PDA

View Full Version : மாவீரன் லொள்ளுவாத்தியார் -மலருக்கு ஆப்பĬ



Pages : [1] 2

lolluvathiyar
27-08-2007, 03:51 PM
மாவீரன் லொள்ளுவாத்தியார்


(தமிழ் மன்ற நண்பர்களே, நகைச்சுவையாக இந்த தொடரை ஆரம்பிக்கின்றேன். இது முடிவில்லாத தொடர். மூடு வரும் போதெல்லாம் தொடர்ந்து கொண்டே இருப்பேன், படித்துவிட்டு விமர்சனம் தவறுகளை சுட்டி காட்டி இந்த தொடரை சிறப்பாக செல்ல வழி தாருங்கள். நகைச்சுவையாக மன்ற நண்பர்களையும் கதையில் இழுத்திருக்கிறேன்.)

மாவீரன் லொள்ளுவாத்தியார் பாகம் 1

முன்னுரை
அலெக்ஸ்சாண்டர் மட்டும் தான் மாவீரனா? இந்த லொள்ளபுரி தேசத்து சக்கரவர்த்தி லொள்ளுவாத்தியார் மாவீரன் இல்லை என்று யார் சொன்னது.

லொள்ளபுரி தேசம்

லொள்ளபுரி தேசம் ஏதோ கங்கை கரையிலோ, காவிரி கரையிலோ இருக்கும் ஒரு சாதர்ன ஊர் என்று கருதிவிடாதீர்கள். லொள்ளபுரி தேசம் தக்சினத்தில் நீண்ட வரலாறுடைய கூவம் என்ற ஆற்றில் நடுவே அமைந்துள்ள ஒரு தீவில் விண்ணகத்து கடவுளரின் ஆசியால் அமைந்த ஒரு சொர்க்கபுரி. வங்காள விரிகுடா கடலுக்கு பக்கத்தில் இருகிறது. கடலை ஒட்டியுள்ள நகரம் என்றால் சாதர்ன விசயமா? லொள்ளபுரி தேசம் சாதர்ன நிலபரப்பு அல்ல சுமார் பல்லாயிரம் சதுரஅடி நிலப்பரப்பை கொண்டது. (எவ்வளவு என்று துல்லியமாக கேட்க கூடாது, ஆறு ஓடுவதை பொறுத்து அதன் நிலபரப்பில் ஏற்ற இறக்கம் இருந்து கொண்டே இருக்கும்)

செழிப்பு

சும்மா பொன்னும் மணியும் இருக்கும் ஒரு சாதர்ன தேசமல்ல லொள்ளபுரி தேசம் அயிரை, சீலா, நெத்திலி போன்ற அபூர்வ மீன் வகைகளின் எலும்பு துண்டுகள் தோண்ட தோண்ட கிடைக்கும் ஒரு பொக்கிச பூமி. மனதை மயக்கும் கருவாடு நறுமணம் நிறைந்த சொர்க பூமி. மக்கள் தொகையும் பல நூறை தாண்டும்.இந்த தேசத்து வளங்களை ஒரு பக்கத்தில் அடக்க முடியாது. செங்கீரை, கத்திரிகாய் போன்ற காய்கறிகளும் நறிபயிரு, கத்தாளை போன்ற நவதானியங்கள் விளையும் பூமி. பக்தியிலும் தமிழ் மொழியிலும் மற்ற நாட்டு பிரஜைகள் வெட்கபட்டு தலைகுனிவார்கள்.

லொள்ளுவாத்தியார் புகழ்

இந்த சொர்க்க பூமியை ஆண்டு வரும் நமது மன்னர் தான் லொள்ளுவாத்தியார். அவர் ஆட்சி அலுமிய ஏடுகளால் பொறிக்க பட வேண்டியது. இவரின் வீரத்தை கண்டு பயந்ததாலோ அல்ல வேறு காரணத்தாலோ இது வரை மூவேந்தர்களான சேர சோழ பாண்டிய மன்னர்கள் யாருக்கும் இந்த தேசத்தை படை எடுத்து பிடிக்க தைரியம் வரவில்லை என்றால் பார்த்துகொள்ளுங்கள். அவர்களுக்கெல்லாம் லொள்ளபுரி தேசத்தை நெருங்க தொடை நடுங்கியதா என்பதற்க்கு சரியான சரித்திர ஆதாரம் இல்லை, ஆனால் குடல் சுவாச குழாய் அனைத்தும் நடுங்குமாம். வடக்கிலிருந்து தமிழகத்தின் மீது படை எடுத்து வந்த சாளுக்கியர்களும் கலிங்கர்களும் சேர,சோழ,பாண்டிய, பல்லவ நாட்டை தாக்கினார்கள் ஆனால் லொள்ளபுரி தேசம் அருகில் கூட வர அஞ்சினர்களாம்.

கொலை நோக்கு பார்வை

சுற்றிலும் நீர் சூழ அமைந்திருப்பதால் இந்த தேசத்தை காக்க எத்தனை முன்னேற்பாடுகளை வைத்திருந்தா நமது மாவீரன் லொள்ளுவாத்தியார் என்று தெரியுமா. அண்டை நாடுகளிருந்து அச்சுறுத்தல் இருக்குமல்லவா. ஏன் இந்த செல்வ செழிப்பு நிறைந்த சொர்க்க பூமியை பிடிக்க இலங்கையிலிருந்து கூட ஆபத்து வரலாமல்லவா. அந்த நாட்டு மன்னர் மாவீரன் லொள்ளுவாத்தியார் கடாரம், யவனம், ரோமபுரி அரபு போன்ற நாடுகளிருந்த கூட பொறாமையால் படை எடுத்து வரலாம் என்று கருதி பாதுகாப்பு ஏற்பாடுகளை அமைத்தார் எந்த அளவுக்கு தொலை நோக்கு சிந்தனை உள்ளவர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கோட்டை

மாவீரன் லொள்ளுவாத்தியார் வீர தீரமிக்க முப்படைகளையும் வைத்திருகிறாராம். அந்த நாட்டின் நடுவே அவர் கட்டியிருக்கும் கோட்டை பல புலவர்களால் பாடல் பெற்றது. கோட்டையை சுற்றிலும் அரண் போல வேலி முள் அமைத்து பாதுகாத்து வருகின்றனர். நாட்டை சுற்றியே அகழி இருப்பதால் கோட்டைக்கு அகழி தேவை இல்லையல்லவா. பாதுகாப்புக்கு அகழியில் ஏதோ முதலைகளையும் சுறாக்களையும் விட்டிருகிறார்கள் என்று நினைத்தால் உங்கள் அறிவை என்னவென்று சொல்வது. அதை விட அபாயகரமான கொசுகள் இருகின்றன எதிரிகளை புறமுகிட்டு ஓட செய்ய.


ஓரளவுக்கு லொள்ளபுரி தேசத்து மேப்பை கொடுத்தாகி விட்டது. இனி கதைக்கு போவோம்.

அரசபை

மார்கழி மாதம் அதிகாலை பொழுது லொள்ளபுரி நகரம் மாவிரன் லொள்ளுவாத்தியாரின் மாபெரும் கோட்டை. அதன் உள்ளே கவக்கோல் வளையாது ஆட்சி புரியும் சக்ரவர்த்தி லொள்ளுவாத்தியார் அரச சபை. அங்கே என்ன நடகிறது. நாமும் உள்ளே போய் பார்போமா.

அந்த சிம்மாசனத்தை பார்த்ததுமே அசந்து போகும் அளவுக்கு இருந்தது. ஆம் அழகிய வேலைபாடுகள் அமைந்த ஈயத்தால் அமைந்திருந்தது. அது தான் மாவீரன் லொள்ளுவாத்தியார் அரியணை. அவர் இன்னும் வரவில்லை. சுற்றிலும் அரசசபை முக்கிய பிரஜைகள் அமர்ந்திருந்தனர். மாவீரன் லொள்ளுவாத்திரின் வருகைக்கு கால் மேல் கால் போட்டு காத்திருந்தனர்.
அடடே உள்ளே இருக்கும் முக்கிய பிரஜைகளை அறிமுக படுத்த வேண்டாமா?

அந்தரங்க மந்திரி : ஓவியன்
பூனை படை தளபதி : சுட்டி
குதிரை படை தளபதி : சிவா ஜி
அரண்மனை கட்டு காவல் மந்திரி : அக்னி
ஆஸ்தான புலவர் : ஆதவா

இன்னும் பலர் இருந்தனர், அவர்களை கதை போக போக அந்த சூழ்நிலையில் அறிமுகப்படுத்தினால் தான் சிறப்பாக இருக்கும்.

தொடரும்
அனைத்து தொடரும் இதே திரியில் இருகிறது. பின்னூட்டங்களையும் படித்து தொடர்ந்து படித்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
இருப்பினும் உங்கள் வசதிக்காக அதன் லிங்கள்
பாகம் 2 : அரசவை கவிஞர் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=264352&postcount=6)
பாகம் 3 : மனு நீதி காத்த லொள்ளர் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=264694&postcount=19)
பாகம் 4 : லொள்ளபுரி மந்திராசலோனை (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=265707&postcount=45)
பாகம் 5 : அந்தபுரம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=267405&postcount=59)
பாகம் 6 : போர் கோசம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=270663&postcount=66)
பாகம் 7: கடாரம் புறபட்ட லொள்ளுவாத்தியார் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=271440&postcount=76)
பாகம் 8 : கடல்புறா (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=271442&postcount=77)
பாகம் 9 : ஆழிகாற்று (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=272797&postcount=103)
பாகம் 10 : இலங்கை போர் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=272798&postcount=104)
பாகம் 11சிம்மபுரி முற்றுகை (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=273657&postcount=109)
பாகம் 12 புறமுதுகு கண்ட காதை (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=274960&postcount=121)
பாகம் 13 முன்கதை விளக்கம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=281403&postcount=213)
பாகம் 14 லொள்ளுவாத்தியார் எங்கே (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=283316&postcount=221)
பாகம் 15 கடற்கரை (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=287012&postcount=247)
பாகம் 16 மக்கள் கொண்டாட்டம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=290857&postcount=261)
பாகம் 17 பூமகளின் புஸ்வானம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=294034&postcount=328)
பாகம் 18 அந்தபுரத்தில் யானை வெடி (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=299712&postcount=348)
பாகம் 19 யவனிக்கா வைத்தியம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=308808&postcount=372)
பாகம் 20 மலருக்கு ஆப்பு (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=315643&postcount=412)

அக்னி
27-08-2007, 03:57 PM
மாவீரன் லொள்ளு...
வாழ்க... வாழ்க...
தொடருங்கள் வாத்தியாரே... சிரிக்க காத்திருக்கின்றோம்...

மனோஜ்
27-08-2007, 04:22 PM
நீர் எவ்வளவு காவல் வேண்டுமானாலும் வைத்துகொள்ளும் நான் உம் நாட்டை பிடிக்காமால் விடுவதில்லை

− தருங்காபுரி வீரன் மனோஜ்

மலர்
28-08-2007, 04:39 AM
ஆரம்பிச்சிட்டாங்கய்யா.......ஆரம்பிச்சிட்டாங்கய்யா.......
சொக்கரவர்த்தி கொள்ளுவாத்தியாரின் சாரி லொள்ளபுரி தேசத்து சக்கரவர்த்தி லொள்ளுவாத்தியாரின் ஆரம்பமே சூப்பர்....

வாத்தியாரே கலக்குங்க.......

சிவா.ஜி
28-08-2007, 04:41 AM
அசத்திட்டீங்க மன்னா..!இனிவரும் பதிவுகளில் வெளிப்படப்போகும் உங்கள் வீரதீர பராக்கிரமங்களை நினைத்து இப்போதே என் இதயம் துள்ளாட்டம் போடுகிறது...(அப்படியே மறக்காமல் லொடுக்குப் பாண்டியனிடம் செமத்தியாக வாங்கிக்கொண்டு உங்கள் குதிரை உங்களை கீழே தள்ளிவிட்டுப் போன பிறகு என் குதிரையில் லிஃப்ட் கேட்டு நாட்டுக்கு திரும்பி வந்த வீரக்கதையையும் மறக்காமல் நினைவுகூறுங்கள் மன்னா..)

lolluvathiyar
28-08-2007, 02:38 PM
மாவிரன் லொள்ளுவாத்தியார் பாகம் 2


அரசவை கவிஞர்

அப்பொழுது அரண்மனை வாசலில் காவலர்களின் இடிமுழக்கம்

"வீராதி வீர
கவலோல வளையா அட்சி புரிந்த்
சூராதி சூர
எதிரிகளிடம் புற முதுகு கண்ட
வரலாறு கண்ட
பல போர்களில் விழ்ந்து புண் கண்ட
லொள்ளபுரி சக்ரவர்த்தி
மாவீரன் லொள்ளுவாத்தியார் வரார் வரார்
பராட் பராட் பராட்"

அவையில் அனைவரும் உட்கார்ந்த படியே இருக்க. வீர நடை போட்டு கம்பீரமாக 4 அடி உயரம். யானை பலம் பொருந்திய 50 கிலோ எடை கொண்ட லொள்ளுவாத்தியா நடந்து வந்தார். அவர் தோற்றம் ஆகா மன்மதனும் கூட பொறாமை படும் அளவுக்கு இருந்ததாம். எளிமை இருப்பதை அணிந்து வந்து கம்பீரமாக தன் சிம்மாசனத்தில் அமர்ந்தார். அனைவரைம் ஒரு முரை பார்த்தார்.

அப்பொழு அமைச்சர் விராடனும் பக்கத்தில் வந்து அமர்ந்தார்

லொள்ளு : அமைச்சரே நம் நாட்டில் மாதம் மொள்ளமாறி பொழிகிறதா

விராடன் : நம் நாட்டில் மாதம் மொள்ளமாறிகளுக்கு குறைச்சலும் இல்லை மகராஜா

லொள்ளு : மன்னிக்கவும் நம் நாட்டில் மாதம் மும்மாறி பொழிகிறதா

விராடன் : தங்கள் ஆட்சியில் வருனபகவான் கூட பயபட்டு நமக்கு மும்மாறி அருள்கிறான் அரசரகரசே.

லொள்ளபுரி மக்கள் நலனை விசாரிக்காமல் மாவீரன் லொள்ளுவாத்தியார் சபையில் எந்த அலுவலையும் ஆரம்பிக்க மாட்டார்.

லொள்ளு : ம் கச்சேரி ஆரம்பிக்கட்டும். இன்று என்ன விசேசம்

விராடன் : மதராஸ் நாட்டிலிருந்து ஆடல் குழு தங்களிடம் ஆடி பரிசு பெற்று போக வந்திருகிறார்கள்

சிறிது நேரத்தில் மதராஸ் பட்டினத்து குழு ஆட ஆரம்பித்தது

"என் சோடி மஞ்ச குருவி
ஜோராக உன்ன தழுவி
ஆட்டம் போடுடி பாட்டு பாடுடி
சூடான ....."
நிறுத்துங்கள் என்று ஆஸ்தான புலவர் ஆதவா கர்ஜித்தார். இது என்ன பாடலா ஒரு தராதரம் இல்லாமல். வெளியேற்றுங்கள்.

விராடன் : சென்னை நாட்டிலிருந்து ஒரு நடன அழகி தங்கள் முன் ஆட வந்திருகிறாள்

லொள்ளு : அப்படியே ஆகட்டும்

சிலுக் சிலுக் சிலுக் என்று ஒரு பெண் வந்தாள்

சரக்கு வச்சிருக்கே இறக்கி வச்சிருக்கேன்
வறுத்த கோழி பொறிச்சு கொழம்பு வச்சிருக்கேன்
கோழி ருசியா இருந்தா கோழிய தின்னு
குமரி ருசியா இருந்தா குமரிய தின்னு

நிறுத்துங்கள் என்று ஆஸ்தான மீண்டும் புலவர் ஆதவா கர்ஜித்தார்.
மன்னா என்ன இது செந்தமிழுக்கு புகழ் சேர்க்கும் நம் நாட்டில் இப்படி ஆபாசமாக பாடுவதா.

அப்பொழுது மந்திரி ஓவியர் குறுக்கிட்டார்

ஓவியர் : ஆபாசம் துளியும் இல்லை அரசரே. எந்த வரியில் ஆபாசம் கண்டு பிடித்தீர்கள் ஆதவா?

ஆதவா : சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் என்று அர்த்தம் என்ன அமைச்சரே

ஓவியர் : சரக்கு கொண்டு செல்பவர்கள் அதை இறக்கி வைத்தால் தானே சாப்பாடு சாப்பிட முடியும்
ஆதவாவுக்கு குழப்பி விட்டது

ஆதவா : குமரி ருசியா இருந்தா குமரிய தின்னு இந்த கண்ராவி வரிக்கு அர்த்தம் என்னவோ.

ஓவியர் : கௌதாரி க்கு சென்னை நாட்டு மக்கள் குமரி என்றுதான் கூறுவார்களாம். கோழி சாப்பிடுகிறீர்களா அல்லது கௌதாரி சாப்பிடுகிறீர்களா என்று கேட்பது ஆபாசமா. மன்னா முதலில் உங்கள் ஆஸ்தான கவிஞர் ஆதவா வை மாற்ற வேண்டும்.

லொள்ளு : இப்ப நம்ம நாட்டில் ஆதவா தவிர வேறு கவிஞர்கள் இல்லையே

விராடன் : கவலை படாதீர்கள் மன்னா, நமது நாட்டுக்கு ஒரு புதிய பெண் கவிஞரை அழைத்து வந்திருகிறேன். பெயர் : பூமகள்

லொள்ளு : ம் வரசொல்

பெண் கவி பூமகள் புயலெனே உள்ளே நுழைந்தார்.

ஆதாவா : மன்னா இது அநீதி அக்கிரமம். உங்கள் தாத்தா காலத்திலிருந்து பாடி வரும் என்னை மாற்ற உங்களுக்கு எப்படி மனம் வந்தது

லொள்ளு : இந்த பெண்னை சோதித்து பாருங்கள் கவி திறமை இருகிறதா என்று

ஆதாவா : பூமகளே உங்களுக்கு கவி திறமை எந்த அளவுக்கு இருகிறது என்று சொல்ல* முடியுமா

பூமகள் : மன்னர் மன்னா "தோல்காப்பியம், திருகுறாள், சிலபதிகாரம், சாவக சந்தாமனி " இப்படி பல காவியங்களில் நான் புலமை உள்ளவள்

லொள்ளு : சரி என்னை பற்றி ஒரு கவி எழுத முடியுமா

பூமகள் : இதோ எடுத்து விடுகிறேன் என் கவிதை குழந்தையை

மன்னார் மேனியனே
எலிதோலை அரைக்கசைத்து
மின்னார் செத்த பாம்பின் மேல்
மிளிர் கொள்ள செய்தவனே

லொள்ளபுரி தேசத்தை
சொர்க புரியாக மாற்றிய
மன்னே மாங்கனியே
உன்னை கண்டு எதிரிகள்

அச்சச்சோ ஐயகோ என்று
ஓடினார் லொள்ளு வாத்தியே
உங்கள் புகழ் வாழிய வாழிய
உன் கொடி வையமல்லாம் பறக்க

இதை கேட்டவுடன் சபையோ ஆகா ஆகா அற்புதம் அபாரம் சபையே கைதட்டல் வலுத்தது. ஆதாவா முக்கு வேர்த்தது.

இதை கேட்ட லொள்ளுவாத்தியாரின் நாய் சிலிர்த்தது. லொள்ளுவாத்தியார் பூமகளுக்கு தங்கள் நாட்டில் கொடை உள்ளத்தை பறைசாற்றும் வகையில் ஒரு தட்டு நிறைய நெய் கருவாடு தந்தார்.

அவர் கொடையை மெச்சி சபையோ பலத்த கரவொலி செய்தனர்

"எலிக்கேசியை வென்ற
எதிரிகளிடம் புறம்முதுகு கண்ட
புலவர்கள் மெச்சும்
கொடை வள்ளல்
லொள்ளுவாத்தியாரின் புகழ்
ஓங்குக
என்று விண்ணை பிளக்கும் ஜெய கோசம் இட்டனர்.

"இது அநியாம அக்கிரமம்" என்று ஆதாவா கூக்குரலிட்டார். ஆனால் சபையினரின் ஆரவாரத்தால் அவரின் குரல் கடலில் கரைத்த பெருங்காயம் போல கலந்து விட்டது.

தொடரும்
பாகம் 3 : மனு நீதி காத்த லொள்ளர் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=264694&postcount=19)

சிவா.ஜி
28-08-2007, 02:46 PM
அய்யோ பாவம் ஆதவா.....செம ஓட்டு ஓட்டிட்டீங்களே மன்னா...

ஓவியன்
28-08-2007, 02:51 PM
இது என்ன கொடுமை சரவணன்!

அட்சய முனைக் காவலன்........
மாமமன்னன் ஓவியன் உம் சபை மந்திரியா..........?
யாரிடம் விடுகிறீர் கதை............!
மன்னிக்கவும் கரடி?

praveen
28-08-2007, 03:01 PM
ஆதவன் மீது வாத்தியாருக்கு என்ன கோபமோ?, இப்படி போட்டு தாக்குகிறாரே, இந்த ஓவியன் அதிகமாக எதிர்ப்பதால் வாத்தியார் அடுத்து இவரை காய்ச்சுவார் என்று நம்புவோமாக.

ஆகா திரியை கொளுத்தி போட்டாச்சு, அதை வாத்தியார் கையில் எடுப்பாரா இல்லை வருகிற தீபாவளிக்கு வெடிக்கலாம் என்று பையில் போடுவாரா, பொறுத்திருந்து பார்ப்போம்.

ஓவியன்
28-08-2007, 03:08 PM
இந்த ஓவியன் அதிகமாக எதிர்ப்பதால் வாத்தியார் அடுத்து இவரை காய்ச்சுவார் என்று நம்புவோமாக.


ஆமா போட்டுக் கொடுக்கிறீரா?
வெகுவிரைவில் அசோவை அரண்மனைக் காவலன்:icon_shout: ஆக்குவார் வாத்தியார், அப்போது தான் நீர் திருந்துவீர்.......!:sport-smiley-018:

praveen
28-08-2007, 03:17 PM
ஆமா போட்டுக் கொடுக்கிறீரா?
வெகுவிரைவில் அசோவை அரண்மனைக் காவலன்:icon_shout: ஆக்குவார் வாத்தியார், அப்போது தான் நீர் திருந்துவீர்.......!:sport-smiley-018:
அது நடக்காது, எனக்கும் வாத்தியாருக்கும் ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறது, என்னை அவர் கதைகளில் உள்ளே சொல்லக்கூடாது என்று கெஞ்சி மிரட்டி:Christo_pancho: வைத்திருக்கிறேன்.

மனோஜ்
28-08-2007, 03:23 PM
ஆதாவ கவலையை விடுங்கள் உங்களின் கவிதிறமை இந்த லெல்ருக்கு தெரியவில்லை எம் நாடு வாரும் நாங்கள் உம்மை எங்கள் ஆஸ்தான கவியாக்குகிறோம் தருங்காபுரி உம்மை அன்புடன் அழைக்கிறது

ஓவியன்
29-08-2007, 02:09 AM
ஆமா போட்டுக் கொடுக்கிறீரா?
வெகுவிரைவில் அசோவை அரண்மனைக் காவலன்:icon_shout: ஆக்குவார் வாத்தியார், அப்போது தான் நீர் திருந்துவீர்.......!:sport-smiley-018:
அது நடக்காது,..

ஆமா திருந்தவே மாட்டேங்குறீங்களே..........? :ohmy:

praveen
29-08-2007, 03:48 AM
ஆமா திருந்தவே மாட்டேங்குறீங்களே..........? :


ஆமா போட்டுக் கொடுக்கிறீரா?
வெகுவிரைவில் அசோவை அரண்மனைக் காவலன் ஆக்குவார் வாத்தியார், அப்போது தான் நீர் திருந்துவீர்.......!

அது நடக்காது,..

ஆமா திருந்தவே மாட்டேங்குறீங்களே..........?

என்னை மாதிரி போட்டுக்குடுக்கிற ஆள்கள் திருந்தினா, உங்கள் மாதிரி லூட்டி அடிப்பவர்கள் கொட்டம் இன்னும் அதிகமாயிடும்.

அது சரி இந்த லொள்ளுவாத்தியார் எங்க போயிட்டார்?..

புது பிரம்பு வாங்க போயிட்டாரா?, இல்லை அடுத்து கதையை எப்படி கொண்டு போறதுன்னு ஏதாவது லாட்ஜ்ல ரூம் போட்டு யோசிக்கிறாரா?.

வந்தா தான் தெரியும்.

மலர்
29-08-2007, 04:07 AM
ஆதாவா : மன்னா இது அநீதி அக்கிரமம். உங்கள் தாத்தா காலத்திலிருந்து பாடி வரும் என்னை மாற்ற உங்களுக்கு எப்படி மனம் வந்தது

எது எப்படியோ... ஆதவனை தாத்தாவாக மாற்றி விட்டீர்... நடக்கட்டும் நடக்கட்டும்...

lolluvathiyar
29-08-2007, 06:50 AM
வைத்துகொள்ளும் நான் உம் நாட்டை பிடிக்காமால் விடுவதில்லை
− தருங்காபுரி வீரன் மனோஜ்

பொருமையுடன் இருங்கள் உங்களுக்கு சூப்ப்ப்ப்ப்பர் பாத்திரம் தயாராகி கொண்டு இருகிறது


அப்படியே மறக்காமல் லொடுக்குப் பாண்டியனிடம் செமத்தியாக வாங்கிக்கொண்டு உங்கள் குதிரை உங்களை கீழே தள்ளிவிட்டுப் போன பிறகு என் குதிரையில் லிஃப்ட் கேட்டு நாட்டுக்கு திரும்பி வந்த வீரக்கதையையும் மறக்காமல் நினைவுகூறுங்கள் மன்னா..)

உஸ் சத்தமா சொல்லாதீங்க



இந்த ஓவியன் அதிகமாக எதிர்ப்பதால் வாத்தியார் அடுத்து இவரை காய்ச்சுவார் என்று நம்புவோமாக.


உங்கள் நம்பிக்கை என்று வீன் போகாது ஆசோ, சும்மா இருந்த சங்கை ஊதி கெடுப்பாராம இதோ பாருங்க


அட்சய முனைக் காவலன்........
மாமமன்னன் ஓவியன் உம் சபை மந்திரியா..........?


ஓ அப்படியா எப்படி வந்து சேர்ந்தீர்கள் என்ற கதையும் விரைவில் வரும்

praveen
29-08-2007, 06:58 AM
நேயர் விருப்பம் மாதிரி, திரி படிப்போர் விருப்பம் நிறைவேற்றிய மாமன்னர் லொள்ளுவாத்தியார் வாழ்க வாழ்க.

ஓவியன், நீங்கள் சுக்கு கசாயம் குடித்து பழகி கொள்ளுங்கள், ஏனென்றால் வாத்தியார் உங்களைப்பற்றி எழுதுவதை படித்து ஜீரணிக்க வேண்டும் அல்லவா?.

சிவா.ஜி
29-08-2007, 07:08 AM
நேயர் விருப்பம் மாதிரி, திரி படிப்போர் விருப்பம் நிறைவேற்றிய மாமன்னர் லொள்ளுவாத்தியார் வாழ்க வாழ்க.

ஓவியன், நீங்கள் சுக்கு கசாயம் குடித்து பழகி கொள்ளுங்கள், ஏனென்றால் வாத்தியார் உங்களைப்பற்றி எழுதுவதி படித்து ஜீரணிக்க வேண்டும் அல்லவா?.

ஓவியனுக்கு உதவியாக எதையும் ஜீரணிக்கும் சுக்குகஷாயம் செய்வது எப்படி என்று கூடிய விரைவில் ஒரு திரி சமையல் பகுதியில் வருமென்று எதிர்பார்க்கிறேன்......

lolluvathiyar
29-08-2007, 09:07 AM
மாவிரன் லொள்ளுவாத்தியார் பாகம் 3

பாகம் 2 அரசவை கவிஞர் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=264352&postcount=6)


மனு நீதி காத்த லொள்ளர்

லொள்ளபுரி சபையில் ஒரே ஆடல் பாடல் கொண்டாட்டமாக இருந்து கொண்டிருந்த சூல் நிலையில் ஆராய்ச்சி மனி அடித்தது.
நீதி தவறா மன்னனும் அவசரமாக அந்த மனி இருக்கும் இடம் சென்றார். அமைச்சர்களும் பின் தொடர்ந்தனர்.

ஆராய்ச்சி மனியை ஒரு ஆடு அடித்து கொண்டிருந்தது.

லொள்ளு : "அமைச்சரே இந்த ஆடு ஏன் மனியை அடிகிறது "

அமைச்சர் விராடன் : "மன்னா யாரோ இந்த ஆட்டை இங்கு மாற்றி கட்டி இருக்கலாம் என்று கருதுகிறேன்"

மாவிரன் லொள்ளுவாத்தியாரின் ரோமங்கள் துடித்தன

லொள்ளு : "யாரங்கே இந்த ஆட்டை இங்கு கட்டியது யார் என்று அறிந்து அவனை இங்கு அழைத்து வாருங்கள்"

அந்தரங்க மந்திரி ஓவியன் : " மன்னா ஒரு நிமிடம் இந்த ஆடு கட்டபவில்லை, அதுவாக தான் மனி அடிகிறது, அதன் கன்களில் கன்னீர் வடிகிறது"

லொள்ளுவாத்தியார் மிகவும் இரக்க குணம் உள்ளவர் என்பதை உலகறிந்த விசயமாச்சே

அந்த ஆட்டை பார்த்து

லொள்ளு : "மாவிரன் லொள்ளுவாத்தியாரின் கவகோல் வளையா ஆட்சியில் இந்த லொள்ளபுரி நாட்டில் ஒரு வாயில்லா பிரானியின் கன்களில் கன்னீர் வருவதை கூட விரும்ப மாட்டார், என் அருமை ஆடே உன் கன்னில் நீர் வழிந்தா என் கன்னில் உதிரம் கொட்டுதடி"

லொள்ளுவாத்தியாரின் கன்களில் கன்னீர் கூவத்தை போலவே பிராவகமெடுத்தது

[B]லொள்ளு : [/ப்] "சொல் உன் குரையை யார் உனக்கு என்ன தீங்கு செய்தார்கள், அவர்களை என்ன செய்கிறேன் பார்"

என்று கன்னில் கோபம் கொப்பளிக்க வையில் உரைவாளை பிடித்த படி கேட்டார்

ஆடு : " மே மே ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மே மே மமமமா"

லொள்ளு : அமைச்சரே என்ன சொல்கிறது இந்த ஆடு

அப்பொழுது உதயசூரியன் என்னும் இன்னொரு அமைச்சர் குறிக்கிட்டார்

உதயசூரியன் : " மன்னா ஆடு பேசாது என்ற பகுத்தறிவு கூட இல்லையா"

லொள்ளு : " என்ன பகுத்தறிவா, நீதிக்கு முன் பகுத்தறிவு எல்லாம் பாக்க மாட்டான் இந்த லொள்ளுவாத்தியார்"

ஓவியன் : "அதை நான் மொழி பெயர்த்து சொல்கிறேன் மன்னர் மன்னா"

லொள்ளு : " ம் சீக்கிர சொல்லுங்கள், நீதி தவறா மன்னனின் நெஞ்சம் கொதிகிறது"

ஓவியன் ஆட்டிடம் மீண்டும் கேட்டார்

ஆடு : " மெத்தர மே மெத்தரமே மெம்மெமெமெம்" என்றது

தலையை ஆட்டிய படியே ஓவியர்

ஓவியர் : "மாவிரரே தருங்காபுரி நாட்டை ஆண்ட கொடுங்கோல் மன்னன் மனோஜ் மீது நமது லொள்ளபுரி நாட்டு படை எடுத்து போன சம்பவங்கள் நினைவிருகிறதா"


நான் உம் நாட்டை பிடிக்காமால் விடுவதில்லை
− தருங்காபுரி வீரன் மனோஜ்


லொள்ளு : "எப்படி மறக்க முடியும் அமைச்சரே, நமது சேனையிலிருக்கும் அஞ்சா நெஞ்சன் வீரன் வல்லவரைன் சிவா ஜி யின் தலமையில் நமது குதிரை படை அந்த தருங்காபுரி படைமீது புலிபோல் மோதி மனோஜை தோற்கடித்த சம்பவம் மறக்க கூடியதா"

ஓவியர் : "ஆம் மன்னா உங்கள் வீரம் தெரிந்து வீம்புக்கே வந்து நம் மீது மோதிய மனோஜ் ஐ வென்று தருங்காபுரி நாட்டை விட்டு துரத்தி அந்த தேசத்துக்கு மக்கள் மனம் கவர்ந்த மலரை ஆரியனையில் ஏற்றிய உங்கள் நல்ல குணத்துக்கு ஈடு இனை இல்லை"

அப்பொழுது ஒற்றர் படை தலைவன் அன்பு ரசிகன் குறிக்கிட்டார்

அன்பு ரசிகன் : " மன்னா கொடுங்கோலன் மனோஜை நீங்கள் மன்னித்து விட்டு விட்டீர்கள், அவரோ தன்னை கனக்குபுலி என்று கூறி பந்தா பன்னி வருகிறாராம், அத்துடன் நில்லாமல் த க பு க என்று ஏதோ புலம்பி வருவதாக நமக்கு செய்தி வருகிறது"

உதயசூரியன் : "சரி இப்ப இந்த ஆட்டுக்கு கடைசி பட்சம் ஏதாவது புல்லாவது போடமல் வீன் வீரம் ஏன் பேசுகிரீர்களே"

லொள்ளு : "ஆம் இந்த ஆட்டை மறந்தே விட்டோம், அந்த போருக்கும் இந்த ஆட்டுகும் என்ன சம்மந்தம்"

ஓவியர் " மன்னா போர் முடிந்து தாங்கள் திரும்பி வரும் போது இந்த ஆட்டின் குட்டி தேர் காலில் சிக்கி உயிரழந்து விட்டதாம்"

லொள்ளு : "யாருடைய தேரில் விழுந்தது, பார்த்து வர கூடாதா"

உதயசூரியன் : " மன்னா இந்த தக்சனத்திலேயே கள்ளுன்ட* போதையில் கண்டபடி தேர் ஓட்டுபவர் நீங்கள் ஒருவர்தானே, நீங்கள் ஓட்டி வந்த தேரில் இதன் குட்டியை ஏத்தி கொன்று விட்டீர்கள்"

ஓவியர் : "ஆம மன்னா, உதயசூரியன் சொல்வது உன்மைதான், அதற்க்காக நீதி கேட்டு நீதிமான் மாவீரன் லொள்ளுவாத்தியாரிடம் வந்திருகிறது"

லொள்ளு : "இந்த ஆட்டுக்கு என்ன வேண்டுமா"

உதயசூரியன் : "அதன் குட்டியை அதனால் பிரிந்து இருக்க முடியவில்லையாம்"

லொள்ளு : "யாரங்கே உடனே இந்த ஆட்டுக்கு 100 குட்டிகள் தாருங்கள்"

ஆடு : "மெ மெ மேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ம்ம்ம்ம்ம்மே ம்ம்ம்ம்ம்மே ம்ம்ம்ம்ம்மே மெமெ"

லொள்ளு : "என்ன சொல்கிறது இந்த ஆடு"

ஓவியர் : " அதனுடைய குட்டியை தான் பிரிந்து இருக்க முடியவில்லையாம், வேறு குட்டி வேண்டாமாம்"

லொள்ளு : "யாரங்கே, உடனே எமன் மீது போர் தொடுத்து, அந்த ஆட்டு குட்டியை மீட்டு வாருங்கள்"

உதயசூரியன் : "மன்னா கொஞ்சம் பகுத்தறிவுடன் சிந்தியுங்கள், இறந்த உயிரை மீட்க முடியாது,வேறு ஏதாவது பரிகாரம் தேடலாம்"

லொள்ளு : "ஆம் உதயசூரியரே தாங்கள் சொல்வதை நான் ஏற்று கொள்கிறேன்"

பிறகு நீண்ட நேரம் யோசித்தார், குறுக்கும் நெடுக்கும் நடந்தார் நீதிமான் லொள்ளுவாத்தியார். அனைவரும் அமைதியாக அவரை பார்த்து கொண்டே இருந்தனர், ஓவியர் அவசரமாக அந்தபுரத்துக்கு ஆள் அனுப்பி லொள்ளுவாத்தியாரின் மகனை வரவழைத்திருந்தார். அந்த ஆடும் தெய்வீக அம்சம் பொருந்திய லொள்ளுவாத்தியாரின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தது.

தீடிரென லொள்ளுவாத்தியாரின் முகம் பிராகிசித்தது. தான் வழக்கமாக நீதி கூறும் ஆசனத்தில் அமர்ந்தார், அவை அனைவரும் கன்களில் நீர் பொங்க அவரை சுற்றி நின்று கொண்டனர். இடி முழக்கம் போல் தனது தீர்பை மக்கள் முன் வாசித்தார்

லொள்ளு : "ஆம் உதயசூரியரே தாங்கள் சொல்வதை நான் ஏற்று கொள்கிறேன், குட்டியை பிரிந்து வாடுகிறது இந்த ஆடு பாவம், இந்த வேதனை இதனால் தாங்க முடியாது, அதே சமயம் குட்டியும் திரும்ப கிடைக்காது. மனு நீதி காத்த சோழர் பரம்பரையில் வந்த நாம் இந்த ஆட்டுக்கு நேர்ந்த வேதனையிலிருந்தும் அநீதியிலிருந்து அதை மீட்க வேண்டும். அகையால் இந்த ஆட்டை வெட்டி மட்டன் பிரியானி போட்டு நம் வீரர்களுக்கு தந்து விடுங்கள், ஆட்டின் வேதனையும் தீர்ந்து விட்டது,
நமக்கும் இன்ரைய சாப்பாட்டு பிரச்சனையும் தீர்ந்தது"

இந்த மகத்தான தீர்பை கேட்டதும் அவையினர்
"மனு நீதி காத்த லொள்ளர்
லொள்ளுவாத்தியார் வாழ்க
மூவுலகம் ஆளும் லொள்ளபுரி சக்ரவர்த்தி
லொள்ளுவாத்தியார் புகழ் ஓங்குக வாழ்க
கொடுங்கோலன் மனோஜை
தருங்காபுரியை விட்டு துரத்திய
மாவீரர் லொள்ளுவாத்தியாருக்கு ஜெ"
என்ற் கோசமிட்டு கலைந்தனர்.

தொடரும்
பாகம் 4 - லொள்ளபுரி மந்திராசலோனை (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=265707&postcount=45)

ஓவியன்
29-08-2007, 09:11 AM
ஓவியன், நீங்கள் சுக்கு கசாயம் குடித்து பழகி கொள்ளுங்கள், ஏனென்றால் வாத்தியார் உங்களைப்பற்றி எழுதுவதை படித்து ஜீரணிக்க வேண்டும் அல்லவா?.

ஹீ!,ஹீ!
இதெல்லாம் நம்மளுக்கு ரொம்ப சகஜமப்பா!:sport-smiley-018:

நாங்களும் பதிலுக்கு வாத்தியாரை வைத்துக் கன்னா பின்னானு எழுதுவமிலே!!!.

இதயம்
29-08-2007, 09:20 AM
கொஞ்சம் ஓவராய்த்தேங் போய்ட்டிருக்கு..!!

praveen
29-08-2007, 09:23 AM
நாங்களும் பதிலுக்கு வாத்தியாரை வைத்துக் கன்னா பின்னானு எழுதுவமிலே!!!.

என்னத்தை எழுதறது, அவர் உங்களை கதையில் போட்டு தாக்குவார்னு பார்த்தா சாப்பாட்டு நேரத்திலே கதை எழுதினார் போல நீதி கேட்டு வந்த ஆட்டுக்கு மோட்சத்தை காட்டி பிரியானி செய்து விட்டார்.

ஆனா ஒன்னு, (இப்பவும் வாத்தியார் மேலே நம்பிக்கை இருக்கு) அவர் உங்களை எழுதியதை படித்த பின் நீங்கள் இருக்கப்போகும் இடமே வேறு, பிறகு எப்படி கதை எழுதுவீர்கள்.
(கீழ்க்கண்டதில் பிடித்த இடத்தை கூறுங்கள்., எலும்பிச்சம்பழத்துடன் வருகிறேன்,
1) கீழ்ப்பாக்கம்
2) ஏர்வாடி
3) உங்கள் நகரத்தில் உள்ள மனநல மையம் )

இதயம்
29-08-2007, 09:25 AM
ஹீ!,ஹீ!
இதெல்லாம் நம்மளுக்கு ரொம்ப சகஜமப்பா!:sport-smiley-018:

நாங்களும் பதிலுக்கு வாத்தியாரை வைத்துக் கன்னா பின்னானு எழுதுவமிலே!!!.

"ஓவியனின் காவிய வரலாறு"−ன்னு தலைப்பு போட்டு போஸ்டர் ரெடி பண்ணி ஊர் பூரா ஒட்டிரலாமா..??

