PDA

View Full Version : செல்போன் விலை - அதிர்ச்சி உண்மை



தங்கவேல்
28-08-2007, 01:11 PM
PDA straight board phone
Display size :2.6inch TFT 240X320
Protocal:GSM/GPRS 900/1800mhz
Built-in antenna
Dual 30million pixel cameras
Dimensions: 110x50x15.9mm
Supports:T-FLASH card /STK and EFR services
Video player(format:MPEG-4 3GPP)
Video and still image-editors
Ring tone format:MIDI WAVE MP3 AMR AAC
Supports:64 polyhonic ring tone
Phone calling:250
Message supports:SMS, EMS, MMS
Music colourful play backlight
Bluetooth function
Support :WAP /class 12 GPRS
Support: USB
Alarm clock /Calender/Calculator/ FM Radio/Game inside


இந்த செல்போனின் விலை என்னவாக இருக்குமென நினைக்கின்றீர்கள்.
வெறும் 3800 ரூபாய். இதே மாடல் போன் இப்போது விற்கும் விலை என்ன என்பது உங்களுக்கு தெரியும். கிட்டத்தட்ட 9000 ரூபாய் லாபம் ஒரு செல்போனுக்கு..

பூமகள்
28-08-2007, 01:18 PM
ஆகா..அருமை..எங்கே எந்த ஊரில் அண்ணா விற்கிறது...?????
உங்களுக்கு தெரியுமா??

praveen
28-08-2007, 01:20 PM
சரி நண்பரே, உங்கள் செய்திக்கு ஆதாரம் என்ன?. இப்படித்தான் பெப்சி குளிர்பாணம் தயாரிக்க 40 பைசா தான் ஆகிறது அவர்கள் 10 ரூபாய்க்கு விற்கிறார்கள் என்கிறார்கள்.

அந்த 40 பைசா சமாச்சாரத்தை நாம் ஏன் செய்து 9 ரூபாய்க்கு விற்று கோடிஸ்வரானாக கூடாது?.

மனித உடலில் உள்ள வேதி பொருட்களை பட்டியலிட்டு அவை தற்போது மார்கெட் விலை என்ன என்று கூறி ஒரு மனிதனின் விலை இது தான் என்று சொல்ல முடியுமா?.

உண்மையிலே மார்க்கெட்டில் விற்கப்படும் செல்போனின் உற்பத்தி விலை 60 லிருந்து 80 சதவிகித விலை தான் இருக்க கூடும். விளம்பரம், விற்பனைக்கு பின் சேவை, செல்போனுடன் இலவசமாக தரப்படும் துனை பொருட்கள், விற்பனை செய்பவர்கள், உற்பத்தியாளர் லாபம் எல்லாம் அதில் இருக்கும். இறுதியாக வரிகளும் அதில் சேர்ந்திருக்கும்.

ஒரேடியாக அதன் ஒரிஜினல் விலை 20% என்பது சரியில்லை என்பது எனது எண்ணம்.

சிவா.ஜி
28-08-2007, 01:24 PM
ஆஷோ அவர்களின் அதே கருத்துதான் என்னுடையதும்.இப்படிப்பட்ட செய்திகளுக்கு ஆதாரங்கள் இருப்பதில்லை.அதனால் இதைப் படித்துவிட்டு கடைக்காரரிடம் அநியாயமாக கொள்ளையடிக்கிறீர்களே என்று சண்டை போடக்கூடாது.

aren
28-08-2007, 01:37 PM
ஒரு பொருளை தயாரிக்கும் செலவிற்கும் அதை விற்பனை செய்யும் மதிப்பிற்கும் பல சம்பந்தங்கள் உண்டு. ஒரு பொருள் தயாரிக்க 100 ரூபாய்தான் ஆகும் என்றால் அவர்கள் அதை 400 ரூபாய்க்கு விற்றால்தான் குறைந்தது 20 ரூபாயாவது லாபம் கிடைக்கும். இடையில் இருக்கும் பல செலவுகளையும் இந்த 280 ரூபாயில் ஈடுகட்டியாகவேண்டும். தயாரிக்கும் செலவிற்கும் விற்கும் பணத்திற்கும் இவ்வளவு வித்யாசம் இருந்தும் பல கம்பெனிகள் நஷ்டத்தையே சந்திக்கின்றன.

