PDA

View Full Version : 2. காதல் அறிகுறிகள்.. (காதல் கீழ் கணக்கு)



rambal
09-06-2003, 06:42 PM
2. காதல் அறிகுறிகள்.. (காதல் கீழ் கணக்கு)

கட்டிடக் காடுகளுக்குள்
வேட்டை தேடிப் போன
மிருகமாய் இருந்த போதிலும்
இப்போதெல்லாம் சன்னமாய் ஒலித்துக்
கொண்டிருக்கிறது உன் குரல்..

காணுமிடமெங்கும்
விரவிக்கிடப்பது
பாலைவனமாய் இருந்தாலும்
இப்போதெல்லாம்
உன் முகமாகத்தான் தெரிகிறது..

கட்டியணைப்பது
தலையணையாய்
இருந்தாலும்
இப்போதெல்லாம்
நீயாகத்தான் தெரிகிறது..

இப்படியாக
காதலின் அறிகுறிகள்
ஆயிரமாயிரம் என்னிடம் உண்டு..
உன்னிடம்?

karikaalan
10-06-2003, 03:59 PM
எங்கெங்குக் காணினும் அங்கங்கெல்லாம் காதலியே!
காதலே, நீ வாழ்க! பலர் பற்றற்றுப்போகாமல் இருக்க நீயே துணை!

===கரிகாலன்

poo
10-06-2003, 04:00 PM
நல்ல வரிகளுடன் ஒரு காதலனின் காதல் வினா...

பாராட்டுக்கள் ராம்!!

prabha_friend
10-06-2003, 07:04 PM
எல்லாம் "மாயை" .

Nanban
13-06-2003, 05:13 PM
அறிகுறிகள் அருகே வரட்டும்.... நலம் பெறட்டும்...... பயன் விளையட்டும்...

Narathar
17-06-2003, 10:00 AM
ராம் கவலைப்பட வேண்டாம்!
அவள் தலையணையில் உங்கள் உருவம்
தெரிவதை சீக்கிரம் சொல்லத்தான் போகிறாள் அவள்