PDA

View Full Version : எக்சலில் உதவுங்களேன் (Copy Protected Xl)



ஓவியன்
28-08-2007, 05:13 AM
நண்பர்களே எனக்கு Microsoft Excel இல் ஒரு பிரச்சினை, அதாவது எனக்கு ஒரு Excel File ஐ கொப்பி பண்ண முடியாதவாறு Copy protection கொடுக்க உதவ முடியுமா?
நான் Protection கொடுத்த போது அந்த மூலப் பிரதியில் மட்டுமே மாற்றம் செய்ய முடியாமல் இருக்கிறது ஆனால் அதனை இன்னும் ஒரு வெறுமையான பைலில் கொப்பி(Ctrl+A - > Ctrl+C - > Ctrl+V) பண்ணி பின்னர் எடிட் பண்ண முடிகிறது. எனக்கு அப்படி செய்ய முடியாத வாறு செய்ய வேண்டும்......?

எனக்கு இன்று அலுவலகத்தில் இது பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது, நண்பர்களே இந்த ஓவியனுக்கு உதவுங்களேன்?

மதி
28-08-2007, 06:00 AM
ஓவியன்..
இதை VBA மேக்ரோ மூலமாக சரி செய்ய இயலும்..மேற்தகவலுக்கு இந்த சுட்டிக்கு செல்லுங்கள்..
http://www.vbaexpress.com/kb/getarticle.php?kb_id=373
நான் இப்போது தான் முயன்று பார்த்தேன்.. நன்றாகவே வேலை செய்கிறது..
ஏதேனும் பிரச்சனை இருப்பின் சொல்லுங்கள்..

ஓவியன்
28-08-2007, 06:20 AM
மிக்க நன்றி:food-smiley-011:மதி முயன்று பார்கின்றேன்.

kampan
28-08-2007, 07:47 AM
அருமையான இணையத்தளம் நன்றி மதி. வேலைசெய்கிறது. இவ்வாறான இன்னும் பல துணுக்குகளை எங்களுக்காக நீங்கள் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மதி
28-08-2007, 09:01 AM
நானொரு கத்துக்குட்டி..என்ன கடந்த மூன்று வருடங்களாக என் அநேக நேரம் எக்ஸெலில் போராடவே சரியாக இருக்கிறது.
ஏதேனும் சந்தேகம் இருப்பின் ப*திவிட்டால்..முடிந்தவரை இணையத்தில் தேடித் தர முயல்கிறேன்.

மலர்
28-08-2007, 10:22 AM
நன்றி மதி..... அருமையான சுட்டி
நானும் இதை முயன்று பார்த்தேன்...நன்றாக வேலை செய்கிறது..

praveen
28-08-2007, 11:22 AM
மிக்க நன்றி:food-smiley-011:மதி முயன்று பார்கின்றேன்.

என்ன OVN முயன்று பார்த்தீர்களா, முடியவில்லை. சரியாக வரவில்லை என்றால் கூறுங்கள், நண்பர்கள் விளக்குகிறோம்.

aren
28-08-2007, 01:48 PM
நன்றி நண்பர்களே. நானும் இதை முயன்று பார்க்கிறேன்.

ஓவியன்
29-08-2007, 03:36 AM
என்ன OVN முயன்று பார்த்தீர்களா, முடியவில்லை. சரியாக வரவில்லை என்றால் கூறுங்கள், நண்பர்கள் விளக்குகிறோம்.

அன்பான அசோ மற்றும் மதி!

அந்த லிங்கிலுள்ள வழிமுறை மூலம் செய்து பார்த்த போது, எனது கணினியில் நன்றாகவே வேலை செய்கிறது. ஆனால் அதனை இன்னும் ஒரு கணினியில் (முக்கியமாக Macro, Turn off ஆக இருக்கும் கணினியில்) பாவிக்கையில் கொப்பி, கட், பேஸ்ட் பண்ணக் கூடியதாக இருக்கிறதே.....?

