PDA

View Full Version : பழங்கள் - ஒரு இனிப்பான பதிவு..



alaguraj
28-08-2007, 12:15 PM
பழங்கள் பற்றிய குறிப்பு ஒரு தளத்திலிருந்து பின்னால் உதவுமென்று சேகரித்தது இப்போது
மன்ற உறவுகளுக்காக...

ஆரஞ்சு

தென்கிழக்கு ஆசிய நாடுகள்தான் இதன் தோற்றம்.

முக்கிய சீஸன்: ஜனவரி முதல் பிப்ரவரி.

கலோரி அளவு: ஒரு 100 கிராமுக்கு 48 கி.கலோரி.

ஒரு 100 கிராமில்:

நீர் 87.8%
மாவுச்சத்து 10.6%
தாதுக்கள் 0.3%
கால்சியம் 0.05%
இரும்பு 0.1மி.கி.
பொட்டாசியம் 19.7கி.மி.
தாமிரம் 0.07மி.கி.
குளோரின் 3.2.மி.கி.
வைட்டமின் பி 120IU
புரோட்டின் 0.9%
கொழுப்பு 0.3%
நார்ச்சத்து 0.3%
பாஸ்பரஸ் 0.02%
சோடியம் 2.1மி.கி.
மக்னீஷியம் 12.9மி.கி.
கந்தகம் 9.3.மி.கி.
வைட்டமின் ஏ 350IU
வைட்டமின் சி 68IU

பயன்கள்: வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. மற்ற பழங்களைவிட கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. பசி உருவாக்குவதில், நுரையீரல் ஆஸ்துமா பிரச்னைகளில், இருதய நோய்களில், எலும்புகளில், பற்களுக்கு மற்றும் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதில் இந்தப் பழத்தின் பங்கு அதிகம்.

alaguraj
28-08-2007, 12:25 PM
ஆப்பிள்

மெக் அலெக்ஸாண்டர் கௌட்டங் என்கிற பிரிட்டிஷ் அதிகாரியால் இந்தியாவிற்கு ஆப்பிள் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் சிம்லாவில் 1887_ல் முதன் முதலில் ஆப்பிளைப் பயிரிட்டார்.

சீஸன்: செப்டம்பர் _அக்டோபர்.

கலோரி: 100gm ஆப்பிளில் 59 கிலோ கலோரி சக்தி இருக்கிறது.

100 கிராமில் :

நீர் 85.9%
மாவுச்சத்து 9.5%
தாதுக்கள் 0.4%
பாஸ்பரஸ் 0.02%
வைட்டமின் பி 40IU
புரோட்டின் 0.3%
கொழுப்பு 0.1%
சுண்ணாம்புச் சத்து 0.01%
இரும்புச்சத்து 0.3%

பயன்கள்: நார்ச்சத்து அதிகம். கூடவே கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருக்கிறது. தோலில் வைட்டமின் சி இருப்பதால் ஆப்பிளை எப்போதும் தோலோடு சேர்த்து சாப்பிடுவதே நல்லது. உடல் நலம், சுறுசுறுப்பு இரண்டையும் கூட்டும். இரத்த சோகையைப் போக்கும். இரத்தத்திலுள்ள நீர்த்தன்மையைக் காக்கும் சக்தி ஆப்பிளுக்கு உண்டு.

ஆப்பிளில் இருக்கிற மேலிக் அமிலம் கல்லீரல், கணையம் இரண்டையும் பாதுகாக்கும் சக்தி கொண்டது. தவிர, ஆப்பிளில் இருக்கிற பெக்டின் உடலின் நச்சுப்பொருட்களை அழிக்கும்.

alaguraj
28-08-2007, 12:27 PM
வாழைப்பழம்

மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு வந்தபோது வாழைப்பழத்தை அதிகம் விரும்பிச் சாப்பிட்டு மகிழ்ந்திருக்கிறார்.

