PDA

View Full Version : பஞ்சு மேகம்...!!



பூமகள்
28-08-2007, 06:54 AM
http://img39.picoodle.com/img/img39/9/8/27/poomagal/f_29862974302m_450c8b1.jpg

காற்று வந்து
காது துடைத்து
கலைத்துப் போகும்
பஞ்சு மேகம்...!!

விண்ணில் கோடி
விதைகள் கொண்டு
விதைத்த பருத்தி
பஞ்சு மேகம்...!!

நட்சத்திர மழலை
கண்ணாமூச்சி ஆட
வைக்கும் பிஞ்சு
பஞ்சு மேகம்..!!

நனைந்த நிலவு
நுதல் முற்றும்
சுற்றிக் கொள்ளும்
பஞ்சு மேகம்...!!

பகலவன் கொஞ்சம்
இளைப்பாறிச் செல்லும்
சொகுசு பக்கணம்
பஞ்சு மேகம்...!!

கடலோடு
மணம் கொண்டு
கருவாகி
மழை ஈன்று
பஞ்சரிக்கும்
பஞ்சு மேகம்...!!

வானத்தோடு
மின்னல் சண்டை
அமைதித் தூது
வெளிர்
பஞ்சு மேகம்...!!

அண்டையோடு
சண்டையிட்டும்
அன்பு குழகி
ஆர்ப்பறிக்கும்
தரணி மெச்சும்
பஞ்சு மேகம்...!!


அர்த்தங்கள்:
பஞ்சரித்தல் - கொஞ்சிப் பேசுதல்
பக்கணம் - ஊர், கிராமம்
குழகுதல் - கொஞ்சுதல், வசீகரித்தல்

அமரன்
28-08-2007, 08:13 AM
ஆஹா..அழகு..தொடர்க...(விரிவாகப் பின்னர்)

~~அன்புடன் அண்ணா

சிவா.ஜி
28-08-2007, 08:24 AM
காற்று வந்து
காது துடைத்து
கலைத்துப் போகும்
பஞ்சு மேகம்...!!
வெண்மேகக்கூட்டத்தின் காதின் கறுப்பழுக்கை காற்று துடைத்துவிட,மீண்டும் வெள்ளைப் பஞ்சாய் மேகம் ஜொலிக்கும் காட்சி கண்ணில் தெரிகிறது..
விண்ணில் கோடி
விதைகள் கொண்டு
விதைத்த பருத்தி
பஞ்சு மேகம்...!!
வர்ணனை மிக அழகு..பருத்திக்காடாய் பிஞ்சுமேகங்கள்...

நனைந்த நிலவு
நுதல் முற்றும்
சுற்றிக் கொள்ளும்
பஞ்சு மேகம்...!!

பகலவன் கொஞ்சம்
இளைப்பாறிச் செல்லும்
சொகுசு பக்கணம்
பஞ்சு மேகம்...!!
அசத்தல் கற்பனை..அதிலும் அறியாத புதுச்சொல் பிரயோகம்..அறியவைத்ததற்கு நன்றி..
கடலோடு
மணம் கொண்டு
கருவாகி
மழை ஈன்று
பஞ்சரிக்கும்
பஞ்சு மேகம்...!!
ஆஹா...கடலிலிருந்து நீர் எடுக்கும் செயல் இங்கு இல்லறமாய் மிளிருகிறது..
வானத்தோடு
மின்னல் சண்டை
அமைதித் தூது
வெளிர்
பஞ்சு மேகம்...!!

அண்டையோடு
சண்டையிட்டும்
அன்பு குழகி
ஆர்ப்பறிக்கும்
தரணி மெச்சும்
பஞ்சு மேகம்...!!
[/QUOTE]

நல்ல கற்பனை வளத்தோடு கூடிய அழகான கவிதை.வாழ்த்துக்கள் பூமகள்

பூமகள்
28-08-2007, 08:30 AM
வெண்மேகக்கூட்டத்தின் காதின் கறுப்பழுக்கை காற்று துடைத்துவிட,மீண்டும் வெள்ளைப் பஞ்சாய் மேகம் ஜொலிக்கும் காட்சி கண்ணில் தெரிகிறது..
வர்ணனை மிக அழகு..பருத்திக்காடாய் பிஞ்சுமேகங்கள்...

