PDA

View Full Version : நவீன கதாகாலட்சேபம்...!!



Pages : [1] 2

சிவா.ஜி
27-08-2007, 07:49 AM
கதாகாலட்சேபம்-1

மன்றத்தில் ஒரு நவீன கதாகாலட்சேபம் தொடங்கலாமென்ற எண்ணத்தில் இந்த திரி.சாமா சாஸ்திரிகள் காலட்ச்சேபம் செய்ய விச்சுவும்,கிச்சுவும் ஆமாம் போடுவார்கள்.
கதாபாத்திரங்களைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம்.

சாமா சாஸ்திரிகள்-நிகழ்கால நாட்டு நடப்பை ஊன்றி கவனித்து தன் கருத்துக்களை காலட்ச்சேபத்தில் சொல்வார்.

கிச்சு-சாமா சாஸ்திரிகளின் மருமான்..பேட்டை பையன்களோடு சேர்ந்து வளர்ந்ததால் ஐயர் பாஷை மறந்து சென்னைத்தமிழ் பேசும் அடாவடி மற்றும் குறும்புக்கார இளைஞன்.

விச்சு-இவனும் சாமா சாஸ்திரிகளின் தூரத்து சொந்தம்...கிராமத்திலிருந்து சென்னைக்கு வேலை தேடி வந்தவனை தன்னுடன் சேர்த்துக்கொண்டார் சாமா.

இனி காலட்சேபம் தொடங்கலாம்.முகப்பு பாடலில் ஏதாவது பிழையிருந்தால் தயவுகூர்ந்து யாராவது திருத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.


சாமா: திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......பிரும்மானந்த ஹரே கஜானன தாண்டவனே ஜகனே....

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே.....பெரியவா..சிறியவா...எல்லோருக்கும் நமஸ்காரம்.லோகத்துல என்னன்னமோ நடந்துண்டிருக்கு...அவா இவாளப்பத்தி பேஷறதும்...இவா அவாளப்பத்தி பேஷறதுமா ஒருத்தர் மாத்தி ஒருத்தர் குத்தம் சொல்லிண்டிருக்கா...இப்படி ஷொல்றவாளுக்கெல்லாம் ஒரு விஷயம் புரியமாட்டேங்கறது...இன்னைக்கு இவான்னா நாளைக்கு அவா..அதனால நான் பொதுவா நடக்கற விஷயங்கள சொல்லப்போறேன்...

விச்சு/கிச்சு: ஆமா....சொல்லப்போறோம்...

சாமா: இன்னைக்கி தேதியில நாட்டுல எஸ்-ங்கற எழுத்துல பேர் ஆரம்பிக்கறாவாளுக்கெல்லாம் கிரகாச்சாரம் சரியில்லன்னு தோணறது....

கிச்சு: மாமா உங்க பேரு கூட எஸ்-ல தான ஆரம்பிக்குது....

சாமா: அடே அபிஷ்ட்டு..நேக்கும் பிரச்சனைதாண்டா...ஒன்னையும் என்னோட சேத்துண்டேனே அது ஒண்ணு போறுமே எனக்கு...செத்த சும்மா இரேண்டா..பிரம்மஹத்தி....

விச்சு: ஆமா...

சாமா: சஞ்செய்தத்து ஜெயிலுக்கு போய்ட்டு வந்துட்டார்...

கிச்சு/விச்சு; ஆமா...வந்துட்டார்..திரும்பவும் எப்பவேன்னாலும் போவார்....

சாமா: சல்மான்கானும் ஜெயிலுக்கு போய்ட்டார்...

விச்சு/கிச்சு; ஆமா...போய்ட்டார்...ஆனா எப்பவேன்னாலும் வந்துடுவார்...

சாமா: சச்சின் நெர்வெஸ் நைண்டீல மாட்டிண்டு 99-ல்பொசுக்குன்னு அவுட்டாயிட்டார்...

கிச்சு: ஆனா அம்பயரிங் ராங்குன்னு அல்லா சைடுலருந்தும் கொரல் குடுக்குறாங்கோ...

சாமா: ஐய்யோ நாராசமா இருக்கே, ஏண்டா அம்பி இந்த பாஷைய விடப்படாதா....

கிச்சு: இன்னா பண்ண சொல்ற மாமா..நம்ம தோஸ்த்துங்களாண்டயே இம்மாம் நாளும் சுத்திகினு இருந்ததுல..இத்த வுட முடியிலியே...ஒரு கை கொறயுதுன்னு நீதான புட்ச்சி வலிச்சிகினு வந்துட்ட..இன்னா பண்ண சொல்ற...

சாமா; அடே அடே பாதகா..உன் நாக்குல தர்ப்பையைப் போட்டு பொசுக்க...செத்த சும்மா இருக்கியா...

இப்படியெல்லாம் அனாச்சாரம் நடந்துண்டிருக்கே அப்படி என்ன இந்த எஸ்-ல இருக்குன்னு ஒரு பெரிய நியூமராலஜி எக்ஸ்பர்ட்டுகிட்ட கேட்டாளாம்

எஸ்ஸுக்குள்ள என்ன இருக்கு சொல்லு
அந்த மர்மத்தையும் இங்கெ கொஞ்சம் சொல்லு
ஜெயில்... போகிறார்,கொலை... செய்கிறார்
அது ஏ......னென்று நீ பாத்து சொல்லு....

அப்படீன்னுதானெ அந்த எக்ஸ்பர்ட்ட பாத்து கேட்டாங்க...

கிச்சு/விச்சு: ஆமா....கேட்டாங்க...

சாமா: அதுக்கு அவர்..இப்படிபட்ட பேருள்ளவாளுக்கெல்லாம் கிரகாச்சாரம் சரியில்லை...சனி இந்த எடத்துலருந்து அந்த எடத்துக்கு ஷிஃப்ட்டான டைம் சரியில்ல....அதனால இன்னும் கொஞ்ச நாளைக்கு இவங்கெல்லாம் இப்படி சோதனைய அனுபவிச்சுத்தான் ஆகனும்ன்னு..ஏதோ எழவு கணக்கையெல்லாம் போட்டு சொல்லிட்டார்...அதனால...எஸ்-ல ஆரம்பிக்கற பேருள்ளவாளெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு மான்கறி மேலயெல்லாம் ஆசை படப்படாது....ஏகே-47-ங்கற பேரக்கூட உச்சரிக்கப்படாது...முக்கியமா....வெளையாடவெல்லாம் போகாம சமத்தா அன்ஃபிட்ன்னு டாக்டராண்ட சர்டிஃபிகேட் வாங்கிண்டு தேமேன்னு ஆத்துல உக்காந்துடனும்.

கிச்சு/விச்சு: ஆமா....உக்காந்துடனும்...

சாமா,கிச்சு,விச்சு கோரஸாக

இதுவரைக்கும் நாங்க சொன்ன

கதை கேட்ட உங்களுக்கும்
கதை சொன்ன எங்களுக்கும்
மங்களம்...சுப மங்களம்......

Narathar
27-08-2007, 08:12 AM
அசத்திப்புட்டீங்க சிவா................
உங்கள் கதா காலட்சேபம் தொடரட்டும்
கிச்சு விச்சு பாத்திர படைப்பு உண்மையில் அருமை..............
"S" எழுத்தில் பெயருள்ளவர்கள் வயிற்றில் புளீயை அல்லவா கரைக்கின்றீர்கள் ????

சிவா.ஜி
27-08-2007, 08:22 AM
ஆஹா முதல் பின்னூட்டமே நாரதரிடமிருந்தா....ரொம்ப சந்தோஷம் நாரதரே.

அமரன்
27-08-2007, 08:30 AM
ஹி....ஹி.....ஹி.......எச்சரிக்கையாக இருங்க சிவா.
-அமரன்

சிவா.ஜி
27-08-2007, 08:44 AM
சரிங்கப்பு...இங்க சவூதியில் ஜெயிலுக்கெல்லாம் போனா அவ்வளவுதான்..பாத்து நடந்துகிறோமுங்க...

lolluvathiyar
27-08-2007, 08:50 AM
சூப்பரா இருந்தது சிவா ஜி
நல்ல வேலை என் பெயர் எல் அல்லவா இருந்தது. இல்லினா எஸ் ல ஆரம்பிக்கர சனி எனக்கு எஸ் ஆரம்பிக்கிர ஸிப்ட் ஆகிவிடும்

சிவா.ஜி
27-08-2007, 08:54 AM
நன்றி வாத்தியாரே....ஆனா ஒண்ணு சனி உங்களப் பிடிச்சா அது சனிக்குத்தான் ஆபத்து....அத உண்டு இல்லன்னு பண்ணிடமாட்டீங்க.....!

சிவா.ஜி
28-08-2007, 06:29 AM
கதாகாலட்சேபம்−2

சாமா:திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......பிரும்மானந்த ஹரே கஜானன தாண்டவனே ஜகனே....

ஆதௌ கீர்தனாரம்பத்திலே......பெரியவாளுக்கும்,சிறியவாளுக்கும்....கூடவே ஒட்டிண்டு வந்திருக்கும் குட்டி வால்களுக்கும் வந்தனம்.
பகவான் ஒரு மனுஷன இப்படி சோதிக்கப்படாது...கூடப்பொறந்தவோ..ஆசையா அண்ணனுக்கு ராக்கி கட்டக் கூட முடியாம முழிச்சிண்டு நிக்கறா...

கிச்சு; யாரப்பத்தி சொல்லிக்கினுகீற மாமா...

சாமா: எல்லாம் இந்த சல்மான் பிள்ளையாண்டானப்பத்திதாண்டா அம்பி. பிள்ளையாண்டான் ஜெயிலுக்கு போனாலும் போனான்...பாவம் இன்னிக்கு ரக்ஷாபந்தன்னன்னக்கி அவன் தங்கை ராக்கி கட்ட அனுமதி கிடைக்குமா இல்லயான்னு ஜெயிலுக்கு வெளிய காத்துண்டு நிக்கவேண்டியதாப்போச்சு. இந்த பிள்ளையாண்டானோட அம்மா என்னவோ சொல்லிப்பிட்டாளாம் அதனால அந்த அதிகாரிங்கல்லாம் இவாள அனுமதிக்க முடியாதுன்னு ஒத்தக் கால்ல நிக்கறாளாம்.

விச்சு: ஆமாம் நிக்கறாளாம்...

சாமா:நேத்தைக்கு அப்படித்தான் பாருடா அம்பி நம்ம இந்திய கிரிக்கெட் டீம் பிள்ளையாண்டானுங்கள்லாம் தோத்துட்டு பேந்தப்பேந்த முழிச்சிண்டு நிக்கறா..அதிலயும் நம்ம சச்சின் எவ்ளோ அழகா அந்த பந்த ஆஃப் சைடுக்கு தூக்கி அல்வா கணக்கா கேட்ச் குடுத்து அவுட்டாயிட்டு..சொன்ன வேலைய செஞ்சுட்டேன்னு சந்தோஷமா வெளிய போன காட்சியப்பாத்தா..நேக்கு ஒடம்பெல்லாம் புல்லரிச்சிடுத்து....

கிச்சு; இன்னா மாமா இத்தக்கூட உன்னால புரிஞ்சிக்க முடியலையா...அதெல்லாம் ஒரு செட்டப்பு மாமு..ரிமோட்டக் கையில வெச்சிகினு எவனோ எங்கியோ உக்காந்துகினு ஆடர் குடுத்துகினுகீறான் இந்த பசங்கோ ஆட்றா மாறி ஆடி அவுட் குடுத்துனு கீறாங்கோ.அட்த்த தபா பாரு கெலிப்பானுங்கோ...

சாமா; அடே பாதகா...செத்த சும்மா இருக்கியா..நமக்கு எதுக்குடா பெரிய எடத்து வம்பெல்லாம்....?நம்ப கதைக்கு வருவோம்.

விச்சு: ஆமா..வருவோம்...

சாமா: கேபிள் டிவி கட்டணத்த அரசாங்கமே நிர்ணயிக்கும்னு கலைஞர் சொல்லிட்டார். ஆனா அதுவும் எப்பயும்போல அலங்கார அறிவிப்பா போயிடுமோன்னு நேக்கு தோணறது...ருச்சி கண்ட பூணைங்களாட்டமிருக்கற கேபிள் டிவி ஆப்பரேட்டர்ஸ் அநியாயம் பண்றத நிறுத்த முடியாது....

விச்சு/கிச்சு: ஆமாம் நிறுத்த முடியாது...

சாமா:லோகத்துல எத்தனையோ காரியங்கள் அதுபாட்டுக்கு நடந்துண்டுதான் இருக்கு....அதுலயும் இணையம்ன்னு சொல்லப்படற இண்டெர்னெட்-ல பல நல்ல காரியங்களும்...பலப்பல பலான காரியங்களும் நிதமும் நடந்துண்டே இருக்கறது..அப்படியாகப்பட்ட இந்த நேரத்துல...தமிழ்மன்றம்ன்னு ஒண்ணு சக்கப்போடு போட்டுண்டு இருக்கறது...அதுல ஒரு புள்ளையாண்டான் எல்லா பகுதிகளிலும் கலக்கிண்டு இருக்கான்.அந்த புள்ளையாண்டானுக்கு இன்னிக்கு பொறந்த நாளாம்....அந்த புள்ளயாண்டான் அமரன் ஷேமமா இருக்கனுமுன்னு நான் பகவான சேவிச்சுக்கறேன்....

விச்சு/கிச்சு: ஆமாம் நாங்களும் சேவிச்சுக்கறோம்....

சாமா,கிச்சு,விச்சு கோரஸாக

இதுவரைக்கும் நாங்க சொன்ன

"கதை கேட்ட உங்களுக்கும்
கதை சொன்ன எங்களுக்கும்

lolluvathiyar
28-08-2007, 07:19 AM
அமரனை இழுத்து வம்புபன்னாமல் சும்மா வாழ்த்து மட்டும் கூறி கதை முடித்தற்க்கு கன்டிகிறேன்

சிவா.ஜி
28-08-2007, 08:02 AM
அமரனை இழுத்து வம்புபன்னாமல் சும்மா வாழ்த்து மட்டும் கூறி கதை முடித்தற்க்கு கன்டிகிறேன்

பாவம்...பிறந்தநாளும் அதுவுமாய் வம்பு பண்ண வேண்டாமே என்றுதான் விட்டுவிட்டார் சாமா சாஸ்திரிகள் என்று நினைக்கிறேன்.

ஓவியன்
28-08-2007, 03:05 PM
அடடே சிவா!
ஏங்க உங்க சாமா சாஸ்திரிக்கு எஸ் மேலே அவ்வளவு கடுப்பு........?
(என்னோட வயித்திலே புளி கரைச்சு என்ன லாபமோ.......?)

வெகுவிரைவில் சாமா சாஸ்திரி ஏரியாவுக்கு ஒரு ஆட்டோ படையெடுப்பை......
சவ்ரவ் கங்குலி, சனத் ஜெயசூர்யா, சந்தர்போல், (விளையாட வேற கூடாது எண்டதுக்கு.......), இன்னும் ஒரு முக்கிய பிரமுகர் எல்லோருமாக சேர்ந்து ஒரு ஆட்டோ படையெடுப்பு நடாத்தப் போறாங்களாம் எண்டு பேசிக்குறாங்க.........!!! :food-smiley-008:

சிவா - அசத்தலாயிருக்கு தொடர்ந்து அசத்துங்க........!

ஷீ-நிசி
28-08-2007, 03:22 PM
ரொம்ப நல்லாருக்கு சிவா... கதாகாலட்சேபம்..... தொடருங்க!

மனோஜ்
28-08-2007, 03:51 PM
அடடே சிவா சாஸ்திரி கலக்குகிறார் சூப்பரப்பு
தொடருங்கப்பு........

அக்னி
28-08-2007, 03:59 PM
ஆமா...
யாராவது தமிழில் மொழிபெயர்த்துத் தாருங்களேன்...
எனக்குத் தமிழ் மொழியில் வாசித்தால்தான் விளங்கும்...

சபாஷ்... சிவா.ஜி...
தொடருங்கள்... உங்கள் கச்சேரியை...

சிவா.ஜி
29-08-2007, 04:21 AM
இந்தியாவில் இப்ப இதுதான் ஒரே பேச்சாக இருக்கிறதாம் ஓவியன்.எஸ் எழுத்துக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி சரியில்லை என்று...ஆனால் நமக்கெல்லாம் ஒண்ணும் ஆகாது நாமளே ஒரு சனிதான்....!!!! நான் ஷொல்றது சரிதானே அம்பி..

சிவா.ஜி
29-08-2007, 04:22 AM
ரொம்ப நல்லாருக்கு சிவா... கதாகாலட்சேபம்..... தொடருங்க!

மிக்க நன்றி ஷீ−நிசி.நம்ம சென்னைத்தமிழில் ஏதாவது உதவி வேண்டுமானால் உங்களிடம்தான் கேட்பேன். ஓக்கேவா...?

சிவா.ஜி
29-08-2007, 04:23 AM
அடடே சிவா சாஸ்திரி கலக்குகிறார் சூப்பரப்பு
தொடருங்கப்பு........

நம்மளையே இந்த பிள்ளையாண்டான் சாஸ்திரி ஆக்கிட்டாரே....ஷேமமா இருப்பா...

சிவா.ஜி
29-08-2007, 04:25 AM
ஆமா...
யாராவது தமிழில் மொழிபெயர்த்துத் தாருங்களேன்...
எனக்குத் தமிழ் மொழியில் வாசித்தால்தான் விளங்கும்...

சபாஷ்... சிவா.ஜி...
தொடருங்கள்... உங்கள் கச்சேரியை...

அது சரி இந்த லொள்ளுதான வேணாங்கறது....இந்த தமிழ் சாஸ்திரி தமிழ்..போகப்போக விளங்கிடும்.ஊக்கத்திற்கு நன்றி அக்னி.

Narathar
29-08-2007, 09:33 AM
சிவா.ஜீ சும்மா அதிருதுல்ல?

சிவா.ஜி
29-08-2007, 09:36 AM
சிவா.ஜீ சும்மா அதிருதுல்ல?

நன்றி நாரதரே உங்க பொற்கைகளால பின்னூட்டமிட்டு ஆரம்பிச்சிங்கள்ல..கலக்கிடுவோம்.

ஆதவா
29-08-2007, 09:40 AM
அக்னி மாதிரியேதான் என்க்கும்... ரொம்ப இயல்பா இருக்குங்க... நல்ல காமெடிகள்... நீங்க எல்லா பக்கமும் கலக்குறீங்க.... கிரேட்... 500 பணம் இதற்கு

சிவா.ஜி
29-08-2007, 09:43 AM
மிக்க நன்றி ஆதவா.....இனி அடிக்கடி மன்றம் வா..(ரைமுக்காக* ஒருமையில் விளித்துவிட்டேன் மன்னிக்கவும்)

ஆதவா
29-08-2007, 09:54 AM
மிக்க நன்றி ஆதவா.....இனி அடிக்கடி மன்றம் வா..(ரைமுக்காக* ஒருமையில் விளித்துவிட்டேன் மன்னிக்கவும்)

அடிக்க கடிக்க நிச்சயம் வருகிறேன்...

சிவா.ஜி
29-08-2007, 10:05 AM
அடிக்க கடிக்க நிச்சயம் வருகிறேன்...

ஆஹா அதேதான்...:icon_good:

Narathar
29-08-2007, 10:19 AM
நன்றி நாரதரே உங்க பொற்கைகளால பின்னூட்டமிட்டு ஆரம்பிச்சிங்கள்ல..கலக்கிடுவோம்.
இப்படி சும்ம சொன்னா போதாது................... :icon_nono:
ஈ பணம் தந்து சொல்லனும்................:icon_wink1:
நாராயணா!!!!:engel016:
இப்படியாவது கிடைத்தால்தான் உண்டு:sport-smiley-007:

lolluvathiyar
29-08-2007, 10:34 AM
ஈ பணம் தந்து சொல்லனும்...

இப்படியாவது கிடைத்தால்தான் உண்டு

ஈ பணம் அல்ல இபணம் நாரதரே
உங்களுக்கு இதோ நான் தருகிறேன் நீங்கள் கேட்ட ஈபணம்

ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

சிவா.ஜி
29-08-2007, 10:57 AM
காலட்சேபம்-3

சாமா:திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......பிரும்மானந்த ஹரே கஜானன தாண்டவனே ஜகனே....

ஆதௌ கீர்தனாரம்பத்திலே......சபையில இருக்கறவாளெல்லாம் எங்கள மன்னிச்சுடுங்கோ...வர்றதுக்கு செத்த நாழியாயிடுத்து.பைனான்ஸ் கம்பெனிங்கெல்லாம் கூப்ட்டு கூப்ட்டு லோன் குடுக்கறாளோயில்லியோ...அதான் காரும் பைக்கும் பெருகிப்போய்டுத்து.ட்ராஃபிக்ல மாட்டின்டுட்டோம்.

கிச்சு/விச்சு; ஆமாம் மாட்டின்டுட்டோம்...

சாமா; அடே ப்ரம்மஹத்திகளா இன்னும் கதை சொல்லவெ ஆரம்பிக்கலடா...அதுக்குள்ள ஆமாம் போடறேளே. அதாகப்பட்டது..அந்த யுகம் தொடங்கி இந்த யுகம் வரைக்கும் நம்மள ஆட்சி செய்யறவாளுக்கு தொல்லை குடுக்கறதெல்லாம்..அவா கூட இருக்கறவாளேதான். நம்ம நாட்டுலயும் பாருங்கோ UPA கவர்மெண்டுக்கு லெஃப்ட் பார்ட்டிக்காரா லெஃப்ட்-ரைட்டு குடுக்கறா..இங்க கலைஞருக்கு மருத்துவர் hardtime குடுக்கறார்....ஆனா ரெண்டு எடத்துலயும் PM-ம்,CM-ம் ரொம்ப நன்னாவே சமாளிக்கறா.

கிச்சு: ஆமா தூளா பைட்டு குடுத்துனு கீறாங்கோ...மாமா நேத்து நம்ம தோஸ்த்து ஒரு கில்மா மேட்டரு சொன்னான் பாரு...ரெண்டு நாளைக்கு முன்னால நம்ம PM கொஞ்சம் ஜாஸ்தியாவே இன்னாவோ பேசீட்டாராம்...இத்தப் பாத்த நம்ம சோனியாம்மா அவரக்கூப்ட்டு இன்னா சார் UPA-ன்னா என்னா மீனிங்குன்னு தெரியுமான்னு கேட்டுச்சாம். அதுக்கு சிங்கு டபால்ன்னு கோலி சோடா ஒட்ச்ச கணக்கா...தெரியும் மேடம்..நான் உங்க PA...மீதியெல்லாம் நீங்கன்னு சொன்னதும் அந்தம்மா சிரிச்சிகினே ஒரு புது செட்டு ஜால்ராவை கையில குட்த்து அனுப்பிடிச்சாம்.

சாமா: அடே கடங்காரா நோக்கு எத்தனை முறை சொல்லியிருக்கேன் பெரிய எடத்து சமாச்சாரமெல்லாம் நமக்கு வேணான்னு. அப்ப நாம கதைக்கு வருவோம்.

கிச்சு/விச்சு: ஆமாம் வருவோம்...

சாமா: கலைஞர் யாரு அர*சியல் சாணக்கியரோன்னோ....வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பளிச்சுன்னு சொல்லிப்பிட்டார் அடுத்த தேர்தல்ல எங்களுக்கு எந்த தயவும் வேனாம்..நாங்க தனியாவே நிப்போம்ன்னு.

விச்சு: நின்னாலும் கண்டிப்பா ஜெயிச்சுடுவார்...இப்பவே ஆர்டர் கொடுத்துட்டாளாம் நிறைய VCD கம்பெனிக்கு....ஜெயிச்சா எல்லா ரேஷன் கார்டுக்கும் வாரம் ரெண்டு VCD இலவசமா பாக்கத்தருவோம்ன்னு புதுத்திட்டம் வெச்சிருக்காளாம்.

கிச்சு: அந்த சைட்ல VCD-ன்னா அம்மா சைட்ல DVD தர்றதா ஒரு மேட்டரு ஓடுது நைனா..

சாமா:சபையில இருக்கறவாள்லாம் மன்னிச்சுடுங்கோ...இந்த அபிஷ்டுக்களை நான் பாத்துக்கறேன்...கலைஞர் பேஷறதப்பாத்தா மருத்துவருக்கு கொம்பு சீவி விடறாப்புல இருக்கு..நாளைக்கு அவரென்ன அறிக்கை விடப்போறார்ன்னு நேக்குத் தெரியல..அதை நாம நாளைக்கு கதையில பேசிக்குவோம்.

சாமா,கிச்சு,விச்சு கோரஸாக

இதுவரைக்கும் நாங்க சொன்ன

"கதை கேட்ட உங்களுக்கும்
கதை சொன்ன எங்களுக்கும்
மங்களம்...சுப மங்களம்......"

ஓவியன்
29-08-2007, 11:12 AM
விச்சு: நின்னாலும் கண்டிப்பா ஜெயிச்சுடுவார்...இப்பவே ஆர்டர் கொடுத்துட்டாளாம் நிறைய VCD கம்பெனிக்கு....ஜெயிச்சா எல்லா ரேஷன் கார்டுக்கும் வாரம் ரெண்டு VCD இலவசமா பாக்கத்தருவோம்ன்னு புதுத்திட்டம் வெச்சிருக்காளாம்.

கிச்சு: அந்த சைட்ல VCD-ன்னா அம்மா சைட்ல DVD தர்றதா ஒரு மேட்டரு ஓடுது நைனா...."

ஹா,ஹா!
அசத்தலாகீது நைனா!:sport-smiley-018:

சிவா.ஜி
29-08-2007, 12:31 PM
ஹா,ஹா!
அசத்தலாகீது நைனா!:sport-smiley-018:

டாங்ஸுபா ரொம்ப..

lolluvathiyar
29-08-2007, 01:17 PM
எப்படியோ நல்ல விசிடி யா தந்தா பரவாயில்ல.
சிவாஜி படம் தருவாங்களா
கலக்கறீங்க சிவாஜி

சிவா.ஜி
29-08-2007, 01:24 PM
சிவாஜி பட ரைட்ஸ்−அ கலைஞர் டிவி வாங்கிட்டாங்க....அப்ப கண்டிப்பா கிடைக்கும்..கவலையே படாதீங்க வாத்தியாரே...

மலர்
29-08-2007, 01:51 PM
சிவா..ஜி கலக்கிறீங்க......
நவீன கதாகாலட்சேபம் சும்மா நச்சுன்னு இருக்கு....,,
நல்லா வாய்விட்டு சிரித்தேன்........ஹா ஹா ஹா

சிவா.ஜி
30-08-2007, 06:46 AM
சிவா..ஜி கலக்கிறீங்க......
நவீன கதாகாலட்சேபம் சும்மா நச்சுன்னு இருக்கு....,,
நல்லா வாய்விட்டு சிரித்தேன்........ஹா ஹா ஹா

நல்லது அப்படியே சிரிச்சிக்கிட்டே இருங்க....எப்பவுமே....நன்றி மலர்.