முக்கிய சீஸன்: செப்டம்பர் _ டிசம்பர்.

கலோரி அளவு: ஒரு 100 கிராமில் 116 கி.கலோரி.

100 கிராம் வாழைப்பழத்தில்:

நீர் 61.4%
மாவுச்சத்து 36.4.%
சுண்ணாம்புச்சத்து 0.01%
கரோட்லின் 78 மை.கி
ரிபோபிளேவின் _ 0.08 மி.கி.
வைட்டமின் சி 7 மி.கி.
புரோட்டின் 1.3%
கொழுப்பு 0.2%
இரும்பு 0.04%
தயமின் 0.05 மி.கி.
நியாசின் 0.5 மி.கி.

பயன்கள்: சோடியம் குறைவாகவும், அதிகம் பொட்டாசியமும், கால்சியமும், இரும்பும் இருக்கிறது. மிக சுலபத்தில் ஜீரணமாகக்கூடிய சர்க்கரை இருப்பதால் உடனடி சக்திக்கு நிறைய உதவும்.

வாழைப்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சேர்த்தால் போதும் என்கிறார்கள் உணவுத்துறை வல்லுநர்கள். இதை பேலன்ஸ்டு டயட் என்கிறார்கள்.

இதில் இருக்கிற செரடோனின் என்கிற பொருள் மன அழுத்தத்திற்கு உதவக்கூடியது. என்னவென்று தெரிந்துகொள்ள முடியாத பல அலர்ஜிகளுக்கு, வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிட தீர்வு கிடைக்கும் என்கிறார்கள். இரும்புச் சத்து அதிகம் இருப்பதால், இரத்தசோகைக்கு மிக நல்லது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தியைத் துரிதப்படுத்துகிறது. வாழைப்பழத்தில் கண்டுபிடிக்கப்படாத வைட்டமின் ஹி இருக்கிறது. இது கான்ஸர் நோய்க்கு எதிரி. அல்சர் புண்களை ஆற்றுவதிலும் வாழைப்பழத்திற்கு மகத்தான சக்தி உண்டு.

மலர்
28-08-2007, 12:28 PM
பயனுள்ள தகவல்கள் அழகுராஜ்..
அப்படியே எல்லா பழங்களுக்கும் தந்து விடுங்களேன்...
தங்களின் பகிர்வுக்கு நன்றி...

alaguraj
28-08-2007, 12:28 PM
மாம்பழம்

நம்நாட்டின் சொந்தப் பழம். இந்தியாவில் பழங்களின் ராஜா.

முக்கிய சீஸன்: மே முதல் ஆகஸ்ட் வரை.

கலோரி அளவு: ஒரு 100 கிராமில் 74 கலோரி.

ஒரு 100 கிராமில்:

நீர் 86.1%
மாவுச்சத்து 11.8%
தாதுக்கள் 0.4%
இரும்பு 1.3%
பாஸ்பரஸ் 16மி.கி.
புரோட்டின் 0.6%
கொழுப்பு 0.1%
நார்ச்சத்து 0.7%
கால்சியம் 14.மி.கி.
வைட்டமின் சி 16மி.கி.

பயன்கள்: வைட்டமின் ஏ மற்றும் இயற்கைச் சர்க்கரைகள் அடங்கியது. கூடவே கரோட்டின்களும் அதிக அளவில் இருக்கின்றன. 15 சதவிகித வைட்டமின் சி யும் இருக்கிறது. மேலிக் அமிலம், டார்டாரிக் அமிலம் மற்றும் குறைந்த அளவில் சிட்ரிக் அமிலங்களும் உண்டு.

alaguraj
28-08-2007, 12:29 PM
அன்னாசிப்பழம்

1548_ல் போர்ச்சுகீசியர்களால் பைன் ஆப்பிள் என்கிற இந்த அன்னாசிப்பழம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

முக்கிய சீஸன்: ஜூலை முதல் செப்டம்பர் வரை.