அசத்தல் கற்பனை..அதிலும் அறியாத புதுச்சொல் பிரயோகம்..அறியவைத்ததற்கு நன்றி..
ஆஹா...கடலிலிருந்து நீர் எடுக்கும் செயல் இங்கு இல்லறமாய் மிளிருகிறது..
நல்ல கற்பனை வளத்தோடு கூடிய அழகான கவிதை.வாழ்த்துக்கள் பூமகள்
மிக்க நன்றி சிவா அண்ணா. ஆழமான அலசலுடன் கூடிய விமர்சனம் கொடுத்தீர்கள். :icon_give_rose:

பூமகள்
28-08-2007, 08:32 AM
ஆஹா..அழகு..தொடர்க...(விரிவாகப் பின்னர்)

~~அன்புடன் அண்ணா
நன்றிகள் அமர் அண்ணா.. உங்கள் பின்னூட்ட விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன்....!! :icon_hmm:

அக்னி
28-08-2007, 09:24 AM
ஒரு கதிரவன்... ஒரு நிலா...
கணக்கில்லா நட்சத்திரங்கள்...
இவை பொதிந்த வானத்தின்,
மென்மைத் துகில்...
முகில்...

பாராட்டுக்கள் பூமகள்...
பஞ்சுமேகம் வர்ணிப்புக்கள் அழகு...
பக்கணம் என்றால் என்ன..?

இலக்கியன்
28-08-2007, 09:26 AM
பஞ்சு மேகம் தொட்டு சென்றது என் உள்ளத்தையும்
அழகான கற்பனை வளம் வாழ்த்துக்கள்

உங்களுக்கு300 இ பணம் என் அன்பளிப்பு

பூமகள்
28-08-2007, 09:30 AM
ஒரு கதிரவன்... ஒரு நிலா...
கணக்கில்லா நட்சத்திரங்கள்...
இவை பொதிந்த வானத்தின்,
மென்மைத் துகில்...
முகில்...

பாராட்டுக்கள் பூமகள்...
பஞ்சுமேகம் வர்ணிப்புக்கள் அழகு...
பக்கணம் என்றால் என்ன..?

அழகான பின்னூட்டக் கவி. நன்றிகள் அக்னியாரே..!
உங்கள் கேள்விக்கான பதில் என் கவியிலேயே உள்ளது. கவனிக்கவில்லையா நீங்கள் ??

அர்த்தங்கள்:
பஞ்சரித்தல் - கொஞ்சிப் பேசுதல்
பக்கணம் - ஊர், கிராமம்
குழகுதல் - கொஞ்சுதல், வசீகரித்தல்

பூமகள்
28-08-2007, 09:33 AM
பஞ்சு மேகம் தொட்டு சென்றது என் உள்ளத்தையும்
அழகான கற்பனை வளம் வாழ்த்துக்கள்

உங்களுக்கு300 இ பணம் என் அன்பளிப்பு
மிக்க நன்றி இலக்கியரே...!
உங்கள் விமர்சனத்திற்கும் இ−பண அன்பளிப்பிற்கும்.:icon_blush:
தொடர்ந்து விமர்சியுங்கள்.

அக்னி
28-08-2007, 09:42 AM
அழகான பின்னூட்டக் கவி. நன்றிகள் அக்னியாரே..!
உங்கள் கேள்விக்கான பதில் என் கவியிலேயே உள்ளது. கவனிக்கவில்லையா நீங்கள் ??


விடுபட்டு விட்டது, மன்னிக்க...
மற்றைய சொற்களைக் கவனித்திருந்தேன்... முதலும் மூன்றாவதும் பட்ட பார்வையில்,
இரண்டாவது தவறிவிட்டது... என் பிழைதான்...
மூன்றுமே எனக்குப் புதிய சொற்கள்தான்.
மீண்டும் பாராட்டுக்கள்...

சுகந்தப்ரீதன்
28-08-2007, 09:47 AM
பூ கவிதை
பஞ்சு போன்ற கவிதையாய்!