சிவா.ஜி
30-08-2007, 06:48 AM
அக்னி மாதிரியேதான் என்க்கும்... ரொம்ப இயல்பா இருக்குங்க... நல்ல காமெடிகள்... நீங்க எல்லா பக்கமும் கலக்குறீங்க.... கிரேட்... 500 பணம் இதற்கு

எப்பவும்போல நீங்க சொன்னமாதிரி உங்க ஞாபக மறதியா ஆதவா..இன்னும் இபணம் ராலேதண்டி....

ஓவியன்
30-08-2007, 07:29 AM
சும்மா நச்சுன்னு இருக்கு....,,

சும்மா நச்சுனா என்ன மலர்?
விளக்கம் பிளீஸ்......!! :innocent0002:

மலர்
30-08-2007, 07:45 AM
சும்மா நச்சுனா என்ன மலர்?
விளக்கம் பிளீஸ்......!! :innocent0002:

இது கூட தெரியாதா,,,,,
சின்னப்பசங்களுக்கு தெரியாத எல்லாம் இப்படித்தான் கேட்டு படிக்கணும்...
அப்படின்னா ரொம்ப நல்லாயிருக்குன்னு அர்த்தம்.....
(பிரித்து பொருள் மேயாதீர்கள்.... பிளீஸ்)

மனோஜ்
30-08-2007, 07:49 AM
சிவா அருமை யப்பா அருமை

Narathar
30-08-2007, 08:53 AM
ஈ பணம் அல்ல இபணம் நாரதரே
உங்களுக்கு இதோ நான் தருகிறேன் நீங்கள் கேட்ட ஈபணம்

ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ சரி பணம் எங்கே?

Narathar
30-08-2007, 09:01 AM
பைனான்ஸ் கம்பெனிங்கெல்லாம் கூப்ட்டு கூப்ட்டு லோன் குடுக்கறாளோயில்லியோ...அதான் காரும் பைக்கும் பெருகிப்போய்டுத்து.ட்ராஃபிக்ல மாட்டின்டுட்டோம்......."



இ - பணம் கொடுக்கின்றார்களா? கேட்டு சொல்லவும்




ஆனா ரெண்டு எடத்துலயும் PM-ம்,CM-ம் ரொம்ப நன்னாவே சமாளிக்கறா........"

சமாளிப்பி தானே இன்றைய அரசியல் மத்தியிலிருந்து மாநிலம் வரைக்கும்............ நாராயணா!!




அந்த சைட்ல VCD-ன்னா அம்மா சைட்ல DVD தர்றதா ஒரு மேட்டரு ஓடுது நைனா.........."


இதுக்கு நம்ம அரசியலே தேவலை

சிவா.ஜி
30-08-2007, 09:44 AM
ஆமாம் நாரதரே நம்ம அரசியல் ஆயிரம் மடங்கு பரவாயில்லை...எப்படியோ தமிழ்கூறும் நல்லுலகுக்கு நல்ல வி.சி.டி கிடைத்தால் சரி.

சிவா.ஜி
30-08-2007, 09:45 AM
சிவா அருமை யப்பா அருமை

மிக்க நன்றியப்பா நன்றி...

பூமகள்
30-08-2007, 10:50 AM
ரொம்ப அருமை சிவா அண்ணா.. கலக்குறீங்க.. போங்க...
எடுத்த எடுப்பிலேயே... "எஸ்" எழுத்த வைச்சி ( நல்லவேளை என் பெயர் எஸ்−ல் தொடங்கவில்லை......!!:icon_dance: :icon_smokeing:)

எல்லா "எஸ்" எழுத்து ஆட்களையும் கலகலக்க வைத்து விட்டீர்..!!

நல்ல திரி.... தொடருங்கள்...!!

ஆமாம் சாமி போடும் கிச்சு/விச்சு அருமை கதாபாத்திர சித்தரிப்பு..
வாழ்த்துக்கள்..! :)

சிவா.ஜி
30-08-2007, 10:55 AM
காலட்சேபம்-4

சாமா:திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......பிரும்மானந்த ஹரே கஜானன தாண்டவனே ஜகனே....

ஆதௌ கீர்தனாரம்பத்திலே...பெரியவா,சிறியவா,வாண்டுகள்,பெண்டுகள்,வாலிபக் காளைகள் எல்லோருக்கும் வணக்கம்......கிரெடிட் கார்டு பிசாசை தலையில கட்டறதுக்காக,காதுல சதா சர்வகாலமும் வேதம் ஓதற காரிகைகளோட தொல்லையில்லாம,நீ வேணுண்டா செல்லம்ன்னு எழுத்துக்களே அழிஞ்சி போயிடற அளவுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிண்டிருக்கற பாய் ஃபிரண்டுங்க தொல்லையில்லாம,குடுத்த கடனை திருப்பிக்கேட்டு நச்சரிக்காம இருக்க,ஏண்டி என் கண்ணாடியை எங்க வெச்சேன்னு ஆத்துலருந்து ஆம்படையான் ஹை பிரஷர்ல அலர்றது கேக்காம இருக்க.....செத்த எல்லாரும் உங்க செல்போன அணச்சிடறேளா....நான் இப்ப சொல்லப்போறது நம்ம சூப்பர் ஸ்டாரப்பத்தி...

கிச்சு: தூள் மாமே...

சாமா: (கிச்சுவை முறைத்துக்கொண்டே..) சிவாஜி களேபரத்துக்கு அப்றமா இப்ப அடுத்த படத்தோட டிஸ்கஷன் ஆரம்பிச்சுட்டார் ரஜினி. படம் பேரு கூட சக்ரவர்த்தியின்னு சொல்றா. மெகா டைரக்டருக்கு அப்றமா இப்ப இவரோட சேரப்போறது மகா டைரக்டர் மணிரத்னமாம்.கதையெல்லாம் கூட ரெடி பண்ணிப்பிட்டாளாம். இதுல ஒரு ஹைலைட்டு என்னன்னா நம்ம சூப்பர் ஆக்டர் கமலும் சேர்ந்து நடிக்கறாராம். ரசிகருங்களுக்கெல்லாம் இது ஒரு பெரிய கொண்டாட்டமா இருக்கும்ன்னு சொல்றா.

விச்சு:ஆமா....

சாமா: இந்த கட்-அவுட்டவிட அந்த கட்-அவுட் ஒயரம் கூடுதல்ன்னு அவாளெல்லாம் அடிச்சிக்காம இருந்தா போறும்.

கிச்சு: அதெல்லாம் இல்ல மாமா சூப்பர் இஸ்டார் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணா,அத்த எட்த்து ஏலைங்களுக்கு டிஸ்ப்யூட் பண்னிடுவாங்கோ நம்ம கமல் ரசிகருங்கோ...அபிஷேகமும் ஆச்சு பால் தானமும் ஆச்சு இது எப்டி கீது..?

சாமா; ஆனா ரஜினிய நெனைச்சாத்தான் கஷ்டமா இருக்கு...

விச்சு: ஏன் மாமா..?

சாமா: சிவாஜியில ரொம்ப கஷ்டப்பட்டு கிராஃபிக்ஸெல்லாம் பண்ணி அவர வெள்ளையாக்கினாங்க...மணிரத்னம் படத்துல வெள்ளையா இருக்கறவாளே கறுப்பாத்தானே தெரிவா....அதுவுமில்லாம விவேக் இந்த படத்துல நடிக்க முடியாதே..

கிச்சு: ஏன் மாமு அவருக்கும் மணி சாருக்கும் லடாயா?

சாமா: இல்லடா மண்டு...பக்கம் பக்கமா வசனம் பேஷற விவேக்..இவர் படத்துல ஒத்த வார்த்தையில பேச முடியுமாடா..?

விச்சு: ஆமா..பேசமுடியுமாடா....மன்னிச்சுக்கோங்கோ மாமா..முடியுமா....

சாமா:அப்றமா ஒரு மேட்டர் காத்துவாக்குல காதுல விழுந்தது...கமல் இந்த படத்துல ரஜினியாவே வேஷம் போட்டாலும் போடலாம்ன்னு...

கிச்சு: வடிவேலு கீறாரா மாமு...

சாமா; கீறாரா தெரியல.ச்சீ...இந்த பயலோட சேர்ந்தா நேக்கும் இந்த பாழாப்போன பாஷை தொத்திக்கறது.... அதெல்லாம் இன்னும் முடிவாகலையாம்.க்ஹீம்...க்ஹீம்...டே கிச்சு கொஞ்சம் தூத்தம்(தண்ணீர்) குடுறா...தொண்டை கர கரங்கறது...

(கிச்சு கொடுத்த அக்வாஃபினா பாட்டில அப்படியே வாயில கவுத்துக்கிட்டார்..ரெண்டு மூனு மடக்கு உள்ளே போனதும்....நெருப்பை விழுங்கியதுபோல அதிர்ந்து விட்டார்..)

சாமா: (மெல்லிய குரலில்) அடே பாதகா என்ன எழவு தண்ணிடா இது தொண்டையெல்லாம் எரியறதே...

கிச்சு; ஐய்யையோ மாமா கதை முடிஞ்சி வூட்டுக்கு போனதும் அடிக்கலான்னு நம்ம முனீம்மாகிட்ட வாங்கி வெச்சிருந்த சரக்க குட்த்துட்டனா...இப்ப இன்னா பன்றது....

சாமா; அடப்பாவி சண்டாளா..என்னை சாச்சுப்பிட்டானே.....(என்று அலறிக்கொண்டே சாய விச்சுவும் கிச்சுவும் அவரை தூக்கிக்கொண்டு அவசரமாக அங்கிருந்து ஓடினார்கள்.அதனால் மங்களம் இல்லை)

மலர்
30-08-2007, 02:11 PM
ஆதௌ கீர்தனாரம்பத்திலே...பெரியவா,சிறியவா,வாண்டுகள்,பெண் டுகள்,வாலிபக் காளைகள் எல்லோருக்கும் வணக்கம்......கிரெடிட் கார்டு பிசாசை தலையில கட்டறதுக்காக,காதுல சதா சர்வகாலமும் வேதம் ஓதற காரிகைகளோட தொல்லையில்லாம,நீ வேணுண்டா செல்லம்ன்னு எழுத்துக்களே அழிஞ்சி போயிடற அளவுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிண்டிருக்கற பாய் ஃபிரண்டுங்க தொல்லையில்லாம,குடுத்த கடனை திருப்பிக்கேட்டு நச்சரிக்காம இருக்க,ஏண்டி என் கண்ணாடியை எங்க வெச்சேன்னு ஆத்துலருந்து ஆம்படையான் ஹை பிரஷர்ல அலர்றது கேக்காம இருக்க.....செத்த எல்லாரும் உங்க செல்போன அணச்சிடறேளா....

ஆரம்பம் அசத்தல்.......
சிவா அண்ணா இப்போ சாமாக்கு எப்படியிருக்கு....
சாமா நலமா...

pgk53
30-08-2007, 03:31 PM
ஆஹா...அருமையான திரியைத் தொடங்கியுள்ளீர்கள் நண்பரே.
அற்புதமாகப் போகின்றது.
வாழ்த்துக்கள்.

ஓவியன்
30-08-2007, 03:35 PM
ஆஹா...அருமையான திரியைத் தொடங்கியுள்ளீர்கள் நண்பரே.
அற்புதமாகப் போகின்றது.
வாழ்த்துக்கள்.

ஆகா அண்ணா!
முன்னர் போல நீங்கள் இந்தப் பகுதியில் (சிரிப்புக்கள்) ஒரு கலக்குக் கலக்கலாமே?

ஆவலுடன்
ஓவியன்!.

மனோஜ்
30-08-2007, 03:48 PM
சிவா சாமாவ இப்படி சாச்சிபுட்டிங்களே

lolluvathiyar
31-08-2007, 08:06 AM
சூப்பர் சிவா ஜி

சிவா சாமாவ இப்படி சாச்சிபுட்டிங்களே

இப்பதான் அதன் (மினியம்மா சரக்கு )அருமை பெருமை அவருக்கு தெரிந்திருக்கும்.

mathura
31-08-2007, 09:36 AM
இது மாதிரி ஒரு அழகான கதா காலக்ஷேபம் கேட்க எனது காதுகள் ஏங்கி கொண்டிருந்தன. அருமை அருமை தொடரட்டும் உங்கள் பணி
கதை கேட்க நாங்கள் காத்திருக்கிறோம்

Narathar
31-08-2007, 10:02 AM
மணிரத்னம் படத்தில் ரஜினி கருப்பாய் தெரிவார் என்று சொன்ன உங்களை விவேக் வீர வசனம் பேசி கண்டிக்காமல் இருந்தாச்சரி........

தொடருங்கள்

சிவா.ஜி
01-09-2007, 05:01 AM
ஆஹா...அருமையான திரியைத் தொடங்கியுள்ளீர்கள் நண்பரே.
அற்புதமாகப் போகின்றது.
வாழ்த்துக்கள்.

ஆஹா...ஒரு சீனியரின் பாராட்டு..ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது...ஓவியன் சொன்னதைப்போல நீங்களும் சேர்ந்து கலக்க வாங்களேன்..

இதயம்
01-09-2007, 10:29 AM
நவீன கதாகாலட்சேபம் என்ற பெயரில் சிவா செய்து வரும் சந்தோஷ ரகளையை தொடர்ந்து இரசித்து வருகிறேன். கதாகாலட்சேபத்தின் வீச்சு என்பது மிக, மிக அபரிதமானது. அதை பார்வையாளர்களுக்கு பிடிக்கும் வகையில் செய்து, சொல்ல வந்த கருத்தை அவர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் திறமையை வெளிப்படுத்தும் அற்புத கலை இது. ஆனால், இதை ஆரம்ப காலகட்டம் முதல் அதை ஒரு மதம் சார்ந்த விஷயமாக ஒரு எல்லைக்குள் பார்க்கப்பட்டதாலும், பயன்பட்டதாலோ என்னவோ ஏறக்குறைய இந்தக்கலை இப்போது அழிந்து விட்ட நிலை. இதன் மற்றொரு வடிவம் என்று வில்லுப்பாட்டு கலையை சொல்லலாம். நான் அதிகம் கதாகாலட்சேபம் பார்த்ததில்லை என்றாலும் நிறைய கேட்டிருக்கிறேன். ஆனால், சிவாவின் நவீன கதாகாலட்சேபத்தை படிக்கும் போது அதற்கும், அவர்க்கும் ஏதோ ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பது போல் தோன்றுகிறது எனக்கு. அது பார்த்தது, கேட்டது, உணர்ந்தது, இருந்தது, செய்தது என்று எதுவாகவும் இருக்கலாம்.

இந்த மிக பழைமையான கலையை கையிலெடுத்து அதில் தற்கால நிகழ்வுகளை மிகவும் சுவராஸியத்துடன் புகுத்திய சிவாவின் யுக்தியை பாராட்ட என்னிடம் வார்த்தைகளில்லை. அதுவும், இதில் வரும் பாத்திரங்கள், உரையாடல்கள், சில்மிஷங்கள், சீண்டல்கள், நகைச்சுவைகள் என்று அவர் வடிவமைத்த விதம் அருமை. தற்கால சம்பவங்களோடு நகைச்சுவையை இணைத்த உத்தி தேனில் தோய்த்த பலாச்சுளையாய் இனிக்கிறது. இந்த பதிவின் மூலம் கதாகாலட்சேப கலைக்கு சிவா மறு பிறப்பு கொடுத்திருக்கிறார் என்று சொன்னால் கூட அது மிகையாகாது.

ஒவ்வொருவருக்கும் முதுமையை தொடும் நேரம் "எதிர்கால வாழ்விற்கு என்ன செய்யப்ப்போகிறோம்..?" என்ற பயத்தோடு கூடிய கேள்வியும், இந்த கலை அழிந்து விடுமோ என்று அதன் இரசிகர்களுக்கு ஒரு கேள்வியும் எழும். அந்த இரு கவலைகள் இனி சிவாவுக்கும், கதாகாலட்சேப இரசிகர்களுக்கும் தேவையில்லை.! அவரை காப்பாற்ற கதாகாலட்சேபமும், அதை காப்பாற்ற சிவாவும் இருக்கிறார்..!! பழங்கலையின் வடிவத்தில் சமூகத்திற்கு நற்கருத்தை சுவையுடன் அளிக்கும் சிவா.ஜிக்கு 500 இ-பணம் என் அன்பு பரிசு. அவரின் இந்த முயற்சி மேலும் தொடரவும், வெற்றியை குவிக்கவும் வாழ்த்துக்கள்.!!!

சிவா.ஜி
01-09-2007, 10:33 AM
மிக்க நன்றி இதயம் அவர்களே..உங்கள் பாராட்டுக்கும் உங்கள் மேலான வழிகாட்டுதலுக்கும். வயசானா என்னடா பன்றதுன்னு பயங்கர டென்ஷன்ல இருந்தேன்..அதுக்கும் ஒரு வழி காண்பித்துக்கொடுத்து மிகப்பெரிய உதவியையும் செய்துவிட்டார்.என்ன சாமா சாஸ்திரி.....ஆவார்...சிவா சாஸ்திரி....ஹி..ஹி...ஹி

மலர்
01-09-2007, 10:36 AM
அப்படின்னா விச்சு/கிச்சு....

சிவா.ஜி
01-09-2007, 10:40 AM
போஸ்ட் காலியாயிருக்கு..யாரு வேணுன்னாலும் அப்ளை செய்யலாம்....வாக்−இன் இண்டெர்வியூ எல்லாம் கிடையாது...பெர்ஃப்பாமென்ஸ் டெஸ்ட் மட்டும்தான்.....

மலர்
01-09-2007, 10:43 AM
பெயரை மாற்றினால் நான் ரெடி....
(ஒரு சச்சு.... அப்படி)

சிவா.ஜி
01-09-2007, 10:46 AM
பெயரை மாற்றினால் நான் ரெடி....
(ஒரு சச்சு.... அப்படி)

அதே அதே.....சச்சு/லச்சு எப்படி...ஓகேவா...?

மலர்
01-09-2007, 10:48 AM
டபுள் ஓகே....:music-smiley-012:

இதயம்
01-09-2007, 10:51 AM
அப்படியே எனக்கும் ஒரு ஓரத்துல இடம் கொடுத்து "ஆமாம்" போடும் ஆசாமிகளில் ஒருவனா...........!!!........????.......

மலர்
01-09-2007, 10:54 AM
அப்படியே எனக்கும் ஒரு ஓரத்துல இடம் கொடுத்து "ஆமாம்" போடும் ஆசாமிகளில் ஒருவனா...........!!!........????.......

உங்களுக்கு இல்லாத இடமா அண்ணா... வாருங்கள் வந்து ஜோதியில் ஐக்கியமாகி விடுங்கள்...

சிவா.ஜி
01-09-2007, 10:54 AM
அப்படியே எனக்கும் ஒரு ஓரத்துல இடம் கொடுத்து "ஆமாம்" போடும் ஆசாமிகளில் ஒருவனா...........!!!........????.......

அதெல்லாம் வேண்டாம்..இதயத்துக்கு எப்பவுமே உயர்ந்த இடம்தான் கொடுக்கனும்....ஹ்ம்...என்ன பண்ணலாம்.....ஓகே...நீங்கதான் ஆர்கனைஸர்....சரியா.
(ஏதாவது பிரச்சனைன்னா இவரக் கையக் காமிச்சிட்டு...ஜூட்....)

இதயம்
01-09-2007, 10:59 AM
உங்களுக்கு இல்லாத இடமா அண்ணா... வாருங்கள் வந்து ஜோதியில் ஐக்கியமாகி விடுங்கள்...

உங்களுக்கு இல்லாத இடமா அண்ணா..ஆமா.!!.. ஐக்கியமாகிவிடுங்கள்..!! ஆமா... ஐக்கியமாகிவிடுங்கள்..!!


இதுவரைக்கும் நா சொன்னத*
கேட்ட உங்களுக்கும்
சொன்ன எனக்கும்
மங்களம்...சுப மங்களம்.....!!":nature-smiley-008::nature-smiley-008:

இதயம்
01-09-2007, 11:00 AM
அதெல்லாம் வேண்டாம்..இதயத்துக்கு எப்பவுமே உயர்ந்த இடம்தான் கொடுக்கனும்....ஹ்ம்...என்ன பண்ணலாம்.....ஓகே...நீங்கதான் ஆர்கனைஸர்....சரியா.
(ஏதாவது பிரச்சனைன்னா இவரக் கையக் காமிச்சிட்டு...ஜூட்....)

எங்க போனாலும் சனீஸ்வர பகவான் எனக்கு முன்னாடியே வந்து சம்மணம் போட்டு உட்காந்துக்கிறாரே.!!!!!

lolluvathiyar
01-09-2007, 12:25 PM
எங்க போனாலும் சனீஸ்வர பகவான் எனக்கு முன்னாடியே வந்து சம்மணம் போட்டு உட்காந்துக்கிறாரே.!!!!!

யாரு என்னையா சொல்லரீங்க.

சிவா.ஜி
01-09-2007, 12:25 PM
எங்க போனாலும் சனீஸ்வர பகவான் எனக்கு முன்னாடியே வந்து சம்மணம் போட்டு உட்காந்துக்கிறாரே.!!!!!

அடப்பாவமே சனி சார் எஸ் எழுத்துக்காரங்கள*த்தான் சதாய்க்கறார்ன்னா....இதயத்தக்கூட விடலையா.....(ஆமா சனிக்கே சனி சரியில்லையா....அவர் பேரும் எஸ் தான...?)

மலர்
01-09-2007, 12:28 PM
யாரு என்னையா சொல்லரீங்க.

இதுக்கு பேரு தான் வம்பை விலை குடுத்து வங்குறது....

சிவா.ஜி
01-09-2007, 12:30 PM
யாரு என்னையா சொல்லரீங்க.

யாரும் கூப்பிடாமலேயே எண்ட்ரி குடுக்கறதுக்குப் பேர்தான் சனிஸ்பெஷல்...:spudnikbackflip:

இதயம்
01-09-2007, 12:30 PM
யாரு என்னையா சொல்லரீங்க.

...ச்சே.. ...ச்சே..! உங்களை சொல்வேனா..! நீங்க சனி க்ரூப்புக்கே தலைவராச்சே..!!!

lolluvathiyar
01-09-2007, 12:35 PM
ஒரு வார்த்தைதானே சொன்னே அதுக்கு மூனு ரெஸ்பாஸ் விழுந்தடிச்சு வருது. அப்ப அந்த வார்த்தைக்கு என்ன சனி பலம் இருக்கும்

சிவா.ஜி
01-09-2007, 02:50 PM
கதாகாலட்சேபம்-5

சாமா:திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......பிரும்மானந்த ஹரே கஜானன தாண்டவனே ஜகனே....

ஆதௌ கீர்தனாரம்பத்திலே....சபையில இருக்கறாவாளெல்லாம் மூக்கப்பொத்திண்டு யாராயிருக்குன்னு சுத்திச் சுத்தி பாக்கறது புரியறது...மன்னிச்சுக்கோங்கோ...எங்க மேலத்தான் அந்த வாடை வர்றது.என்ன பண்ணச்சொல்றேள்...இந்த சிங்காரச் சென்னையில வர்ற வழியெல்லாம் குப்பையா கெடக்கறது...இதுக்கு மின்னாடி குப்பைய அள்ளிண்டிருந்தவா ஒப்பந்தம் முடிஞ்சிடுத்துன்னு,அவசர அவசரமா அவா வெச்ச குப்பத்தொட்டிய தூக்கிண்டு போறதுக்காக குப்பையெல்லாம் ரோட்டுலன்னா கொட்டிட்டு போய்ட்டா.அதையெல்லாம் தாண்டி வரச்சே எங்க தேகத்துலயெல்லாம் அந்த கப்பு ஒட்டிண்டுடுத்து.ஆனா ஒண்ணு பாருங்கோ...எப்பவுமே மக்களுக்கு சிம்ம சொப்பனமா இருக்கற நம்ம காவல்துறை அதிகாரிகளெல்லாம்..அந்த குப்பைய அள்ளறதுக்கு உதவிண்டிருந்த காட்சியப்பாக்க நேக்கு ரொம்ப நன்னா இருந்தது. இப்படியாச்சும் இந்த குப்பையால அவா தொப்பை கரைஞ்சா சரி....

கிச்சு:மாமா இப்ப நீ கொஞ்சம் அடக்கிவாசிக்கிறியா.அந்த மாமாங்க தொப்பையப்பத்தி நீ ஏதானா கமெண்டு குடுத்து...கதை முடிஞ்சி வூட்டுக்கு போறப்போ..உன் கதையோட எங்க கதையும் கந்தலாகி பூடப்போவுது..இன்னா...

சாமா; ஆமாமா..நமக்கு எதுக்கு பொல்லாப்பு....திரேதாயுகத்துல கட்டினதா சொல்லப்படற ஒரு பாலத்தால இந்த கலியுகத்துல அவாஅவா அடிச்சிக்கற நிலைமை ஆயிடுத்து.ராமர் பாலத்தை இடிக்கப்படாதுன்னு சுப்ரமண்யசுவாமி சொல்றார்...கவர்மெண்டு இடிச்சாத்தான் கப்பல் விட முடியுங்கறா...ரெண்டு பேரும் இப்படி மல்லுகட்டறதப் பாத்துட்டு நம்ம சுப்ரீம் கோர்ட் பெரியவா இந்தமாசம் 14-ஆம் தேதி வரைக்கும் அதை இடிக்கப்ப்டாதுன்னு சொல்லிட்டா..

விச்சு; ஏன் மாமா...நிஜமாவே இது ராமர் கட்டின பாலம் தானா...?

சாமா:அடே அம்பி எதுக்குமே ஆதாரம் இல்லடா...ஆன்மீகவாதிகளெல்லாம் அப்படீங்கறா,பகுத்தறிவுவாதிகளெல்லாம் அது வெறும் சுண்ணாம்பு திட்டுங்கறா.இயற்கையா இருக்கற ஒண்ணு...ராமயணத்துக்கு ஒத்து போறதால அது இவா ரெண்டு பேர்கிட்டயும் மாட்டிண்டு லோல்படறது...

கிச்சு; மாமு..அன்னிக்கு நீ சொன்னது கரீட்டுன்னு இப்பக்கூட தெரியுது பாரு..

சாமா: எதைடா சொல்ற...?

கிச்சு: அதான் இன்னாவோ எஸ்-ல பேர் ஆரம்பிக்கறவங்களுக்கெல்லாம் சனியோ முனியோ சரியில்லன்னு சொன்னியே...இப்பகூட பீகார்ல ஒரு எம்.பி சகாபுதீன்னு பேரு அவர 10 வருஷத்துக்கு மாமியா வூட்டுக்கு அனுப்பிட்டானங்களாமே...