கலோரி அளவு: ஒரு 100 கிராமில் 46 கி.கலோரி.

100 கிராமில்:

நீர் 86.5%
கொழுப்பு 0.1%
கால்சியம் 20மி.கி.
இரும்பு 0.09 மி.கி.
வைட்டமின் பி 120 IU
நார்ச்சத்து 0.5%
புரோட்டின் 0.6%
மாவுச்சத்து 12.0%
பாஸ்பரஸ் 9 மி.கி.
வைட்டமின் ஏ 60 IU
வைட்டமின் சி 63 மி.கி.

பயன்கள்:

வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் தயாமின், ரைபோபிளேவின், நியாசின் போன்ற பி வைட்டமின்களோடு வைட்டமின் ஈ_யும் சேர்த்துக் கிடைக்கிறது. கான்ஸர் தடுப்பில் பெரும்பங்கு பெறுகிறது.

alaguraj
28-08-2007, 12:30 PM
கொய்யா
பெரு மற்றும் தென் அமெரிக்க நாடுகள்தான் கொய்யாப்பழங்களின் தாய்வீடு.

முக்கிய சீஸன் : அக்டோபர் முதல் டிசம்பர் வரை.

கலோரி அளவு : ஒரு 100 கிராமுக்கு 51 கி.கலோரி.

100 கிராமில் :

நீர் 76.1.%
புரோட்டீன் 1.5.%
மாவுச்சத்து 14.5%
நார்ச்சத்து 6.9%
பாஸ்பரஸ் 28 மி.கி.
வைட்டமின் சி 212 மி.கி.
ரைபோஃபிளேவின் 0.03மி.கி.
கொழுப்பு 0.2%
கால்சியம் 10 மி.கி.
இரும்பு 0.1 மி.கி.
தயாமின் 0.03மி.கி.
நியாசின் 0.4மி.கி.

பயன்கள்:

மிக அதிகஅளவில் வைட்டமின் சி இருக்கிறது. ஒரு ஆரஞ்சுப் பழத்தைவிட ஒரு கொய்யாவில் மூன்று மடங்கு அதிகமான வைட்டமின் சி இருக்கிறது. ஒரு வாழைப் பழத்தைவிட 30 மடங்கு அதிகமான வைட்டமின் சி கொய்யாவில் இருக்கிறது.

அதிக இரும்புச் சத்தும் இருக்கிறது.

தொடர்ந்து கொய்யாப் பழங்கள் சாப்பிடுவது அதிக இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

alaguraj
28-08-2007, 12:32 PM
சப்போட்டா

ஒரு 100 கிராமில் 90 கி.கலோரி

வைட்டமின் சி 6மி.கி.
ரிபோபிளேவின் 0.03மி.கி.
நியாசின் 0.2 மி.கி.
தயாமின் 0.02 மி.கி.
கரோட்டின் 97 மி.கி.
புரோட்டின் 0.7%
கொழுப்பு 1.1%
இரும்பு 2.0%
பாஸ்பரஸ் 27 மி.கி.
மாவுச்சத்து 21.4%
நார்ச்சத்து 2.6%
கால்சியம் 28மி.கி.

சப்போட்டா பற்றிய பிற தகவல்களை விரிவாக பின்னால் தருகிறேன்..

alaguraj
28-08-2007, 12:33 PM
திராட்சைப் பழங்கள்

டர்கிஷ் ஆட்சியாளர்கள் பெர்சியா மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தப் பழங்களை இந்தியாவிற்குக் கொண்டுவந்தார்கள்.

முக்கிய சீஸன் : ஏப்ரல்_ ஜூன்

கலோரி அளவு : ஒரு 100 கிராம்

அளவில் 50 கலோரி

சக்தி இருக்கிறது.