40 பைசாவில் தயாரிக்கும் பெப்ஸி 10 ரூபாய்க்கும் விற்றும் இந்தியாவில் இயங்கும் பெப்ஸி தொழிற்சாலை நஷ்டத்தில்தான் இயங்குகிறது. ஆகையால் வெறும் தயாரிக்கும் கணக்கை மட்டும் வைத்து ஒரு பொருளை எடைபோட முடியாது.

இன்று நோக்கிய முன்னனியில் இருக்கிறது, அவர்கள் தொடர்ந்து முன்னனியில் இருப்பதற்கு அவர்கள் பில்லியன் கணக்கில் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க செலவழிக்கவேண்டும், அது தவிற விளம்பரங்களுக்குச் செலவுசெய்யவேண்டும், நல்ல திறமையான நிரிவாகிகளுக்கு அதிகமாக சம்பளம் கொடுக்கவேண்டும், இப்படி பல விஷயங்களுக்கு அவர்கள் அதிகம் பணம் செலவு செய்யவேண்டும். ஆகையால் அவர்களுக்கு இறுதியில் நிற்கும் லாபம் மிகவும் குறைவாகவே இருக்கும்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியன்
28-08-2007, 01:49 PM
ஆசோ மற்றும் ஆரென் அண்ணாவின் அனுபவக் கருத்துக்களை நானும் ஏற்றுக் கொள்கின்றேன்......

சென்ற வருடம் நான் துபாயில் இருந்த போது நொக்கியா முகவர்களிடமிருந்து என் நண்பன் ஒருவனுக்காக N 70 மொடல் போன் ஒன்றை (அந்த போன் அறிமுகமாகிய புதிது) 1400 திர்ஹாமுக்கு கொள்வனவு செய்தோம், ஆனால் அதே மொபலை இன்னும் ஒரு நண்பர் அதே காலப் பகுதியில் 1100 திர்ஹாமுக்கு கொள்வனவு செய்திருந்தார். ஆனால் அந்த போனுக்கு எந்தவிதௌத்தரவாதமும் கிடையாது, ஒரு வேளை அதனால் தான் அந்த விலை வித்தியாசமோ என்னவோ........?

அறிஞர்
28-08-2007, 01:53 PM
தயாரிக்கும் எந்த பொருளையும், பயனாளரிடம் கொண்டு செல்ல ஆகும் செலவு... எப்பொழுதும் அதிகமே....

நம்மூரு தண்ணீர் பாக்கெட் தயாரிக்க ஆகும் செலவு... 10% தான்.

மனோஜ்
28-08-2007, 02:02 PM
இது வியாபரத்தில் உள்ள நுட்பம் இதைவைத்துதான் அனைத்து செயல்கலும் நடத்த முடியும் ஆபர் கொடுக்கிறார்கள் எப்படி இவைகலால் தான்

lolluvathiyar
28-08-2007, 02:14 PM
இது சாதர்ன விசயம் தங்கவேல்.
சாதர்ன மாடல் செல்போன்கள் மாஸ் பிரொடக்ஸனில் தயாரிப்பு செலவு 50 ரூபாய் ஆனால் அதை மார்கெட்டில் 10000 ரூபாய்க்கு முதலில் விற்கபட்டு படி படியாக 1000 ரூபாய்க்கு கொண்டு வருவார்கள்

நம் நாட்டிலும் மைக்ரோ பிராசசர் தயாரித்தால் பொருள்களின் விலை பல மடங்கு இறங்கி விடும்.