மனோஜ்
29-08-2007, 09:42 AM
ஏன்ன லொல்லரே எம்மை விரட்டியது நீரா அரன்மனையில் வந்து காலில் விழுந்து கொஞ்சியது ஞாபகம் இல்லையா நான் எல்லறிடமும் தோற்று போகிறொன் ஒரு முறையாவது வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் அதனால் இந்த முறை தோற்றதாக அறிவித்து விடுங்கள் என்று காலை பிடித்து கெஞ்சினீரே அதை மறந்து
எப்படி நான் கொடுங்கொலன வந்து கேட்டு பாரும் எம் மக்களை என் ஆடசியை நயவஞ்சகம் செய்த உம்மை விடுவேனா வருகிறோன் படைஎடுத்து
−தருங்காபுரி வீரன் மனோஜ்

சிவா.ஜி
29-08-2007, 10:04 AM
ஏன்ன லொல்லரே எம்மை விரட்டியது நீரா அரன்மனையில் வந்து காலில் விழுந்து கொஞ்சியது ஞாபகம் இல்லையா நான் எல்லறிடமும் தோற்று போகிறொன் ஒரு முறையாவது வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் அதனால் இந்த முறை தோற்றதாக அறிவித்து விடுங்கள் என்று காலை பிடித்து கெஞ்சினீரே அதை மறந்து
எப்படி நான் கொடுங்கொலன வந்து கேட்டு பாரும் எம் மக்களை என் ஆடசியை நயவஞ்சகம் செய்த உம்மை விடுவேனா வருகிறோன் படைஎடுத்து
−தருங்காபுரி வீரன் மனோஜ்

மன்னா இந்த தருங்காபுரி வீரனென்று சொல்லிக்கொள்ளும் ஆசாமியை இப்போதே ஒரு வழி செய்துவிடவேண்டும்..உங்காளிடம் தோற்று வேறு தேசம் போயும் இன்னும் அகந்தை அழியவில்லை...ஆணையிடுங்கள் மன்னா..(அப்படியே என் குதிரைக்கு கொஞ்சம் கூடுதலாக கொள்ளு கொடுக்கும்படி உங்கள் ரேஷன் அதிகாரியிடம் சொல்லிவையுங்கள்...மந்திரி ஓவியனும் இந்த ரேஷன் அதிகாரியும் கிடங்கிலிருக்கும் கொள்ளை...கொள்ளையடித்து பக்கத்து நாட்டுக்கு பாதி விலையில் விற்கிறார்களாம்...கொஞ்சம் அவங்களையும் கண்டுக்குங்க..)

ஓவியன்
29-08-2007, 11:05 AM
(கீழ்க்கண்டதில் பிடித்த இடத்தை கூறுங்கள்., எலும்பிச்சம்பழத்துடன் வருகிறேன்,
1) கீழ்ப்பாக்கம்
2) ஏர்வாடி
3) உங்கள் நகரத்தில் உள்ள மனநல மையம் )

மூன்றுமே எனக்குப் பொருந்தாது மாப்பு.......
ஏனெனின் முதல் இரண்டும் நடக்க நான் இந்தியாவிலேயே கால் வைக்காதவன்...........! :icon_wink1:
மூன்றாவது நடக்க நான் இப்போது நகரத்திலே வாழவில்லை......! :icon_wink1:

ஆகவே மூன்றுமே எனக்குப் பொருந்தாது, உங்களுக்குப் பொருந்துவதைப் போல.......! :icon_wink1:

ஓவியன்
29-08-2007, 11:06 AM
ஊர் பூரா ஒட்டிரலாமா..??

ஊர் பூரா ஒட்டினாலும் இல்லை ஊர் பூரா ஓட்டினாலும் இப்போ ஊரைவிட்டே ஓடுவது தான் நலம் போலிருக்கே.....! :sport-smiley-018:

ஆதவா
29-08-2007, 07:09 PM
இருங்க இருங்க... வர்றென்...:sport009:

மலர்
30-08-2007, 08:03 AM
அந்த பசுவை பார்த்து
லொள்ளு : "மாவிரன் லொள்ளுவாத்தியாரின் கவகோல் வளையா ஆட்சியில் இந்த லொள்ளபுரி நாட்டில் ஒரு வாயில்லா பிரானியின்

வாத்தியாரே தீடிரென்று எங்கிருந்து பசு வந்தது....

ஆனாலும் மனு நீதி காத்த லொள்ளர்.... அருமை....
வாத்தியாரே இந்த கதையில் என்னை இழுக்கக்கூடாது என்று அஷொ பாணியில் கெஞ்சி மிரட்டி மடல் எழுதி புறாவிடம் கொடுத்து அனுப்பினேனே......புறா வந்ததா....
புறா இன்னும் இங்கு வந்து சேரலையே....

சிவா.ஜி
30-08-2007, 08:14 AM
வாத்தியாரே தீடிரென்று எங்கிருந்து பசு வந்தது....

ஆனாலும் மனு நீதி காத்த லொள்ளர்.... அருமை....
வாத்தியாரே இந்த கதையில் என்னை இழுக்கக்கூடாது என்று அஷொ பாணியில் கெஞ்சி மிரட்டி மடல் எழுதி புறாவிடம் கொடுத்து அனுப்பினேனே......புறா வந்ததா....
புறா இன்னும் இங்கு வந்து சேரலையே....
அய்யயோ மலர் அப்ப உங்களுக்கு புறா ரோஸ்ட் பார்சல் வரலியா...எங்க லொள்ளு மன்னர் எந்த புறா வந்தாலும் செய்தியை படிச்சிட்டு உடனே ரோஸ்ட்க்குத்தான் அனுப்புவார்.அதுல கொஞ்சம் புறாவ அனுப்பினவங்களுக்கு பார்சல் அனுப்பிடுவார். இன்னும் கொஞ்ச நேரத்துல வரும் வெய்ட் பன்னுங்க.

சுட்டிபையன்
30-08-2007, 08:21 AM
வீராதி வீர
கவலோல வளையா அட்சி புரிந்த்
சூராதி சூர
எதிரிகளிடம் புற முதுகு கண்ட
வரலாறு கண்ட
பல போர்களில் விழ்ந்து புண் கண்ட
லொள்ளபுரி சக்ரவர்த்தி
மாவீரன் லொள்ளுவாத்தியார்
வாழ்க

lolluvathiyar
30-08-2007, 10:59 AM
எது எப்படியோ... ஆதவனை தாத்தாவாக மாற்றி விட்டீர்.

சேச்ச உன்மைய எழுதினேன்


அவர் உங்களை எழுதியதை படித்த பின் நீங்கள் இருக்கப்போகும் இடமே வேறு
1) கீழ்ப்பாக்கம் 2) ஏர்வாடி 3) உங்கள் நகரத்தில் உள்ள மனநல மையம்
[/COLOR]

சபாஸ் நல்ல முயற்சி, வீன் போகாது.


"ஓவியனின் காவிய வரலாறு"−ன்னு தலைப்பு போட்டு போஸ்டர் ரெடி பண்ணி ஊர் பூரா ஒட்டிரலாமா..??

என்ன இதயம் ஓவியனின் காவிய வரலாற்றை நான் நீண்ட நாளுக்கு முன்னமே எழுதி கிறுக்கு கேள்வி திரியில் பதித்தை படிக்கவில்லையா.
இதோ சுட்டி

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=260376&postcount=713

படிச்சு பாத்தா தெரியும் இந்த லார்டு லபகுதாஸ் வரலாறு


ஓவியனும்
கிடங்கிலிருக்கும் கொள்ளை...கொள்ளையடித்து பக்கத்து நாட்டுக்கு பாதி விலையில் விற்கிறார்களாம்)

நல்ல கரு தந்திருகிறீர்கள், அடுத்த வரும் பாகங்களில் பரிசீலிக்கலாம் சிவா ஜி

மலர்
30-08-2007, 02:19 PM
வீராதி வீர
கவலோல வளையா அட்சி புரிந்த்
சூராதி சூர
எதிரிகளிடம் புற முதுகு கண்ட
வரலாறு கண்ட
பல போர்களில் விழ்ந்து புண் கண்ட
லொள்ளபுரி சக்ரவர்த்தி
மாவீரன் லொள்ளுவாத்தியார்
வாழ்க

ஏன் சுட்டி நிறுத்திவிட்டாய்..... வாத்தியாரின் புகழை காதார கேட்க ஓடி வந்த எம்மை ஏமாற்றி விடாதே..... தொடரட்டும் உம் பணி..

ஓவியன்
30-08-2007, 02:28 PM
சுட்டியை யாரோ தட்டிடுவேன் என்று எச்சரித்தாங்களாம் − அதான் நிறுத்தி விட்டார். :icon_blush:

praveen
30-08-2007, 02:59 PM
சுட்டியை யாரோ தட்டிடுவேன் என்று எச்சரித்தாங்களாம் − அதான் நிறுத்தி விட்டார். :icon_blush:

குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டியையயம் ஆட்டுவது. என்ற பழமொழியை கேட்டிருக்கிறேன். இப்போது தான் அதை பார்க்கிறேன்.:):grin:

சாராகுமார்
30-08-2007, 02:59 PM
ஐய்யா சாமி தாங்க முடியவில்லைய்யா.உங்க தொல்லை உச்சகட்டத்தில் உள்ளது.அருமை.

மலர்
30-08-2007, 03:03 PM
குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டியையயம் ஆட்டுவது. என்ற பழமொழியை கேட்டிருக்கிறேன். இப்போது தான் அதை பார்க்கிறேன்.:):grin:

உங்கள் அருமையான பதிவுக்கு ஒரு சபாஷ்....

ஓவியன்
30-08-2007, 03:11 PM
குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டியையயம் ஆட்டுவது. என்ற பழமொழியை கேட்டிருக்கிறேன். இப்போது தான் அதை பார்க்கிறேன்.:):grin:

ஏன் இதுக்கு முன்னர் உங்களுக்குக் கண் தெரியாமல் இருந்திச்சோ? :sport-smiley-018:

ஓவியன்
30-08-2007, 03:13 PM
உங்கள் அருமையான பதிவுக்கு ஒரு சபாஷ்....

ஏங்க ஒரு சபாஷ் தானா சொல்லுவீங்க?
இரண்டு அல்லது மூன்று சபாஷ் சொல்ல மாட்டீங்களா? :sport-smiley-018:

மலர்
30-08-2007, 03:16 PM
ஏங்க ஒரு சபாஷ் தானா சொல்லுவீங்க?
இரண்டு அல்லது மூன்று சபாஷ் சொல்ல மாட்டீங்களா? :sport-smiley-018:

மூணு என்ன...முப்பது சபாஷ் கூட சொல்லுவேன,,,,,
ஓவியரே இது கொஞ்சங்கூட நல்லாயில்லை... ஆமா

praveen
30-08-2007, 03:37 PM
ஏன் இதுக்கு முன்னர் உங்களுக்குக் கண் தெரியாமல் இருந்திச்சோ? :sport-smiley-018:

ஓவியன் மேலே இருந்த பாசம் கண்ணை மறைத்து விட்டது. இப்போது லொள்ளுராஜாவின் புகழுக்கு பாதகம் செய்வதால் அந்த பாசம் வழுக்கி விட்டது.

இந்த வாத்தியார் என்ன பன்னுகிறார், இன்னும் இந்த ஓவியனை கவனிக்க மாட்டேன்கிறாரே. ஓவியன் அவரையும் கிள்ளி விட்டாரோ. அப்படியானால் சபை கலையட்டும்.

விடுங்க நான் இந்த விளையாட்டுக்கு வரலை, அப்பறம் நிஜமாகவே ஓவியனுக்கு என் மேல் வெறுப்பு வந்து விட போகிறது.

ஓவியன்
30-08-2007, 03:50 PM
இப்படியெல்லாம் சொல்லி நீங்க எஸ்கேப் ஆக முடியாது மாப்பு!
விடாம துரத்துவான் இந்த OVN :sport009:

அக்னி
30-08-2007, 06:23 PM
மூணு என்ன...முப்பது சபாஷ் கூட சொல்லுவேன,,,,,
ஓவியரே இது கொஞ்சங்கூட நல்லாயில்லை... ஆமா

அப்போ 31 சொல்லமாட்டீங்களோ..?

praveen
31-08-2007, 04:04 AM
இப்படியெல்லாம் சொல்லி நீங்க எஸ்கேப் ஆக முடியாது மாப்பு!
விடாம துரத்துவான் இந்த OVN :sport009:

அப்புறம் மாடிப்படியில் பின் பக்கத்தை பிடித்துக்கொண்டே, மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு என்றி அலறி கொண்டு இறங்குவீர்கள்.

வாத்தியாருக்கு இந்த ஒவியன் வசவு படலம் எழுதுவதற்கு, அவருக்கு PM மூலம் உதவலாமான்னு நினைக்கிறேன், (ஆனால் வாத்தியார் அளவுக்கு எனக்கு எழுத்துப்பிழை விட தெரியாதே, என்று தான் சும்மாயிருக்கிறேன்).

lolluvathiyar
31-08-2007, 12:43 PM
மாவிரன் லொள்ளுவாத்தியார் பாகம் 4

பாகம் 3 : மனு நீதி காத்த லொள்ளர் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=264694&postcount=19)
இந்த தொடரை நான் ஏதோ என்னத்தில் கொண்டு போக ஆரம்பித்து ஆனால் நமது மக்கள் சும்மா விட்டார்களா? உள்ளே தங்கள் திருவிளையாடலை காட்டி கதையின் திசையை மாற்றுகிறார்களே. என்ன செய்ய அவர்களையும் கவனித்தால் தானே திருப்தி அடைவார்கள். எப்படியோ மனோஜை திருப்தி பன்னியாகி விட்டது. ஆனால் சில நன்பர்கள் ஓவியரின் புகழ் தெரிய ஆவலாக இருக்கிறார்கள் போல தெரிகிறது ஓவியர் உட்பட. ஆகையால் அவரின் புகழை சற்று பரைசாற்றி விட்டு அடுத்த பாகத்தை தொடரலாம். இந்த தொடரின் மூலம் சில சரித்திரமும் நடத்தலாம் அல்லவா.


லொள்ளபுரி மந்திராசலோனை

முக்கிய ஆலோசனை செய்யும் இடம். படு ரகசியமானது.
அந்த கூட்டத்தில் மாவீரர் லொள்ளுவாத்தியார், அவரின் பல காரியதரசிகள் இருந்தனர் ஓவியரை தவிர
அதில் முக்கியமானவர்கள்
பூனை படை தளபதி சுட்டி
குதிரை படை தளபதி சிவா ஜி
பூகோள ஆலோசகர் லியோ மோகன்

நேரம் : இரவு மூண்றாம் சாமம்

சிவா ஜி : அகிலத்தை தங்கள் வென்கொற்ற குடையில் கீழ் கொண்டு வந்த மன்னர் மாவீரர் லொள்ளுவாத்தியார் அவர்களே

லொள்ளு : சொல்லுங்கள் பறிபடை தலைவர் சிவா ஜி

சிவாஜி : நமது மந்திரி ஓவியரை பற்றி ஒரு வதந்தி நிலவுகிறது.


மந்திரி ஓவியனும் இந்த ரேஷன் அதிகாரியும் கிடங்கிலிருக்கும் கொள்ளை...கொள்ளையடித்து பக்கத்து நாட்டுக்கு பாதி விலையில் விற்கிறார்களாம்...கொஞ்சம் அவங்களையும் கண்டுக்குங்க..)

லொள்ளு : ஓ இங்கும் அந்த வேலை செய்கிறாரா.

சிவா ஜி : வேறு எங்கு அவர் கொள்ளை அடித்தார் மன்னா. விளக்கமாக சொல்லவும்,ஓவியருக்கு கொள்ளை அடிப்பது தான் தொழிலா.

லொள்ளு : ஓ அதுவா, அவர் முன்னொரு காலத்தில் ஒரு நாட்டு மன்னனாக இருந்தாராம்

சிவா ஜி :ஆமாம் அடிகடி வாரவங்க போர்வங்க கிட்ட


அட்சய முனைக் காவலன்........
மாமமன்னன் ஓவியன் உம் சபை மந்திரியா..........?


இப்படி தான்சொல்லீட்டு இருக்காரு

சுட்டி : என்ன அட்சய முனை காவலரா. அந்த நாடு எங்கு இருகிறது நான் கேள்வி பட்டதில்லையே மன்னா

லொள்ளு : என்ன பூகோள தளபதி லியோமோகன் அவர்களே இவர்களுக்கு அட்சய முனை எங்கு இருகிறது என்று கூறுங்கள்.

லியோமோகன் : மாமன்னர் மாவீரர் லொள்ளுவாத்தியாரே அட்சயமுனை சாவக தீவுக்கும் நக்காவரம் தீவுக்கும் பக்கத்தில் இருகிறது.

சுட்டி : சாவக தீவுவும் நக்காவரம் தீவுவும் எங்கு இருகிறது

லியோமோகன் : சுட்டிக்கு ஆங்கில பெயர் சொன்னால் தான் தெரியும் போல் இருகிறது. சாவக தீவு என்பது ஜாவா சுமுத்தரா தீவு என்றும், நக்காவரம் என்பது நிக்கோபார் தீவு என்று அழைக்க படுகிறது.

சுட்டி : அப்ப அட்சயமுனை என்ன பெயரில் அழைக்க படுகிறது

லியோமோகன் : அட்சயமுனை தீவு இந்தோனேசியிலிருக்கும் ஏச் (Banda aceh) என்றும் வருங்காலத்தில் அழைக்கபடும் சுட்டி.

சுட்டி : என்ன இந்தோனேசியிலிருக்கும் பண்டா ஏச் கேள்வி பட்ட மாதிரி இருக்கே.

லியோமோகன் : ஆம் சுட்டி அது எரிமலைக்கு மேல் இருக்கும் ஒரு நகரம். ஆபத்தான் பகுதியாம். பல முரை பூகம்பம் வரும் பகுதி.
(2004 டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று சுனாமியால் தாக்க பட்டு அந்த நகரத்தில்தான் மட்டும் 1 லட்சம் மக்கள் உயிரழந்தனர். அது தான் பூகம்பத்தின் எபிசெண்டர்)

சுட்டி : ஓவியருக்கு நாடு அமைக்க வேறு இடம் கிடைக்கிலியா?

சிவா ஜி :அங்கு ஓவியர் என்ன செய்து கொண்டிருந்தார்

லொள்ளு : நீண்ட காலத்துக்கும் முன் அங்கு சில காலம் மன்னராக இருந்தாராம். அவர் அங்கு சிறு படை வைத்திருந்தாராம். அதுக்கு புதிய மக்கள் புரட்சி கழகம் என்று பெயரும் வைத்திருந்தாராம்

சுட்டி : பெரிய சுபாஸ் சந்திரபோஸ் நு நினைப்பு போல இருக்கு ஓவியருக்கு.

லொள்ளு : ஆமாமாம், ஆனால் பக்கத்து நாட்டு மன்னன் அக்னி ஒரு நாள் இவரின் நாட்டை பிடித்து இவரை இங்கு நாடு கடத்தி விட்டனர். இவர் இங்கு வந்து லொள்ளபுரி நாட்டில் அடைக்கலம் கேட்டார்.

சுட்டி : நமது லொள்ளபுரி மன்னர் மாவீரர் லொள்ளுவாத்தியார் உடனே கருனை வந்து இந்த மொள்ளமாறி ஓவியருக்கு மந்திரி பதவியும் தந்து விட்டாராக்கும்.

சிவா ஜி :சுட்டி அப்படி அல்ல, ஓவியருக்கு தான் நாய், ஆட்டு குட்டி பாசை தெரியும். அதனால் தான் வச்சிருக்காரு நம்ம மன்னர் மாவீரன் லொள்ளுவாத்தியார் அவருக்கு பிழைச்சு அனுமதி தந்திருக்காரு.

சுட்டி : அக்னிக்கும் அந்த ஆந்த கழகத்தை வைத்திருந்த ஓவியருக்கு என்ன பகை மன்னா

லொள்ளுவாத்தியார் , மேலே நட்சத்திரங்களை பார்த்தவன்னம் தன் என்னத்தை அலையவிட்டார்.

லொள்ளு : அது ஒரு சிறிய கதை, அந்த நாட்டில் ஓவியரின் ஆட்சியில் சாப்பாட்டு பஞ்சத்துக்கு குரைவில்லாமல் இருந்ததாம்.

சிவா ஜி :ஆமாம் ஓவியர் ஆட்சி செய்தால் அப்படிதான் இருக்கும்.

லொள்ளு : பற்றாகுரைக்கு ஓவியருக்கு 36 மனைவிகள் இருந்தனராம்

சுட்டி : என்ன 36 மனைவிகளா? போர இடத்துல எல்லா ஒன்ன கட்டிக்குவாரா.

சிவா ஜி : சரியான சபல ஆசாமி யா இருப்பாரு போல இருக்கு.

லொள்ளு : நான் சொன்னது அதிகாரபூர்வமாக 36 மனைவி, தெரியாமல் எத்தனைனு சின்னவீடுனு யாருக்கும் தெரியாது.

சுட்டி : அதனால் தான் அவருடைய நாட்டுல சாப்பாட்டு பஞ்சம் வந்திருக்கும்.

லொள்ளு : அதனால் அவரு பக்கத்துல இருக்கர நாடுகளுக்கு இரவில் படை வீரர்களோட போய், அரிசி, ஆடு மாடு திருடிட்டு வந்துருவாங்களாம்.

சிவா ஜி : ஓ அதனால தான் அந்த நாட்டு மன்னன் அக்னி, கொள்ளையர் ஓவியர் மீது படை எடுத்து துரத்தீட்டாங்களாம்.

சுட்டி : சக்ரவர்த்தி லொள்ளுவாத்தியாரே ஆனா அந்த புத்திய இங்கும் காட்ட மாட்டாரா.

லொள்ளு : காட்டலாம் ஓவியர நம்பரதுக்கு இல்ல. அதுக்கு நான் சிறப்பு ஏற்பாடு பன்னி வச்சிருக்கேன். மலர் என்று ஒரு கெட்டிகார பென்னை வச்சு அவர உளவு பார்க்க ஏற்பாடு பன்னி இருக்கிறேன்.

லியோமோகன் : மன்னரே மலர் சின்ன பெண், அவரை இந்த ஆபத்தான வேலைக்கு அனுப்பலாமா?

லொள்ளு : மோகன் ஓவியர் சும்ம தகர டப்பா மாதிரி பூச்சாண்டி தான் காட்டிட்டு இருப்பாரு. விசயம் எதுவும் இல்ல. ஆனா மலர் கெட்டிகார பொன்னு, ஓவியரு ஏதாவது ஓவரா துள்ளுனா அப்பவே போட்டு எறிஞ்சுடுவாங்க.

லியோமோகன் : மன்னரே இரவு நாலாம் சாமம் ஆகிவிட்டது, தூங்கலாமா?

சுட்டி : மாமன்னன், மாவீரன் லொள்ளபுரி கொற்றவன் லொள்ளுவாத்தியார் வாழ்க

சிவா ஜி சுட்டியை ஒரு அடி தந்துவிட்டு. இது ரகசிய நடுநசி கூட்டம். சும்மா சத்தம் போடாம வா.
சுட்டியும் வாய பொத்தி ஒத்தை கன்னை மூடி கொண்டு புனை போல சத்தமிலாமல் நடந்து போனார்

ரகசிய சபை கலைந்தது.

தொடரும்

(அடுத்தது யாரை?)
பாகம் 5 : அந்தபுரம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=267405&postcount=59)

பிச்சி
31-08-2007, 01:38 PM
வாத்தியார் அண்ணா... உங்களை எல்லாரும் அடிக்கப் போறாங்க.

பூமகள்
31-08-2007, 01:39 PM
அஹா..... அற்புதம்... மன்னரே....!!:nature-smiley-008:
மன்றத்தில் தேர்ச்சி மிக்க மருந்துவர்கள் நிறைய இருப்பதாய் கேள்விப் பட்டேன்.....!!!
யாரேனும் அவர்களில் ஒருவரை அழையுங்களேன்.... எனக்கு சிரித்துச் சிரித்து வயிறு வலிக்கிறது......!:sport-smiley-018:

இப்போது தான் பார்த்தேன்........ இந்தத் திரியை........


விராடன் : கவலை படாதீர்கள் மன்னா, நமது நாட்டுக்கு ஒரு புதிய பெண் கவிஞரை அழைத்து வந்திருகிறேன். பெயர் : பூமகள்

லொள்ளு : ம் வரசொல்

பெண் கவி பூமகள் புயலெனே உள்ளே நுழைந்தார்.

என் பெயரை நான் எதிர்பார்க்கவே இல்லை. கண்கள் பனித்தன சந்தோசத்தால்.............!! :icon_dance:
என் பெயரையும் லொள்ளர்புரி வரலாற்றில் பொன் ஏடிகளில் பொறித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் வாத்தியாரே............!! :nature-smiley-008:

வாழ்த்துக்கள்... தொடருங்கள்... அன்புச் சகோதரரே...!!!

இலக்கியன்
31-08-2007, 01:48 PM
வாழ்த்துக்கள் லொள்ளு வாத்தியார் கலக்கிறீர்கள்

lolluvathiyar
01-09-2007, 12:47 PM
இந்த வாத்தியார் என்ன பன்னுகிறார், இன்னும் இந்த ஓவியனை கவனிக்க மாட்டேன்கிறாரே. ஓவியன் அவரையும் கிள்ளி விட்டாரோ. அப்படியானால் சபை கலையட்டும்.


உங்கள் ஆசையை முதல் பகுதி நிறைவேற்றி விட்டாகிவிட்டது.

மலர்
02-09-2007, 10:54 AM
மாவிரன் லொள்ளுவாத்தியார் பாகம் 4 லில் உள்ள லொள்ளபுரி மந்திராசலோனை ரகசியக்கூட்டம் அருமையாக உள்ளது.....
வாத்தியாரே உமக்கும் ஓவியருக்கும் ஏதாவது இதுவா.... இந்த காய்ச்சு காய்ச்சுகிறீர்....ஹா ஹா


லொள்ளு : பற்றாகுரைக்கு ஓவியருக்கு 36 மனைவிகள் இருந்தனராம்

ஓவியரே ஒரு பெண்ணை கட்டி கொண்டதற்கே ஓவ்வொருத்தரும் அழுது கொண்டு நாய் படாத பாடு பட்டு அலைகிறார்கள்...... பரவாயில்லை நீர் வீரர் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்....(பின்ன 36 பேருகிட்ட அடி வாங்குறதுன்னா சும்மாவா)

சிவா.ஜி
02-09-2007, 12:10 PM
மன்னரே...ஓவியரை இந்த காச்சு காச்சிட்டீங்களே...மந்திரி பதவியை ராஜினாமா பண்ணிட்டு போயிடப்போறார்....எதுக்கும் இன்னொரு ஆள ரெடி பண்ணி வெச்சுக்குங்க....காச்சறதுக்கு...சூப்பர் வாத்தியாரே...அசத்துறீங்க.

இதயம்
02-09-2007, 12:21 PM
இங்க வந்து விமர்சிக்கவே பயமா இருக்கு..! அப்புறம் லொள்ளர்புரி வரலாற்றில் என் பேரையும் எழுதிட்டா.? அப்படியெல்லாம் செய்ய மாட்டார் நம்ம லொள்ளர் புரி வேந்தர்..!

போரில் கால் பிடரியில் அடிக்காமல் முகத்தில் அடித்து புறமுதுகிட்டு ஓடிய சக்ரவர்த்தி லொள்ளுவாத்தியார்.... வாழ்க.. வாழ்க..!!!

மலர்
02-09-2007, 12:33 PM
இங்க வந்து விமர்சிக்கவே பயமா இருக்கு..! அப்புறம் லொள்ளர்புரி வரலாற்றில் என் பேரையும் எழுதிட்டா.? அப்படியெல்லாம் செய்ய மாட்டார் நம்ம லொள்ளர் புரி வேந்தர்..!

போரில் கால் பிடரியில் அடிக்காமல் முகத்தில் அடித்து புறமுதுகிட்டு ஓடிய சக்ரவர்த்தி லொள்ளுவாத்தியார்.... வாழ்க.. வாழ்க..!!!

வாத்தியாரே அடுத்த ஆள் ரெடி....
வாத்தியாருக்கு இருக்கும் தொப்பையை பார்த்தபின்பும் உங்களுக்கு பொய் சொல்ல எப்படி மனது வந்தது?

மலர்
04-09-2007, 12:41 PM
அனுப்புநர்

வாத்தியாரின் விசிறிகள்
தமிழ் மன்றம்
பெறுநர்

சக்கரவர்த்தி லொள்ளுவாத்தியார்
லொள்ளபுரி
பொருள்

மாவிரன் லொள்ளுவாத்தியார் பாகம் 5 வெளிவராததை கண்டித்து
வீராதி வீர
கவலோல வளையா அட்சி புரிந்த
சூராதி சூர
எதிரிகளிடம் புற முதுகு கண்ட
வரலாறு கண்ட
பல போர்களில் விழ்ந்து புண் கண்ட
லொள்ளபுரி சக்ரவர்த்தி
மாவீரன் லொள்ளுவாத்தியார்
அவர்களுக்கு என் முதற்கண் வணக்கம்:music-smiley-009:

கொலை நோக்கு பார்வை கொண்ட மன்னவே தாங்கள் தங்களின் வீர தீர வரலாற்றை எதிரிகளிடம் புற முதுகு காட்டி ஓடிவந்த காலத்தால் அழியாத மண்சுவற்றில் எழுதி வருகிறீர் என்பதை இந்த நாடே அறியும்...

ஆட்டின் கண்ணீரை காணமாட்டாது பிரியாணி ஆக்கிய பெருந்தகையே உம்முடைய வரலாற்றை இந்த உலகமே காணவேண்டாமா....

அட்சய முனைக் காவலன்........
மாமமன்னன் ஓவியன் உம் சபை மந்திரியா..........?

நீர் எவ்வளவு காவல் வேண்டுமானாலும் வைத்துகொள்ளும் நான் உம் நாட்டை பிடிக்காமால் விடுவதில்லை
− தருங்காபுரி வீரன் மனோஜ்


போன்ற பல அந்நிய நாட்டு சதிகளை முறியடித்த லொள்ளரே....
உமக்கு என்ன ஆயிற்று

நீதி தவறா மன்னவரே ஐந்தாவது பாகத்தை ஆசையோடு காண ஓடோடி வந்த எங்களை காண விடாது ஏமாற்றி வீட்டீரே.....

விரைவில் மாவீரன் லொள்ளுவாத்தியார் − ஐந்தாவது பாகத்தை இனிப்புசுவை,காரச்சுவை.... இல்லை இல்லை அது என்ன.....ங்..ங்.. நியாபகம் வந்துட்டு... சொற்சுவை பொருட்சுவை குறையாது தரும்படி மிரட்டி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்:thumbsup:

சிவா.ஜி
04-09-2007, 12:47 PM
அய்யோ யாரிது மலரா.....அடங்கொப்புரானே என்னா போடு போடுது இந்த பொண்ணு.மலர் அசத்திட்டீங்க நீங்களே ஒரு வரலாறு படைக்க வேண்டியதுதானே...மிக அருமையாய் எழுதுகிறீர்கள்

lolluvathiyar
04-09-2007, 01:25 PM
வாத்தியார் அண்ணா... உங்களை எல்லாரும் அடிக்கப் போறாங்க.

லொள்ளுவாத்தியார் நிரைய அடி வாங்கி பழக்கபட்டவர் பிச்சி


என் பெயரை நான் எதிர்பார்க்கவே இல்லை. கண்கள் பனித்தன சந்தோசத்தால்.............!! :icon_dance:



வாழ்த்துக்கள் லொள்ளு வாத்தியார் கலக்கிறீர்கள்

நன்றி பூமகள் மற்றும் இலக்கியன்


வாத்தியாரே உமக்கும் ஓவியருக்கும் ஏதாவது இதுவா.... இந்த காய்ச்சு காய்ச்சுகிறீர்..


ஆமாம் சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்த மாதிரி கம்முனு கதை எழுதீட்டு இருந்தவன அட்சயமுனை காவலனு ரவுசு பன்னினா நாம அதவிட ரவுசு பன்னுவமுல்ல


மந்திரி பதவியை ராஜினாமா பண்ணிட்டு போயிடப்போறார்....எதுக்கும் இன்னொரு ஆள ரெடி பண்ணி வெச்சுக்குங்க..

ஓவியரு அப்படி எல்லாம் போக மாட்டாரு. அடுத்த ஆளா நீங்களே சொல்லிருங்க காய்ச்சரதுக்கு. எனக்கு என்னவோ ஆசோ தான் ரொம்ப ஆர்வமா இருக்கிறார் போல தோனுது


இங்க வந்து விமர்சிக்கவே பயமா இருக்கு..! அப்புறம் லொள்ளர்புரி வரலாற்றில் என் பேரையும் எழுதிட்டா.? அப்படியெல்லாம் செய்ய மாட்டார் நம்ம லொள்ளர் புரி வேந்தர்..!


ஞாயக படுத்தீட்டீங்களா, கவல படாதீங்க உங்களுக்கும் மிக பெரிய ரோல் கொடுத்துடலாம்.

மலர் நீங்கள் பதித்த பதிவு உனிகோடாக்கம் பன்னவில்லை. ஜன்க் (Junk)வார்த்தைகளா தெரிகிறது. சரி செய்து விடுங்கள்.
அடுத்த பாகம் யாரையும் காய்ச்சாமல் சிறிது ரொமான்ஸ் பாகமாக எழுதுகிறேன்.

ஷீ-நிசி
05-09-2007, 08:55 AM
அடடே! ஒரு 18 −ஆம் நூற்றாண்டே இங்கே உலாவிக்கொண்டிருக்கிறதே!

நடக்கட்டும், நடக்கட்டும்....

பென்ஸ்
05-09-2007, 09:23 AM
வாத்தியார்.. லொள்ளு என்ற உங்கள் முதல் பெயர் ஏற்றதுதான்...
அதே போல் மாவீரன் என்பது லொள்ளுதானே...??? :−)

lolluvathiyar
05-09-2007, 11:54 AM
மாவிரன் லொள்ளுவாத்தியார் பாகம் 5
பாகம் 4 - லொள்ளபுரி மந்திராசலோனை (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=265707&postcount=45)

அந்தபுரம்

(இதுவரை லொள்ளபுரி அரன்மனை, மந்திராச்லோனையை பார்த்து விட்டீர்கள். நம் கதைநாயகன் லொள்ளுவாத்தியார் இருக்கும் அவருக்கு கதைநாயகி இல்லாமல்ஒரு காவிய கதை இருக்கலாம்? அதுவும் அந்தபுரமும் காதல் காட்சிகள் இல்லாமல் இருந்தால் மக்களுக்கு பீலிங்ஸ் வந்து விடுமே. ஆகையால் இந்த பாகத்தில் நேயர்களை லொள்ளபுரி அந்த புரத்திற்க்கு அழைத்து செல்கிறோம்.)

சலக் சலக் என்று ஒரு சத்தம். அது என்ன சத்தம். படகு வலிக்கும் சத்தம் போல இருக்கிறதே.
ஆம் மாவிரன் லொள்ளுவாத்தியார் லொள்ளபுரி நாட்டில் சுற்றிலிம் தன்னீர் சூல்ந்த ரம்மியமான இடத்தில் தான் தன் அந்தபுரத்தை அமைத்திருகிறார். அங்கு தான் இப்பொழுது படகில் போய் கொண்டிருகிறார். கூவம் நதியில் கொஞ்சும் எழிலை ரசித்த வன்னம் மெய் மறந்து தன் படகில் போய் கொண்டிருந்தார். நதிகறையின் இருபுரத்திலும் அடர்ந்து வளர்ந்திருக்கும் பசுமை ததும்பிய காட்டாமனக்கு செடிகளும், பார்த்தீனிய செடிகளும், எருக்களாம்பால் செடிகளும் ஒன்றை ஒன்று போட்டி போட்டு தங்கள் அழகை வெளிபடுத்தின. அதன் கிலைகளில் மீது அமர்ந்து காக்கைக*ள் கானம் பாடியது லொள்ளுவாத்தியாருக்கு தெய்வீக கானம் பாடியது போல இருந்தது

படகு மெல்ல அந்தபுரத்தை நெருங்கி விட்டன. நமது மன்னன் லொள்ளுவாத்தியாருக்கு தன் பட்டமகிஷியை பார்க்க ஆவல் கரைபுரண்டு ஓடியது. வானுயர அந்தபுரத்தை பெருமூச்சுடன் பார்த்தார். சந்திரன் வெளிச்சத்தில் அந்தபுரம் ஜொளித்தது. மாவிரன் லொள்ளுவாத்தியாரின் பார்வை அந்தபுர நிலாமுற்றத்தின் மீது சென்றது. நிலா முற்றத்தில் அவருடைய தர்மபத்தினி நின்று கொண்டிருந்தாள். பூரன சந்திரனின் கிரகனங்கள் அவளின் பட்டு கன்னங்களில் மீது பட்டு தெரித்து மின்னியது. நமது லொள்ளுவாத்தியார் ரானியை பார்த்தார் நிலாவை பார்த்தார். இதில் எது சந்திரன் என்று அவருக்கு குழப்பம் உண்டாகியது.

அந்தபுரத்தை நெருங்கியவுடன், அரன்மனை உள்ளே அவசரமாக நமது காதல் மன்னன் மாவீரன் லொள்ளுவாத்தியார் கட்டுக்கடங்கா ஆவலுடன் பிர*வேசித்தார். அவரை அந்தபுரத்து சேடிபெண்கள் வரவேற்றனர். ஆனால் ரானி வராததை கண்டு ஏமாற்றம் அடைந்தார்.

ஒரு சேடி : "மூவுலகை ஒரு குடையில் கீழ் ஆண்ட மன்னன் மாவீரன் லொள்ளுவாத்தியாரே, நமது இரண்டு நாள் நீங்கள் வராததால் நமது ரானியார் கோவித்து கொண்டு மஞ்சத்தில் இருகிறார்"

இருக்கிற* இரண்டு கால் பாய்ச்சலில் மாவீரன் லொள்ளுவாத்தியார் படுக்கை அரையை நோக்கி ஓடினார். அங்கு அவருடைய ரானி குப்பற படுத்திருந்தார்

ரானி மகா ரானி

லொள்ளுவாத்தியாரை மணந்த பாக்கியசாலி யார் என்று வாசகர்களின் ஆவலை இதற்க்கு மேல் சோதிக்க வேண்டாம் என்று அவரை அறிமுக படுத்துவோம்.
மாவீரன் லொள்ளுவாத்தியாரின் மனைவி நாலு அடி உயரம் 48-36-48 சைசில் இருப்பார். இவருக்காகவே அந்தபுர வாயில் கதை மாற்ற வேண்டி இருந்ததாம். மாநிறமாக இருப்பார், ஆனால் அழகு மாவீரன் லொள்ளுவாத்தியாருக்கு கொள்ளை அழகாகவே காட்சி அளிப்பார். இரெண்டே இருண்டு பற்கள் மட்டும் அரை அங்குலம் தான் எந்தி இருக்கும். மற்றபடி நல்ல அழகிதான்.

லொள்ளபுரி நாட்டிற்க்கு பக்கத்தில் உள்ள அயோத்தி குப்பம் மன்னர் ஆதித்த கரிமுகத்தானின் செல்வ மகள் அவள். நமது மாவீரன் லொள்ளுவாத்தியாரை காதலித்து கரம் பிடித்தவர். (அந்த காதல் கதையை இன்னொரு பாகத்தில் பார்க்கலாம்) அடடே மாவீரன் லொள்ளுவாத்தியாரின் பட்ட மகிசியின் பெயரை சொல்லாமல் இழுத்தடிப்பது உங்களுக்கு கோபமா? திருபுவன சுந்தரி பெரியபிராட்டி கருப்பாயி தேவி என்பது அவரின் திருநாமம். நமது லொள்ளுவாத்தியார் அவரை சுருக்கமாக கருவாச்சி என்று செல்லமாக் அழைப்பாராம்.

லொள்ளுவாத்திர் மஞ்சத்துக்கு அருகில் சென்று கருப்பா ரானியின் தோளில் தனது வஜ்ரம் போன்ற கரத்தை வைத்தார். அவளோ அதை "உகும் :" என்று தட்டி விட்டார்.

லொள்ளு : "தேவி என் மீது கோபமா"

கருப்பா : "ஏன் இரண்டு நாள் வரவில்லை, என்னை பார்க்க"

லொள்ளு : "அரசாகத்தின் அவசர வேலை நிரைய இருந்தன, அதான் வரமுடியவில்லை, என் அழகே"

கருப்பா திரும்பி காதல் சாம்பார் கொட்டும் நமது லொள்ளுவாத்தியாரின் திரு திரு என விழிக்கும் கண்களை ஏறிட்டாள்.

அவளின் அந்த பார்வை லொள்ளுவாத்தியாரை நீர் சூழலில் சிக்கிய இலை போல திக்குமுக்காட செய்தன. உடனே தனது காதல் வசனங்களை ஆரம்பித்து விட்டார்.