வாழ்த்துக்கள்...சகோதரி!(ரக்சாபந்தன்)

இனியவள்
28-08-2007, 09:49 AM
வாழ்த்துக்கள் தோழியே..

பஞ்சு பஞ்சாய் பறந்து
ஓட்டிக்கொள்கிறது உங்கள்
கவிதை எங்கள் மனதில்
தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்

பூமகள்
28-08-2007, 10:13 AM
பூ கவிதை
பஞ்சு போன்ற கவிதையாய்!
வாழ்த்துக்கள்...சகோதரி!(ரக்சாபந்தன்)

நன்றிகள் சகோதரரே... உங்களுக்கும் என் அன்பு ரக்சாபந்தன் வாழ்த்துக்கள்...!

பூமகள்
28-08-2007, 10:16 AM
வாழ்த்துக்கள் தோழியே..
பஞ்சு பஞ்சாய் பறந்து
ஓட்டிக்கொள்கிறது உங்கள்
கவிதை எங்கள் மனதில்
தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்

மிக்க நன்றிகள் தோழி. உங்களின் அன்பிற்கு எம் நன்றிகள்.

jpl
28-08-2007, 11:16 AM
மலைச் சாரலில் பஞ்சுப் பொதி மேகங்கள்
நம்மை கடந்து செல்கையில் நாம் உணரும் ஒரு விதக்
குளுமை உணர்வினை உணரமுடிகிறது இக்கவிதையில்
நுட்பமாய்

பூமகள்
28-08-2007, 11:29 AM
மலைச் சாரலில் பஞ்சுப் பொதி மேகங்கள்
நம்மை கடந்து செல்கையில் நாம் உணரும் ஒரு விதக்
குளுமை உணர்வினை உணரமுடிகிறது இக்கவிதையில்
நுட்பமாய்

நன்றி அன்பரே..
மிக்க மகிழ்ச்சி உங்களை அவ்விதம் உணரவைத்தமைக்கு.

paarthiban
28-08-2007, 11:41 AM
அருமை அருமை அருமை. பஞ்சு மேகம் பற்றி கற்பனைகள் அல்லாமே அருமை பூம்கள் அவர்களே

kampan
28-08-2007, 11:53 AM
என்ன ஒரு கவிதை
மேகத்தை உருட்டி பஞ்சாக்கி
பஞ்சை பிசைந்து பந்தாக்கி
வானத்தை குடைந்து மைதானமாக்கி
தமிழை பந்தாட வைத்த
உங்கள் திறமை
எம்மை திண்டாட வைக்கிறது.

பூமகள்
28-08-2007, 11:58 AM
அருமை அருமை அருமை. பஞ்சு மேகம் பற்றி கற்பனைகள் அல்லாமே அருமை பூம்கள் அவர்களே

நன்றிகள் சகோதரர் பார்த்திபன்.

பூமகள்
28-08-2007, 12:00 PM
என்ன ஒரு கவிதை
மேகத்தை உருட்டி பஞ்சாக்கி
பஞ்சை பிசைந்து பந்தாக்கி
வானத்தை குடைந்து மைதானமாக்கி
தமிழை பந்தாட வைத்த
உங்கள் திறமை
எம்மை திண்டாட வைக்கிறது.
அழகான கவியுடன் கூடிய பின்னூட்டம் அருமை சகோதரர் கம்பன் அவர்களே..
நன்றிகள்.

ஷீ-நிசி
28-08-2007, 02:44 PM
(வெண்)பஞ்சுமேகம் ரொம்ப நல்லாருக்கு பூமகள்...

தொடருங்கள்....

பூமகள்
28-08-2007, 04:10 PM
(வெண்)பஞ்சுமேகம் ரொம்ப நல்லாருக்கு பூமகள்...
தொடருங்கள்....
தங்களின் பின்னூட்டத்திற்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றிகள் ஷீ−நிசி அண்ணா.:nature-smiley-008:

இளசு
28-08-2007, 08:57 PM
மனம் வருடும் மென்வர்ணனைகளும்
மனம் அறிய புதிய சொற்களுமாய்..

இரட்டை சுகம் அளித்த இளங்கவிதை!!

வாழ்த்துகள் பூமகள்!

