PDA

View Full Version : உயிர் பிச்சை



இனியவள்
27-08-2007, 05:51 PM
காதல்
கனவாகிப் போன பின்பும்
கசக்கும் உன் நினைவுகளை
கண்கள் நாடிச் செல்வதேன்???...

இதயம்
இன்னும் வசந்த காலத்தை
இனிமையாக எதிர் பார்த்து
தோற்றுப் போவதுமேன்.....

நிழலை
நிஜமென நினைத்து
மனம் இன்னும்
தொடர்வது ஏன்...

நினைத்து பார் அன்பே
நினைவுகளில் இருந்து
நீங்காமல் இருக்கும் உன்னை
நிராகரிக்க முடியுமா என்னால்???...

முழுதாய் உன்
காதலை எனக்கு தந்து விடு
இல்லையேல் நீயே - என்னை
கருணைக் கொலை செய்துவிடு

உன் காதல் தீயில்
எரியும் என் உள்ளத்தில்
உன் உயிரை என்னுள் புகுத்தி
உயிர்பிச்சை தந்துவிடு.....


நான் கவிதைகள் எழுதக் காரணமாக இருந்த
ஓர் உள்ளத்தின் கடைசி வேண்டுதலுக்காக
இனிமேல் கவிதைகள் எழுதுவதில்லை
என்று முடிவு செய்து இருக்கிறேன் ஆகவே
இதுவே எனது கடைசி ஆக்கமும் ஆகும்

அமரன்
27-08-2007, 06:17 PM
அணையப்போகும் ஒரு விளக்கு
சுடர் விட்டுப் பிரகாசிக்கிறதிங்கே.
நெய்யூற்றிய கரங்கள் இனி
சோர்ந்து போகும் இங்கே...!


காவி கட்டிப் போன பின்பும்
இனிக்கும் உன் கவிதைகளை
தேடி அலையுமே கண்கள் ...!

மணம் பரப்பும் காலத்தை
என்றும் எதிர்பார்த்திருந்து
தோத்துபோகுமா மனம்(ங்கள்)....!

வாசனைகளை பரவ விட்டு
வனவாசம் செல்லும் பூவை
தடுக்கத்தான் முடியுமா...?

கொடுத்தவரே எடுக்கும்போது
தடுக்கத்தான் முடியுமா...?

~~அமரன்

இணைய நண்பன்
27-08-2007, 06:43 PM
கவிதை மனதை ஆழமாக தொட்டு விட்டது.ஆக்கம் நன்று
இதுவே எனது கடைசி ஆக்கம்....இதன் அர்த்தம்?

அக்னி
27-08-2007, 11:08 PM
காதல்...
கனவாகினாலும், நனவாகினாலும்,
கவிதைகளில் நனையும்...

கரங்களுக்கு போடும் தடை,
மனதில்,
இன்னொரு ஊற்றுக் கண்ணாய்
திறக்கும்...

சிறையில் அடைபட்டால்,
மீள வரலாம்...
சிதையில் எரிக்கப்பட்டால்..?

அன்பிற்கு இல்லை தாள்...
இங்கே,
அன்பே போடும் தாள்...

முற்றுப்புள்ளி என்பதில் வேதனை...
ஆனால்,
புள்ளியில் மீண்டும் தொட(ரு)(ங்கு)ம்,
என்றொரு நம்பிக்கை...

இனியவளை,
இசைக்க வைத்த ஸ்வரம்...
மீண்டும் வரம்தர வேண்டும்,
நாம், தொடர்ந்தும்..,
இனியவள் கவிச்சாரலில் நனைய...

உயிர்ப்பிச்சையில், ஓர் கவிப்பிச்சை...

பாராட்டுக்கள் இனியவள் என்று சொல்லிச் சொல்லி சந்தோஷித்த மனது,
பாராட்டுகின்றது வேதனையில் நின்று...

இனியவள் மனம்போல் வாழ்வு கிட்ட வேண்டும்...
மீண்டும் இனியவள் கவிகள் எம்மை எட்ட வேண்டும்...

இளசு
28-08-2007, 09:15 PM
ஊற்று நீர் கேட்டுக்கொண்டு
வயல் வறண்டு போகும் !

− இனியவள் அறிவிப்பு இது!

கவிதை மனவயலுக்கு காதல் ஒன்றே பயிரல்ல...
கடமை, பாசம், இயற்கை, சமூகம் என எத்தனை எத்தனை!


ஒரு ஊற்றுக்கு மதிப்பளித்து அதையொட்டி படைக்காமல் இருக்கலாம்..

மற்ற மனப்பயிர் நாற்றுகளை கருகவிட திருவுளமோ இனியவள்?

சிவா.ஜி
29-08-2007, 04:36 AM
உயிர் கேட்டு உயிர் வாடும் உச்சநிலை.கவிதை தந்து கனவானதால் கவிதைக்கு முடிவா....காலம் இந்த கவிமகளை தேற்றட்டும்.....தேறியதும் மீண்டும் கவிதைகள் தோன்றட்டும்.சகோதரியின் சோகம் மறைய உள்ளம் நாடுகிறது.

மாதவர்
29-08-2007, 04:42 AM
கொடிது கொடிது
காதலில் சிக்குவது
அதனினும் கொடிது
பாதியில்
காதல் தோல்வி அடைவது

இலக்கியன்
29-08-2007, 05:20 PM
[QUOTE=இனியவள்;263893][COLOR="Red"][B]
முழுதாய் உன்
காதலை எனக்கு தந்து விடு
இல்லையேல் நீயே - என்னை
கருணைக் கொலை செய்துவிடு][COLOR="Red"][B]
உன்
கவிதைகளுக்கு
காதல் தடை
எம்
உள்ளத்துக்கு
ஏது இனி

இனியவள்
29-08-2007, 05:23 PM
கவிதை மனவயலுக்கு காதல் ஒன்றே பயிரல்ல...
கடமை, பாசம், இயற்கை, சமூகம் என எத்தனை எத்தனை!
ஒரு ஊற்றுக்கு மதிப்பளித்து அதையொட்டி படைக்காமல் இருக்கலாம்..
மற்ற மனப்பயிர் நாற்றுகளை கருகவிட திருவுளமோ இனியவள்?

இளசு அண்ணா உங்கள் இக்கருத்தை நான் ஆமோதிக்கின்றேன்...

கூடியவிரைவில் காதல் கவிதைகளை தவிர்த்து
சமுதாயத்தோடு வருவேன்

நன்றிகள் பல அண்ணா..

இயற்கை அழகை நெய்யாய் ஊற்றி
இருண்டு இருக்கும் சமூகம் என்னும்
விளக்கை பாசம் என்னும் தீ
கொண்டு ஓளியேற்ற முயற்ச்சிக்கின்றேன்

மாதவர்
29-08-2007, 05:28 PM
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்

puppy
29-08-2007, 05:43 PM
கவிதைகள் மனதின் எண்ண ஓட்டங்கள்......கவிதையை நிறுத்துவது மனதினை சிறைபடுத்துவது போல......அது மனதுக்கும் நல்லது அல்ல...உடலுக்கும் நல்லது அல்ல.....இது உங்கள் வாழ்க்கை....

நாங்கள் காத்திருப்போம்,

அன்புடன்
பப்பி