PDA

View Full Version : ஏழை பெண்.

சாராகுமார்
28-08-2007, 02:04 PM
கன்னிகை; அந்தக் காரிகை;
அவளழகைத்
துல்லியமாய் வரைய
இல்லையொரு தூரிகை!

கறையில்லாத
கற்பும் பொற்பும் அமைந்தவள்;
ஒர்
பொண்ணுக்குரிய
நான்கு குணங்களும்
ஒரு சேரச் சமைந்தவள்!

நீள் விழி
நிலம் பார்க்க நடப்பவள்;

தக்க வரன்
தனக்கு வாய்க்க வேண்டுமெனக்
குல தெய்வத்தைக்
கும்பிட்டவாறு கிடப்பவள்!

ஏழை என்பதால்.

சிவா.ஜி
28-08-2007, 02:06 PM
அழகான சொல்லாடலில் அமைந்த சிறப்பான கவிதை.
சில பிழைகளை சொல்லலாமா சாராகுமார்...?

சாராகுமார்
28-08-2007, 02:19 PM
அழகான சொல்லாடலில் அமைந்த சிறப்பான கவிதை.
சில பிழைகளை சொல்லலாமா சாராகுமார்...?

கண்டிப்பாக,உண்மையாக சொல்லாம்.மனதில் தோன்றுவதும்,படிப்பதில் பிடித்ததையும் எழதுவது தானே இது.நன்றி.

அக்னி
28-08-2007, 02:22 PM
ஏறிடும் விழிகளில்
ஏக்கம் நீங்கி
விரக்தி குடியிருக்க...
ஏழை என்பதால்,
வரன் கேட்கும் வரங்களும்,
ஏந்திய கரங்களும்,
பிச்சைத் தட்டாகுதே...

அழகிய கவிதைக்குப் பாராட்டுக்கள்... சாராகுமார்...
எழுத்துப் பிழைகளைக் கவனத்திற்கொள்ளுங்கள்...

சிவா.ஜி
28-08-2007, 02:27 PM
கன்னிகை;அந்தக் காரிகை;
அவளழகைத்
துல்லியமாய் வரைய
இல்லையொரு தூரிகை!

கறையில்லாத
கற்பும் பொற்பும் அமைந்தவள்;
ஒர்
பொண்ணுக்குரிய
ஒர் நான்கு குணங்களும்
ஒரு சேரச் சமைந்தவள்!

நீள் விழி
நிலம் பார்க்க நடப்பவள்;

தக்க வரன்
தனக்கு வாய்க்க வேண்டுமெனக்
குல தெய்வத்தைக்
கும்பிட்டவாறு கிடப்பவள்!

ஏழை என்பதால்.
சில எழுத்துப்பிழைகள் ஒரு தேவைபடாத ஓர்
இவை தவிர்த்து கருவிலோ கவிதையிலோ குறையில்லை சாராகுமார்.வாழ்த்துக்கள்+பாராட்டுக்கள்

சாராகுமார்
28-08-2007, 03:06 PM
நன்றி அக்னி அவர்களே,நன்றி சிவா.ஜி அவர்களே.

பூமகள்
28-08-2007, 04:33 PM
மிக சிறப்பாக ஏக்கம் நிறைந்த ஏழைப் பெண்ணினினையும் அவரது உணர்வையும் சொல்லிவிட்டீர் சாரா.
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.:aktion033:

ஆதவா
29-08-2007, 06:48 PM
கன்னிகை; அந்தக் காரிகை;
அவளழகைத்
துல்லியமாய் வரைய
இல்லையொரு தூரிகை!

கறையில்லாத
கற்பும் பொற்பும் அமைந்தவள்;
ஒர்
பொண்ணுக்குரிய
நான்கு குணங்களும்
ஒரு சேரச் சமைந்தவள்!

ஏழை என்பதால்.

நான்கு எதுவென்று சொல்லுங்களேன்....