இங்கு இந்தியாவில் தயாரிக்க படும் 50 ரூபாய் ஆடைகள் போக்குவரத்து செலவு அனைத்தும் போக ஐரோப்பாவில் 500 ரூபாய் க்கு விற்க படும்.
இது தான் வியாபரம். தவறில்லை


அந்த 40 பைசா சமாச்சாரத்தை நாம் ஏன் செய்து 9 ரூபாய்க்கு விற்று கோடிஸ்வரானாக கூடாது?.


நம்மவர்களும் செய்து பார்த்தார்க*ள் ஆனால் பன்னாட்டு நிறுவனத்துடன் சமாளிக்க முடியவில்லை. அவர்களை போல சச்சினை வைத்து விளம்பரம் பன்ன முடியவில்லை. பெப்ஸி 15 ரூபாய் வரும் முன் கோல்ட் ஸ்பாட் 3 ரூபாய்க்குஇ தானே விற்க பட்டது. கோல்ட் ஸ்பாட் மதுரையில் தயாரானது. இப்ப அது இல்லை.

praveen
28-08-2007, 02:31 PM
இது சாதர்ன விசயம் தங்கவேல்.
சாதர்ன மாடல் செல்போன்கள் மாஸ் பிரொடக்ஸனில் தயாரிப்பு செலவு 50 ரூபாய் ஆனால் அதை மார்கெட்டில் 10000 ரூபாய்க்கு முதலில் விற்கபட்டு படி படியாக 1000 ரூபாய்க்கு கொண்டு வருவார்கள்

50 ரூபாய் இல்லை வாத்தியாரே 5 ரூபாய் :grin: ஓவரா சொல்றதே வாடிக்கையா போச்சு. நம்மூர்ல களிமண்ணில் அதை செய்தால் 2 ரூபாய் தான் வரும் வேலை செய்யனுமே.


பெப்ஸி 15 ரூபாய் வரும் முன் கோல்ட் ஸ்பாட் 3 ரூபாய்க்குஇ தானே விற்க பட்டது. கோல்ட் ஸ்பாட் மதுரையில் தயாரானது. இப்ப அது இல்லை.

கோல்ட் ஸ்பார் 3 ருபாய்க்கு விற்கையில் பெப்ஸி 5 ரூபாய் தான். தற்போது பெப்ஸி 12 ரூபாய்க்கு விற்கும் போது உள்ளூர் தயாரிப்பான காளிமார்க் தயாரிப்பான பவண்டோ 11.50 எப்படி இருக்கிறது விலை.

இதெல்லாம் சும்மா வாத்தியாரே, முட்டை இடுகிற கோழிக்கு தான் அதன் வேதனை தெரியும். சும்மா பேசுகிறவர் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.

saguni
28-08-2007, 04:40 PM
பலர் வாங்கத்தயாராய் இருப்பதால்கூட இதன் விலை இவ்வளவு அதிகமாய் இருக்கலாம். பெப்ஸி நஷ்டத்தில் இயங்கியதாய் யார் சொன்னது? பல்லாயிரம் கோடி லாபத்தில் ஓடும் அமுத சுரபி நிறுவனம் அது.

தங்கவேல்
29-08-2007, 01:32 AM
ஆசோ, சிவா.ஜி, ஆரென் − நான் முன்னே சொல்லி இருக்கின்றேன் எனது தொழிலைப் பற்றி. இங்கு தமிழ் நாட்டுக்கு ஒரு தனியார் நிறுவனத்துக்காக செல்போன் இறக்குமதி செய்ய நான் தான் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றேன். சைனாவில் இருக்கும் மிகப்பெரிய செல் கம்பெனியில் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கின்றது. அதை தான் தமிழ் மன்றத்தில் பதித்தேன். ஆதரமின்றி எந்த தகவலையும் பதிக்கவில்லை.

aren
29-08-2007, 01:40 AM
ஆசோ, சிவா.ஜி, ஆரென் − நான் முன்னே சொல்லி இருக்கின்றேன் எனது தொழிலைப் பற்றி. இங்கு தமிழ் நாட்டுக்கு ஒரு தனியார் நிறுவனத்துக்காக செல்போன் இறக்குமதி செய்ய நான் தான் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றேன். சைனாவில் இருக்கும் மிகப்பெரிய செல் கம்பெனியில் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கின்றது. அதை தான் தமிழ் மன்றத்தில் பதித்தேன். ஆதரமின்றி எந்த தகவலையும் பதிக்கவில்லை.


