PDA

View Full Version : காந்தவிழிகள்

சுகந்தப்ரீதன்
29-08-2007, 04:16 AM
அருகருகே இருந்தும்
ஒட்டிக் கொள்ளாமல்
எட்டியிருக்கும் என்
விழிகளை ஈர்த்து
எத்தனை அழகாய்
மெய்பிக்கின்றன...
காந்த விதிகளை
இவளின் காந்தவிழிகள்!

இலக்கியன்
30-08-2007, 09:26 AM
காந்த விதிகளுடன் காதல் கவியா வாழ்த்துக்கள்

சுகந்தப்ரீதன்
30-08-2007, 09:29 AM
காந்த விதிகளுடன் காதல் கவியா வாழ்த்துக்கள்

மிக்க நன்றி இலக்கியரே...!

இனியவள்
30-08-2007, 09:39 AM
காந்த விழிகள்
கவர்ந்து சென்றன
இதயத்தை நிலாச்சாரலாய்

வாழ்த்துக்கள் சுகந்

மனோஜ்
30-08-2007, 09:56 AM
காத்தம் என்றும் ஈர்க்கும்
சிறப்பான கவி நன்றி

kampan
30-08-2007, 10:02 AM
காந்த விதிகளை தன்
சொந்த வரிகளால்
சுருக்கிய கவிதை
நன்றாகவே இருக்கிறது.

Narathar
30-08-2007, 10:08 AM
உங்கள் கண்களில் சிறிது இரும்புத்துகள்களை சேர்த்துக்கொள்ளுங்கள்
காந்தவிழி தானாகவே உங்கள் கண்கலோடு வந்து ஒட்டிக்கொள்ளும்

நாராயணா!!!!!

kampan
30-08-2007, 10:25 AM
உங்கள் கண்களில் சிறிது இரும்புத்துகள்களை சேர்த்துக்கொள்ளுங்கள்
காந்தவிழி தானாகவே உங்கள் கண்கலோடு வந்து ஒட்டிக்கொள்ளும்

நாராயணா!!!!!

என்ன நாரதரே நீங்கள் உங்கள் நாக்கில் ஆணிகளையா குத்தியிருக்கிறீர்?

சுகந்தப்ரீதன்
30-08-2007, 10:35 AM
காந்த விழிகள்
கவர்ந்து சென்றன
இதயத்தை நிலாச்சாரலாய்

வாழ்த்துக்கள் சுகந்

நன்றி இனியா!

சுகந்தப்ரீதன்
30-08-2007, 10:36 AM
காத்தம் என்றும் ஈர்க்கும்
சிறப்பான கவி நன்றி

நன்றி நண்பரே..!

சுகந்தப்ரீதன்
30-08-2007, 10:37 AM
காந்த விதிகளை தன்
சொந்த வரிகளால்
சுருக்கிய கவிதை
நன்றாகவே இருக்கிறது.

கம்பனை விட சின்னவந்தான் நான் ....உண்மைதானே நண்பரே?!
எனது நன்றிகள்!

இலக்கியன்
30-08-2007, 10:38 AM
உங்கள் கண்களில் சிறிது இரும்புத்துகள்களை சேர்த்துக்கொள்ளுங்கள்
காந்தவிழி தானாகவே உங்கள் கண்கலோடு வந்து ஒட்டிக்கொள்ளும்

நாராயணா!!!!!

நல்லதை சொல்லி கொடுக்கிறீர்கள் நாரதரே:sport-smiley-019:

சுகந்தப்ரீதன்
30-08-2007, 10:38 AM
உங்கள் கண்களில் சிறிது இரும்புத்துகள்களை சேர்த்துக்கொள்ளுங்கள்
காந்தவிழி தானாகவே உங்கள் கண்கலோடு வந்து ஒட்டிக்கொள்ளும்

நாராயணா!!!!!

