PDA

View Full Version : இரு தாய்கள்

ஆதவா
29-08-2007, 06:48 AM
என் தாயொரு தடாகத் தாமரை
வாழ்விலே முற்றிலும் மூழ்காதவள்
மூழ்கினும் தன்மை மாறாதவள்
எனக்கு உடன் பிறக்க வழியின்றி
உயிர் சுமக்கா
உடலைக் கொண்டவள்

பால் சுரக்கா முலைகளும்
வரி படறா வயிறும்
வாழ்வோவியத்தின்
வேண்டாத வர்ணங்களாய்
எண்ணிக் கொண்டிருப்பவள்

அன்றொருநாள்
கட்டுக் கடங்காத உண்மை
வெடித்த போது உணர்ந்துகொண்டேன்

எனக்கு மட்டும் இருதாய்கள்

கைபடாத பத்தினியாய்
பெற்றெடுத்தவளும்
எனக்காகவே வாழும்
வளர்த்தெடுத்தவளும்.

சிவா.ஜி
29-08-2007, 06:55 AM
உண்மைத்தாயின் கரு சுமந்த வாடகைத்தாயா ஆதவா...இரவல் கருவறையில் உதித்த உயிரா...எப்படியாயினும் மிகப் புண்ணியம் செய்தவன் இந்த கவிதையின் நாயகன்.இரண்டு காமதேனுக்களின் கன்றாய் வளர்ந்த யோகக்காரன்.அள்ள அள்ளக் குறையாத அன்பு நிறந்த அமுதசுரபிகள் இரண்டைப்பெறக்கிடைத்த பேரதிர்ஷ்டக்காரன். மனம்நிறந்த வாழ்த்துக்கள் ஆதவா...

ஆதவா
29-08-2007, 07:03 AM

ஆம் சிவா.ஜி அவர்களே! நம்மைப் பொறுத்தவரையிலும் மகனை யோகக் காரன் என்று சொல்லலாம்.. தாயை?? அவளின் மனது படும் வேதனை??

நன்றிகள் சிவா அவர்களே!

பூமகள்
29-08-2007, 07:39 AM
அருமையான கருத்துக் கவி... வாடகைத்தாய்கள் பெருகி வரும் இக்கால கட்டத்தின் சிறப்பான பிரதிபளிப்பு..
வாழ்த்துக்கள்..
மகன் யோகக்காரரே, அன்பு கொடுக்க இரு தாய்கள் கிடைத்திருக்கிறது. ஆனால் அந்த பெற்றெடுத்த தாயின் நிலையும் வளர்த்த தாயின் நிலையும் வேதனைக்குரியதே...
பாராட்டுக்கள் அன்புத் தம்பி ஆதவா.:nature-smiley-008:

ஆதவா
29-08-2007, 07:44 AM

மிகவும் நன்றிங்க அக்கா.. இதை முதலில் வாடகைத் தாயின் பார்வையில் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். யாராவது அப்படி எழுதியிருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டு மகனின் பார்வையில் எழுதினேன்... இங்கே பாதிக்கப்பட்டவர்கள் மூவருமே!!!

பென்ஸ்
29-08-2007, 08:40 AM
சபாஷ் ஆதவா....

மிக மிக சென்சிட்டிவான விசயத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்...
துவக்த்தையும் முடிவையும் வாசிப்பவர்களுக்கே விட்டுவிட்டு விசயத்தை மட்டும் சுருக்கமாக ... கச்சிதமாக ...
மிக முதிந்த கவிதை இது ....
விமர்சனம் என்ற பெயரில் கவிதையை கற்பழிக்க விரும்பவில்லை...

வாழ்த்துகள்...

ஆதவா
29-08-2007, 08:48 AM

வாவ்... நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி,,, சுருக்கமாகவும் நேர்த்தியாகவும் பதிவு போட்டு அசத்துறீங்க.... நன்றிகள் கோடி....

இலக்கியன்
29-08-2007, 04:49 PM
அழகான கவிதை படைத்தீர்கள் ஆதவா பாராட்டுக்கள்

ஆதவா
29-08-2007, 06:35 PM
அழகான கவிதை படைத்தீர்கள் ஆதவா பாராட்டுக்கள்

நன்றிங்க இலக்கியன்....

