PDA

View Full Version : 1.உன் மீதான என் காதல்... (காதல் கீழ் கணக்கு)



rambal
09-06-2003, 05:41 PM
1.உன் மீதான என் காதல்... (காதல் கீழ் கணக்கு)

கடல் அலையாய்
படபடக்க
அமைதியின் ஆழத்தில்
சாசுவதமாய் தூங்குகிறது
உன் மீதான என் காதல்...

லார்வாக்கள்
வெடித்து வெளியில்
சிதறவில்லை..
உள்ளுக்குள்ளையே...
அடங்கிப் போகிறது
உன் மீதான என் காதல்..

பாலைவன மண் புயலுக்கு
பயந்து
வீட்டிற்குள்ளேயே
முடங்கிப் போகிறது
உன் மீதான என் காதல்...

இப்படியாகத்தான்
அடக்கி அடக்கி
நிலக்கரி
வைரமாய் மாறியது போல்
உன் மீதான் என் காதல்...

வெட்டி எடுக்க
உன் விழிக்கோடறியின்
யாசகம் கேட்டு
உன் மீதான என் காதல்..

தருவாயா?

karikaalan
10-06-2003, 02:48 PM
காதலியின் விழி, கோடரிக்கு ஈடாமோ?

காதல்தான் எப்படியெல்லாம் ஒரு மனிதனை ஆட்டிப் படைக்கிறது!

வாழ்த்துக்கள் ராம்பால்ஜி!

===கரிகாலன்

poo
10-06-2003, 03:01 PM
நன்றாக வந்துள்ளது... உன் காதல்கணக்கு தொடர வாழ்த்துக்கள் ராம்!!!

prabha_friend
10-06-2003, 05:34 PM
அருமையான கவிதை .

Nanban
13-06-2003, 04:05 PM
காதலின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டுவதில் ராம்பாலுக்கு நிகர் ராம்பால் தான்......

Narathar
17-06-2003, 08:58 AM
தொடர் காதல் கவிதை வடிக்கத்தூண்டிய அவள் யாரோ? ;)