நன்றாக வேலை செய்கிறார்...நம்ப நா ரதர்?!

puppy
30-08-2007, 10:41 AM
இப்படி கவிதை எழுதி காந்த விதி பற்றி பாடம் எடுத்து இருந்தா நானும் பெரிய விஞ்ஞானி ஆகி இருப்பேன்னு பூ சொல்லிட்டு இருக்காரு....அவரு இன்னும் பாண்டில தான் இருக்காரா மணியா ?

சுகந்தப்ரீதன்
30-08-2007, 01:37 PM
இப்படி கவிதை எழுதி காந்த விதி பற்றி பாடம் எடுத்து இருந்தா நானும் பெரிய விஞ்ஞானி ஆகி இருப்பேன்னு பூ சொல்லிட்டு இருக்காரு....அவரு இன்னும் பாண்டில தான் இருக்காரா மணியா ?

யாரை சொல்லுறிங்க என்ன சொல்லுறிங்கன்னு ஒன்னுமே புரியல பப்பி...

வசீகரன்
30-08-2007, 01:50 PM
சிறந்த உரைநடை ஊற்று கவி நண்பரே....!

வசீகரன்

சுகந்தப்ரீதன்
01-09-2007, 07:16 AM
சிறந்த உரைநடை ஊற்று கவி நண்பரே....!

வசீகரன்

மிக்க நன்றி நண்பா...!

ஓவியா
02-09-2007, 01:44 AM
அருகருகே இருந்தும்
ஒட்டிக் கொள்ளாமல்
எட்டியிருக்கும் என்
விழிகளை ஈர்த்து
எத்தனை அழகாய்
மெய்பிக்கின்றன...
காந்த விதிகளை
இவளின் காந்தவிழிகள்!

சந்தோசமக அனுபவிக்கவும். :icon_08:

அழகிய வரிகள், காந்தமாய் எங்களையும் ஈர்க்கின்றன. நன்றியும் பாராட்டுக்களும்.

சுகந்தப்ரீதன்
02-09-2007, 04:10 AM
சந்தோசமக அனுபவிக்கவும். :icon_08:

அழகிய வரிகள், காந்தமாய் எங்களையும் ஈர்க்கின்றன. நன்றியும் பாராட்டுக்களும்.

மிக்க நன்றி அக்கா...!

அமரன்
13-09-2007, 02:37 PM
அருமையான சிந்தனை...

பிரமனின் படைப்பு விதிகள்
பிரமிப்பை தருவன...
கவிஞனும் பிரம்மனே

விரற்கிடை தூரத்திலிருந்தும்
பகைமை பாராட்டும் விழிகள்
எட்டி இருக்கும் விழிகளுடன்
ஒட்டி உறவாட ஒன்றிணைவது....
விஞ்ஞான விதியா
பருவத்தின் சதியா....!

எதிலும் ஒரு ஈர்ப்பு இருந்தால்
ஒன்றிணைவு ஏற்படுகிறது என்ற
அருமருந்தன்ன தத்துவம் சொன்ன
சுகந்தனுக்கு பாராட்டுக்கள்..!

தாமரை
13-09-2007, 02:59 PM
அருகருகே இருந்தும்
ஒட்டிக் கொள்ளாமல்
எட்டியிருக்கும் என்
விழிகளை ஈர்த்து
எத்தனை அழகாய்
மெய்பிக்கின்றன...
காந்த விதிகளை
இவளின் காந்தவிழிகள்!

அய்யா! பொண்ணுக்கு மாறுகண்
இரு கருவிழிகளும் இரண்டு கடைசியில் இருக்கும்கறதை.. இப்படி வஞ்சப்புகழ்ச்சி அணி போட்டு தாக்கறீங்களே

(0 ) ( 0)

அம்மணியோட கண்ண்ணு இப்படியா இருக்கு.. அதாவது கருவிழிகள் அந்தக் கடைசியிலும், இந்தக் கடைசியிலும்..

காந்தம் ஒத்த துருவங்களை விலக்கும்..
அது போல அவளது இரு கண்களும் விலகி இருந்தன..