இனியவள்
29-08-2007, 06:37 PM
கவிதை அழகு ஆதவா வாழ்த்துக்கள் :aktion033:

இளசு
29-08-2007, 06:45 PM
அறிவியல் புகுத்தும் கண்ணாமூச்சி விளையாட்டால்
வாழ்வில் சில புதிதான புதிர்கள்..

அவற்றில் ஒன்றை நம் ஆதவா
செதுக்கிய சிறப்பு அருமை!

ஆதவா
29-08-2007, 06:48 PM
மிகவும் நன்றி இனியவள் மற்றும் இளசு அண்ணா...

அக்னி
07-09-2007, 05:45 PM
பெற்றவள் வளர்க்கவில்லை...
வளர்க்காத வேதனை...
வளர்த்தவள் பெறவில்லை...
பெறாத வேதனை...
இருவர் வேதனைகளும் கண்டு,
பிறந்தவனுக்குப் பெரும் வேதனை...

இன்னொருவகையில்...
பெற்றவளுக்கு பெற்ற பாசம்...
வளர்த்தவளுக்கு வளர்த்த பாசம்...
இருவர் பாசங்களும் கண்டு,
பிறந்தவனுக்கு பெரும் பாசம்...

பாராட்டுக்கள் ஆதவா...

அமரன்
11-09-2007, 12:25 PM
மாதுளைக்கனியின் தடித்த சுவரை உடைத்து உட்புகுந்தால் மெல்லிய தோல்களாலான கதவுடைய அறைகளின் சுவர்ப்பூச்சுக்களில் ரசம் மிகுந்த மாதுளை முத்துக்கள் அமிழ்ந்ந்திருக்கும். ஒவ்வொன்றாகத் தேடி தேடித் சுவைப்பது அலாதியான சுகம். எடுக்க எடுக்க குறையாதோ என ஒரு கட்டத்தில் தோன்றும். ஆதவாவின் கவிதைகள் மாதுளை ரகம். அவற்றை சல்லடைபோட்டு சுவைப்பதில் அலாதிப்பிரியம் எனக்கு. இங்கேயும் அதே பிரியத்துடனும் ஆர்வத்துடனும் வந்தேன். பிரியத்தில் ஏமாற்றிய ஆதவா சுவையில் ஏமாற்றவில்லை.

வாடகைத்தாய் அறிவியலின் ஒரு பக்க வலியை உணர்த்தியது விக்ரம் சவுந்தர்ஜா இணைவில் வந்த சித்திரம். இங்கே இன்னொரு பக்க வலி. வலியின் வகை வாசகன் முடிவுக்கு.

வாடைகைத்தாயை துகிலுரிக்க விழைந்தால் பதிவு இன்னொரு பாரதமாகிவிடும். அதனால் நானும் தவிர்க்கின்றேன்.

ஒருதாய் மக்கள் நாமென்போம் -பழையகவி
இருதாய் மகவு நானென்பேன் -புதியகவி
ஆதவா....படைப்பது புதுமைக்கவி.

aren
12-09-2007, 11:21 AM
அருமையான கவிதை வரிகள் ஆதவன். பெரியவர்கள் பலர் அழகாக விமர்சனம் எழுதிய இந்த கவிதைக்கு நான் எதை எழுதுகிறது.

பாராட்டுக்கள் ஆதவன்.

ஷீ-நிசி
13-09-2007, 04:51 AM
பால் சுரக்கா முலைகளும்
வரி படறா வயிறும்
வாழ்வோவியத்தின்
வேண்டாத வர்ணங்களாய்
எண்ணிக் கொண்டிருப்பவள்

இந்த வரிகள் கவிதையின் தரத்தை எங்கோ உயர்த்திவிட்டன..

