PDA

View Full Version : அவளுக்கு பிறந்த நாள்!lenram80
29-08-2007, 02:23 AM
மேகங்களே!
இன்று மட்டும் நீங்கள் ஏன்
தண்ணீருக்குப் பதிலாக பூ மழை பொழிகிறீர்கள்?

குயில்களே!
என்ன ஆயிற்று உங்களுக்கு?
'கூ...கூ...'விற்கு பதிலாக அவளின் பெயரை சொல்லி கூவுகிறீர்களே?

நிலவே!
உன் பள்ளங்கள் ஔவை பாட்டி போல் அல்லவா தெரியும்!
என்ன இன்றைக்கு அவள் முகம் போல தெரிகிறது?

ஆகாஷ்தவானி! சற்று முன் கிடைத்த செய்தி!
சீனப் பெருஞ்சுவர் உருவம் மாறி
ஒரு பெண்ணின் பெயரில் வரும் தமிழ் எழுத்துக்களாக மாறிவிட்டதாம்!

அட என்னடா இது?
வானொலியில் ஆரம்பித்து வாசல் கதவின் 'கிரிச்' சத்தம் வரை
அலாரத்தில் ஆரம்பித்து ஆயுதங்கள் வரை
சிட்டுக் குருவியில் ஆரம்பித்து சிம்ஃபொனி வரை
வேடங்தாங்கல் ஆரம்பித்து விமானம் வரை
ஊர்வன, பறப்பன, நடப்பனவில் ஆரம்பித்து
ஏன் அவளின் பெயரையே உச்சரிக்கின்றன?

ஓ........!
இன்று என் தேவதைக்குப் பிறந்த நாளோ!

அங்கே யார் வேகமாக என்னை கடந்து போவது?
தமிழ் தாயா அது? கொஞ்சம் பொறுங்கள்!
என்னுடைய வாழ்த்துக்களையும் அவளிடம் சேர்த்து விடுங்கள்!
வேண்டாம்! வேண்டாம்!
நான் கொடுத்து அனுப்பும் வாழ்த்துக்களையும்
'உங்களுடையது' என்று நீங்களே மாற்றி சொன்னாலும் சொல்லிவிடுவீர்கள்!
நீங்கள் போங்கள்! நானே வருகிறேன்!

மரங்களே!
நீங்கள் மட்டும் ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்?
என்ன?
நீங்கள் அவளுக்காக பூத்து வைத்த பூக்களைத் தான்
இரவோடு இரவாக அந்த மேகம் திருடி விட்டதா?
அதற்காக அமைதியாகவா நிற்பது?
இயற்கைகள் அனைத்தும் ஏதாவது ஒன்றின் மூலம்
வாழ்த்துக்கள் தூவிக்கொண்டிருக்கும் போது
நீங்கள் மட்டும் இப்படி 'மரமாக' சும்மா நின்றால் எப்படி?
கொஞ்சம் உங்கள் மூளைகளை சொறியுங்கள்! தலைகளை ஆட்டுங்கள்!
அதன் மூலம் உங்கள் கிளைகளை ஆட்டுங்கள்!
தென்றலை கையில் வைத்துக் கொண்டு, பிறகென்ன கவலை?
விடுங்கள்!
அதில் உங்கள் வாசங்களையும், வாழ்த்துக்களையும் கலந்து விடுங்கள்!
தென்றலை விடவா வாழ்த்து சொல்ல
வேறொன்று உள்ளது இந்த உலகத்தில்?

கடலே!
நீங்கள் பொங்கி வாழ்த்து சொல்லும் அவசியம் தேவையில்லை!
முத்து உள்ள சின்ன சிப்பியை என்னிடம் கொடுங்கள்!
உங்களின் பரிசாக நானே அவளிடம் அதை சேர்த்து விடுகிறேன்!
இதோ பாருங்கள்! என் கையில் ஒரு பளிங்குக் கல்!
அவளை வாழ்த்த தாஜ்மஹால் கொடுத்து அனுப்பியது!

இந்த உலகத்துக்குத் திருவிழா!
உனக்கு வாழ்த்துச் சொல்லும் பெருவிழா!

வா வெளியே!
உன் வீட்டுக்கு எதிரே
குவிந்து கிடக்கும் வாழ்த்து மடல்களில்
என்னுடைய இந்த வாழ்த்தும் உன் கைக்கு எட்டட்டும்!

aren
29-08-2007, 02:29 AM
உங்களுடையவளின் பிறந்தநாளை குதூகூலத்துடன் கொண்டாடும் அழகே தனி. பாராட்டுக்கள். கவிதை அருமையாக இருக்கிறது. இன்னும் எழுதுங்கள், படித்து சந்தோஷப்படுகிறோம்.

நன்றி வணக்கம்
ஆரென்

அக்னி
29-08-2007, 02:56 AM
நெடிய கவிதைகளைக் கண்டால், ஒரு வித பயம் வருவதுண்டு...
அதையும் தாண்டி, ஒன்றிக்க வைக்கின்றது, உங்கள் கவிதைகள்...

வார்த்தைகளின் சொல்லாடல், வித்தியாசமான, புதுமையான உவமானங்கள் என்று,
புதுமைக் கவிகள் உங்களிடமிருந்து பிரசவிக்கப்படுகின்றன...

உண்மையாக, உணர்கின்றேன்...
உங்கள் கவிதையில், பிறந்தநாள் இன்பத்தை...

உண்மையான பிறந்தநாள் என்றால், எனது வாழ்த்துக்களும் சேரட்டும்...
அன்றேல், கற்பனையாயின், எனது பாராட்டுக்கள் சேரட்டும்...

இளசு
29-08-2007, 08:23 PM
உலகில் ஒருவரையும்/ஒன்றையும் விடவில்லை லெனின்!
ஒரு மகாக்கூட்டணி அமைத்துவிட்டதால் − வெற்றி நிச்சயம்!

பல வருடங்களுக்குமுன் உங்கள் நட்பும், கவிதைதானமும் கிடைத்திருந்தால்
என ஏக்கப்பெருமூச்சு வருகிறது..

வாழ்த்துகள்!

சிவா.ஜி
30-08-2007, 04:35 AM
மனதை வருடும் வரிகளில் ஒரு மனம் கவர்ந்த தேவதைக்கு வாழ்த்துக்கள்.
மிகச்சிறப்பான உவமைகளோடு அழகான வடிவத்தில் அமைந்த வாழ்த்துக்கவிதை.பாராட்டுக்கள் லெனின்.

இலக்கியன்
30-08-2007, 09:21 AM
காதல் குயிலுக்கு கவிபாடிய உங்களுக்கு வாழ்த்துக்கள்

lenram80
30-08-2007, 11:43 PM
மிக்க நன்றி ஆரென், அக்னி, இளசு, சிவாஜி & இலக்கியன