PDA

View Full Version : இன்னோரு ஜென்மம்.....



ரிஷிசேது
27-08-2007, 07:20 PM
மென்காற்றில் அசைந்தாடும் சிறு பூவாய் நான்
பேறாற்றில் சிக்கிப்போன சிற்றிலையாய் நீ

தென்றலிலே வாடிப்போகும் மல்லிகையாய் நான்
பெருங்காற்றின் தொடுகையிலே இதழ்விரிக்கும் தாழம்பூவாய் நீ

செங்கதிரின் தொடுகையிலே சிவந்துபோன செவ்வானமாய் நான்
மழைகால மேகம் வரைந்து போன வானவில்லாய் நீ

சொல்லாற்றில் வந்துவிழும் கவிதைகளாய் நான்
அச்சுப்பெராமலே முடிந்துபோன முற்றுப்புள்ளியாய் நீ

வெறும் மார்பில் வன்குத்தாய் சொருகிப்போன போரம்பாய் நான்
வரம்கேட்டு கையேந்தும் கைகேயியாய் நீ

செம்மணலில் வந்துவிழும் மழைத்துளியாய் நான்
இடையில் வந்து கொத்திப்போகும் சாதகப்பறவையாய் நீ

கருவறையில் அலைபாய எழுந்தாடும் குழந்தையின்
அழுமொலியாய் நான்
இருள் கிழிய தெரித்தோடும் மெல்லிய மின்னலாய் நீ


இறப்பொன்றின் வழியினிலே பிணம்சுமக்கும் சவப்பெட்டியாய் நான்
புதைந்தாலும் சேர்ந்திருக்க புதைமணலின் மேல் முளைவிட்ட
முள்செடியாய் நீ.....

இன்னுமொரு ஜென்மம் இருந்தாக்க சேர்ந்திருப்போம்
மழை நீரும் சேருமாய் கலந்திருப்போம்.....





\

அக்னி
27-08-2007, 10:51 PM
அபாரம் ரிஷிகேது... பாராட்டுக்கள்...

தெள்ளிய நீர் நான்...
நீரில் விழுந்த நீர்த்துளி நீ...
சலனம் அடங்கும் வரை,
துடிப்புகள் கவிபாடும்...

வித்தியாசமான, புதுமையான உவமானங்களில் ஓர் அழகுக் கவிதை...

இளசு
05-09-2007, 07:29 PM
இருதுருவங்கள் ஈர்க்குமாமே ஒன்றையொன்று?
இங்கே சேராமல் பிரிவு வந்து சேர்ந்ததின்று...

வலுவான வரிகளில் ரிஷிசேது கவிதையின் தாக்கமும் வலிமையாக!

வாழ்த்துகள்!

ஓவியன்
07-09-2007, 03:19 AM
அபாரம் ரிஷி!

அபாரமான வார்த்தைப் பிரயோகங்கள், மிகவும் இரசித்தேன் − பாராட்டுக்கள்!.

அண்ணா கூறியது போன்று......
காந்தவியலில் மட்டும் ஒவ்வாத முனைகள் ஒன்றையொன்று கவர மனிதவியலில் ஒன்ன்றை ஒன்று தள்ளுகிறதே............!

ஷீ-நிசி
07-09-2007, 03:36 AM
வாழ்த்துக்கள் ரிஷி...

புதுப்புது வார்த்தைகள்! தொடருங்கள்!