அப்படின்னா அந்தக் கடைசியில ஒரு கண்ணு..
இந்தக் கடைசியில ஒரு கண்ணு..
அந்தக் கருவிழி அந்தக் கடைசியில ..
இந்தக் கருவிழி இந்தக் கடைசியில

அய்யா! விஷயம் தெரிஞ்சது.. உம்ம கண்ணு என்னாகும் தெரியுமில்ல... :lachen001::lachen001::lachen001:

அமரன்
13-09-2007, 03:05 PM
அண்ணா சுகந்தனுக்கு கண் வீங்க வைக்க திட்டம் போட்டு விட்டீர்களா..

கரு விழிகள் காந்த முனை என்றால்
வெண்புலம் காந்தப்புலம் தானே...
அதுமட்டும் ஏன் ஒன்றை ஒன்று தள்ளவில்லை.

தாமரை
13-09-2007, 03:12 PM
அண்ணா சுகந்தனுக்கு கண் வீங்க வைக்க திட்டம் போட்டு விட்டீர்களா..

கரு விழிகள் காந்த முனை என்றால்
வெண்புலம் காந்தப்புலம் தானே...
அதுமட்டும் ஏன் ஒன்றை ஒன்று தள்ளவில்லை.

அப்படின்னா அந்தக் கடைசியில ஒரு கண்ணு..
இந்தக் கடைசியில ஒரு கண்ணு..
அந்தக் கருவிழி அந்தக் கடைசியில ..
இந்தக் கருவிழி இந்தக் கடைசியில

அம்மணி வலது பக்கம் பார்க்கிறாங்களா, இடது பாக்கறாங்களா இல்லை நேராத்தான் பாக்கிறாங்களான்னு ஒண்ணுமே தெரியாது.. அப்படிங்கிறார் கவிஞர்.. ஏதோ என்ன மாதிரி நல்ல மனசு இருக்கறவங்க இந்த மாதிரி அப்பாவி பொண்ணுகளுக்கு உள்ளர்த்ததையும் உள்ள அர்த்தத்தையும் எடுத்துச் சொல்லாட்டா பாவம் பொண்ணுங்க ஏமாந்து போயிருவாங்க இல்லையா?:lachen001::lachen001:

அமரன்
13-09-2007, 03:21 PM
சுற்றிப்பார்க்கும் மின்னல் பார்வைன்னு அர்த்தமில்லாம அர்த்தப்படுத்திடாதீங்கன்னு தெளிவு படுத்தும் (!) உங்களுக்கு மனசு ரொம்ப பெரிசுதாங்க...

தாமரை
13-09-2007, 03:25 PM
சுற்றிப்பார்க்கும் மின்னல் பார்வைன்னு அர்த்தமில்லாம அர்த்தப்படுத்திடாதீங்கன்னு தெளிவு படுத்தும் (!) உங்களுக்கு மனசு ரொம்ப பெரிசுதாங்க...

மின்னல் உண்டாகணும்னா இருவேறு மின் புலங்கள் அருகருகே இருந்து கட்டுப்படுத்த முடியாமல் அந்த எதி மின்சக்தி நேர் மின்சக்தியை நோக்கி பாயனும்.

காந்தப் புலத்தை கண்டக்டர் (மின் கடத்தி) வெட்டினால் (பார்த்து கண்ணடித்தால்) மின்சாரம் (காதல்) பாயலாம்..

அப்ப சுகந்தப் பிரீதன் கண்டக்டர்.. அப்ப அவர் ஒரு ரஜினி.. அங்ஙன இருக்கே காந்தம் அப்படீங்கறீங்களா?

சுகந்தப்ரீதன்
15-09-2007, 09:48 AM

என்ன அண்ணா விடமாட்டீங்க..போலிருக்கு..குறிபார்த்து என்னையே தாக்குறிங்க....வேண்டாமண்ணா...நான் சொன்னது கண்களைதான்..நீங்கள் ஏன் கருவிழியையும் வெண்படலத்தையும் வேறுபடுத்துகிறீர்கள்....இரண்டும் இருந்தால்தான் பார்வை....அதைதான் சொன்னேன்....அத்தனை அருகிலிருந்தும் ஒட்டிக்கொள்ளாமல் என்னை பிடித்து இழுப்பதால் இப்படி எழுதினேன்.ஏதாவது புரிந்தால் சரி...நன்றி நண்பரே..!