100 கிராமில் :

நீர் 92%
மாவுச்சத்து 10.2%
தாதுக்கள் 0.4%
பாஸ்பரஸ் 20 மிகி
வைட்டமின் ஏ 15 IU
வைட்டமின் சி 20மி.கி.
புரோட்டின் 0.8%
கொழுப்பு 0.1%
சுண்ணாம்புச்சத்து 20மி.கி.
நியாசின் 0.3மி.கி
இரும்பு 0.2மி.கி.

பயன்கள்: திராட்சைப் பழங்களில் சர்க்கரை அதிக அளவில் க்ளுகோஸ் வடிவில் இருக்கிறது. உடனடி சக்திக்கு திராட்சைப் பழங்கள் ஒரு வரம்.

இதில் அதிக அளவில் சிறுநீரை வெளியேற்றும் சக்தி இருப்பதால், சிறுநீர்க் கற்கள் மற்றும் சிறுநீர்ப்பை கற்கள் உருவாவதை தடுக்கும். சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், சிறுநீரக அழற்சியைத் தடுக்கும்.

குடிப்பழக்கத்தை நிறுத்துகிறவர்களுக்கு அதிக தாகம் ஏற்படும். அந்தச் சமயங்களில் திராட்சைப் பழங்களைப் பயன்படுத்தலாம். தாகத்தைக் கட்டுப்படுத்துவதில் திராட்சைப் பழங்கள் அபரிமிதமாகச் செயல்புரிகின்றன.

இரத்தச் சுத்திகரிப்பிலும், அதனைக் குளிர்ச்சிப்படுத்துவதிலும் திராட்சைகள் ஈடுபடுவதால் உடல்சூடு தணியும்.

திராட்சையில் இருக்கிற மேலிக், சிட்ரிக் மற்றும் டார்டாரிக் ஆசிட், செல்லுலோஸ் போன்றவை குடல் இயக்கத்தைத் துரிதப்படுத்துவதால் நீண்ட நாள் இருக்கிற மலச்சிக்கல் பிரச்னைகளுக்குப் பெரிதாக உதவும். மேற்சொன்ன இந்த அமிலங்கள் கல்லீரலைத் தூண்டுவதால் அதன் குறைபாடுகளிலும் பயன்தருகின்றன.

இரத்த சோகையைக் கட்டுப்படுத்துவதிலும், இருதயத்தைப் பாதுகாப்பதிலும் திராட்சைப் பழங்கள் அதிக இடத்தை எடுத்துக் கொள்கின்றன. இதில் இருக்கிற எலாஜின் அமிலம் கான்ஸர் செல்களுக்கு எதிரி என்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

alaguraj
28-08-2007, 12:34 PM
மாதுளம்பழம்.

1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயது கொண்டது மாதுளம்பழம்.

முக்கிய சீஸன்: அக்டோபர் முதல் டிசம்பர் வரை.

கலோரி அளவு: ஒரு 100 கிராமுக்கு 65 கி கலோரி.

100 கிராமில்:

நீர் 78.0%
மாவுச்சத்து 14.5%
தாதுக்கள் 0.74%
கால்சியம் 0.07%
இரும்பு 0.03%
வைட்டமின் ஏ 16 மி.கி.
புரோட்டின் 1.7%
கொழுப்பு 0.1%
நார்ச்சத்து 5.1%
பாஸ்பரஸ் 0.02%
வைட்டமின் பி 10 மி.கி.

பயன்கள்: அதிக அளவில் பி வைட்டமின்கள், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் இருப்பதால் இந்தப் பற்றாக்குறைகளில் பெரிதும் உதவுகிறது.

இருதய டானிக் என்று இந்தப் பழம் வருணிக்கப்படுகிறது.

alaguraj
28-08-2007, 12:34 PM
எலுமிச்சம் பழம்

100 கிராமில்:

நீர் 85.01%
மாவுச்சத்து 11.1%
தாதுக்கள் 0.3%
கால்சியம் 70 மி.கி.
இரும்பு 2.3மி.கி.
புரோட்டின் 1.0%
கொழுப்பு 0.9%

நார்ச்சத்து 1.0%
பாஸ்பரஸ் 10 மி.கி.
வைட்டமின் சி 39 மி.கி.

alaguraj
28-08-2007, 12:35 PM
தர்பூசணி

ஆப்ரிக்காவின் விளிம்புநிலைப் பகுதிகள்தான் இதன் தாயகம்.