பூமகள்
29-08-2007, 08:11 AM
மனம் வருடும் மென்வர்ணனைகளும்
மனம் அறிய புதிய சொற்களுமாய்..
இரட்டை சுகம் அளித்த இளங்கவிதை!!
வாழ்த்துகள் பூமகள்!
மிக்க நன்றி இளசு அண்ணா. உங்களின் வாழ்த்து பெறுவதில் மகிழ்ச்சி எனக்கு...........:nature-smiley-008:

பென்ஸ்
29-08-2007, 08:35 AM
பூமகளை மன்ற*த்தில் முதலில் வரவேற்க்கிறேன்....

பஞ்சு மேகம் என்று ஒரு பஞ்ச் கவிதை...
காதலை பாடாதவரை கூட காணலாம்
இயற்கையை ரசிக்காதவர் எவர்...

இந்த மேக பஞ்சில் படுத்துறங்க எனக்கும் மோகம் உண்டு
என்றாவது இப்பஞ்சில் மிதக்கவும், என் சிறகுகளுடன்

அதுவரை உங்கள் கவிதையில்...

வாழ்த்துகள்...

ஆதவா
29-08-2007, 08:38 AM
பூமகளை மன்ற*த்தில் முதலில் வரவேற்க்கிறேன்....

பஞ்சு மேகம் என்று ஒரு பஞ்ச் கவிதை...
காதலை பாடாதவரை கூட காணலாம்
இயற்கையை ரசிக்காதவர் எவர்...

இந்த மேக பஞ்சில் படுத்துறங்க எனக்கும் மோகம் உண்டு
என்றாவது இப்பஞ்சில் மிதக்கவும், என் சிறகுகளுடன்

அதுவரை உங்கள் கவிதையில்...

வாழ்த்துகள்...

வாருங்கள் பென்ஸ். உங்களை வரவேற்கிறோம்...(:grin:)

பென்ஸ்
29-08-2007, 08:42 AM
வாருங்கள் பென்ஸ். உங்களை வரவேற்கிறோம்...(:grin:)

அதுக்கு ஏன் இப்படி பல்லை காட்டிகிட்டு...:icon_cool1:

ஆதவா
29-08-2007, 08:44 AM
அதுக்கு ஏன் இப்படி பல்லை காட்டிகிட்டு...:icon_cool1:

நீங்க மட்டும் பபில்கம் விடறீங்க. நியாயமா?

பூமகள்
29-08-2007, 08:44 AM
பூமகளை மன்ற*த்தில் முதலில் வரவேற்க்கிறேன்....
பஞ்சு மேகம் என்று ஒரு பஞ்ச் கவிதை...
காதலை பாடாதவரை கூட காணலாம்
இயற்கையை ரசிக்காதவர் எவர்...
இந்த மேக பஞ்சில் படுத்துறங்க எனக்கும் மோகம் உண்டு
என்றாவது இப்பஞ்சில் மிதக்கவும், என் சிறகுகளுடன்
அதுவரை உங்கள் கவிதையில்...
வாழ்த்துகள்...

மிக்க நன்றி பென்ஸ் அண்ணா. உங்களால் எம் கவி வாழ்த்தப்பட்டது கண்டு மகிழ்கிறேன்..............:icon_dance:

ஓவியன்
29-08-2007, 08:45 AM
இந்த மேக பஞ்சில் படுத்துறங்க எனக்கும் மோகம் உண்டு
என்றாவது இப்பஞ்சில் மிதக்கவும், என் சிறகுகளுடன்

அதுவரை உங்கள் கவிதையில்...

வாழ்த்துகள்...

ஆகா!

இளசு அண்ணா, பென்ஸ் அண்ணா, ஆதவா என்று மோதிரக் கைகளால் குட்டுப் படுகிறதே பூமகளின் இந்தக் கவிதை.....

பூ மகள் கவிதை அசத்தல் பாராட்டுக்கள்!

பூமகள்
29-08-2007, 08:54 AM
ஆகா!

இளசு அண்ணா, பென்ஸ் அண்ணா, ஆதவா என்று மோதிரக் கைகளால் குட்டுப் படுகிறதே பூமகளின் இந்தக் கவிதை.....

