PDA

View Full Version : தவிப்பு....



ரிஷிசேது
28-08-2007, 06:04 PM
தவிப்பு-1

முற்றிமலர்ந்த
மல்லிகையை
வண்டுதொடுவதை விட
அதை யாரோ
தட்டிப்பறிக்கையில்
மனம் கசக்கும் கண்களை....


தவிப்பு-2

யாரோ என நினைத்து
நீ என்னோடு
Phoneல்
பேசுகையில்
பேர் கேட்கமாட்டாயோ
என தவியாய் தவிக்கும்
என் மனசு...

தவிப்பு-3

தெருவோர
நாய்க்குட்டி
தாய்மடியில்
முட்டிக்கிடக்கையில்
மனமேங்கும்
தாய்தேடி....

தவிப்பு-4

வாசலில்
கிடக்கும் செருப்பு
பிச்சைக்காரரின்
தொடர் கெஞ்சல்
வேண்டுதலறுத்தது மனம்....

தவிப்பு-5

பசியெழுப்பும்
குரலில் குயிலோசை
ரயில்பயண குருட்டுப்பிச்சை
செவிடாய் பிறக்காத நான்
எனக்கும் பசி
செய்வதறியாது
சிதைகிறது மனம்...

தவிப்பு - 6

காற்றில் அலையும்
ஒற்றை மைனா
நீயில்லாத நான்
வீணே கழியும் பொழுதுகள்
என்னசெய்ய
முகம்தடவும் கைகள்...

தவிப்பு-7

நல்ல மழை
கையிலிருக்கும்
குடைதடுக்கிறது
நனையத் துடிக்கும் மனதை...

ஓவியன்
28-08-2007, 06:26 PM
வித்தியாசமான தவிப்புக்கள் ரிஷி!


காற்றில் அலையும்
ஒற்றை மைனா
நீயில்லாத நான்
வீணே கழியும் பொழுதுகள்
என்னசெய்ய
முகம்தடவும் கைகள்...


இந்த வரிகள் என்னை மெய்மறக்க வைத்தன ரிஷி!
தொடருங்கள் உங்கள் தவிப்புக்களின் தடயங்களை..........!

மனோஜ்
28-08-2007, 06:58 PM
ஆழ்மனதில் தவிப்புக்கள்
அழகாய் வந்த கவிதைகள்
அவற்றை எழுதிய உங்களுக்கு என் வாழத்துக்கள்

அக்னி
28-08-2007, 07:00 PM
தவிப்புக்களை கவியாக்கி,
தவிக்கவைத்துவிட்டீர்கள்,
அடுத்த கவி எப்போ என்று....

பாராட்டுக்கள் ரிஷிகேது...

இளசு
28-08-2007, 08:42 PM
தவிப்புகளை சொற்களுக்குள் அடக்க
தவிக்கும் பலரிடையே..
வென்றுவிட்டீர்கள் ரிஷிசேது...

அதிலும் மைனா காட்சித் தவிப்பு மிக அருமை!

பாராட்டுகள்!