முக்கிய சீஸன்: ஜனவரி முதல் பிப்ரவரி,

ஜூன் முதல் ஜூலை.

கலோரி அளவு: ஒரு 100 கிராமுக்கு 16 கி.கலோரி.

100 கிராமில்:

நீர் 95.7%
மாவுச்சத்து 3.8%
கால்சியம் 0.1%
இரும்பு0.2மி.கி.
வைட்டமின் ஈ 1 மி.கி.
புரோட்டின் 0.1%
கொழுப்பு 0.2%
பாஸ்பரஸ் 0.01%
வைட்டமின் பி1 2.0 மை.கி.

பயன்கள்: இரத்த சோகை, மன அழுத்தம், சிறுநீரகப் பாதைத் தொற்று உள்ளவர்கள், இரத்த அழுத்தம் போன்றவற்றில் பெரிதும் உதவுகிறது.

alaguraj
28-08-2007, 12:37 PM
சாத்துக்குடி

100 கிராமில்:

நீர் 84.6%
மாவுச்சத்து 10.9%
கால்சியம் 0.09%
இரும்பு 0.3மி.கி.
வைட்டமின் சி 63.மி.கி.
புரோட்டின் 1.5%
கொழுப்பு 1.0%
பாஸ்பரஸ் 0.02%

வைட்டமின் ஏ 26IU

alaguraj
28-08-2007, 12:37 PM
பப்பாளி

டச்சு வணிகர்களால் 16_ம் நூற்றாண்டில் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது இந்தப் பழம்.

முக்கிய சீஸன்:

ஜூன் முதல் ஆகஸ்ட் வரை.

கலோரி அளவு:

ஒரு 100 கிராமுக்கு 32 கி.கலோரி.

100 கிராமில்:

நீர் 89.6%
மாவுச்சத்து 9.5%
தாதுக்கள் 0.4%
கால்சியம் 17 மி.கி.
இரும்பு 0.4மி.கி.
வைட்டமின் சி 40_136 மி.கி.
புரோட்டின் 0.5%
கொழுப்பு 0.1%
நார்ச்சத்து 0.8%
பாஸ்பரஸ் 13 மி.கி.
வைட்டமின் ஏ 2020IU

பயன்கள்:

அதிக வைட்டமன் சி யும், வைட்டமின் ஏ யும் இருப்பதால் இந்தப் பற்றாக்குறைகளில் இதன் பலன் அதிகம். தவிர இதில் இருக்கிற பல்வேறு விதமான என்ஸைம்கள் கான்ஸர் செல்களுக்கு எதிரானவை. முதுமைகூடி வயதாவதைத் தடுப்பதில் பப்பாளி பெரும் பங்கு வகிக்கிறது.

alaguraj
28-08-2007, 12:39 PM
பலாப்பழம்:

100 கிராமில்:

நீர் 77.2%
மாவுச்சத்து 17.9%
தாதுக்கள் 0.8%
கரோட்டின் 175 மை.கி.
ரிபோபிளேவின் 0.13மி.கி.
வைட்டமின் சி 7மி.கி.
புரோட்டின் 1.9%
இரும்பு 0.5%
நார்ச்சத்து 1.1%
தயாமின் 0.03மி.கி.
நியாசின் 0.4மி.கி.
ஒரு 100 கிராமில் கலோரி 317 கி.கலோரி:

alaguraj
28-08-2007, 12:40 PM
பேரீச்சம் பழம்

100 கிராமில்:

நீர் 15.3%
மாவுச்சத்து 75.8%
தாதுக்கள் 2.1%
கால்சியம் 120 மி.கி.
இரும்பு 7.3 மி.கி.
தயாமின் 0.01 மி.கி.
நியாசின் 0.9 மி.கி.
புரோட்டின் 2.5%
கொழுப்பு 0.4%
நார்ச்சத்து 3.9%
பாஸ்பரஸ் 50 மி.கி.
கரோட்டின் 26 மை.கி.
ரிபோபிளேவின் 0.02மி.கி.
வைட்டமின் சி 3 மிகி.

alaguraj
28-08-2007, 12:41 PM
அமிலம் நிறைய உள்ளவை _ ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, அன்னாசி.

சிறிது அமிலம் உள்ளவை _ ஆப்பிள், பியர்ஸ், பீச், ஏப்ரிகாட், செர்ரி, ப்ளம், நெல்லி, மாம்பழம், பெர்ரி பழ வகைகள்.

alaguraj
28-08-2007, 12:41 PM
பழங்களை ஏன் சாப்பிடவேண்டும்?

1. நம் உடலைப் போல பழங்களில் 80 சதவிகிதப் பகுதி தண்ணீரால் ஆனது. இதனால் நம் உடலின் தண்ணீர் தேவை பெரும்பகுதி பூர்த்தி அடைவதுடன், கூடவே அருமையான உயிர்ப்பொருட்களும் நமக்குக் கிடைக்கிறது.

2. நம் உடலைப் பாழாக்குகிற கெட்ட கொலஸ்டிரால் ஒரு இம்மி அளவுகூட பழங்களில் இல்லை.

3. பழங்கள் நம் ஞாபகசக்தியை அதிகரிக்கின்றன.

4. மிகவும் சக்தி நிறைந்த பழங்கள் கூட மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

5. நார்ச்சத்து பழங்களில் அதிகம் கிடைக்கிறது. இதனால் படு சுலபமாக இருதயப் பிரச்னைகளைத் தீர்க்க முடியும்.


பழங்களை எப்போது, எப்படிச் சாப்பிட வேண்டும்?

சாப்பிடும்போது கூடவே பழங்களைச் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டபிறகு உடனே அடுத்ததாகவும் பழங்களைச் சாப்பிடக்கூடாது.

பழங்களை எப்போதும் வெறும் வயிற்றில் தான் சாப்பிட வேண்டும்.

மற்ற உணவுகளைப் போல பழங்கள் வயிற்றில் ஜீரணம் செய்யப்படுவதில்லை. பழங்கள் ஏற்கெனவே ஜீரணம் செய்யப்பட்ட நிலையிலேயே நமக்குக் கிடைக்கின்றன.

நன்கு பழுத்த பழங்களைச் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுங்கள். நன்கு பழுத்த நிலையில் பழங்கள் அதன் சக்திகளை மெல்ல இழக்க ஆரம்பித்திருக்கும்.

நிறைய பூச்சி மருந்துகள் பயன்படுத்தப்படுவதால் எந்தப் பழத்தின் தோலிலும் நச்சுக்கள் இருக்கும். நச்சுக்களை போக்க சாப்பிடும்முன் நன்கு கழுவி விடுங்கள்.

சிவா.ஜி
28-08-2007, 01:07 PM
பழங்களின் அகராதியை தொகுத்தளித்த விதம் மிக அருமை அழகுராஜ்.கடைசியில் சொல்லியிருக்கும் எச்சரிக்கை மிக மிக அவசியமானது.நன்றி

praveen
28-08-2007, 01:47 PM
ஆம் நண்பரே, பழங்கள் எளிதில் பூச்சிகளினால் கவரப்படுவதால் பூச்சிகொல்லி பாவிக்கிறார்கள்.

முடிந்தால் தோல் நீக்கி பயண்படுத்த இயலும் பழங்களில் தோலை முற்றிலும் நீக்கி (நன்கு கழுவிய பின்னர்) உடனே சாப்பிட்டு விட வேண்டும், நறுக்கிய பின் சிறிது நேரம் வைத்திருக்க கூடாது.