இப்படி ஒரு செய்தி வருகிறதே........?


http://img30.picoodle.com/img/img30/9/8/28/f_002m_9cf075f.jpg

மலர்
29-08-2007, 04:22 AM
Tools -> Macro -> Security -> Security Level -> Low வைத்து பாருங்கள்....

praveen
29-08-2007, 04:59 AM
Tools -> Macro -> Security -> Security Level -> Low வைத்து பாருங்கள்....

மலர் அவர் அப்படி வைத்து தான் செய்திருக்கிறார், ஆனால் அவர் அனுப்பிய பைலை பாவிப்பவர் அப்படி செய்ய வேண்டுமே, பிறரை அப்படி செய்ய வைக்க முடியாததால் தான் பிரச்சினையே,

மேலும் பிறரை அப்படி செய்ய வைக்க force செய்ய வேண்டியிருக்கும், அவர்கள் ஏன் என்று கேள்வி கேட்பார்களே?.

பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை தான். நீங்கள் சர்டிபிகேட் சேர்த்து தான் பார்க்க வேண்டும். நான் தேடி பதில் இருந்தால் பதிகிறேன்.

மதி
29-08-2007, 05:07 AM
மேக்ரோவை பயன்படுத்தும் போது செக்யூரிட்டி செட்டிங்ஸ்... low அல்லது medium ஆக இருத்தல் வேண்டும். வேறு வழிகளிலிருந்தால் தேடிப் பார்க்கிறேன்.

ஓவியன்
29-08-2007, 06:50 AM
மேக்ரோவை பயன்படுத்தும் போது செக்யூரிட்டி செட்டிங்ஸ்... low அல்லது medium ஆக இருத்தல் வேண்டும். வேறு வழிகளிலிருந்தால் தேடிப் பார்க்கிறேன்.

ஆம் ஆனால் அஷோ கூறிய மாதிரி மற்றவர்களிடம் அதனை எதிர் பார்க்க முடியாதே.......

இப்போது நான் ஒரு வேறு முறை அறிந்தேன், ஒரு எக்சல் பைலுக்கு புரொடெக்சன் கொடுக்க முன்னர் Format --> Cells --> Protection--> Locked செய்து விட்டு Tools --> Protection --> Protect sheet --> allow the un loked cells only பிறகு ஒரு பாஸ் வேர்ட் கொடுத்து சேமித்தால், செலக்ட் பண்ணி Lock பண்ணின Cells இல் எந்த வித எடிட்டிங்கும் செய்ய முடியாது. இந்த முறையால் இன்று அந்த பைல்களை புரொடெக் பண்ணி எனது பிரச்சினையை தற்போதைக்கு தீர்த்துள்ளேன்.

praveen
29-08-2007, 07:04 AM
அப்பாடா இப்போதைக்கு தலை தப்பித்தது. எஸ்கேப் (இந்த திரியில் இருந்து)

மதி
29-08-2007, 07:07 AM
தீர்வுக்கு நன்றி ஓவியன்..
உபயோகப்படும்..

ஓவியன்
29-08-2007, 07:30 AM
அப்பாடா இப்போதைக்கு தலை தப்பித்தது. எஸ்கேப் (இந்த திரியில் இருந்து)

ஹீ!,ஹீ!

ஆனா நீங்க அந்த மக்ரோ பிரச்சினைக்கு தீர்வு கண்டுபிடித்தால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்.

ஜெயாஸ்தா
11-09-2007, 03:50 PM
எக்செல் கோப்பை சேமிக்கும் போது File--->Save கொடுத்த பின்பு அதில் Tools---->General Option என்ற ஆப்சனை கிளிக் செய்து கடவுச் சொல் கொடுத்தால் யாரும் அந்த கோப்பை திறக்கமுடியாது. பெரும்பாலனவர்களுக்கு இந்த விசயம் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.