சாமா; ஆமாடா அம்பி..அந்த பிரகஸ்பதி யாரோ ஒரு போலீஸ் அதிகாரிய கொல்லறதுக்காக அட்டாக் பண்ணியிருக்கான்.அந்த கேஸ்ல இப்ப மாட்டினுட்டான்.எல்லாம் இந்த எஸ் பன்ற வேலை.இதையெல்லாம் பாத்துட்டு நம்ம நடிகர் சூர்யா கூட தன் பேரை மோர்யான்னு மாத்திவெச்சுக்கப் போறாராம்...

விச்சு; அப்ப அவரோட ரசிகர்களெல்லாம் வீ வாண்ட் மோர்யா-ன்னு சொல்லப்போறா...

சாமா: ஆமாடா அம்பி நான்கூட என்னோட பேர டெம்ப்ரவரியா காமா-ன்னு வெச்சுக்கலாமான்னு பாக்கறேன்.

கிச்சு: அய்யோ மாமு அப்பால இந்த ஆளு காமாசாஸ்திரி இல்ல காமசாஸ்திரம் சொல்ற பலான ஆளுன்னு பிரமானந்த சாமிங்களோட உன்னையும் புட்ச்சி உள்ள தள்ளிடப்போறாங்கோ....

சாமா: போறுண்டா...நேக்கு இதக்கேக்கும்போதே ஒடம்பெல்லாம் ஆடறது....இத்தோட நிறுத்திக்கலாம்.

சாமா,கிச்சு,விச்சு கோரஸாக

இதுவரைக்கும் நாங்க சொன்ன

"கதை கேட்ட உங்களுக்கும்
கதை சொன்ன எங்களுக்கும்
மங்களம்...சுப மங்களம்......"

மனோஜ்
01-09-2007, 03:10 PM
கதை அருமை நைநா......

சிவா.ஜி
02-09-2007, 07:35 AM
ரொம்ப டாங்க்ஸுபா...

மலர்
02-09-2007, 07:44 AM
அண்ணா இப்போ நீங்க இருக்கிறது ஜெத்தா,சௌதியா,,, இல்லை சென்னையா...
சென்னையில நடக்கிற குப்பை சமாச்சாரத்த எல்லாம் புட்டு புட்டு வச்சிருக்கேளே....அது எப்படிண்ணா....

சிவா.ஜி
02-09-2007, 07:54 AM
அண்ணா இப்போ நீங்க இருக்கிறது ஜெத்தா,சௌதியா,,, இல்லை சென்னையா...
சென்னையில நடக்கிற குப்பை சமாச்சாரத்த எல்லாம் புட்டு புட்டு வச்சிருக்கேளே....அது எப்படிண்ணா....

அதுதான் மக்கள் தொலைக்காட்சியிலும்,நாளிதழ்களிலும் எல்ல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சிடறாளே கொழந்த....அப்ப நேக்கு தெரியாம போய்டுமா...

சிவா.ஜி
08-09-2007, 01:30 PM
விச்சு: மன்றத்து பெரியவாளுக்கெல்லாம் ஒரு சேதி.சாமா மாமாவுக்கு இந்த பாழாப்போன கொசுவால டெங்கு வந்து நொங்கு எடுத்துண்டிருக்கு அதான் கொஞ்சநாள் அவர் வரமுடியலை.இன்னும் ரெண்டு நாளைக்குள்ள சரியாயிடுன்னு சொல்லச் சொன்னார்.

கிச்சு:மாமா மல்லாக்கடிச்சு படுத்துனு பெனாத்திகினு கீறாரு..குவிக்கா சரியாவறதுக்கு இன்னா இன்னாவோ கஸ்மாலத்தையெல்லாம் முயிங்கினு கீறாரு.அதான் எங்களாண்ட சொல்லிவுட்டாரு.வந்ததுக்கு ஒண்ணே ஒண்ணு
சொல்லிட்டு பூட்றேன்."மன்சன் இன்னாதான் தொர்த்தி தொர்த்தி பணம் சம்பாதிச்சாலும் கட்சீல ஆட்றதின்னாவோ டப்பாங்குத்துதான்...டிஸ்கோ இல்ல..."வனக்கம் வர்ட்டா......

மலர்
08-09-2007, 04:10 PM
அடப்பாவீகளா...
விட்டா சாமாவை சாவடிச்சிருவேளே.... காலையிலத்தான் கேட்டென் இப்போ அவா நல்லாஇருக்குன்னு சொன்னாளே.....
அய்யோ பாவம் சாமா..........விச்சுவையும் கிச்சுவையும் கட்டிண்டு அவா படுற பாடு......

சிவா.ஜி
09-09-2007, 10:42 AM
கதாகாலட்சேபம்-6

சாமா:திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......பிரும்மானந்த ஹரே கஜானன தாண்டவனே
ஜகனே....

ஆதௌ கீர்தனாரம்பத்திலே..எல்லோருக்கும் வணக்கம்.சபையில இருக்கறவா என்னை மன்னிச்சிடுங்கோ....நாலஞ்சுநாளா இந்த
பாழாப்போன டெங்கு என்னை பிழிஞ்செடுத்துடுத்து...ஏதோ இந்த விச்சுவும்,கிச்சுவும் பக்கத்துலருந்து ரொம்ப நன்னா கவனிச்சுண்டதால
இப்ப செத்த தேவலாம்....டே அம்பிகளா நன்னா ஷேமமா இருங்கடா...பகவான் ஒங்கள நன்னா வெச்சுப்பார். இப்ப
பாத்தேள்னா....இணையத்துல இருக்கிற தமிழ் வலைமனைகள்லயே தலையான வலைமனையா இருக்கற நம்ம தமிழ்மன்றத்துல
வேண்டாத வேலையா...ஆதாவான்னு ஒரு குறும்புக்கார பிள்ளையாண்டான் அவாளுக்குள்ளயே ஏதோ எலக்ஷன் அது இதுன்னு
ஆரம்பிச்சு..அங்கே இருக்கற மத்தவாளெல்லாம் மூணு கட்சியா பிரிஞ்சிண்டு சிண்டப் பிடிச்சிண்டு சண்டை போட்டுண்டிருக்கா.

விச்சு: ஏன் மாமா அரசியல் கட்சின்னாலே சிண்டப்பிடிக்கறதெல்லாம் சகஜம்தானே....இத பெருசா குத்தம் மாதிரின்னா பேசறேள்.

சாமா: அது சரிதாண்டா அம்பி..ஆனா இத்தனை நாளும் ஒண்ணா பழகிண்டிருந்தவங்களையும் ஒருத்தருக்கொருத்தர்
எதிரியாக்கிப்பிடுத்து இந்த அரசியல்ன்னு சொல்ல வரேன்.

கிச்சு: அதெல்லாம் இல்ல மாமு...அந்த திரியில் அடிச்சிகினு கீறவங்க அட்த்த திரியில என்னமா கொஞ்சிகினு
கீறாங்கோ...கெவுனிச்சியா...

சாமா: அப்படியிருந்தா ரொம்ப நல்லதுடா அம்பி. இப்பதான் எலெக்ஷன் சூடு பிடிச்சிருக்கு....ஓவியன் அப்படின்னு ஒரு பிள்ளையாண்டாம்

பு.ம.பு.க-ன்னு ஒரு கட்சிய ஆரம்பிச்சு அதுல நெறைய உறுப்பினர்களை சேத்துகிட்டு கம்பீரமா நின்னுண்டிருக்கார்.
அடுத்ததா மனோஜ்-ன்னு ஒரு பிள்ளையாண்டான்.த.க.பு.க-அப்படீன்னு ஒரு கட்சிய ஆரம்பிச்சு ரொம்ப ஃபாஸ்ட்டா
போயிண்டிருக்கார்.மூணாவதா லொள்ளுவாத்தியார்ன்னு ஒருத்தர் லொ.மு.க-ங்கற பேர்ல கட்சிய ஆரம்பிச்சு சளைக்காம
மத்தவாளுக்கெல்லாம் டஃப் டைம் குடுத்திண்டிருக்கார்.

கிச்சு: இதப்பார்றா...இம்மாம்பேரு இருக்கிற மன்றத்துல மூணே மூணு கச்சிதானா...? இன்னா நைனா இது கதையாகீது..நீ அப்பால சொல்லு மாமு.

சாமா: இந்த ஓவியனோட கட்சியில பூமகள்ன்னு ஒரு பொண்ணு இருக்கு. மகளிர் அணித்தலைவின்னு சொல்லிண்டு அந்த பொண்ணு என்ன போடு போடறது....அதுக்கு சரிக்குச் சரியா மனோஜோட கட்சியில இருக்கற மலர்ன்னு ஒரு பொண்ணு வெளுத்து வாங்குது.நம்ம வாத்தியார்கட்சியிலதான் மகளிர் அணித்தலைவியா வர்றதா சொல்லிண்டிருந்த ஆட்டோராணி லண்டன் தாதா ஓவியா வரமுடியாம லாங்லீவுல போயிடுத்து.இருக்குற கொ.ப.செ-வும் கொள்கையே இல்லாம எதைப் பரப்பறதுன்னு தெரியாம முழிச்சிண்டிருக்கார்.போர்ப்படை தளபதியில ஒருத்தர் வெளியூர் போய்ட்டார்.... (சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு)டேய் கிச்சு இந்த விச்சுப்பய எங்கடா போயிட்டான்.....
(அதுக்குள்ள விச்சு வேகவேகமாக ஓடி வந்து...)
விச்சு: மன்னிச்சுக்கோங்கோ மாமா...நீங்க சொல்லி முடிக்கறதுக்குள்ள ஒரு எட்டு போய் நெட்டு பாத்துட்டு பட்டுன்னு வந்துட்டேன்.

சாமா; என்னடா சொல்ற ஒரு எழவும் புரியலயே...

கிச்சு; இன்னா மாமு இத்த கூட புரிஞ்சிக்கதாவல....இண்டெர்னெட் பாத்துட்டு வந்திருக்கான்..டேய் விச்சு இன்னாத்த பாக்கறதுக்கு வுயுந்தடிச்சி ஓடுன...

விச்சு: எலக்ஷன் நிலவரம் என்ன ஆச்சுன்னு பாக்கப்போனேண்டா கிச்சு...இப்போதைய நிலவரப்படி ஓவியனோட கட்சி 16 ஓட்டு வாங்கி மின்னாடி போயிண்டிருக்கு...அடுத்ததா ..மனோஜ்-ஓட கட்சி ரெண்டாவதா 13 ஓட்டு வாங்கி பின்னாடியே போயிண்டிருக்கு..மூணாவதா நம்ம வாத்தியார் கட்சி 5 ஓட்டு பெற்று முன்னேறிகிட்டிருக்கு.

கிச்சு: இரு இரு..அந்த ரெண்டு கச்சியும் ஓட்டு வாங்கிட்டு முன்னால போய்கினு கீதுன்ன..இந்த கச்சி மட்டும் ஓட்டு பெற்றுன்னு இன்னாத்துக்கு சொன்ன...

சாமா: அடே பிரம்மஹத்தி இதக்கூட புரிஞ்சிக்க முடியலையா நோக்கு....வாங்கின்னா வாங்கிதாண்டா அம்பி...திரை மறைவுல என்னென்னமோ காரியங்களெல்லாம் நடந்துண்டிருக்கு...பக்கா அரசியல்வாதிகளாட்டம் இவா என்னவொ பண்ணிண்டிருக்கான்னு தோணறது.இனிமே யார் யாரோட இ-பணமெல்லாம் ஜிவ்வுன்னு ஏறப்போறதோ பாக்கலாம்.தேர்தல் அதிகாரி ஆதவாவ வேற ரொம்ப நாழியா காணல..இவா என்னடான்னா ஆளாளுக்கு கம்ப்ளெயிண்டு பண்ணின்னிடிருக்கா....என்னமோ நன்னா நடந்தா சரி.....
சபை பெரியோர்களே.....தேர்தல் பார்வையாளரா எங்களை வரச்சொல்லி ஆதவா ஆளனுப்பியிருக்கார்..நாங்க உடனே கிளம்ப வேண்டியிருக்கறதால

"கதை கேட்ட உங்களுக்கும்
கதை சொன்ன எங்களுக்கும்
மங்களம்...சுப மங்களம்......"

மலர்
09-09-2007, 11:00 AM
அய்யோ சாமாவை நன்னா கவனிச்சது நம்ம விச்சுவும் கிச்சுவுமா...
அது தெரியாம புள்ளைள திட்டிட்டேனெ... சாரிடா அம்பிகளா மன்னிச்சுக்கோங்கோ...........

சிவா.ஜி
09-09-2007, 11:01 AM
சரி கொழந்த மன்னிச்சிடலாம்.தேர்தலெல்லாம் நன்னா போயிண்டிருக்கா...?

மலர்
09-09-2007, 11:14 AM
நன்னா போயிண்டுருக்கு....
இப்போ நம்ம ஓவியரு தான் முண்ணனியில தெரியுராரு.....
பார்க்கலாம் கடைசி வரை...

மனோஜ்
10-09-2007, 10:47 AM
சூப்பர் சிவா கலக்கல்

சிவா.ஜி
10-09-2007, 10:54 AM
நன்றி மனோஜ். லேட்டஸ்ட் நிலவரங்களோட மறுபடியும் வருகிறேன்.

அக்னி
10-09-2007, 11:05 AM
ஒரே வார்த்தையில் சொன்னால், கலக்கல்...
பாராட்டுக்கள் சிவா.ஜி...

நான் இதுவரைக்கும், கதாகாலேட்சபமும் வில்லுப்பாட்டும் ஒன்றே என நினைத்திருந்தேன்.
தெளிவுபடுத்திய இதயத்துக்கு நன்றி...

எஸ் என்ற எழுத்தில் பெயருள்ளோருக்கு சனீஸ்வர பகவான் கடாட்சம் கிட்டுகின்றது என்று சாமா சாஸ்திரிகள் சொன்னபோதிலும், சச்சு என்று பெயரை தெரிவு செய்த மலரை என்னவென்பது..?

பி.கு:
ஒவ்வொரு கதாகாலோட்சபங்களுக்கும் உபதலைப்பு இட்டால், நன்றாக இருக்குமல்லவா?
கதாகாலோட்சபம் 1, கதாகாலோட்சபம் 2....
என்று...

சிவா.ஜி
10-09-2007, 01:40 PM
மிக்க நன்றி அக்னி.உங்கள் யோசனையை செயல் படுத்திவிட்டேன். தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

சாராகுமார்
10-09-2007, 02:12 PM
"கதை கேட்ட உங்களுக்கும்
கதை சொன்ன எங்களுக்கும்
மங்களம்...சுப மங்களம்......"

ஊ....ஊ...ஊ..
அருமை சிவா அருமை.சிறப்பாக இருக்கிறது.உங்களுக்கு 500 இ-பணம் பரிசு.

lolluvathiyar
10-09-2007, 02:26 PM
சூப்பர் சிவா ஜி கலக்கீட்டே போரீங்க*
(அங்க தேர்தல் வேலைய கவனிக்க சொன்னா இங்க வந்து கதையா அடிச்சிட்டு இருக்கீங்க, இருங்க உங்கள் மாவீரன் கதையில வச்சுகரேன்)

சிவா.ஜி
10-09-2007, 02:33 PM
மன்னிச்சுக்குங்க தலைவரே...அந்த ரெண்டு பொண்ணுங்களும் தனி மடல் போட்டே நம்ம ஓட்டையெல்லாம் பறிச்சிக்கிட்டாங்க....நான் எங்க கேட்டாலும் கையை விரிக்கறாங்க...அந்த திரியப் பாத்தா மனசு சரியில்ல அதான் நைஸா இங்க வந்துட்டேன்...இருந்தாலும் கடைசி வரைக்கும் மோதிப்பாத்துடலாம் தலைவரே...

சிவா.ஜி
10-09-2007, 02:34 PM
ஊ....ஊ...ஊ..
அருமை சிவா அருமை.சிறப்பாக இருக்கிறது.உங்களுக்கு 500 இ-பணம் பரிசு.

மிக்க நன்றி சாராகுமார்..

தளபதி
10-09-2007, 02:42 PM
தலைவரே!! என்ன இப்படி போட்டு கலக்கிட்டு இருக்கீங்க!!

ஒருத்தரிடம் ஒன்று ரெண்டு திறமைகள் இருக்கலாம், ஆனா எல்லா திறமைகளையும் சேர்த்து வைத்துக் கொண்டு!!! உங்களைப் பார்க்க பொறாமையா இருக்கு! கதை, கவிதை, கட்டுரை, நகைச்சுவை, பாட்டு, டான்ஸு, இருங்க மூச்சு வாங்கிக்கிறேன், இப்படி சொல்லிகிட்டே போகலாம். பாருங்க! இதையே கோர்வையா சொல்ல பொறுமை இல்லை. உங்கள் எழுத்தின் ரசிகர்களில் ஒருவராக இருப்பதில் சந்தோசமே!!

இந்த ஐடியா எப்படி வந்தது. இந்த பெயர்களை எப்படி புடிச்சீங்க!!?? (எப்படியும் இதுக்கு பின்னாடி ஒரு சுவார்சியமான சம்பவம் வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன்).

இதுபோன்ற ஐடியாவும் பதிப்பும், நமது நண்பர்கள் அனைவரையும் ஊக்குவிப்பதுடம் புதுவிதமாக பதிக்க தூண்டும் விதமாக அமையும். எதையும் சிறிது வித்தியாசமாக செய்யும் போது அது மிகவும் நல்ல பலன் கொடுக்கிறது. விடாதீர்கள்!! உங்கள் புதுவித முயற்சிக்கு நல்ல வரவேற்பும் மதிப்பும் உள்ளது. மீண்டும் உங்களது புது முயற்சிகளைக் காண ஆவலுடன் உள்ளோம்.

எனக்கு நல்லா தெரியும். உங்களுக்கு வேலை பளு அதிகம் என்று. ஏன் நண்பரே!! இதை எழுத நிறைய நேரம் எடுக்குமே!! மேலும் அதை டைப் அடிக்கவேண்டும். எங்களுக்கு நல்லது தரும் நகைச்சுவையைத் தரும் நீங்கள் உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் உங்களுக்கு எல்லா நலன்களையும் தந்து அருள வேண்டும்.

சிவா.ஜி
10-09-2007, 02:52 PM
உங்கள் உள்ளப்பூர்வமான அக்கறைக்கு மனம் நெகிழ்ந்த நன்றி குமரன். ஆனால் இதை எழுதுவதை நான் மிக்க சந்தோஷத்துடன் செய்வதால் ஏந்த பிரச்சனையுமில்லை.மாறாக இன்னும் உற்சாகமடைகிறேன்.
நீங்கள் கணித்தது சரிதான். இந்த concept-ல் நான் இரண்டுமுறை மேடையில் செய்திருக்கிறேன்.அதுவும் நானே எழுதி..என்னுடைய இரண்டு நன்பர்களுடன் சேர்ந்து.அது இன்னும் கொஞ்சம் கூடுதல் professional-ஆக இருக்கும்.இசையோடு சேர்ந்து. இப்போது எழுத மட்டுமே முடிகிறது. நன்றி நன்பரே.

மலர்
12-09-2007, 04:09 PM
சூப்பர் சிவா ஜி கலக்கீட்டே போரீங்க*
(அங்க தேர்தல் வேலைய கவனிக்க சொன்னா இங்க வந்து கதையா அடிச்சிட்டு இருக்கீங்க, இருங்க உங்கள் மாவீரன் கதையில வச்சுகரேன்)

வாத்தியாரே ஆப்பு வைப்பீங்கன்னு பாத்தா..... இப்படி விட்டுட்டீங்களே.....:traurig001::traurig001: அடுத்த தடவை கண்டிப்பா வச்சிரணும் சரியா

சிவா அண்ணா என் வேலை முடிஞ்சது....வரட்டுமா :icon_rollout::icon_rollout:

சிவா.ஜி
13-09-2007, 04:22 AM
இருக்கட்டும் இருக்கட்டும் பாத்துக்கறேன்.....இன்னொரு குட்டி நாரதரா..நாராயனா....

பூமகள்
13-09-2007, 05:10 AM
கதாகாலட்சேபம்-6
சாமா: இந்த ஓவியனோட கட்சியில பூமகள்ன்னு ஒரு பொண்ணு இருக்கு. மகளிர் அணித்தலைவின்னு சொல்லிண்டு அந்த பொண்ணு என்ன போடு போடறது....


ஆகா.. சாமா மாமா மூலமா எங்க கட்சிக்கு இலவசமா பிரச்சாரம் ஆகிடிச்சி...:icon_rollout: ரொம்ப நன்றிகள் சாமா மாமா..
உங்களுக்கு டெங்கு வந்தது கேள்வி பட்டு ரொம்ப கவலப்பட்டோம் மாமா.. உங்க பேர்ல திருப்பதில அர்ச்சனை பண்ணி பிரசாதம் அனுப்பினேனே வந்துதாங்க மாமா??

நிற்க,
அப்புறம் இப்படி கலக்குறீங்களே...எங்க மனசுல உங்களுக்குனு ஒரு இடத்தைப் பிடிச்சிட்டீங்க சிவா அண்ணா.:icon_b:

ஆயகலைகளையும் அறிவீர் போல....!!!! பாராட்டுக்கள் அண்ணா.
தொடர்ந்து அசத்துங்க... உடம்பையும் பார்த்துக்கங்க...அண்ணா.

சிவா.ஜி
13-09-2007, 06:22 AM
ஆகா.. சாமா மாமா மூலமா எங்க கட்சிக்கு இலவசமா பிரச்சாரம் ஆகிடிச்சி...:icon_rollout: ரொம்ப நன்றிகள் சாமா மாமா..


அடடா....இத நான் யோசிக்கவேயில்லையே.....இந்த காலத்துப் பசங்க ரொம்பவே ஷார்ப்பா இருக்காங்க..ரொம்ப எச்சரிக்கையா இருக்கனும் போலருக்கு.
அன்பான அக்கறைக்கு அண்ணனின் மனப்பூர்வமான நன்றி தங்கையே.

சிவா.ஜி
13-09-2007, 07:58 AM
காலட்சேபம்-7

சாமா: திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......பிரும்மானந்த ஹரே கஜானன தாண்டவனே ஜகனே....

ஆதௌ கீர்தனாரம்பத்திலே..சபையில இருக்கறவாளுக்கெல்லாம் வணக்கம்.தமிழ் மன்றத்துல தேர்தல் ஜரூரா நடந்துண்டிருக்கு.அந்த
பிள்ளையாண்டான் ஓவியனும்,மனோஜும் நெக் ட்டூ நெக் போயிண்டிருக்கா..ஓவியன் கட்சி ஒரு ஓட்டு அதிகமா வாங்கி முன்னால
ஜோரா வந்துண்டிருக்கார். ஆனாலும் வாத்தியாரைப் பாராட்டனுண்டா அம்பி...இன்னமும் தம் கட்டி பேசிண்டிருக்கார்.அவரோட அந்த போராட்ட குணத்தை கண்டிப்பா பாராட்டியே ஆகனும். யாரு ஆட்சியப் பிடிச்சி என்னனெல்லாம் செய்யப்போறாள்ன்னு பாப்போம்.அது சரி ஏண்டா அம்பி விச்சு நானும் வந்ததிலேருந்தே பாத்துண்டிருக்கேன் என் கையையே முழிச்சி முழுச்சி மொறச்சிண்டிருக்கியே என்ன ஆயிடுத்து அதுக்கு.

விச்சு: இல்ல மாமா ஏதோ புதுசா கங்கணம் மாதிரி எதையோ போட்டுண்டிருக்கேளே அது என்னதுன்னு தெரிஞ்சிக்கலாமேன்னுதான்.

சாமா: அதுவாடா அம்பி...நீ இந்த டோட்டல் டிவி-ன்னு ஒண்ணு வர்றதே அதை பாக்கறதில்லையோ...அதுல கூட நம்ம சுதா சந்திரன் ஒரு ஜோதிஷ்ட் கிட்ட பேசிண்டிருப்பாளே...அவாதாண்டா அம்பி சொன்னா,இந்த வளையத்தை கயில மாட்டிண்டுட்டா ஷுகர் ப்ராப்ளமெல்லாம் சரியாப் போயிடுமுன்னு. அதான் நானும் ஒண்ணு வாங்கி மாட்டிண்டுட்டேன்.

கிச்சு: இன்னா மாமு நீ...பட்ச்ச ஆளா இருந்துகினு இப்டி பண்ணிக்கீறியே...நான் கூட அந்த கஸ்மாலத்தப் பாத்தேன். இத்த போட்டுகினா சுகரு பிச்சிகினு பூடுன்னு பீலா வுட்டுகினு இருந்தாங்கோ...வெலை கூட வெறும் 1599 ரூபாதானாம்.இன்னா கதையாக்கீது மாமு.ஏன் ஒரு ரூபா சேத்து 1600-ஆ வாங்கிக்கல்லாமில்ல.

விச்சு; அந்த வளையத்த மாட்டிண்டு அதனால இருக்கற வியாதியெல்லாம் முத்திப் போய் பரலோகம் போனா..நெத்தியில ஒட்டிக்கதாண்டா கிச்சு அந்த ஒத்த ரூபா.

கிச்சு: அப்றம் இந்த டாக்டருங்கல்லாம் இன்னாத்துக்கு...பேசாம சுகரு பேசண்டுங்கல்லாம் இத மாட்டிகினா..மாத்திரையே வோணாமே நீ கூட பாரு அத்த நம்பிகினு மாட்டிகிட்ட..இப்ப பாரு கையெல்லாம் வெள்ளையா குஸ்டம் வந்தா மாதிரி ஆயிடிச்சு. உனுக்கு இன்னாத்துக்கு இந்த பேஜாரெல்லாம்.

விச்சு: ஆமா மாமா...அந்த டிவி-காராதான் குரு ஷுகருக்கு,சுக்கிரன் கிட்ணிக்குன்னு என்னவோ கதையெல்லம் சொல்லிண்டிருக்கான்னா நமக்கு எங்க போச்சு அறிவு மாமா.நாங்கல்லாம் சின்னப்பசங்க...தப்பா எடுத்துக்காதேள்.

சாமா; அடடா...உங்களுக்கு தெரிஞ்சது நேக்குத் தெரியாம போயிடுத்தே...ரொம்ப நன்றிடா அம்பிகளா...இந்த கிரகச்சாரத்தை இப்பவே கழட்டி வீசி எறிஞ்சுடறேன்.கதைக்கு வருவோண்டா அம்பி.எப்படியோ கோவையை சேலம் ரயில்வே கோட்டத்தோட இணச்சிப்பிட்டா.நல்ல வருமானம் வர்ற இடம்.அதனாலத்தான் இந்த கேரளா அரசியல்வாதிகளெல்லாம் ஒண்ணா சேந்துண்டு கொடி பிடிச்சா.

கிச்சு: ஆனா பொள்ளாச்சிய தாராத்துட்டாங்களே மாமூ...