நான் எதுவும் தப்பாகச் சொல்லவில்லை நண்பரே. உண்மையைத்தான் சொன்னேன்.

உங்கள் முயற்சி வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள். நீங்கள் நடத்தும் பேச்சுவார்த்தை வெற்றி பெற்று அதன்மூலம் உங்கள் புகழ் மேலும் வளரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதற்கு எங்கள் வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி வெற்றி பெரும்வரை அதன் விஷயங்களை வெளியே சொல்லவேண்டாம். அது பல தடைகளை ஏற்படுத்தலாம், ஆகையால் அந்த ரகசியங்களை நீங்கள் உங்களுடனேயே வைத்திடுங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

தங்கவேல்
29-08-2007, 02:10 AM
நன்றி ஆரென்.. இது சின்ன விஷயம். மறைப்பதற்கு ஒன்றும் இல்லை ஆரென்.

ஷீ-நிசி
12-11-2007, 12:41 AM
தங்கவேல் சொல்வது முற்றிலும் உண்மை,

இது சைனீஸ் வகை மொபைல் ஆகும். 6000 ரூபாய்க்கு டபுள் சிம், டபுள் கேமரா. நீங்க டி,வி, கூட பார்க்கலாம் (பொதிகை சேனல்) ஆனால் இதன் தரம்?????????????

வீடியோ தரம் மிக மட்டம்.. ஆடியோ பரவாயில்லை.. எல்லா வகை மாடலிலும் ஒரே போல இருக்கும் மென்பொருள். இதற்கு ஸ்பேர் சர்வீஸ் மிக சிரமம்.

பரவாயில்லை என்று சொல்பவர்கள், சென்னை பாரீஸ் கார்னர் ஈவினிங் பஜார் சென்றால் எல்லா கடைகளிலும் இந்த செல்போன் கிடைக்கும்.

3800 என்பது ஸ்டார்ட்டிங் பிரைஸ். அந்த விலைக்கே தங்கவேல் அவர்கள் கூறியிருக்கும் எல்லா அம்சங்களும் இருக்கும். ஆனால் எல்லாமும் அம்சமா இருக்குமா என்பது சந்தேகம்தான்..

viju
26-02-2008, 03:15 PM
அது சைனா பீஸ் என்பது முற்றிலும் உண்மை.........

thamilan2007
31-03-2008, 08:42 PM
ஷீ-நிசி கூறுவது முற்றிலும் உண்மை
சைனா பொருட்க்கள் சந்தையில் குவிந்து கிடக்கிறது குறைந்த விலையில், ஆனால் தரம் சுமார்,தரமே இல்லை என்று கூறிவிட முடியாது என்பது உண்மை

ராஜா
18-11-2008, 06:18 AM
3000 ரூபாய்க்கு கிடைக்கும் செல்போனை வாங்கிய என் நண்பர் கொஞ்சகாலம் 10,000 ரூபாய்க்கு போன் வாங்கிய எங்களையெல்லாம் கிண்டல் செய்துகொண்டிருந்தார்.. அவர் போனும் நன்றாகத்தான் இருந்தது. வீடியோ, ஆடியோ எல்லாம் ஓரளவுக்கு பரவாயில்லை..

திடீரென்று ஒருநாள் அந்த போன் மண்டையைப் போட்டுவிட்டது. அதைத் தூக்கிக்கொண்டு எங்கெங்கோ அலைந்தார்.. ஒன்றும் கதையாகவில்லை.