பால் சுரக்கா முலைகளும்
வரி படறா வயிறும்

செம அழகு.. வாழ்த்துக்கள் ஆதவா..

lolluvathiyar
14-09-2007, 12:04 PM
கவிதையை புரிந்து கொள்ளு அளவுக்கு அடியேனுக்கு அறிவு குறைவு, ஆனால் பின்னூட்டங்களை படித்து தான் புரிந்து கொண்டேன்.
கிரேட்டு ஆதவா

சூரியன்
14-09-2007, 12:08 PM
கவிதையின் கரு அற்புதம்,
வாழ்த்துக்கள் ஆதவா..

ஆதவா
18-09-2007, 11:23 AM
மாதுளைக்கனியின் தடித்த சுவரை உடைத்து உட்புகுந்தால் மெல்லிய தோல்களாலான கதவுடைய அறைகளின் சுவர்ப்பூச்சுக்களில் ரசம் மிகுந்த மாதுளை முத்துக்கள் அமிழ்ந்ந்திருக்கும். ஒவ்வொன்றாகத் தேடி தேடித் சுவைப்பது அலாதியான சுகம். எடுக்க எடுக்க குறையாதோ என ஒரு கட்டத்தில் தோன்றும். ஆதவாவின் கவிதைகள் மாதுளை ரகம். அவற்றை சல்லடைபோட்டு சுவைப்பதில் அலாதிப்பிரியம் எனக்கு. இங்கேயும் அதே பிரியத்துடனும் ஆர்வத்துடனும் வந்தேன். பிரியத்தில் ஏமாற்றிய ஆதவா சுவையில் ஏமாற்றவில்லை.

வாடகைத்தாய் அறிவியலின் ஒரு பக்க வலியை உணர்த்தியது விக்ரம் சவுந்தர்ஜா இணைவில் வந்த சித்திரம். இங்கே இன்னொரு பக்க வலி. வலியின் வகை வாசகன் முடிவுக்கு.

வாடைகைத்தாயை துகிலுரிக்க விழைந்தால் பதிவு இன்னொரு பாரதமாகிவிடும். அதனால் நானும் தவிர்க்கின்றேன்.

ஒருதாய் மக்கள் நாமென்போம் -பழையகவி
இருதாய் மகவு நானென்பேன் -புதியகவி
ஆதவா....படைப்பது புதுமைக்கவி.

அமரன்... வாயடைத்து நிற்கிறேன் வரிகளைக் கண்டு.... இன்னும் தரமாக கொடுத்திருக்கலாமோ என்று எத்தனிக்கிறது மனம்..... அதைவிட அடுத்த கவிதை எனக்குள் இருக்கும் தரத்தை உயர்த்தச் சொல்லுகிறது......

பின்னூட்ட விளைவுகள்....

ஆதவா
18-09-2007, 11:25 AM
அருமையான கவிதை வரிகள் ஆதவன். பெரியவர்கள் பலர் அழகாக விமர்சனம் எழுதிய இந்த கவிதைக்கு நான் எதை எழுதுகிறது.

பாராட்டுக்கள் ஆதவன்.

நன்றிங்க ஆரென் அண்ணா... நீங்களே இப்படி சொன்னால் பிறகு நாங்களெல்லாம் எப்படி கவிதை எழுதுவது..... உங்கள் கருத்தை அறிய ஆவல்.....

இந்த வரிகள் கவிதையின் தரத்தை எங்கோ உயர்த்திவிட்டன..

பால் சுரக்கா முலைகளும்
வரி படறா வயிறும்

செம அழகு.. வாழ்த்துக்கள் ஆதவா..

நன்றிங்க ஷீ-.. நமக்குள் ஒத்த அலைவரிசை.... எனக்கும் அந்த வரிகள் மிக பிடிக்கும்.... தானாக அமைந்த வரிகள் அவை..

கவிதையை புரிந்து கொள்ளு அளவுக்கு அடியேனுக்கு அறிவு குறைவு, ஆனால் பின்னூட்டங்களை படித்து தான் புரிந்து கொண்டேன்.
கிரேட்டு ஆதவா

வாத்தியாரே! இந்த மாதிரி ஏதேனும் விவாதம் நடந்தால் நீங்கள் தூள் பரத்துவீர்களே!! நன்றிங்க வாத்தியாரே!!1