சாமா: அது வெறும் 72 கிலோமீட்டர்தாண்டா அம்பி...போனாப்போறது..ஆனாலும் அவாளோட அழிச்சாட்டியம் தாங்க முடியலடா அம்பி.நம்ம கூட இருக்கற கேரளா மக்களெல்லாம் ஒண்ணா பழகி வாழ்ந்துண்டிருக்கோம் ஆனா அங்க இருக்கற இந்த அரசியல்வாதிகள் பண்ற அக்ரமம் ரொம்ப ஜாஸ்திடா அம்பி.

விச்சு: அரசியல்வாதிகள்ன்னாலே அப்படித்தானே மாமா...

கிச்சு: ஆமா...

சாமா: சரிடா அம்பி நாழியாடுத்து தமிழ்மன்றத்துல தேர்தல் நிலவரம் எப்படியிருக்குன்னு போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடலாம்.

விச்சு: மாமா இப்பதான் அங்கருந்து அமரன் போன் பண்ணினார்.ஓவியன் 31 ஓட்டு வாங்கிட்டாராம்,மனோஜ் கட்சிக்கு 29 ஓட்டு விழுந்திருக்காம்.

சாமா: ஆஹா ஓவியன் கட்சி ரெண்டு ஓட்டு அதிகமாயிட்டாளா..சரி சரி வாங்க உடனே போய்ப் பாப்போம்.

"கதை கேட்ட உங்களுக்கும்
கதை சொன்ன எங்களுக்கும்
மங்களம்...சுப மங்களம்......"

lolluvathiyar
13-09-2007, 08:03 AM
அடடா யார போட்டு தாக்கரீங்கனு ஒன்னுமே புரியலா
சும்மா பின்னீட்டு வரீங்க சிவா ஜி
இதை தேடி தேடி அப்டேட் ஆகி இருக்கானு பாத்துட்டு தான் எனக்கு மறுவேலையே
பாராட்டுகள்

ஓவியன்
13-09-2007, 08:11 AM
ஆஹா சிவா.ஜி என்னையும் போட்டு இந்த உருட்டு உருட்டுறீங்களே நீங்க நல்லா இருக்கணும் சாமி.........!!! :)

சிவா.ஜி
13-09-2007, 08:12 AM
தலைவரே தாக்கப்பட வேண்டியவங்களையெல்லாம் தாக்குவமில்ல...சிங்கம்ல்ல..மிகவும் நன்றி வாத்தியாரே உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு.

மலர்
13-09-2007, 08:13 AM
ஆஹா சிவா.ஜி என்னையும் போட்டு இந்த உருட்டு உருட்டுறீங்களே நீங்க நல்லா இருக்கணும் சாமி.........!!! :)

உருட்டுறதுக்கு நீங்க என்ன உருட்டுகட்டையா....:icon_shades:

சிவா.ஜி
13-09-2007, 08:13 AM
ஆஹா சிவா.ஜி என்னையும் போட்டு இந்த உருட்டு உருட்டுறீங்களே நீங்க நல்லா இருக்கணும் சாமி.........!!! :)

உங்க கட்சிதான் இந்த போடு போடறதே.....ஓவியன்...ஜெயிச்சேள்னா என்னையும் கண்டுக்கறேளா...

மலர்
13-09-2007, 08:15 AM
உங்க கட்சிதான் இந்த போடு போடறதே.....ஓவியன்...ஜெயிச்சேள்னா என்னையும் கண்டுக்கறேளா...

வாத்தியாரே கொஞ்சம் இந்த பக்கம் பாக்குறேளா..... இங்க என்னமோ நடக்குது...

அமரன்
13-09-2007, 08:17 AM
கொஞ்ச நாள் இல்லைன்னா நவீன கதாகாலட்சேபம் ராக்கெட் வேகத்தில் போய்ட்டுதே....இப்போது இறுதி பாகம் படித்தேன். எங்க அடிக்கார் எப்படி அடிக்கார் என ஒரு ரவுண்டு போய் வருவதற்கு முன்னர் கலாய்ப்புக்கு நம்மளை களைக்க வைக்கிறதுதப்பா.....தொடருங்க...தொடருங்க......

அமரன்
13-09-2007, 08:18 AM
உங்க கட்சிதான் இந்த போடு போடறதே.....ஓவியன்...ஜெயிச்சேள்னா என்னையும் கண்டுக்கறேளா...
கட்சியே கலைக்கப்படும் நிலை வரும்போல இருக்கு....இந்த நேரத்தில் துண்டு போட்டு இடம் பிடிக்காதீங்கப்பூ...

சிவா.ஜி
13-09-2007, 08:19 AM
வாத்தியாரே கொஞ்சம் இந்த பக்கம் பாக்குறேளா..... இங்க என்னமோ நடக்குது...

அம்மா மலரு....நல்லாத்தான போய்ட்டிருக்கு...ஏன்...ஏன் இந்த...... நாராயனா...நாராயனா...

சிவா.ஜி
13-09-2007, 08:23 AM
கட்சியே கலைக்கப்படும் நிலை வரும்போல இருக்கு....இந்த நேரத்தில் துண்டு போட்டு இடம் பிடிக்காதீங்கப்பூ...

இங்க பாருங்கப்பா இன்னொருத்தரு....வேணாம்....வாத்தியாரப் பத்தி தெரியுமில்ல...அவரோட வரலாறுல உங்களுக்கும் இடம் குடுத்துடுவாரு....ஆமாம்.(ஏதோ கிடைக்கறத வெச்சி அடுத்த எலெக்ஷனுக்கு தேத்தலான்னு பாத்தா விட மாட்டெங்கிறாங்களே...நான் எப்பவுமே வாத்தியார் கட்சிதான்)

அக்னி
13-09-2007, 08:27 AM
ஹா... ஹா...
தமிழ் மன்றத் தேர்தல் களமும், கதாகாலோட்சபத்தில் அதிருதே...
நீங்க கதாகாலோட்சபத்த தொடருங்கோ, நாம மியூசிக் போட்டுண்டே வாசிச்சுடறோம்...
பாராட்டுக்கள் சிவா.ஜி...

அக்னி
13-09-2007, 08:31 AM
உருட்டுறதுக்கு நீங்க என்ன உருட்டுகட்டையா....:icon_shades:
இதெல்லாம் அரசியலோட நிப்பாட்டிடோனும்...
இல்லேன்னா, உருட்டுக்கட்ட வராது... அரிவாளும் பழைய ஸ்டைல்...
இப்போல்லாம் துப்பாக்கி கூட சின்னனா போச்சுது...
ஏவுகணை, அணுகுண்டுகள் பூட்டப்பட்ட ஆட்டோதான் வரும்...
ஏம்மா மலர்... ஜாக்கிரதை....
(ஏம்பா அக்னி... bபி கெயார்fபுல்...)

சிவா.ஜி
13-09-2007, 08:57 AM
நன்றி அக்னி. நீங்க எந்த மியூஸிக் பத்தி சொல்றீங்க...ஜிங்குச்சான்...தான....சந்தோஷமா வாசிச்சிகிட்டே நீங்களும் கூட வாங்க...இன்னும் கலக்குவோம்.

lolluvathiyar
13-09-2007, 09:23 AM
ஓவியன்...ஜெயிச்சேள்னா என்னையும் கண்டுக்கறேளா...

வாத்தியாரே கொஞ்சம் இந்த பக்கம் பாக்குறேளா.....

ஆமாமாம் கவனிச்சேன், இப்பதான் வரலாற்றில் சிவா ஜி தலமையில் போர் காட்சிகள் ஆரம்பிச்சுருக்கேன். ஒரு வழி பன்னாம விடரதில்லை.


கட்சியே கலைக்கப்படும் நிலை வரும்போல இருக்கு....இந்த நேரத்தில் துண்டு போட்டு இடம் பிடிக்காதீங்கப்பூ...


வாத்தியாரப் பத்தி தெரியுமில்ல...அவரோட வரலாறுல உங்களுக்கும் இடம் குடுத்துடுவாரு

அவருக்கு கொடுத்தாச்சு சிவா ஜி. அவரும் நமது கதையில் எழுதி முடிச்சாச்சு

தளபதி
13-09-2007, 09:40 AM
இந்த அரசியல் நவீன கதாகலாட்சேபத்தையும் விடவில்லை போலிருக்கே. சாமா சாமிகள் மாமியை பார்த்துக்கிறதை விட அரசியல் அதிகம் ஆர்வம் காட்டுறதா தெருவிலே ஒரு பேச்சு அடிபடுதே!! இதை யாராச்சும் அந்த மாமா காதிலே போட்டு மாமி மகமாயியா கிளம்பறதுக்குள்ள சரிப் பண்ணினா புண்ணியமா போகும்.

சிவா.ஜி
13-09-2007, 09:44 AM
இந்த அரசியல் நவீன கதாகலாட்சேபத்தையும் விடவில்லை போலிருக்கே. சாமா சாமிகள் மாமியை பார்த்துக்கிறதை விட அரசியல் அதிகம் ஆர்வம் காட்டுறதா தெருவிலே ஒரு பேச்சு அடிபடுதே!! இதை யாராச்சும் அந்த மாமா காதிலே போட்டு மாமி மகமாயியா கிளம்பறதுக்குள்ள சரிப் பண்ணினா புண்ணியமா போகும்.

பேச்சு அடிபட்டா பரவாயில்ல...சாமா,மாமா அடிபடறத பாக்கமுடியுமா....ஏனய்யா உங்களுக்கு இந்த ஆசை.மாமியே மாமா மேல ஆர்வம் காட்டாததாலத்தானே இந்த தொழிலுக்கே மாமா வந்தார். ஹா..ஹா..இது எப்டி இருக்கு?

lolluvathiyar
13-09-2007, 02:52 PM
மாமியே மாமா மேல ஆர்வம் காட்டாததாலத்தானே இந்த தொழிலுக்கே மாமா வந்தார். ஹா..ஹா..இது எப்டி இருக்கு?

இந்த ஒரு பதிலை கோட் பன்னி மாமிக்கு அனுப்பினால் போதும் தின்னை கூட மிஞ்சாது

மனோஜ்
13-09-2007, 07:09 PM
சிவா மாமாவுக்கு கண்ணு கொலரா ஓரு ஓட்டுதான் வித்தியாசம்
மற்றபடி அனைத்தும் சூப்பர்

சிவா.ஜி
14-09-2007, 05:43 AM
சிவா மாமாவுக்கு கண்ணு கொலரா ஓரு ஓட்டுதான் வித்தியாசம்
மற்றபடி அனைத்தும் சூப்பர்

அய்யா மனோஜ்....சாமா மாமா பாக்கும்போது ரெண்டு ஓட்டு வித்தியாசமிருந்தது அதுக்குள்ள யாரையோ வளைச்சி போட்டுட்டீங்க.அதுக்கு அவர் என்ன பண்ணுவார் பாவம்.

சாராகுமார்
14-09-2007, 06:05 AM
சிவா உங்க நவீன காலட்சேபம் அருமையோ அருமை.நடப்பு கால அரசியலையும் ஒரு பிடி பிடிக்கிறீர்கள்.கவனம்.உருட்டுக்கட்டை,ஆட்டோ எல்லாம் மன்றத்தை தேடி வரப்போகுது.

சிவா.ஜி
14-09-2007, 06:12 AM
சிவா உங்க நவீன காலட்சேபம் அருமையோ அருமை.நடப்பு கால அரசியலையும் ஒரு பிடி பிடிக்கிறீர்கள்.கவனம்.உருட்டுக்கட்டை,ஆட்டோ எல்லாம் மன்றத்தை தேடி வரப்போகுது.

நான் சாமா மாமாவை கை காட்டி விட்டுட்டு எஸ்கேப் ஆயிடுவேனே..
பாராட்டுக்கு மிக்க நன்றி சாராகுமார்.

பூமகள்
14-09-2007, 06:33 AM
அம்மா மலரு....நல்லாத்தான போய்ட்டிருக்கு...ஏன்...ஏன் இந்த...... நாராயனா...நாராயனா...

அது ஒன்னும் இல்லை சிவா அண்ணா.. மலர் எப்பவோ குட்டி நாரதர் ஆயிட்டார்... ஹி ஹி...!! அதனோட விளைவே இது....!!

சிவா.ஜி
14-09-2007, 06:55 AM
அது ஒன்னும் இல்லை சிவா அண்ணா.. மலர் எப்பவோ குட்டி நாரதர் ஆயிட்டார்... ஹி ஹி...!! அதனோட விளைவே இது....!!

குட்டி நாரதருக்கே இந்த விளைவுன்னா.....அப்ப போகப் போக...என்ன ஆகறது....நாராயனா.....

lolluvathiyar
14-09-2007, 07:46 AM
அரசியலையும் ஒரு பிடி பிடிக்கிறீர்கள்.கவனம்.உருட்டுக்கட்டை,ஆட்டோ எல்லாம் மன்றத்தை தேடி வரப்போகுது.

இங்க அத விட பெரிய தாதாக்கள் இருகிறோம்.

சிவா.ஜி
14-09-2007, 07:48 AM
இங்க அத விட பெரிய தாதாக்கள் இருகிறோம்.

இது..! அதுதான் எங்களின் தானைத் தலைவர் என்பது. நன்றி தலைவரே.

சிவா.ஜி
17-02-2008, 01:49 PM
மன்றத்துல காலட்சேபம் பண்ணிக்கிட்டிருந்த...சாமா சாஸ்திரிகளுக்கு...அடிச்சது லக்கி பிரைஸ்....அமெரிக்காவுல இருக்கிற தமிழர்களெல்லாம் சேர்ந்து அவரோட காலட்சேபத்துக்கு ஏற்பாடு பண்ணினதால அங்கே போய்...மாகாணம்..மாகானமாய் கதையை சொல்லிட்டு...நேத்தைக்குத்தான் திரும்பி வந்தார்.அதனால இன்னைக்கு அவரோட கதைக்கு ஏற்பாடு பண்ணிட்டோம்.இனி கதையைக் கேளுங்கோ....

காலட்சேபம்-8
சாமா: திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......பிரும்மானந்த ஹரே கஜானன தாண்டவனே ஜகனே....

ஆதௌ கீர்த்தனாரம்பத்துல...மன்றத்துல இருக்கறவாள்லாம் எங்களை மன்னிச்சிடுங்கோ....ஆம்படையா ரொம்ப காலமா நச்சரிச்சிண்டிருந்தா....இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த ஒண்டுக் குடித்தனத்துலயே காலத்தைக் கழிக்கறதா உத்தேசம்...ஒரு நல்ல வீடா எப்ப கட்டப் போறேள்ன்னு...தினம் பிடுங்கி எடுத்திண்டிருந்தா...அந்த சமயம் பாத்து நம்ம அறிஞர்வாள் தயவால அமெரிக்கா போகற சான்ஸ் அடிச்சது...இந்த பிள்ளையாண்டான்களையும் கூட்டிண்டு ஒரு டூர் போயிட்டு வந்தோம்.நங்க நல்லூர்ல ஒரு சின்ன வீடு கட்டற அளவுக்கு டாலரை கொடுத்துபிட்டா அந்த ஜனங்கள்.

கிச்சு: இன்னாது சின்ன வூடா..இன்னா மாமு...டகால்ட்டி வேலையெல்லாம் காமிக்கிறியே...

சாமா: அடே கிராதகா....சின்னதா ஒரு வீட்டைக் கட்டலாம்ன்னா....கட்டையில போறவன்..கன்னா பின்னான்னு பேஷரையே....நோக்கு இன்னைக்கு பேட்டா கட்.

கிச்சு: அய்யய்யோ அப்படியெல்லாம் பண்ணிடாத மாமு...மினிம்மா...பாட்டிலோட காத்துக்கினிருப்பா....

சாமா: உன்னைத் திருத்தவே முடியாதுடா....சரி..கதைக்கு வருவோம்...இந்தியா என் நாடு,இந்தியர்களெல்லாம் என் சகோதர சகோதரிகள்...அப்படீன்னு நாம சின்ன வயசுலருந்து பாட புத்தகத்துல படிச்சிண்டு வரோம். அதை அந்த பிள்ளையாண்டான் படிக்கலையா....இல்லை அந்த பிள்ளையாண்டானோட மாமா...படிக்க வேண்டாம்னுட்டாரா...நேக்குத் தெரியல...ஆனா அவா செய்யறது கொஞ்சம் கூட நன்னால்ல..

விச்சு; மாமா நீங்க யாரைப் பத்தி சொல்றேள்...நேக்கு தலையும் புரியலை வாலும் புரியலை...

சாமா: அதாண்டா அம்பி நம்ம பால் தாக்கரே இருக்காரோன்னோ அவரோட மருமான் ராஜ் தாக்கரே அவரை பத்திதான் சொல்லிண்டிருக்கேன்...பேர்லயே அது இருக்கறதாலயோ என்னமோ...வட இந்தியாவச் சேர்ந்தவங்களையெல்லாம்..அநியாயமா தாக்கிண்டு இருக்கார்.அவாள்ளாம் அங்கே இருக்கப்டாதுன்னு...அடிச்சி விரட்டிண்டிருக்கார்...கேக்கவே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...

கிச்சு: ராஜ் தாக்கரே....இப்ப தாக்கராருன்னா...அவங்க மாமு பால் தாக்கரே 30 வருஷத்துக்கு முன்னால நம்ம தமில் காரங்கலையெல்லாம் தாக்கிகினு இருந்தாரு....அவங்க பேமிலிக்கே இதே வேலைதான் மாமு...இன்னா பண்ணச் சொல்ற....பொயிட்டீசியங்ன்னாலே எதானா ஸ்டண்ட் அடிச்சிக்கினே இருந்தாத் தான...நூஸ் பேப்பர்ல இருந்துக்கினே இருப்பாங்க...

சாமா: ஆனா அதுக்காக பாவம் அப்பாவி ஜனங்களையெல்லம் கஷ்டப் படுத்திண்டிருக்காரே....மும்பைங்கறது...இந்தியாவுக்குள்ள தானே இருக்கு...இதுல BIG B ன்னு ஜனங்க பாசமா கூப்பிடுற அமிதாப்பையுமில்ல உண்டு இல்லன்னு பண்ணிப்பிட்டா....இவாளுக்கெல்லாம் தாங்களும் இந்தியாவைச் சேந்தவங்கத்தாங்கற எண்ணமே இல்லையா...

விச்சு: மாமா...உணர்ச்சி வசப்படாதீங்கோ...இந்தாங்கோ இந்த தூத்தத்தை குடிங்கோ...

சாமா:..விச்சு...இது நல்ல தண்ணித்தானே...அந்த கடங்காரன் கிச்சு மின்ன இப்படித்தான் என்ன எழவையோ குடுத்து என்னை சாச்சிப்பிட்டான்...

கிச்சு: சரி மாமு...இன்னைக்கு...இத்தோட முடிச்சுக்கோ...ரொம்ப டென்ஸனாயிட்ட...போகும் போது நீயும் என்கூட வா...மினிம்மாகிட்ட எக்ஸ்ட்ராவா சரக்கு வாங்கிக்கலாம்...

சாமா: அட பிரும்மஹத்தி....அந்த எழவையஎல்லாம் சபையில ஏண்டா சொல்ற...நோக்கு வேணுமின்னா என்ன எழவோ பண்ணிக்க...என்னை ஏண்டா...சதாய்க்கற...

சரி....பயணக் களைப்பு தீரறதுக்குள்ள மன்றம் வந்து ஒரு அட்டெண்டென்ஸை போட்டுட்டு போயிடலாமென்னுதான் வந்தோம்...நாளைக்கு இன்னும் நிறைய கதையைச் சொல்றேன்.அதனால...

\\\"கதை கேட்ட உங்களுக்கும்
கதை சொன்ன எங்களுக்கும்
மங்களம்...சுப மங்களம்......\\\"

இளசு
18-02-2008, 05:00 AM
வாங்கோ வாங்கோ சாமா..

காமா சோமான்னு இல்லாமே நச்சுனு நல்ல பாய்ண்ட்டை சட்டுன்னு புடிச்சேள்..

மண்ணாங்கட்டின்னு பேர் வச்சு தினம் அதைச் சொல்லி அழைச்சால், அந்தக் குழந்தை மக்காக வளரத்தான் வாய்ப்பு அதிகமாம்..

தாக்கரேன்னு பேர் வச்சிண்டா...?

அடி கொடுத்து பேப்பரில் அடிபடும் குடும்பம் அது..
அடி வாங்கும் நிலையும் வரும்!

சிவா.ஜி
18-02-2008, 05:59 AM
சரியாச் சொன்னீங்க இளசு...இன்னைக்கு இவங்க அநியாயம் பண்ணா...அது நாளைக்கு இவங்களுக்கே வினையா முடியும்.
ஊக்கத்திற்கு நன்றி.

மனோஜ்
18-02-2008, 07:31 AM
நல்ல செய்தி அப்படியே மன்ற செய்தி ஒன்னும் இல்லையா சாமா
போமா என்ன மா மன்ற செய்தியும் ஒன்னு இரண்டு சொல்லுமா

சிவா.ஜி
18-02-2008, 07:35 AM
நல்ல செய்தி அப்படியே மன்ற செய்தி ஒன்னும் இல்லையா சாமா
போமா என்ன மா மன்ற செய்தியும் ஒன்னு இரண்டு சொல்லுமா

ரொம்ப நன்றிம்மா....மன்ற செய்திதானே சொல்லிட்டா போச்சுமா...

lolluvathiyar
18-02-2008, 08:01 AM
ஆகா 5 மாத இடைவெளி விட்டு அன்னன் சிவா ஜி அவர்கள் கதாகாலசேபட்சத்தை தொடர ஆரம்பிச்சுட்டாரு. இதை மிஸ் பன்னி ஏங்கி கிட்டு இருன்தேன் அருமை சிவாஜி தொடருங்கள்


அடி கொடுத்து பேப்பரில் அடிபடும் குடும்பம் அது..அடி வாங்கும் நிலையும் வரும்!

என்னிக்குமே அரசியல்வாதிகள் அடிவாங்குவதில்லை மாறாக வேறு அப்பாவிகள் அல்லவா அடி வாங்குவாங்க. விரைவில் இந்த கலாசாரம் தமிழ் நாட்டில் வருமென்று நினைகிறேன்.

சிவா.ஜி
18-02-2008, 09:43 AM
என்னிக்குமே அரசியல்வாதிகள் அடிவாங்குவதில்லை மாறாக வேறு அப்பாவிகள் அல்லவா அடி வாங்குவாங்க. விரைவில் இந்த கலாசாரம் தமிழ் நாட்டில் வருமென்று நினைகிறேன்.

எனக்கென்னவோ இந்த கலாச்சாரம் தமிழ்நாட்டுக்கு வராது என்றே தோன்றுகிறது வாத்தியார்.நமது மக்களின் வாழ்க்கைமுறை அதை அனுமதிக்காது.வந்தாரை வாழவைக்கும் தமிழகம்...இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என்றே தோன்றுகிறது.

பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி வாத்தியார்.இனி தொடர்ந்து தர முயற்சிக்கிறேன்.

அமரன்
18-02-2008, 09:58 AM
ஏங்க சாமா சாஸ்திரி.. நீங்க என்ன கரண்டு கார்ப்பரேசன்லயா வேலை பார்க்கிறீங்க.. கரன்ட் நியூஸை போட்டுத்தாக்குறீங்களே.. அதென்னமோ போங்க.. பால்தக்கரேயையும் பாழாய்ப்போன வாரிசு அரசியல் வாரி அணைத்ததால், இந்த தக்கரே வாரப்பட்டாராமே.. அதனால தனீக்கட்சி துவங்கி இந்த அலப்பறை பண்ணுறாராமே.. தக்கரே இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறது போலும். பழைய ஆயுதத்தை தீட்டி எடுத்துட்டு வந்திருக்கார் பாருங்கோ.. அது சரி. காவல்துறை வல்லூராட்டம் காத்திருக்காமே.. தக்கரேயை தூக்கிட்டுப் போக நிசங்களா..

பாருங்க இந்த அக்னிநட்சத்திரத்துல உங்கள் மீள் சபைவரவு மகிழ்வு அடங்கிப்போயிட்டுது. இனிமேல் அடிக்கடி வாங்க..

சிவா.ஜி
18-02-2008, 10:24 AM
அடடே...யாரு இது அமரன் அம்பியா...நன்னாருக்கியா...எவ்ளோ நாளாயிடுத்து நம்மவாளையெல்லாம் பாத்து...ஷேமமா இருக்கியோன்னோ...
வருவேண்டா அம்பி...இன்னும் நிறைய செய்தியோட வந்துண்டே இருக்கேன். ரொம்ப நன்றி.

யவனிகா
18-02-2008, 10:41 AM
நோக்கு இப்படியொரு அவதாரம் வேற இருக்கா...மறச்சுப்புட்டேளே...கலக்கறேள் போங்கோ...அப்பப்போ பில்டர் காப்பி வேணும்னா தங்கச்சியக் கேளுங்கோ...என் ஆம்படையான் கிட்ட கொடுத்தனுப்புறேன்...அண்ணா...நேக்கொரு சந்தேகம்...அய்யர்வாள் பாசை வெளுத்து வாங்கறளே....ஏதாவது அய்யர் பொண்ணுக்காக கத்துண்டதா....பேஷ்...பேஷ்...

சிவா.ஜி
18-02-2008, 10:48 AM
.அண்ணா...நேக்கொரு சந்தேகம்...அய்யர்வாள் பாசை வெளுத்து வாங்கறளே....ஏதாவது அய்யர் பொண்ணுக்காக கத்துண்டதா....பேஷ்...பேஷ்...

அய்யர் பொண்ணுக்காக இல்லை...அய்யர் பொண்ணுதான் கத்துக்குடுத்தா...ஏதோ அப்ப கத்துண்டதை வெச்சுண்டு...காலட்சேபம் நடந்துண்டிருக்கு...சரி..சரி..சீக்கிரமா ஒரு நல்ல ஃபில்டர் காஃபியை போட்டு எடுத்துண்டு வாம்மா கொழந்த...ஷேமமா இருப்பே.

lolluvathiyar
18-02-2008, 12:41 PM
எனக்கென்னவோ இந்த கலாச்சாரம் தமிழ்நாட்டுக்கு வராது என்றே தோன்றுகிறது வாத்தியார்.

அப்படி சொல்ல முடியாது சிவா ஜி, தமிழர்களிலேயே இங்கு சில பிரிவினரை ஆரியர் வட இந்தியர் என்றும் ஏன் சில அரசியல் கட்சி தலைவர்கள் மலையாளி தெலுங்கர் என்று பிரித்து காட்டவில்லையே? இதுவே காலபோக்கில் தொன்டர்கள் பிரிவினையாக்கி வன்முரைக்கு கொன்டு போவார்கள்.


அண்ணா...நேக்கொரு சந்தேகம்...அய்யர்வாள் பாசை வெளுத்து வாங்கறளே....ஏதாவது அய்யர் பொண்ணுக்காக கத்துண்டதா..

நல்ல தங்கச்சி, எப்படி இப்படி ஒரு நல்ல என்னம் அன்னிகிட்ட அடிவாங்க வக்கவே சொன்ன மாதிரி அல்லவா இருக்குது.

சிவா.ஜி
18-02-2008, 12:42 PM
காலட்சேபம்-9

சாமா: திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......பிரும்மானந்த ஹரே கஜானன தாண்டவனே ஜகனே....

ஆதௌ கீர்த்தனாரம்பத்துல..பெரியவா,சிறியவா எல்லாருக்கும் வணக்கம்.நேத்தைக்கு கதையை அவசரமா முடிச்சிட்டு போனதுக்கு மன்னிச்சுடுங்கோ....ஜெட்லாக்ன்னு ஒரு சமாச்சாரம் சொல்லுவாளே...அதுல மாட்டிண்டுட்டேன்...சரியாத் தூக்கமில்லாம...கண்ணுக்குள்ள பட்டாம்பூச்சிகள் பறந்துண்டிருந்தது...ஆத்துக்குப் போயி..மாமி வெச்சுக் குடுத்த வெந்நீர்ல...நன்னா ஒரு குளியல் போட்டுட்டு,கீரை மசியலும்,கத்திரிக்காய் கொத்ஸுவும் சேத்து...நன்னா ஒரு பிடி பிடிச்சுட்டு தூங்கி எழுந்ததுல...காலம்பற ஃப்ரெஷ் ஆயிட்டேன்.
சரி இப்ப கதைக்குப் போகலாமா...

கிச்சு: மேடையில நின்னுக்குனு அத்த துண்ணேன்..இத்த துண்ணேன்னு பேஜார் பண்ணாத மாமு...வாயில எச்சி ஊறுது...

சாமா: அடடா...சாரிடா அம்பி...ஓட்டல் சாப்பாடு சாப்ட்றவா முன்னால..மாமி சாப்பாட்டைப் பத்தி சொல்லிட்டேன்.சரி...மொதல்ல நம்ம நாட்டுக்காக ஓடி தங்கம் கொண்டு வந்திருக்கிற கொழந்தைகள் மஞ்சித் கவுர்,சித்ரா சோமன்,சினி ஜோஸப்,மந்தீப் கவுர்...இவாளுக்கெல்லாம் நம்ம பாராட்டை தெரியப்படுத்திடலாம்...

விச்சு: ஆமா மாமா...தோஹாவுல நடக்கற போட்டியில இவா தொடர் ஓட்டத்துல தங்கம் வாங்கினதுல நமக்கெல்லாம் பெருமைதான்.

கிச்சு: இவுங்கோ தங்கம் வாங்குனாலும்...இந்தியாவுக்கு கிடைச்சுதுன்னு சொல்றோம்...ஆனா...இந்தியாவுக்கு உலக வங்கி லோன் குடுத்தா...அந்த தலைவருக்கு கிடைச்சுதுன்னு ஏன் சொல்றோம்....

சாமா: அடே பாதகா...நோக்கு நெறைய தரம் சொல்லிட்டேன்...பெரிய இடத்து சமாச்சாரமெல்லாம் பேசப்ப்டாதுன்னு....எப்படியும் அந்த லோன் பணம் அவாளுக்குத் தானே போய்ச் சேரப் போறது அதாண்டா அப்படிச் சொல்றா..அடடா...இவனோட சேந்து நானும்...பேசப்டாததை பேசிட்டேனே...சிவ...சிவா...

கிச்சு: அத்த வுடு மாமு...நங்க நல்லூர்ல வூடு கட்ட எடம் வாங்கினியே பட்டா கெட்ச்சிச்சா இல்லியா...

சாமா: ஏண்டா அம்பி கேக்கறே...

கிச்சு: அதுக்கில்ல மாமு...வேலூர்ல..முதலமைச்சர் குட்த்த பட்டாவே செல்லாதுன்னு ஆபீஸருங்க சொல்லியிருக்காங்க....அந்த ஜனங்களையெல்லாம் காலி பண்ணச் சொல்லி டார்ச்சர் குடுத்துனுக்கிறாங்கோ...அதான் கேட்டேன்...

சாமா: நல்ல வேளைடா அம்பி...நான் பக்காவா எல்லாத்தையும் வாங்கி வெச்சுண்டேன்.இல்லையானா...மதுராந்தகத்துல நம்ம கேப்டனுக்கு ஆனா மாதிரி எனக்கும் பிரச்சனையாகியிருக்கும்.

விச்சு: அந்த ஊர் மக்களெல்லாம் அவரை எதுத்து போராட்டம்ன்னா நடத்துறா....

சாமா: அது பொதுமக்கள் நடத்தற போரட்டமா...இல்ல அப்படி நடத்த வெக்கறாளான்னு தெரியலயேடா அம்பி...சரிடா அம்பி நமக்கு எதுக்கு பொல்லாப்பு....நம்ம மன்றத்து புள்ளையாண்டான் ஓவியனுக்கு சிங்கப்பூர்ல கல்யாணம் ஷேமமா நடந்து முடிஞ்சிடுத்து...அவா ரெண்டு பேருக்கும் நம்ம சார்புல ஒரு பெரிய வாழ்த்தை சொல்லிடுவோம்.

கிச்சு: இம்மாம் நாளும்...டேக்கா காமிச்சிகினு இருந்தாரு...இப்ப நல்லா மாட்டிக்கினாரு...இனிமேத்தான் மாமு இருக்கு கூத்து...

சாமா: அடே பாவி...ஏண்டா அவாளை பயமுறுத்தரே...ஏற்கனவே இந்த ஆரென் பிள்ளையாண்டான் எல்லாரையும் பயமுறுத்திண்டே இருக்கார்.நீ வேற சேர்ந்துண்டு இப்படி பேசினா...மத்த புள்ளையாண்டானுங்க மதி,அக்னி,அமரன்,ஆதவா,ராக்கி,சுகந்த்,வசீகரன்...இவாள்லாம் பயந்துற மாட்டா..?

விச்சு: மாமா...அன்புவை விட்டுட்டேளே...

சாமா: அன்புவா....அவர் ஓவியனோட கல்யாண விசேஷத்துக்கு போயிட்டு வந்தாரோன்னோ...அங்கே ஓவியனோட நிலைமையைப் பாத்து...அரண்டு போயிட்டார்....ஓவியனை சிரிக்க வெக்க அவரோட மாமா பண்ணின எல்லா முயற்சியும் தோத்ததைப் பாத்து...நமக்கும் இந்த நிலைமைதானான்னு புலம்பிண்டே இருக்கார்.

விச்சு: அப்ப இனிமே ஓவியன் வண்ணங்களை தொலைத்த ஓவியன் இல்ல...சிரிப்பைத் தொலைத்த ஓவியன்னு சொல்லுங்கோ..

சாமா: அடடா....நம்ம ஆத்து மாட்டுப்பொண்ணு அந்த பாரதி இதைப் படிச்சா சங்கடப்படுவாரே...கொழந்த பாரதி...நாங்களெல்லாம் இப்படித்தான் ஓவியனை..கலாய்ச்சுண்டே இருப்போம்....கவலைப் படாதேம்மா....வேணுன்னா நீயும் எங்களோட ஜாயின் பண்ணிக்கோ...ஹி...ஹி...

கிச்சு: இன்னா மாமு...நீயும் எங்களோட சேந்து கலாய்க்கிறியா....பாவம் ஓவியன் வுட்று...

சாமா: சரி...சரி...போறும்...நன்னாருக்கட்டும்....லோகத்துல இருக்கற எல்லா நலமும் ஒண்ணா கிடைச்சு சந்தோஷமா வாழனுன்னு அந்த அம்பாளை பிரார்த்தனை பண்ணிண்டு...

\"கதை கேட்ட உங்களுக்கும்
கதை சொன்ன எங்களுக்கும்
மங்களம்...சுப மங்களம்......\"

நேசம்
18-02-2008, 01:16 PM
படிக்க தவறாவிட்ட திரி. ரொம்ப அருமையாக இருந்தது சிவாண்னா.

சிவா.ஜி
18-02-2008, 01:20 PM
படிக்க தவறாவிட்ட திரி. ரொம்ப அருமையாக இருந்தது சிவாண்னா.

ரொம்ப நன்றி தம்பி.

மனோஜ்
19-02-2008, 08:12 AM
சாமா: அடே பாவி...ஏண்டா அவாளை பயமுறுத்தரே...ஏற்கனவே இந்த ஆரென் பிள்ளையாண்டான் எல்லாரையும் பயமுறுத்திண்டே இருக்கார்.நீ வேற சேர்ந்துண்டு இப்படி பேசினா...மத்த புள்ளையாண்டானுங்க மதி,அக்னி,அமரன்,ஆதவா,ராக்கி,சுகந்த்,வசீகரன்...இவாள ்லாம் பயந்துற மாட்டா..?
சாமா சாஸ்திகலே நானும் இந்த லிஸ்டுதான் ஞாபகபடுத்திக்கோங்க

lolluvathiyar
19-02-2008, 09:03 AM
ஆகா கதாகாலட்சேபம் வேகமா தூள் பறக்குது இந்த பாகத்துல ஓவியன இழுத்துபுட்டீங்க. சிவா ஜி எனக்கு ஒரு சந்தேகம் ஓவியனுக்கு இப்பதான் கல்யானம் ஆகுதா? ஏன்னா நம்ம மாவீரன் லொள்ளுவாத்தியார் கதையில அவருக்கு 35 ..................... அல்லவா சொல்லிகிட்டு இருந்தோம்.
வரட்டும் ஓவியன், என்ன கிச்சு சொல்லர ஓ அவரே நொந்து நூடில் ஆகிதான் வருவாரோ. சரி விட்டரலாம்

பூமகள்
19-02-2008, 09:51 AM
ஏங்க சாமா மாமா..!
அமெரிக்கா பிளைட் பிடிச்சி போனது தான் போனேள்.. இந்த பூவாண்ட ஒத்த வார்த்த சொல்லாம போயிட்டேளே..!

இத்தன நாலும் கால்ட்சேபம் கேக்க காத்துண்டு நின்னேன் மாமா..!

வந்ததும் தாக்கரே பற்றி சொல்லி தாக்குப்புட்டீரே..!
பத்தாததற்கு சிங்கையில் ஓவியரின் திருமணம் பற்றியும் சொல்லி ஒரு ஆல்ரவுண்ட் அடிச்சிட்டேள்..!

நேத்து தான் செத்த நேரம் ஓவியன் அண்ணாவோடு பேசிட்டு இருந்தேனா... கான்பிரன்ஸ் தான் மாமா. பிள்ளையாண்டான்.. ரொம்பவே சோகமாய் பேசினார். அவரைச் சிரிக்க வைக்க நானும் படாத பாடு பட்டேன்.
மனிதர் போற போக்கில் ஒரு விசயம் சொன்னார்.. அரென் அண்ணா காட்டிய அதே கடையில் வெண்டக்காய் வாங்க வேண்டிய நிலையும் அடுத்த நாளே வந்துட்டதாம்.. மனிதர் எல்லா வெண்டைக்காய்க்கும் பிறவிப்பயன் கொடுத்ததை சொல்லிச் சொல்லி பெருமை பட்டுண்டார். நேக்கும் ரொம்ப சந்தோசமா இருந்துச்சுங்க மாமா..!

எப்படியோ பிள்ளையாண்டான் நன்னா சேமமா இருந்தா சந்தோசம் தான். :)

ரொம்ப நன்னா இருக்கு சாமா மாமா...!
இனிமே எப்பவும் சொல்லாம போகக் கூடாது.. சரிங்களா மாமா??

செல்வா
19-02-2008, 11:31 AM
நேத்து தான் செத்த நேரம் ஓவியன் அண்ணாவோடு பேசிட்டு இருந்தேனா... கான்பிரன்ஸ் தான் மாமா. பிள்ளையாண்டான்.. ரொம்பவே சோகமாய் பேசினார். நேக்கும் ரொம்ப சந்தோசமா இருந்துச்சுங்க மாமா..!


என்ன ஒரு நல்லெண்ணம் பாருங்கோ... அப்பா ஓவியண்ணா இத கொஞ்சம் பாத்துட்டு தான் போங்களேன்.


சிவாண்ணா மனதிலிருப்பதை வார்த்தையாக்கி
வார்த்தைகளை கோர்வையாக்கி
கோர்த்தவற்றை மாலையாக்கி சூட
தகுந்த நேரமின்மையால் பின்னூட்டம் பலமாகப் பின்பு.

ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிடுறன்.....

முடியல..... :D:D:D

சிவா.ஜி
19-02-2008, 11:32 AM
சாமா சாஸ்திகலே நானும் இந்த லிஸ்டுதான் ஞாபகபடுத்திக்கோங்க

அடடா...மறந்துட்டேனே...ஆமா ஆமா...இந்த பிள்ளையாண்டானும் வரிசையில நின்னுண்டிருக்கார்..ஆனா யாரும் பயந்துடப்டாது...கல்யாணம்ங்கறது...ஒருத்தரோட வாழ்க்கையை பூரணமாக்கறது...எல்லாரும்..நல்லா ஷேமமா இருப்பேள்.

சிவா.ஜி
19-02-2008, 11:34 AM
ஓவியனுக்கு இப்பதான் கல்யானம் ஆகுதா? ஏன்னா நம்ம மாவீரன் லொள்ளுவாத்தியார் கதையில அவருக்கு 35 ..................... அல்லவா சொல்லிகிட்டு இருந்தோம்.
வாத்தியாரே இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல...அவரே பாவம்...பிப்ரவரி 11 ஆம் தேதியிலருந்து முகத்துல ஏதோ ஒண்ணை...வருத்ததோட தேடிக்கிட்டிருக்காராம்....இன்னும் 34 எல்லாம்...ட்டூ மச்...

சிவா.ஜி
19-02-2008, 11:49 AM
ஏங்க சாமா மாமா..!
அமெரிக்கா பிளைட் பிடிச்சி போனது தான் போனேள்.. இந்த பூவாண்ட ஒத்த வார்த்த சொல்லாம போயிட்டேளே..!

பிள்ளையாண்டான்.. ரொம்பவே சோகமாய் பேசினார். அவரைச் சிரிக்க வைக்க நானும் படாத பாடு பட்டேன்.
மனிதர் போற போக்கில் ஒரு விசயம் சொன்னார்.. அரென் அண்ணா காட்டிய அதே கடையில் வெண்டக்காய் வாங்க வேண்டிய நிலையும் அடுத்த நாளே வந்துட்டதாம்.. மனிதர் எல்லா வெண்டைக்காய்க்கும் பிறவிப்பயன் கொடுத்ததை சொல்லிச் சொல்லி பெருமை பட்டுண்டார். நேக்கும் ரொம்ப சந்தோசமா இருந்துச்சுங்க மாமா..!

சாரிம்மா கொழந்த...அறிஞர் ரொம்ப அவசரமா..டிக்கெட்டை அனுப்பிட்டார்...அடிச்சி பிடிச்சிண்டு ஓடி ஃப்ளைட்டப் பிடிச்சி..அமெரிக்கா போறதுக்குள்ள...போறும் போறுன்னு ஆயிடுத்து.

அதுசரி...ஏன் எல்லாருமே நம்ம ஓவியனை சோகமாவே இருக்கறதா சொல்றேள்...அம்பி கல்யாணம் பண்ணிண்டு சந்தோஷமாத்தானே இருக்கார்....என்ன கொஞ்சமா பயப்படறார் போலருக்கு...வாழ்க்கை சுமையைத் தாங்கனுமேன்னு...அதெல்லாம் சமாளிச்சுண்டுடுவார்...

இனிமே போறச்சே மறக்காம சொல்லிட்டு போறேன்...சரியா கொழந்த...

மலர்
19-02-2008, 02:11 PM
ரெண்டு காலட்சேபம் போயிட்டா..... :sprachlos020: :sprachlos020:
சிவா அண்ணா நேக்கு ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லிருந்தா நானும்
அறிஞர் அண்ணாவை அரிச்சாச்சும் எனக்கும் ஒரு டிக்கெட் வாங்கியிருப்பேனல்லோ.....:D :D
அப்புறம்....ஹீ..ஹீ......
சூப்பரா போயிட்டு இருக்கு...... நல்லாயிருக்குன்னா....
பாராட்டுக்கள்..... :icon_rollout: :icon_rollout:

அமரன்
19-02-2008, 02:34 PM
ரெண்டு காலட்சேபம் போயிட்டா..... :sprachlos020: :sprachlos020:
சிவா அண்ணா நேக்கு ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லிருந்தா நானும்
அறிஞர் அண்ணாவை அரிச்சாச்சும் எனக்கும் ஒரு டிக்கெட் வாங்கியிருப்பேனல்லோ.....:D :D
அப்புறம்....ஹீ..ஹீ......
சூப்பரா போயிட்டு இருக்கு...... நல்லாயிருக்குன்னா....
பாராட்டுக்கள்..... :icon_rollout: :icon_rollout:

சரியான கி(க)ருமிதான் நீ...

அறிஞர்
19-02-2008, 05:27 PM
இப்ப நடக்கற சம்பவங்களை வைத்து.. நம்மாட்களையும் கதாகலாட்சேபத்தில் இழுத்துவிட்டீர்கள்.. அருமை சிவா....

சிவா.ஜி
20-02-2008, 03:20 AM
http://www.tamilmantram.com:80/vb/ http://www.tamilmantram.com:80/vb/
சிவா அண்ணா நேக்கு ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லிருந்தா நானும் அறிஞர் அண்ணாவை அரிச்சாச்சும் எனக்கும் ஒரு டிக்கெட் வாங்கியிருப்பேனல்லோ.....http://www.tamilmantram.com:80/vb/ http://www.tamilmantram.com:80/vb/
http://www.tamilmantram.com:80/vb/ http://www.tamilmantram.com:80/vb/
அடடா...மிஸ்டேக் ஆயிடுத்தே...அந்த இம்சை கிச்சு படவாவை ஓரங்கட்டிட்டு உன்னை கூட்டிண்டு போயிருக்கலாம்...அடிலாய்டுல நடந்த கதையில அந்த அபிஷ்டு நன்னா மானத்தை வாங்கிட்டான்.
அடுத்தமுறை ஆப்பிரிக்கா போகும்போது மறக்காம கூட்டின்ண்டு போறேன்...சரியா கொழந்த...

சிவா.ஜி
20-02-2008, 03:21 AM
இப்ப நடக்கற சம்பவங்களை வைத்து.. நம்மாட்களையும் கதாகலாட்சேபத்தில் இழுத்துவிட்டீர்கள்.. அருமை சிவா....

ரொம்ப நன்றி அறிஞர்.5 மாசம் கேப் விட்டதுக்கு உங்களைத்தான் யூஸ் பண்ணிக்கிட்டேன்...ஹி..ஹி..

யவனிகா
20-02-2008, 05:04 AM
அடுத்தமுறை ஆப்பிரிக்கா போகும்போது மறக்காம கூட்டின்ண்டு போறேன்...சரியா கொழந்த...

அண்ணா...நானு?

இளசு
20-02-2008, 05:45 AM
தோஹா, வேலூர், மதுராந்தகம், சிங்கை, மன்றம் என
அதிவேக ரவுண்டு சுற்றும் சாமா - கலக்குறார் போங்கோ!
பேஷ்..பேஷ்.. ரொம்ம்ம்ம்ம்ப நன்னாருக்கு!

சிவா.ஜி
20-02-2008, 06:52 AM
அண்ணா...நானு?

புள்ளியையும் சேத்துக்கலாம்மா....காமெடி ஸ்கிரிப்ட் எழுத சரியான ஆள் அவர்தான்.அப்புறம் ஆப்பிரிக்கா என்ன அண்டார்டிக்காவுலேயே புள்ளிராசாவோட ரவுசை அரங்கேற்றிடலாம்.

சிவா.ஜி
20-02-2008, 06:53 AM
தோஹா, வேலூர், மதுராந்தகம், சிங்கை, மன்றம் என
அதிவேக ரவுண்டு சுற்றும் சாமா - கலக்குறார் போங்கோ!
பேஷ்..பேஷ்.. ரொம்ம்ம்ம்ம்ப நன்னாருக்கு!

ஹா..ஹா...யாரும் ரவுண்டுகட்டி அடிக்காம இருந்தா ஷேமமா இருக்கும்..
ரொம்ப நன்றி இளசு.

ஜெயாஸ்தா
20-02-2008, 10:54 AM
இந்த நல்ல திரியை எப்படி படிக்காமல் விட்டேன். சிவா அண்ணாவின் இன்னொரு ரசிக்கத்தக்க குசும்பான முகம் இதில் தெரிகிறது. நடப்பு நிகழ்சிகளை நல்லா சொல்றீங்க. இன்னிக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆரம்பத்திலிருந்தே இந்த திரியைப் படித்துவிட்டு உடனே பின்னூட்டமிடுகிறேன். ஆமாண்ணா அந்த அய்யராத்து பொண்ணு இப்போ எங்கேயிருக்குண்ணு கொஞ்சம் என் காதுல சொல்றீங்களா?

சிவா.ஜி
20-02-2008, 10:59 AM
ஆமாண்ணா அந்த அய்யராத்து பொண்ணு இப்போ எங்கேயிருக்குண்ணு கொஞ்சம் என் காதுல சொல்றீங்களா?

காதுல எதுக்கு பொதுவிலேயே சொல்றேனே..என்னோட மிக நல்ல தோழி..தற்சமயம் கலிஃபோர்னியாவில் இருக்கிறாள்.அவள் என்னுடைய திருமணத்திற்கு மும்பையில் இருந்து வந்து கலந்துகொண்ட கலாட்டா இருக்கிறதே....அதைத் தனி திரியில்தான் சொல்லமுடியும்.அவ்வளவு சுவாரசியமாக இருக்கும்.
நேரம் ஓதுக்கி அத்தனையையும் படித்து பின்னூட்டமிட்டதற்கு மனமார்ந்த நன்றி அன்புத் தம்பி.

சிவா.ஜி
21-02-2008, 05:38 AM
காலாட்சேபம்-10

சாமா: திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......பிரும்மானந்த ஹரே கஜானன தாண்டவனே ஜகனே....

ஆதௌ கீர்த்தனாரம்பத்துல.கதை கேக்க வந்த பெரியவா,சிறியவா...சிண்டு சிறிசுகள்...எல்லோருக்கும் நமஸ்காரம்...அச்சு பிச்சு சீரியலாப் போட்டு மனுஷாளோட பிராணனை வாங்கிண்டிருக்கிற டிவி யை கொஞ்சம் ஒதுக்கிட்டு கதை கேக்க வந்தவாளுக்கெல்லாம் எங்க காலட்சேப குழுவோட சார்புல நன்றியை தெரிவிச்சுக்கறோம்....இனி கதைக்கு போகலாமா...

கிச்சு: ஆமா மாமு...எந்த சீரியலப் பாத்தாலும் ஒரே கலீஜா கீது...இவ அவனோட ஓடிப்போயிட்டா...அவன் இவளோட ஜூட் வுட்டுட்டான்...அண்ணியை கொயுந்தனார் ரூட் வுடறதுன்னு...இன்னா சீரியல் எடுக்குறானுங்க....சரி அத்தவுடு நீ ஸ்ட்ரேட்டா கதைக்கு வா...

சாமா: நல்ல சேதியா ஒண்ணு இன்னைக்கு காதுல விழுந்திருக்கு...பூமியில விழறதா இருந்த அமெரிக்காவோட ஸ்பை சாட்டிலைட்டை அவாளே மிஸைலை விட்டு தகர்த்துப்பிட்டாளாம்...எப்படியோ எங்கேயோ விழுந்து எத்தனையோ ஜீவன்களை எடுக்காம இந்த மட்டுக்கும் முடிஞ்சிடுத்தே....பகவானுக்கு நன்றி.

விச்சு: என்ன மாமா நீங்க..நானே அதுக்குள்ள வெடிச்சுப்பிட்டாளேன்னு நினைக்கிறேன்...நீங்க வேற...

சாமா: அடப்பாவி ஏண்டா அம்பி உனக்கு இந்த விபரீத புத்தி..?

விச்சு : இல்லை மாமா...இப்ப விழுமோ அப்ப விழுமோ...இங்கே விழுமோ..அங்கே விழுமோ..ன்னு டென்ஷன்ல இருக்கறதுலயும் ஒரு த்ரில் இருக்கோன்னோ....அது இல்லாம போயிடுத்தேன்னுதான் அப்படிச் சொன்னேன்.

சாமா: ஆமாடா அம்பி...எனக்கு பதினாறு வயசு இருக்கறச்சே...இதே மாதிரிதான் ஸ்கைலாப் அப்படீன்னு ஒரு சாட்டிலைட் பூமியில விழப்போறதுன்னு லோகம் பூரா ஜனங்க பீதியில இருந்தாங்க...அங்க சுத்தி இங்க சுத்தி...அந்த சனியன் இந்தியாவுலத்தான் விழுன்னு வேற சொல்லிப்பிட்டா...அதுவும் தமிழ்நாட்டுலதான் விழும்ன்னு சொன்னா....ஜனங்கள்லாம் பதறிண்டு இருந்தா...ஆனா கெட்டதிலயும் ஒரு நல்லதுங்கறா மாதிரி...எப்படியும் சாகப் போறோம்னுட்டு அந்த பயத்துலயே ஒருத்தரை ஒருத்தர் சங்கடப் படுத்தப்டாதுன்னு ரொம்ப நல்லவாளா நடந்துண்டா...அதை விட பெரிய கூத்து...இருக்கிற ஆடு மாடெல்லாம் வித்து நன்னா சாப்ட்டா...போகும்போது என்னத்த கொண்டு போகப்போறோம்ன்னுட்டு வாய்க்கு ருசியா சாப்டுட்டாவது செத்துப் போவோம்ங்கற நிலைமைக்கு வந்துட்டா...ஆனா அந்த சனியன் ஆஸ்திரேலியாவுல விழுந்திடிச்சி...நிம்மதிப் பெருமூச்சு விட்டவா கூடவே வாயிலயும் வயித்துலயும் அடிச்சிண்டா...இருந்ததையெல்லாம் வித்து தொலைச்சிட்டோமேன்னு...

கிச்சு: ஆஹா...இப்டியெல்லாம் கூட நடந்துச்சா மாமு..விச்சு சொன்னா மாறி இந்த வாட்டியும் கொஞ்சம் லேட் பண்ணியிருந்தாங்கனா...ஜனங்கள கொஞ்ச நாளைக்காவது நல்லவங்களா பாத்திருக்கலாம்.இப்புடி புஸ்ஸுன்னு பூட்ச்சே...

சாமா: சரி எப்படியோ எல்லாம் ஷேமமா முடிஞ்சிடுத்து....ஆனானப்பட்ட ஹிட்லரே....ஒண்ணுமேயில்லாம போயிட்டார்....இவாள்லாம் எந்த மூலைக்கு...

விச்சு: மாமா நீங்க யாரைப் பத்தி சொல்றேள்...

சாமா: அதாண்டா அம்பி நம் முஷாரப் இருக்காரோன்னோ அவரைப் பத்திதான்.எப்படியோ அதிகாரங்களை கையில எடுத்துண்டு ஆடிண்டிருந்தார் மனுஷன்..இப்ப அவரோட தேசத்து ஜனங்களே அவரை வேண்டாமின்னு சொல்லிட்டா....இந்த எலெக்ஷன்ல இப்படி அடி வாங்கிட்டாரே....அந்த நவாஸ் ஷெரீஃபை என்ன பாடு படுத்தினார்...இப்ப அவரும் சர்தாரியும் சேர்ந்து ஆட்சியை அமைச்சு இவரை என்ன பாடு படுத்தப் போறாளோ...பூனைக்கும் காலம் வந்திருக்கு....இனி யானைக்கு என்ன காத்திண்டிருக்குன்னு தெரியல..

கிச்சு: இன்னிக்கு நான் நாளைக்கு நீ...எங்க பேட்டையில பெரிய பிஸ்தான்னு சுத்திக்கினு இருந்தான் கிஸ்னன்...இப்ப அவனை போட்டு தள்ளிட்டு அவனோட எடுப்பு மாணிக்சந்த் முருகன் தாதாவாயிட்டான்....இதெல்லாம் அப்டிதான் நைனா...

சாமா: அது இருக்கட்டுண்டா அம்பி நம்ம தமிழ் மன்றத்துல மனங்கவர்ந்த பதிவாளர்ன்னு ஒரு போட்டி நடத்தறாளே...இதிலயும் வழக்கம் போல ஓட்டு கம்மியாத்தான் விழுமா....இவ்வ்ளவு பேர் இருக்குற இந்த மன்றத்துல வாக்கெடுப்புல கலந்துக்கறவா எண்ணிக்கையைப் பாத்தா வருத்தமா இருகுடா அம்பி.

விச்சு: ஆமா மாமா...இந்தப் போட்டி மட்டுமில்ல...கவிதைப் போட்டியிலக் கூட அப்படித்தான்...அந்த அம்பி அமரனும் பாவம்..வாக்கெடுப்புல கலந்துக்கோங்கோ...கலந்துக்கோங்கோன்னு தவறாம சொல்லிண்டிருக்கார்....பாப்போம் மக்கள் என்ன செய்யறாங்கன்னு...

சாமா: இப்பல்லாம் கவிச் சமர்ல ரொம்ப அற்புதமான கவிதைகளா வந்துண்டிருக்கு..ஒரு கவிதைக்கும் மறு கவிதைக்கும்...பதிஞ்ச நேரத்தைப் பாத்தா சில சமயம் சில விணாடிகள்தான் இருக்கு..ஆனாலும் மக்கள் பிண்றாளே...யவனிகா,பூமகள்,அக்னி,சுகந்தப்ரீதன்,லேட்டஸ்ட்டா...பட்டம் வாங்கியிருக்கிற தீப்பொறி ஜெயஸ்தா,அமரன்,ஆதி அப்படீன்னு அத்தனை பேரும் அற்புதமா எழுதறா...படிக்க படிக்க பெருமையா இருக்குடா அம்பி....

கிச்சு: அக்காங் மாமு...இன்னாமா எய்துதுங்க புள்ளைங்கோ....அத்த பட்சிட்டு எனுக்கே எயுதனுன்னு தோணுதுன்னா பாத்துக்கயேன்..

சாமா: அடடா...கிச்சு உனக்கும் கவிதை எழுத வருமாடா...

கிச்சு: போ மாமு...நீ வேற....தோணுதுன்னுதான சொன்னேன்....

சாமா: சரிடா அம்பிகளா...கதையை முடிச்சிண்டுடுவோம்...அதுக்கு மின்னால...மன்றத்து மக்களுக்கு ஒரு வேண்டுகோள்...நிர்வாகம் நடத்தற போட்டிகளெல்லாம் உங்களுக்காகத்தான்...அதனால அதுல கலந்துண்டு..அதை சிறப்பாக்கனும்...

\\\"கதை கேட்ட உங்களுக்கும்
கதை சொன்ன எங்களுக்கும்
மங்களம்...சுப மங்களம்......\\\"

இளசு
21-02-2008, 06:19 AM
எமர்ஜன்ஸியில் (மட்டும்) நேரத்துக்கு அலுவலகம் போவோம்..
ஸ்கைலாப் பயத்தில் ( மட்டும்) கொஞ்சம் நல்லவர்களாவோம்..

அடிப்படையில் நம்மிடம் ஏதோ கோளாறு இருக்கு.. சரீங்களா சாமா?

பாகிஸ்தானிய மக்களாட்சி - Oxymoron முரண்சொற்றொடர்.
பெரும்பான்மை இல்லாமையால், குதிரை பேரங்கள் உயராமல் இருந்தால் சரி.

கவிச்சமர் - குற்றாலம்
நான் - குளிர்க்காய்ச்சல் நோயாளி..
பார்க்கலாம் .. நான் தேறிய நாளில்..

போட்டிகளில் வாக்களிப்பது - படைப்பாளிகளை அங்கீகரிக்கும்
அடிப்படை நாகரீகம்.. நம்மவர்கள் நாகரீகத்தொட்டில்கள்.. எனவே....
பெருவாரியாய் எதிர்பார்க்கலாம்.

அச்சுபிச்சு சீரியல்களைத் தள்ளுங்க ஒருபுறம்..
அருமையான காலட்சேபம் அடிக்கடி கேட்க - இல்லை ஆட்சேபம்!

அக்னி
21-02-2008, 06:26 AM
அருமை சிவா.ஜி...
நடப்பு நிகழ்வுகள்... நடந்த நிகழ்வுகள்... மன்ற நிகழ்ச்சிகள்...
அனைத்தும்,
கதாகாலோட்சபத்தில்...
அம்சமாக... அழகாக...
மனதில் தாளம்...
திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க... திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க...
மிகுந்த பாராட்டுக்கள்...

யவனிகா
21-02-2008, 06:53 AM
சாமா அண்ணா...நோக்கு ஜோரா பொருந்திப் போச்சு இந்த அங்கவஸ்திரம்...எங்க வாங்கினேள்...ஜரின்னா...இது ஜரி...தகடு மாதிரி மின்றது...
எப்படி கத்துண்டேள் எல்லாத்தையும் கலந்து கட்டினாலும்...டேஸ்டும் குறையாம இருக்கு...நீங்க சகல கலா வல்லவர் தான்...

வில்லுல நீங்க தட்டிண்டே பாடறது கண்ணு முன்ன நேக்கு வந்து போறது...

சிவா.ஜி
21-02-2008, 06:54 AM
எமர்ஜன்ஸியில் (மட்டும்) நேரத்துக்கு அலுவலகம் போவோம்..
ஸ்கைலாப் பயத்தில் ( மட்டும்) கொஞ்சம் நல்லவர்களாவோம்..

அடிப்படையில் நம்மிடம் ஏதோ கோளாறு இருக்கு.. சரீங்களா சாமா?


சரியாச் சொன்னேள் போங்கோ....அந்த அடிப்படை கோளாறை அப்பப்ப சரியாக்க ஏதாவது ஒரு பயம் தேவைப்படுது.....அந்த கட்டாயமெல்லாம் இல்லாமலேயே இயல்பா நல்லவங்களா...இருக்கனும்..

நம்ம மன்ற மக்களின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும்ன்னு சொல்லி தெம்பைக் கொடுத்துட்டேள்.

ரொம்ப நன்றி இளசு.

சிவா.ஜி
21-02-2008, 06:56 AM
அருமை சிவா.ஜி...
நடப்பு நிகழ்வுகள்... நடந்த நிகழ்வுகள்... மன்ற நிகழ்ச்சிகள்...
அனைத்தும்,
கதாகாலோட்சபத்தில்...

உங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அக்னி.உங்க எல்லோருடைய ஆதரவாலும் இன்னும் எழுதனும் என்று விரும்புகிறேன்.

சிவா.ஜி
21-02-2008, 06:59 AM
வில்லுல நீங்க தட்டிண்டே பாடறது கண்ணு முன்ன நேக்கு வந்து போறது...

கொழந்த நீங்க சொல்றது வில்லுப்பாட்டும்மா...
தந்தனத்தோம் என்று சொல்லியே....வில்லினில் பாட..(ஆமாஞ்சொல்லு)
வந்தருள்வாய் கலை மகளே....
அப்படீன்னு ஆரம்பிச்சு உக்காந்துண்டு வில்லுல தட்டி பாடறது...அது அய்யராத்து பாஷையில இருக்காதும்மா...

இது நின்னுண்டே பாடி,பேசி கதை சொல்றது...

எப்படியோ....உங்களுக்கெல்லாம் பிடிச்சிருக்கறதைப் பாக்கறச்சே...நேக்கு கண்ணுல ஜலம் வந்துருச்சி...ரொம்ப நன்றிம்மா கொழந்த.

அக்னி
21-02-2008, 07:06 AM
நேக்கு கண்ணுல ஜலம் வந்துருச்சி....
வாசிச்சு நேக்கு ஜலம் வத்திடுச்சி... நாக்கில... :aetsch013:

சிவா.ஜி
21-02-2008, 07:10 AM
வாசிச்சு நேக்கு ஜலம் வத்திடுச்சி... நாக்கில... http://www.tamilmantram.com:80/vb/

அது போன கதையிலன்னா மாமியோட கத்திரிக்காய் கொத்ஸுவைப் பத்தி சொன்னேன்...அதுக்கா அம்பி நோக்கு வாயில ஜலம் வந்துடுத்து....
நேரம் கிடைக்கும்போது ஆத்துக்கு வந்தா...மாமி கையால இன்னும் நல்ல சாப்பாட்டை ருசிச்சி சாப்டலாம்..

சுகந்தப்ரீதன்
21-02-2008, 08:08 AM
அண்ணா... நம்பாத்துல இப்படியொரு கூத்து நடக்குதுன்னு யாருமெ என்கிட்ட சொல்லாமா போயிட்டேளே...?
எதேச்சையா இங்கே வந்து பாத்துதான் நானே தெரிஞ்சுண்டேன்.. நம்ம சிவா அண்ணா நன்னாவே கதை சொல்லுவாருன்னு...!!

அப்பிடியே லோகத்த சுத்திண்டு ஆத்துக்குள்ள(மன்றத்துல) இருக்குற பிரச்சனியையும் எத்தனை தெளிவா சொல்றேள் போங்கோ...!!

இந்த அம்பி இனி அடிக்கடிஒ இங்க கதை கேட்க வருவானாக்கும்...!! ரொம்ப நன்றிங்க அண்ணோவ்..!!

அக்னி
21-02-2008, 08:10 AM
அதுக்கா அம்பி நோக்கு வாயில ஜலம் வந்துடுத்து....

சாஸ்திரியாரே நன்னா கண்ண முழிச்சு பாரும். அது வந்துடுத்து இல்ல வத்திடுச்சு...
இந்த காச்சு காச்சி இருக்கீரே...
திருப்பித் திருப்பி வாசிச்சுத்தான் புரிஞ்சுகிட்டேன். உம்மைச் சொல்லிக் குற்றமில்லை. எனக்குத்தான் இந்த பாஷை புரிஞ்சுக்க கொஞ்சம் கஸ்ரமாயிருக்குது.
அதான் நேக்கு நாக்குல ஜலம் வத்திடுச்சு...
ஆனா, நன்னா இருந்திச்சு உங்க கதாகாலோட்சபம்...

மலர்
21-02-2008, 02:50 PM
சாமா: சரிடா அம்பிகளா...கதையை முடிச்சிண்டுடுவோம்...அதுக்கு மின்னால...மன்றத்து மக்களுக்கு ஒரு வேண்டுகோள்...நிர்வாகம் நடத்தற போட்டிகளெல்லாம் உங்களுக்காகத்தான்...அதனால அதுல கலந்துண்டு..அதை சிறப்பாக்கனும்...
அவ்ளோ தான கலந்துண்டா போச்சி...
ஏம்மா யவனிகா மாமி நீங்க என்ன சொல்றீங்கோ.... :cool: :cool:

சிவா அண்ணா....
அருமையா போகுது..ஹீ..ஹீ...பாராட்டுக்கள்...:icon_b: :icon_b:

யவனிகா
21-02-2008, 03:11 PM
அவ்ளோ தான கலந்துண்டா போச்சி...
ஏம்மா யவனிகா மாமி நீங்க என்ன சொல்றீங்கோ.... :cool: :cool:
[/COLOR]

ஆமாண்டி பொண்ணே...அரட்டைத் திரில நோக்குன்னு அமரு ஸ்பெசலா ஒரு போட்டு வெக்கப் போறாப்பிலயாமா...

எப்படி இரத்தம் வராம மூக்க ஒடக்கறது...கண்ணில மண்ணைத் தூவி கால வாரற்றது....அலம்பாம நின்னு கலாய்க்கிறது....இது தான் போட்டியோட சிறப்பம்சம். நான் காலம்பரையே அமரு புள்ளையாண்டன் கிட்ட சொல்லிட்டேன்...

போட்டி எல்லாம் எதுக்குடா அம்பி...கப்ப தூக்கி மலரு கையில் குடுத்திரவேண்டியது தான...

மலரு விட இதுக்கு தகுந்த ஆளிருக்கா....எல்லார் ஓட்டும் மலருக்குத்தான்...

சரியாடி பொண்ணே...இன்னிக்கு ராத்திரி நன்னா தூங்கு...கப்பும் கையுமா அக்கா கனவுல வர்றேன்.

மலர்
21-02-2008, 03:33 PM
சரியாடி பொண்ணே...இன்னிக்கு ராத்திரி நன்னா தூங்கு...கப்பும் கையுமா அக்கா கனவுல வர்றேன்.
சீக்கிரம் அண்ணன்கிட்ட சொல்லி இருக்கதிலெயே நல்லா பெரிய கப்பா பாத்து வாங்கி கனவுல வாங்க.....
அங்க மட்டும் சின்னதா தம்மாதுண்டு கப்போட வந்தீங்க.....
அப்புறம் அவ்வளவு தான்.. :sauer028: :sauer028:

சிவா.ஜி
22-02-2008, 04:33 AM
இந்த அம்பி இனி அடிக்கடிஒ இங்க கதை கேட்க வருவானாக்கும்...!! ரொம்ப நன்றிங்க அண்ணோவ்..!!

ஆஹா பேஷா வாங்கோ...நீங்கள்லாம் வந்தாத்தானே கதை களைகட்டும்....
மண்டபம் நிறஞ்சிருக்கறச்சே கதை சொல்றதே ஒரு சுகானுபவம்.ரொம்ப நன்றிப்பா சுகந்த்.

சிவா.ஜி
22-02-2008, 04:39 AM
சாஸ்திரியாரே நன்னா கண்ண முழிச்சு பாரும். அது வந்துடுத்து இல்ல வத்திடுச்சு...


அடடா...நாந்தான் தப்பா வாசிச்சுட்டேனா...இருந்தாலும் பரவாயில்லை...இன்விடேஷன் கொடுத்தது கொடுத்ததுதான்.நான் மாமியண்டையும் சொல்லிட்டேன்...அக்னின்னு ஒரு பிள்ளையாண்டான் நம்மாத்துக்கு வருவர்...நன்னா சமைச்சுப் போடனும்ன்னு...
அப்புறம் பாஷையில என்ன இருக்கு கொஞ்சம் நிதானமா படிச்சா புரிஞ்சுடுமோன்னோ..

சிவா.ஜி
22-02-2008, 04:41 AM
அவ்ளோ தான கலந்துண்டா போச்சி...
ஏம்மா யவனிகா மாமி நீங்க என்ன சொல்றீங்கோ.... http://www.tamilmantram.com:80/vb/ http://www.tamilmantram.com:80/vb/

சிவா அண்ணா....
அருமையா போகுது..ஹீ..ஹீ...பாராட்டுக்கள்...http://www.tamilmantram.com:80/vb/ http://www.tamilmantram.com:80/vb/

அடடா...ரொம்ப சமத்து கொழந்த...சொன்ன பேச்சை கேக்கறதே...நன்னா இரும்மா கொழந்த...நெறைய போட்டிகள்ல கலந்துண்டு...பெரிய கப்பா வாங்கனும்.நானும் யவனிகா மாமியண்டை சொல்லிவெக்கறேன்...மலருக்கு பெரிய கப்பா தயார்பண்ணி வெக்கச் சொல்லி..சரியாடா...கொழந்த..

ஜெயாஸ்தா
22-02-2008, 04:58 AM
என்ன சாமாசாஸ்திரிகள்.... போனமுறை இந்த பாழப்போன நாவஸ் ஆட்சியிலேதான் கார்கில் ஊடுருவல், அது இதுன்னு நமக்கு எல்லையில ரொம்ப தொல்லை கொடுத்துக்கிட்டிருந்தார். முசாரப் ஆட்சியில் அந்த மாதிரி அதிகாரப்பூர்வமா எதுவும் நடக்கலை.... தெரியுமா உங்களுக்கு?

பழைய ஸ்கைலாப் விசயம் நான் கேள்விப்பட்டது. உங்களுக்கு பதினாறு வயசாயிருக்கும் போது நடந்த விசயமா? எனக்கு இப்போதான் பதினாறு வயசாகிறது. (வழக்கம்போல் சிவா அண்ணா காலாட்சேபத்தில் கலக்கிட்டீங்க.... கால் + ஆட்சேபம் = காலாட்சேபம்-மா? :lachen001: :lachen001: :lachen001: )

சுகந்தப்ரீதன்
22-02-2008, 05:25 AM
பழைய ஸ்கைலாப் விசயம் நான் கேள்விப்பட்டது. உங்களுக்கு பதினாறு வயசாயிருக்கும் போது நடந்த விசயமா? எனக்கு இப்போதான் பதினாறு வயசாகிறது. (வழக்கம்போல் சிவா அண்ணா காலாட்சேபத்தில் கலக்கிட்டீங்க.... கால் + ஆட்சேபம் = காலாட்சேபம்-மா? :lachen001: :lachen001: :lachen001: )
கலக்கீட்டிங்க அண்ணாச்சி...!! இப்பதான் பதினாறு வயதினிலே படம் பாத்துட்டு வந்தேளா..? உதட்டுமேல கையை வச்சி உச்சிகூரையை பாத்து யோசிக்கும் போதே நினைச்சேன் நிச்சயம் நம்ப ஜெயஸ்தா அண்ணாச்சி பொறியை கிளப்புவாருன்னு...!! பதினாறு வயசுல பட்டம் வாங்கிய தீப்பொறிக்கு ஒரு காலணாவுக்கு அவுல்பொறி வாங்கி கொடுங்கப்பா..!!:icon_rollout:

சிவா.ஜி
22-02-2008, 06:34 AM
பழைய ஸ்கைலாப் விசயம் நான் கேள்விப்பட்டது. உங்களுக்கு பதினாறு வயசாயிருக்கும் போது நடந்த விசயமா? எனக்கு இப்போதான் பதினாறு வயசாகிறது. (வழக்கம்போல் சிவா அண்ணா காலாட்சேபத்தில் கலக்கிட்டீங்க.... கால் + ஆட்சேபம் = காலாட்சேபம்-மா? http://www.tamilmantram.com:80/vb/ http://www.tamilmantram.com:80/vb/ http://www.tamilmantram.com:80/vb/ )
வாருமய்யா...பதினாறு வயது புயலே....சுகந்த் சொன்ன மாதிரியே உங்களுக்கு ஒரு படி அவல் பொரி வாங்கி வெச்சிருக்கேன்....நன்னா பொறியை கிளப்புங்கோ....
காலோ அரையோ....ஆட்சேபம் வரலைன்னா...நவீனத்துவத்துக்கு மதிப்பில்லைங்கானும்...நன்னா சொன்னேள் போங்கோ..

ஓவியன்
22-02-2008, 07:00 AM
காலட்சேபம்-9
சாமா: அது பொதுமக்கள் நடத்தற போரட்டமா...இல்ல அப்படி நடத்த வெக்கறாளான்னு தெரியலயேடா அம்பி...சரிடா அம்பி நமக்கு எதுக்கு பொல்லாப்பு....நம்ம மன்றத்து புள்ளையாண்டான் ஓவியனுக்கு சிங்கப்பூர்ல கல்யாணம் ஷேமமா நடந்து முடிஞ்சிடுத்து...அவா ரெண்டு பேருக்கும் நம்ம சார்புல ஒரு பெரிய வாழ்த்தை சொல்லிடுவோம்.

கிச்சு: இம்மாம் நாளும்...டேக்கா காமிச்சிகினு இருந்தாரு...இப்ப நல்லா மாட்டிக்கினாரு...இனிமேத்தான் மாமு இருக்கு கூத்து...

சாமா: அடே பாவி...ஏண்டா அவாளை பயமுறுத்தரே...ஏற்கனவே இந்த ஆரென் பிள்ளையாண்டான் எல்லாரையும் பயமுறுத்திண்டே இருக்கார்.நீ வேற சேர்ந்துண்டு இப்படி பேசினா...மத்த புள்ளையாண்டானுங்க மதி,அக்னி,அமரன்,ஆதவா,ராக்கி,சுகந்த்,வசீகரன்...இவாள்லாம் பயந்துற மாட்டா..?

விச்சு: மாமா...அன்புவை விட்டுட்டேளே...

சாமா: அன்புவா....அவர் ஓவியனோட கல்யாண விசேஷத்துக்கு போயிட்டு வந்தாரோன்னோ...அங்கே ஓவியனோட நிலைமையைப் பாத்து...அரண்டு போயிட்டார்....ஓவியனை சிரிக்க வெக்க அவரோட மாமா பண்ணின எல்லா முயற்சியும் தோத்ததைப் பாத்து...நமக்கும் இந்த நிலைமைதானான்னு புலம்பிண்டே இருக்கார்.

விச்சு: அப்ப இனிமே ஓவியன் வண்ணங்களை தொலைத்த ஓவியன் இல்ல...சிரிப்பைத் தொலைத்த ஓவியன்னு சொல்லுங்கோ..

சாமா: அடடா....நம்ம ஆத்து மாட்டுப்பொண்ணு அந்த பாரதி இதைப் படிச்சா சங்கடப்படுவாரே...கொழந்த பாரதி...நாங்களெல்லாம் இப்படித்தான் ஓவியனை..கலாய்ச்சுண்டே இருப்போம்....கவலைப் படாதேம்மா....வேணுன்னா நீயும் எங்களோட ஜாயின் பண்ணிக்கோ...ஹி...ஹி...

கிச்சு: இன்னா மாமு...நீயும் எங்களோட சேந்து கலாய்க்கிறியா....பாவம் ஓவியன் வுட்று...

சாமா: சரி...சரி...போறும்...நன்னாருக்கட்டும்....லோகத்துல இருக்கற எல்லா நலமும் ஒண்ணா கிடைச்சு சந்தோஷமா வாழனுன்னு அந்த அம்பாளை பிரார்த்தனை பண்ணிண்டு...

இதை எழுதினவாவை........

:sport-smiley-005: இப்படி மொத்தணும்...
:sport-smiley-008: இப்படிக் குத்தணும்....
:sport-smiley-002: இப்படித் தட்டணும்....
:sport-smiley-013: இப்படிச் சொட்டணும்...
:food-smiley-002: இப்படி வறுக்கணும்....
:violent-smiley-010: இப்படி துரத்தணும்....
கடைசியாக
:waffen093: இப்படிப் போட்டுத்தள்ளணும்....

என்றெல்லாம் ஆசையாக இருந்தாலும்.......

என்னால முடி.....லையே................!!! :medium-smiley-100:

சிவா.ஜி
22-02-2008, 07:27 AM
[quote=ஓவியன்;327756]

என்னால முடி.....லையே quote]

நேக்கும் முடி.........யல...(இத்தனை தாக்குதலை சமாளிக்க முடியுமா...அடே கிச்சு,விச்சு ஓட்டிவாங்களேண்டா பிரம்மஹத்திகளா...)

lolluvathiyar
22-02-2008, 11:07 AM
ஆமாடா அம்பி...எனக்கு பதினாறு வயசு இருக்கறச்சே...இதே மாதிரிதான் ஸ்கைலாப் அப்படீன்னு ஒரு சாட்டிலைட் பூமியில விழப்போறதுன்னு லோகம் பூரா ஜனங்க பீதியில இருந்தாங்க.

அன்த சம்பவம் எனக்கு நினைவு இருக்கு சிவா ஜி, அப்ப நான் மூனாவது படித்து கொன்டிருகிறேன் என்று நினைகிறேன். பள்ளியில கூட ஸ்கைலாப் விழ ந்தா எல்லா ஓடி போகனும்னு பசங்க எல்லா பேசிகிட்டோம்.


அந்த நவாஸ் ஷெரீஃபை என்ன பாடு படுத்தினார்...இப்ப அவரும் சர்தாரியும் சேர்ந்து ஆட்சியை அமைச்சு இவரை என்ன பாடு படுத்தப் போறாளோ.


பாக்கிஸ்தானில் எப்பவுமே ஜன நாயகம் ஜெயிக்காது. ரானும்வம் எந்த பக்கம் சாயுதோ அது தான் ஜெயிக்கும்
கதாகாலட்சேபம் சூப்பர்ங்லோ

மனோஜ்
22-02-2008, 03:46 PM
நல்ல தகவல் சொன்ன தங்களுக்கு நன்றி
நன்றி மீன்டும் நன்றி

சிவா.ஜி
23-02-2008, 03:52 AM
பாக்கிஸ்தானில் எப்பவுமே ஜன நாயகம் ஜெயிக்காது. ரானும்வம் எந்த பக்கம் சாயுதோ அது தான் ஜெயிக்கும்
கதாகாலட்சேபம் சூப்பர்ங்லோ
ஆது என்னவோ உண்மைதாங்க...ஜனநாயகம் அதிக நாள் உயிர் வாழ முடியறதில்லை அங்கே...எப்படியோ மறுபடியும் நமக்கு தலைவலி கொடுக்காம இருந்தா போதும்.நன்றி வாத்தியார்.

சிவா.ஜி
23-02-2008, 03:53 AM
நல்ல தகவல் சொன்ன தங்களுக்கு நன்றி
நன்றி மீன்டும் நன்றி

படித்து பின்னூட்டமிட்டதற்கு உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும் மனோஜ்.மிக்க நன்றி.

சிவா.ஜி
24-02-2008, 10:56 AM
காலாட்சேபம்-11

சாமா:திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......பிரும்மானந்த ஹரே கஜானன தாண்டவனே ஜகனே....