தகவலுக்கு நன்றி நண்பரே.

alaguraj
29-08-2007, 07:38 AM
[QUOTE=asho;264300]உடனே சாப்பிட்டு விட வேண்டும், நறுக்கிய பின் சிறிது நேரம் வைத்திருக்க கூடாது.
[QUOTE]

புதிய* த*க*வல் இது...ந*றுக்கிய பழ*துண்டுக*ளை ரெப்ரிரேட்ட*ரில் வைத்து பின் சாப்பிடலாமா?

praveen
29-08-2007, 07:49 AM
புதிய தகவல் இது...நறுக்கிய பழதுண்டுகளை ரெப்ரிரேட்டரில் வைத்து பின் சாப்பிடலாமா?

கூடுமானவரை நறுக்காமல் அப்படியே குளிர்பதன பெட்டியில் வைத்து பின் பயண்படுத்தலாம், பாதி நறுக்கி பின் மீதி என்றால் எவ்வளவு விரைவில் திரும்ப உண்ண தேவைப்படுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் உபயோகித்தாக வேண்டும்.

ஓவியன்
29-08-2007, 11:18 AM
ஆகா அழகு அருமையான விடயங்களை தொகுத்தளிக்கின்றீர்கள் பாராட்டுக்கள் − தொடர்ந்து இவ்வாறான பயனுள்ள விடயங்களைத் தாருங்கள்!.

மீனாகுமார்
29-08-2007, 12:26 PM
இது போன்ற விபரங்களைத்தான் நான் நீண்ட நாட்களாக தேட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். இதோ அருமை நண்பர் அழகு கொடுத்து விட்டாரே.. மிக்க மகிழ்ச்சி...

மேலும் ஒவ்வொரு மனிதனும் தினமும் எவ்வளவு அளவு ஒவ்வொரு சத்து உணவும், வைட்டமின்களும் உட்கொள்ள வேண்டும் என்றும் அறிய வேண்டும். தகவல் தெரிந்தால் கொடுங்கள்...

இவையெல்லாம் ஒருமுறை எழுதிவைத்து பத்திரப்படுத்தி விட்டால் காலாகாலத்திற்க்கும் சந்ததி சந்ததியாக பயன்படுத்தலாமல்லவா...

நன்றி அழகு....

மாதவர்
29-08-2007, 05:32 PM
பழம் தின்று கொட்டை போட்டவர் என்றால் இதுதானா?

lolluvathiyar
30-08-2007, 06:44 AM
அருமையான தகவல் அழகுராஜ், நான் பழங்களுக்கு அடிமை, எந்த பழமானாலும் விரும்பி சாபிடுபவன்.


நறுக்கிய பின் சிறிது நேரம் வைத்திருக்க கூடாது.


சமைத்த பன்டங்கள் தான் விரைவில் கெட்டு போகும், ஆனால் சமைக்காத பன்டங்கள் (பழங்கள்) நறுக்கி சுத்தமான இடத்தில் ஈ பொய்காத வன்னம் மூடி வைத்திருந்தாள் சீக்கிரம் கெட்டு போகாது.
ருசி மட்டுமே மாரும்



நறுக்கிய பழதுண்டுகளை ரெப்ரிரேட்டரில் வைத்து பின் சாப்பிடலாமா?

நறுக்கிய பழத்தை பிரி ஜில் வைக்க வேண்டிய அவசியம் என்ன. அப்ப்டி ஒரு தேவை ஏற்பட்டாலும் சாப்பிடுவது தவறில்லை.



மேலும் ஒவ்வொரு மனிதனும் தினமும் எவ்வளவு அளவு ஒவ்வொரு சத்து உணவும், வைட்டமின்களும் உட்கொள்ள வேண்டும் என்றும் அறிய வேண்டும். தகவல் தெரிந்தால் கொடுங்கள்...



