PDA

View Full Version : தீட்டு (துடக்கு)



இலக்கியன்
28-08-2007, 09:50 AM
மனிதனாக
பிறந்தாலும் −அது
மற்றவர்க்கு துடக்கு

வாழ்க்கையின்
நடுவில் வீட்டுக்கு
விலக்கு

பாடையில்
போனாலும்−அதுவும்
துடக்கு

யார் ஜயா போட்டது
இந்த தப்புக்கணக்கு

தீட்டு என்பது சுத்தம் கருதி முன்னோர்கள் வகுத்த ஒரு நியதி
அது இப்போது அதீத நம்பிக்கையாக கடைப்பிடிப்பது சரியா
என்கின்ற எண்ணப்பாட்டில் கிறுக்கிய ஒரு கிறுக்கல் இது
இதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?


துடக்கு− தீட்டு
பாடை− இறந்தவரை சுமக்க பயன்படுவது

அக்னி
28-08-2007, 09:55 AM
தீட்டுக்கள் கட்டுகளல்ல...
மதநம்பிக்கை என்ற,
முகமூடி தரித்த,
விஞ்ஞானத்தின் ஓர் நிலை...
மூடநம்பிக்கைகளாகுவதே,
எமது வேதனை...

வித்தியாசமான ஒரு பார்வைக்கு..,
பாராட்டுக்கள் இலக்கியன்...

இலக்கியன்
28-08-2007, 09:57 AM
தீட்டுக்கள் கட்டுகளல்ல...
மதநம்பிக்கை என்ற,
முகமூடி தரித்த,
விஞ்ஞானத்தின் ஓர் நிலை...
மூடநம்பிக்கைகளாகுவதே,
எமது வேதனை...

வித்தியாசமான ஒரு பார்வைக்கு..,
பாராட்டுக்கள் இலக்கியன்...

ஆம் நண்பரே நன்றாக் சொன்னீர்கள் உங்கள் எண்ணங்களைப்பகிர்ந்தமைக்கு நன்றி

சிவா.ஜி
28-08-2007, 09:58 AM
நல்ல கவிதை...எளிமையாய் உண்மை சொல்கிறது. இவை மூடநம்பிக்கைகளால் ஏற்படுத்தப்பட்டதல்ல இலக்கியன்.சுத்தம் கருதிதான்.துக்கம் நிகழ்ந்த வீட்டுக்குப் போய்வந்தால் குளிக்க வேண்டுமென்பது சவத்திலிருந்து ஏதாவது கிருமிகள் பரவக்கூடுமென்பதாலும்,வீட்டு விலக்கு என்பது....பென்களுக்கு ஏற்படும் சோர்விலிருந்து அவர்களுக்கு ஒரு தற்காலிக கட்டாய ஓய்வளிக்கவும்தான். அதே போல்தான் குழந்தை பிறப்பிலும் சுத்தம்தான் நோக்கம்.ஆனால் தீட்டு தொடக்கூடாது என்பதெல்லாம் முட்டாள்தனம்.

இனியவள்
28-08-2007, 09:59 AM
துடக்கில் தடக்கி விழுந்து
எழும்ப முடியாமல் கூட
வருபவர்களையும் சேர்த்து
வீழ்த்துகிறான் மனிதன்...

அழகிய கருத்து கவி வடிவில்
வாழ்த்துக்கள் இலக்கியன்

பூமகள்
28-08-2007, 10:39 AM
நச் என்று சொன்னீர்கள்..இலக்கியரே...
மனிதனே மனிதனை ஒதுக்கும் போக்கு... சாதியால்.. கொடுமையான விசயம்..
பெண்களுக்கு ஓய்வு கொடுக்கும் நோக்கிலும், இழவு வீட்டிலிருந்து வரும் போதும் சுத்தத்திற்காய் இருக்க வேண்டி
சொன்ன சம்பிரதாயங்கள் அவை..

ஆனால், பின்பு மாறி... அதுவே பெரிய தடையாய்
தீண்டத்தகாத விசயமாய் பார்க்கத் தொடங்கி தப்புக் கணக்கு ஆயிற்று.
அழகான கருத்து. வாழ்த்துக்கள்.:icon_give_rose:

இளசு
28-08-2007, 09:06 PM
காலம் மாறும்போது அதற்கேற்ப நியாயமான சில மாற்றங்கள்
பழைய நம்பிக்கைக்களில் ஏற்படவேண்டும்..

அதில் தாமதவாதால் வந்த வினைகளில் இதுவும் ஒன்று..

இதுபற்றி விரிவான விவாதத்திரி ஒன்று நம் மன்றத்தில் உண்டு..


சுட்டி சிக்கினால் தருகிறேன்..

இலக்கியன்
29-08-2007, 05:52 PM
கருத்துக்கள் தந்த சிவா இனியவள் பூமகள் இளசு அண்ண அணைவருக்கும் நன்றி