சுகந்தப்ரீதன்
15-09-2007, 09:50 AM
சுற்றிப்பார்க்கும் மின்னல் பார்வைன்னு அர்த்தமில்லாம அர்த்தப்படுத்திடாதீங்கன்னு தெளிவு படுத்தும் (!) உங்களுக்கு மனசு ரொம்ப பெரிசுதாங்க...

மிக்க நன்றி அமர் அண்ணா...!நான் கொஞ்சம் சுத்தபோய்ட்டேன்...எனக்காக் தாமரை செல்வரிடம் நீங்கள் போராடியிக்கிறீர்கள்...இந்த தம்பிமேல இத்தனை பாசமா...?மிக்க சந்தோசம் அண்ணா..!

பென்ஸ்
20-09-2007, 05:46 AM
காந்த விதியை மீறவில்லை, அதனால்தான் உன் கண்களை அவள் இளுத்து கொண்டிருக்கிறாள்...

நல்ல சிந்தனை... அருமை...

சுகந்தபிரீதன், தாமரை ஒரு நல்ல சிந்தனையாளர்... அவர் உங்கள் கவிதைக்கு மாற்று கருத்துகள் சொல்லுவார், உங்கள் கவிதையை ஆழதோன்டி அதில் ஒரு உள் கருத்தை கொண்டுவந்து அதை "இப்படியும் பார்க்கலாமே..?" என்று சொல்லுவார்... அவர் உங்கள் கவிதையை விமர்சிப்பது உங்களுக்கு பெருமையே அன்றி, உங்களை குறி வைப்பதாக நினைக்க வேண்டாம்.....

சுகந்தப்ரீதன்
23-09-2007, 09:21 AM

தெரியும் நண்பரே... தாமரை செல்வரின் சொல்வளனும் தமிழ் வளமும் .. உங்களை போன்ற பெரியவர்களிடம் குட்டுபட்டால்தான் தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்கமுடியும்... உங்களின் தாக்குதல்தான் எனக்கு
கிடைக்கும் பாராட்டுக்கள் நண்பரே... தொடரட்டும் உங்களின் தாக்குதல்... தோயாமல் தோழமையுடன்..!

பூமகள்
23-09-2007, 09:56 AM
இயற்பியலினை இத்தனை அழகாய் விளக்கியதா அவளின் இமையோரப் பார்வை????!!:ohmy: :icon_wacko:
யார் அந்த காந்தக் கயல்விழியுடையாள் சகோதரர் ப்ரீதன்???:icon_wink1:
எனக்கு மட்டும் சொல்லுங்களேன்.....!! :smilie_abcfra::icon_rollout:
முன்னமே தெரிந்திருந்தால் எனக்கு இயற்பியலில் மதிப்பெண் கூட வாங்கியிருக்க அப்படி போராட வேண்டி இருந்திருக்காதே.....!:huh::cool:

நல்ல கவிதை.. வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்..:thumbsup: ப்ரீதன்.:aktion033:

சுகந்தப்ரீதன்
23-09-2007, 12:33 PM

நீங்க வேற... நானும் இயற்பியலில் கம்மியான மார்க்குதான் சகோதரி... அவளின் உதவியால் ஏதோ கொஞ்சம் எனக்கும் அறிவியல் அறிவு இருக்கு.. அவ்வளவுதான்... யாருக்கு தெரியும் அவள் எங்கிருக்கிறாள் என்று... எப்பவோ என்னை ஈர்த்த கதை அது... சொல்ல மறந்த கதையை
இங்கே சொல்லியிருக்கேன் ச*ரியா...? உங்க*ளின் வாழ்த்துக்கு என*து ந*ன்றி ச*கோத*ரி...!