கிடைக்கிறதை சாப்பிடவேண்டும், அது தான் சத்து எவ்வளவு வைட்டமின், சத்து என்று கனக்கு பார்க்க கூடாது.

ஒரு சிறு குறிப்பு : தினமும் வெறும் வயிற்றில் அரை மூடி தேங்காய் பச்சையாகவும், ஒரு வாழை பழம் மட்டும் சாப்பிட்டால் போதும் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் அடங்கி விடும். மற்றவை எல்லாம் காலி இடத்தை நிறப்பி பசியில்லாமல் வைக்க தான் பயன் படும்

alaguraj
30-08-2007, 07:31 AM
ஒரு சிறு குறிப்பு : தினமும் வெறும் வயிற்றில் அரை மூடி தேங்காய் பச்சையாகவும், ஒரு வாழை பழம் மட்டும் சாப்பிட்டால் போதும் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் அடங்கி விடும். மற்றவை எல்லாம் காலி இடத்தை நிறப்பி பசியில்லாமல் வைக்க தான் பயன் படும்

வாத்தியாரின் தொப்பை ரகசியம் இதுதானோ...?

மீனாகுமார்
30-08-2007, 11:44 AM
கிடைக்கிறதை சாப்பிடவேண்டும், அது தான் சத்து எவ்வளவு வைட்டமின், சத்து என்று கனக்கு பார்க்க கூடாது.



உண்மைதான்... (ஜாக்கிரதையைதாத்தான் இருக்கணும் போல.. கொஞ்சம் அசந்த நம்மளையே சாப்பிட்ருவீங்க போல.. :medium-smiley-002: ) ஆனா.. நாம தொடர்ந்து நமக்கு கிடைக்கிறதயே சாப்பிட்டோம்னா... சில முக்கிய சத்துக்களைச் சாப்பிடாமலேயே போக வாய்ப்பிருக்கிறது... உதாரணமா.. வைட்டமின் ஏ உள்ள உணவை சாப்பிடவேயில்லைன்னா... கண் கோளாறு வரலாமில்ல...

நம் சாப்பாடு தான் நம் நலத்தை நிரணயிக்கும் மிக முக்கிய காரணி. இதனாலேயே அனைத்து வித உணவுகளையும் உண்ண வேண்டும் என்பர். குறைபாடு இருப்பின், பின்னாளில் அது நலக்குறைவினைத் தரும். எனவே தான், நாம் நம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் உண்கின்றோமா என்று கவனித்துப் பார்த்தல் அவசியம். இதைத்தான் சமநிலை உணவு (balanced food) என்று கூறுவர்.

மாதவர்
11-11-2007, 02:33 PM
கூடிய வரை தோல்களை தவிர்ப்பது நல்லது

அக்னி
11-11-2007, 03:07 PM
பழங்கள் பற்றிய பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி...
தோலிலும் அதிகளவு சத்துக்கள் அடங்கியிருப்பதால், உணவில் சேர்த்துக்கொள்வது (அதற்காக எல்லாப் பழங்களின் தோலையுமல்ல. அப்பிள், ஆரஞ்சு போன்ற...) சிறந்தது என்று சொல்வார்களே...
சில மேலைத்தேய உணவு வகைகளில், சில பழங்களின் தோலை இட்டு (உதாரணமாக, ஒரு வகை மீன் உணவு சமைக்கையில், ஆரஞ்சு தோலை பயன்படுத்துவார்கள்.) சமைப்பதை நான் பார்த்திருக்கின்றேன். சுவைத்துமிருக்கின்றேன்...

யவனிகா
11-11-2007, 03:11 PM
உபயோகமான தகவல்கள். நன்றி அழகு ராஜா அவர்களே!

xavier_raja
13-11-2007, 10:55 AM
இதைவிட முழுநெல்லிக்காயில் நிறைய சத்து இருக்கிறது (ஒருவேளை அது பழவகைகளில் வரவிலையோ)