ஆதௌ கீர்த்தனாரம்பத்துல.....சாயங்கால நேரத்தை இந்த சாஸ்திரிகளுக்காக ஒதுக்கி கதை கேக்க வந்த எல்லோருக்கும் நமஸ்காரம்.
நிதி அமைச்சர் சிதம்பரம் தன்னோட ஏழாவது பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போறாராம்....வருமான வரி உச்ச வரம்பை ஒரு லட்சத்து முப்பதினாயிரமா ஏத்தப் போறாளாம்.விவசாயிகளுக்கு சலுகைகளெல்லாம் கொடுக்கப் போறாளாம்.ரொம்ப நல்லது.தினம் தினம் நாட்டுல ஏதாவது ஒரு இடத்துல விவசாயிகள் தற்கொலைங்கற செய்தி வந்து மனசைக் கஷ்டப்படுத்திண்டே இருக்கு.லோகத்துக்கே சோறு போடறவாளுக்கு சோறில்லாம சாகறது கொடுமையான விஷயம்.அவாளுக்கு இந்த கவெர்மெண்டு ஏதாச்சும் செஞ்சா ரொம்ப ஷேமமா இருக்கும்.

விச்சு; ஆமாம்....ரொம்ப நன்னா இருக்கும்....

சாமா:சினி மேட்சுல ஆரம்பத்துல ஆடின ஜாம்பவான்களெல்லாம் நன்னா தடவிட்டு பொட்டு பொட்டுன்னு அவுட்டாயிட்டா...பாவம் பின்னால வந்த பிள்ளையாண்டான்கள் கொஞ்சமாச்சும் நன்னா விளையாடி மரியாதையைக் காப்பாத்தினா...அதுலயும் கம்பீர் அரை சதம் அடிச்சு ஸ்கோரை ஏத்தி விட்டது நல்லதாப் போச்சு.இன்னைக்கு என்னவோ உத்தப்பாவோட ஆட்டம் ஊத்திக்காம நன்னாருந்தது..
ஆனாலும் என்ன செய்ய 18 ரன் வித்தியாசத்துல தோத்துட்டாளே....அவாளுக்கென்ன பாக்கற நாமதான் டென்ஷன்ல கையில இருக்கற நகம் பத்தாதுன்னு கால்ல இருக்கறதையும் சேத்து கடிச்சி துப்பிண்டிருக்கோம்..அவா ஜாலியா ஏலம் போயிண்டிருக்கா....ஆடினாலும் ஆடாட்டியும் கோடியா கொட்டறதோன்னோ....எப்படி சீரியஸா விளையாடுவா..?

கிச்சு: அக்காங் மாமு...தம்மாத்தூண்டு பசங்கள்ளாம் கோடிக்கணக்குல துட்டை வாங்கிக்கினு...சும்மா மட்டை எட்த்து சுத்திட்டு போயிடறானுங்க...அல்லாத்திலயும் பொயிட்டிக்ஸ் வெள்ளாடுது மாமு....

சாமா: ஆமாடா அம்பி நன்னா பாலிடிக்ஸ் ஆடறா...எப்ப கேமை ஆடப் போறாளோ..அந்த பகவானுக்குத்தான் வெளிச்சம்.சரிடா அம்பிகளா...அதை விட்டுட்டு இந்த விஷயத்தைப் பாப்போம்...

விச்சு: எந்த விஷயத்தை மாமா...

சாமா; அதாண்டா அம்பி...நம்ம இந்திய நாட்டு சரித்திரத்திலேயே முதல் தடவையா ஒரு பெண் குடியரசு தலைவர் நாடாளுமன்றத்துல உரை நிகழ்த்தப் போறாரோன்னோ அதைத்தான் சொன்னேன்...நம்ம கலைஞர் அய்யாகூட வாழ்த்து தெரிவிச்சிருக்காரே...எல்லா ரைட்ஸும் மக்களுக்கு சமம்ன்னு பிணாத்துற ஆனானப்பட்ட அமெரிக்காவுலகூட ஒரு பெண் தலைமைப் பதவிக்கு வரமுடியல...வர விட மாட்டேங்கறா..ஆனா நம்ம நாட்டுல அவாளை அந்த பெரிய பதவியில வெச்சி அழகு பாக்கறோம்.என்ன இருந்தாலும் இந்தியா கிரேட்டுடா அம்பி...

கிச்சு; அதுல இன்னா டவுட்டு...இந்தியா கிரேட்டு..அட்சிடுவோம் அதுக்கு ஒரு சல்யூட்டு.

சாமா: அப்புறம் கதை கேக்கற மகா ஜனங்களுக்கு ஒரு விண்ணப்பம்....மன்றத்துல வேலை வாய்ப்பு/மனிதவளம் பகுதியில வந்திருக்கற விளம்பரத்தை பாத்து கூடுமானவரைக்கும் உங்க நன்பர்கள்,உறவுக்காரர்கள் எல்லோருக்கும் அது பயன்படறாமாதிரி பாத்துக்கோங்கோ.ரொம்ப நல்ல வாய்ப்பு..தகுதி இருக்கறவாளுக்கு கண்டிப்பா நல்ல வேலை கிடைக்கும்.எங்க எல்லோருடைய சார்பிலும் வாழ்த்துகள்.

விச்சு; மாமா அப்படியே மன்றத்துல கொஞ்சநாளா அந்த வாலு பொண்ணு மலரைக் காணோமே..என்னன்னு கேளுங்கோ...

சாமா: ஆமாடா அம்பி..மலர் மட்டுமா...நுரையையும் காணோம்,விராடனையும் காணோம்,அன்புவும் அதிகமா வர்றதில்ல...இவாளுக்கு வேலை அதிகமோ என்னவோ...ஆனாலும் அடிக்கடி வந்து போயிண்டிருந்தா ரொம்ப நன்னாருக்கும்.சரி இன்னைக்கு கதையை இங்கே முடிச்சிக்குவோம்.....

\"கதை கேட்ட உங்களுக்கும்
கதை சொன்ன எங்களுக்கும்
மங்களம்...சுப மங்களம்......\"

ஓவியன்
28-02-2008, 02:26 AM
விச்சு; மாமா அப்படியே மன்றத்துல கொஞ்சநாளா அந்த வாலு பொண்ணு மலரைக் காணோமே..என்னன்னு கேளுங்கோ...

வாலு மலர், ரொம்ப நன்னாத்தானிருக்கு.......!! :D:D:D

மலர்
28-02-2008, 02:35 AM
வாலு மலர், ரொம்ப நன்னாத்தானிருக்கு.......!! :D:D:D
நன்னாயிருக்கா.... :sprachlos020: :sprachlos020:
ஏன் இருக்காது..... :icon_rollout: :icon_rollout:
அப்புறம் இங்க பாருங்க
http://smileys.smileycentral.com/cat/16/16_12_171.gif (http://www.smileycentral.com/?partner=ZSzeb001_ZNxmk789YYIN)
ஓவியண்ணா இதே ஸ்பீடுல வந்தேன்.....
அப்புறம் நீங்க தப்பிக்கிறது ரொம்ப கஷ்டம்......

அக்னி
28-02-2008, 02:45 AM
http://smileys.smileycentral.com/cat/16/16_12_171.gif (http://www.smileycentral.com/?partner=ZSzeb001_ZNxmk789YYIN)
ஓவியண்ணா இதே ஸ்பீடுல வந்தேன்.....
அப்புறம் நீங்க தப்பிக்கிறது ரொம்ப கஷ்டம்......
மலர், மெல்ல போங்க...
கவனமா பார்த்து பிடியுங்க...
நீங்க பேசாம வண்டலூரிலயே இருந்திருக்கலாம்.
ஓவியர் வந்து பார்த்திருப்பார்.
வெளிய வந்து ஏன் இப்பிடிக் கஸ்ரப்படுறீங்க...

சிவா.ஜி
28-02-2008, 03:39 AM
நீங்க பேசாம வண்டலூரிலயே இருந்திருக்கலாம்.
ஓவியர் வந்து பார்த்திருப்பார்.

அட...மலரோட அட்ரஸ் உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது அக்னி.....?

மலர்
28-02-2008, 03:43 AM
விச்சு; அவாளுக்கென்ன பாக்கற நாமதான் டென்ஷன்ல கையில இருக்கற நகம் பத்தாதுன்னு கால்ல இருக்கறதையும் சேத்து கடிச்சி துப்பிண்டிருக்கோம்..
ஹாஹ்ஹா.....
பாத்துன்னா..... பக்கத்துல உள்ள ஆளுங்க எல்லாம் ரொம்ப பாவம்.....
கிச்சு; அதுல இன்னா டவுட்டு...இந்தியா கிரேட்டு..அட்சிடுவோம் அதுக்கு ஒரு சல்யூட்டு.
http://smileys.smileycentral.com/cat/6/6_13_7.gif (http://www.smileycentral.com/?partner=ZSzeb001_ZNxmk789YYIN)


விச்சு; மாமா அப்படியே மன்றத்துல கொஞ்சநாளா அந்த வாலு பொண்ணு மலரைக் காணோமே..என்னன்னு கேளுங்கோ... சாமகோடாங்கி கதை கேட்டு
அது சாமம் சாமமா சுத்திட்டு அலையுது...
சாமா: ஆமாடா அம்பி..மலர் மட்டுமா...நுரையையும் காணோம்,விராடனையும் காணோம்,அன்புவும் அதிகமா வர்றதில்ல... ம்ம்ம் அன்புவையும் நுரைஅண்ணாவையும் கூட அன்னைக்கு பாத்தேன்......
விராடன் அண்ணனை தான் பாக்கவே முடிலை..... :cool: :cool:.....

மேட்டரை எல்லாம் புட்டு புட்டு வைக்கேளேன்னா....
எல்லா மேட்டரையும் எங்க புடிக்கிறேள்..

தொடந்து எழுத பாராட்டுக்கள்.......:icon_b: :icon_b:

சிவா.ஜி
28-02-2008, 03:51 AM
நன்றிடா கொழந்த...கதையைப் படிச்சுட்டு...நல்ல விமர்சனமா எழுதற நோக்கு எங்காத்து மாமி கையால சூப்பரா ஒரு ஸ்வீட்(பெரிய கிண்ணத்துல போட்டு) கொடுக்கச் சொல்றேன்.

ஓவியன்
28-02-2008, 04:06 AM
http://smileys.smileycentral.com/cat/16/16_12_171.gif (http://www.smileycentral.com/?partner=ZSzeb001_ZNxmk789YYIN)
ஓவியண்ணா இதே ஸ்பீடுல வந்தேன்.....
அப்புறம் நீங்க தப்பிக்கிறது ரொம்ப கஷ்டம்......

[SIZE="3"]என்னமா ஸ்பீடு மலர்.........!!! :rolleyes:
கவனம் மலர் மெல்லவே வாங்க நான் ஒண்ணும் ஓடிப் போக மாட்டேன்...!! :D:D:D

அக்னி
28-02-2008, 05:41 AM
அட...மலரோட அட்ரஸ் உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது அக்னி.....?
மலர்தான் நேற்று சாட்ல சொன்னாங்க...
சிவா.ஜி கூண்டுக்கு... ச்சே... வீட்டுக்குப் பக்கத்து வீடுன்னு... :rolleyes:
அதான் இடத்தை உடனே பிடிச்சிட்டோமில்ல... ;)

சிவா.ஜி
28-02-2008, 05:51 AM
[quote=அக்னி;329743]மலர்தான் நேற்று சாட்ல சொன்னாங்க...
சிவா.ஜி கூண்டுக்கு... ச்சே... வீட்டுக்குப் பக்கத்து வீடுன்னு... http://www.tamilmantram.com:80/vb/
அதான் இடத்தை உடனே பிடிச்சிட்டோமில்ல... http://www.tamilmantram.com:80/vb/quote]
அப்ப அதுவும் தெரிஞ்சிடுச்சா.....நாம எல்லாம் ஒரே குடும்பமா ராசா....

அக்னி
28-02-2008, 06:04 AM
அப்ப அதுவும் தெரிஞ்சிடுச்சா.....நாம எல்லாம் ஒரே குடும்பமா ராசா....
ராசாவுமா... யாரு நம்ம நுரையத்தானே சொல்றீங்க... அப்பச்சரி...
இந்தியாவுக்கு வந்தால் எல்லோரையும் ஒரே இடத்தில் சந்திக்கலாம் போலிருக்கே...
இந்த மலர் ராசாவ பத்தி சொல்லவே இல்லயே...

lolluvathiyar
28-02-2008, 06:38 AM
ஆகா கதாகாலசேபம் அருமையா போகுது, அதுவும் இறுதியில் மலர வாலு பொன்னுன்னு சொல்லி அத மலர் படம் போட்டு நிருபிக்க வச்சிட்டீங்க. அருமை போங்க


விவசாயிகளுக்கு சலுகைகளெல்லாம் கொடுக்கப் போறாளாம்.ரொம்ப நல்லது.

ஒன்னும் செய்ய மாட்டாங்க, இப்படிதான் வருசா வருசம் சொல்லிகிட்டு இருக்காங்க. லோன் மேல் லோன் தருவாங்க, வட்டி மேல வட்டி ஏத்துவாங்க. அதுல சிலபேருக்கு தள்ளுபடி பன்னுவாங்க. ஆனா வெள்ளாமைக்கு விலை மட்டும் தரமாட்டாங்க.


எல்லா ரைட்ஸும் மக்களுக்கு சமம்ன்னு பிணாத்துற ஆனானப்பட்ட அமெரிக்காவுலகூட ஒரு பெண் தலைமைப் பதவிக்கு வரமுடியல.

ஆமாம்
இந்தியாவுல இந்திரா காந்தி
பாக்கிஸ்தான்ல பெனாசிர் பூட்டோ
பங்களாதேஸ்ல ஹசினா, காலிதா
இலங்கையில சந்திரிகா

இப்படி ஆசிய நாடுகளில் தான் பென்கள் தலைவர்களா இருந்திருக்காங்க. ஆனால் மேற்கத்திய நாடுகள் இன்னும் நம்மை தான் பென் உரிமைதருவதில்லை என்று மட்டம் தட்டுவா

சிவா.ஜி
28-02-2008, 06:44 AM
இப்படி ஆசிய நாடுகளில் தான் பென்கள் தலைவர்களா இருந்திருக்காங்க. ஆனால் மேற்கத்திய நாடுகள் இன்னும் நம்மை தான் பென் உரிமைதருவதில்லை என்று மட்டம் தட்டுவா

சரியாச் சொன்னீங்க வாத்தியார்...சின்னச் சின்ன உரிமைகளைக் கொடுத்துட்டு...பெருசா பேசுவாங்க...ஆனா தங்களுக்கு சமமா பெண்கள் வர்றதை அந்த நாட்டு ஆண்மக்கள் ஆதரிக்கறதில்ல...இப்பகூட பாருங்க ஹிலாரிக்கு அவ்வளவா ஆதரவு இல்லை.

நேசம்
28-02-2008, 12:23 PM
உரிமை என்பது பதவிக்கு வருவது என்றால் நம்ம பெருமைப்படலாம்.ஆனால் பெண்களுக்கான உரிமை அதை தான்டி என்றால்... நம்ம பெருமைபட கூடிய அளவிலா இருக்கிறோம் சிவாண்ணா.

lolluvathiyar
28-02-2008, 03:06 PM
ஆனால் பெண்களுக்கான உரிமை அதை தான்டி என்றால்... நம்ம பெருமைபட கூடிய அளவிலா இருக்கிறோம் சிவாண்ணா.

எதை தான்டி கோடி பென்கள் இருக்கும் இடத்தில் சில பென்கள் ராக்கெட்டில் போவது, விமானம் ஓட்டுவதுமா உரிமை. நம் நாட்டில் தான் பென்கள் உற்பத்தி சார்ந்த வேலையில் அதிகம் இருப்பது. மேற்கத்திய நாடுகளில் பென்கள் அதிகம் இருப்பது சதை வியாபரத்தில்தான் அது மட்டும் உரிமை அல்ல நேசம்.
இங்கு விவசாயத்தில் பென்கள் பங்கு ஆன்களுக்கு சமமாக இருகிறது. சிறு தொழில்களில் அப்படிதான். 90 சதவீத வீட்டிலும் அல்லி ராஜியம் தான் நடைபெறுகிறது. வெளியில் இன்னும் அடிமை வேசக்ம் காட்டி செய்யும் தொழில் சிலரது அரசியல் வருமானத்துக்கு உதவும் ஆனால் நிஜம் அதுவல்ல*

மலர்
28-02-2008, 03:09 PM
எங்காத்து மாமி கையால சூப்பரா ஒரு ஸ்வீட்(பெரிய கிண்ணத்துல போட்டு) கொடுக்கச் சொல்றேன்.
:sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018:

அக்னி
28-02-2008, 03:57 PM
Originally Posted by சிவா.ஜி http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=329725#post329725)
எங்காத்து மாமி கையால சூப்பரா ஒரு ஸ்வீட்(பெரிய கிண்ணத்துல போட்டு) கொடுக்கச் சொல்றேன்.
:sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018:
காத்து மாமியா...
பலூன் என்று சொல்லுறீங்களா அண்ணியை...
அல்லது காற்று போல கையில் கிடைக்காது, கனவு காணாதே என்று மறைமுகமாகச் சொல்லுகின்றீர்களா...
எப்படி இருந்தாலும், அண்ணியை இப்படிச் சொல்லியிருக்கக் கூடாது சிவா.ஜி...
அதுவும் இந்தியா போகும் நேரத்தில், ஆதாரபூர்வமாக மாட்டலாமா..?

இது புரியாம, மலர் ஆடிக்கிட்டிருக்கே...
இல்லேன்னா புரிஞ்சு, சிவா.ஜி அப்படிச் சொன்ன சந்தோஷத்தில் வந்த ஆட்டமா..?

எனக்கு ஒண்ணுமே புரியலையே...

மலர்
28-02-2008, 04:22 PM
எனக்கு ஒண்ணுமே புரியலையே...
அதெல்லாம் எங்களை மாதிரி உள்ள அறிவாளிங்களுக்கு தான் புரியும்...... :D :D :D

அறிவாளிபுள்ளை
மலர்....:cool: :cool:

சிவா.ஜி
24-12-2008, 03:53 AM
கிட்டத்தட்ட பத்து மாசத்துக்கு அப்புறமா சாமா சாஸ்திரிகள் தன்னோட இரண்டாவது வெளிநாட்டுப் பயணத்தை முடிச்சுண்டு...மறுபடியும் மன்றத்துக்கு வரப்போறார். கூடிய சீக்கிரம் காலட்சேபம் களை கட்டப்போறது. விச்சுவும், கிச்சுவும் இப்ப நன்னா இங்கிலீஷ் பேச கத்துண்டாளாம்.(கிச்சு தமிழ் பேசினாலே...நாராசமா இருக்கும், இதுல இங்கிலீஷ் வேற பேசப்போறானாக்கும்ன்னு கேக்கறவா மூக்கு மேல வெரல வெக்கிறா மாதிரி பேசுவான் பாருங்கோ)

நாட்டாமை
24-12-2008, 04:30 AM
ஆகா......
உங்க அடுத்த சேட்டையை ஆரம்பிச்சிட்டேளா...:):)

என்னடா இந்த ஏரியா மட்டும் இன்னும் டல்லா இருக்கேன்னு யோசிச்சேன்....
சீக்கிரம் களைகட்டட்டும்.....
ஆரம்பிங்கோ.............கோ...........ண்ணா... :D:D

தாமரை
24-12-2008, 04:42 AM
நாட்டாமையே வந்தாச்சு.. காலட்சேபம் களைகட்டட்டும்..

சிவா.ஜி
24-12-2008, 04:46 AM
அதானே நாட்டாமையே சொல்லிட்டாரே...அப்ப கலக்கிடலாம்...

ஆதவா
24-12-2008, 04:51 AM
கிட்டத்தட்ட பத்து மாசத்துக்கு அப்புறமா சாமா சாஸ்திரிகள் தன்னோட இரண்டாவது வெளிநாட்டுப் பயணத்தை முடிச்சுண்டு...மறுபடியும் மன்றத்துக்கு வரப்போறார். கூடிய சீக்கிரம் காலட்சேபம் களை கட்டப்போறது. விச்சுவும், கிச்சுவும் இப்ப நன்னா இங்கிலீஷ் பேச கத்துண்டாளாம்.(கிச்சு தமிழ் பேசினாலே...நாராசமா இருக்கும், இதுல இங்கிலீஷ் வேற பேசப்போறானாக்கும்ன்னு கேக்கறவா மூக்கு மேல வெரல வெக்கிறா மாதிரி பேசுவான் பாருங்கோ)

அடடே! ஆரம்பிங்கோ.. அதுக்குள்ள, இந்த காலட்சேபத்தை முடிச்சிடறேன்..

கலாட்சேபமா?
காலட்சேபமா?

புரியலையே!!!

மதி
24-12-2008, 04:52 AM
வந்து நாட்டாமை தீர்ப்ப சொல்லுவார் பாருங்கோ.....
எட்றா அந்த சொம்ப.. :D

சிவா.ஜி
24-12-2008, 05:18 AM
கலாட்சேபமா?
காலட்சேபமா?

புரியலையே!!!

காலட்சேபம்தான்...('கலா'ட்சேபம்....அமரனைத்தான் கேக்கனும்...ஹி...ஹி...)

ஆதவா
24-12-2008, 05:27 AM
அருமை அருமை... அந்த லாங்குவேஜில் கொண்டு போய் விட்ட உங்களை எப்படி நான் பாராட்ட... எல்லாவற்றையும் ஒரு ரவுண்டு அடித்துவிட்டுத்தான் வந்தேன்.. (என்னையும் நீங்க விட்டு வைக்கலை :D) போரடிக்காமல் ரசிக்கும்படியான காமெடி.. அக்ரஹாரத்து கத்திரிக்காயும், சென்னை மீனும் கலந்த ஐட்டம். பழைய கலையைத் திருப்பி எடுக்கும் நோக்கம்... அடட்டா!!!

பேஷ் பேஷ்... ரொம்ப நன்னா இருக்கு (நமக்கு ஐயர் பாஷையில இது மட்டுந்தான் தெரியும்... :))

நீங்கள் எழுதும் பொழுது அந்த இடத்திற்கே கொண்டு சேர்க்கும் வல்லமை உங்கள் எழுத்தில் இருக்கிறது.. அது அவ்வளவு எளிதில் யாருக்கும் அமையாத வரம். எடுத்த கருவுக்கென நிஜமாகவே உழைக்கும் உங்களுக்கு ஒரு ஓ!!

சொல்ல வேண்டிய விசயத்தை வாழைப்பழத்தில் ஊசியைச் சொறுகுவதைப் போல நகைச்சுவையோடு சொல்லுவது எவ்வளவு இனிமை!!!!

பாராட்டுக்கள்..

ஆதவா
24-12-2008, 05:28 AM
வந்து நாட்டாமை தீர்ப்ப சொல்லுவார் பாருங்கோ.....
எட்றா அந்த சொம்ப.. :D

சொம்ப' யா? யாரைச் சொல்றீங்க??????:aetsch013:

சிவா.ஜி
24-12-2008, 06:04 AM
மனமார்ந்த நன்றி ஆதவா...நேரம் கிடைக்கும்போதெல்லாம்...எழுத முயற்சிக்கிறேன். அவாளோடு நிறைய பழகியதாலும், என் தோழியாலும், அவர்களின் பாஷையை ஓரளவுக்கு நன்றாகவே தெரிந்துகொண்டேன்.

(மதியோட ‘சொம்ப' க்கு உங்க கமெண்ட்...நிஜமாவே வாய்விட்டு சிரிச்சிட்டேன். சூப்பர்..!!)

தாமரை
24-12-2008, 06:09 AM
அடடே! ஆரம்பிங்கோ.. அதுக்குள்ள, இந்த காலட்சேபத்தை முடிச்சிடறேன்..

கலாட்சேபமா?
காலட்சேபமா?

புரியலையே!!!


காலட்சேபம்தான்...('கலா'ட்சேபம்....அமரனைத்தான் கேக்கனும்...ஹி...ஹி...)
கலா ஆட்சேபம் பண்ணினா எதுக்கு அமர்னைக் கேட்கணும். கலாவை இல்லையா கேட்கணும்

காலட்சேபம் தான் கரெக்ட்..

கதா காலட்சேபம்னு சொல்லுவாங்க

காலாட்சேபம்னு சில பேர் சொல்லுவாங்க. கால் அதுக்கு ஆட்சேபம் சொல்லலாதுங்கற தைரியத்தில..

கதை சொல்லி காலத்தை ஷேமமா உபயோகிப்பதால் கதாகாலட்சேப(ம)ம்.

சிவா.ஜி
24-12-2008, 06:16 AM
கலா ஆட்சேபம் பண்ணினா எதுக்கு அமர்னைக் கேட்கணும். கலாவை இல்லையா கேட்கணும்

காலட்சேபம் தான் கரெக்ட்..

கதா காலட்சேபம்னு சொல்லுவாங்க

காலாட்சேபம்னு சில பேர் சொல்லுவாங்க. கால் அதுக்கு ஆட்சேபம் சொல்லலாதுங்கற தைரியத்தில..

கதை சொல்லி காலத்தை ஷேமமா உபயோகிப்பதால் கதாகாலட்சேப(ம)ம்.

சூப்பர்....:icon_b::icon_b::icon_b:

நாட்டாமை
24-12-2008, 07:32 AM
கலா ஆட்சேபம் பண்ணினா எதுக்கு அமர்னைக் கேட்கணும். கலாவை இல்லையா கேட்கணும்
அட.... இது கூட நல்லா இருக்கே....

சிவா.ஜி
28-12-2008, 04:06 AM
சாமா: திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......பிரும்மானந்த ஹரே கஜானன தாண்டவனே ஜகனே....

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே......

எல்லாருக்கும் நமஸ்காரம், ஷேமமா இருக்கேளோன்னா...? ஐரோப்பாவுல காலட்சேபம் பண்ணிண்டிருக்கச்சே....அந்த மாபாவிகள்...துப்பாக்கியால அப்பாவி ஜனக்களைக் கொன்னதைப் பாத்து மனசெல்லாம் பதறிடுத்து...கையில ஆயுதமில்லாத போர்வீரனையே கொல்லப்டாதுன்னு நம்ம சாஸ்திரம் சொல்லுது. அப்படித்தான் ஆனானப்பட்ட சக்ரவர்த்திகளே கடைபிடிச்சுண்டு வந்தா...ஆனா இந்த கோழைகள், மிருகத்தை விட கேவலமா நடந்துண்டிருக்கா....

கிச்சு: மாமா இன்னாத்துக்கு இப்ப இவ்ளோ பீலிங்....கூல் மாமு கூல்....பத்து மாசத்துக்கு அப்பால நம்ம ஊர்ல கத சொல்றதுக்கு வந்துக்கிறோம்...நல்லத பேசு மாமு...அந்த நாய்ங்களைப் பத்தி பேசி இன்னாத்துக்கு உன் எனர்ஜிய வேஸ்ட் பண்றே....