இப்போது முன்னர் வைத்திருந்த சாதா போனை வைத்திருக்கிறார்.. கேட்டால் இதுதான் கச்சிதமாக இருக்கிறது.. அது பையில் கொள்ளவில்லை என்று பூமி பார்த்து முனகுகிறார்..!

ஓவியன்
18-11-2008, 06:24 AM
நம்ம நண்பர் ஒருவரும் இப்போது மீண்டும் பழைய டப்பா அலைபேசிக்கு மாறி விட்டார், ஆனால் அதற்கு அவர் கூறும் காரணம் மன்றத்தில் தணிக்கை செய்யப் படவேண்டியது..!! :D:D:D

aren
18-11-2008, 07:52 AM
நானும் ஒரு முறை துபாயில் டிராகன் மாலில் இந்த மாதிரி ஒரு செல்போனை வாங்கினேன். ஒரு மாதமே உழைத்தது. அப்புறம் அதை தூக்கிப்போடும்படி ஆகிவிட்டது. 600 திர்ஹம் நஷ்டம்.

anna
18-11-2008, 10:33 AM
நான் சைனா செல் ஒன்று பயன்படுத்தி பட்ட பாடு போதும் ஏதாவது கம்பெனி பிராண்டா(நோக்கியா,மோட்டாரோலா,சாம்சங்) வாங்கி பயன்படுத்துங்கள்.அது இது இருக்குனு சொல்லி சைனா செட்டை வாங்காதீங்க.

மகுடம் மோகன்
18-11-2008, 12:42 PM
மன்ற நண்பர்களே,சீன தயாரிப்பு அலைபேசிகளை வாங்கவேண்டாம்,ஏனெனில் விரைவில் நமது இந்திய அரசாங்கம் சீன அலைபேசிகளுக்கு தடைவிதிக்க உள்ளது என நினைக்கிறேன்,ஏனெனில் சீன தயாரிப்பு அலைபேசிகளில் (identity code) இல்லாதிருப்பதல்,அலைபேசி சம்பந்தமாக காவல்துறைக்கு வரும் புகாரை வைத்து,அந்த அலைபேசிகளை கண்டுபிடிக்க முடியாததே காரணம்,மேலும் தீவிரவாதிகள் இந்தவகை அலைபேசிகளை பயன்படுத்துவதால் அவர்களை கண்டுபிடிப்பது காவல்துறைகளுக்கு சிரமமாக போய்விடுகிறது,எனெவே விரைவில் அரசு தடைமுடிவை எடுக்கும் என நினைக்கிறேன்.

அன்புடன்,மகுடம் மோகன்

இன்பா
25-11-2008, 02:53 PM
அய்யோ அத ஏன் கேக்குறீங்க,

இரண்டு மாதங்களுக்கு முன்பு, சோனி எரிக்சன் P1i வாங்கினேன், அதில் இருக்கும் எல்லா வசதிகளும் கூடிய சீன அலைபேசி வெறும் 3000 ஆயிரம் தான். என் அலைபேசியின் எக்ஸ்டர்னல் ஸ்பீக்கரில் ஒலியின் அளவு குறைவு ஆனால் சைனா அலைபேசிகளில் ஒலியின் அளவு அதிகம். வாங்கிக் கொண்டு சீன் போடுகிறார்கள்.

பொறுக்க முடியவில்லை, ஆகவே iPhone வாங்கிவிட்டென். விடியோ க்ளியாரிட்டி பக்கா.

iPhone குறைந்த விலையில் வாங்க தில்லாலங்கடி வழி இருக்கிறது முடிந்தால் முயற்சி செய்து வாங்கிக் கொள்ளுங்கள், அமெரிக்காவில் நண்பர்கள் இருந்தால்கேட்டுப் பாருங்கள் சொல்வார்கள். ஆக மொத்தம் 250 டாலர்களில் வாங்கிவிடலாம்

தமிழ்தாசன்
25-11-2008, 08:27 PM
மலிவோ மலிவு!
மலிவுகள் மட்டமானால்தான் பிரச்சினையில்லையா?