத்தாமல் நடந்தார்.

அடுத்து வந்த இரண்டாமவனும் இதையே சொல்ல... அப்போதும் செவிமடுக்காமல் நடந்தார்.

சற்றுத் தூரத்தில் மூன்றாமவன் அவரைப் பார்த்து,

என்ன ஆச்சரியம்!. நாயைப் பிடித்துச் செல்கிறீரே! என்றான்.

ஒருவேளை, தான் பிடித்துக் கொண்டிருப்பது நாய்தானோ? என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது. அந்த எண்ணம் நேரமாக நேரமாகத் தீர்மானமானது. உடனே, அவர் பிடித்திருந்த ஆட்டின் கயிற்றை அவிழ்த்துவிட்டு நடக்கத் தொடங்கினார்.

அதற்காகவே காத்திருந்த திருடர்கள், ஆட்டை கவர்ந்து சென்றனர்.

lolluvathiyar
06-09-2007, 07:27 AM
அட ஒரு நாள் கேப்ல மூனு கதை போட்டுட்டீங்களா.
ஆடு நாய் கதை அருமை, நிரைய சிந்திக்க வைகிறது
நன்றி

alaguraj
06-09-2007, 07:57 AM
நன்றி வாத்தியாரே...தொடர்ந்து கொடுக்க முயற்ச்சிக்கிறேன்..

alaguraj
06-09-2007, 01:56 PM
ஒரு ஆசிரமத்தில் நான்கு இளம் துறவிகள் மாலையில் தியான பயிற்சி செய்து வந்தனர்.
நேரம் ஆக ஆக இருள் சூழ ஆரம்பித்தது. ஒரு துறவி எழுந்து ஒரு விளக்கை எடுத்து மத்தியில் வைத்து அதன் வெளிச்சத்தில தொடர்ந்தது தியானம் செய்யலம் என கருதி அவ்வாறே செய்தார்.

சிறிது நேரம் கழித்து சற்று வேகமாக வீசிய காற்றில் விளக்கு அணைந்து விடுவது போல் தோன்ற..

முதல் துறவி சொன்னார்: அச்சச்சோ.... அணைந்திடும் போல இருக்கே...

பதிலுக்கு இரண்டாம் துறவி: முட்டாளே தியானம் செய்யும் போது நாம் பேசக்கூடாது!

உடனே மூன்றாம் துறவி: அட பைத்தியங்களா... பேசக்கூடாது என்று பேசுகிறீர்களே...

மௌனமாய் சிரித்த நான்காம் துறவி சொன்னார்: நான் தான் கடைசிவரை பேசவே இல்லை.