ஆணுக்கு ஏதாவது குணங்கள் இருக்கின்றனவா?

ஓவியன்
30-08-2007, 06:34 PM
நான்கு எதுவென்று சொல்லுங்களேன்....

இலக்கியங்கள் கூறும் பெண்களின் நான் வகைக் குணங்களும் இவை தான் ஆதவா!

அச்சம்
மடம்
நாணம்
பயிர்ப்பு

ஓவியன்
30-08-2007, 06:37 PM
கன்னிகை; அந்தக் காரிகை;
அவளழகைத்
துல்லியமாய் வரைய
இல்லையொரு தூரிகை!

தூரிகைகள் இல்லையெனினும்
விரல்களைத் தூரிகைகளாக்கி
மன்ற ஓவியப் பலகையில்
நீங்கள் வரைந்த கவி ஓவியம்
அழகோ அழகு சாராகுமார்!
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...!

சாராகுமார்
30-08-2007, 07:06 PM
தூரிகைகள் இல்லையெனினும்
விரல்களைத் தூரிகைகளாக்கி
மன்ற ஓவியப் பலகையில்
நீங்கள் வரைந்த கவி ஓவியம்
அழகோ அழகு சாராகுமார்!
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...!

நன்றி திரு.ஒவியன் அவர்களே.

அரசன்
31-08-2007, 06:47 AM
உங்கள் கவிதையில் உள்ள சொற்சுவை மேலும் சுவையைக் கூட்டுகிறது. வாழ்த்துக்கள் சாரா!

ஓவியா
01-09-2007, 12:40 AM
கன்னிகை; அந்தக் காரிகை;
அவளழகைத்
துல்லியமாய் வரைய
இல்லையொரு தூரிகை!

கறையில்லாத
கற்பும் பொற்பும் அமைந்தவள்;
ஒர்
பொண்ணுக்குரிய
நான்கு குணங்களும்
ஒரு சேரச் சமைந்தவள்!

நீள் விழி
நிலம் பார்க்க நடப்பவள்;

தக்க வரன்
தனக்கு வாய்க்க வேண்டுமெனக்
குல தெய்வத்தைக்
கும்பிட்டவாறு கிடப்பவள்!

ஏழை என்பதால்.

சாரா அண்ணா, வெரும் எழைப்பெண்கள் மட்டும் இவ்வர்கம் சேரவில்லை, அழகில்லை என்று ஒதுக்கும் காரிகைகளும் ஒரு ஓவியனுக்காக இப்படிதான் காத்திருக்கின்றனர். பணம், அழகு, அந்தஸ்து, படிப்பு, முக்கியமாக வய*து என்று பல விசயங்கள் இதனுல் அடக்கம். அதாவது அடக்கம் என்ற சொல்லில் அடக்கிய, அடக்கம் செய்யபட்ட அவளின் உணர்ச்சிகளும் இதில் தவம்தான் இருக்கின்றன விடுதலைக்காக.

அழகிய கவிதைக்கு பாராட்டுக்கள். இதுவும் ஒரு வகை சமூக சிந்தனைதான்.

சுகந்தப்ரீதன்
01-09-2007, 07:22 AM
கன்னிகை; அந்தக் காரிகை;
அவளழகைத்
துல்லியமாய் வரைய
இல்லையொரு தூரிகை!

தக்க வரன்
தனக்கு வாய்க்க வேண்டுமெனக்
குல தெய்வத்தைக்
கும்பிட்டவாறு கிடப்பவள்!

ஏழை என்பதால்.

கூர்மையான வரிகளும்....யதார்த்ததின் இறுக்கமும்....மிக அருமை நண்பரே...வாழ்த்துக்கள்..!

சாராகுமார்
01-09-2007, 03:59 PM
உங்கள் கவிதையில் உள்ள சொற்சுவை மேலும் சுவையைக் கூட்டுகிறது. வாழ்த்துக்கள் சாரா!

நன்றி அரசன் அவர்களே.