லொள்ளு :
"என் கன்னே, பவள வாயே, கத்திரிகாய் செடியே, முர்ங்கை மரமே, தென்றலே, சுறாமீனே, ருசிக்கும் நண்டே.
குதிரை வால் முடி போல் இருக்கும் உன் தலைமுடியின் தன்மை என்னை மதி மயக்கி விட்டதடி
அதில் சூடியிருக்கும் எருக்களம்பால் பூவின் வாசம் என் இதயத்தை மயக்கி விட்டதடி
சகாரா பலைவனம் போல இருக்கும் உன் நெற்றி என் சிந்தை கலக்கி விட்டதடி
தவளை போன்ற உன் ஆழமான விழிகள் என் நெஞ்சை ஓட்டை போட்டுவிட்டதடி
கொக்கு போன்ற உன் மூக்கு எனக்கு இந்திரன் பல்லக்கை நினைவு படுத்ததடி
திமிங்கலத்தை போன்ற உன் இதழ்கள் என் உள்ளத்தை கொள்ளை கொண்டு போய் விட்டதடி
யானையை போன்ற உன் கன்னம் என்னை அதிர செய்து விட்டதடி
தென்னை மரம் போன்ற உன் கழுத்து என்னை சிறைபடுத்தி விட்டதடி"

கருப்பா : "நாதா போதும் உங்கள் வர்னனை, கழுத்து வரைக்கு தான் அனுமதி. அதற்க்கு கீழ் வர்னிக்க தனிக்கை செய்ய பட்டு விட்டது"

லொள்ளு :
"கன்னே, புயற்காற்றே, வெள்ளை பூண்டே, கொத்தமல்லியே
உன் இனிய குரல் தேங்காய் உடைப்பது போல் இனிய கானம் எழுப்பதடி
உன் அழகிய சிரிப்பு எருமை கனைத்தது போல் இருந்ததடி
உன் பார்வை, எனக்கு அயிரை மீனை நினைவு படுத்ததடி
என் காதல் புறாவே"

கருப்பா : "நாதா போதும் போதும், உங்கள் போன்ற கவி ஆற்றல் படைத்த உத்தமரை அடைய நான் எத்தனை பாக்கியம் செய்தவள்"

லொள்ளு : "தேவி, கருவாச்சி, எனக்காக உன் இனிய பாதங்களால் ஒரு நடனமாட கூடாதா"

கருப்பா : " நான் ஆட வேண்டுமென்றால் இந்த லொள்ளவன் பாட வேண்டும்"

லொள்ளு : "முதலில் நீ பாட வேண்டும், இதோ வீனை மீட்டு பாட நான் கேட்க ஆவலாய் ஓடோடி வந்தேன்"

கருவாச்சி தன் அழகிய கரங்களால் வீனையை மீட்டு இனிய கீதம் பாட ஆரம்பித்தாள்

லொள்ளார வேலனே வேலா
இசையிது
லொள்ளார வேலனே வேலா
நிறுத்தி விட்டாள்

லொள்ளு : "ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய் கருவாச்சி, உன் பாட்டை கேட்க நான் உழுந்தடித்து ஓடி வந்தேன்"

கருப்பா : "சீ போ மன்னா எனக்கு வெக்கமாக இருக்கு, நீங்களே அனத்துங்கள் "

லொள்ளு :
"செந்தமிழ் நீர்மோரால்
நிலாவென குளிப்பாள்
பைந்தமிழ் இதழில்
கருவாட்டு குழம்பு தருவாள்
அதை பருகிட நாக்கை நீட்டுவான்"

இப்படியே இவர்கள் காதல் காட்சி நீண்ட நேரம் சென்றது. இனி நாமும் இவர்களின் தனிமையை உனர்ந்து அவர்களை தொந்தரவு செய்யாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவத் தான் சிறந்த பன்பாடு.

தொடரும்
போர் கோசம் - 6 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=270663&postcount=66)
(அடுத்த பாகங்களில் வழக்கம் போர் காட்சிகள் தொடங்கலாம்)

மலர்
08-09-2007, 04:13 PM
வாத்தியாரே உமது அந்தப்புரத்ததை எழுதி இந்தப்புரத்திலிருந்த்து எல்லோரையும் விரட்டி விட்டீரே இது நியாயமா....

ஷீ-நிசி
08-09-2007, 05:08 PM
:)
வாத்தியாரே உமது அந்தப்புரத்ததை எழுதி இந்தப்புரத்திலிருந்த்து எல்லோரையும் விரட்டி விட்டீரே இது நியாயமா....

எப்புடி! இப்புடி!

lolluvathiyar
09-09-2007, 10:24 AM
அடடே! ஒரு 18 −ஆம் நூற்றாண்டே இங்கே உலாவிக்கொண்டிருக்கிறதே!


ந*ன்ப*ரே 18 ஆன் நூற்றான்டு அல்ல இந்த* க*தை கிமு 500 சிறிது சிறிதாக* 20 ஆம் நூற்றான்டுக்கும் வ*ரும்.


லொள்ளு என்ற உங்கள் முதல் பெயர் ஏற்றதுதான்...
அதே போல் மாவீரன் என்பது லொள்ளுதானே...??? :−)

ஐயோ நான் அப்பாவிங்க*

அது சரி உங்கள் இருவர் பெயரையும் மற ந்து விட்டேன். விரைவில் சேர்த்து விடுகிறேன் அடுத்த பாகங்களில்

பூமகள்
09-09-2007, 10:35 AM
லொள்ளபுரி மன்னரே.....:icon_03::icon_good:
என்னை லொள்ளபுரி அரசின் ஆஸ்தான கவிதாயினியாக ஆக்கியபின் உங்களின் கவித்திறன் மேலும் மெருகேறிக் கொண்டே போகிறதே........!!:icon_give_rose::icon_03:


லொள்ளு :
"என் கன்னே, பவள வாயே, கத்திரிகாய் செடியே, முர்ங்கை மரமே, தென்றலே, சுறாமீனே, ருசிக்கும் நண்டே.
குதிரை வால் முடி போல் இருக்கும் உன் தலைமுடியின் தன்மை என்னை மதி மயக்கி விட்டதடி
அதில் சூடியிருக்கும் எருக்களம்பால் பூவின் வாசம் என் இதயத்தை மயக்கி விட்டதடி
சகாரா பலைவனம் போல இருக்கும் உன் நெற்றி என் சிந்தை கலக்கி விட்டதடி
தவளை போன்ற உன் ஆழமான விழிகள் என் நெஞ்சை ஓட்டை போட்டுவிட்டதடி
கொக்கு போன்ற உன் மூக்கு எனக்கு இந்திரன் பல்லக்கை நினைவு படுத்ததடி
திமிங்கலத்தை போன்ற உன் இதழ்கள் என் உள்ளத்தை கொள்ளை கொண்டு போய் விட்டதடி
யானையை போன்ற உன் கன்னம் என்னை அதிர செய்து விட்டதடி
தென்னை மரம் போன்ற உன் கழுத்து என்னை சிறைபடுத்தி விட்டதடி"

இப்படி உங்களின் அன்புத் துணைவியுடன் அழகாக கவி பாடி கவுத்துறீங்களே மன்னா?????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:ohmy: :icon_good:

நம் லொள்ளபுரி அரசின் ஆஸ்தான கவிதாயினி என்ற வேலைக்கு வேட்டு வைத்து விடாதீங்க என்று அன்புடன் (மிரட்டி) கேட்டுக் கொள்கிறேன் மன்னா...!!:violent-smiley-010:

பின் பூமகளுக்காய் லொள்ளபுரி தமிழ் மன்றமே போர் கொண்டு வரும் உம்மேல்... அதற்கு நான் பொறுப்பில்லை...ஆமாம்...!!

நிற்க,

அருமையாக இருந்தது அந்தபுரம்...அடுத்த படைப்புக்காய் ஆவலுடன் காத்திருக்கிறோம். விரைந்து வந்து படையுங்கள் சரித்திரத்தை...!!
பாராட்டுக்கள் வாத்தியாரே....!!

கலைவேந்தன்
09-09-2007, 11:17 AM
தொடக்க லொள்ளு முதல் இறுதி லொள்ளு வரை அனைத்தையும் படித்து
புளகாங்கிதம் அடைந்து விட்டேன் மாவுவீரர் லொள்ளழகர் 144ம் புளிகேசி
மகாவீரர் வாத்தியார் அவர்களே!
ஒரு இனிமையான சொரியல் நிறைந்த புல்லாஅரிக்கும் வகையில் ஒரு மகா காவியத்தைப்படைத்துள்ளீர்கள்!
ப்ராராட்டுக்கள் வாத்தியார் வாந்தியத் தேவரே!

சிவா.ஜி
09-09-2007, 11:30 AM
மன்னாதி மன்னர் லொள்ளபுரியாரே....அந்தப்புரத்தில் இப்படி ஒரு சொப்பன சுந்தரியை இத்தனைநாள் பதுக்கி வைத்துக்கொண்டு கண்ணுல காட்டவேயில்லயே....அதுலயும் உங்களோட வர்னனையில மகாராணி ஜொலிக்கறாங்க...பார்த்து ஜாக்கிரதையாக கவனித்துக்கொள்ளுங்கள்.யாராவது அடுத்த நாட்டு மன்னர்கள் இவரை கொத்திக்கொண்டு போவதற்காக படையெடுத்து வந்து விடப் போகிறார்கள்.கலக்குறீங்க அப்படியே சரளமா அருவி மாதிரி கொட்டுது...நடக்கட்டும்...நடக்கட்டும்....

lolluvathiyar
12-09-2007, 10:24 AM
மாவிரன் லொள்ளுவாத்தியார் பாகம் 6

லொள்ளுவாத்தியார் போர் கோசம்

பாகம் 5 : அந்தபுரம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=267405&postcount=59)

நீண்ட நாள் இடைவெளி விட்டு மாவீரன் லொள்ளுவாத்தியாரை தொடருகிறேன். இடைவெளிக்கு மன்னிக்கவும். இந்த சரித்திரத்தின் முக்கிய பகுதியான மாவீரன் லொள்ளுவாத்தியார் புறமுதுகு காட்டிய வரலாறை அறிய நிரைய நன்பர்கள் ஆவலுடன் இருகிறார்கள். அவர்கள் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டிய கடமையை நான் மறக்கவில்லை.

மாவீரன் லொள்ளுவாத்தியார் புறமுதுகு காட்வது என்றால் சும்மா காட்ட முடியுமா. போரில் தானே புறமுதுகு காட்ட முடியும். போர் செய்ய போக வேண்டுமல்லவா? யாருடன் போர் செய்ய போக வேண்டும் ஏன் போர் செய்ய போக வேண்டும். போருக்கு காரனம் வேண்டாமா?. ஆகையால் இன்னும் சில பாகம் காத்திருக்கும் படி கேட்டுகொள்கிறேன். இந்த பாகத்தில் தான் போர் செய்ய புறபடும் காரனம் வருகிறது. இனி கதைக்கு போவோம்.

மீண்டும் லொள்ளபுரி அரன்மனை

அரன்மனையில் சிம்மாசனத்தில் மாவிரன் லொள்ளுவாத்தியார் பரபரப்புடன் அமர்ந்திருந்தார். அவர் மட்டுமல்ல மந்திரி ஓவியர், தளபதி சிவா ஜி, சுட்டி, விராடன், புலவர்கள் ஆதவா பூமகள் இன்னும் சமையில் உள்ள அனைவரும் பரபரப்புடனே தான் அமர்ந்திருந்தனர். யாரும் பேசவில்லை. அனைவர் முகத்திலும் ஏதோ ஒரு சோகம் இருந்தது.

அந்த சோகத்துக்கு காரனம், இந்த லொள்ளபுரி நாட்டில் அனைவருக்கும் சகோதரியாக இருந்த ஓவியா என்ற ஒரு பிரஜையை சில நாட்களாக கானவில்லை. மாவிரன் லொள்ளுவாத்தியார் தனது படைகளை அனுப்பி நாட்டில் உள்ள எட்டு திக்கெல்லாம் தேடி வர ஆனையிட்டார். ஆனால் ஓவியாவை பற்றி தகவல் கிடைக்கவில்லை. அதனால் அனைவரும் சோகத்தில் இருப்பது வியப்பேதும் இல்லையே.

லொள்ளுபுரி நாட்டில் தலை சிறந்த ஒற்றர் படைகளை லொள்ளுவாத்தியார் ஓவியாவை பற்றி தகவல் அறிந்து வர அண்டை நாடுகளுக்கேல்லாம் போய் தேடினார்கள். லொள்ளபுரி நாட்டின் ஐந்தாம் படையை சேந்ந்த மலர் என்ற புத்திசாலி பெண் ஓவியாவை பற்றி ஏதோ முக்கிய தகவல் கொண்டு வருவதாக தகவல் வந்திருகிறது. மலருக்காக தான் அரசவையே ஆவலுடன் பரபரப்புடன் கானபட்டது. அப்பொழுது மலர் அவசர அவசரமாக அவையில் நுழைந்தார்.

மலர் : மாவிரன் லொள்ளுவாத்தியார் வாழ்க

ஓவியர் : திறமைக்கு பெயர் போன மலரே உங்கள் வருகையை இந்த லொள்ளபுரி அரச சபையே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருகிறது. போன காரியம் என்னவாயிற்று.

ஆதவா : லொள்ளபுரி நாட்டின் அனைத்து மக்களின் சகோதரி ஓவியாவை பற்றி தகவல் கிடைத்ததா.

மலர் : சக்ரவர்த்தி லொள்ளுவாத்தியார் அவர்களே, ஓவியாவை பற்றி தகவலறிய நான் எட்டு திக்கும் போனேன். சோழ நாடு, சேர நாடு, பாண்டிய நாடு ஏன் கொங்கு நாடு (கோவை), கலிங்கம்(ஒரிசா), சவுராஸ்டிரம் (குஜராத்), காஸ்மீரம், காந்தாரம் (ஆப்கானிஸ்தான்), ரோமபுரி, கிரேக்கம் அரபு நாடுகளிலும் கூட தேடி பார்த்தேன். எங்கும் கிடைக்கவில்லை. பிறகு அங்கிருந்து சப்பை மூக்கர்கள் நிறைந்த சீனா தேசம் சென்று பார்த்தேன். பிறகு வங்காளம், இலங்கை, சாவக தீவு, சென்பக தீவு, அட்சயமுனை சென்றும் தேடி பார்த்தேன். எங்கும் அவரை பற்றி தகவல் இல்லை இறுதியாக கடாரம் (மலேசியா) சென்றேன். அங்கு தான் அவர் இருப்பதாக எனக்கு உளவு படை தகவல் கிடைத்தது.

லொள்ளு : என்ன ஓவியா கடாரத்தில் இருகிறாரா? அவரை பார்த்தாயா மலரே?

மலர் : இல்லை மாமன்னா, ஆனால் ஓவியா ஒரு தூதுவர் மூலம் எனக்கு செய்தி அனுப்பினார்.

பூமகள் : என்ன அக்கா செய்தி அனுப்பினாரா, என்ன செய்தி அனுப்பினார் தங்கை மலரே.

மலர் : இதோ ஓவியா அனுப்பிய செய்தி
"கடாரத்தில் நான் ஆரோக்கியமாக இருகிறேன். லொள்ளபுரி சகோதர்களை நான் என்றுமே மறக்க மாட்டேன். தவிர்க்க முடியாத சில காரனத்தாலும் மன அமைதி தனிமையும் வேண்டியும் நான் கடாரம் வந்து விட்டேன். என்னை யாரும் தேட வேண்டாம்." என்று மட்டும் தான் செய்தி அனுப்பினார்.

சபையோர்களின் கண்களில் கன்னீர் கூவம் நதியின் வேகத்தை விட வேகமாக வந்தது.

பூமகள் உடனே ஒரு உருக்கனாம பாட்டு பாடினார்
"பூனைகுட்டி ஜிஞ்சர் க்கு உருகும் அக்கா
ஊனத்துக்கும் ஒரு நிரந்தர முகவரி தந்த அக்கா
இந்த லொள்ளபுரி நாட்டில் பூத்த குலுங்கிய பூவே
ஏன் பிரிந்தாய் எங்களை விட்டு விட்டு
அக்கா கல் நெஞ்சமடி உனக்கு "

சபையோர்கள் பூமகளை மிகவும் பாராட்டினார்கள் " கவிதை அற்புதம் " ஆகா அகா என்றும் கன்னீர் வடித்து பாராட்டினர்.

லொள்ளு : "சரி எப்படியோ ஓவியா நலமுடன் இருகிறார். இனி அவரை நாம் தேடி போய் தொந்தரவு செய்ய வேண்டாம்"

சபையோர்கள் ஆம் ஆம் என்று சைன் சக்க போட்டனர்.

லொள்ளு : "நல்ல தகவலை கொண்டு வந்த மலரே வேறு ஏதாவது தகவல் உண்டா"

மலர் : " ஆம் மன்னா காதால் கேட்க சகிக்காத ஒரு கெட்ட செய்தியை கொண்டு வந்த துர்பாக்கியசாலி நான்" என்று கூறி அழுந்தார்

சபையே அமைதியாகி விட்டது. லொள்ளுவாத்தியார் அமைதியாக மலரை பார்த்து என்ன செய்தி என்று வினவினார்


மலர் :"வீராதி வீர
கவலோல வளையா அட்சி புரிந்த
சூராதி சூர
வரலாறு கண்ட
பல போர்களில் விழ்ந்து புன் கண்ட
லொள்ளபுரி சக்ரவர்த்தி யே
நான் திரும்பும் வழியில் கடார நாட்டு மன்னனை கண்டேன். என்னை யார் என்று விசாரித்தார். நான் லொள்ளபுரி நாட்டு தூதுவள் என்று சொன்னேன். அதற்க்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா. அதை இந்த வாயால் சொல்ல எனக்கு துக்கமாக வருகிறது.

லொள்ளுவாத்தியார் புருவங்கள் மேலே சென்றன

லொள்ளு : "மலரே என்ன சொன்னார், யார் அந்த கடாரத்து மன்னன்"

மலர் : "மன்னரே கடாரத்து மன்னன் பெயர் ஆசோ [/ப்], நம்மிடம் படைஎடுத்து புறமுதுகிட்டு ஓடிய தருக்காபுரி நாட்டு மன்னன் மனோஜும் அவர் உடனிருந்தார். அங்கு அவர்தான் மந்திரியாக இருகிறாராம். மருங்காபுரியிலிருந்து தப்பி ஓடிய மதி, மன்மதன் மனியா இன்னும் பலர் இருகிறார்கள்"

லொள்ளு : "பயங்கொள்ளி மனோஜை பற்றி நாம் கவலை படுவானேன். கடாரத்து மன்னன் ஆசோ என்ன சொன்னார் என்று சொல் மலரே"

மலர் : "கடாரத்து மன்னன் ஆசோ சொன்னார்

கருவாடு நாத்தமும்
கள்ளி செடி கூட்டமும்
சாக்கடை ஓட்டமும்
நிரைந்த லொள்ளபுரி நாட்டிலிருந்தா வருகிறாய்" என்று என்னை பார்த்து எளனமாக கேட்டார். நான் அவருக்கு பொருமையாக பதிலளித்தேன்.

"கடரா மன்னரே நாவை அளந்து பேசும்.
அயிரை, சீலா, நெத்திலி போன்ற அபூர்வ மீன்கள் மனதை மயக்கும் கருவாடு நாத்தமல்ல நறுமனம் கலந்த புஸ்பங்களை வெல்லும் செங்கீரை, கத்திரிகாய் போன்ற காய்கறிகளும் நறிபயிரு, கத்தாளை போன்ற நவதானியங்கள் விளையும் எங்கள் லொள்ளபுரி பூமியை நீங்கள் அவமான படுத்தினால் எங்கள்
"வீராதி வீர , கவலோல வளையா அட்சி புரிந்த சூராதி சூர, வரலாறு கண்ட, பல போர்களில் விழ்ந்து புன் கண்ட லொள்ளபுரி சக்ரவர்த்தி மாவீரன் லொள்ளுவாத்தியாரின் கோபத்துக்கு ஆளாக வேண்டி இருக்கும் ஜாக்கிரதை"

லொள்ளு : அதற்க்கு அந்த கடாரத்து மன்னன் ஆசோ என்ன மறுமொழி சொன்னார்.

மலர் :"குதிரை ஒழுங்காக ஓட்ட தெரியாதவன், படகு கூட வலிக்க தெரியாதவன். தொந்தி வயித்தை தாங்கி புறமுதுகு கூட ஓட முடியாதவன், கத்தியை தூக்கி நிறத்த தெரியாதவன் அந்த லொள்ளுவாத்தியார் எங்களை என்ன செய்ய முடியும். அவரும் அவரிடம் வேலை செய்யும் வலுக்கு வால் மந்திரிகளையும் தளபதிகளையும் அயிரை மீன் பிடிக்க கூட அருகதை இல்லை. போய் உன் மன்னன் என்று பீல விடும் லொள்ளுவாத்தியாரிடம் ஒழுங்காக சமைத்து கற்று கொள்ளவாவது கடாரத்து மன்னன் ஆசோ சொன்னார் என்று சொல்லவும்"

அந்த செய்தியை முதலி உங்களிடம் சொல்லி விவ வேண்டும் என்று தான் அவசரமாக வந்தேன் மாமன்னரே லொள்ளுவாத்தியாரே

விராடன் : என்ன அந்த கடாரத்து மன்னன் ஆசோவை அங்கேயே வெட்டி விட்டு வந்திருக்கலாமல்லவா

லொள்ளு : " பொரு விராடரே, மலர் தூதுவராக சென்றவர், அப்படி செய்ய கூடாது. அது தான் நம் நாட்டின் பன்பாடு"

ஆதவா :" மன்னா உங்களை அவதூராக* பேசிய கடாரத்து மன்னன் ஆசோவை நினைத்தால் என் ரத்தம் கொதிகிறது. என் மேலே சட்டியை வைத்தால் கருவாடு கருகி விடும் அளவுக்கு கொதிகிறது. மன்னா"

ஓவியர் : " மன்னா ஆசோவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும், நான் அட்சயமுனையில் இருந்த போடு அவருக்கும் எனக்கும் கூட முன் விரோதம் இருகிறது"

பூனை படை தளபதி சுட்டி : "மன்னா ஆனை யிடுங்கள் இன்றே போய் அந்த கடாரத்து மன்னன் ஆசோவை சிரைபடுத்தி கொண்டு வருகிறேன்"

சிவா ஜி : "மன்னா இதற்க்கேல்லாம் அந்த தருங்காபுரி மன்னன் மனோஜ் தான் காரனம், அவரையும் சிரை பிடிக்க வேண்டும்"

லொள்ளுவாத்தியார் ரத்தம் கொதித்து கொண்டிருந்தது. புருவம் விரிந்தத். மீசை துடித்தது. கை உடைவாளை பிடித்திருந்தது. சடாரென எழுந்தார். கண்கள் எதிரில் இருப்போரை அழிக்கும் அளவுக்கு சிவந்தது.

லொள்ளு : "[B]படை தலைவரே, தாயார் செய்யுங்கள் படைகளை அந்த கடாரத்து மன்னன் ஆசோ வுக்கு தக்க பாடம் புகட்ட நானே தலமை தாங்கி போர் செய்ய வேண்டும், நாளையே போர் புறபடும்"

சபையோர்: "மாவீரன் லொள்ளுவாத்தியார் வாழ்க"


தொடரும்
பாகம் 7: கடாரம் புறபட்ட லொள்ளுவாத்தியார் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=271440&postcount=76)
(இந்த பாகம் நம்மிடம் இருந்த பிரிந்த ஓவியாவுக்கு சமர்பனம்)

மலர்
12-09-2007, 03:58 PM
நான் இந்த முறை இதயத்தை பிடிப்பீர்கள் என்று நினைத்தால் அப்பாவி அஷொவை பிடித்து விட்டீர்களே.... சரி போகட்டும்..


மலர் : "மன்னரே [b]கடாரத்து மன்னன் பெயர் ஆசோ [/ப்], நம்மிடம் படைஎடுத்து புறமுதுகிட்டு ஓடிய தருக்காபுரி நாட்டு மன்னன் மனோஜும் அவர் உடனிருந்தார். அங்கு அவர்தான் மந்திரியாக இருகிறாராம். மருங்காபுரியிலிருந்து தப்பி ஓடிய மதி, மன்மதன் மனியா இன்னும் பலர் இருகிறார்கள்"

வாத்தியாரே பெரிய தலைகளையெல்லாம் இழுத்து விட்டீரே.... அவர்களோடு போரா...... என்ன நடக்க போகிறதோ.....

வழக்கம் போல இந்த பாகமும் சூப்பரு வாத்தியாரே,,,,,, :icon_b:


நானே தலமை தாங்கி போர் செய்ய வேண்டும், நாளையே போர் புறபடும்

இதை நினைத்தால் தான் பயமா இருக்கு.....:traurig001::traurig001:


ஆதவா :" மன்னா உங்களை அவதூராக* பேசிய கடாரத்து மன்னன் ஆசோவை நினைத்தால் என் ரத்தம் கொதிகிறது. என் மேலே சட்டியை வைத்தால் கருவாடு கருகி விடும் அளவுக்கு கொதிகிறது. மன்னா"

ஹா...ஹா.....ஹா..


ஓவியர் : " மன்னா ஆசோவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும், நான் அட்சயமுனையில் இருந்த போடு அவருக்கும் எனக்கும் கூட முன் விரோதம் இருகிறது"

அப்போ இப்ப பின் விரோதமா.....:icon_rollout::icon_rollout:

சிவா.ஜி
13-09-2007, 04:50 AM
அசத்திகிட்டே போறீங்க தலைவரே...மன்ற உறவுகளையெல்லாம் இணைத்து..கலக்கிட்டிருக்கீங்க....ஆமா நீங்க எப்ப புறமுதுகு காட்டினீங்க...?முதுகைக் காட்டவேண்டியிருக்குமே என்று முதுகுக்கு சோப்புகூட போடுவதில்லையே நீங்கள்.....நீங்களே சொல்லுங்கள்...கேட்கலாம்.

praveen
13-09-2007, 06:08 AM
ஆஹா, கதையிலே என்னையும் இழுத்து போட்டுட்டாரே, சரி. இந்த கதையை படிக்கையிலே மற்ற நண்பர்களை போட்டு காய்சியதை ரசித்த நான் இதையும் ரசிக்கிறேன்.

வாத்தியாரே, புறமுதுகு என்று சொல்லிவிட்டு, உங்கள் வீர பிரதாபங்களையே சொல்லி கொண்டு இருக்கிறீர்களே, கடைசியில் ஒரு வரியில் அந்த வீர செயலை (புறமுதுகை) சொல்லி விடாதீர்கள். அப்படியே நாம் முன்னர் சொல்லியது போல ஓவியனை இதில் முதலில் போருக்கு அனுப்பி பெருமை படுத்துங்கள். - இது நமக்குள் ரகசியமாக இருக்கட்டும்.

பென்ஸ்
13-09-2007, 06:26 AM
அரண்மனை காவல் வீரன் 1: மாவீரன் லொள்ளுவாத்தியார் புறமுதுகு காட்டுவதேயில்லையாம்...
அரண்மனை காவல் வீரன் 2: அப்படியா...
அரண்மனை காவல் வீரன் 1: ஆமா, அந்த அளவு புண்ணாயிடுச்சாம்...

சிவா.ஜி
13-09-2007, 06:29 AM
அரண்மனை காவல் வீரன் 1: மாவீரன் லொள்ளுவாத்தியார் புறமுதுகு காட்டுவதேயில்லையாம்...
அரண்மனை காவல் வீரன் 2: அப்படியா...
அரண்மனை காவல் வீரன் 1: ஆமா, அந்த அளவு புண்ணாயிடுச்சாம்...

அசத்தல் பென்ஸ்...ஆனா எச்சரிக்கையா இருங்க...லொள்ளு மன்னர் உங்களையும் ஒரு கேரக்டெர் ஆக்கிடப் போறார்...:icon_ush:

பென்ஸ்
13-09-2007, 06:33 AM
அதேப்படி... ஓடுறதே நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதானே...
நான் வரோட மனசாட்சி மாதிரி, என்னை சொல்லுறது அவரையே அவர் சொல்லுற மாதிரி...

சிவா.ஜி
13-09-2007, 06:38 AM
அதுசரி..... கதை இப்படி போகுதோ..சரி சரி எப்படியோ ஒண்ணும் ஆகாம ஊர்வந்து சேந்தா சரி.

அமரன்
13-09-2007, 10:02 AM
ஆற அமர இருந்து படிக்க அமரனுக்கு கொஞ்சம் அவகசாம் கொடுங்கப்பு...

பூமகள்
13-09-2007, 02:22 PM
எப்படியோ மலரை ஓவியா அக்காவை தேடும் சாக்கில் உலகம் சுற்ற வைத்து விட்டீர் வாத்தியாரே...!!
அட அன்புத் தங்கை மலர் கொங்கு நாட்டிற்கு (கோவை) பக்கம் வந்தார்களா??? தெரிந்திருந்தால் சந்தித்திருக்கலாமே.....!!

அற்புதமான தொடர்.. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் அன்புச் சகோதரர் வாத்தியாரே...!!
எனக்கு கிறுக்கு பதில் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=271107&postcount=799) பகுதியில் பதில் எழுத வைத்து பட்டம் பெற வைத்த லொள்ளபுரி மன்னருக்கே என் பட்டத்தை சமர்பிக்கிறேன்..!! (அப்பாடா இனி என்னை யாரும் கிறுக்கி என்று அழைக்கமாட்டார்கள்...!!;))

போரை சீக்கிரம் தொடங்குங்கள் மன்னா... இல்லையெனில் நமது போர் தளவாடங்களை பாதி விலைக்கு விற்க போவதாக நமது சிப்பாய்கள் பேசிக் கொள்கின்றனர்...!!:cool:

lolluvathiyar
13-09-2007, 04:16 PM
மாவிரன் லொள்ளுவாத்தியார் பாகம் 7

கடாரம் புறபட்ட லொள்ளுவாத்தியார்


போர் கோசம் - 6 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=270663&postcount=66)

அடுத்த நாள் போருக்கான ஆயுத்தம் ஆரம்பித்தது. குதிரை படைகளை தயார் செய்தனர்.

மந்திரி உதயசூரியன் : மன்னா கடாரத்துக்கு குதிரை மூலமாக போக முடியாது, கடலுக்கு அப்பால் இருகிறது".

லொள்ளு : "மந்திரி குதிரை நீந்தி செல்ல முடியாதா?"

உதயசூரியன் : " முடியாது மன்னா கடாரத்துக்கு கப்பலில் தான் போக வேண்டும்".

லொள்ளு : "தயார் செய்யுங்கள் நமது கப்பல் படையை"

சிவா ஜி : "மன்னா நம்மிடம் இருப்பது படகுகள், அதன் மூலம் படைகளை கடாரம் வரை கொண்டு செல்ல முடியாது"

ஓவியர் : " கவலை வேண்டாம் மன்னரே ஒரே நாளில் பூம்புகார் துரைமுகத்திலிருந்து நான் சோழ நாட்டு கப்பகளை திருடி வந்து விடுகிறேன்"

லொள்ளு : "உடனே செய்யுங்கள் ஓவியரே, உங்களுக்கு இந்த திறமை தான் அதிகமாக இருகிறதே"

விராடன் படைவீரர்களை தயார் செய்தார். சுட்டி வேல் கத்திகளை தயார் செய்தார். ஆசோ வீரர்களுக்கான சமயல் தயார் செய்தார். லொள்ளபுரி நாட்டின் நிர்வாகத்தை கவனிக்க தாற்காலியமாக லியோமோகனிடமும் உதயசூரியனிடமும் ஒப்படைக்க பட்டது.

இனிய மாலை நேரம் மாவீரன் லொள்ளுவாத்தியார் ஒரு படகின் மீது அமர்ந்திருந்தார் கடற்காற்றை சுவாசித்த படி கடலை பார்த்து கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு இனிய பாடல் கேட்டது.

பொன்னார் மேனியனே
புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல்
மிளிர்கொன்றை அணிந்தவனே

பாடல் வந்த திக்கை லொள்ளுவாத்தியார் நோக்கினார். அங்கு ஒரு சிவனடியார் நின்று கொண்டிருந்தார். லொள்ளுவாத்தியார் பக்தியுடன் அவரை பார்த்து

லொள்ளு : "சுவாமி தாங்கள் யார்"

சிவனடியார் : "திருசிற்றம்பலம் தில்லையம்பலம், என் பெயர் சிவவேவகன்"

லொள்ளு : "இங்கு என்ன செய்து கொண்டிருகிறீர்கள் சிவசேவகரே"

சிவசேவகர் : "தென்கையிலாயம் சென்று வந்தேன், இனி மத்திய கையிலாயம் சென்று கொண்டு இருகிறேன்"

லொள்ளு :"எங்களுடன் கப்பலி வந்தால் நான் போகும் வழியில் இறக்கி விடுவேன் சுவாமி"

சிவசேவகர் :"அப்பனே நீங்கள் கிழக்கே போகிறீர்கள், நான் வடக்கே போகவேண்டும். போருக்கா போகிறீர்கள்"

லொள்ளு : " ஆமாம் சிவசேவகரே, கடாரம் மீது படை எடுக்க போகிறேன்"

சிவசேவகர் : "அப்பனே போருக்கான தருனம் உங்களுக்கு சரி இல்லையே"

உதயசூரியன் : "அடிகளே, எங்கள் மன்னன் பகுத்தறிவு நிரைந்தவர், சகுனம் எல்லாம் பார்க்க மாட்டார்"

சிவசேவகர் : "அம்மாவசையில் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்குமே அதை சொன்னேன்"

லொள்ளு : "எங்கள் லொள்ளபுரி படை எரிமலையை தகர்க்கும், எங்கள் படை வந்தால் புயல் ஒதுங்கிபோகும்"

சிவசேவகர் : "சிவனே இவர்களை காப்பாற்றுவாயாக"

லொள்ளு : "ஏன் சிவனை மட்டும் வேண்டுகிறீர்கள், பெருமாளை வேண்ட கூடாதா"

சிவசேவகர் : "அப்பனே நீ சைவர்"

உதயசூரியன் : "அவரை வைவர் என்று எப்படி சொல்லலாம் அவர் அசைவர் ஓ மன்னிக்கவும் வைஸ்னவராக இருக்கலாம் அல்லவா சிவசேவகரே"

சிவசேவகர் : "உலகில் உள்ள அனைவரும் வைவரே, மன்னர் லொள்ளுவாத்தியார் சைவர், நான் சைவர், நீங்கள் சைவர், அதோ அந்த குதிரைபடை தளபதி சிவா ஜியும் சைவர், சுட்டி யும் சைவர், கடார மன்னன் ஆசோ வும் சைவர், ராஜ ராஜ சோழனும் சைவர், திருவள்ளுவரும் சைவர், உங்கள் குதிரையும் சைவர், அந்த கப்பலும் சைவர்......."

இதை கேட்டவுடன் துண்டை கானொம் துனியை கானோம் என்று அனைவரும் ஓடிய ஓட்டத்தில் கடாரத்தின் எல்லைகே போய் தான் நிற்பார்கள் போலிருகிறது.
(ஆனாலும் லொள்ளுவாத்திருக்கு சிவசேவகர் ஆசி என்றும் உண்டு)

ஓவியர் சொன்னபடி கப்பல்களை களவாடி கொண்டு வந்து விட்டார். அதில் ஒரு களம் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது.

லொள்ளு : "அது எந்த நாட்டு கப்பல்"

லியோமோகன் : "மன்னா அது அநபாய சோழனின் கப்பல் பெயர் கடல்புறா. உங்களுக்காக விசேசமாக ஓவியர் நேரடியாக திருடி கொண்டு வந்தார்"

லொள்ளு : "அப்பொழுது வெற்றி நம் பக்கம் பலமாக இருகிறது"

லியோமோகன் : "மன்னா எச்சரிக்கையாக செல்லுங்கள், நம் மாலுமிகளுக்கு இந்த கப்பல்களை அவ்வளவாக ஓட்ட தெரியாது"

படைகள் புறப்பட ஆயுத்தமாக இருந்தது. கடற்கரை ஒரே அல்லோல்கல பட்டது. கடல் அலைகளை விட லொள்ளபுரி மக்கள் அலைகள் திரண்டு நின்றன. கடல் காற்றை விட லொள்ளபுரி வீரர்கள் வேகமாக புறபட்டனர். ஒவ்வொரு படைவீரர்களும் கப்பலில் ஏறினார்கள். வீரர்களின் மனைவிமார்கள் கன்னீருடன் பிரியா விடை தந்தனர். குதிரைகள் யானைகள் கப்பலில் ஏற்றபட்டது.

லொள்ளுவாத்தியாரின் பட்டமகிசி திருபுவன சுந்தரி பெரியபிராட்டி கருப்பாயி தேவி அவரின் நெற்றியில் திலமிட்டு
"வெற்றியோடு திரும்பிவாருங்கள் நாதா" என்று அனுப்பினார்.

லொள்ளுவாத்தியார் கம்பீரமாக கடல்புறாவில் ஏறினார். மக்கள் ஜயகோசம் எழுப்பினார்கள்

"வீராதி வீர மாவீரன் லொள்ளுவாத்தியார் வாழ்க
சூராதி சூர மாவீரன் லொள்ளுவாத்தியார் வாழ்க

எதிரிகளிடம் தொடை நடுங்க
வரலாறு கண்ட மாவீரன் லொள்ளுவாத்தியார் வாழ்க

ஜெய விஜயீ பவ
வெற்றி வேல் வீர வேல்
இறுதியாக ஒரே கோசம் தான் வின்னை முட்டியது
கடாரம் புறபட்ட லொள்ளுவாத்தியார் வாழ்க
கடாரம் புறபட்ட லொள்ளுவாத்தியார் வாழ்க

கடல்புறா கடலி சீறி பாய்ந்து புறப்பட்டது. மற்ற கப்பல்களும் கிளம்பின.

தொடரும்
பாகம் 8 : கடல்புறா (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=271442&postcount=77)

lolluvathiyar
13-09-2007, 04:16 PM
மாவிரன் லொள்ளுவாத்தியார் பாகம் 8
கடல்புறா

பாகம் 7: கடாரம் புறபட்ட லொள்ளுவாத்தியார் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=271440&postcount=76)

படைகளுக்கு தலைமை தாங்குபவர்கள் தளபதி என்று அழைக்கபடுவது போல கப்பலுக்கு தலைமை தாங்குபவர்களை அந்த காலத்தில் தமிழில் அழைக்க கலபதி என்று பட்டார்கள். கடல்புறாவில் கலபதியாக விராடன் நியமிக்க பட்டார்.

புரட்டாசி அம்மாவாசையில் கடற் காற்றையும் கடலையும் கிழித்து கொண்டு கடல் புறா சென்று கொண்டிருந்தது. கடல்புறா வில் முன் பகுதி அதன் பாய் மரத்தை பிடித்த வன்னம் மாவிரன் லொள்ளுவாத்தியார் ஆழ்ந்த யோசனையில் இருந்தார்.

கடல் அலைகளின் ஆக்ரோச ஓசைகள் அவருக்கு இனிய கீதமாக கேட்டது. கடற் உப்பு காற்று அவருக்கு சங்கீதமாகியது. அப்பொழுத் அவர் அருகில் வந்து நின்றார் கலபதி விராடன். சிறிது நேரத்தில் இருவரும் ஆலொசனை பகுதிக்கு சென்றனர்.

அனைவரின் முன் வங்கள விரிகுடாவின் வரைபடம் இருந்தது. லொள்ளுவாத்தியார் தன் போர் திட்டங்களை வகுத்தார்

லொள்ளு :"கலபதி விராடரே, கடாரம் செல்ல எத்தனை நாட்கள் ஆகும்"

விராடன் : "மன்னா, இந்த கப்பல்கள் மூலம் நான் கடாரம் செல்ல மொத்தம் 10 நாட்கள் ஆகும். காற்று நமக்கு அனுகூலமாக இல்லாவிட்டால் 15 நாட்கள் கூட ஆகலாம் மன்னா"

லொள்ளு : "சிவா ஜி, 15 நாட்கள் தாக்கு பிடிக்கும் அளவுக்கு நம் கப்பல்களில் உணவு பொருட்கள் இருகிறதா"

சிவா ஜி : "மன்னா 10 நாட்கள் தாக்கு பிடிக்கும் அளவுக்கு தான் உனவு பொருட்கள் ஏற்ற முடிந்தது."

லொள்ளு : "விராடரே, நாம் நேராக கடாரம் செல்லாமல், சென்பக தீவில் (அந்தமான்) நக்கூரமிட வேண்டும். அதற்க்கு போய் விடலாமல்லவா"

விராடன் "சென்பக தீவுக்கு நாம் தாரளமாக காற்று இல்லாவிட்டாலும் 8 நாட்களில் போய் விடலாம் மன்னா"

லொள்ளு : "நான் சொல்வதை அனைவரும் கவனமாக கேட்க வேண்டும், சென்பக தீவில் இருப்பவர்கள் தமிழர்கள்தான், அங்கு நாம் உனவு பொருட்கள் சம்பாரிக்க விட வேண்டும்"

ஓவியர் : " மன்னா கவலை வேண்டாம், என்னுடை பழைய தொழில் கூட்டாளிகள் சென்பக தீவில் இருகிறார்கள், அவர்கள் உதவியால் நான் திருடி வந்து விடுகிறேன், அதற்க்கு 2 நாள் பிடிக்கும்"

குட்டி : "ஆகா பழைய தொழிலை என்று மறக்க மாட்டார் போல இருக்கு"

லொள்ளு : "2 நாள் கழித்து அங்கிருந்து நமது கப்பல்கள் புறபட்டு கடாம் அடைய எத்தனை நாட்கள் ஆகும் கலபதி"

http://www.geocities.com/lolluvathiyar/Pics/lollumap1.JPG

விராடன் : "மன்னா சென்பக தீவிலிருந்து 2 நாட்களில் கடாரம் சென்று விடலாம்"

லொள்ளு :
"இதோ எனது போர் திட்டம், நமடு கப்பலில் மீதி 8 நாட்களுக்கு உணவு இருகிறது.
நாம் 2 நாளில் கப்பலிருந்து போர் செய்ய வேண்டும்.
பிறகு 2 நாட்கள் கடார கோடை முன் போர் புரிய வேண்டும்.
கோட்டை தாக்குதலுக்கு 1 நாள் தேவை படும்
உள்ளே போர் புரிந்து காடர மன்னன் ஆசோவை சிரை பிடிக்க 1 நாள் தேவை படும்.
பிறகு நாம் அங்கிருப்பது ஆபத்தானது. ஆகையால் நாம் திரும்பிவிட வேண்டும்"

சிவா ஜி : "மன்னா திரும்பும் போது நம்மிட 2 நாட்களுக்கு தான் உனவு இருக்கும், மீண்டும் நாம் சென்பக தீவு பக்கமே போக முடியாதல்லவா"

லொள்ளு : "கலபதி நக்காவரம் தீவு செல்ல எவ்வளவு நாள் ஆகும்"

விராடன் : "மன்னா, நக்காவரம் 1 நாளில் அடைந்து விடலாம், ஆனால் அங்கு தற்போழுது கலிங்க மக்கள் தான் இருகிறார்கள்".

குட்டி : "மன்னா 1 நாள் உனவு இருகிறது, அதை வைத்து சமாளித்து விடலாம் ஓவியருக்கு நக்காவரத்தில் கூட கூட்டாளிகள் இருக்கலாமல்லவா"

ஓவியர் " ஆம மன்னா நான் அட்சய புரத்து காவலனாக இருந்த போது இந்த பகுதி முழுவதும் கூட்டாளிகள் இருகின்றனர்"

லொள்ளு : "கலபதி விராடரே இங்கிருந்து திரும்பி போக எத்தனை நாட்கள் ஆகும்"

விராடன் : "மன்னா அங்கு தான் சிக்கல் இருகிறது. திரும்பி போகும் போது நாம் காற்றுக்கு எதிர் திசையில் பயனம் செய்ய வேண்டும். ஆகையால் 20 நாட்கள் ஆகலாம்"

ஓவியர் "என்ன 20 நாட்களா அத்தனை நாள் சாப்பாட்டுக்கு என்ன செய்வது. நம்மிடம் 10 நாட்களுக்கு அல்லவா சாப்பாடு இருக்கும்"

குட்டி : "பொருமையாக இருங்கள் மந்திரியாரே, நம்து மாவீரன் லொள்ளுவாத்தியார் அனைத்துக்கும் திட்டம் போட்டிருப்பார்"

அனைவரும் மாவிரன் லொள்ளுவாத்தியாரின் முகத்தை ஏறிட்டு பார்த்தனர்

லொள்ளு : "கலபதி நக்காவரத்திலிருந்த் இலங்கை செல்ல எவ்வளவு நாட்கள் ஆகும்"

விராடன் : " இலங்கைக்கு 10 நாட்களில் சென்று விடலாம் மன்னா. அங்கிருந்து 10 நாட்களில் நாம் லொள்ளபுரியை அடையலாம்"

ஓவியர் : "மன்னரே இலங்கையில் எனக்கு எந்த வித கூட்டாளிகளும் இல்லையே"

லொள்ளு : "அந்த கவலை வேண்டாம். இலங்கை லொள்ளபுரி நாட்டுக்கு நட்பு நாடுதான். இலங்கை மன்னன் அன்புரசிகன் நமக்கு வேண்டிய அனைத்த் உதவிகளையும் செய்வார். இலங்கை மன்னர் அன்புரசிகன் நமக்கு ராஜ உபசாரம் தந்து கவனித்து கொள்வார்"

மாவீரன் லொள்ளுவாத்தியாரின் இந்த திட்டத்தை கேட்டு அனைவரும் பிரமித்தனர். அசைவற்று நின்றனர்.

சிவா ஜி : "மன்னா உங்கள் திறமை அபாரம் மன்னா, கடல் கடந்து ஒரு நாட்டை பிடிக்க எத்தனை அழகாக திட்டம் போடிருகிறீர்கள். உங்கள் வீரத்துக்கு ஈடு இனை இல்லை. மாவீரன் லொள்ளுவாத்தியார் வாழ்க"

அனைவரும்
மாவீரன் லொள்ளுவாத்தியார் வாழ்க
மாவீரன் லொள்ளுவாத்தியார் வாழ்க

அப்பொழுது அவசரமாக மாலுமி ஒருவர் ஓடி வந்து கலபதி விராடனிடம்
"கலபதி காற்று சுத்தமாக நிண்று விட்டது. கப்பல்கள் எதுவும் அசையவில்லை"

விராடனும் மந்திரிகளும் லொள்ளுவாத்தியாரும் அவசரமாக கப்பலின் மேல் தளத்துக்கு வந்தார்கள்.

கலபதி விராடன் : "மன்னா அபாயம் அபாயம்"

அனைவரும் : "என்ன என்ன" என்றார்கள்

விராடன் : "கப்பல் நின்று விட்டால் கடலில் ஆழிகாற்று அடிக்கபோகிறது. சுழிகாற்றும் அடிக்க போகிறது.
இன்னும் சற்று நேரத்தில் ஆழிகாற்று பயங்கராமாக அடிக்கும் நமது கப்பல்கள் தாங்குமா என்று தெரியவில்லை"

தமிழ் மன்ற வாசகர்களுக்கு வரைபடத்துடன் தந்திருகிறேன். இந்த பாகம் புரிய வசதியாக விருவிருப்பாக இருக்கும் அல்லவா?
(லொள்ளுவாத்தியார் என்றால் சும்மாவா)

தொடரும்
பாகம் 9 : ஆழிகாற்று (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=272797&postcount=103)

உதயசூரியன்
13-09-2007, 04:48 PM
ஒரு சாதாரண பிரியானி செய்வதற்க்காக கொண்டு வந்த ஆட்டை அடிக்க இவ்வளவு பில்டப்பா..
ஒரு பிரியானி கதைக்கு மனு நீதி காத்த லொள்ளரா..???

மற்றும் வாத்தியார் மாவீரனாக சித்தரிக்க இன்னும் எத்தனை உறுப்பினர்கல் பலி கடா ஆக போகிறார்களொ...

எனக்கு பல முகங்கள் உண்டு.. அதில் ஒன்றான பகுத்தறிவு அமைச்சராக அமர்த்தி விட்டீறே.. பரவாயில்லை..
எதிர்ப்பில்லா தனி காட்டு ராஜா... 24 ம் புலிகேசி லொள்ளு வின் திறமை வியக்க வைக்கிறது..
வீட்டினில்.. கணினி முன்னாலேயே இருப்பீறோ..
அதை விட ஒரே கலக்கலாக பங்களிப்பு இருக்கிறதே..

ஏதாவது ரூம் போட்டு யோசிப்பீங்களோ..????

ரசித்தேன்....... ரசித்தேன்...
வாத்தியாருக்கு இப்பொழுது தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக நன்கு எழுத வருகிறது.. வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

உதயசூரியன்
13-09-2007, 04:56 PM
மறந்து போனேன் நான்..
சிவசேகனார் வாதத்தை..
மறக்க வில்லை நீர்...அவருடன் இட்ட சண்டையை..

பலே...பலே..

ஆனாலும்... லொள்ளுவின் வசனத்தை படிக்கும் போது.. வடிவேலு மட்டுமே கண்களுக்கு தெரிகிறார்.. அதனால் சிரிப்பை அடக்க முடிவதில்லை சில சமயம்..
இது எனக்கு மட்டும் தானா...???
யாருக்காவது சிவாஜி , எம் ஜி ஆரை போல் தெரிகிறாரா.. லொள்ளு ????
சொல்லுங்கள்..

யாருமே பதில் சொல்ல மாட்டார்கல்.. ஏனென்றால் அடுத்த கேரக்டரில் அவர்கல் வந்து விடுவார்கள்.. சரி தானே வாத்தியாரே

வாழ்க தமிழ்

lolluvathiyar
14-09-2007, 08:41 AM
நம் லொள்ளபுரி அரசின் ஆஸ்தான கவிதாயினி என்ற வேலைக்கு வேட்டு வைத்து விடாதீங்க என்று அன்புடன் (மிரட்டி) கேட்டுக் கொள்கிறேன் மன்னா...!!:violent-smiley-010:


ஓவர தூக்கும் போதே தெரிந்து கொள்ள வேண்டாம் பின்னால் பெரிய வேட்டு இருக்கும் என்று.


ஒரு இனிமையான சொரியல் நிறைந்த புல்லாஅரிக்கும் வகையில் ஒரு மகா காவியத்தைப்படைத்துள்ளீர்கள்!
ப்ராராட்டுக்கள் வாத்தியார் வாந்தியத் தேவரே!

மிக்க நன்றி ஐயா, உங்கள் போன்றோர்களிடம் பாராட்டு கிடைப்பது என்னை மிகவும் மகிழ்விக்கிறது.


யாராவது அடுத்த நாட்டு மன்னர்கள் இவரை கொத்திக்கொண்டு போவதற்காக படையெடுத்து வந்து விடப் போகிறார்கள்

இன்னும் அந்த ரேஞ்சுக்கு கற்பனை பன்னி எழுத முடியாது. அப்புரம் யாராவது அன்னிகிட்ட போட்டு கொடுத்துருவாங்க

சாராகுமார்
14-09-2007, 09:17 AM
யாரங்கே...இந்த லொள்ளுபுரி மன்னனின் கப்பலை திமிங்கலத்துக்கு இரையாக்குங்கள்.இவர்களை பிடித்து கடலில் அடையுங்கள்.

மலர்
14-09-2007, 07:43 PM
வாத்தியாரே ஓரே நாளில் இரண்டு வரலாரை கொடுத்து கலக்கிறீங்களே...


மாவிரன் லொள்ளுவாத்தியார் பாகம் 7
கடாரம் புறபட்ட லொள்ளுவாத்தியார்

மாவீரன் லொள்ளுவாத்தியார் போருக்கு புறப்படும் அழகே தனிதான்.....


ஓவியர் : " கவலை வேண்டாம் மன்னரே ஒரே நாளில் பூம்புகார் துரைமுகத்திலிருந்து நான் சோழ நாட்டு கப்பகளை திருடி வந்து விடுகிறேன்"

லொள்ளு : "உடனே செய்யுங்கள் ஓவியரே, உங்களுக்கு இந்த திறமை தான் அதிகமாக இருகிறதே"

ஓவியனின் பலதிறமைகள் வெளியே வருது....


லொள்ளுவாத்தியாரின் பட்டமகிசி திருபுவன சுந்தரி பெரியபிராட்டி கருப்பாயி தேவி அவரின் நெற்றியில் திலமிட்டு
"வெற்றியோடு திரும்பிவாருங்கள் நாதா" என்று அனுப்பினார்.

வாத்தியாரே சஸ்பென்ஸ் தாங்க முடியலை....
போரில் வெற்றியா தோல்வியா......

மலர்
14-09-2007, 07:45 PM
யாரங்கே...இந்த லொள்ளுபுரி மன்னனின் கப்பலை திமிங்கலத்துக்கு இரையாக்குங்கள்.இவர்களை பிடித்து கடலில் அடையுங்கள்.

சிறையில் தானே அடைப்பார்கள்.....
இதென்ன புதுசா கடலில்...
அண்ணா விளக்கம் பிளீஸ்....

ஓவியன்
14-09-2007, 07:55 PM
சிவா ஜி :ஆமாம் ஓவியர் ஆட்சி செய்தால் அப்படிதான் இருக்கும்.
லொள்ளு : பற்றாகுரைக்கு ஓவியருக்கு 36 மனைவிகள் இருந்தனராம்
சுட்டி : என்ன 36 மனைவிகளா? போர இடத்துல எல்லா ஒன்ன கட்டிக்குவாரா.
சிவா ஜி : சரியான சபல ஆசாமி யா இருப்பாரு போல இருக்கு.



என்ன கொடுமை சார்?
இப்படியெல்லாம் நடந்திருக்கா...?
வாத்தியாரே நீர் ரொம்ப ஓவராத் தான் போயிட்டிருக்கீர் - ஆமா...:eek:

மலர்
14-09-2007, 08:00 PM
கடல் அலைகளின் ஆக்ரோச ஓசைகள் அவருக்கு இனிய கீதமாக கேட்டது. கடற் உப்பு காற்று அவருக்கு சங்கீதமாகியது.

வாத்தியாரே மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித ரசனையே அல்ல....
அதையும் தாண்டி...


மாவீரன் லொள்ளுவாத்தியாரின் இந்த திட்டத்தை கேட்டு அனைவரும் பிரமித்தனர். அசைவற்று நின்றனர்.

வரலாரைப்படித்து நாங்களும் அப்படித்தான் இருக்கோம்....


தமிழ் மன்ற வாசகர்களுக்கு வரைபடத்துடன் தந்திருகிறேன். இந்த பாகம் புரிய வசதியாக விருவிருப்பாக இருக்கும் அல்லவா?

வாத்தி நீங்க உண்மையிலே வாத்தியாருன்னு மறுபடியும் நிருபிச்சிட்டீங்க...
பின்ன என்ன இவ்வளவு அருமையா எங்க டீச்சரு கூட மேப் போட்டு சொல்லி தரல......
:traurig001::traurig001::traurig001:
லொள்ளுவாத்தியார் என்றால் சும்மாவா ... :icon_rollout::icon_rollout:

ஓவியன்
14-09-2007, 08:03 PM
ஓவியர் : " மன்னா ஆசோவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும், நான் அட்சயமுனையில் இருந்த போடு அவருக்கும் எனக்கும் கூட முன் விரோதம் இருகிறது"
பூனை படை தளபதி சுட்டி : "மன்னா ஆனை யிடுங்கள் இன்றே போய் அந்த கடாரத்து மன்னன் ஆசோவை சிரைபடுத்தி கொண்டு வருகிறேன்"
சிவா ஜி : "மன்னா இதற்க்கேல்லாம் அந்த தருங்காபுரி மன்னன் மனோஜ் தான் காரனம், அவரையும் சிரை பிடிக்க வேண்டும்"
லொள்ளுவாத்தியார் ரத்தம் கொதித்து கொண்டிருந்தது. புருவம் விரிந்தத். மீசை துடித்தது. கை உடைவாளை பிடித்திருந்தது. சடாரென எழுந்தார். கண்கள் எதிரில் இருப்போரை அழிக்கும் அளவுக்கு சிவந்தது.

ஹா,ஹா!
அஷோவை மாட்டியாச்சா.......?
ஹா,ஹா....................
ஜாலியோ ஜாலி.................!!! :icon_rollout: :icon_rollout: :icon_rollout:

ஓவியன்
14-09-2007, 08:06 PM
ஓவியர் : " கவலை வேண்டாம் மன்னரே ஒரே நாளில் பூம்புகார் துரைமுகத்திலிருந்து நான் சோழ நாட்டு கப்பகளை திருடி வந்து விடுகிறேன்"

லொள்ளு : "உடனே செய்யுங்கள் ஓவியரே, உங்களுக்கு இந்த திறமை தான் அதிகமாக இருகிறதே"
இதென்னது ஒரே வம்பாக இருக்கே - தனது ஒவ்வொரு பாகத்திலும் என்னைப் போட்டு இந்தக் காச்சு காச்சுறாரே..........:traurig001:

ஓவியன்
14-09-2007, 08:08 PM
குட்டி : "பொருமையாக இருங்கள் மந்திரியாரே, நம்து மாவீரன் லொள்ளுவாத்தியார் அனைத்துக்கும் திட்டம் போட்டிருப்பார்

அது சரி, எப்போதிலிருந்து சுட்டி, குட்டியாக மாறினார்............!!! :lachen001: :D :D

மலர்
14-09-2007, 08:09 PM
இதென்னது ஒரே வம்பாக இருக்கே - தனது ஒவ்வொரு பாகத்திலும் என்னைப் போட்டு இந்தக் காச்சு காச்சுறாரே..........:traurig001:

வாத்தியாரே புள்ளைய பாருங்க ஓரே அழுகாச்சியா அழுவுது...
உட்டுரலாமா......

மலர்
14-09-2007, 08:14 PM
அது சரி, எப்போதிலிருந்து சுட்டி, குட்டியாக மாறினார்............!!! :lachen001: :D :D

சுட்டி ஏதோ ஒரு தப்பு பண்ணி நம்ம மாவீரன் லொள்ளுவாத்தியாரின் மாட்டிக்கிட்டார்....

நம்ம மாவீரன் லொள்ளுவாத்தியாருதான் நீதி தவறாதவராச்சே....
வாத்தியாரு கோபத்துல சுட்டியை குட்டியதில்....சுட்டி குட்டியாயிடுச்சி....

ஓவியன்
14-09-2007, 08:15 PM
ஓவியனை விட்டால் மறுபடியும் பிடிக்க முடியாதே........!!! :D

மலர்
14-09-2007, 08:16 PM
ஓவியனை விட்டால் மறுபடியும் பிடிக்க முடியாதே........!!! :D

ஓவியரே நீங்கள் என்ன பட்டமா.... ஒருமுறை கையைவிட்டு விட்டு விட்டால் பிடிக்காமல் இருப்பதற்கு.....

ஓவியன்
14-09-2007, 08:17 PM
வாத்தியாரு கோபத்துல சுட்டியை குட்டியதில்....சுட்டி குட்டியாயிடுச்சி....

ஆமா,
அப்படினா மலையாளத்திலே குட்டி என்று அழைக்கப் படுபவர்களெல்லாம் வாத்தியாரிடம் குட்டு வாங்கித் தான் குட்டி ஆனாங்களா..........??? :icon_rollout:

ஓவியன்
14-09-2007, 08:19 PM
ஓவியரே நீங்கள் என்ன பட்டமா.... ஒருமுறை கையைவிட்டு விட்டு விட்டால் பிடிக்காமல் இருப்பதற்கு.....

சட்டி சுட்டதடா,
கை விட்டதடா,
புத்தி கெட்டதடா
நம்ம மலரோட
புத்தி கெட்டதடா.....

மலர்
14-09-2007, 08:21 PM
இதென்னது ஒரே வம்பாக இருக்கே - தனது ஒவ்வொரு பாகத்திலும் என்னைப் போட்டு இந்தக் காச்சு காச்சுறாரே..........:traurig001:


சரி விடுங்கள்
எங்கள் ஊரில் எண்ணெயைதான் காச்சுவோம்....
அப்படியென்றால் நீங்கள் என்ன ()எண்ணையா.....

மலர்
14-09-2007, 08:23 PM
ஓவியரே நீங்கள் என்ன பட்டமா.... ஒருமுறை கையைவிட்டு விட்டு விட்டால் பிடிக்காமல் இருப்பதற்கு.....

கையைவிட்டு அப்படியென்றால் கையிலிருந்து....:D

ஓவியன்
14-09-2007, 08:30 PM
சரி விடுங்கள்
எங்கள் ஊரில் எண்ணெயைதான் காச்சுவோம்....
அப்படியென்றால் நீங்கள் என்ன ()எண்ணையா.....

என்னதான் வேணும் உங்களுக்கு ?
என்னைத் தான் வேணுமெண்டால்
எண்ணையை ஏன் இழுக்கிறீங்க.?
என்னைய விட்டு விட்டு..........!!! :icon_rollout:

மனோஜ்
14-09-2007, 10:16 PM
(வாரும்மையா லொல்லு பிளானா போடுரிரு எங்களுக்கு மெசேஜு வந்திடுச்சுல்ல ஒரு கை பாக்குரோம்)

கடாரம்: அசோ அவர்களின் அரன்மனையில்

அசோ: மான்பு மிகு மனோஜ் எதே செய்தி வந்துள்ளது என்றீறே என்ன அவசர செய்தி அது

மனோஜ்: லொள்ளாபுரி லொள்ளு மன்னன் நம் மீது படைஎடுத்து வருகிறானாம்

அசே: கவலையை விடுங்கள் மனோஜ் அவரின் படையை விட நமது படை சிறந்தது என்பது உமக்கு தேரியாத என்ன மோலும் நமக்கு வேலை குறைவு நரி வலையில் தானாய் மாட்டும் பொழது எதற்கு கவலை

மனோஜ்: அதற்கில்லை அசோ தங்களின் படை எனக்கு தெரியும் அதனால் தானே என் தருங்காபுரியை மீட்டு தர உம்மிடும் உதவி கோட்டு வந்தேன்

அசோ: பிறகு என்ன கவலை மனோஜ்

மனோஜ்: அந்த லொல்லர் லோல்லராயிற்றோ போருக்கு பதில் லொல்லு தனத்தை காட்டி விடுவார் அதனால் தான்

அசோ: அதற்குதான் நம் தலைமை ஆலோசர் இளசுவை வத்துள்ளோம் அவர் லொல்லரின் லெல்லு தனத்தை எவ்வாறு சாமாளிப்பது என்பதை நன்கு அறிந்தவர் ஆயிற்றோ

மனோஜ்: நான் நம் படைகளை தயாராக இருக்க சொல்லி விட்டேன் மோலும் மிக நவின கப்பால் படைகளை தாயரித்து விட்டோம் அசோ

சாராகுமார்: அசோ மன்னா ஒரு முக்கி செய்தி வந்துள்ளது மன்னா

அசோ: சொல்லுங்கள் கடல்படை தலபதி

சாராகுமார்: லொல்லர் கப்ல்படை நங்காவரம் தீவை நோருங்கிவிட்டது அரசே

அசோ: யாரங்கே உடன் நம் ஒற்றர் படையை அனுப்பி எந்தபாதையில் மேலும் முன்னேறுகிறார்கள் என்பதை கண்கானித்து உடன் அறிந்து வரசெல்லுங்கள்

மனோஜ்: அடுத்த நடவடிக்கை என்ன அசோ

அசோ: அந்த லொல்லறுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டியது தான்

சிவா.ஜி
15-09-2007, 04:59 AM
மன்னர் மன்னா லொள்ளுராசா....கன கம்பீரமா போருக்கு புறப்பட்டு விட்டீர்கள்,வழியில் சாப்பாட்டுக்கும் ஜோராக வழிசெய்து கொண்டீர்கள்....ஆனால் ஆழிக்காற்றில் முழி பிதுங்க நிற்கிறீர்களே இனி என்ன ஆகப்போகிறதோ...அங்கே என்னடான்னா தருங்காபுரி மன்னன் மனோஜ்-ம், ஆஷோவும் உங்களை எதிர் கொள்ள தயாராக இருக்கிறார்கள்.எனக்கு ஒரு சந்தேகம்...ஒருவேளை இந்த ஆழிக்காற்றும் அவர்களுடைய சதிவேலையாக இருக்குமோ...? உங்களின் ஆக்ரோஷமான தாக்குதலை சமாளிக்க தெம்பில்லாமல் இப்படி உருவாக்குகிறார்களோ...எதற்கும் ஓவியனை ஒரு படகில் உங்களுக்கு முன்னால் அனுப்பி,ஏதாவது பெரிய விசிறி வைத்து காற்றை உண்டாக்குகிறார்களா என்று பார்த்துவிட்டு,அப்படி ஏதாவது இருந்தால் அதையும் வழக்கம்போல் சுட்டுக்கொண்டு வரும்படி சொல்லிவிடுங்கள்.

ஓவியன்
15-09-2007, 05:53 AM
எதற்கும் ஓவியனை ஒரு படகில் உங்களுக்கு முன்னால் அனுப்பி,ஏதாவது பெரிய விசிறி வைத்து காற்றை உண்டாக்குகிறார்களா என்று பார்த்துவிட்டு,அப்படி ஏதாவது இருந்தால் அதையும் வழக்கம்போல் சுட்டுக்கொண்டு வரும்படி சொல்லிவிடுங்கள்
யப்பா.........

இப்படி எத்தனை பேர் புறப்பட்டு இருக்கீங்க........? :D

praveen
16-09-2007, 01:11 PM
விராடன் படைவீரர்களை தயார் செய்தார். சுட்டி வேல் கத்திகளை தயார் செய்தார். ஆசோ வீரர்களுக்கான சமயல் தயார் செய்தார்.

ஹை, வாத்தியார் இந்தக்கதையிலே எனக்கு இரட்டை வேடம் தந்திருக்கிறார்.

என்ன படுத்து படுத்த போறாரோ

சாராகுமார்
16-09-2007, 03:18 PM
(வாரும்மையா லொல்லு பிளானா போடுரிரு எங்களுக்கு மெசேஜு வந்திடுச்சுல்ல ஒரு கை பாக்குரோம்)

கடாரம்: அசோ அவர்களின் அரண்மனையில்...............

மனோஜ்: அடுத்த நடவடிக்கை என்ன அசோ

அசோ: அந்த லொல்லறுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டியது தான்

மன்னா, நமது கப்பல் படை தயார்.அவர்களை பிடித்து கடலில் அடைத்து விடுவோம்.

lolluvathiyar
17-09-2007, 01:45 PM
மாவிரன் லொள்ளுவாத்தியார் பாகம் 9

ஆழிகாற்று

பாகம் 8 : கடல்புறா (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=271442&postcount=77)

கலபதி விராடன் சொன்ன தகவலை அறிந்து அனைவரும் திகழடைந்தனர். பேராபயத்தில் மாட்டி கொண்டுவிட்டதாக பயந்தனர். ஆனால் மாவீரன் லொள்ளுவாத்தியார் மட்டும் அஞ்சா நெஞ்சனாக பயபடாமல் இருந்தார்.

லொள்ளு : கலபதி நாம் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்.

விராடம் : "மன்னரே நாம் பாய்மரங்களை இறக்கி விட வேண்டும்"

லொள்ளு : "கலபதி என்ன சொல்கிறீர்கள், பாய் மரங்களை இறக்கி விட்டால் கப்பல் எப்படி போகும்"

விராடன் : "மன்னரே, பாய் மரங்கள் இருந்தால் புயல் காற்று கப்பலை இழுத்து சென்று விடும், சில சமயம் கவிழ்த்து விடும்"

லொள்ளு : " நல்லதாய் போய் விட்டது, பாய் மரங்களை இறக்க வேண்டாம் கலபதியே, காற்று இழுத்து நேராக நம்மை கடாரத்துக்கே கொண்டு சென்று விடும். நாம் நமது படை எடுப்பை விரைவில் ஆரம்பித்த் விடலாம்"

ஓவியர் : " மன்னா மாவீரன் லொள்ளு வாத்தியார், உங்கள் திறமை அபாரம்"

சிறிது நேரத்தில் பயங்கரமாக ஆழிகாற்று அடித்தது.
வின்னை முட்டும் பேரலைகள் எழுந்தது.
மழையும் பேய் காற்றுடன் பெய்ய தொடங்கியது.
வானமே அருவியா கொட்டியது.
கப்பல்களை பயங்கரமாக இழுத்து சென்றது.
லொள்ளபுரி கப்பல் படை மரனத்தின் தருவாயில் இருந்தது.
ஓவியர் வேண்டாத தெய்வங்கள் இல்லை. சிவன், பார்வதிம், ராமர், பெருமால், பிள்ளையார், முருகன், புத்தர், மகாவீரர், துர்கை, காளி இப்படி நினைத்த தெய்வங்களை எல்லாம் வேண்டினார்.
மாவிரன் லொள்ளுவாத்தியாரின் தலைமையில் இருப்பதால் படை வீரர்கள் அஞ்சாமல் இருந்தனர்.
லொள்ளபுரி மாலுமிகள் கப்பல்களை சாயாமல் இருக்கும் படி துடுப்புகள் வலித்தனர்.
நீண்ட நேரம் அடித்த காற்று. பிறகு ஓய்ந்தது.

அனைவரின் முகங்களிலும் திகைப்பு தெரிந்தது. சூரியன் உதயமானது. இருள் நீங்கியது.

ஓவியர் : "மன்னா நாம் எங்கிருகிறோம்"

விராடன் : "மன்னா கவனித்தீர்களா, குருவிகள் வானத்தில் பறபதை நாம் நிலத்திற்க்கு பக்கத்தில் இருகிறோம்"

சிவா ஜி : "அதோ மன்னா அங்கு ஒரு நாடு தெரிகிறது, சென்பக தீவாக இருக்கலாம்"

லொள்ளு : "சென்பக தீவு சிறியது. நம் கன்னில் தெரிவது பெரிய நில பரப்பு. ஆகையால் இது கடாரமாக இருக்கலாம். கலபதியாரே கப்பல்களுக்கு நங்கூரம் பாய்ச்சுங்கள். நாம் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது"

அனைவரும் படகு மூலமாக அந்த இடம் வந்து சேர்ந்தனர்.

சிவா ஜி : " மன்னரே இது கடாரம் போல தெரியவில்லை. இங்குள்ள மீனவர்கள் தமிழ் பேசுகிறார்கள். இது சென்பக தீவாக தான் இருக்க வேண்டும்"

ஓவியர் : "இல்லை மன்னா இந்த மனல் செந்நிறத்தில் இருகிறது. இது வேறு இடம்"

அப்பொழுது அங்கு ஒரு இனிய கீதம் கேட்டது

இயற்கையில் இருந்து பெரும் வர்ணங்கள் போல்
உன்னில் இருந்து பெற்ற இனிமைகளைக்
கொண்டு மாளிகை செய்கின்றேன் நீ
இனிதாய் வசித்திட....


பனித்துளிகளை தாங்கும் புல்நுனியின்
அழகில் மயங்கிய வேளையில் என்னை
உன் அன்பென்னும் ஆயுதம் கொண்டு
என்னை மயக்க வந்த மாயக் கண்ணனே...

லொள்ளு : "ஆகா என்ன இனிய கானம், "

பாடல் வந்த திக்கை பார்த்தார். ஒரு கால்வாயிலிருந்து ஒரு ஓடகார பென்மனி படகு வலித்து கொண்டு வந்தார்"

அந்த பென்னை வீரர்கள் அழைத்து வந்தார்கள்.
அந்த பெண்: "என்னை ஏன் அழைத்தீர்கள், யார் நீங்கள்"

லொள்ளு : "புங்குழலி போன்ற இனிய குரல் படைத்த பெண்னே, நான் லொள்ளபுரி நாட்டு மன்னன் மாவீரன் லொள்ளுவாத்தியார் உன் பெயர் என்ன"

அந்த பெண்: "என் பெயர் இனியவள். இந்த பகுதிக்கு ஓடகார பெண். அதிக மனித்தாளையம் எடுக்க வேண்டாம். உங்களிட கதைக்க எனக்கு சமயம் கிடையாது"

லொள்ளு :"ஓவியரே என்ன இந்த பென் எந்த மொழியில் பேசுகிறார். கிறுக்கு பட்டம் வாங்கிய மாதிரி புரியாமல் இருக்குதே"

ஓவியர்: "மன்னரே இதுவும் தமிழ் பாசை போல தான் தெரியுது. இனியவளே இந்த இடத்தின் பெயர் என்ன"

இனியவள் : "இது திருவோனமலை"

லொள்ளு : "என்ன திருவோனமலையா நான் கேள்வி பட்டதில்லையே"

சுட்டி : மன்னா, திருவன்னாமலையை தான் அப்படி சொல்லுகிறார் போல இருக்கு, அப்படி என்றால் நம் கப்பல் புயலில் திரும்பி தமிழகமே சென்று விட்டது

சிவா ஜி : "மன்னா திருவன்னாமலை அருகில் கடல் இல்லை"

இனியவள் மீண்டும் பாட்டு பாட ஆரம்பித்தார்
என் விழியோரத்தில் அரும்பும்
புன்னகை என் காதலை உன்னிடம்
கூற உன் மெளனம் உன் காதலை
உரக்கச் சொல்லிச் சென்று விட்டது
என்னிடம்....

மெளனமே என்னோடு உரக்கப் பேச
நான் பேசும் வார்த்தைகள் அனைத்தும்
கரைந்து சென்றன காற்றோடு - உன்
மெளனத்திற்கு முன்னால்...

லொள்ளு : "இனியவளே உன் பாடல் அருமையாக இருகிறது. இது எந்த இடம் என்று சரியாக புரியும்படி சொல்வாயாக"

இனியவள் : "எத்தன தடவ கதைகறது இது திருவோனமலை"

ஓவியர் : "ஆ மன்னா புரிந்த் விட்டது, இந்த பெண் திரிகோனமலையை தான் திருவோனமலை என்கிறார்"

குட்டி : "திரிகோனமலையா காடர பகுதியில் அப்படி ஒரு இடத்தை நான் கேள்வி பட்டதில்லையே"

ஓவியர் : "மன்னரே நாம் இருப்பது இலங்கையில்"

குட்டி : "இலங்கைக்கா, நாம் புறபட்டது கடாரத்துகல்லவா மன்னா"

தொடரும்
பாகம் 10 : இலங்கை போர் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=272798&postcount=104)

lolluvathiyar
17-09-2007, 01:46 PM
மாவிரன் லொள்ளுவாத்தியார் பாகம் 10

இலங்கை போர்

பாகம் 9 : ஆழிகாற்று (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=272797&postcount=103)

கடாரம் புறபட்டு சம்மந்தமில்லாமல் இலங்கை வந்து சேர்ந்தது நினைத்து அனைவருக்கும் ஆழிகாற்றை விட திகலடைந்து விட்டனர். ஓவியரோ மனதில் புலம்பினார், இந்த மாவீரர் லொள்ளுவாத்தியாரை நம்பி வந்து எங்கேயோ மாட்டி விட்டோமே. இனி என்ன செய்வது"

விராடன் : "மன்னா பாய் மரத்தை இறக்கி விடலாம் என்று நான் முன்னமே சொன்னேன் கேட்டீர்களா, ஆழிகாற்று அடித்து நம்மை இலங்கைக்கு கொண்டு வந்து விட்டது"

லொள்ளு : "கலபதியே அதற்க்கு ஏன் கலங்குகிறீர்கள் "

விராடன் : "நமது கப்பல்களும் சேதம் அடைந்து விட்டன, அதை செப்பனிட சில நாள் பிடிக்கும்"

லொள்ளு : "ஆகா நல்ல நேரம் தான் நாம் வந்திருப்பது இலங்கைதானே, கவலை படாதீர்கள், இலங்கை மன்னன் அன்புரசிகன் நம் லொள்ளபுரி நாட்டுக்கும் நண்பர். அவர் நமக்கு அனைத்து உதவிகளையும் செய்வார்"

இனியவள் : "லொள்ளுபுரி வேந்தரே உங்கள் வாய்க்கு அரிசி தான் மன்னிக்கவும் சக்கரை தான் போட வேண்டும். அதோ அன்புரசிகன் அவர்களே வருகிறார்."

வீராதி வீர
வட மார்த்தாண்ட நாயகன்
சூராதி சூர
தென் இலங்கை மன்னன்
கோமகன் அன்புரசிகன் வருகிறார்
பராக் பராக் பராக்

அன்புரசிகன் அங்கு வந்து சேர்ந்தார் லொள்ளுவாத்தியாரை பார்த்ததும். ஓடி வந்து ஆர தழுவினர்.
நண்பர்களின் கண்ணீர் இரு கண்களிலும் கடல் அலையை தோற்கடித்து பாய்ந்தது.

அன்புரசிகன் : "ஆகா இது என்ன ஆச்சரியம் லொள்ளபுரி நாட்டு வேந்தனை நான் இங்கு சந்திபேன் என்று கனவிலும் கூட நினைக்கவில்லையே. வாருங்கள் என் கூடாரத்துக்கு போய் சவகாசமாக பேசலாம்"

இலங்கை மன்னன் அன்புரசிகனின் கூடாரத்தில் அன்புரசிகன் மற்றும் அன்புரசிகனின் தளபதிகள், லொள்ளுவாத்திர் மற்றும் லொள்ளபுரி தலைவர்கள். லொள்ளுவாத்தியார் தனது கதையை சொல்லி முடித்தார். அன்புரசிகனின் உதவியையும் கேட்டார். மீண்டும் கடாரம் செல்ல வேண்டிய உணவு கேட்டார். அன்புரசிகன் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார்.

அன்புரசிகன் : "மன்னரே இந்த 6 மாதகாலத்தில் நடக்க கூடாத சம்பவங்கள் நடந்து விட்டது. தென் இலங்கையை ஆண்டு வந்த என் அண்ணன் மகன் அமரன் என்னுடைய நாட்டின் முக்கால் பகுதியை பிடித்து விட்டார். சிலகாலம் முன் யாழ்பாணம் அமரனின் கையில் விழுந்து விட்டது. சிறிது நாட்களுக்கு முன்னால் தான் என் தலைநகரமான அநுராதபுரமும் வீழ்ந்து விட்டது. இப்பொழுது என்னிடம் எஞ்சி இருப்பது இந்த திரிகோணமலை பகுதிதான். இந்த பிரதேசம் வறட்சியானத் இந்த செம்மனலில் எதுவுமே விளையாது லொள்ளுவாத்தியாரே. எங்கள் நிலைமையே மோசமாக இருக்கும் போது நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும்"

தனது ஆருயிர் நண்பர் அநுராதபுர சக்ரவர்த்தி அன்புரசிகனுக்கு இப்படி ஒரு நிலைமை ஆகி விட்டதே என்று மாவீரன் லொள்ளுவாத்தியார் பெரிதும் துயர் கொண்டார். அன்று இரவு திரிகோனமலையில் கூடாரம் அடித்து மந்திராலோசனை கூட்டத்தை கூட்டினார். அன்புரசிகனும் உடன் இருந்தார்.

சிவா ஜி : "மன்னா, நாம் நம் நாட்டுக்கு திரும்பி போவது தான் சிறந்தது"

ஓவியர் : "என்ன கடாரம் புறபட்ட மாவீரன் லொள்ளுவாத்தியார் கடாரம் வென்று கடாரம் கொண்ட மாவீரன் லொள்ளுவாத்தியார் ஆகாமல் திரும்பி போவதா, மன்னா இது நம் லொள்ளபுரிக்கே அவமானம்"

அன்புரசிகன் : "ஓவியரே திரும்பி போவது தான் சிறந்தது என்று கருதுகிறேன். உங்கள் கலங்கள் சேதமடைந்து விட்டது. அவை கடாரம் போய் சேருவதே கடினம், அப்புறம் அங்கிருந்து திரும்புவது நடவாத காரியம்"

சிவா ஜி : "அதற்க்கு இப்பொழுது என்ன செய்ய வேண்டும் ஓவியரே"

ஓவியர் : "மன்னர் மாவீரன் லொள்ளுவாத்தியார் என் ரத்தம் கொதிகிறது. வாளெடுத்தவன் சண்டை போடாமல் அதை உறையில் வைக்க கூடாது. நமது வீரர்கள் போர் ஆசையில் இருகிறார்கள். போர் செய்யாமல் திரும்புவதா"

ஓவியரின் வீரத்தை தன் நாட்டு மக்கள் மீது வைத்திருக்கும் பாசத்தையும் கண்டு லொள்ளுவாத்தியார் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
ஓவியரை ஆர தழுவி கொண்டார்.

லொள்ளு : "ஓவியரே உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்"

விராடன் : "மீண்டும் கடாரம் புறபட்டு வழிமாறி வங்காளம் போக மாட்டோம் என்பதும் நிச்சயமில்லையே மன்னா"

மாவீரன் லொள்ளுவாத்தியார் வீரு கொண்டு எழுந்தார். தன் வாளை இடையிலிருந்து உருவினார். அருகில் இருந்த மீனை அறுத்து அதன் ரத்தத்தை தன் நெற்றியில் திலகம் போல் இட்டு கொண்டார்.

இந்த காட்சியை பார்த்த அனைவருக்கும் உற்சாகம் மது குடித்தவனை விட அதிகரித்தது.

லொள்ளு : "தளபதிகளே, நமது வீரத்தை நிலை நாட்ட நமக்கு இன்னும் சந்தர்பம் இருகிறது. நம் நாட்டு நண்பர் அன்புரசிகனுக்கு உதவ வேண்டுமல்லவா. ஆம் நாம் போரை நிறுத்தவில்லை. ஆனால் போர்களத்தை தான் மாற்றி விட்டோம். நாம் தென் இலங்கை மன்னர் அமரனிடம் போர் புரிவோம். அமரனிடமிருந்து அநுராதபுரத்தை மீட்டு நமது நண்பர் அன்புரசிகரிடம் மீண்டும் ஒப்படைப்போம்."

அன்புரசிகருக்கு ஆனந்த கண்ணீர் வந்தத். "ஆனால் லொள்ளுவாத்தியாரே அமரனின் படைகள் மிக பெரியது"

சுட்டி : "எங்கள் லொள்ளபுரி ஒரு படை 100 படைகளுக்கு சமம்"

லொள்ளு : "படை தலைவர்களே, நாளையே அமரன் மீது போர் புரிவோம். அந்த கொடுங்கோல் மன்னர் அமரனுக்கு நல்ல பாடம் புகட்டுவோம். நமது கத்தி குதிரைகளுக்கு வேலை வந்து விட்டது"


அதன் பின் அந்த சம்பாசனை முற்று பெற்றது. இரவெல்லாம் ஏலே சிங்கன் கூத்து கேட்டு ஆடி பாடி மகிழ்ந்து தூங்கி விட்டனர்.

அடுத்த நாள் போருக்காக அனைவரும் ஆயுத்தம் ஆனார்கள்.
தீடிரென சுட்டி ஓடிவந்தார் " மன்னா நம்மை நோக்கி ஒரு படை வருகிறது"

நமது வீரர்கள் வேல்களை உயர்த்தி பிடித்து விட்டார்கள். வாளை சுழற்ற ஆயுத்தம் ஆனார்கள். லொள்ளுவாத்தியார் கை தூக்கி அனைவரையும் அமைதி படுத்தினார்.

சிவா ஜி : "மன்னரே எதிரி படைகள் போல் தெரிகிறது, நம்மை நோக்கி வருகிறார்கள், சண்டை இடாமல் ஏன் தடுகிறீர்கள்"

லொள்ளு : "சிவா ஜி அந்த படையை கவனித்து பாருங்கள், ரத்த காயங்களுடன் வருகிறார்கள். அவர்களே எங்கேயோ சண்டை போட்டு திரும்பி ஓடி வருகிறார்கள். ஓடிவருபவர்களை தாக்குவது நம் வீர லொள்ளபுரியின் மரபு அல்ல"

எதிரில் வந்த படை நின்றது. முன்னால் குதிரையில் ஒருவர் வந்தார். லொள்ளுவாத்தியார் படையை நெருங்கியது அன்புரசிகர் "அன்னா" என்று ஓடிபோய் வந்தவரை கட்டிபிடித்து விட்டார்.

லொள்ளு : "அன்புரசிகரே, இவர் யார், எங்கிருந்து ஓடி வருகிறார்கள்.

அன்புரசிகன் : "லொள்ளுவாத்தியாரே, இவர் தான் என் அன்னன் தென் இலங்கை மன்னன் அமரன். அன்னா அமரன் ஏன் இந்த ரத்தகாயம். உங்களுக்கு என்ன ஆகிவிட்டது.

அமரன் : "தம்பி நாம் இருவரும் போட்ட சண்டையினால், மொத்தமாக மோசம் போய் விட்டோம். பழைய இலங்கை மன்னன் கஜபாகு என்னிடமிருந்து இலங்கையை அபகரித்து விட்டான்"

அன்புரசிகர் : "என்ன கஜபாகு அவர் சேர நாட்டில் அல்லவா இருந்தார்"

அமரன் : "ஆம் சேரன் செங்குட்டுவன் உதவியுடன் இங்கு வந்து என் மீது திடிரென படை தென் இலங்கையை மீது படை எடுத்து பிடித்து விட்டான். இன்று அனுராதபுரமும் சிம்மகிரியும் கூட இழந்து விட்டேன் தம்பி"

அன்புரசிகன் : "அண்ணா உங்கள் பெரிய படை என்ன ஆச்சு"

அமரன் : "நம் வீரகளை கஜபாகு பக்கம் சேர்ந்து விட்டார்கள். இன்னும் இரண்டு நாளில் திரிகோண மலையை பிடித்து நம்மை சிறை படுத்த போகிறார்களாம் அதனால் தான் உன்னை எச்சரிக்க ஓடி வந்தேன்"

அன்புரசிகன் : "கவலை படாதீர்கள் அண்ணா, கூவம் நதிகரை பக்கத்திலிருக்கும் லொள்ளபுரி மன்னன் என் நன்பன் மாவீரன் லொள்ளுவாத்தியார் நமக்கு உதவி செய்வார். ஏன் ஆருயிர் நண்பர் லொள்ளுவாத்தியாரே சகோதர்கள் எங்களை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்"

லொள்ளு : "கவலை படாதீர்கள் லொள்ளு இருக்க பயமேன், நீங்கள் இருவரும் பத்திரமாக லொள்ளபுரிக்கு போய் விடுங்கள். நாங்கள் அந்த கஜபாகுவை சிறைப்பிடித்து இலங்கையை பிடித்து விடுகிறோம். பிறகு சகோதரர்களிடம் ஒப்படைத்து விடுகிறோம்"

மாவீரன் லொள்ளுவாத்தியாரின் இந்த வார்த்தையை கேட்டு அமரன் மனம் நெகிழ்ந்தார். அவரது வீரத்தையை மெச்சினார்.


மாவீரன் லொள்ளுவாத்தியார் வாழ்க
மாவீரன் லொள்ளுவாத்தியார் வாழ்க

கடாரம் புறபட்டு ஈழம் கண்ட
மாவீரன் லொள்ளுவாத்தியார் வாழ்க

வெற்றி வேல் வீர வேல்

டும் டும் டும்
லொள்ளுபுரியின் போர் முரசு எட்டு திக்கும் கேட்டது.

தொடரும்
பாகம் 11சிம்மபுரி முற்றுகை (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=273657&postcount=109)

சிவா.ஜி
17-09-2007, 02:11 PM
வாத்தியாரே...மிக மிக மிக..பிரமாதம்.எப்படியோ ஆரம்பித்து..வெகு சுவாரசியமான சரித்திர நாவலாய் அட்டகாசமாக பயணிக்கிறது.உங்கள் எழுத்து நடை...அடடா...அற்புதம்.கதையில் நமது மன்ற உறவுகளையும் பாத்திரங்களாக்கி நீங்கள் படைத்து வரூம் இந்த சரித்திரம் சூப்பர்.
லொள்ளான பின்னூட்டம் பின்னர்.
(என் அன்பு பரிசாக 1000 இ-பணம்)

ஜெயாஸ்தா
17-09-2007, 02:32 PM
அமரனை முதலில் எம்.என் நம்பியார் ரேஞ்சுக்குத் தூக்கிவிட்டு பின் 'டமால்'என்றுகீழே போட்டுவிட்டீர்களே...!

பூமகள்
17-09-2007, 03:00 PM
இப்படி வேகமாய் வரலாற்றை வளர்த்தினால் எப்படி வாத்தியாரே..
இன்னும் பாகம் 9 ஏ படிக்கவே இல்லை.அதற்குள் பாகம் 10 போட்டாச்சா??
ரொம்ப அழகாய் போகிறது..ரசிக்கிறோம்.. சிரிக்கிறோம்.. தொடருங்க அசத்துங்க வாத்தியார் அண்ணா.

lolluvathiyar
19-09-2007, 08:03 AM
மறந்து போனேன் நான்..சிவசேகனார் வாதத்தை..
மறக்க வில்லை நீர்...அவருடன் இட்ட சண்டையை..


அவரை ஆண்மீகபகுதியில் இருந்து அவ்வபோது வெளியே கொண்டுவர தான் இந்த மாதிரி வேலை செய்கிறோம். தியானத்தை கலைத்து விட்டேன் என்று கோபத்தில் வருவாரு பாருங்க


எனக்கு பல முகங்கள் உண்டு.. அதில் ஒன்றான பகுத்தறிவு அமைச்சராக அமர்த்தி விட்டீறே.. பரவாயில்லை..


ஆம் அதை நான் அறிவேன். ஆனால் இந்த மன்றத்தில் உருப்பினர் எந்த குனத்தை காட்டுகிறார்களோ அதை வைத்தே எழுதுகிறேன். அது தான் இந்த கதையின் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.


வீட்டினில்.. கணினி முன்னாலேயே இருப்பீறோ..


வீட்டில் இல்லை. நேரம் கிடைக்கும் போது ஆபீஸில் இதுபோன்றூ ஏதாவது கிறுக்கி தள்ளி விடுகிறேன்.


மற்றும் வாத்தியார் மாவீரனாக சித்தரிக்க இன்னும் எத்தனை உறுப்பினர்கல் பலி கடா ஆக போகிறார்களொ...


ஆமாம் இன்னும் நிரைய பேர் இருகிறார்கள். ஆனால் இறுதியில் லொள்ளுவாத்தியாரையே பலிகடா ஆக்கி விடுவேன் அல்லவா.

சிந்தித்து தந்த உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி உதயசூரியன்

lolluvathiyar
19-09-2007, 02:20 PM
மாவிரன் லொள்ளுவாத்தியார் பாகம் 11

சிம்மபுரி முற்றுகை
பாகம் 10 : இலங்கை போர் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=272798&postcount=104)

இலங்கை போருக்கான ஆயத்த பணிகள் வெகு வேகமாக ஆரம்பித்தன. லொள்ளுவாத்தியார் போர் அணிவகுப்புக்களை பார்வையிட்டார்.
பிறகு தளபதிகளை வரிசையாக நிற்க வைத்து புதிய தளபதி சுகந்தபிரீத்தனையும் அனைவருக்கும் அறிமுகபடுத்தினார்.

லொள்ளுவாத்தியார் தன் திட்டத்தை தளபதிகளுக்கு விளக்கினார்
லொள்ளு :
"இலங்கை மன்னன் கஜபாகு சிம்மபுரி யில் அல்லது அநுராதபுரம் கோட்டையில் இருக்கலாம் என்று தகவல் வந்திருகிறது.
நம் வருகையை அறிந்து பயந்து போய் மாந்தோப்பு நகரத்தில் கூட ஒழிந்திருக்கலாம்.
சிம்மபுரி இங்கிருந்து மேற்க்கு திசையில் சிறிது தூரத்தில் தான் இருகிறது.
நான் தலைமை தாங்கி படை எடுத்து சிம்மபுரியை சூழ்ந்து கொள்கிறேன்.
சிம்மபுரி கோட்டையை தகர்த்து கஜபாகுவை சிறைப் பிடித்து விடுகிறேன்.
ஓவியரே நீங்கள் நீங்கள் அநுராதபுரத்தை முற்றுகை இடுங்கள். அங்கு கஜபாகு இருந்தால் சிறைப்பிடித்து விடுங்கள்.
கலபதி விராடன் நீங்கள் நமது கப்பல் படைகளை பிரித்து இலங்கை சுற்றிலிலும் நிறுத்தி விடுங்கள்
அப்பொழுது தான் கஜபாகு தப்பித்து சொல்லாமல் இருக்க முடியும்.
சிவா ஜி சுட்டி இருவரும் என்னுடன் சிம்மபுரி முற்றுகைக்கு வாருங்கள்."

சிவா ஜி : "மாவீரன் லொள்ளுவாத்தியாரே ஒரு வேலை இரண்டு இடத்திலும் கஜபாகு அகபடவில்லையென்றால்"

லொள்ளு :
"அப்புரம் கஜபாகு ஒழிந்து கொள்ள ஒரே இடம் மாந்தோப்பு நகரத்தில் உள்ள பழைய பல்லவர் கோட்டைமட்டும்தான்.
ஓவியர் படை சிம்மபுரியை நோக்கி வர வேண்டும்.
நமது படை அநுராதபுரம் நோக்கி செல்ல வேண்டும்.
இருவரும் சந்திக்கும் இடத்திலிருந்து வட திசையில் காட்டு வழியில் சென்றால் நம் படை அரை நாளில் மாந்தோப்பு நகரத்தை அடைந்து விடலாம்."

லொள்ளுவாத்தியாரின் வீர ஆவேசத்துடன் சொல்லிய போர் திட்டங்களை கேட்டு அனைவரும் மெய்சிர்த்து போனார்கள்.

மாவீரன் லொள்ளுவாத்தியார் வாழ்க
மாவீரன் லொள்ளுவாத்தியார் வாழ்க

படைகள் கிளம்பின. லொள்ளுவாத்தியாரின் படை சிம்மபுரியை நோக்கி நகரந்தது.லொள்ளபுரி வீராதி வீரர்கள் இலங்கையின் கடுமையான காடுகளை கடந்து சென்றார்கள்சிறிது நேரத்தில் மாவீரன் லொள்ளுவாத்தியார் படை சிம்மபுரியை அடைந்தது

2000 வருடங்களுக்கு முன்னர் சிம்மபுரி ஒரு அழகான நகரம் (இன்றைய பெயர் தெரியவில்லை) நீண்ட காலமாக சிங்கள மன்னர்களின் ஆட்சியில் இருப்பதால் அங்கு புத்த பீச்சுகள் அதிகமாக இருந்தனர். அந்நகரில் எங்கு பார்த்தாலும் வின்னை முட்டும் புத்தர் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளை பார்த்து லொள்ளபுரி வீரர்கள் அதிசியத்து நின்றார்கள். காரணம் லொள்ளபுரி நாட்டில் சிலைகள் 2 அடிக்கு மேல் இல்லை.மொட்டை அடித்து கொண்டு காவி வஸ்திரம் தரித்து எதிரில் தென் பட்ட புத்த பீச்சுகள கண்டு பயந்து விட்டார்கள்.இலங்கை புத்தபீச்சுகள் "புத்தம் சரணம் கச்சாமி " என்பதோடு அல்லாமல் "சாது சாது" என்றும் சொன்ன வண்ணம் செல்வதை கேட்டவும் நமது மாவீரன் லொள்ளுவாத்தியாருக்கு மனதில் ஆண்மீக உனர்ச்சி பீரிட்டு வந்தது.

லொள்ளுவாத்தியார் வீரத்தில் மட்டும் சிறந்தவர் அல்ல. அன்பு ஆன்மீகத்துலும் சிறந்தவர் என்பதை எடுத்து காட்ட இங்கு ஒரு உதாரணம்.

லொள்ளு : "லொள்ளபுரி வீரர்களே, நாம் இந்த போரில் தாக்க போவது இலங்கை மன்னன் கஜபாகு மற்றும் அவரது படையை மட்டும்தான். வழியில் பொது மக்கள், புத்த சைவ துறவிகள் வழிபாட்டு தளங்கள் எதையும் நீங்கள் தாக்க கூடாது. மத நல்லிணக்கத்துக்கு உலகுக்கே லொள்ளபுரி படை எடுத்துகாட்டாக விளங்க வேண்டும்" என்று ஆணையிட்டார்

இதை கேட்ட லொள்ளபுரி வீரர்கள் கன்களில் கன்னீர் வந்தது
"மனு நீதி காத்த லொள்ளர் மாவீரன் லொள்ளுவாத்தியார் வாழ்க"
"ஆன்மீக லொள்ளு தொண்டர் மாவீரன் லொள்ளுவாத்தியார் வாழ்க"

சிறிது நேரத்தில் சிம்மபுரி கோட்டை அடைந்து விட்டார்கள். சிம்மபுரி கோட்டை அவர்கள் கண் முன் கம்பீரமாக காட்சி அளித்தது

சில நோடிகளில் கோட்டையை சூழ்ந்து விட்டார்கள்.

வரலாற்று சிறப்பு மிக்க சிம்மபுரி கோட்ட முற்றுகை ஆரம்பமானது. கோட்டையில் எந்த எதிர்ப்பு இல்லை. பயந்து விட்டார்கள் போலும்.

சிவா ஜி : "மன்னா நம் வருகை அறிந்த் ஒரு வீரார் கூட கோட்டை மதில் மீது காணவில்லை. கஜபாகு இங்கே தான் ஒழிந்திருக்க வேண்டும்.

சுட்டி : "மன்னா எனக்கு சந்தேகம் இந்த கோட்டையில் ஒருவரும் இல்லை போல இருக்கு. உள்ளே சத்ததை காணவில்லை"

லொள்ளு : "யானை படைகளை கொண்டு கோட்டை கதவை உடைத்து சென்று பார்க்கலாம்"

சுட்டி : "மன்னா கோட்டை கதவுகள் திறந்து தான் இருகிறது"

மீண்டும் லொள்ளுவாத்தியார் தன் படைகளுக்கு வீர முழக்கத்துடன் ஆணை யிட்டார்
லொள்ளு :
"லொள்ளபுரி வீரர்களே, கோட்டைகுள் நமடு படை நுழையும் போது யாரும் தப்பி செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். கோட்டைகுள் இருக்கும் ஸ்திரிகளையும் , சிறுவர்களையும், தப்பி ஓடுபவர்களையும் தாக்க கூடாது. வாயில்லா பிராணிகளை கொல்லகூடாது. ஒரு வேலை இலங்கை மன்னன் சரணடைந்தால் அவனை கொல்லாமல் சிறைப்பிடிக்க வேண்டும். கோட்டையை தாக்குங்கள்"
கம்பீரமாக கொம்பு ஊதபட்டது.

"இரக்க குண மன்னன் லொள்ளர் மாவீரன் லொள்ளுவாத்தியார் வாழ்க"
"வீராதி வீரன் மாவீரன் லொள்ளுவாத்தியார் வாழ்க"
"வெற்றி வேல் வெற்றி வேல்"

அடுத்த சில மணி நேரத்தில் மாவீரன் லொள்ளுவாத்தியாரின் லொள்ளபுரி படைகள் கோட்டைகுள் பிரவேசித்தன. உள்ளே நாலாபுறமும் பரவினார்கள் அனைத்து அரண்மனைகளுக்கும் போய் பார்த்தார்கள். உள்ளே ஒருவரும் இல்லை.

சிறிது நேரத்தில் ஓவியரின் படையும் சிம்மபுரி கோட்டைகுள் பிரவேசித்தன.

ஓவியர் : "மன்னா கஜபாகு இரு இடங்களிலும் இல்லையாம்"

லொள்ளு : "இந்த சிம்மபுரி கோட்டையில் ஒரு வீரனை கூட காணவில்லை. நம் வருகையை அறிந்து கஜபாகு ஒரு வேளை மாந்தோப்பு நகரத்தில் ஒழிந்துருப்பானோ"

ஓவியர் : "இல்லை மன்னா கஜபாகு மலை நாட்டில் இருப்பதாக சற்று முன் தான் என் ஒற்றன் கூறினான்"

லொள்ளு : "நம் வருகையை கண்டு பயந்து போயிருப்பானோ"

சிவா ஜி : "மன்னா கோட்டைக்கு வெளியே சத்தம் கேட்கிறது வெளியே, நான் போய் பார்த்து விட்டு வருகிறேன்"

சிறிது நேரத்துகெல்லாம் சிவா ஜி வேர்த்து விருவிருக்க ஓடி வந்தார்.

சிவா ஜி :" மன்னா ஆபத்து, இலங்கை மன்னன் கஜபாகு வின் படை இந்த சிம்மபுரி கோட்டையை சுற்றி வளைத்து விட்டது"

ஓவியர் : " நல்ல வேலை நாமே தேடி போக வேண்டி இருந்தது. கஜபாகு வே வந்து மாட்டி கொண்டான்"

சிவா ஜி : "மன்னா, நாம் இருப்பத் கோட்டைகுள், அவர்கள் நம்மை சுற்றி வளைத்து விட்டார்கள், இங்கு உணவு பொருட்கள் எதுவும் இல்லை"

லொள்ளு : "ஓவியரே உடனே நம் படையை வெளியேர சொல்லுங்கள், வெளியில் அவர்களை துரத்தி பிடிக்க வேண்டும்"

சிவா ஜி : "மன்னா மன்னிக்கவும், நாம் வெளியேற முடியாது, கஜபாகு படை கோட்டை வாசலில் ஏரளமான படை வீரர்களை குவித்து விட்டார்கள்"

ஓவியர் : " மன்னா கோட்டை மதில் மீது ஏறி குதித்து அவர்களிடம் சண்டை இடலாம், இலங்கை படையை துவம்சம் செய்யலாம்"

லொள்ளு : "ஓவியரே ஒன்று அல்லது இரண்டு திருடர்கள் தான் கோட்டை மதில் ஏறி குதித்து ஓட முடியும். ஒரு படையே மதில் ஏறி குதிக்க முடியாது"

ஓவியர் : "அப்படி என்றால் அவர்கள் உள்ளே வந்தவுடன் நாம் சண்டை போட வேண்டியது தான், மன்னா லொள்ளபுரி நாட்டுகாக நான் உயிர விட தயங்க மாட்டேன்"

சிவா ஜி : "அமாம் மன்னா மாவீரன் லொள்ளுவாத்தியார் அவர்களே, உங்களுக்காக நானும் உயிரையும் தர சித்தமாக இருகிறோம். இந்த கோட்டையில் ஏதாவது சுரங்க வாசல் இருக்க வேண்டும். அதை கண்டு பிடித்து நான் உங்களை பத்திரமாக வெளியேற்றி காபாற்றி கூட்டி செல்கிறேன். நமது மந்திரி ஓவியர் சண்டை போட்டு வீர சொர்கம் அடையட்டும்"

இதற்க்குள் குதிரையில் சிலர் வந்தனர்.

சிவா ஜி : "மன்னரே தென் இலங்கை மன்னன் கஜபாகு தூது அனுப்பி இருகிறார்"

லொள்ளு : "ஆம் நாம் கஜபாகு வை மன்னித்து விட்டு விடலாம் என்று தான் கருதுகிறேன். வர சொல்லுங்கள் அந்த தூதுவரை"

இலங்கை தூதுவர் : லொள்ளபுரி நாட்டு காவலன் லொள்ளுவாத்தியாருக்கு எங்கள் மன்னர் உங்களுக்கு தரும் எச்சரிகை செய்தி என்னவென்றால்
"கடலின் ஆழம் தெரியாமல் கப்பல் ஓட்டிய லொள்ளனே
ஆற்று நீரில் முதலில் பரிசல் ஓட்டி பழகி கொள்.
ஏன் தேவை இல்லாமல் வந்து எங்கள் நாட்டில் சளி சிந்துகிறீர்கள்
உங்களை நாங்கள் இப்பொழுதே இந்த கோட்டைகுள்ளே ..........
ஆனால் அப்படி நாங்கள் செய்ய மாட்டோம்.
ஏனென்றால் உங்களிடம் சண்டை செய்தால் எங்களுக்கு பெருத்த அவமானம் நேரிடும்.
நாங்கள் சோழ சேர பாண்டி வீரர்களிடம் மட்டுமே சண்டை போட்டு பழகியவர்கள்.

ஆகையால் நீங்கள் எங்கள் கோட்டையில் பரப்பிய உங்கள் நாட்டு கூவம் நதி நறுமணத்தை துடைத்து கொடுத்துவிட்டு உடனே சில நாழிகையில் புறமுதுகிட்டு ஓட வேண்டும். இது எங்கள் மன்னன் ஆணை"

இதை கேட்டவுடன் மாவீரன் லொள்ளுவாத்தியாரின் முகத்தில் கருவாடும் வெண்ணையும் சேர்ந்து வடித்தது.
லேசாகதான் தொடை நடுங்கியது. கம்பீரமாக அந்த கஜபாகு வின் தூதுவனை பார்த்து

லொள்ளு : "அப்படி புறமுதுகிட்டு ஓட நாங்கள் மறுத்தால்"

இலங்கை தூதுவர் : "மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்"

லொள்ளு : "சொல்லுங்கள் உன் மன்னன் கஜபாகு விடம் நாங்கள் சண்டை போட தயார் என்று"

இலங்கை தூதுவர் : " நாங்கள் உங்களுடன் சண்டை போட மாட்டோம். 4 நாட்கள் பசியுடன் அடைத்து வைத்திருக்கும் 100 நாய்களை கோட்டைகுள் ஏவி விடுவோம்"

இதை கேட்டவுடன் லொள்ளுவாத்தியாருக்கு உச்சதலையிலிருந்து உள்ளங்கால் வரை நடுங்கியது. அதிலிம் அதிகமாக அவர் தொடை கிடு கிடுவென நடுங்கியது. ஆனால் மாவீரர் அல்லவா. ஆவேசம் அடைந்தார் நமது வீராதி வீர லொள்ளுவாத்தியார். தன் உரைவாளை உருவினார். பாய்ந்தோடி தன் குதிரையில் ஏறினார். நேராக கோட்டை வாசலுக்கு வெளியே தன் குதிரையை கொண்டு சென்றார்.அங்கு, இலங்கை மன்னன் கஜபாகு தனது பரிவாரங்களுடன் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி வில் போல் குறி வைத்து சென்றார்.

ஆபத்தை உனர்ந்த மன்னன் இலங்கை மெய்க்காப்பாளர்கள் கஜபாகு வை வேலுடன் சூல்ந்து கொண்டார்கள்.

கஜபாகு : "வீரர்கள் விலகுங்கள், அவருக்கு கத்தியை உருவ மட்டுமே தெரியும். அதை தூக்கி சண்டையிடும் பலம் எல்லாம் இல்லை"

மெய்காப்பளர்கள் எல்லாம் விலகி விட்டார்கள். மாவீரன் லொள்ளு வாத்தியார் கஜபாகு வை நெருங்கி தைரியமாக குதிரையிலிருந்த படியே

லொள்ளு : "இலங்கை நாட்டு மன்னன் கஜபாகு அவர்களே, இந்த லொள்ளபுரி நாட்டு மன்னன் மாவீரன் லொள்ளுவாத்தியார் என்ன கோழை என்று நினைத்து கொண்டாயா. நாங்கள் என்ன சும்மா புறமுதுகிட்டு ஓடுபவர்களா?"

கஜபாகு லொள்ளுவாத்தியாரின் கண்களை உற்று பார்த்தார். அதில் தெரிந்த கோப கனல்கள் அனுமான் எரித்த இலங்கையை மீண்டும் எரித்து விடும் அளவுக்கு கோப கனல் வீராவேசமாக வெளிபட்டது.

தொடரும்
பாகம் 12 புறமுதுகு கண்ட காதை (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=274960&postcount=121)

சிவா.ஜி
19-09-2007, 02:33 PM
அடடா மன்னர் ஆபத்தில் சிக்கிக்கொண்டாரே....இப்போதுபார்த்து அவருடைய குதிரைக்கு காய்ச்சலாமே...வேகமாக ஓட முடியாமல் அகப்பட்டுக்கொண்டால்....?யாரங்கே உடனே மூன்று பேரை மன்னர் போஒலவே தயார்செய்து ஆளுக்கொரு திசையில் ஓடவிடுங்கள்.எதிரிகள் குழம்பிபோய்விடுவார்கள்..ஹா..ஹா..ஹா..

ஆமாம் மன்னரே...அங்கு புத்த பிட்சுக்கள்தானே இருப்பார்கள்..நீங்கள் பீச்சுக்களை எங்கே பார்த்தீர்கள்.....பொடிநடையாக நடந்து கடற்கரைக்குப் போய்விட்டீர்களா....?

சாராகுமார்
19-09-2007, 03:14 PM
அருமையாக இருக்கிறது வாத்திநாதா.வாழ்த்துக்கள்.

praveen
19-09-2007, 03:18 PM
வாத்தியாரே, சுடச்சுட உடனே படிக்க முடியவில்லை, தினத்திற்கு ஒரு பாகமாக வெளியிடுங்கள்.

shivasevagan
20-09-2007, 08:56 AM
கல்கியின் பொன்னியின் செல்வன் போல அருமையாக இருக்கிறது. தொடருங்கள் நண்பரே!. மேப் போட்டு அசத்தி விட்டீர்களே!

உதயசூரியன்
20-09-2007, 09:46 AM
லொள்ளுவிற்கு இனையாக ஒரு அறிவு ஜீவிகளின் படையும் திரள் கிறது என்பது..
னம்ம மனோஜ் அவர்களின் பின்னூட்டத்தில் இருந்து தெரிகிறது

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

ஜெயாஸ்தா
20-09-2007, 10:16 AM
கோட்டையினுள் ஒருவருமில்லை என்ற உடனே.... வாத்தியார் மாட்டிக்கொண்டார் என நினைத்தேன். அது போலவே நடந்துவிட்டது.

s_mohanraju
20-09-2007, 11:50 AM
வீட்டில் இல்லை. நேரம் கிடைக்கும் போது ஆபீஸில் இதுபோன்றூ ஏதாவது கிறுக்கி தள்ளி விடுகிறேன்.



வேளை நேரத்தில்த்தான் என்றால், இதுத்தான் வேளையோ ?

எப்படிங்கப்பு இப்படியெல்லாம்...
அதிகமா வரலாற்று நாவல்கல் படித்ததினால் வந்த கோலாரோ


சும்ம அந்த ஓவியனை வாங்கு வாங்குன்னு வாங்கினாலும், கடைசியில லொல்லர்புரி நாட்டுக்கு உயிரைவிட முதல் ஆலாய் அவர்தான் நிற்கிறார்.

அசத்துங்க,

அன்புரசிகன்
20-09-2007, 01:01 PM
என்னை மன்னனாக்கிப்பார்த்த வாத்தியார் வாழியவே...
உங்கள் கதையில் வரும் சில எழுத்துப்பிழைகளை திருத்தியுள்ளேன்...

மிகவும் சுவாரசியமாக உள்ளது...
நம் வரலாற்றுக்கல்வியை படித்ததுபோல் ஒரு பிரம்மை...

தொடருங்கள் வாத்தியாரே... ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பிந்திய பின்னூட்டத்திற்கு வருந்துகிறேன்.

lolluvathiyar
20-09-2007, 02:48 PM
அவர்களை பிடித்து கடலில் அடைத்து விடுவோம்.


இவர்களை பிடித்து கடலில் அடையுங்கள்.

என்ன சாராகுமார் கடலில் அடைக்க முடியுமா, ஒரே தவறை இரண்டு முரை செய்ததால், கடலில் அடைக்க ஏதாவது வழி முரை கண்டு பிடித்து வைத்திருப்பீர்களோ என்னவோ பார்ப்போம்.


(வாரும்மையா லொல்லு பிளானா போடுரிரு எங்களுக்கு மெசேஜு வந்திடுச்சுல்ல ஒரு கை பாக்குரோம்)
அசோ: அந்த லொல்லறுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டியது தான்

அதுக்கு வழி இல்லாம அடுத்த பாகத்துல பன்னீட்டோமல்ல


எதற்கும் ஓவியனை ஒரு படகில் உங்களுக்கு முன்னால் அனுப்பி,ஏதாவது பெரிய விசிறி வைத்து காற்றை உண்டாக்குகிறார்களா என்று பார்த்துவிட்டு,அப்படி ஏதாவது இருந்தால் அதையும் வழக்கம்போல் சுட்டுக்கொண்டு வரும்படி சொல்லிவிடுங்கள்.

அட நான் கோடு போட்டா நீங்க ரோடு போடரீங்களே. சூப்பர் சிவா ஜி


ஹை, வாத்தியார் இந்தக்கதையிலே எனக்கு இரட்டை வேடம் தந்திருக்கிறார்.


அது மிஸ்டேக் ஆசோ.

என்னவன் விஜய்
20-09-2007, 03:39 PM
இன்று முதல் லொள்ளுவாத்தியார் மாலொள்ளுவாத்தியார் என்றும்
நாளை முதல் லொள்ளுபேராசன் என்றும் அழைக்க நான் ஆவணம் செய்கிறேன்

அமரன்
20-09-2007, 06:09 PM
இன்றுதான் முழுவதும் ஒரே மூச்சாகப் படித்தேன்..நகைச்சுவைகலந்து அருமையாக படைத்துள்ளீர்கள் வாத்தியாரே. அன்புரசிகன் ஓரிடத்தில் ஒற்றர்படைத்தலைவனாகவும் இன்னொரு இடத்தில் இலங்காபுரி மன்னனாகவும் வருகின்றார்.பழைய படங்கள் போல சக்கரம்போட்டுக் காட்சி மார்றப்படுவது போல் சில இடங்களிலும் இருந்தாலும் அபாரமான கற்பனை அதை மறைத்து விடுகிறது..தொடருங்கள் வாத்தியாரே.
எனக்குச் சின்ன பாத்திரம் கொடுத்து விட்டீங்களே.

lolluvathiyar
22-09-2007, 02:27 PM
மாவிரன் லொள்ளுவாத்தியார் பாகம் 12

பாகம் 11சிம்மபுரி முற்றுகை (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=273657&postcount=109)

புறமுதுகு கண்ட காதை

(தமிழ் மன்ற நன்பர்கள் ஆவலுடன் எதிர்பாத்த லொள்ளுவாத்தியார் புறமுதுகு செய்து ஓடிய பாகம்)

கஜபாகு அமைதியாக : "பிறகு சண்டை போட முடிவு செய்து விட்டீர்களா? சரி சரி யாரங்கே, அந்த நாய்களை அவிழ்த்து விடுங்கள்"

நாய்களை அழைத்து வந்தார்கள் இலங்கை வீரார்கள். அவை லொள்ளு லொள்ளு என்று குரைத்தது தன்னை அழைத்தாகவே மாவீரன் லொள்ளுவாத்தியாருக்கு தெரிந்தது. இலங்கை நாய்கள் நாக்கை தொங்க போட்டு லொள்ளுவாத்தியாரை ஆவலுடன் பார்த்த பார்வையிலேயே ஒரு பிடி சதை மிஞ்சுவது கடினம் என்று தெரிந்து கொண்டார், நமது வீராதி வீரர்.

லொள்ளு : " கஜபாகு நில் நீ இப்படி உங்கள் படைவீரர்களுடன் குறுக்கே நிண்றால் நாங்கள் எப்படி வீரமாக புறமுதுகிட்டு ஓட முடியும்"

என்று வீர கர்ஜனையுடன் கேட்டார்.

கஜபாகு சிரித்தார் : "ஓ அப்படியா சரி என் வீரர்கள் 10 அடி விலகி கொள்வார்கள், நீங்கள் புறமுகிட்டு ஓடி விடலாம். அடுத்த முரை இந்த பக்கம் வர கூடாது"

நமது கதாநாயகன் லொள்ளுவாத்தியார் மாவீரன் தொப் என்று கீழே விழுந்தாலும் மீசையில் மன் ஒட்டவில்லை என்ற கொள்கையுடன் இருப்பவர்.

லொள்ளு : "கஜபாகு பயந்து புறமுகிட்டு ஓடுகிறோம் என்று கருதிவிடாதே, உன்னை மன்னித்து திரும்பி போகிறோம். போய் வருகிறேன்"

கஜபாகு : "புறமுதுகிட்டு போ ஆனால் வரவேண்டாம். யாரங்கே ஒரு நாலு நாய்களை மட்டும் அழித்து விடுங்கள்"

அடுத்த சில நாழிகையில் காரியங்கள் வெகு வேகமாக நடந்தேறின.
லொள்ளு வாத்தியார் புயலென கோட்டைகுள் பறந்தார். இலங்கை படை 10 அடி வழி விட்டு நின்றது. இலங்கை படையின் 4 நாய்கள் விடுவிக்க பட்டது. நாய்கள் கோரை பற்களை காட்டியவன்னம் 16 கால் பாய்ச்சலில் கோட்டைகுள் புகுந்தது.

மன்ற சகோதரர்களே மாவீரன் லொள்ளுவாத்தியார் வரலாறு என்பது சாதர்ன வரலாறு அல்ல, பித்தளை ஏட்டால் எழுத வேண்டிய வரலாறு. அவர் வரலாற்றில் மன்ற சகோதரர்கள் விரும்பும் முக்கிய காட்சியை சும்மா புறமுதுகிட்டு ஓடினார் என்று எழுதினால் அது லொள்ளபுரி வீரர்களுக்கும் மாவீரன் லொள்ளுவாத்தியாருக்கு ஈடு செய்ய முதியா இழிவு ஆகும். ஏன் மன்ற நேயர்களுக்கும் அது பிடிக்காது போய் விடும். ஆகையால் நமது மாவிர லொள்ளுவாத்தியார் புறமுதுகிட்டு ஓடிய அந்த வீர வரலாற்றை படத்துடன் விளக்க கடமை பட்டுள்ளேன்.

அடுத்த அரை மனி நேரத்தில் லொள்ளபுரி படை புறமுதுகிட்டு ஓட தயாரானது. குதிரை மீது அனைத்து படை வீரர்கள் அமர்ந்து கொண்டனர்.

மாவீரன் லொள்ளுவாத்தியார் வீரர்களை பார்த்து வீர முழக்கமிட்டார்
லொள்ளு : "லொள்ளபுரி நாட்டுக்காக உயிரை கொடுக்க நான் சித்தமாக இருப்பேன் என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. இன்று நாம் புறமுதுகிட்டு ஓடுவோம் என்பதை யாரும் தவறாக கருத கூடாது. வீரர்களே இந்த லொள்ளுவாத்தியாரின் முக்கிய பழமொழிய கேளுங்கள் போர் செய்வதை விட புறமுதுகு காட்டி ஓடுவதற்க்கு தான் அதிக வீரம் வேண்டும். போரில் புறமுகிட்டால் தான் அவமானம். நாம் போர் செய்யாமலே புறமுதுகிடுகிறோம் அது வீரத்தின் அடையாளம்.
நாம் ஒன்றும் சும்மா ஓடவில்லை. போகும் போதெல்லாம் வெற்றி வெற்றி வீர வேல் என்று கத்தி கொண்டு தான் ஓட வேண்டும்.
அது தான் நமது லொள்ளபுரி நாட்டின் பன்பாடும் கூட. புறப்படுங்கள் படையுட ஓட"

வீரர்கள் வின்னை பிளக்கும் கோசம் இட்டனர்
"வீராதி வீர
சூராதி சூர
கவலோல வளையா அட்சி புரிந்த
வரலாறு கண்ட
கால் தடுக்கி விழுந்து புன் கண்ட
லொள்ளபுரி சக்ரவர்த்தி
மாவீரன்லொள்ளுவாத்தியார்
வெற்றியுடன் , வீரத்துடன் ஆக்ரோசத்துடன்
எதிரிகளிடம் புறமுதுட்டு ஓடுகிறார்
பராக் பராக் பராக்"

கோட்டையை விட்டு லொள்ளபுரி படை வெளியே வந்தது. இலங்கை படைகள் நறுமனத்துக்கு பயந்து வழி விட்டு நின்றது. நாய்கள் மட்டும் நாற்றத்தை கண்டு கொள்ளாமல் கருனை இல்லாமல் விடாமல் துரத்தியது. இலங்கை படைகளை கடந்ததும் மாவீரன் லொள்ளுவாத்தியார் தலமையிலான லொள்ளபுரி படை எட்டு திக்கும் பறந்து வில்லிருந்து விட பட்ட அம்பை போல் சீறி ஓடியது.

முன்னமே நான் சொல்லி இருந்தேன் அல்லவா விராடன் தன் கப்பல்களை பிரித்து இலங்கை சுற்றிலும் நிறுத்தி வைத்திருந்தார் என்று. அது லொள்ளபுரி படைக்கு மிகவும் அனுகூலமாக போய் விட்டது. மாவீரன் லொள்ளுவாத்தியார் எதையும் சமயோசிதத்துடன் செய்வார் இன்று அனைவரும் அறிந்து கொண்டனர்.


ஓவியர் தன் படையுடன் நேராக அநுராதபுரம் ஓடினார். அங்கிருந்து தொண்டைமான் ஆற்றை அடைந்தது. அங்கிருந்து இடுப்பளவு இருக்கும் யானை இறவு கடல் பகுதியில் இறங்கி நடந்தும் நீந்தியும் கடந்து யாழ்பானம் (ஜாப்னா) சென்றது. யாழ்பானத்தில் கப்பல் எறியவர்கள் நேராக கோடியகறைக்கு போய் தான் நின்றார்கள் அங்கிருந்து கடற்கரையோடு நடந்தே சென்று லொள்ளபுரியை அடைந்தார்.

சிவா ஜி தன் படையுடன் அநுராதபுரம் நோக்கி போனார்கள் இடையில் காட்டுவழியில் பூந்து வழியில் எங்கும் நிற்கமல் ஓடி வந்து மாந்தோப்பு நகரம் அடைந்தார்கள். அங்கிருந்து நீந்தியே கரைத்தீவு அடைந்தார். அங்கிருந்து படகு மூலம் கன்னியாகுமாரி சென்றுனர். பிறகு லொள்ளபுரி அடைந்தார்.

குட்டி தன் படைகளுடன் சிவா ஜியுடன் மாந்தோப்புநகரை அடைந்தார். ஆனால் அங்கு கப்பல் ஏற முடியவில்லை ஆகையால் வேகமாக தலை மன்னார் நோக்கி விரைந்தார். போன வேகத்தில் கடலில் குதித்து சில தூரம் நீந்தி சென்று ராமர் பாலத்தில் ஒரு மனல் திட்டின் மீது ஏறி நின்றார்கள். அங்கு மீன் பிடிக்க வந்த மீனவர்கள் உதவியுடன் தனுஸ்கோடி அடைந்தார்கள். அங்கிருந்து மதுரைக்கு ஓடினார். பிறகு திருவன்னாமலைக்கு ஓடினார். அங்கிருந்து லொள்ளபுரியை அடந்தார்.

லொள்ளுவாத்தியார் வீர புறமுதுகு பயன விபரம்

லொள்ளுவாத்தியார் தன் படையுடன் முதல் முதலில் கண்டிக்கு ஓடினார். பிறகுதான் தெரிந்தது அது கடற்கரையில் இல்லை என்று. ஆகையால் அங்கிருந்து நீகொம்புதுரைக்கு போக திட்டமிட்டு ஓடினார். இடையிலேயே நாய்களால் மறிக்கபட்டு திரும்பி ரத்தனபுரத்துக்கு ஓடினார் அங்கு சுற்றிவளைக்க படவே அங்கிருந்து ஒரு சுத்து சுத்தி மாவீரன் லொள்ளுவாத்தியார், கதிரைவெளி நோக்கி ஓடினார் வழியில் காட்டு யானைகூட்டம் வழிமறித்தது. அதனால் அங்கிருந்து திரிகோனமலைக்கே ஓடினார். அங்கு ஒரு கப்பல் கூட தென்படவில்லை. கலபதி விராடன் ஒரு மனி நேரத்துக்கு முன்னமே கப்பலை செலுத்தி போய் விட்டாராம். அதனால் அங்கிருந்து வவுனியா ஓடினார். அங்கும் துரத்தபடவே. அங்கிருந்து மாக்குலம் ஓடினார். அதன்பிறகு முல்லை தீவுக்கு ஓடினார். முல்லைதீவில் எப்படியோ ஒரு கப்பல் கிடைத்து தன் படைகளுடன் கப்பலில் ஏறி ஒருவழியாக தப்பித்து இலங்கை பக்கம் திரும்பி பார்க்காமல் கடலில் புயல் வேகமாக செலுத்தினார்.

இதோ லொள்ளுவாத்தியாரும் அவருடைய படைகளும் இலங்கையிலிருந்து புறமுகிட்டு தப்பிய மேப்

http://www.geocities.com/lolluvathiyar/Pics/lollulank.JPG

லொள்ளுவாத்தியார் இலங்கையிலிருந்து கிளம்பிய கப்பலில் கலபதி யாரும் இல்லை. ஆகையால் லொள்ளுவாத்தியார்தான் வழி சொல்ல வேண்டும். முதலில் வழி தவறி நக்காவரம் தீவுக்கு அருகில் போய் விட்டார்கள். அங்கிருந்தது கலிங்க நாட்டு படைகள் லொள்ளுவாத்தியாரின் கப்பலை கடலிலேயே வழிமறித்து இறங்க விடாமல் துரத்தி விட்டார்கள். மீண்டும் கப்பல் மூலம் வீரமாக வின்மீன்கள் திசை பார்த்து ஒரு நாட்டுக்கு போய் சேர்ந்தார். போனபிந்தான் தெரிந்தது அது வங்காள நாடு.

வங்காள நாட்டை நெருங்கிய லொள்ளுவாத்தியாருக்கு கப்பலை நங்கூரம் இட்டு நிறுத்த தெரியாமல் செலுத்தி அங்குள்ள மற்ற கப்பல்கள் மீது இடித்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வங்காள் வனிகர்கள் லொள்ளுவாத்தியாரை தாக்க வந்தனர். கப்பலிலிருந்து குதித்து வங்காளத்திற்க்குள் ஓடிவிட்டார். வங்காளத்திலிருந்து கங்கை கரையை அடையாளம் வைத்து கிளம்பி வந்து கலிங்கத்துக்கு(ஒரிசா) போய் விட்டார்கள்.

மீண்டும் கலிங்க படையால் துரத்தபட்டு அங்கிருந்து மராத்தா நாட்டுக்கு விரைந்தார்கள். மராத்த நாட்டில் இருக்கும் ராஜபுத்திர மன்னர்களால் துரத்தபட்டு சிந்து நதியை நோக்கி ஓடினார். சிந்து நதி மூலமாக புருசோத்தமன் நாட்டுக்கு ஓடினார் (பாக்கிஸ்தான்) அங்கிருந்து மீண்டும் ஒரு படகு திருடி கராச்சி யிலிருந்து கிளம்பி சேர நாடு (கோச்சின்) வந்து சேர்ந்தார்.

சேர நாட்டில் ஒரு பென்னிடம் மயங்கி காதல் ஓலை தந்ததால் சேர நாட்டு படை அவரை புரட்டி எடுத்தது. அங்கிருந்து புறமுதுகிட்டு தென் கையாலய மலையை அடைந்தார் (வெள்ளியங்கிரி - கோவைக்கு அருகில்). அங்கிருந்து கீழே இறங்கி செம்மேடு அடைந்தார் (வெள்ளியங்கிரி அடிவாரம் பூண்டி - கோவை). அங்கிருந்து கொங்கு (கோவை) நாட்டிற்குள் நுழைந்தார். கொங்கு நாட்டு வெள்ளார்கள் துரத்த நொய்யல் ஆற்றில் குதித்தார் நீந்தியே கொடுமுடி அருகே காவிரியை அடைந்தார்.

காவிரியில் நீந்தியவன்னமே சிறூ சிறு கால்வாய் மூலமாக கொள்ளிடத்தை அடைந்து குடந்தை (கும்பகோனம்) சென்றார். அங்கிருந்த சோழ நாட்டு வாழை தோட்டத்தில் இருந்து வாழை திருடி சாப்பிட்டு பசியை தீர்த்தார். இதனால் சோழ நாட்டு மக்களால் துரத்த பட்டு அங்கிருந்து மதுரைக்கு ஓடினார்.

மதுரை பாண்டியர்களை பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. எல்லையிலே அடித்து விரட்டி விட்டனர். எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பித்து தென்பொன்னை ஆற்றை அடைந்தார் அதன் மூலம் அவர் பல்லவ நாட்டுக்கு (காஞ்சிபுரம்) ஓடினார்.

பல்லவ நாட்டில் தென்பொன்னை ஆற்றில் குளித்து விட்டு கரை சேர்ந்தார். பல்லவனால் அழைக்க பட்டார். பல்லவ நாட்டு மன்னன் நல்ல என்னம் படைத்தவன். மாவீரர் லொள்ளுவாத்தியாருக்கு நல்ல விருந்தளித்து ஓய்வெடுக்க வைத்து விட்டு பிறகு தான் துரத்தினார். அவர்களிடம் புறமுதுகிட்டு நிற்காமல் ஒரே மூச்சில் வடகிழக்கு நோக்கி ஓடி வந்து இறுதியில் லொள்ளபுரி நாட்டின் எல்லையை வெற்றிகரமாக அடைந்தார்.

லொள்ளுவாத்தியார் இலங்கையிலிருந்து புறமுகிட்டு தப்பித்தவுடன் இந்தியாவை சுற்றி லொள்ளபுரியை அடைந்த மேப்

http://www.geocities.com/lolluvathiyar/Pics/lolluind.JPG

எதிரிகளிடம் புறமுதுகு கண்ட
மாவீரன் லொள்ளுவாத்தியார் வாழ்க.

தொடரும்

பாகம் 13 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=281403&postcount=213)

மனோஜ்
22-09-2007, 07:13 PM
கடாரம்

மனோஜ் : அசோ விஷயம் தெரியுமா லெல்லர் புறமுதுகுஇட்டு ஓட்டம் பிடித்த கதை

அசோ : தெரியும் நண்பா என் ஒற்றன் கூறினான்

மனோஜ்: சரி இப்பொழுது நாம் என்ன செய்வது

அசோ : கவலைபடாதீர்கள் மனோஜ் நாம் லொள்ளாபுரிக்கு படைஎடுப்போம் அதற்கான ஆயத்தங்கள் செய்யுங்கள் நண்பா

மனோஜ் : நன்றி அசோ மிகவிரைவில் செய்கிறோன்

அசோ: மனோஜ் ஒற்றர் படையை அனுப்பி லொல்லாபுரியை வேவு பாத்து தகவல்கள் வந்தவன்னம் இருக்கட்டும் மனோஜ்

மனோஜ்: கண்டிப்பாக அசோ நம் கப்பல் படை தளபதி சாராகுமாரை அனுப்பியுள்லேன் அசோ

அசோ : சரி வாருங்கள் சாப்பிட செல்லலாம்

lolluvathiyar
23-09-2007, 06:40 AM
[SIZE="3"]
ஓவியனின் பலதிறமைகள் வெளியே வருது....


தொடர்ந்து நீங்கள் உற்சாகபடுத்துவதால் இன்னும் பலருடைய திறமைகள் வெளியே வரும்

சிவா.ஜி
23-09-2007, 06:50 AM
போர் புரிந்து வெற்றி பெற்ற சரித்திரம் சொல்வதெல்லாம் ஓல்டு..போர் புரியாமலேயே புறமுதுகிட்டு ஓடிய வரலாறு லேட்டஸ்ட்டு...லொள்ளபுரி மன்னரின் இந்த வரலாறு மெய்சிலிர்க்க வைக்கிறது. சான்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதைப் போல எங்கள் மன்னருக்கு அவர் சென்ற இடங்களிலெல்லாம் எத்தனை "சிறப்பு" செய்து அனுப்பினார்கள் என்பதைப் பார்க்கும்போது..ஆஹா...இப்படிபட்ட ஒரு மாவீரரின் படையில் தளபதியாக இருப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். அரசே அந்த பித்தளை பட்டய சரித்திரத்தில் ஓரமாக எங்களுக்கும் ஒரு இடம் கொடுத்த நீங்கள் வாழி.உங்கள் கொற்றம் வாழி....

பூமகள்
23-09-2007, 08:07 AM
எங்கள் மாவீரரின் புறமுதுகு காட்டி ஓடிவந்த வீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர வரலாறு அருமையிலும் அருமை..... எத்தனை நீண்ட தடைகளைத் தாண்டி ஓட்டோடி வந்த எம் மன்னர் லொள்ளபுரி மன்னருக்கு என் வாழ்த்துக்கள்...!!:icon_good:
நின் கொற்றம் வாழ்க.. நின் புகழ் வாழ்க..!:icon_clap::icon_clap:
ஒரே வருத்தம் இந்த பூமகளை உங்களுடன் அழைத்துச் செல்லவில்லையே மன்னா????!! :traurig001:
நானும் ஏதாவது நாட்டு வீராதி வீர இளவரசரை மணமுடித்து அங்கேயே உம் புகழை பரப்ப எண்ணியிருந்தேனே....!!:icon_wink1:
இப்படி செய்துவிட்டீர்களே அரசே...!!:traurig001:

praveen
23-09-2007, 09:38 AM
வாத்தியாரே, எங்கே போக கிளம்பினிங்களோ, அங்க இன்னும் போகலையே?. அடுத்த போர்(புறமுதுகு) எப்போது?.

அமரன்
23-09-2007, 11:28 AM
புறமுதுகு காட்டி ஓடியதை விலா வாரியாக சொன்ன வாத்தியாரே...நீவிர் வாழ்க.

ஓவியன்
23-09-2007, 07:26 PM
மகாராசா இது என்ன கொடுமை.........?
கடாராம் பிடிக்க போன நாம் ஒரு கிடாரம் கூட கொண்டு வராமல் வீடு திரும்புவதா.........???

அபச்சாரம், அபச்சாரம்...........!!! :D :D :D

அக்னி
23-09-2007, 11:21 PM
அற்புதம்... அசத்தல்... பிரமிப்பு...
ரொம்ப ரொம்ப பாராட்டுக்கள் வாத்தியாரே...
நேரமின்மையால், வாசிக்க முடியவில்லை உங்கள் காவியத்தை.
இனி அரியர்ஸ் வைக்கும் உத்தேசமில்லை எனக்கு.
தொடர்ந்தும் இந்த மாலொள்ளுக் காவியத்தை உடனுக்குடன் வாசிக்க காலம் கனிந்தே இருக்கவேண்டும்...

பி.கு:
சிம்மபுரி - சிகிரியா
இங்கே இந்தியாவின் அஜந்தா குகை ஓவியங்களை ஒத்த ஓவியங்கள் இம்மலைக்குகைகளில் இன்றளவும் காணப்படுகின்றன.
ஒரு சிங்கம் படுத்திருக்கும் தோற்றத்தில் இந்த மலை காணப்படும்.

சிகிரியா பற்றிய மேலதிக தகவல்களுக்கு... (http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)

மலர்
24-09-2007, 09:38 AM
வாத்தியாரே உங்களின் ஒவ்வொரு பாகமும் அடுத்த பாகத்தை மிஞ்சி விடுகிறது...
இதையெல்லாம் எப்படி யோசிப்பீர்கள்....
பேசாமல் உங்களிம் டியூசன் சேர்ந்து விடலாம் போல இருக்கு....

ஒவ்வொரு வரியிலும் நகைச்சுவை கலந்துள்ளது.....


லொள்ளு : " கஜபாகு நில் நீ இப்படி உங்கள் படைவீரர்களுடன் குறுக்கே நிண்றால் நாங்கள் எப்படி வீரமாக புறமுதுகிட்டு ஓட முடியும்"

என்று வீர கர்ஜனையுடன் கேட்டார்.


லொள்ளபுரி நாட்டின் பன்பாடும் கூட. புறப்படுங்கள் படையுட ஓட"


வெற்றியுடன் , வீரத்துடன் ஆக்ரோசத்துடன்
எதிரிகளிடம் புறமுதுட்டு ஓடுகிறார்
பராக் பராக் பராக்"


இலங்கை படைகள் நறுமனத்துக்கு பயந்து வழி விட்டு நின்றது. நாய்கள் மட்டும் நாற்றத்தை கண்டு கொள்ளாமல் கருனை இல்லாமல் விடாமல் துரத்தியது.


வங்காள நாட்டை நெருங்கிய லொள்ளுவாத்தியாருக்கு கப்பலை நங்கூரம் இட்டு நிறுத்த தெரியாமல் செலுத்தி அங்குள்ள மற்ற கப்பல்கள் மீது இடித்து விட்டார்.

சிரித்து சிரித்து வயிரே புண்ணாகி போய்விடும் போல.....
இதில் வரைபடம் வேறு கொடுத்து விட்டீர்களா...... அது ரொம்ப வசதியா போய்ட்டு.......
எத்தனை முறை படித்தாலும் சலிக்காது..இந்த அரும்பெரும் காவியம்...
எது எப்படியோ மீண்டும் லொள்ளபுரி வந்த வீராதிவீரரை இந்த தங்கை வீரத்திலகமிட்டு வரவேற்கிறாள்......


சேர நாட்டில் ஒரு பென்னிடம் மயங்கி காதல் ஓலை தந்ததால் சேர நாட்டு படை அவரை புரட்டி எடுத்தது.

திருபுவன சுந்தரி பெரியபிராட்டி கருப்பாயி தேவிக்கு துரோகம் செய்ய நினைத்தீரே..... இது நியாயமா...... :waffen093::waffen093:

பூமகள்
24-09-2007, 10:57 AM
திருபுவன சுந்தரி பெரியபிராட்டி கருப்பாயி தேவிக்கு துரோகம் செய்ய நினைத்தீரே..... இது நியாயமா...... :waffen093::waffen093:

அன்பு மலர்,
நம் மன்னர் லொள்ளபுரி மன்னர், காதலித்து(பெண்ணை மடக்கி):icon_wink1: காந்தர்வத் திருமணம்:icon_tongue: புரிய எண்ணியிருந்தார். அது எப்படி தவறென்று சொல்கிறாய்...??:icon_shades:
அரச பரம்பரையில் இது எல்லாம் சகஜமப்பா.....!!:grin: ஹீ ஹீ...!!:sport-smiley-018:

சுகந்தப்ரீதன்
25-09-2007, 01:43 PM
என்ன வாத்தியாரே இப்படி வாரிவிட்டீங்க.. தளபதின்னு சொல்லி எல்லோருக்கும் அறிமுக படுத்துனதோட சரி.. அதுக்கபுறம் என்கையில ஒரு வீரவசனத்த கூட கொடுக்காம காவல் காக்க வச்சிட்டீங்க.. பரவாயில்லை மன்னரின் அடுத்த கட்டளைக்கு காத்துகிட்டு இருக்கேன் மன்னா.. கடைசிவரைக்கும் கத்தி புடிக்கிறவனாவே வச்சிடாதிங்க அரசே.. அப்புறம் வருத்தபடுவீங்க..ஆமாம் சொல்லிபுட்டேன்..!

மலர்
26-09-2007, 01:23 PM
மாவீரன் லொள்ளுவாத்தியாருக்கு வீரமாக புறமுதுகு காட்டி ஓடி வந்த களைப்பு இன்னும் நீங்கலையா....:D:D

எப்போது அடுத்த பாகம்..... ஆவலோடு :icon_rollout:

lolluvathiyar
26-09-2007, 04:07 PM
(என் அன்பு பரிசாக 1000 இ-பணம்)

ந*ன்றி சிவாஜி,


அமரனை முதலில் எம்.என் நம்பியார் ரேஞ்சுக்குத் தூக்கிவிட்டு பின் 'டமால்'என்றுகீழே போட்டுவிட்டீர்களே...!

சீக்க*ர*ம் உங்க*ளையும் உயரமா தூக்கி விடுவோம். (கீழ* போட*ர*த* ப*த்தி அப்ப*ர*ம் யோசிக்க*லாம்)


இப்படி வேகமாய் வரலாற்றை வளர்த்தினால் எப்படி வாத்தியாரே..


ஆமாம் இந்த முரை தொடர்சியா 2 பாகம் போட்டுட்டேன். மன்னிக்கவும்

சுகந்தப்ரீதன்
27-09-2007, 04:02 AM
நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதிலே சொல்லல வாத்தியாரே... அதனால நீங்க இருக்கும் வரை நான் இனி கூடாரத்தவிட்டு வரமாட்டேன்... !

மலர்
27-09-2007, 04:09 AM
நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதிலே சொல்லல வாத்தியாரே... அதனால நீங்க இருக்கும் வரை நான் இனி கூடாரத்தவிட்டு வரமாட்டேன்... !

வாத்தியாரு கண்ணுல உன்னோட பதிவு மாட்டலியேன்னு சந்தோசப்படுவியா....
அதவுட்டுட்டு.... இப்படி அழுவுறிய

ஹீ,..ஹீ வாத்தியாரே இங்க ஒரு ஆள் மொக்கையா மாட்டியிருக்காரு...
விடாதீங்க பிடிச்சி அமுக்குங்க.... :D:D

ஓவியன்
27-09-2007, 04:11 AM
ஹீ,..ஹீ வாத்தியாரே இங்க ஒரு ஆள் மொக்கையா மாட்டியிருக்காரு...
விடாதீங்க பிடிச்சி அமுக்குங்க.... :D:D

அவர் என்ன கோழியா பிடிச்சு அமுக்க...??? :D

மலர்
27-09-2007, 04:15 AM
அவர் என்ன கோழியா பிடிச்சு அமுக்க...??? :D

காலங்காத்தாலே என்னது இது...?
சின்னப்புள்ளை தனமா கேள்விஎல்லாம் கேட்டுட்டு..?
ஓவியரே இது கொஞ்சம் கூட நல்லாயில்லை..ஆமா சொல்லிட்டேன்

சுகந்தப்ரீதன்
27-09-2007, 04:18 AM
காலங்காத்தாலே என்னது இது...?
சின்னப்புள்ளை தனமா கேள்விஎல்லாம் கேட்டுட்டு..?
ஓவியரே இது கொஞ்சம் கூட நல்லாயில்லை..ஆமா சொல்லிட்டேன்

காலங்காத்தல கோழியாட்டம் வ்ந்து எதுக்கு கொக்கரிக்குற,,,,,,?

சிவா.ஜி
27-09-2007, 04:18 AM
இங்கேயுமா.....மலரு ரவுசு தாங்க முடியல....

மலர்
27-09-2007, 04:19 AM
சுகந்தன் என்று பேர் கொண்டாலே நமக்கு ஆப்போசிட்டல தான் நிப்பாங்களா..... :confused::confused:

சுகந்தப்ரீதன்
27-09-2007, 04:21 AM
சுகந்தன் என்று பேர் கொண்டாலே நமக்கு ஆப்போசிட்டல தான் நிப்பாங்களா..... :confused::confused:

அப்படியில்ல .. என்ன இருந்தாலும் எங்க அண்ணன நீங்க முறைக்கிறது.. தம்பி எனக்கு பிடிக்கல..அதான்..!

மலர்
27-09-2007, 04:23 AM
இங்கேயுமா.....மலரு ரவுசு தாங்க முடியல....

ச,,,ச,,அப்படியில்லை அண்ணா...
நம்ம மாவீரன் லொள்ளு அடுத்த பாகம் வந்துட்டா என எட்டிப்பாத்தேன்...
இங்க நம்ம ப்ரீத்தன் அழுதுட்டு இருந்தார்.. அவருக்கு ஒரு அழுவ பழம் வாங்கி சமாதானப்படுத்தலாம் என்று தான் ஆரம்பித்தேன்....
ஹீ...ஹீ.... அதுக்குள்ள நீங்க வந்திட்டீங்க...

சுகந்தப்ரீதன்
27-09-2007, 04:26 AM
ச,,,ச,,அப்படியில்லை அண்ணா...
நம்ம மாவீரன் லொள்ளு அடுத்த பாகம் வந்துட்டா என எட்டிப்பாத்தேன்...
இங்க நம்ம ப்ரீத்தன் அழுதுட்டு இருந்தார்.. அவருக்கு ஒரு அழுவ பழம் வாங்கி சமாதானப்படுத்தலாம் என்று தான் ஆரம்பித்தேன்....
ஹீ...ஹீ.... அதுக்குள்ள நீங்க வந்திட்டீங்க...

அழுவ பழம் கொடுக்க வேணாம்... அல்வா கொடுக்காம இருந்தா அதுவே போதும் ..!

மலர்
27-09-2007, 04:27 AM
அப்படியில்ல .. என்ன இருந்தாலும் எங்க அண்ணன நீங்க முறைக்கிறது.. தம்பி எனக்கு பிடிக்கல..அதான்..!

அடேங்கப்பா.... வந்துட்டாரையா... அண்ணனை காப்பாத்த... :eek:
உங்களுக்கு பிடிக்கல எங்கிறதுக்காக என்னால முறைக்காம இருக்க முடியாது... அப்படித்தான் முறைப்பன்... :icon_shout::icon_shout:

praveen
27-09-2007, 04:46 AM
அடேங்கப்பா.... வந்துட்டாரையா... அண்ணனை காப்பாத்த... :eek:
உங்களுக்கு பிடிக்கல எங்கிறதுக்காக என்னால முறைக்காம இருக்க முடியாது... அப்படித்தான் முறைப்பன்... :icon_shout::icon_shout:

மலர் உங்களுக்கு சப்போர்ட்டா இந்த அண்ணன் வந்துட்டேன், ஒவியனை ஒருவழி பண்ணுவதில் விருப்பமே (அப்படியே அந்த தம்பியையும், வழிய வந்து தலையிலே கயிறை கட்டி லொள்ளுவாத்தியார் கையிலே கொடுக்கிறார்).

வாத்தியாரே, உங்கள் தொடரில் சிரிப்பு கொஞ்சம் குறைந்து கொண்டே வருகிறது. இந்த இரண்டு பேரையும் வைத்து காமடி செய்யுங்கள். ரேசன் அரிசி திருடியது என்று எழுதிய மாதிரி சின்ன பிள்ளைகள் கையில் இருந்த இனிப்பை இருவரும் ஏமாற்றி பறித்தது போல இப்படி (உங்களுக்கு சொல்லியா தரனும்) இட்டுக்கட்டி எழுதி தள்ளுங்கள். (தனியா இதற்கு இபணம் உண்டு).

@ மலர் எதற்கும் நீங்கள் ஒரு ஸ்கிரிப்ட் எழுதி வைத்து கொள்ளுங்கள், வாத்தியார் இப்படி எழுத மறந்தால் நாம போட்டு தாக்கிருவோம்.

சிவா.ஜி
27-09-2007, 04:50 AM
வாங்க ஆஷோ....மனோஜ்கூட கூட்டு சேர்ந்து எங்கள் அமைச்சரை தாக்குவது போதாதென்று இப்ப இந்த மலரையும் துணைக்கு அழைக்கிறீர்களா....விடமாட்டோம்,தளபதிகள் நாங்கள் இருக்கிறோம்...

praveen
27-09-2007, 04:56 AM
@ மலர் & வாத்தியார், இன்னொருத்தர் அந்த காமடியிலே பங்கேற்க துடிக்கிறார் பாருங்கள், வழிய வந்து வலையிலே விழுகிறார். இந்த சிவா-வையும் கதையில் சேர்த்து கொ(ள்ளு)ல்லுங்கள்.

மலர்
27-09-2007, 08:21 AM
மலர் உங்களுக்கு சப்போர்ட்டா இந்த அண்ணன் வந்துட்டேன், ஒவியனை ஒருவழி பண்ணுவதில் விருப்பமே (அப்படியே அந்த தம்பியையும், வழிய வந்து தலையிலே கயிறை கட்டி லொள்ளுவாத்தியார் கையிலே கொடுக்கிறார்).

எனக்கு சப்போர்ட்டாக வந்த எனது அருமை அண்ணன் அஷோவை வரவேற்கிறேன்.....
இனி பாவம் தான் அந்த அருமை அண்ணனும்..தம்பியும்


மலர் எதற்கும் நீங்கள் ஒரு ஸ்கிரிப்ட் எழுதி வைத்து கொள்ளுங்கள், வாத்தியார் இப்படி எழுத மறந்தால் நாம போட்டு தாக்கிருவோம்.

ஸ்கிரிப்ட் தானே.... ரெடியா எழுதி வச்சிருக்கேன்...
இன்னும் ஒரு நாள் லேட்டானால் போட்டு தாக்கியிரலாம்...

அக்னி
27-09-2007, 08:26 AM
வாத்தியாரே...
உங்கள் இரகசிய உளவாளி மலர், எதிரி இராஜ்ஜியங்களோடு சேர்ந்து லொள்ளபுரிக்கு எதிராக சதி செய்வது போலுள்ளதே...
சற்றே கவனியுங்கள்...

மலர்
27-09-2007, 08:29 AM
வாத்தியாரே...
உங்கள் இரகசிய உளவாளி மலர், எதிரி இராஜ்ஜியங்களோடு சேர்ந்து லொள்ளபுரிக்கு எதிராக சதி செய்வது போலுள்ளதே...
சற்றே கவனியுங்கள்...

வயிற்றில் உள்ள பாரம் இப்போது குறைந்துவிட்டதா....
ஏன் இப்படி.....
நல்லாதானே இருந்தீங்க....

ஓவியன்
27-09-2007, 08:30 AM
சுகந்தன் என்று பேர் கொண்டாலே நமக்கு ஆப்போசிட்டல தான் நிப்பாங்களா..... :confused::confused:
ஹா, ஹா!
நம்ம எதிரியை எப்போதும் நாம தான் தீர்மானிக்கிறோம் மலர்...
நான் உங்களுக்கு ஆப்போசிட் என்றால் அதுக்கு காரணம் நானல்ல நீங்களே தான்...

(நீண்ட நாட்களின் பின் ஒரு தத்துவம் சொல்ல வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி மலர்)



அப்படியில்ல .. என்ன இருந்தாலும் எங்க அண்ணன நீங்க முறைக்கிறது.. தம்பி எனக்கு பிடிக்கல..அதான்..!

மிக்க நன்றி சுகந்தா!!
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று சும்மாவா சொன்னாங்க... :)

பூமகள்
27-09-2007, 08:32 AM
வயிற்றில் உள்ள பாரம் இப்போது குறைந்துவிட்டதா....
ஏன் இப்படி.....
நல்லாதானே இருந்தீங்க....
அக்னியார்... நாரதராகி:D வெகுநாட்கள் ஆச்சி தங்கை மலர்.....!!:icon_rollout:

மலர்
27-09-2007, 08:33 AM
(நீண்ட நாட்களின் பின் ஒரு தத்துவம் சொல்ல வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி மலர்)

நன்றி எல்லாம் எதுக்கு...:D
எனக்கு ஒரு சந்தேகம்......:confused:
தத்துவம் சொல்லுற தத்துவஞானிகளுக்கெல்லாம் தலையில் முடி இருக்காதாமே........ உண்மையா....

பூமகள்
27-09-2007, 08:33 AM
Currently Active Users Viewing This Thread: 7 (7 members and 0 guests)
பூமகள், அக்னி, lolluvathiyar, சுகந்தப்ரீதன், மலர், ஓவியன்+, asho
யப்பா... அவ்வளவு பேரும் லொள்ளபுரியில் லொள்ளு செய்ய வந்தாச்சா????!!:eek::sprachlos020::D

சுகந்தப்ரீதன்
27-09-2007, 08:33 AM
ஹா, ஹா!


மிக்க நன்றி சுகந்தா!!
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று சும்மாவா சொன்னாங்க... :)

ஆனா இந்த பிசாசுங்கள பாத்த எனக்கு உள்ளுக்குள்ள பயமாயிருக்கு அண்ணாச்சி...!

அக்னி
27-09-2007, 08:34 AM
வயிற்றில் உள்ள பாரம் இப்போது குறைந்துவிட்டதா....
ஏன் இப்படி.....
நல்லாதானே இருந்தீங்க....
ஏன் வசனங்கள் எண்ணங்களையெல்லாம் நீங்கள் வயிற்றிலா வைத்திருப்பீர்கள்..?
என்ன மலர்... இப்பிடி விளயாட்டுத்தனமா இருக்கிறீங்களே...:confused:

மலர்
27-09-2007, 08:36 AM
ஆனா இந்த பிசாசுங்கள பாத்த எனக்கு உள்ளுக்குள்ள பயமாயிருக்கு அண்ணாச்சி...!

சுகு உண்மையை சபையில் சொன்னால் அடிவாங்குவாய்...
(ஆட்கள் அனுப்புவம்)

அக்னி
27-09-2007, 08:37 AM
Currently Active Users Viewing This Thread: 7 (7 members and 0 guests)
பூமகள், அக்னி, lolluvathiyar, சுகந்தப்ரீதன், மலர், ஓவியன்+, ashoயப்பா... அவ்வளவு பேரும் லொள்ளபுரியில் லொள்ளு செய்ய வந்தாச்சா????!!:eek::sprachlos020::D
அதெல்லாம் இருக்கட்டும்.
நீங்க ஓவியன மட்டும்தான் buddy list இல் வைத்திருப்பீங்களோ...
முதல்ல இதுக்குப் பதிலச் சொல்லுங்க...

ஓவியன்
27-09-2007, 08:37 AM
தத்துவம் சொல்லுற தத்துவஞானிகளுக்கெல்லாம் தலையில் முடி இருக்காதாமே........ உண்மையா....

ஆனா தலைக்குள் மூளை இருக்கும்.....!! :)

மலர்
27-09-2007, 08:38 AM
அதெல்லாம் இருக்கட்டும்.
நீங்க ஓவியன மட்டும்தான் buddy list இல் வைத்திருப்பீங்களோ...
முதல்ல இதுக்குப் பதிலச் சொல்லுங்க...

யக்கோவ் ஓடியாங்க.....

மலர்
27-09-2007, 08:39 AM
ஆனா தலைக்குள் மூளை இருக்கும்.....!! :)

அருமையான கண்டுபிடிப்பு.... வாழ்த்துக்கள்..

சுகந்தப்ரீதன்
27-09-2007, 08:41 AM
அதெல்லாம் இருக்கட்டும்.
நீங்க ஓவியன மட்டும்தான் buddy list இல் வைத்திருப்பீங்களோ...
முதல்ல இதுக்குப் பதிலச் சொல்லுங்க...

நீங்க வெறும் பேச்சு வீரரா...! இப்படி கெஞ்சுறீங்க..?

ஓவியன்
27-09-2007, 08:41 AM
நீங்க ஓவியன மட்டும்தான் buddy list இல் வைத்திருப்பீங்களோ...
முதல்ல இதுக்குப் பதிலச் சொல்லுங்க...

சரி சரி!
அழாதேங்கோ உங்களோட பெயரையும் அட் பண்ணுறாவாம்.... :)

சுகந்தப்ரீதன்
27-09-2007, 08:42 AM
அருமையான கண்டுபிடிப்பு.... வாழ்த்துக்கள்..

இங்க பாருப்பா பாப்பால்லாம் வாழ்த்துசொல்ல ஆரம்பிச்சுடிச்சி..!

lolluvathiyar
27-09-2007, 08:44 AM
இங்க என்ன போர் நடக்குது சுகந்த பிரீத்தன் உங்கள் பெயரை சேர்த்து போருக்கு போனோம் ஆனா போர் காட்சியில உங்கள் பெயரை போட மறந்துட்டேன்.
பொருங்க சீக்கிரம் அடுத்த போர் நடக்கும் அப்ப மறக்காம சேத்திகறேன்

மலர்
27-09-2007, 08:44 AM
இங்க பாருப்பா பாப்பால்லாம் வாழ்த்துசொல்ல ஆரம்பிச்சுடிச்சி..!

அதெல்லாம் இருக்கட்டும்....
சுகு நீ உன் அண்ணனை மட்டும் நம்பாதே...
பின்னால் ரொம்ப வருத்தப்படுவாய்....
சொல்லுறது நம்ம கடமை சொல்லிட்டேன்....
(பாப்பம் பிட்டு ஒர்க் ஆகாதா என்று)

ஓவியன்
27-09-2007, 08:45 AM
ஆனா தலைக்குள் மூளை இருக்கும்.....!! :)

அருமையான கண்டுபிடிப்பு.... வாழ்த்துக்கள்...

அது!!! :thumbsup:
இல்லாதவங்க இருக்கிறவங்களைப் பார்த்து இப்படி வாழ்த்து தெரிவிக்கணும். :)

சுகந்தப்ரீதன்
27-09-2007, 08:46 AM
அதெல்லாம் இருக்கட்டும்....
சுகு நீ உன் அண்ணனை மட்டும் நம்பாதே...
பின்னால் ரொம்ப வருத்தப்படுவாய்....
சொல்லுறது நம்ம கடமை சொல்லிட்டேன்....
(பாப்பம் பிட்டு ஒர்க் ஆகாதா என்று)

அது நீ சொல்லிதான் எனக்கு தெரியனுமா..? என்ன பண்ண உடன்பிறப்பாச்சே விட்டுகொடுக்க முடியல...அதான்..!

ஓவியன்
27-09-2007, 08:49 AM
பாப்பம் பிட்டு ஒர்க் ஆகாதா என்று[/COLOR]

:icon_nono: :icon_nono: :icon_nono: :icon_nono: :D

மலர்
27-09-2007, 08:51 AM
:icon_nono: :icon_nono: :icon_nono: :icon_nono: :D

அதான் ஆகலையே..... பின்ன என்ன கைஆடுது...
(நாளைக்கு நல்லா யோசிட்டு வாரேன்)

lolluvathiyar
27-09-2007, 08:52 AM
அது நீ சொல்லிதான் எனக்கு தெரியனுமா..? என்ன பண்ண உடன்பிறப்பாச்சே விட்டுகொடுக்க முடியல...அதான்..!

அட பாவமே இப்படி குடும்பத்து பிரச்சனைய வெளியல சொல்லலாமா.

இன்னும் கொஞ்ச அரசவை காட்சிகள் நடத்தீட்டு அப்புரமா போருக்கு போலாம்

அடுத்த போர் நடக்கும் போது இதயத்த அறிமுக படுத்திடலாமா.

ஓவியன்
27-09-2007, 08:55 AM
(நாளைக்கு நல்லா யோசிட்டு வாரேன்)

அதுக்கெல்லாம் மூளை வேணும் தாயே - மூளை...! :D

மலர்
27-09-2007, 08:58 AM
அதுக்கெல்லாம் மூளை வேணும் தாயே - மூளை...! :D

ஹீ..ஹீ.. உனக்கே இருக்கும் போது தாயாகிய எனக்கு இல்லாமல் போகுமா.....
(இதுக்குபேர் தான் செண்டிமெண்ட் டச்)

சுகந்தப்ரீதன்
27-09-2007, 09:04 AM
ஹீ..ஹீ.. உனக்கே இருக்கும் போது தாயாகிய எனக்கு இல்லாமல் போகுமா.....
(இதுக்குபேர் தான் செண்டிமெண்ட் டச்)

ஆத்தா... ஆனா எனக்கு இல்லன்னு சொல்றாங்களே..?

praveen
27-09-2007, 09:07 AM
அதுக்கெல்லாம் மூளை வேணும் தாயே - மூளை...! :D

நேற்று கசாப்புகடையில் ஆட்டு மூளை சாப்பிட்டால் மூளை வளருமான்னு கேட்டு இரண்டு ஆட்டு மூளை வாங்கியது நீங்கள் தானா?.:lachen001:

அதுதான் உங்கள் மூளை பற்றி தைரியமாக இவ்வளவு பேச்சா?, நேற்றுவரை இப்படி இல்லையே.

மலர்
27-09-2007, 09:07 AM
அட பாவமே இப்படி குடும்பத்து பிரச்சனைய வெளியல சொல்லலாமா.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....


இன்னும் கொஞ்ச அரசவை காட்சிகள் நடத்தீட்டு அப்புரமா போருக்கு போலாம்

அரசவை காட்சிகளோடு மன்னரை சிங்காசனத்தில் காண ஆசை...


அடுத்த போர் நடக்கும் போது இதயத்த அறிமுக படுத்திடலாமா....

ஆமாம் ஆமாம் இதயம் அண்ணாவை அப்படி எல்லாம் விட்டுர முடியுமா என்ன....

மலர்
27-09-2007, 09:08 AM
நேற்று கசாப்புகடையில் ஆட்டு மூளை சாப்பிட்டால் மூளை வளருமான்னு கேட்டு இரண்டு ஆட்டு மூளை வாங்கியது நீங்கள் தானா?.:lachen001:

அதுதான் உங்கள் மூளை பற்றி தைரியமாக இவ்வளவு பேச்சா?, நேற்றுவரை இப்படி இல்லையே.

ஹா..ஹா......ஹீ..ஹீ... :D:D:D:D:D
(நன்றி அஷோ அண்ணா.. )

ஓவியன்
27-09-2007, 09:11 AM
நேற்று கசாப்புகடையில் ஆட்டு மூளை சாப்பிட்டால் மூளை வளருமான்னு கேட்டு இரண்டு ஆட்டு மூளை வாங்கியது நீங்கள் தானா?.:lachen001:.

ஐயோ அந்த கசாப்புக் கடைகாரன் வேசம் போட்டிருந்து இதுவரை பாவிக்காத புது மூளை அப்படினு மலரோட மூளையை வித்தது நீங்க தானா...???? :D

மலர்
27-09-2007, 09:33 AM
ஓவியரே... ஏதோ அட்சயமுனையில் உள்ள பழைய கணக்கை தீர்ப்பதற்காக (கசாப்புகடையில் உள்ள கத்தியை எடுத்துக்கொண்டு) அஷோ அண்ணா உங்களை பார்க்க தான் வந்துட்டு இருக்கார்... :D:D
பாத்து இருங்கோ

praveen
27-09-2007, 12:01 PM
ஐயோ அந்த கசாப்புக் கடைகாரன் வேசம் போட்டிருந்து இதுவரை பாவிக்காத புது மூளை அப்படினு மலரோட மூளையை வித்தது நீங்க தானா...???? :D

யாரிடம் எப்படி சொன்ன விற்க முடியும்னு தெரிந்தாதால் தான் அப்படி சொன்னேன்.

பா+விக்காத (பாட்டை யாருக்கும் பணத்திற்காக விற்காத) என்ற அர்த்தத்தில் சொன்னதை நீங்கள் தவறாக புரிந்தால் நான் என்ன செய்வது.

சரி ஒரு மூளை உங்களுக்கு மற்றொன்று யாருக்கு உங்கள் இளவலுக்கா?. சரி அதற்குப்பிறகு ஏதாவது மூளை வளர்ந்த மாதிரி தெரிந்ததா? :lachen001:

ஓவியன்
27-09-2007, 12:18 PM
சரி அதற்குப்பிறகு ஏதாவது மூளை வளர்ந்த மாதிரி தெரிந்ததா? :lachen001:

நான் அந்த மூளையை வீட்டில் வைத்து வளர்க்க வாங்கிப் போனதா நினைத்தீர்களா...?
ஐயோ,ஐயோ சின்னப் பிள்ளைத் தனமாக இல்லே இருக்கு...
நான் அந்த மூளையை அன்றே பொரித்து சாப்பிட்டு விட்டேனே.......:icon_rollout:

அதுசரி நீங்கள் விற்றதில் ஒன்று மலரோடது, மற்றது யாருடைய மூளை...?
உங்களோடதா....? :D

praveen
27-09-2007, 12:38 PM
நான் அந்த மூளையை வீட்டில் வைத்து வளர்க்க வாங்கிப் போனதா நினைத்தீர்களா...?
ஐயோ,ஐயோ சின்னப் பிள்ளைத் தனமாக இல்லே இருக்கு...
நான் அந்த மூளையை அன்றே பொரித்து சாப்பிட்டு விட்டேனே.......:icon_rollout:

அதுசரி நீங்கள் விற்றதில் ஒன்று மலரோடது, மற்றது யாருடைய மூளை...?
உங்களோடதா....? :D

சரி தான் என் கசாப்பு கடையில் விற்காமல் இருக்கிற /இருந்த அனைத்து ஆட்டு மூளைகளும் என்னுடைய உடமையே. அதை வாங்கிய பின் அது உங்களுடையது, சரி உங்கள் மூளையை நீங்களே பொரித்து சாப்பீட்டீர்களா?, என்ன கொடுமை சரவணன் இது?:lachen001:

சரி ஏப்ரலுக்கு அடுத்து ஜூன் மாதத்திற்கு முந்தைய மாதம் என்ன வென்று தெரியுமா?, சரியா சொன்னால் 10 இபணம் தருகிறேன்.

லொள்ளுவாத்தியார் புறமுதுகில் இன்னும் கொஞ்ச நேரத்தில் ஓவியன் புறமுதுகு வரப்போகிறது. மலர் தான் தயாரித்த அந்த ஸ்கிரிப்டை எனக்கு PM செய்வதாக சொல்லியிருக்கிறார்.

மலர்
27-09-2007, 02:20 PM
சரி ஏப்ரலுக்கு அடுத்து ஜூன் மாதத்திற்கு முந்தைய மாதம் என்ன வென்று தெரியுமா?, சரியா சொன்னால் 10 இபணம் தருகிறேன்.

என்ன அஷோ அண்ணா இப்படி கஷ்டமான கேள்வியை ஓவியனிடம் கேட்டால்...
பாவம் அவர் என்ன செய்வார்...... :icon_rollout::icon_rollout:

praveen
28-09-2007, 05:00 AM
வாத்தியாரே, 5 ஸ்டார் (எல்லோரும் படித்து பார்த்து மகிழ்ந்ததில் இதை மறந்து விட்டார்கள் போல) உங்களின் இந்த திரிக்கு கொடுத்திருக்கிறேன். மறக்காமல் அந்த இருவரையும் சிறப்பித்து அடுத்த பாகம் வெளியிடுன்கள்.

ஓவியன்
28-09-2007, 05:08 AM
சரி ஏப்ரலுக்கு அடுத்து ஜூன் மாதத்திற்கு முந்தைய மாதம் என்ன வென்று தெரியுமா?, சரியா சொன்னால் 10 இபணம் தருகிறேன்.

வைகாசி மாதமங்கோ.....!!!

ஹா,ஹா,ஹா!!!!

இது எப்படி இருக்குங்கோ.....!!!

:icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout: :icon_rollout:

lolluvathiyar
29-09-2007, 03:53 PM
நம் வரலாற்றுக்கல்வியை படித்ததுபோல் ஒரு பிரம்மை...
.


நாளை முதல் லொள்ளுபேராசன் என்றும் அழைக்க நான் ஆவணம் செய்கிறேன்

அருமையாக இருக்கிறது .

மிக்க நன்றி நன்பர்களே


புத்த பிட்சுக்கள்தானே இருப்பார்கள்..நீங்கள் பீச்சுக்களை எங்கே பார்த்தீர்கள்

எழுத்து பிழைகளுக்கு நாம் மிக பிரபலமாச்சே சிவா ஜி.


ஜீவிகளின் படையும் திரள் கிறது என்பது..
னம்ம மனோஜ் அவர்களின் பின்னூட்டத்தில் இருந்து தெரிகிறது


அ ந்த படையை எதிர்கொள்ளாமலே, இலங்கைக்கு வழி மாரி போய் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் பார்த்தீர்களா.


கல்கியின் பொன்னியின் செல்வன் போல அருமையாக இருக்கிறது.

ஆம சிவசேவகரே, இந்த கதைக்கு பொன்னியன் செல்வனும் கடல்புறாவும் உதவின.


அதிகமா வரலாற்று நாவல்கல் படித்ததினால் வந்த கோலாரோ


சரியா சொன்னீங்க மோகன்


எனக்குச் சின்ன பாத்திரம் கொடுத்து விட்டீங்களே.

அட அப்படி ஒரு வருத்தமா, மன்னித்து விடுங்கள், அடுத்த முரை உங்களுக்காவே ஒரு தனி பாகம் எழுதிரலாம் (ஓவியருக்கு எழுதின மாதிரியா?)

நேரம் கிடைத்தவுடன் விரைவில் அடுத்த பாகங்கள் தொடரும்

சூரியன்
29-09-2007, 03:58 PM
வாத்தியாரே உங்களின் இந்த படைப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள்..விரைந்து அடுத்த பகுதியை வெளியிடுங்கள்.*

சிவா.ஜி
01-10-2007, 09:34 AM
மாவீரன் லொள்ளுவாத்தியாரின் சரித்திரத்தை இதுவரை படித்துவந்த நன்பர்கள்,அவரையும் மற்ற மந்திரி பிரதானிகளையும் பார்க்க விருப்பமிருக்குமே.
இதோ கண்டுகளியுங்கள்.
http://i194.photobucket.com/albums/z250/sivag/king.1.jpg

போருக்கு ஓலை வருகிறது
http://i194.photobucket.com/albums/z250/sivag/king.3.jpg
முக்கியமான புறமுதுகிடுதல்...

http://i194.photobucket.com/albums/z250/sivag/king.2.jpg

அமரன்
01-10-2007, 09:42 AM
ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹா...புறமுதுகு சூப்பருங்கோவ்...

பூமகள்
01-10-2007, 09:52 AM
ஆஹா... வாத்தியாரின் வரலாற்றை படத்தோடு கொடுத்து அசத்திவிட்டீர்கள் சிவா அண்ணா.:icon_b:
வாத்தியார் ஒரு பக்கம் அசத்தராருனா.. நீங்க இன்னொரு பக்கம்..:D:icon_rollout:
ம்..... புறமுதுகுகிட்டு ஓடற சீனு சூப்பரோ சூப்பருங்க...!!:rolleyes:

அக்னி
01-10-2007, 11:10 AM
மாமன்னரே...
அரண்மனை, மற்றும் அரசியல், ராஜ, ராஜ்ஜிய நடவடிக்கைகளை,
சிவா.ஜி அவர்கள் வெளியுலகத்திற்குப் படம்பிடித்துக் காட்டியதில்,
லஞ்சம் விளையாடியுள்ளதாகவும், பொருளாசையில் சிவா.ஜி இப்படங்களை வெளியிட்டுள்ளதாகவும்,
நாட்டில் பரவலாக செய்தி பரவுகின்றதே...

சிவா.ஜி
01-10-2007, 01:08 PM
பொருளாசையில் சிவா.ஜி இப்படங்களை வெளியிட்டுள்ளதாகவும்,
நாட்டில் பரவலாக செய்தி பரவுகின்றதே...

அபாண்டமாக என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை நான் வன்மையாக மறுக்கிறேன்.மன்னரவர்கள் ஆணைக்கிணங்கத்தான்...அரண்மனை ஆல்பம் வெளியிடப்படுகிறது என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இதோ மன்னரால் உளவுபார்க்க அனுப்பப்பட்ட மலரின் தோற்றம்.
http://i194.photobucket.com/albums/z250/sivag/king5.jpg

மேலும் மற்றொரு போரில் மன்னர் புறமுதுகிட்டு ஓடி வந்து படுத்துக்கிடக்கும் கண்கொள்ளா காட்சி.அருகில் அரசவை கவிஞர் ஆதவா ஆறுதல் பா பாட நின்றிருக்கிறார்.
http://i194.photobucket.com/albums/z250/sivag/king6.jpg

சிவா.ஜி
01-10-2007, 01:46 PM
அரன்மனை ஆல்பத்தின் தொடர்ச்சி......

http://i194.photobucket.com/albums/z250/sivag/king7.jpg

http://i194.photobucket.com/albums/z250/sivag/king8.jpg

http://i194.photobucket.com/albums/z250/sivag/king9.jpg

அமரன்
01-10-2007, 03:56 PM
இதோ மன்னரால் உளவுபார்க்க அனுப்பப்பட்ட மலரின் தோற்றம்.


ஏங்க சிவா!
மாறு வேடத்தில் மலரா?
மலரே இந்த வேடமா?
நாராயணா...நாராயணா..

ஜெயாஸ்தா
01-10-2007, 05:05 PM
லொள்ளுவாத்தியரை புகைப்படத்தொகுப்பில் பார்த்ததும் என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. என்ன வாத்தி.... அடுத்த பாகத்தை எங்கே?

lolluvathiyar
02-10-2007, 07:38 AM
படம் போட்டு நமது லொள்ளபுரி வீரத்தை வெளி உலகுக்கு காட்டிய தளபதி சிவா ஜி க்கு மனமார்ந்த நன்றி.

மேலும் பாராட்டிய அனைவருக்கும் நன்றி. விரைவில் அடுத்த பாகங்களை தருகிறேன்.
அது சரி மனோஜ் படை இப்ப எதுவரை வந்திருக்கிறது என்று யாராவது அறிந்து சொல்லுங்கள். அதற்க்கு தகுந்தார் போல கதை மாத்தனும்

சிவா.ஜி
02-10-2007, 07:42 AM
அது சரி மனோஜ் படை இப்ப எதுவரை வந்திருக்கிறது என்று யாராவது அறிந்து சொல்லுங்கள். அதற்க்கு தகுந்தார் போல கதை மாத்தனும்

மனோஜ் படைக்கு 'படை' வந்து சொறிந்துகொண்டிருக்கவே நேரம் இல்லையாம். சொறி தீர்ந்து பரி ஏறுவது எப்போது...? நீங்கள் தொடருங்கள் அரசே..

அமரன்
02-10-2007, 07:55 AM
மனோஜ் படைக்கு 'படை' வந்து சொறிந்துகொண்டிருக்கவே நேரம் இல்லையாம். சொறி தீர்ந்து பரி ஏறுவது எப்போது...? நீங்கள் தொடருங்கள் அரசே..
ஹுக்கும்...மன்னர் பட்டை அடிச்சுட்டு சாய்ஞ்சுக்க போறாரு.

பூமகள்
02-10-2007, 08:05 AM
ஹுக்கும்...மன்னர் பட்டை அடிச்சுட்டு சாய்ஞ்சுக்க போறாரு.
அமர் அண்ணாவுக்கு என்னாச்சுன்னு தெரியலையே.. நல்லாதானே இருந்தாரு......??!! :sprachlos020: :confused: இப்பவெல்லாம் பட்டை... பீர் வைன்னு தான் நினைப்பா இருக்காரே....:icon_ush: அறிஞர் பிரம்போட வந்தா தான் ஸ்டடி ஆவார்னு தோனுது... :p :cool: :icon_b: :icon_rollout:
(ஹீ ஹீ... வந்த வேலை முடிஞ்சிருச்சி நாராயணா...!!):lachen001:

சிவா.ஜி
02-10-2007, 08:08 AM
அமர் அண்ணாவுக்கு என்னாச்சுன்னு தெரியலையே.. நல்லாதானே இருந்தாரு......??!! :sprachlos020: :confused: இப்பவெல்லாம் பட்டை... பீர் வைன்னு தான் நினைப்பா இருக்காரே....:icon_ush: அறிஞர் பிரம்போட வந்தா தான் ஸ்டடி ஆவார்னு தோனுது... :p :cool: :icon_b: :icon_rollout:
(ஹீ ஹீ... வந்த வேலை முடிஞ்சிருச்சி நாராயணா...!!):lachen001:

அவரைச் சொல்லி தப்பில்லைம்மா....ஃப்ரான்ஸ்ல குளிர் ரொம்ப அதிகமா இருக்காம்...அவர்தான் பாவம் என்ன செய்வார்....ஜமாய்ங்க அமரன்...:icon_b:

அமரன்
02-10-2007, 08:10 AM
ஆஹா...அர்ரம்பிச்சிட்டாய்ங்கப்பா.. ஆரம்பிச்சிட்டாய்ங்க..

மலர்
03-10-2007, 03:24 PM
சிவா அண்ணா
எனக்கு இதுல உள்ள படம் எதுவுமே தெரியலை.....

சிவா.ஜி
04-10-2007, 04:47 AM
சிவா அண்ணா
எனக்கு இதுல உள்ள படம் எதுவுமே தெரியலை.....

ஆஹா...அப்ப தற்காலிகமா நான் தப்பிச்சேன்...ஆனாலும் மலர் உன்னோட அழகான படத்தை நீ பார்க்க வேண்டாமா...எனவே மீண்டும் சரிசெய்திருக்கிறேன்.ஹி...ஹி...ஹி..

மலர்
04-10-2007, 08:16 AM
ஆஹா...அப்ப தற்காலிகமா நான் தப்பிச்சேன்...ஆனாலும் மலர் உன்னோட அழகான படத்தை நீ பார்க்க வேண்டாமா...எனவே மீண்டும் சரிசெய்திருக்கிறேன்.ஹி...ஹி...ஹி..

சிவா அண்ணா..
நான் இவ்வளவு அழகா நான் இருக்கேனா...
பாத்து நானே பயந்துட்டேன்....

எனக்கு ஒரு சின்ன சந்தேகம்...
அதுக்கு பின்னால ரெண்டு பேரு நிக்கிறாங்களே அது யாரு....

சிவா.ஜி
04-10-2007, 08:18 AM
சிவா அண்ணா..
நான் இவ்வளவு அழகா நான் இருக்கேனா...
பாத்து நானே பயந்துட்டேன்....

எனக்கு ஒரு சின்ன சந்தேகம்...
அதுக்கு பின்னால ரெண்டு பேரு நிக்கிறாங்களே அது யாரு....

அதுவா..உளவுபார்க்க உன்னையும் அனுப்பிட்டு உனக்கு பாதுகாப்பா ஓவியனையும்,விராடனையும் மன்னர் அனுப்பியிருக்கார்...ஹி..ஹி..

மலர்
04-10-2007, 08:23 AM
அதுவா..உளவுபார்க்க உன்னையும் அனுப்பிட்டு உனக்கு பாதுகாப்பா ஓவியனையும்,விராடனையும் மன்னர் அனுப்பியிருக்கார்...ஹி..ஹி..

விராடன் அண்ணா பார்த்தால் நீங்கள் அடிவாங்க போவது நிச்சயம்..

அமரன்
04-10-2007, 08:51 AM
ஓ இதுதான் நீ கொண்டு வந்த உளவுச்செய்தியா,

சிவா.ஜி
04-10-2007, 08:52 AM
விராடன் அண்ணா பார்த்தால் நீங்கள் அடிவாங்க போவது நிச்சயம்..

அவர்தான் கொஞ்சநாளா மன்றம் பக்கமே வர்றதில்லையே...அதான் அந்த கேப்புல கொஞ்சம் வெள்ளாடுறோமில்ல...

மலர்
04-10-2007, 09:09 AM
ஓ இதுதான் நீ கொண்டு வந்த உளவுச்செய்தியா,

இல்லையே...
இன்னும் நிறைய கலக்கலான செய்திகள் கொண்டு வந்தேன்...
அமரன் அண்ணா தரவா......?

அமரன்
04-10-2007, 09:14 AM
இன்னும் நிறைய கலக்கலான செய்திகள் கொண்டு வந்தேன்...
அமரன் அண்ணா தரவா......?
ஹி...ஹி...இப்படி சொன்னதற்கு அப்புறம் வேண்டாம்னு சொல்வேனா?:D

மலர்
04-10-2007, 02:11 PM
ஹி...ஹி...இப்படி சொன்னதற்கு அப்புறம் வேண்டாம்னு சொல்வேனா?:D

அப்புறம் டார்ச் அடித்து டார்ச்சர் பண்ணிட்டேன்னு திட்டக்கூடாது....சரியா

நாங்க எல்லாம் ரொம்ப விவரமாக்கும்

lolluvathiyar
05-10-2007, 04:05 PM
மாவிரன் லொள்ளுவாத்தியார் பாகம் 13


முன்கதை விளக்கம்

பாகம் 12 புறமுதுகு கண்ட காதை (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=274960&postcount=121)

அன்பு தமிழ் மன்ற நெஞ்சங்களே, இதுவரை 12 பாகங்கள் வெளியிட்ட இந்த மாவீரன் லொள்ளுவாத்தியார் திரிக்கு வரவேற்பு அளித்து வந்த அனைத்து நன்பர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த பாகம் இந்த கதையின் தொடர்ச்சி அல்ல, இது முன் கதை சுருக்கம் போல ஆனால் கதை முன்கதை விளக்கம். அதென்ன முன்கதை விளக்கம், அதாவது இந்த கதையை எப்படி கொண்டு செல்ல நினைத்து எப்படி திசை மாறி போய் கொண்டிருகிறது என்பதன் விளக்கம்.

மாவீரன் லொள்ளுவாத்தியார் கதை நான் திட்டமிட்டு எழுதியது ஆரம்பித்தது அல்ல. அரசியல் விளையாட்டு திரியில் ரவுசு பன்னி கொண்டிருக்கும் போது தீடிரென தோன்று இப்படி ஒரு கதை எழுத ஆரம்பித்தேன். உன்மையை சொல்கிறேன், நான் கதையை ஆரம்பித்தேனே தவிர அதை இப்படி தான் கொண்டு செல்ல வேண்டும் என்று என்னவில்லை. ஆனால் கதையில் மன்ற தோழர்களை வைத்து தான் எழுத வேண்டும் என்று திட்டம் போட்டது உன்மைதான்.

இந்த மாவீரன் லொள்ளுவாத்தியார் கதையை படிப்பவர்கள் அதன் பின்னூட்டங்களுடன் படித்து வந்தால் முழுமையாக அனுபவிக்கலாம். காரனம் என்னவென்றால் இந்த லொள்ளுவாத்தியாரை விட அவருடை பரிவாரங்கள் செய்யும் பின்னூட்ட லூட்டி தான் படு தமாசா இருக்கும்.

என்னுடையை என்னமே அரன்மனைகாட்சிகளை வைத்து தான் எழுத திட்டம் போட்டிருந்தேன். எடுத்த எடுப்பில் ஆதவாவை மட்டும் வம்பிழுத்தேன் அதில முதல் வம்பு நம்ம மனோஜ் தான் கிளப்பினாரு, தொடர்ந்து ஓவியனும் லிஸ்ட்ல சேர்ந்துகிட்டாரு.


நான் உம் நாட்டை பிடிக்காமால் விடுவதில்லை
தருங்காபுரி வீரன் மனோஜ்



அட்சய முனைக் காவலன்........
மாமமன்னன் ஓவியன் உம் சபை மந்திரியா..........?


சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தாங்கனு ஒரு பழமொழி சொல்லுவாங்க, அதுபோல தான் இந்த மனோஜும் ஓவியரும் வழி வந்து கதாபாத்திரம் ஆகிட்டாங்க. அன்பு நன்பர் ஆசோவின் ஆசையாய் ஓவியரை இழுக்க தூண்டினார். ஓவ்யருக்கு நான் ஏதோ அமைச்சர் பதவி மட்டும் தர, நம்ம சிவாஜி யோ அவருக்கு சிறந்த கதாபாத்திரம் தந்து விட்டாரு. இதுல வேடிக்கை என்னன்னா தொடர்ந்து வந்த பின்னூட்டங்கல்ல தெரிந்து விட்டது நமது மன்ற நன்பர்கள் ஓவியரை காய்ச்சுவதில் அதிக குசியாக இருகிறார்கள், ஓவியர் மேல அவ்வளவு பாசம் மக்களுக்கு. ஓவியரை மறந்திருந்த என்னை ஆசோ விடாம தூண்டி தூண்டி பக்கத்து இலைக்கு பாயசம் கேட்ட மாதிரி இருந்ததால் ஆசோவையும் இழுத்து போட்ட முடிவு பன்னீட்டேன். ஆனா எந்த பாத்திரம் தரலாம் என்று முடிவு பன்னல.


இந்த வாத்தியார் என்ன பன்னுகிறார், இன்னும் இந்த ஓவியனை கவனிக்க மாட்டேன்கிறாரே. ஓவியன் அவரையும் கிள்ளி விட்டாரோ. அப்படியானால் சபை கலையட்டும்.


இந்த கதையின் போர் களத்துக்கு போக திருப்பு முனையாக இருந்தவர் மலர் தான் புறமுதுகு காட்சியை தரவில்லை என்று திட்டோ திட்டி விட்டார்.



கொலை நோக்கு பார்வை கொண்ட மன்னவே தாங்கள் தங்களின் வீர தீர வரலாற்றை எதிரிகளிடம் புற முதுகு காட்டி ஓடிவந்த காலத்தால் அழியாத மண்சுவற்றில் எழுதி வருகிறீர் என்பதை இந்த நாடே அறியும்...

நீதி தவறா மன்னவரே ஐந்தாவது பாகத்தை ஆசையோடு காண ஓடோடி வந்த எங்களை காண விடாது ஏமாற்றி வீட்டீரே.....

விரைவில் மாவீரன் லொள்ளுவாத்தியார் − ஐந்தாவது பாகத்தை இனிப்புசுவை,காரச்சுவை.... இல்லை இல்லை அது என்ன.....ங்..ங்.. நியாபகம் வந்துட்டு... சொற்சுவை பொருட்சுவை குறையாது தரும்படி மிரட்டி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

இந்த வார்த்தை தான் என்னை புறமுதுகு பாகம் ஏதாவது எழுத வேண்டும் என்று ஆசையை தூண்டியது என்றே சொல்லலாம் விளைவு கடாரம் புறபுட முடிவு செய்து விட்டோம்.

எங்கோ போர மாரியாத்தா என் மேல வந்து விழுது என்று ஒரு பழமொழி போல போர போது நிரைய பேர இழுத்து போட்டதோட அல்லாம, எங்கோ சிவனே என்று சுத்திகிட்டு இருந்த லியோமோகன், உதயசூரியன், சிவசேவகரை இழுத்து போட்டேன். ராமர் தனது வானர படையோட இலங்கை கிளம்பின மாதிரி நானும் என் படைகளோட கடாரம் கிளம்பினேன்.

முதலில் கடாரம் தான் போக கதையை முடிவு செய்தேன். அதற்க்கான போர் திட்டம் போட்டு மேப் கூட பதித்து விட்டேன். இந்த கதையின் அடுத்த திறுப்புமுனை மனோஜ் அவர்கள் போர் தயார் செய்து எழுதிய பதிப்பு

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=272018&postcount=98

இதை பார்த்தவுடன், சரி கொஞ்ச மனோஜ் க்கு மண்டை காய வக்காலாம் அப்புரம் அமரனை ரவுசு பன்னனும்னு கதை உல்டாப்பா திருப்பி இலங்கைக்கு கொண்டு போய் அங்கு அன்புரசிகனையும் சேர்த்து விட்டேன். எப்படியோ கதையை கஸ்டபட்டு நகுத்தி புறமுதுகு காட்சிக்கு அருகில் கொண்டு சென்று விட்டேன். இந்த இடத்தில் புறமுதுகு காட்சியை எப்படி அமைப்பது என்று யோசனை செய்ய வேண்டிய சூல் நிலைக்கு தளள பட்டு விட்டேன். காரனம் அந்த புறமுதுகு காட்சியை கான பலர் துடிதுடி கொண்டிருகிறார்கள் என்று தெரிந்தது.




போரில் கால் பிடரியில் அடிக்காமல் முகத்தில் அடித்து புறமுதுகிட்டு ஓடிய சக்ரவர்த்தி லொள்ளுவாத்தியார்.... வாழ்க.. வாழ்க..!!!



வாத்தியாரே, புறமுதுகு என்று சொல்லிவிட்டு, உங்கள் வீர பிரதாபங்களையே சொல்லி கொண்டு இருக்கிறீர்களே, கடைசியில் ஒரு வரியில் அந்த வீர செயலை (புறமுதுகை) சொல்லி விடாதீர்கள்.


அடடா மன்னர் ஆபத்தில் சிக்கிக்கொண்டாரே....இப்போதுபார்த்து அவருடைய குதிரைக்கு காய்ச்சலாமே...வேகமாக ஓட முடியாமல் அகப்பட்டுக்கொண்டால்....?

பார்த்தீர்களா எந்த அளவுக்கு மக்கள் ஆர்வமாக இருகிறார்கள் என்று இப்படி இருப்பவர்களுக்கு சும்மா ஏமாற்றலாமா, அதனால் மீண்டும் இலங்கை மேம் மற்றும் இந்திய மேம் போட்டு எழுத வேண்டிய சூல் நிலை.

இந்த இடத்தில் ஒன்றை குறிபிட்டு கொள்ள விரும்புகிறேன். இந்த கதைகளில் நான் குறிபிட்ட வழிதடங்கள், மேம்கள் தமிழ் பெயரை தான் குறிப்பிட்டுள்ளேன். எனக்கு ஓரளவுக்கு தெரிந்ததை வைத்து தான் செய்துள்ளேன். இது எந்த அளவுக்கு சரி என்று சொல்ல முடியாது. இலங்கை பற்றி ஓரளவுக்கு எனக்கு சுத்தமாக தெரயாது அதன் மேப்பை போட்டு நோண்டி நோண்டி தலையை பிச்சு எழுதிவிட்டேன். (கல்கியின் பொன்னிய செல்வன் நாவல் உதவியது)



பி.கு:
சிம்மபுரி - சிகிரியா
இங்கே இந்தியாவின் அஜந்தா குகை ஓவியங்களை ஒத்த ஓவியங்கள் இம்மலைக்குகைகளில் இன்றளவும் காணப்படுகின்றன.
ஒரு சிங்கம் படுத்திருக்கும் தோற்றத்தில் இந்த மலை காணப்படும்.

[/B][/COLOR][/URL]

இதில் விக்கிபீடியாவை கூட நோண்டி நோண்டி இந்த சிம்மபுரியை பற்றி ஆவலாக படித்தேன். இதன் மூலம் நான் இலங்கை பற்றி நிரைய தெரிந்து கொண்டேன். இலங்கைக்கு இந்தியாவுக்கும் வரும் கடல் வழியை கூட மேப்பில் ஆராய்து தான் எழுதி இருகிறேன். இந்த கதையில் வரும் இலங்கை மன்னன் கஜபாகு 2000 வருடங்களுக்கு முன் உன்மையில் இலங்கையை ஆண்ட ஒரு புகழ் மிக்க மன்னன்னின் பெயர்தான். சேர நாட்டுடன் நட்பு வைத்தவன்.

ஆனால் அந்த புறமுதுகு பாகத்தை பதித்த பிறகு நம் மக்கள் முகங்களில் தவழ்ந்த சந்தோசம் அவர்கள் அவதார் மூலமாகூட என் கன்னுக்கு தெரிந்தது. அடடா என்ன உற்சாகம் எத்தனை சந்தோசம் நம் மக்களிடையே. மாவீரன் லொள்ளுவாத்தியார் மீது எத்தனை பாசம். என்னை இந்த பாசம் மிகவும் நெகிழவைத்து விட்டது. நம்ம சிவாஜி ஒரு பட் மேல போய் படம் போட்டு கலக்கீட்டு இர்க்காரு.

ஒரே வருத்தம் சுகந்த பிரீத்தனை இழுக்க போர் தளபதி பாத்திரம் கொடுத்து விட்டு இறுதியில் அவரை பயன் படுத்த மறந்து விட்டேன். மன்னிக்க வேண்டும்.

இந்த மாவீரன் லொள்ளுவாத்தியாரின் மகிமைகளை இந்த திரிக்கு வெளியிலும் கிறுக்கு கேள்வி பகுதியிலும் கொண்டு சென்று கிறுக்கு பட்டத்தையும் வாங்கிவிட்டார் நம்ம பூமகள்.
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=271107&postcount=799
நாங்களும் செய்வமல்ல என்று தன் பங்குக்கு தாமரையும் இந்த மாவீரன் லொள்ளுவாத்தியாரை வைத்து கிறுக்கு பட்டம் பெற்று விட்டார்
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=271583&postcount=841

அத்துடன் நில்லாமல் இன்னும் கிறுக்கு பதிள்களில் மாவீரன் லொள்ளுவாத்தியாரின் கிறுக்கு புகழ் ஓயாமல் பொழிந்த வன்னம் இருகின்றது.

பூமகளின் கிறுக்கு பதில்
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=281407&postcount=917

லொள்ளுவாத்தியாரின் கிறுக்கு பதில்
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=281407&postcount=917

அதுக்கு இன்னும் தாமரையிடமும் பூமகளிடமும் இருந்து ராயல்டி தொகை வந்து சேரவில்லை. அந்த கிறுக்கு கேள்வி திரியிலும் இந்த மாவிரன் லொள்ளுவாத்தியாரை ஒரு 30 தடவையாது இழுத்திருப்பார்கள் போல தெரிகிறது.

இந்த கதையில் டாப் விமர்சகர் நம்ம மலர்தான். அவரும் சிவாஜியும் ஆசொ ஓவியரும் தான் கதை இழுத்து கொண்டு வந்தவங்க. ஓவியரும் மலரும் இந்த திரியில் அடிகடி மோதிகராங்க. அந்த மோதலில் காயம் பட்ட நம்ம ஓவியர் தன் அவதாரை கூட மாத்தி விட்டார் என்றா பார்த்துகொள்ளுங்கள்.

மலர் 44
ஓவியன் 30

நான் இதுவரை படைத்த பல படைப்புகள் வருங்காலத்தில் தமிழ் மன்றத்தை தவிர வேறு எங்கு வேண்டுமானாலும் பதிக்கலாம். ஆனால் இந்த மாவீரன் லொள்ளுவாத்தியார் தமிழ் மன்றத்திக்கு மட்டுமே பொருந்த கூடிய வகையில் எழுதி இருகிறேன்.

இந்த கதைக்கு வந்த வரவேற்பை பார்த்து எனக்கு மிகவும் சந்தோசமாக இருகிறது. குறிப்பாக சிலர் எனக்கு தனிமடல் அனுப்பி இதை தொடர சொன்னதால் நான் மிகவும் சந்தோசமடைந்தேன். மீண்டும் தொடர முடிவு செய்து இருகிறேன்.

மன்றத்தில் இன்னும் விட்டு போன பெருந்ததலைகளையும் அவர்கள் குனாதிசியங்களையும் பற்றி இங்கு குறிப்பிடுங்கள். அவ்வபோது டிப்ஸ் உம் தாருங்கள்.

மீண்டும் உற்சாகபடுத்திய அனைத்து நன்பர்களுக்கு நன்பர்களுக்கு நன்றி

தொடரும்
பாகம் 14 லொள்ளுவாத்தியார் எங்கே (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=283316&postcount=221)

பென்ஸ்
05-10-2007, 04:34 PM
வாத்தியாரே...

மன்றத்தில் உங்கள் அற்புதமான படைப்பை பாராட்டி என் இரண்டாவது பரிசு முடியை உங்களுக்கு அளிக்கிறேன்....
இதே 1000 பொற்காசுகள் (இ-பணம்)...குறைவுதான்.... ஆனால் நான் எல்லோருக்கும் கொடுப்பதில்லையே

முதல் இ-பணம் அறிஞருக்கு அவரது மன்ற சேவையை பாராட்டி கொடுத்தது...

மலர்
05-10-2007, 04:44 PM
வாத்தியாரு அண்ணா....
இப்போது தான் ஆரம்பித்த மாதிரி இருந்தது அதற்குள் மாவிரன் லொள்ளுவாத்தியார் பாகம் 13 வந்து விட்டது....
உண்மையில் நான் இந்த தொடரை அதிகமாக தேடி படித்திருக்கிறேன்...



முதல் வம்பு நம்ம மனோஜ் தான் கிளப்பினாரு,
முதல் வம்பு மனோஜ் தான் கிளப்பினாரா.....
நன்றி மனோஜ்...


நமது மன்ற நன்பர்கள் ஓவியரை காய்ச்சுவதில் அதிக குசியாக இருகிறார்கள், ஓவியர் மேல அவ்வளவு பாசம் மக்களுக்கு

இது நூற்றுக்கு நூறு உண்மை...
ஏன்னா அவரு ரொம்ப நல்லவரு :traurig001::traurig001::traurig001::traurig001:
எவ்வளவு காய்ச்சினாலும் தாங்குவார் அதுமட்டுமா விடாமல் பதிலும் தருவார்...


அதுக்கு இன்னும் தாமரையிடமும் பூமகளிடமும் இருந்து ராயல்டி தொகை வந்து சேரவில்லை.
மாவீரன் லொள்ளுவாத்தியார் கொடுக்க வேண்டிய ராயல்டியை சீக்கிரம் குடுத்துருங்கோ...
(சும்மா ரெக்கமெண்டு)


ஆனால் இந்த மாவீரன் லொள்ளுவாத்தியார் தமிழ் மன்றத்திக்கு மட்டுமே பொருந்த கூடிய வகையில் எழுதி இருகிறேன்

உண்மைதான் நம் மன்ற சொந்தங்களின் சங்கமம் அல்லவா இது


இதில் விக்கிபீடியாவை கூட நோண்டி நோண்டி இந்த சிம்மபுரியை பற்றி ஆவலாக படித்தேன். இதன் மூலம் நான் இலங்கை பற்றி நிரைய தெரிந்து கொண்டேன். இலங்கைக்கு இந்தியாவுக்கும் வரும் கடல் வழியை கூட மேப்பில் ஆராய்து தான் எழுதி இருகிறேன். இந்த கதையில் வரும் இலங்கை மன்னன் கஜபாகு 2000 வருடங்களுக்கு முன் உன்மையில் இலங்கையை ஆண்ட ஒரு புகழ் மிக்க மன்னன்னின் பெயர்தான். சேர நாட்டுடன் நட்பு வைத்தவன்.

ஓ புறமுதுகு காட்டி ஓடி வந்த வரலாற்றுக்கு பின்னால் இப்படி ஒரு சரித்திரம் இருக்கா.....



மீண்டும் தொடர முடிவு செய்து இருகிறேன்.

நன்றி அண்ணா.....
அடுத்த பாகத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள்....

மலர்
05-10-2007, 04:48 PM
வாத்தியாரே...

மன்றத்தில் உங்கள் அற்புதமான படைப்பை பாராட்டி என் இரண்டாவது பரிசு முடியை உங்களுக்கு அளிக்கிறேன்....
இதே 1000 பொற்காசுகள் (இ-பணம்)...குறைவுதான்.... ஆனால் நான் எல்லோருக்கும் கொடுப்பதில்லையே

முதல் இ-பணம் அறிஞருக்கு அவரது மன்ற சேவையை பாராட்டி கொடுத்தது...

வாருமையா.....வாரும்
உங்களைத்தான் தேடிக்கொண்டு இருந்தேன்.....

இதுவரை ஒருமுறை தான் கொடுத்துள்ளீரா....
நம்பவே முடியலை....

உங்களின் இந்த சேவையை பாராட்டி
கஞ்ச மகா பிரபு பட்டத்தை அளிக்கிறேன்....

பென்ஸ்
05-10-2007, 04:55 PM
வாடியம்மா வா.. என் ராசாத்தி... நன்றியோ நன்றி...
என் அம்மாவும் உன்னைமாதிரி நான் கஞ்சன் என்று சொன்னால் ரொம்ப சந்தோசபடுவேன்...
நாலு காசு சேர்த்து வையின்னு அவங்க டார்ச்சர் தாங்க முடியலை... அதுனால தான் மன்றத்திலையாவது சம்பாதிக்கலாமுன்னு...

ஆதவா
06-10-2007, 06:25 AM
வாருமையா.....வாரும்
உங்களைத்தான் தேடிக்கொண்டு இருந்தேன்.....

இதுவரை ஒருமுறை தான் கொடுத்துள்ளீரா....
நம்பவே முடியலை....

உங்களின் இந்த சேவையை பாராட்டி
கஞ்ச மகா பிரபு பட்டத்தை அளிக்கிறேன்....

அட! விடுங்க மலர்.... அதே அறிஞரும் நானும் சேர்ந்து அவரோட காசை பிடுங்குகிறோம்.. அப்போ உங்க உதவி எப்படியும் தேவைப்படும்.

சிவா.ஜி
06-10-2007, 06:35 AM
வாத்தியாரின் கடுமையான உழைப்பே இந்த திரியின் சிறப்பு.சும்மா ஜாலிக்காக என்றில்லாமல்..நிறைய விவரங்களை சேகரித்து,அதைப் பயண்படுத்தவேண்டிய இடத்தில் வெகு அழகாகப் பயன்படுத்தி,சுவாரசியமாகக் கதையைக் கொண்டுபோகிறார்.உண்மையிலேயே அசத்தலான திரியிது.பென்ஸே..? இ-பணம் கொடுத்துவிட்டாரென்றால்.....கிரேட்தான்.மனமார்ந்த பாராட்டுக்கள் அரசே..!

மலர்
06-10-2007, 08:15 AM
அட! விடுங்க மலர்.... அதே அறிஞரும் நானும் சேர்ந்து அவரோட காசை பிடுங்குகிறோம்.. அப்போ உங்க உதவி எப்படியும் தேவைப்படும்.

இப்படித்தான் அறிஞரின் ஐகாசை பிடுங்கலாம் வாங்க அப்படின்னு கூப்பிட்டு கடைசியில ஒண்ணுமே தரலை...
தலைப்பை மாற்றினது தான் மிச்சம்....

அப்பவே முடுயலை பின்ன
இப்ப மட்டும் எப்படி பிடுங்குறதாம்

lolluvathiyar
09-10-2007, 12:13 PM
மாவிரன் லொள்ளுவாத்தியார் பாகம் 14

பாகம் 13 முன்கதை விளக்கம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=281403&postcount=213)

லொள்ளுவாத்தியார் எங்கே ?

லொள்ளபுரி நாடே அல்லோல்பட்டு கொண்டிருந்தது. தெருவெல்லாம் ஜன கூட்டம். மக்கள் அனைவரும் கவலையாக இருந்தனர். காரனம் போருக்கு சென்ற மாவீரன் லொள்ளுவாத்தியார் இன்னும் நாடு வந்து சேரவில்லை. ஆனால் உடன் சென்ற அனைத்து தளபதிகளும் வந்து விட்டனர்.

மக்கள் கோப ஆவேசம் கொண்டவர்களாக கோட்டையை சூழ்ந்து கொண்டனர்.

"மாவீரன் லொள்ளுவாத்தியார் எங்கே ?"
"மாவீரன் லொள்ளுவாத்தியார் எங்கே ?"

என்று வின்னை முட்டும் குரல்கள் கோட்டை சுவரை தாக்கின.

"மன்னரை ஆபத்தில் சிக்க வைத்துவிட்டு ஓடி வந்த அமைச்சர் ஓவியரை வர சொல்லுங்கள்" என்று கோசமும் வந்தது.

"மன்னருக்கு பாதுகாப்புக்கு சென்ற தளபதி சிவா ஜி எங்கே வர சொல்" என்று எழுப்பிய கோசம் அரன்மனைக்குள் இருக்கும் சிவா ஜி க்கு கிடு கிடு வென நடுக்கத்தை வர வைத்து விட்டது.

மக்களை அரன்மனைக்கு வரவிடாமல் தடுக்க காவலர்கள் அரும்பாடு பட்டனர்.

இந்த காட்சியோடு நாமும் லொள்ளபுரி அரன்மனைக்குள் என்ன நடகிறது என்று பார்க்க செல்வோம்.

உதயசூரியன் : "என்ன மந்திரி ஓவியரே என்ன சொல்கிறீர்கள். மன்னரை இலங்கையில் விட்டு விட்டு நீங்கள் மட்டும் எப்படி வரலாம்"

ஓவியர் : "மன்னர் மாவீரன் லொள்ளுவாத்தியார் பத்திரமான திசையை நோக்கி ஓடியதை பார்த்து தான் நான் இனி பயமில்லை என்று ஓடி வந்து விட்டேன்"

லியோமோகன் : "என்ன சிவா ஜி, நீங்கள் தானே மன்னனுக்கு பாதுகாப்பாக கடைசிவரை இருக்க வேண்டும், எப்படி மன்னரை விட்டு விட்டீர்கள். "

சிவா ஜி :" மன்னர் திரிகோனமலைக்கு ஓடி கலபதி விராடன் கப்பலில் ஏறி கொள்வார் என்று தான் நினைத்து கொண்டேன்"

லியோமோகன் : "விராடரே நீங்கள் மன்னரை எப்பொழுது கடைசியாக பார்த்தீர்கள்"

விராடன் : "முதலில் மன்னர் வருவதற்க்கு முன்னதாகவே நான் கப்பலை கிளப்பு விட்டேன். மன்னர் எந்த கப்பலில் ஏறினார் என்று தெரியாது"

லியோமோகன் : "இனி நாம் எப்படி நம் மக்களுக்கு பதில் சொல்ல போகிறோம். விரைவில் மன்னர் லொள்ளபுரி வந்து சேராவிட்டால் கலவம் ஏற்படும் அபாய வேறு இருகிறது"

உதயசூரியன் : "அந்த கவலை வேண்டியதில்லை, மக்கள் என்றுமே ஆட்டு மந்தைகள் அவர்களை சுலபமாக சமாளித்து விடலாம்"

ஆதவா : "மக்கள் ஆட்டு மந்தைகளாக இருக்கலாம் ஆனால் நாங்கள் அப்படி இருக்க மாட்டோம், எங்களுக்கு மாவீரன் லொள்ளுவாத்தியார் பற்றிய தகவல் வேண்டும். ஓவியர் இலங்கை அரசனுடன் ஏதோ ஒப்பந்த போட்டு தான் மட்டும் ஓடி வந்து விட்டார்"

ஓவியர் : "இது அபாண்டமான பழி, இலங்கை புத்தபகவான் ஆனையாக நான் சொல்கிறேன், நான் மன்னர் லொள்ளுவாத்தியாருக்கு உயிரை கொடுக்க சித்தமாய் இருப்பேன்"

ஆதவா : "பார்த்தீர்களா, ஓவியர் புத்தபிட்சுகளுடன் சேர்ந்து சதி வேலையில் ஈடுபடுகிறார். லொள்ளபுரி அரசாங்கத்தை அபகரித்து திட்டமிடுகிறார், என்று மக்கள் பரவலாக பேசுகிறாரள்"

லியோமோகன் : "ஆதவரே, மத பிரச்சனையை கிளப்புகிறீர்கள். எதற்க்கும் சுகந்தபிரீத்தனை கேட்டு பார்த்துவிடலாம்"

ஆதவா : "சரி, ஆனால் லொள்ளபுரி நாட்டை மாவிரன் லொள்ளுவாத்தியார் வரும் வரை யார் நிர்வகிப்பது என்று முடிவு செய்ய வேண்டும்"

சுட்டி : "இதிலென்ன சந்தேகம், நமது அமைச்சர் ஓவியன் தானே இடைகால மன்னராக இருக்கவேண்டும்"

மலர் : "இதை நான் வன்மையாக கண்டிகிறேன், ஓவியரை பற்றி ஆதவா சந்தேகம் எழுப்பிவிட்டதால், அவர் ஒதுங்கி இருப்பது நல்லது"

ஓவியர் : "சரி அப்படி என்றால் ஆதவா வையே இடைகால மன்னராக்கினால் என்ன"

லியோமோகன் : "வேண்டாம், பொதுவாக மன்னரை கானவில்லை என்றால் பட்டத்து ரானியிடம் தான் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும்"

உதயசூரியன் : "எதற்க்கும் சுகந்தபிரீத்தன் இன்னும் வந்து சேர்ந்தவுடன் முடிவெடுக்கலாம்"

அப்பொழுது வாயிற் காவலன் வந்து, "அமைச்சரே, மக்கள் கட்டுபாட்டை இழக்கிறார்கள், நிலமை நம் கையை மீரி நடந்து கொண்டு இருகிறது, ஏதாவது செய்தாக வேண்டும்"

ஓவியர் : "சரி நான் போய் மக்களிடம் பேசுகிறேன்"

பூமகள் : "ஓவியரே உங்களுக்கு பேச தெரியாது, ஏதாவது உளரி வம்பை வரவளைத்து விடுவீர்கள், இந்த மாதிரி மக்கள் கூட்டத்தை சமாளிக்க தெரிந்தவர் நம் உதயசூரியன் தான் சரி"

உதயசூரியன் பேந்த பேந்த முழித்தார். வேறு வழியில்லாமல் மக்களை சந்திக்க சென்றார். மக்கள் கூட்டத்தை கை அமர்த்தி அமைதிபடுத்தினார். மக்கள் மீண்டும்

"மாவீரன் லொள்ளுவாத்தியார் எங்கே ?"
"மாவீரன் லொள்ளுவாத்தியார் எங்கே ?"
என்று கோசமிட்டனர்.

உதயசூரியன் : "மாவீரன் லொள்ளுவாத்தியார் மீது அளவில்லாத பாசம் வைத்த எம் லொள்ளபுரி மக்களே, உங்கள் பாசம் என்னை நெகிழ வைக்கிறது. மாவீரன் லொள்ளுவாத்தியார் எந்த ஆபத்தும் இல்லை, பத்திரமாக நாடு திரும்புவார்"

மக்கள் விடாமல் கூச்சல் எழுப்பினர். "மாவீரன் லொள்ளுவாத்தியார் எங்கே என்று முதலில் சொல்லுங்கள்"

உதயசூரியன் : "மக்களே, அமைதியாக கேளுங்கள் நமது மன்னர் இலங்கைவிட்டு தப்பி விட்டார் என்று செய்தி வந்திருகிறது. கப்பலை வடதிசையில் செலுத்தினார், அதன் பிறகு தான் எங்கு சென்றார் என்று சரியாக தெரியவில்லை"

மக்களில் ஒருவன் : "தருங்காபுரி மன்னன் மனோஜ் படை வருகிறதாமே, மன்னரை இடையில் பிடித்திருப்பார்களா" என்றான். உடனே மக்கள் கூச்சல் குழப்பமாகி விட்டார்கள். "மன்னருக்கு ஆபத்து ஆபத்து " என்று கோசமிட்டார்கள்.

உதயசூரியன் : "என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே, லொள்ளபுரி நாட்டு தங்கங்களே, தமிழுக்கு உயிர் கொடுக்க வந்த காலைகளே கேளுங்கள் உங்கள் அன்பு இருக்கும் வரை நமது மன்னர் மாவீரன் லொள்ளுவாத்தியாருக்கு ஒரு தீங்கும் நேராது. மாவீரன் லொள்ளுவாத்தியார் எந்த நாட்டிடமும் சிக்க மாட்டார் என்று உங்கள் அனைவருக்கு தெரிந்த விசயம் தான். உலக மன்னர்களிலேயே பகுதறிவு மன்னன் நமது மாவீரன் லொள்ளுவாத்தியார்தான், போர் செய்தால் தானே சிக்குவது, அதற்க்கு முன்னமே தப்பி வரும் வரலாறு படைத்த நம் மன்னன் ஏதோ காரனமாக தான் இன்னும் வராமல் இருகிறார்"

உதயசூரியன் பேச்சை கேட்ட மக்கள் ஓரளவுக்கு அமைதியானார்கள். ஆனால் யாரோ ஒருவன் "என்ன காரனமாக இருக்கும்" என்று கேட்டு விட்டான்.

உதயசூரியன் எப்படிடா இவுங்கள சமாளிக்கரது என்று குழப்பி கொண்டிருந்த போது சுகந்த பிரீத்தன் வந்து சேர்ந்தார் அவர் மக்களை பார்த்து பேசினார்.

சுகந்தபிரீத்தன் : "மக்களே, உளவு படை மூலம் எனக்கு செய்தி வந்திருகிறது, நமது மன்னர் வடதேசத்தில் எங்கோ இருகிறாராம். சிந்து நதி க்கு அருகில் இருந்தாராம்"

உதயசூரியன் பல்லை நற நறவென கடித்தார், சுகந்தபிரீத்தனை பார்த்து மெதுவான குரலில் "உன்னை யாருப்ப வந்து பேச சொன்னது, மக்கள மாங்கா மடையனாக எனக்கு மட்டுமே தெரியும், நீ குழப்பி விட்டாயா" என்று நொந்து கொண்டார்.

மக்கள் ஓல குரல் இட ஆரம்பித்தனர் அதில் ஒருவன் : "சிந்து நதியா, அதுக்கும் இலங்கைக்கு என்ன சம்மந்தம். மன்னரை யாரோ சதி செய்து ஏமாற்றி அங்கு கொண்டு போய் விட்டீருப்பார்கள்"

மக்கள் இன்னொருவன் : "வேற யாரா இருக்கும் எல்லாம் இந்த ஆஸ்தான புலவர் ஆதவா வேலையா தான் இருக்கும். பூமகளை அரன்மனை கவியாக்கினதிலிருந்து அவருக்கு மன்னருக்கும் தான் எட்டாம் பொருத்தமாமே"

இன்னொருவன் : "ஓவியரும் இதுக்கு உடந்தையா இருக்கலாம்" என்றான்.

வேறு ஒருவன் : "முதலில் கோட்டைகுள் சென்று அந்த இருவரையும் பிடித்து..............." என்று ஆரம்பித்தான்.

சுகந்த பிரீத்தன் என்ன செய்வதே என்று தெரியாமல் மக்களை பார்த்து கை அமர்த்தி

சுகந்தபிரீத்தன் : "மக்களே தேவை இல்லாத வதந்தியை நம்பாதீர்கள். நமது அமைச்சர் ஓவியர் மன்னருக்கு உயிரை கொடுக்க தயாரா இருப்பவர். மன்னர் வேறு காரனங்களுக்காக சிந்து நதி பக்கம் போயிருகிறார்"

மக்கள் என்ன காரனம் என்ன காரனம் என்று கேட்க தொடங்கினார்கள்.

சுகந்தபிரீத்தன் : "மக்களே கேளுங்கள், மேற்க்கே நீண்ட தூரத்திலிருக்கும் கிரேக்க நாட்டிலிருந்து அலெக்ஸாண்டர் என்ற மன்னன் ஒருவன் 40000 படைவீரர்களுடன் நமடு நாட்டின் மீது படை எடுத்து வந்து கொண்டிருகிருப்பதாக செய்தி வந்திருகிறது"

மக்கள் " ஆ என்ன அலெக்ஸாண்டரிடம் நம் மன்னர் மாவீரன் லொள்ளுவாத்தியார் சிக்கி கொண்டாரா"

சுகந்தபிரீத்தன் : "அந்த அலெக்ஸான்டர் தனக்கு மாவீரன் என்று பெயர் சூட்டி கொண்டானாம். இது நமது மாவீரன் லொள்ளுவாத்தியாருக்கு இழுக்கு அல்லவா. அதனால் அவனை வீழ்த்த சிந்து நதி பக்கம் போயிருப்பார் என்று நாங்கள் கருதுகிறோம்"

மக்கள் ஓரளவுக்கு திருப்தி அடைந்து விட்டார்கள். இதுக்கு மேல சுகந்தபிரீத்தன பேச விட்டா ஏதாவது உளரி குழப்பி விடுவார் என்றூ உதயசூரியன் முடிவு செய்தார். மீண்டும் மக்கள் ஏதாவது பிரச்சனை பன்ன கூடாது என்று தான் பேச ஆரம்பித்தார்.

உதயசூரியன் : "மாவிரன் லொள்ளுவாத்தியார் விரைவில் வந்து விட்வார். மன்னரி விரைவில் நாடு திறும்ப சிறப்பு பிராத்தனை ஏற்பாடு செய்யபட்டிருகிறது, நீங்களும் கலந்து கொள்ளுங்கள், பிராத்தனை முடிந்தவுடன் அனைத்து மக்களுக்கு ருசித்து சாப்பிட இலவச வன்ன அயிரை மீன்கள் ஏற்பாடு செய்திருகிறோம். கூடவே தயிர்சாப்பாடும் இலவசம். சாப்பிட்டு முடிந்தவுடன் நீங்கள் இன்று கண்டு களிக்க தெருகூத்தும் ஏற்பாடு செய்ய பட்டிருகிறது"

உதயசூரியன் அறிவை பார்த்து சுகந்தபிரீத்தன் ஆடி போய் விட்டார், மக்கள் அனைவரும்

மாவீரன்லொள்ளுவாத்தியார் வாழ்க
மாவீரன்லொள்ளுவாத்தியார் வாழ்க

என்று கோசமிட்டவாரெ கலைந்து சென்றனர். நிம்மதி பெருமூச்சு விட்டவாரு உதயசூரியன் உள்ளே சென்றார்.

லியோமோகன் : "வாழ்த்துகள் உதயசூரியனே, எப்படி மக்களை சமாளிக்க விட்டீர்கள்."

உதயசூரியன் : "அது சுலபம் மோகன், எதுவேண்டுமாலும் சொல்லி, கடைசியில் ஒரு நேர சாப்பாடு போட்டால் போதும் மக்கள் எதையும் மறந்து விடுவார்கள்"

சிவா ஜி : "சரி மன்னரை பற்றி தகவல் அறிய நாம் ஒற்றர் படை தலைவி மலரை அனுப்பலாமா"

அவ்வாரே முடிவு செய்து விட்டு சபையை கலைத்தனர்

தொடரும்
பாகம் 15 கடற்கரை (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=287012&postcount=247)

சிவா.ஜி
09-10-2007, 12:36 PM
தற்கால இலவச அரசியலை வைத்து உதயசூரியனை..ஆவேசப்பேச்சு பேசவைத்து...மக்களை எப்போதும்போல் இப்போதும் மந்தைகளாக்கி...அசத்தல் வாத்தியாரே....தொடருங்க தொடருங்க....

பூமகள்
09-10-2007, 12:54 PM
அசத்தல் பாகம்... வாத்தியார் அண்ணா.
பூமகளை காணோமே ரொம்ப நாளா.... என்று பார்த்தால் மறுபடியும் இடம்பெறச் செய்துவிட்டீர்கள்.
உங்களின் உழைப்பு எழுத்துக்களில் தெரிகிறது. எத்தனை அழகாய் வரலாற்றை தேடித்தேடி படித்து அழகாய்க் கோர்த்து தந்துள்ளீர்கள்.
பாராட்ட வார்த்தைகள் இல்லை.
மிகுந்த நன்றிகள் வாத்தியார் அண்ணா.

யவனிகா
09-10-2007, 01:04 PM
எப்பிடிங்கண்ணா இப்பிடி?காலைல எந்திருச்சு பல்லு கூட வெளக்காம உக்காந்து யோசிக்கிறீன்கன்னு அண்ணி சொன்னாங்க..அதுக்காக இப்பிடியா...கலக்கறீங்க போங்க...

சிவா.ஜி
09-10-2007, 01:10 PM
எப்பிடிங்கண்ணா இப்பிடி?காலைல எந்திருச்சு பல்லு கூட வெளக்காம உக்காந்து யோசிக்கிறீன்கன்னு அண்ணி சொன்னாங்க..அதுக்காக இப்பிடியா...கலக்கறீங்க போங்க...

வாத்தியாரய்யா....அடுத்த கேரெக்டர் சிக்கிடிச்சி...அரசவையில....ஆரோக்கிய உணவு கட்டுப்பாட்டு அதிகாரியாக இந்த தங்கையை நியமித்து விடுங்கள்....

பூமகள்
09-10-2007, 02:59 PM
வாத்தியாரய்யா....அடுத்த கேரெக்டர் சிக்கிடிச்சி...அரசவையில....ஆரோக்கிய உணவு கட்டுப்பாட்டு அதிகாரியாக இந்த தங்கையை நியமித்து விடுங்கள்....
அப்போ... லொள்ளபுரி அரசவையில் ருதிமிக்க சமையல் வகைகள் கிடைக்கும் நிச்சயம்...!! :icon_rollout:
உணவுத்துறைக்குத் தான் எங்க யவனி அக்காவை நியமிக்க உள்ளாரே லொள்ளபுரி மன்னர்..:cool: :icon_b:
மன்னா.. அந்த மாம்பழ பச்சடியையும், மாங்கா தொக்கையும் மறந்துவிடாதீர்கள் மன்னா...!! :rolleyes: ;) :p

ஓவியன்
10-10-2007, 02:53 AM
என்ன கொடுமை சரவணன் இது....!!!!

(வேறு வார்த்தை வருகுதில்லை....!! :D:D:D)

மலர்
10-10-2007, 08:27 PM
என்ன கொடுமை சரவணன் இது....!!!!

(வேறு வார்த்தை வருகுதில்லை....!! :D:D:D)

ஓவியரே சரவணன் என்றால் யார்.............????

மலர்
10-10-2007, 08:42 PM
வாத்தியாரெ உங்கள் மீது மக்களுக்கு தான் எவ்வளவு பாசம்
புல்லரிக்கிறது......


உதயசூரியன் :அனைத்து மக்களுக்கு ருசித்து சாப்பிட இலவச வன்ன அயிரை மீன்கள் ஏற்பாடு செய்திருகிறோம். கூடவே தயிர்சாப்பாடும் இலவசம். சாப்பிட்டு முடிந்தவுடன் நீங்கள் இன்று கண்டு களிக்க தெருகூத்தும் ஏற்பாடு செய்ய பட்டிருகிறது"

எப்பவுமே... பிரியாணி தானே கொடுப்பார்கள்...
இதுல மட்டும் என்ன வித்தியாசமாய் வண்ண அயிரை மீன்...????

இதுல ஓவியனின் சதி இருக்கும் என்று தோணுது...
மக்களே உங்களுக்கு......

பூமகள்
11-10-2007, 07:12 PM
மாவீரர் லொள்ளுவாத்தியாரின் காதல் கீர்த்தனை தத்துரூபமாக படம் பிடிக்கப்பட்டது.
இதோ உங்களுக்காய்....!!

மாவீரர் லொள்ளுவாத்தியாரின் காதல் கீர்த்தனை...!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=284399#post284399)

அக்னி
11-10-2007, 07:13 PM
மாவீரர் லொள்ளுவாத்தியாரின் காதல் கீர்த்தனை தத்துரூபமாக படம் பிடிக்கப்பட்டது.
இதோ உங்களுக்காய்....!!

மாவீரர் லொள்ளுவாத்தியாரின் காதல் கீர்த்தனை...!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=284399#post284399)

மன்னர் இல்லாத வேளையில், அரண்மனையிலுள்ள ஆவணக்காப்பகத்தில்,
மன்னர் தொடர்பான காதல் பாடலை திருடி,
வெளியிட்ட கவிஞை பூமகளை,
மன்னர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்...

மலர்
11-10-2007, 07:18 PM
அன்பு லொள்ளபுரி மக்களே......

நம் வாத்தியாரின் காதல் கீர்த்தனையை நமது ஆஸ்தான கவியரசி பூமகள் வெளியிட்டது தொடர்பாக அக்னியின் கேள்விக்கு போரில் புறமுதுகு காட்டி ஓடி வந்து கொண்டுடிருக்கிற மன்னர் வந்ததும் சபை கூடி கலந்தாலோசிக்கப்படும்......

அதுவரை அமைதி காக்கவும்

பூமகள்
13-10-2007, 02:56 PM
மலர்....
மன்னர் லொள்ளுவாத்தியார் வந்துவிட்டார்... அவரின் காதல் கீர்த்தனையை காட்டிவிட்டாயா??

lolluvathiyar
13-10-2007, 04:02 PM
மலர்....
மன்னர் லொள்ளுவாத்தியார் வந்துவிட்டார்... அவரின் காதல் கீர்த்தனையை காட்டிவிட்டாயா??

பார்த்துவிட்டேன், அருமையாக இருந்தது. சிவாஜி படம் போட்டார் நீங்கள் விடியோ படமே போட்டு விட்டீர்கள். எப்படியோ அனைவரும் லொள்ளபுரி வரலாற்றை எட்டு திக்கும் பரப்புகிறீர்கள்.
அரன்மனைக்கு வ ந்தவுடன் வச்சுகிறேன்.
(3 நாள் மன்றம் திறக்க முடியாததால் வர முடியாமல் மாவீரன் லொள்ளுவாத்திர் சிக்கி கொண்டார். விரைவில் வந்து அரசபையை கூட்டுவார்

பூமகள்
13-10-2007, 04:09 PM
மிகுந்த நன்றிகள் வாத்தியார் அண்ணா.
இவற்றை எல்லாம் மனதில் வைத்து ஆஸ்தான கவி பதவியைப் பறித்து விடாதீர்கள் மன்னரே....!!

யவனிகா
13-10-2007, 06:30 PM
வாத்தியாரய்யா....அடுத்த கேரெக்டர் சிக்கிடிச்சி...அரசவையில....ஆரோக்கிய உணவு கட்டுப்பாட்டு அதிகாரியாக இந்த தங்கையை நியமித்து விடுங்கள்....

மன்னாதி மன்னா...எங்கள் மனக் கவர் லொள்ளு மன்னா...சபையில உங்களுக்குப் பின்னால நின்னு கவரி வீசச்சொன்னாக் கூட வீசறேன்...உணவுத் துறையில மட்டும் என்னைப் போடாதீங்க மன்னா...அப்புறம் ஏகப்பட்ட ஓசி கிராக்கிகளை சமாளிக்க வேண்டி வரும்...

மனோஜ்
14-10-2007, 04:35 PM
அசோ அரன் மனை

அசோ: என்ன மனோஜ் அவர்களே லொள்ளு இன்னும் நாடு வந்து சோர்லையாமே

மனோஜ் : இல்லை அசோ அந்த லொள்லரை சாதாரனமாக எடைபொடவேண்டாம் எங்காவது படையை திரட்ட சதி வேலை செய்திருப்பார் எதற்கும் நம் படையை அதிகபடுத்தி கொள்வது நல்லது

அசோ: இப்பொழுதே பொருக்கு கிளம்புவோமா மனோஜ்

மனோஜ் : வேண்டாம் அசோ சற்று பொருங்கள் லெல்லர் நாட்டை அடையட்டும கவணித்து கொள்வோம்

அசோ : நமது கப்பல் படைதளபதி சாராகுமார் லெல்லர் இன்னும் 3 நாளில் நாட்டை அடைந்து விடுவார் என்று செய்தி அனுப்பியுள்ளார்

மனோஜ் : அப்படியா கவணமாக செயல் படுவோம் அசோ

அசோ: கண்டிப்பாக மனோஜ்

அக்னி
15-10-2007, 10:21 AM
http://www.youtube.com/watch?v=_nqLVob72u4

அக்னி
15-10-2007, 10:24 AM
அரண்மனையில் ஒருமுறை இடம்பெற்ற சதியில்...
http://www.youtube.com/watch?v=Bu4HWYWFluI

பின்னர், மன்னர் அந்த சதியை முறியடித்து,
சதியில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பளித்து,
அவர்களை இன்றளவும் தனது அமைச்சரவையில் கௌரவ பதவிகளில் அமர்த்தியுள்ளார் என்பது மன்னரின் மகா சிறந்த குணத்தின் அடையாளம்...

பூமகள்
15-10-2007, 01:30 PM
மாமன்னரின் இளம் வயது காதல் சாகச காட்சிகள் அருமை அக்னியாரே...!!
கூடவே இருந்து அவருக்கே தெரியாமல் படம் பிடித்து இப்போது வெளியிட்டமைக்கு மிகுந்த நன்றிகள்..!!

அக்னி
15-10-2007, 01:45 PM
கூடவே இருந்து அவருக்கே தெரியாமல் படம் பிடித்து இப்போது வெளியிட்டமைக்கு மிகுந்த நன்றிகள்..!!
அது மலர் தந்த இறுவெட்டுக்கள்... உங்களது நன்றிகள் அவரைச் சேரட்டும்...

அக்னியை வயசானவனாக காட்ட திட்டமிட்ட சதி நடக்கிறது... அக்னி உசார்...

பூமகள்
15-10-2007, 01:45 PM
மாமன்னரின் காதல் கீர்த்தனை - 2 ஆவது போட்டாச்சி...!!
அனைவரும் கண்டு மகிழுங்கள்...!!
அவரது ராணி ஒரு சமயம் மாமன்னரிடம் ஊடல் கொண்டு பிரிந்து சென்ற போது மாமன்னர் பாடிய பாடல்...!!
லொள்ளபுரி மக்களுக்காய் பிரத்தியேகமாக ரகசிய ஒற்றர்களால் எடுக்கப்பட்டது...!!


லொள்ளு மன்னரின் காதல் கீர்த்தனை - 2 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=284397&postcount=1)

பார்த்துவிட்டீர்களா??? இன்றே பாருங்கள்................!!! :D:D:D:D

அக்னி
15-10-2007, 01:47 PM
லொள்ளபுரி மக்களுக்காய் பிரத்தியேகமாக ரகசிய ஒற்றர்களால் எடுக்கப்பட்டது...!!

அப்போ மலருடன் பூமகளும் கூட்டா..?
மன்னர் வரட்டும். பார்த்துக் கொள்வார்....

சிவா.ஜி
15-10-2007, 01:48 PM
ரொம்ப சோகமா இருக்கேன் பூமகள்.நான் இப்போது இணையத்தொடர்பு கொள்ளுமிடத்தில் பாடலைக் கேட்க முடியவில்லை.ஒரு பாடாவதி நிலையமாக இருக்கிறது.

lolluvathiyar
15-10-2007, 01:58 PM
அடடா அக்னியும் லொள்ளுவாத்தியாரின் கதைகளை படம் போட்டு காட்டராரே. நான் ஏதோ கோடு தான் போட்டேன்.
இங்க என்னடானா எல்லாரும் ரோடு மட்டுமா போடராங்க. அத வச்சு ராமர் பாலமும் கூட கட்டராங்களே

பூமகள்
15-10-2007, 03:25 PM
ரொம்ப சோகமா இருக்கேன் பூமகள்.நான் இப்போது இணையத்தொடர்பு கொள்ளுமிடத்தில் பாடலைக் கேட்க முடியவில்லை.ஒரு பாடாவதி நிலையமாக இருக்கிறது.
கவல படாதீங்க அண்ணா. சீக்கிரம் எல்லாம் சரியாயிடும்னு நம்புறேன். கடவுளிடம் வேண்டிக்கிறேன்.
சீக்கிரம் ஏதாச்சும் வழி கண்டுபிடிச்சி சீக்கிரமா மன்றம் வர பாருங்க சிவா அண்ணா.
நீங்க மன்றத்தில் இல்லாம என்னவோ போல இருக்கு எங்க எல்லாருக்குமே..!!:frown:

lolluvathiyar
17-10-2007, 01:38 PM
மாவிரன் லொள்ளுவாத்தியார் பாகம் 15

கடற்கரை

பாகம் 14 லொள்ளுவாத்தியார் எங்கே (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=283316&postcount=221)

லொள்ளபுரி நாட்டு கடற்கரை, இனிய நடுராத்திரி நேரம். கானம் பாடும் கோட்டான்கள், அழகிய விழிகளுடன் விழித்து பார்க்கும் ஆந்தைகளும் அருகில் இருந்த மரங்களில் விளையாடி கொண்டிருந்தன. கடற் காற்று அலைகடலுடன் போட்டி போட்டு லொள்ளபுரி கறையை தாக்கி கொண்டிருந்தது.

ஆங்காங்கு நரிகளும் தங்கள் இனிய தொண்டையில் ஊளையிட்டு ராகம் பாடின. இந்த இடம் காவிரி பூம்பட்டினம் போல தான் (அது காவிரி கடலில் கலகும் இடம், இது கூவம் கடலில் கலகும் இடம், அது நெல் விளையும் சோழ நாடு, இது நறிபயிரு விளையும் லொள்ளபுரி நாடு.

இந்த ரம்மியமான காட்சிகளுக்கு இடையே நம் அனைவர் கவனத்தையும் ஈர்த்த ஒரு காட்சி. ஆ அது என்ன கடற்கறை பாறை மீது யாரோ ஒருவர் அமர்ந்திருகிறார், பக்கத்தில் தீ எரிந்து கொண்டிருகிறது, அதில் எதையோ வாட்டி கொண்டிருகிறார். ஒருவேலை சுறாமீனாக இருக்கலாம் அருகில் சென்று யார் என்ன என்று விசாரிப்போமா? மெல்ல காட்சியை அந்த மனிதருக்கு அருகில் கொண்டு செல்கிறோம்.

அந்த மனிதர் சற்று களைப்புடன் இருந்தார், உடலில் பல விழும்புன்கள் இருந்தன. இன்னும் சில இடங்களில் கீறல்களில் உதிரம் வளிந்தது. முகங்களில் கூட சிராய்ப்புகள் தெரிந்தன. யார் இவர்? எங்கிருந்து வந்திருகிறார்? ஏன் இந்த லொள்ளபுரி நாட்டின் கடற்கறையில் அமர்ந்திருகிறார்? அதுவும் இந்த நேரத்தில் அருகில் சென்று பார்த்தால்.

ஆ என்ன ஆச்சரியம் இது நம்ம லொள்ளபுரி நாட்டு மன்னன் மாவீரன் லொள்ளுவாத்தியார் அல்லவா. சிம்மபுரி யுத்தத்தில் மாவீரமாக புறமுதுகிட்டு ஓடி வந்து நாட்டிற்குள் செல்லாமால் இங்கு என்ன செய்து கொண்டிருகிறார். தெரியவில்லை. ஆனால் ஏதோ தீவிர யோசனையில் இருந்தார். சிம்பன்சியை போன்ற அழகிய முகம் சற்று வாட்டதுடன் கானபட்டதே. அந்த நேரம் பார்த்து யாரோ ஒருவர் மாவீரர் லொள்ளுவாத்தியாரை நெருங்குகிறாரே. ஒரு வேலை பகைவராக இருக்குமோ. இதோ நெருங்கி விட்டார்.

வந்தவர் : "திருசிற்றம்பலம், தில்லை அம்பலம்"

லொள்ளு : "ஓ சிவசேவகரா வாருங்கள், மத்திய கையிலாயம் செல்ல வட தேசம் சென்றிருந்தீரளே, உங்கள் பயனம் நன்றாக இருந்ததா"

சிவசேவகர் : "அப்பனே, என் பயனம் நன்றாக தான் இருந்தது. ஆனால் உன் பயனம் அதை விட நீண்டு பாரத நாட்டின் அத்தனை புனித ஸ்தலஙள சுற்றி வந்திருப்பீர் போலிருக்கு"

லொள்ளுவாத்தியார் மௌனம் சாதித்தார்.

சிவசேவகர் : "வேந்தனே, ஏன் இந்த வாட்டம், ஆ என்ன உங்கள் உடம்பில் இத்தனை காயங்கள்"

லொள்ளு : "அவை காயங்கள் அல்ல சிவனடியாரே, விழும் புன். வீர புறமுதுகு இட்ட போது ஏற்பட்டவை"

சிவசேவகர் : "புரியும்படி சொல்லலாமே "

லொள்ளு : " எத்தனை அனுபவஙள், எத்தனை புன்கள்
இலங்கையில் ஓடுகையில் கால் தடுக்கி விழுந்து இதோ இந்த முகத்தில் இருக்கும் விழும்புன்
கப்பலில் வருகையில் பாய் மரத்தில் இடித்து இதோ இந்த கையில் இருக்கும் விழும்புன்
வங்காள நாட்டில் கப்பலிருந்து இறங்கும் போது விழுந்ததால் இதோ கழுத்தில் இருக்கும் விழும்புன்
கலிங்க நாட்டில் காகம் கொத்தியதால் இதோ இடுப்பில் இருக்கும் விழும்புன்
மாராட்டிய நாட்டில் நெருஞ்சி முள்ளு குத்தி இதோ பாதத்தில் இருக்கும் விழும்புன்
சிந்து நதிகரையில் அயிரை மீன் கடித்து இதோ நெஞ்சில் இருக்கும் விழும்புன்
சேர நாட்டில் யானை மீது ஏறி அந்த பக்கம் விழுந்ததால் இதோ வயிற்றில் இருக்கும் விழும்புன்
காதலிகிறேன் என்று சொன்னதிற்க்கு, சேர பென் என்னை சட்டுகத்தால் அடித்து இதோ முதுகில் இருக்கும் விழும்புன்
சோழ நாட்டு கரும்புகாட்டில் கரும்பு உறிக்கும் போது இதோ என் வாயில் இருக்கும் விழும்புன்
பாண்டிய நாட்டில் படிகட்டில் இருந்து இறங்கும் போது தடுக்கி இதோ மண்டையில் இருக்கும் விழும்புன்
பல்லவ நாட்டில் தூங்கும் போது தலையில் பால் சொம்பு விழுந்து இதோ மூக்கில் இருக்கும் விழும்புன்

இப்படி போன இடமெல்லாம்
விழும்புன் விழும்புன் விழும்புன் விழும்புன்
எத்தனை விழும்புன்கள்

இதுவரை என்னி பார்த்தா எத்தனை என்று தெரியாத அளவுக்கு அத்தனை வீர தழும்புகள் விழும்புன்கள்

இங்கு நமது நாட்டில் நுழையும் போது எங்சிய பாகமெல்லாம் இந்த கூவம் நதி கொசுகள் கடித்து விழும்புன் ஏற்பட்டு உடல் முழுக்க வீரமாக தடித்து விட்டது சிவசேவகரே"

சிவசேவகர் மாவீரன் லொள்ளுவாத்தியாரின் மூச்சுவிடா வீரதீர சொற்பொழியை கேட்டு மெய் சிலிர்த்து போனார்.

சிவசேவகர் : " மன்னா நீங்கள் பெற்றது விழும்புன் அல்ல விழுந்த புன்"

அப்பொழுதுதான் லொள்ளுவாத்தியார் எதையோ சாப்பிட்டு கொண்டிருந்ததை சிவசேவக கவனித்தார்.

சிவசேவகர் : "மன்னரே என்ன சாப்பிட்டு கொண்டிருகிறீர்கள், ஏதோ ஒரு மாதிரியான வாடை அடிகிறதே"

லொள்ளு : "அடிகளே பசித்தது, கரையில் இரவு மீன் கிடைக்க வில்லை. தவளைதான் கிடைத்தது. ஆகையால் இது தவளை கறி"

சிவசேவகர் : "சிவ சிவ, அரசிக்கு பஞ்சமில்லாத தமிழ் நாட்டில், அதுவும் கடாரம் புறபட்டு ஈழம் வரை சென்ற மாமன்னர் நீங்கள் போயும் போயும் தவளையை சாப்பிடலாமா"

லொள்ளு : "ஏன் சிவசேவகரே, பசித்தாலும் புல்லை தின்னாது என்று பெருமையுடன் அழைக்கபடும் புலி கூட எதுவும் கிடைக்காத காலத்தில் தவளையை பிடித்து சாப்பிடும் என்று தொல்காப்பியத்தில் சொல்லபட்டிருகிறது"

சிவசேவகர் : " மன்னரே, நீங்கள் தொல்காப்பியம் படித்திருகிறீர்களா"

லொள்ளு : " எங்கள் லொள்ளபுரி நாட்டை சேர்ந்தவர்கள் தெரியாத விசயத்தை பற்றி தான் அதிகம் பேசுவோம்"

சிவசேவகர் : "அப்படி என்றால் லொள்காப்பியம் என்று தான் சொல்லவேண்டும்"

அந்த நேரத்தில் இன்னொரு ஆசாமியும் அங்கு வந்து சேர்ந்தார்.
வரும்போதே "நாராயனா , நாராயனா , நாராயனா " என்று கூவி கொண்டு வந்தார்

லொள்ளு : "அடிகளே நீங்கள் யார்"

வந்தவர்: "நான் அடிகள் அல்ல, ஆழ்வார் என்று வேண்டுமானாலும் அழைக்கலாம். என்னை தெரியவில்லையா, படைப்பு கடவுள் பிரம்மனின் மைந்தன், என்னை நாரதர் என்று அழைப்பார்கள், இங்கு நடப்பதை அங்கும் அங்கு நடப்பதை இங்கும் ஒளிபரப்புதே எனது பனி. நாராயனா "

(சாட் சாட் நமது தமிழ் மன்ற நாரதராக தான் இருக்க வேண்டும்)

லொள்ளு : " ஓ அப்படியா நாரதரே, என் வாழ் நாளில் ஒரே இடத்தில் சைவரையும் வைனவரையும் சந்தித்த பாக்கியம் கிடைத்தது"

நாரதர் : " மன்னாதி மன்னா, லொள்ளபுரி நாட்டிற்குள் செல்லாமல் இங்கு ஏன் அமர்ந்திருகிறீர்கள்"

லொள்ளு : "போரில் புறமுதுகிட்டதால் வருத்தத்தில் இருகிறேன் நாரதரே, எப்படி என் மக்கள் முகத்தில் முழிப்பேன், வீரமரனம் செய்தால் பெருமையாக இருக்குமல்லவா"

நாரதர் : "நாராயனா மன்னரே, புறமுதுகிட்டு வருவது இழிசெயல் அல்ல, அது ராஜ தந்திரம் என்று சொல்லலாம். என் கடவுள் படைப்பை போரிட்டு அழிப்பதும் தவறு, வீர மரனம் என்ற பெயரில் அழிவதும் தவறு "

அந்த நேரத்தில் சுகந்தபிரீத்தன் அங்கு வந்து சேர்ந்தார். மன்னரை பார்த்து முகம் மலர்ந்தார். சுகந்தபிரீத்தன் கன்களில் ஆனந்த கன்னீர் கூவத்தை விட வேகமாக பெருக்கெடுத்து ஓடியது. சுகந்தபிரீத்தனை கண்ட மன்னரும் மூச்சு முட்டும் படி கட்டி பிடித்து தன் அன்பை காட்டினார். கன்களாலேயே இருவரும் சில நொடிகளில் நீண்ட நாள் செய்திகளை பரிமாரிவிட்டனர்.

சுகந்தபிரீத்தன் : " மன்னரே லொள்ளபுரி மக்கள் உங்கள கானாமல் தவியாய் தவிகிறார்கள். ஆதவரும் ஓவியரும் ஏதோ சதி செய்து நாட்டை அபகரிக்க நினைப்பதாக வதந்தி பரவுகிறது. நாட்டில் கலகம் வந்துவிடும் போல இருகிறது. நீங்கள் உடனே நாடு திரும்ப வேண்டும்"

லொள்ளுவாத்தியார் ஒரு நெடிய பெருமூச்சுடன், லொள்ளபுரி கோட்டையை ஏறிட்டார்.

சுகந்தபிரீத்தன் : "அதுமட்டுமல்ல மன்னா, கொடுங்கோலன் தருங்காபுரி மன்னன் மனோஜ் நம் நாட்டின் மீது படையெடுப்பதாக செய்தி வந்து கொண்டு இருகிறது. நீங்கள் விரைவில் நாடு திரும்ப வேண்டும்"

தருங்காபுரி மன்னன் மனோஜ் பெயரை கேட்டது, மாவீரன் லொள்ளுவாத்தியாருக்கு மீசை துடித்தன, புஜங்கள் இறுகின.

லொள்ளு : " தளபதி சுகந்தபிரீத்தா உடனே, நமது படைகளை தயார் செய் அந்த மனோஜ் க்கு பாடம் புகட்ட வேண்டும்"

சிவசேவகர் : "மன்னா பொருமை பொருமை, சதா போர் போர் என்று இருக்க வேண்டாம், நாட்டு மக்களை சிறிது ஆன்மீகத்தில் செலுத்தலாமே. அனைவரையும் சிவபக்தராக்கினால் நாடு சுபிட்சம் ஆகுமே"

நாரதர் : " நாராயனா நாராயனா ஏன் சிவபக்தராக்க வேண்டும், பெருமால் பக்தர் ஆக்கலாமே, பெருமாலே சிறந்த கடவுள்"

சிவசேவகர் : "சிவ சிவா வேண்டாம் மன்னரே, பெருமால் என்றுமே சர்சையை தான் செய்வார், பிரம்மாவின் அவதாரமான ராமர் இன்னும் 1000 ஆண்டுகள் களித்தும் தனது நாரதர் வேலையை செய்வாராம். சிவனே சிறந்த கடவுள். கடவுளுக்கே கடவுள். நீங்கள் சைவர் மன்னா"

நாரதர் : " நாராயனா, நாராயனா எங்கள் ராமனை போல் ஈழம் சென்று வந்த நமது மாவீரன் லொள்ளுவாத்தியார் சுத்த வைஸ்னவர்."

சிவசேவகர் : "ஓ அப்படியா இவர் எந்த பாலத்தின் மூலம் ஈழம் சென்றார். ராமர் பாலத்திலா"

சுகந்தபிரீத்தன் : "ஐயா, பக்தர்களே, எங்கள் மன்னரை குழப்ப வேண்டாம், நாடு பிரச்சனையில் இருகிறது. நமது நாட்டில் சில விசமிகள் தக்களுடை அந்தரங்க ஓவியஙளை வெளியிட்டு குழப்பத விளைவிப்பதாகவும் கேள்வி பட்டிருகிறேன். மன்னா முதலில் நீங்கள் கோட்டைகுள் வாருங்கள்."

லொள்ளு : "ஐயா வீர சைவர் சிவசேவகரே, வைஸ்னவ குல பிரம்மபுத்திர நாரதரே, நீங்கள் இருவரும் என்னுடன் லொள்ளபுரி நாட்டிற்க்கு வாருங்கள் அங்கு மந்திரி உதயசூரியனுடன் கலந்து முடிவெடுக்கலாம். நமது லொள்ளபுரி மக்களை சிறந்த கல்வியாளர்கள் ஆக்கலாம்.

லொள்ளாயனம்
லொள்ளுபாரதம்
லொள்ளுபதிகாரம்
லொள்ளுக சிந்தாமனி
கொள்ண்டல கேசி
லொள்காப்பியம்
லொள் மனி கடிகை
லொள்ளு தொகை
லொள்ளுகுறள்

இப்படி அனைத்தும் நமது நாட்டில் படைக்கலாம்"

சுகந்தபிரீத்தன் : "ஆம் மன்னா இந்த மாதிரி இக்காட்டான சூல் நிலையில் நாரதர் நம்முடன் இருந்தால், நம் நாடு எங்கேயோ போய்விடும். பாருங்கள் விடிந்து விட்டது கோட்டைகுள் முதலில் போகலாம்"

"வீராதி வீர
கவலோல வளையா அட்சி புரிந்த
சூராதி சூர
எதிரிகளிடம் புறம்முதுகு கண்ட
வரலாறு கண்ட
பல போர்களில் விழ்ந்து புன் கண்ட
லொள்ளபுரி சக்ரவர்த்தி
மாவீரன்லொள்ளுவாத்தியார்"

தனது தளபதி சுகந்தபிரீத்தனுடன், மற்றும் இரைபக்தர்களான நாரதர் சிவசேவகருடன் லொள்ளபுரி கோட்டைகுள் முற்பகலில் நுழைந்தார்.

தொடரும்
பாகம் 16 மக்கள் கொண்டாட்டம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=290857&postcount=261)

மலர்
18-10-2007, 04:19 AM
வாத்தியாரே வர வர நம்ம லொள்ளபுரி நாட்டின் வரலாறு பெரிதாகி கொண்டே போகிறதே........
சபாஷ் இப்படித்தான் இருக்கணும்.....


சிவசேவகர் : " மன்னரே, நீங்கள் தொல்காப்பியம் படித்திருகிறீர்களா"

லொள்ளு : " எங்கள் லொள்ளபுரி நாட்டை சேர்ந்தவர்கள் தெரியாத விசயத்தை பற்றி தான் அதிகம் பேசுவோம்"

இது சும்மா நச் வாத்தியாரே.........


வந்தவர்: "நான் அடிகள் அல்ல, ஆழ்வார் என்று வேண்டுமானாலும் அழைக்கலாம். என்னை தெரியவில்லையா, படைப்பு கடவுள் பிரம்மனின் மைந்தன், என்னை நாரதர் என்று அழைப்பார்கள், இங்கு நடப்பதை அங்கும் அங்கு நடப்பதை இங்கும் ஒளிபரப்புதே எனது பனி. நாராயனா "
(சாட் சாட் நமது தமிழ் மன்ற நாரதராக தான் இருக்க வேண்டும்)

நாரதர் அண்ணா இந்தப்பக்கம் வரும் போது
அடி நிச்சயம்........


சுகந்தபிரீத்தன் : "ஐயா, பக்தர்களே, எங்கள் மன்னரை குழப்ப வேண்டாம், நாடு பிரச்சனையில் இருகிறது. நமது நாட்டில் சில விசமிகள் தக்களுடை அந்தரங்க ஓவியஙளை வெளியிட்டு குழப்பத விளைவிப்பதாகவும் கேள்வி பட்டிருகிறேன். மன்னா முதலில் நீங்கள் கோட்டைகுள் வாருங்கள்."

மன்னாதி மன்னவே இதுக்கும் எனக்கும் துளி கூட
சம்பந்தம் கிடையாது......
இதுபற்றி விசாரிக்க ஒரு தனிக்குழு நியமியுங்கள்.மன்னா......

மன்னா தங்களுடயை விழும்புண் காயங்கள் ஆறிவிட்டதா.....
காயம் எல்லாம் ஆறி நீங்க ஈயத்தால் அமைந்த உங்கள் சிம்மாசனத்தில் அமர்ந்து அவை நடத்தும் அழகை காணவேண்டும் மன்னா........

அக்னி
18-10-2007, 08:47 AM
மன்னாதி மன்னா...
பூமகளின் திருட்டு VCD வியாபாரத்தில்,
தங்களின் புகழ் பாரெல்லாம் பரவிவருகின்றது என்பதை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்...

அத்தோடு ஜால்ரா அடித்தடித்தே, காலத்தை ஓட்டும்,

காயம் எல்லாம் ஆறி நீங்க ஈயத்தால் அமைந்த உங்கள் சிம்மாசனத்தில் அமர்ந்து அவை நடத்தும் அழகை காணவேண்டும் மன்னா........
இவரையும் மன்னர் கருத்திற் கொள்ள வேண்டும்.
இவர் தாங்கள் இல்லாத வேளையில், பூமகளுடன் கூட்டாக திருட்டு VCD வெளிட்டமைக்கு ஆதாரமாக,
இதோ..,

மலர்....
மன்னர் லொள்ளுவாத்தியார் வந்துவிட்டார்... அவரின் காதல் கீர்த்தனையை காட்டிவிட்டாயா??
பூமகளின் வாக்குமூலம்...

சூப்பர் வாத்தியாரே... சூப்பர்...
அமோகமா இருக்கு... அசத்தலா வளருது...

சிவா.ஜி
18-10-2007, 08:56 AM
தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்க அரசரே...இந்த காட்சிக்குத்தகுந்த படம் போடலாமென்றிருந்தேன்...ஆனால் எனக்கு இப்போது அந்த வசதி மட்டுமல்ல எந்த வசதியுமில்லை.அதனால் பின்னூட்டம் மட்டுமிடுகிறேன்.
வழக்கம்போல இந்த பாகமும் அசத்தலோ அசத்தல்.அதிலும்,சிவசேவகன் அவர்களையும்,நாரதரையும் இணைத்து எழுதியிருந்தது பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் நம்பியும் சிவ சைவரும் மோதிக்கொள்ளும் காட்சியை நினைவுபடுத்தி பரவசமூட்டிவிட்டது.
மிக அருமை வாத்தியார்.பாராட்டுக்கள்.