PDA

View Full Version : காதலாகி....



ரிஷிசேது
28-08-2007, 05:37 PM
உணவு
உடை
உறையுள்
அப்புறம் நீ
என் அத்தியாவசிய தேவைகள்

*********************

உன்
கையை குத்திய
ரோஜா முள்ளை
சபிக்க மனமில்லை
சமயம் கிடைக்கும் போதெல்லாம்
தடவிக்கொடுப்பேன்
உன் கை தொட்ட சுகம்...


*********************

உன் பெயர் தெரியாவிட்டாலென்ன
நான்
பூக்களையெல்லாம்
பெயர் தெரிந்தா ரசிக்கிறேன்?

*********************

உன்னைப்போலத்தான்
உண்மையைச் சொன்னால்
எனக்கும் என்னைப் பிடிப்பதில்லை

*********************
உனக்குளிருக்கும்
நானும்
எனக்குளிருக்கும்
நீயும்
காதலிக்கிறோம்
நமக்குத் தெரியாமல்

அக்னி
28-08-2007, 05:52 PM
உணவு
உடை
உறையுள்
அப்புறம் நீ
என் அத்தியாவசிய தேவைகள்
நீயே என்னை போஷிக்கின்றாய்...
நீயே என்னை உடுத்துகின்றாய்...
நீயே என்னை தாங்குகின்றாய்...
மற்றவை இன்றேல்,
வாழ்ந்திடுவேன்...
நீ இன்றேல்,
நொடியும் தாங்கமாட்டேன்...



உன்
கையை குத்திய
ரோஜா முள்ளை
சபிக்க மனமில்லை
சமயம் கிடைக்கும் போதெல்லாம்
தடவிக்கொடுப்பேன்
உன் கை தொட்ட சுகம்...
உன், கையைக் குத்திய,
முள்ளை பிடுங்கிவிட்டாய்...
என், மனதைத் துளைத்த
உன்னை இன்னமும் பாதுகாக்கின்றேன்...



உன் பெயர் தெரியாவிட்டாலென்ன
நான்
பூக்களையெல்லாம்
பெயர் தெரிந்தா ரசிக்கிறேன்?

நான் ரசித்த பூக்களெல்லாம்,
எனக்கு நறுமணம் தந்தன...
நீ மட்டும் ஏன் எனக்கு,
வெறும்மனம் காட்டுகின்றாய்..?



உன்னைப்போலத்தான்
உண்மையைச் சொன்னால்
எனக்கும் என்னைப் பிடிப்பதில்லை
என்னைப்போலத்தான் உனக்கும்,
உன்னை மட்டுமே பிடிக்கின்றது...
என்னை மட்டுமே பிடிப்பதில்ல...



உனக்குளிருக்கும்
நானும்
எனக்குளிருக்கும்
நீயும்
காதலிக்கிறோம்
நமக்குத் தெரியாமல்
என்னுள்ளிருக்கும் நானும்,
உன்னுள்ளிருக்கும் நீயும்,
கைகலக்கின்றோம்...
நமக்குள் காதல்
என்று தெரிந்திருந்துமே...

அழகான கவிதைக் கொத்து...
பாராட்டுக்கள் ரிஷிகேது...

சாராகுமார்
28-08-2007, 06:00 PM
இருவரின் காதல் கவிதையும் அருமை.

puppy
28-08-2007, 06:20 PM
நீயே என்னை போஷிக்கின்றாய்...
நீயே என்னை உடுத்துகின்றாய்...
நீயே என்னை தாங்குகின்றாய்...
மற்றவை இன்றேல்,
வாழ்ந்திடுவேன்...
நீ இன்றேல்,
நொடியும் தாங்கமாட்டேன்...


உன், கையைக் குத்திய,
முள்ளை பிடுங்கிவிட்டாய்...
என், மனதைத் துளைத்த
உன்னை இன்னமும் பாதுகாக்கின்றேன்...


நான் ரசித்த பூக்களெல்லாம்,
எனக்கு நறுமணம் தந்தன...
நீ மட்டும் ஏன் எனக்கு,
வெறும்மனம் காட்டுகின்றாய்..?


என்னைப்போலத்தான் உனக்கும்,
உன்னை மட்டுமே பிடிக்கின்றது...
என்னை மட்டுமே பிடிப்பதில்ல...


என்னுள்ளிருக்கும் நானும்,
உன்னுள்ளிருக்கும் நீயும்,
கைகலக்கின்றோம்...
நமக்குள் காதல்
என்று தெரிந்திருந்துமே...

அழகான கவிதைக் கொத்து...
பாராட்டுக்கள் ரிஷிகேது...


ச*பாஷ். பாராட்டுக்க்ள் இருவ*ருக்கும்

அன்புட*ன்
ப*ப்பி

அக்னி
28-08-2007, 07:04 PM
ச*பாஷ். பாராட்டுக்க்ள் இருவ*ருக்கும்

அன்புட*ன்
ப*ப்பி

அரியதோர் வாழ்த்து கிடைக்கப் பெற்றதில் பெருமிதம், சந்தோஷம்... வானளவுக்கு உற்சாகம்...
மிக்க நன்றி!

மனோஜ்
28-08-2007, 07:08 PM
அக்னி ஆழ்மனதை
இனிமையயக வருடிய கவிதை நன்றி ரிஷி

இளசு
28-08-2007, 08:49 PM
ரிஷிசேது மலர் தொடுக்க
அக்னி அதற்கு மணம் கொடுக்க...

பப்பி அவர்கள் வாழ்த்த...

களைகட்டும் கவிதைக் கொத்து!!!

பாராட்டுகள் இருவருக்கும்!

சிவா.ஜி
29-08-2007, 05:10 AM
மெல்லிய மலரிதழ்களால் மனம் வருடும் சுகம்....மாலைத்தென்றல் முகம் உரசும் சிலிர்ப்பு..அழகான காதலை இதமாகச் சொல்லிய ரிஷியும்,அதை இனிமையாய் எதிரொலித்த அக்னியும் அசத்திவிட்டார்கள்.வாழ்த்துக்கள் இருவருக்கும்.

இலக்கியன்
29-08-2007, 04:51 PM
அழகான சிறிய கவிதைகள் மனதைக்கொள்ளை கொண்டன வாழ்த்துக்கள்

இனியவள்
29-08-2007, 05:13 PM
மலருக்கு மலரே மலர் கொடுத்தது போன்ற உணர்வு

வாழ்த்துக்கள் ரிஷி அக்னி இருவருக்கும்

மாதவர்
29-08-2007, 05:29 PM
மலர்களின் வாசம்
எங்களை மெய்மற்க்க செய்கின்றது

ஆதவா
29-08-2007, 06:24 PM
அடடா அருமை... அத்தனையும் மென்மையாக இருக்கிறது...........

நேற்று முழுவதும்
உன் பெயரை நினைக்கவே இல்லை.
ரக்ஷாபந்தனாயிற்றே!
------------------
அணுவைப் பிளந்து
கவிதை படைத்தேன்
நீ அண்டத்தைக் கேட்கிறாய்
------------------
உன் குரல் கேட்டுக் கேட்டே
கரைகிறது
மனமும், பணமும்.
-------------------
அடப்போங்கப்பா..
இப்படி எத்தனையைத்தான் எழுதறது./?? நீங்களே தொடருங்க> நான் வரலை..

அக்னியாரே! ஏன் "அல்லிராணி" வேலை செய்கிறீர்?

ரிஷிசேது
29-08-2007, 07:36 PM
விமர்சித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்