சாராகுமார்
01-09-2007, 04:01 PM
சாரா அண்ணா, வெரும் எழைப்பெண்கள் மட்டும் இவ்வர்கம் சேரவில்லை, அழகில்லை என்று ஒதுக்கும் காரிகைகளும் ஒரு ஓவியனுக்காக இப்படிதான் காத்திருக்கின்றனர். பணம், அழகு, அந்தஸ்து, படிப்பு, முக்கியமாக வய*து என்று பல விசயங்கள் இதனுல் அடக்கம். அதாவது அடக்கம் என்ற சொல்லில் அடக்கிய, அடக்கம் செய்யபட்ட அவளின் உணர்ச்சிகளும் இதில் தவம்தான் இருக்கின்றன விடுதலைக்காக.

அழகிய கவிதைக்கு பாராட்டுக்கள். இதுவும் ஒரு வகை சமூக சிந்தனைதான்.

ஓவியமாக படைக்கும் ஓவியா அவர்களுக்கு நன்றி.

rocky
01-09-2007, 04:04 PM
[QUOTE=சாராகுமார்;264321]கன்னிகை; அந்தக் காரிகை;
அவளழகைத்
துல்லியமாய் வரைய
இல்லையொரு தூரிகை!

கறையில்லாத
கற்பும் பொற்பும் அமைந்தவள்;
ஒர்
பொண்ணுக்குரிய
நான்கு குணங்களும்
ஒரு சேரச் சமைந்தவள்!

நீள் விழி
நிலம் பார்க்க நடப்பவள்;

தக்க வரன்
தனக்கு வாய்க்க வேண்டுமெனக்
குல தெய்வத்தைக்
கும்பிட்டவாறு கிடப்பவள்!

ஏழை என்பதால்.[/QUOடே]
க*விதை மிக*வும் அருமை சாராகுமார். வார்தைக*ள் மிக*வும் அழ*காக* கோர்த்திருக்கிறீர்க*ள். வாழ்த்துக்க*ள்.

சாராகுமார்
01-09-2007, 04:08 PM
கூர்மையான வரிகளும்....யதார்த்ததின் இறுக்கமும்....மிக அருமை நண்பரே...வாழ்த்துக்கள்..!

நன்றி ப்ரீதன்.

சாராகுமார்
01-09-2007, 04:10 PM
மிக சிறப்பாக ஏக்கம் நிறைந்த ஏழைப் பெண்ணினினையும் அவரது உணர்வையும் சொல்லிவிட்டீர் சாரா.
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.:aktion033:

நன்றி பூமகள்.

சாராகுமார்
01-09-2007, 04:11 PM
நன்றி ராக்கி அவர்களே.

மனோஜ்
01-09-2007, 04:11 PM
ஏழை பெண்ணின் மனதை கவிதையாக்கியது அருமை சாராகுமார் வாழ்த்துக்கள்

சாராகுமார்
01-09-2007, 04:13 PM
ஏழை பெண்ணின் மனதை கவிதையாக்கியது அருமை சாராகுமார் வாழ்த்துக்கள்

நன்றி மனோஜ் அவர்களே.

lolluvathiyar
09-09-2007, 12:42 PM
கவிதை ஏனோ சாட்டையடி போல ஒரு கனத்தை கொடுத்து விட்டது. ஏழைக்கு தான் அனைத்து தினிப்பும் என்று நல்ல விளக்கம்

கற்பும் பொற்பும் அமைந்த

அதென்ன பொற்பும் − அர்த்தம் பொறுப்பா

சாராகுமார்
09-09-2007, 12:58 PM
கவிதை ஏனோ சாட்டையடி போல ஒரு கனத்தை கொடுத்து விட்டது. ஏழைக்கு தான் அனைத்து தினிப்பும் என்று நல்ல விளக்கம்

அதென்ன பொற்பும் − அர்த்தம் பொறுப்பா

நன்றி வாத்தியார் அவர்களே.

பொற்பும்-பொற்புகள்.