பூ மகள் கவிதை அசத்தல் பாராட்டுக்கள்!

ஆமாம்..ஓவியன் அண்ணா...
மன்றத்து வைர மோதிரங்களால் படிக்கப் பட்டு வாழ்த்தப்படுவது மிக்க மகிழ்ச்சி எனக்கு.........:icon_dance::nature-smiley-008:
நன்றிகள் ஓவியரே.. உமது பின்னூட்டத்திற்கு.

ஆதவா
29-08-2007, 08:55 AM
ஆகா!

இளசு அண்ணா, பென்ஸ் அண்ணா, ஆதவா என்று மோதிரக் கைகளால் குட்டுப் படுகிறதே பூமகளின் இந்தக் கவிதை.....

பூ மகள் கவிதை அசத்தல் பாராட்டுக்கள்!

என் கையில மோதிரமே இல்லீங்க.. இன்னும் விமர்சனமும் போடலை.... பொறுமையா எழுதுவோம்...

மனோஜ்
29-08-2007, 08:58 AM
மோகங்களை பேசவைத்து அழகு பார்த் பூமகளுக்கு என் நன்றிகள் அருமையான கவிதை வரிகள் நன்றி வாழ்த்துக்கள் தொடர்ந்து தருவதற்கு

ஓவியன்
29-08-2007, 09:04 AM
இன்னும் விமர்சனமும் போடலை.... பொறுமையா எழுதுவோம்...

ஆமா!

விமர்சனம் போடாததைத் தான் குட்டு என்று சொன்னேன். :sport-smiley-018:

ஓவியன்
29-08-2007, 09:05 AM
நீங்க மட்டும் பபில்கம் விடறீங்க. நியாயமா?

பபில்கம் என்ன பட்டமா?
விடுறதுக்கு.............?:sport-smiley-018:

ஆதவா
29-08-2007, 06:03 PM
மேகக் கவிதைகள்...

மேகம் எத்தனை மென்மையோ அத்தனை மென்மையும் ஈரமும் இக்கவிதையினுள்.. (மேகம் எத்தனைக் கொடூரமானது என்பதை அறிந்துகொள்ள என் "ஜெஸிகாவின் முதல் முத்தம்" கதையைப் படிக்கவும்.) மேகத்தைக் கருவாக்கி கவிதை உருவாக்கியமை அழகாக இருக்கிறது.

அத்தனை பத்திகளிலும் பஞ்சுமேகம் என்ற சொல்லை சேர்த்தியிருக்கவேண்டாம் என்று தோன்றுகிறது.. அது இன்றி படித்துப் பாருங்கள். பல இடங்கள் "அட" பல இடங்களில் "அடம்" போடுகிறது மனது.

ஆர்ப்பறிக்கும் அல்ல.. ஆர்ப்பரிக்கும்.

புதியவார்த்தைகள் கொண்டு வருவதை மிகவும் வரவேற்கிறேன். அதற்கான அர்த்தங்களைக் கொடுத்து (மானத்தைக் காப்பத்தினீங்க.)

உங்களது கவிதைக்கு இ-பணம் 500.

சாராகுமார்
31-08-2007, 09:27 AM
இனிமையான பஞ்சு கவிதை.பாராட்டுக்கள்.உங்களுக்கு 200 இ−பணம் பரிசு.புதிய வார்த்தைக்கு விளக்கம் அருமை.

பூமகள்
31-08-2007, 09:41 AM
மிக்க நன்றிகள் ஆதவா தம்பி விரிவான விமர்சனத்திற்கும் இ−பண அன்பளிப்பிற்கும்.

பூமகள்
31-08-2007, 09:43 AM
அன்பு சாரா சகோதரரின் இ−பண அன்பளிப்பிற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.
விமர்சித்த அனைவருக்கும் நன்றிகள்.

பிச்சி
31-08-2007, 01:48 PM
கவிதை பஞ்சு மாதிரி அழகாக இருக்கிறது. சூப்பர் அக்கா..

பூமகள்
31-08-2007, 01:56 PM
மிக்க நன்றி தங்கை பிச்சி.........!!:nature-smiley-008: