PDA

View Full Version : ஏனிந்த முரண்பாடு!!!



aren
29-08-2007, 02:06 AM
வைத்திடாதே
என்னை கடனாளியாக
வைத்திடாதே!!!
உன் மனதை
எனக்குக் கொடுத்துவிட்டு
என் மனதை
நீ எடுக்குமுன்
இன்னொருத்தனுடன்
திருமணம்!!!

உன் மனது
என்னிடம்
என் மனதும்
என்னிடமே
ஏனிந்த
முரண்பாடு!!!!

செய்வதறியாமல்
நான்!!!!!

சிவா.ஜி
29-08-2007, 04:32 AM
அவளிடமிருந்து எடுத்த மனதை திருப்பிதர விருப்பமில்லாமல் தன்னுடனே வைத்துக்கொண்ட காதலனுக்குத்தெரியவில்லையா....மனமில்லாமல்தான் அவள் மணம்புரிய சம்மதித்தாளென்று..வாழ்த்துக்கள் ஆரென்

மாதவர்
29-08-2007, 04:43 AM
இப்பொழுது வட்டி வேறு அதிகம் நண்பரே

இலக்கியன்
29-08-2007, 04:58 PM
இப்பொழுது வட்டி வேறு அதிகம் நண்பரே

ஆம் மாதவா

அரென் வாழ்த்துக்கள் உங்கள் கற்பனைக்குதியை விரட்டுங்கள்

இனியவள்
29-08-2007, 05:10 PM
வாழ்த்துக்கள் ஆரென் அண்ணா...

அழகிய முரண்பாடு வலிகளோடு

இளசு
29-08-2007, 08:27 PM
கொடுக்காமல் எடுக்கக்கூடாது
எடுக்காமல் கொடுக்கக்கூடாது..
பண்டமாற்றாய் இல்லாமல்..
ஒன்று மட்டும் மாற்றினால்?

பாராட்டுகள் அன்பின் ஆரென்!

பழைய டயரிகளைப் புரட்டுகிறீர்களா என்ன?????!!!!

aren
30-08-2007, 01:52 AM
அவளிடமிருந்து எடுத்த மனதை திருப்பிதர விருப்பமில்லாமல் தன்னுடனே வைத்துக்கொண்ட காதலனுக்குத்தெரியவில்லையா....மனமில்லாமல்தான் அவள் மணம்புரிய சம்மதித்தாளென்று..வாழ்த்துக்கள் ஆரென்


நன்றி சிவா.ஜி.
அருமையான பின்னூட்டம். நீங்கள் சொல்வது சரிதான்.
நன்றி வணக்கம்
ஆரென்

aren
30-08-2007, 01:53 AM
இப்பொழுது வட்டி வேறு அதிகம் நண்பரே

நன்றி மாதவர். வட்டி அதிகமாக இருந்தாலும் அந்த வட்டியையும் முதலையும் வாங்க வரவேண்டுமே. வருவாளா!!!

நன்றி வணக்கம்
ஆரென்

aren
30-08-2007, 01:55 AM
ஆம் மாதவா

அரென் வாழ்த்துக்கள் உங்கள் கற்பனைக்குதியை விரட்டுங்கள்

நன்றி இலக்கியன்.

என் கற்பனைக்குதிரையை வெளியே அவிழ்த்துத்தான் விடுகிறேன், ஆனால் ஒன்னுமே கிடைக்கமாட்டேங்குதே. என்ன செய்வது. நமக்கு அவ்வளவுதான்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
30-08-2007, 01:57 AM
வாழ்த்துக்கள் ஆரென் அண்ணா...

அழகிய முரண்பாடு வலிகளோடு

நன்றி இனியவள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
30-08-2007, 01:59 AM
கொடுக்காமல் எடுக்கக்கூடாது
எடுக்காமல் கொடுக்கக்கூடாது..
பண்டமாற்றாய் இல்லாமல்..
ஒன்று மட்டும் மாற்றினால்?

பாராட்டுகள் அன்பின் ஆரென்!

பழைய டயரிகளைப் புரட்டுகிறீர்களா என்ன?????!!!!

நன்றி இளசு அவர்களே. ஒன்று மட்டும் மாற்றியதால் வந்த பிரச்சனைதானே இது.

பழைய டயரிகளைப் புரட்டினால் இப்படி இன்னும் பல விஷயங்கள் வந்துவிழும் என்பது நிச்சயம்.

நன்றி வணக்கம்
ஆரென்

puppy
30-08-2007, 02:20 AM
உண்மை கவிதை......இயல்பா சொல்லி இருக்கீங்க...பாராட்டுக்கள்

பப்பி

ஓவியன்
30-08-2007, 02:29 AM
பயனின்றி செய்வது தான் காதலென்று யார் சொன்னது?
என்னிடம் இருந்து எடுத்த இதயத்திற்கு நான் உன்னிதயத்தை உன்னிடமிருந்து எதிர் பார்கின்றேனே................?

அழகான கவிதை அண்ணா, அருமையா இருக்கு.......!!! :icon_clap:

aren
30-08-2007, 02:35 AM
உண்மை கவிதை......இயல்பா சொல்லி இருக்கீங்க...பாராட்டுக்கள்

பப்பி

மோதரக்கையால் குட்டு வாங்கியிருக்கிறேன். நன்றி பப்பி அவர்களே.

ஆத்தா நான் பாஸாயிட்டேன் என்று கத்தவேண்டும் என்று போலிருக்கிறது.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
30-08-2007, 02:37 AM
பயனின்றி செய்வது தான் காதலென்று யார் சொன்னது?
என்னிடம் இருந்து எடுத்த இதயத்திற்கு நான் உன்னிதயத்தை உன்னிடமிருந்து எதிர் பார்கின்றேனே................?

அழகான கவிதை அண்ணா, அருமையா இருக்கு.......!!! :icon_clap:

நன்றி ஓவியன். எல்லாம் நீங்கள் கொடுத்த தைரியத்தில் எழுத ஆரம்பித்தது. நீங்களெல்லாம் படிக்கவேண்டும் என்பது உங்கள் தலையெழுத்து, என்ன செய்வது.

நன்றி வணக்கம்
ஆரென்

மாதவர்
30-08-2007, 02:43 AM
இதயத்தின் வலி இதயம் மட்டுமே அறியும்

aren
30-08-2007, 02:52 AM
இதயத்தின் வலி இதயம் மட்டுமே அறியும்


நன்றி மாதவர். நீங்கள் சொல்வது சரியே.

நன்றி வணக்கம்
ஆரென்

இலக்கியன்
30-08-2007, 10:43 AM
நன்றி இலக்கியன்.

என் கற்பனைக்குதிரையை வெளியே அவிழ்த்துத்தான் விடுகிறேன், ஆனால் ஒன்னுமே கிடைக்கமாட்டேங்குதே. என்ன செய்வது. நமக்கு அவ்வளவுதான்.

நன்றி வணக்கம்
ஆரென்

முயற்சி திருவினையாக்கும்
தொடரட்டும்

பூமகள்
30-08-2007, 10:58 AM
உன் மனதை
எனக்குக் கொடுத்துவிட்டு
என் மனதை
நீ எடுக்குமுன்
இன்னொருத்தனுடன்
திருமணம்!!!

உன் மனது
என்னிடம்
என் மனதும்
என்னிடமே
ஏனிந்த
முரண்பாடு!!!!

செய்வதறியாமல்
நான்!!!!!

அழகான கவி..அருமையான வடித்துவிட்டீர்...!! பாராட்டுக்கள்.....!:nature-smiley-002:
கால தாமதம பெரிய பிரச்சனை காதலில்........! சரியாகச் சொன்னீர்..........:nature-smiley-003:
வாழ்த்துக்கள்.... ஆரன் அண்ணா!

ஆதவா
31-08-2007, 07:58 AM
ஒற்றை வரியில் சொன்னால்,
ஒற்றைக்காதல்.

பிழை நேர்ந்த இடம் ஆணிடம்
முரண் தேடுமிடமோ அந்த மானிடம்.
முரண் நாயகனிடம் இருக்கிறது.
மனம் நாயகனைப் பிரிக்கிறது.

இது ஒரு வித்தியாசனமான பார்வை. காதலை ஏற்றுக்கொள்ளாத சூழ்நிலை,,

நம் மன்றக் கவிஞர் ரிஷிசேது எழுதிய ஒரு கவிதை இங்கே பொருந்துகிறது..

காற்றில் அலையும்
ஒற்றை மைனா
நீயில்லாத நான்
வீணே கழியும் பொழுதுகள்
என்னசெய்ய
முகம்தடவும் கைகள்...


வாழ்த்துக்கள் அண்ணா.

மன்மதன்
04-09-2007, 12:33 PM
இது எப்போ..:icon_ஹ்ம்ம்: பழைய டைரியை புரட்டி இன்னும் கொடுத்திடுங்களேன்...:209::icon_shades:

lolluvathiyar
04-09-2007, 02:52 PM
இது போன்ற கடனாளிகள் நாட்டில் அதிகம் வாழ்கிறார்கள்
வழக்கம்போல இந்த கடனையும் ஏப்பம் விட வேண்டியதுதான்

பென்ஸ்
04-09-2007, 04:13 PM
கொடுக்காமல் எடுக்கக்கூடாது
எடுக்காமல் கொடுக்கக்கூடாது..
பண்டமாற்றாய் இல்லாமல்..
ஒன்று மட்டும் மாற்றினால்?

பாராட்டுகள் அன்பின் ஆரென்!

பழைய டயரிகளைப் புரட்டுகிறீர்களா என்ன?????!!!!

அன்பின் ஆரென்....

இளசு கேட்ட அதே கேள்விகள் தாண் என்னுள்ளும்...

இதயமே இல்லாதவள் என்று இவர்களைதான் சொல்லுவார்களோ????

ஷீ-நிசி
05-09-2007, 06:49 AM
காதலும் முரண்பாடும் பின்னி பிணைந்துதானே காணப்படுகிறது...

தொடருங்கள் ஆரென்!

அக்னி
06-09-2007, 09:25 AM
என்னிடம் வந்த
உனது மனது,
எனது மனதை,
தைக்கும் ஊசியாக...
உன் பிரிவால் கிழிந்துபோன
எனது மனதுக்கு..,
இது இதமாகவே வலிக்கிறது...

பாராட்டுக்கள் ஆரென் அண்ணா...