சாமா: அப்படியில்லடா அம்பி...மனசு கேக்கல...அதோட..தாக்க வந்தவனே நான் இன்ன நாட்டை சேந்தவன்தான்னு சொன்னப்பறமும் அந்த தேசத்தோட பிரதமர்...அவன் பேரே எங்க மக்கள் தொகை கணக்கெடுப்புல இல்லன்னு சொல்றது...முழு பூசணிக்காயை...இல்ல பூசணிக்காய் தோட்டத்தையே சோத்துக்குள்ள மறைக்கறா மாதிரின்னா இருக்கு....

விச்சு: மாமா அந்த ஆளைப்பத்திதான் எல்லாருக்கும் தெரியுமே....பக்கா கிரிமினல்ன்னு. தன்னோட ஆம்படையாளையே ப்ளான் பண்ணி கொன்னவர்ன்னு...அரசல் புரசலா பேச்சு அடிபடறதே...அதுல நிச்சயம் 95 பெர்சண்ட் உண்மையிருக்குன்னு பேஷறாளே....

சாமா: சரி...மன்னிச்சுக்கோங்கோ செத்த உணர்ச்சிவசப்பட்டுட்டேன்....தமிழனோல்லியோ...சீக்கிரமா உணர்ச்சிவசப்பட்டுடுவோமே....

கிச்சு: அக்காங்....ஆ...ஊன்னா இத்த சொல்லிடுங்க...அதான் அவனவன்...நம்ம தலையில...மொளகா அரைச்சுட்டு போய்க்கினே கீறாங்கோ....

சாமா: விட்றா அம்பி...அவா அவா பாவம் அவா அவாளுக்கு. அதுக்காக அடுத்தவாளுக்கு உதவி செய்யாம இருக்கப்டாது.

கிச்சு: சர்தான் மாமு....இந்த பாயாப்போன...நிஷா புயல்ல கலீஜா அடி வாங்குனவங்களுக்கு...ஒதவறேன்னு கவுர்மெண்ட்...துட்டு குடுக்குறேன்னுட்டு எம்மாம் காசு அவனுங்க பாக்கெட்டுல தள்ளிக்கீறாங்கோ.....

சாமா: அதெல்லாம் நடக்கறதுதானாடா,,கிச்சு....சன் நெட்வொர்க்கும் சன் சின்னம் கட்சித்தலைமையும் சமாதானமா போன கதையைக் கேட்டு...அவமானமா இருக்குடா அம்பி. ரெண்டு நாளைக்கு முன்ன அடிச்சிப்பாளாம்...அடுத்த நாளே கூடிப்பாளாம்...கோடிகள் விளையாட்ற இந்த வெளையாட்டுல...நாமதாண்டா அம்பி...ஜோக்கராயிண்டு வரோம்.

விச்சு: மாமா சத்தமா சொல்லாதீங்கோ....தமிழ்த்தாயின் சிறப்பு மைந்தனுக்கு எதிரானவன்னு ஒங்களப் பிடிச்சு புழல்ல போட்டுடுவா...இல்ல ஒங்க வீட்டுக்கே புகுந்து ஒங்கள போட்டுடுவா..

சாமா: சரிடா...இன்னைக்கு கதை ரொம்ப சீரியஸான்னா போயிண்டிருக்கு...சத்யராஜ் காலேஜ் ஸ்டூடண்ட்டா நடிக்கறாராம்மா..கேட்டேளா...அவர் பண்ற கூத்து....

கிச்சு: அட இன்னா மாமு...இப்ப தமிழ் சினிமாவுல எங்க பாத்தாலும் சிக்ஸ் பேக்ன்னு ஒரு வியாதி பரவிக்கினு கீது...யாரப்பாத்தாலும் ஜிம்முக்குப் போய் சிக்ஸ் பேக்குன்னு நம்மள பேக்கு ஆக்கினு கீறாங்கோ...இவரு ஆக்குனா என்னா?

சாமா: அது சரிதாண்டா அம்பி...எந்திரன் தயாரிப்பு சன் நெட்வொர்க்குக்கு போனதுகூட அருண்பாண்டியனோட தலையீடாலத்தான்னு பேஷிக்கறா....ஏகன்கூட ஃப்ளாப் ஆனதுக்கு அவர்தான் காரணம்ன்னு ராஜூசுந்தரம் சொல்றார்...அவர் என்னடான்னா...எந்திரன் இடம் மாறினதுக்கான காரணத்தை கூடிய சீக்கிரம் சொல்வேன்னு சஸ்பென்ஸ் வெச்சிருக்கார்...என்னமோ நடக்குது....மர்மமா...இருக்குதுன்னு பாடத்தோன்றது...

விச்சு: ஆஹா....மாமா...சினிஃபீல்டில....இத்தனை அப்டேட்டா இருக்கேளே....

சாமா: அது என்னடா அம்பி...அப்படி சொல்லிட்டே.....லோகத்துல நடக்கற நாலு விஷயங்களையும்...தெரிஞ்சி வெச்சுக்கறது நல்லதுதானேடா....?

கிச்சு: ரொம்ப நல்லதுதான்..அதும் நம்மள மாதிரி.....கதை சொல்லி பொயப்ப ஓட்டுறவங்க நாலாப்பாக்கமும் பாத்து அல்லாத்தையும் கெவுனிக்கறது ரைட்டுதான் மாமு....

சாமா: இன்னும் ஆறு மாசத்துக்குள்ள அம்பதாயிரம் பேருக்கு வேலைப் போயிடும்ன்னு சொல்லிக்கறாளே....அப்படியாயிட்டா...மறுபடியும் வேலையில்லாத் திண்டாட்டம்ன்னு....நம்ம இந்திய மக்கள் கஷ்டப்படுவாங்களே...கவுர்மெண்ட் எதும் நடவடிக்கை எடுக்கப்படாதா...?

விச்சு: இந்த பொருளாதர சுனாமியில சிக்கிண்டு பல கம்பெனிகளே திண்டாடிண்டிருக்கா...கவர்மெண்ட் ஏதாச்சும் செய்வாங்க..

சாமா: எப்படியோட அம்பி...எல்லாம் ஷேமமா இருக்கனும். அதான் நமக்கு வோணும்...

கிச்சு: சர்தான் மாமு....அல்லாம் நல்லாக்கீனும். எவ்ரிபடி ஷுட் பி ஹாப்பி.

சாமா, கிச்சு, விச்சு..எல்லோருமா சேர்ந்து...

கதைகேட்ட உங்களுக்கும், கதை சொன்ன எங்களுக்கும் டாட்டா...சுப டாட்டா....மங்களம் சுப மங்களம்.......

lolluvathiyar
30-12-2008, 11:09 AM
ஆகா ரொம்ப நாள் கழிச்சு கதாகலாட்சம் படிச்சதில் ரொம்ப திருப்தியா இருந்தது. இடையில் கேப் விட்டுட்டீங்களா சிவாஜி ( நான் கொஞ்ச நாள் மன்றம் வருவதில் கொஞ்சம் கேப் விட்டுட்டேன்)

சிவா.ஜி
31-12-2008, 06:28 AM
வாங்க வாங்க வாத்தியாரே...பாக்கவே முடியறதில்ல...? சீக்கிரமா வழக்கம்போல வந்து கலக்குங்கய்யா....

உங்க திருப்தியான பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி வாத்தியார்.

சிவா.ஜி
10-01-2009, 05:52 AM
சாமா: அடே கிச்சு, விச்சு...மூட்டையைக் கட்டிண்டு கெளம்புங்கோ....எல்லாம் லேட்டஸ்ட்டா மாறிடுத்து. இனி இந்த பழம்பஞ்சாங்கமாயிட்ட காலட்சேபத்தைக் கேக்க யாருமில்லை. இத்தோட இதை முடிச்சுக்கலாம். இதுவரைக்கும் கேட்டு ரசிச்ச மகாஜனங்களுக்கு மெகா நன்றி. நமஸ்காரம்.

கிச்சு:சர்தான் மாமு. இனிமே இங்க இன்னா கீது. கெளம்பவேன்டியதுதான்.

விச்சு: ஆமாமா...எல்லாருக்கும் நமஸ்காரம். போயிட்டு வரோம்.

நேசம்
10-01-2009, 07:12 AM
அப்படியெல்லாம் சொல்லதிங்கண்ணா. கதாகலாட்சம் தொடர்ந்து நடந்துங்க..

ஆதவா
10-01-2009, 07:15 AM
உங்கள் இறுதி காலட்சேபத்திற்கு என்ன எழுதவேண்டும் என்று தோணவில்லை.. மேலும் சற்று பணிப்பளு.. அதனால்தான் வந்து பார்த்தும் எழுதாமல் சென்றுவிட்டேன்..

நாட்டு நடப்புகளை காலட்சேபத்தின் வாயிலாக எழுதுகிறீர்கள் என்பது மட்டுமே தெரிந்து கொண்ட செய்தி....

வெறும் பாராட்டுக்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றால் அப்படைப்பை ஆதவன் படிக்கவில்லை என்று ஆகிவிடும்... அப்படிச் சொல்லுபவன் ஆதவனுமில்லை. இன்றும் அப்படித்தான்.... பாராட்டுக்கள் என்றோ, அருமை என்றோ, ஏதேனும் குறைசொல்லவோ முடியாமல் திரும்புகிறேன்...

அன்புடன்
ஆதவன்.

அக்னி
10-01-2009, 07:34 PM
சாமா சாஸ்திரிகள் மூட்டைகட்டும் பதிவிற்குப் பின்னதாக எனது பதிவு இடம்பெறுவதையிட்டு வருந்துகின்றேன்.

சிவா.ஜி...
சாமா சாஸ்திரிகளுடனான காலட்சேப ஒப்பந்தத்தை நீடிக்க வேண்டுகின்றேன்.

உண்மையான ரசிகர்களின் சார்பாக,
உண்மையான ரசிகனின் வேண்டுகோளாக,
முன்வைக்கின்றேன்.

சிவா.ஜி
25-01-2010, 08:00 AM
சரியா ஒரு வருஷம் முன்னால, ஏதோ மன வருத்தத்துல, மூட்டை முடிச்செல்லாம் கட்டிக்கிட்டு புறப்பட்ட சாமா குழுவினரை மறுபடியும் அழைத்திருக்கிறேன். அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். இன்றோ நாளையோ....லேட்டஸ்ட் நாட்டு நடப்புகளுடன் வந்துடுவார்.

கதை கேட்க விருப்பமிருக்கிறவங்க....தவறாம வந்துடுங்க...!!

புதுசா வந்தவங்களுக்கு அவங்களைப் பத்தி ஒரு சின்ன அறிமுகம்...

சாமா சாஸ்திரிகள்-நிகழ்கால நாட்டு நடப்பை ஊன்றி கவனித்து தன் கருத்துக்களை காலட்சேபத்தில் சொல்வார்.

கிச்சு-சாமா சாஸ்திரிகளின் மருமான்..பேட்டை பையன்களோடு சேர்ந்து வளர்ந்ததால் ஐயர் பாஷை மறந்து சென்னைத்தமிழ் பேசும் அடாவடி மற்றும் குறும்புக்கார இளைஞன்.

விச்சு-இவனும் சாமா சாஸ்திரிகளின் தூரத்து சொந்தம்...கிராமத்திலிருந்து சென்னைக்கு வேலை தேடி வந்தவனை தன்னுடன் சேர்த்துக்கொண்டார் சாமா.

அன்புரசிகன்
25-01-2010, 08:17 AM
அடுத்த கட்ட நகர்வா...

சிவா.ஜி
25-01-2010, 08:32 AM
ஆமா அன்பு....இப்ப நடக்கற நாட்டு நடப்பைப் பாத்தா....ஏதாவது சொல்லனும்போல இருக்கு.

அன்புரசிகன்
25-01-2010, 08:45 AM
ஆமா அன்பு....இப்ப நடக்கற நாட்டு நடப்பைப் பாத்தா....ஏதாவது சொல்லனும்போல இருக்கு.
அன்பு: என்ன சொல்லவாறீங்க???
சிவா அண்ணா: மூளை ரொம்ப ஃப்ரஷ் ஆக இருக்கு...
அன்பு: அதுக்கு????!!!!:confused::confused::confused::confused::confused:
சிவா அண்ணா: ஏதாவது பண்ணணும் போல இருக்கு...

karthik-gopal
25-01-2010, 09:27 AM
மிக அருமை.

சிவா.ஜி
25-01-2010, 11:22 AM
மிக்க நன்றி கார்த்திக். காலட்சேபத்துக்கு தொடர்ந்து வாங்க....

பா.ராஜேஷ்
25-01-2010, 01:11 PM
அடுத்தது எப்போ??

சிவா.ஜி
25-01-2010, 03:03 PM
நாளைக்கு.....!!

jayashankar
25-01-2010, 03:13 PM
அட அப்படியா...

அப்ப சரி....

நாளைக்கு நொறுக்குத்தீனி, பிளாஸ்க்கில் தேநீர் எல்லாம் எடுத்து வந்து முதல் ஆளா உக்காந்துறுவோமில்ல.....

சிவா.ஜி
26-01-2010, 05:38 AM
சாமா: திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......திமிக்கிட திமிக்கிட வாத்யமிருதங்க......பிரும்மானந்த ஹரே கஜானன தாண்டவனே ஜகனே....

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே......

பெரியவா சின்னவா எல்லாத்துக்கும் நமஸ்காரம்...கொஞ்சம் லாங் லீவா எடுத்துண்டுட்டோம்....எல்லாரும் எங்களை மன்னிச்சுடுங்கோ. இனி தவறாம கதை கேக்கலாம்.

இன்னைக்கு இந்தியாவோட குடியரசு தினம்..

விச்சு: ஆமா...

சாமா: குடிமக்களை, குடிமக்களே ஆளறதுக்குப் பேர்தான் குடியரசு....ஆனா இப்ப நம்ம நாட்டுல நடக்கறதை பாக்கறச்சே...வெள்ளைக்காரன் போய்ட்டு....கொள்ளைக்காரங்க ஆட்சிக்கு வந்துட்டாங்களான்னு சந்தேகமா இருக்கு...

கிச்சு: இன்னாத்துக்கு மாமு சந்தேகமெல்லாம்....ருசுவா அதேதான்...இன்னாமா கொள்ளையடிக்கிறாங்க...1000 கோடியெல்லாம் ஜர்தா பீடா கணக்கா சுருட்டி அலேக்கா வாயில போட்டுக்கறானுங்கோ...

சாமா: இருந்தாலும், நாம எல்லாம் இன்னமும் ஜனநாயகத்து மேல நம்பிக்கை வெச்சுண்டிருக்கோம். அது நல்ல விஷயம் தான். தப்பு செய்யறவாளை அந்த ஆண்டவன் பாத்துப்பான்..

விச்சு : ஆமா பாத்துப்பான்....

சாமா: சினிமாக்காராளுக்கு இப்ப நேரமே சரியில்ல போலருக்கு...ஜக்குபாய் தியேட்டருக்கு வர்றதுக்கு முன்னாடியே எந்த பிரகஸ்பதியோ நெட்டுல பொட்டுன்னு போட்டுட்டான்னு பொலம்பிண்டிருக்கா....அவாளே பொலம்பிண்டிருக்கிறச்சே...நம்ம சூப்பர்ஸ்டார் வேற அதுல கிருஸ்ணாயில ஊத்தறார்...

கிச்சு: இன்னா மாமு சொல்ற...நம்ம சூப்பர்ஸ்டார் அப்படியெல்லாம் செய்ய மாட்டாரே....எதானா ராங்கா கேட்டுக்கினியா?

சாமா: இல்லடா அம்பி...ரைட்டாத்தான் கேட்டேன். கே.எஸ் ரவிகுமாரையும், சரத்குமாரையும் மேடையில வெச்சுண்டே...இந்த பேரே ராசியில்ல....நான் அதனாலத்தான் வெலகிண்டேன்,அதுவும் இது வாசபி ங்கற ப்ரெஞ்ச் படத்தோட கதைதான், அப்படி இப்படின்னு எதார்த்தமா சொல்லிட்டார்...பாவம் அவா ரெண்டுபேரும் அம்மாவுக்கு முன்னால உக்காந்துக்கிட்டிருக்கிற கட்சிக்காரா மாதிரி அவஸ்தை பட்டுட்டா.

விச்சு: அடடா....அப்படி எதுக்குப் பேசினார்...?

சாமா: அவரு ஏதோ ஆறுதல் சொல்றதா நெனைச்சுண்டு பேசிட்டார்...அத விட்றா அம்பி...ஆனா இந்த ஆயிரத்தில் ஒருவனால சூர்யாவுக்குப் பிரச்சனை வந்ததுதான், தென்னை மரத்துல தேள் கொட்டினா, பனைமரத்துல நெறி கட்டிண்ட கதை ஆயிடுத்து...

கிச்சு: அவருக்கு இன்னாத்துக்கு ரோதனையாச்சு மாமு...கார்த்திதான அத்துல ஹீரோ...

சாமா: அதாண்டா அம்பி...பிரச்சனையே....ஆளுங்கட்சி குடும்பத்துப் பிள்ளையாண்டான் ஒருத்தன் படத்தை வாங்கியிருக்கான். ரஷ் போட்டுப் பாத்துட்டு பிடிக்கலன்னு கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டிருக்கான். ரொம்ப பெரிய தொகையாயிருந்தாலும், தம்பியோட படத்துக்குப் பிரச்சனை வரப்படாதேன்னு சூர்யாதான் ஒரே ராத்திரியில அத்தனை பணத்தையும் அரேஞ்ச் பண்ணியிருக்கார். அதை இன்கம்டாக்ஸ்காராகிட்ட போட்டுக்கொடுத்துட்டார் அந்த பிள்ளையாண்டான். அவாளும் வந்து கொடை கொடைன்னு கொடைஞ்சுட்டுப் போயிட்டாளாம்...

விச்சு: ஆஹா...இவ்ளோவெல்லாம் நடந்திருக்கா...?

சாமா: இன்னும் என்னவெல்லாமோ நடந்திருக்கு...இதுல நைஸா தப்பிச்சுண்டது நம்ம நயன்தாரா தான். ஆந்திராவுல இருக்கிற காங்கிரஸ் எம்பிக்களப் பிடிச்சி...ரெய்டு வராம தப்பிச்சுண்டுட்டாளாம்.

கிச்சு: படா கில்லாடி மாமு அந்தப் பொண்ணு....

சாமா: குஜராத் ஹைகோர்ட் இப்படி அதிரடியா தீர்ப்பைக் கொடுத்து அசத்திப் புட்டாளே....ஹிந்தி பேசத் தெரியாதவாளையெல்லாம், வடக்கத்தி மனுஷா....நீங்கள்லாம் இந்தியனே இல்லையா...நம்ம தேசிய மொழித் தெரியாதவாளா இருக்கேளேன்னு இனி சொல்ல முடியாது...இந்தியாவுக்குன்னு ஒரு தேசிய மொழியே இல்லைங்கற செய்தி கொஞ்சம் அதிர்ச்சியா இருந்தாலும், அவாளோட அதிகாரம், ஆர்ப்பாட்டம் இனி கொஞ்சம் அடங்கும்ன்னு நெனைக்கறச்சே... ஆறுதலா இருக்கு....

விச்சு: அப்படியெல்லாம் ஆறுதல் படாதேங்கோ மாமா...தமிழ்லயே பல்லுவெளக்கி, தமிழ் காப்பிக் குடிச்சுட்டு, தமிழ் சாப்பாடு சாப்ட்டுட்டு...ஹிந்தி வாலாங்க கிட்ட பதவி வாங்க போற தலைவர்ங்க இருக்கிற வரைக்கும்...அவாளுக்கு நாமன்னா எளக்காரம் தான்..

சாமா: ரொம்ப வில்லங்கமா பேசாதேடா அம்பி....இப்ப நம்ம தமிழ்நாடு இருக்கிற நிலைமையில...நீ காணாமப் போயிடுவ...

கிச்சு: ஆமா மாமு...இன்ஸ்பெக்டரையே போட்டுத்தள்றானுங்க, அதுவும் மந்திரிங்கோ...கண்டுக்கினு கீறப்பவே கீஸிட்டு போவச் சொல்லோ நாம எல்லாம் ஜுஜூபி...

சாமா: சரி சரி ரொம்ப சீரியஸா பேசிட்டோம்....ஒரு லைட்டான மேட்டர்....நம்ம சிம்பு புள்ளையாண்டான்....சூப்பர்ஸ்டாரோட சின்ன மகளுக்கு வாழ்த்து சொல்ல போனைப் போட்டிருக்கான்.... அந்தப்பொண்ணு காச்சு மூச்சுன்னு கத்தி, கண்டபடி பேசிட்டாளாம்..... பிள்ளையாண்டான் பாவம் பொலம்பிண்டு நொந்துபோய் கிடக்குறான்...

கிச்சு: அத்த வுடு மாமு....லேட்டா போனா முனீம்மாகிட்ட சரக்கு தீந்துடும்...கதைய முடி....

சாமா: அட ப்ரம்மஹத்தி....இன்னுமாடா அந்த எழவை நீ விட்டுத் தொலைக்கல....சரி...சரி...சேர்ந்து பாடுங்கோடா....

"கதை கேட்ட உங்களுக்கும்
கதை சொன்ன எங்களுக்கும்
மங்களம் சுப மங்களம்........"

நேசம்
26-01-2010, 06:30 AM
அடாடா.... ரொம்ப நாளைக்கு பிறகு சிவா அண்னாவின் பதிவு இந்த திரியில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.நேரம் கிடைக்கும் போது எல்லாம் தொடர்ந்து தாருங்கள்

சிவா.ஜி
26-01-2010, 07:34 AM
ரொம்ப நன்றி நேசம். நிச்சயம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தருகிறேன்.

jayashankar
26-01-2010, 09:18 AM
ஆஹா நாட்டுநடப்பை....கதாகாலட்சேபம் முறையிலா...

நல்லாகீதுங்க....தொடருங்க...

சிவா.ஜி
26-01-2010, 10:48 AM
ரொம்ப நன்றி ஜெய்.

பா.ராஜேஷ்
26-01-2010, 11:55 AM
சூப்பர்ணா ... ரொம்ப விவரமா விலாவாரியா சொல்லி இருக்கீங்க..

சிவா.ஜி
26-01-2010, 01:01 PM
ரொம்ப ரொம்ப நன்றி ராஜேஷ்.

அக்னி
26-01-2010, 04:29 PM
நேத்தே பாத்துண்டு போனேன் நியூ போஸ்ட்ல சாமா கதாகாலட்சேபம் முன்னுக்கு வந்து நின்னதை...
சர்தான், கதா நேத்திக்கே முடிஞ்சுடுச்சோன்னு கவலப்பட்டா,
அது இன்னிக்குத்தானா...

கொஞ்சம் கதா பத்தி எழுதுவோம்னா,
மடிக்கணினிக்கு மின்சாரப் பற்றாக்குறைன்னு வார்னிங் வருது.

பாழாப் போன இந்த ட்ரெய்ன்ல, மின்சாரத்த பல்ப்பா மட்டும் வுட்டுருக்காங்க.

சரி... சரி... அப்புறமா வந்துடறேன்...

வர்ட்டா...

சிவா.ஜி
27-01-2010, 04:46 AM
கவர்மென்ட்டுக்கு ஒரு லெட்டெர் எழுதி போட்டுடுங்கோ... ட்ரெயின்ல பேட்டரி சார்ஜர் கண்டிப்பா வேணுன்னு.....

சிவா.ஜி
03-06-2011, 05:04 PM
ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு. இப்ப நாட்டு நிலைமைய பாக்குறச்சே...காலாட்சேபத்தை திரும்பத் தொடங்கினா...துட்டுத் தேறும்ன்னு சாமா சாஸ்திரிகள் நினைக்குறாரு...விச்சுவும், கிச்சுவும் தயாரா நிக்கறா...ஜனங்கதான் சொல்லனும்....ஆரம்பிச்சுடலாமா....

சாம்பிள்:

சாமா: போன வருஷம் இந்நேரம்....”செம்மொழியான தமிழ்மொழியாம்” எல்லா இடத்திலயும் ஒலிச்சுக்கிட்டிருந்தது....இந்த வருஷம்...”ஜெயிலுக்குள்ளே கனிமொழியாம்”....

கிச்சு: மாமூ...பெரிய இடத்து பொல்லாப்பு வோனான்னுட்டு...நீயே இத்த சொல்லலாமா....

சாமா: ஆமாண்டா அம்பி நமக்கெதுக்கு பொல்லாப்பு...செப்டம்பர்ல மிக்ஸி, ஃபேன் எல்லாம் கிடைக்கப்போகுதாமே அதை வாங்கமுடியுமான்னு பாக்கலாம்....

விச்சு: எல்லாம் கிடைக்கும்...அதை ஓட்டறதுக்கு....கரண்ட்டு கிடைக்குமா மாமா.....

Nivas.T
03-06-2011, 05:15 PM
:lachen001::lachen001::lachen001::lachen001:

அமரன்
03-06-2011, 06:14 PM
நாட்டு நடப்புகளை நகைச்சுவையாகவும் நாகரிகமாகவும் சொல்லிச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் தொடர் அறுந்து கிடந்தமை வருத்தியது. தொடர்வது சந்தோசம் என்பதைச் சொல்லவும் வேண்டுமா என்ன? ம்... ம்... கிளப்புங்கள்.

Ravee
04-06-2011, 06:49 AM
சாமா: ஆமாண்டா அம்பி நமக்கெதுக்கு பொல்லாப்பு...செப்டம்பர்ல மிக்ஸி, ஃபேன் எல்லாம் கிடைக்கப்போகுதாமே அதை வாங்கமுடியுமான்னு பாக்கலாம்....

விச்சு: எல்லாம் கிடைக்கும்...அதை ஓட்டறதுக்கு....கரண்ட்டு கிடைக்குமா மாமா.....

:lachen001: :lachen001: :lachen001: :icon_b:

ஆதவா
04-06-2011, 09:26 AM
விச்சு: எல்லாம் கிடைக்கும்...அதை ஓட்டறதுக்கு....கரண்ட்டு கிடைக்குமா மாமா.....

ஒரு தீவிர திமுக அனுதாபி சொன்னார்... ”ஒரு நாலஞ்சு மாசமாத்தான் கரண்டு கட்டாகுது, நாலுவருஷம் கரெக்டாதான் இருந்துச்சு”னு.. இவர் பெரிய கம்பனியில ஒரு நல்ல போஸ்டில் இருந்தவர். கரண்டு கட்டாவதையே தெரியாமல் இருக்கிறவர்.. கொடுமைங்க... இதைவிட கொடுமை, திமுக ஆட்சியில்தான் மின்சாரம் அதிகம் உற்பத்தி செஞ்சாங்களாம்!!

நான் தொழில் செய்துகொண்டிருந்த பொழுது நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறேன். அப்போது இரண்டு மணிநேரம் கட்டிங் என்று நினைக்கிறேன்... என் அண்ணன் இறந்ததற்கும் கரண்ட் கட் ஒருவிதத்தில் காரணமாக இருந்தது!

சரிசரி.... நீங்க எப்பவும்போல வழக்கமா ஆரம்பிங்க.

கீதம்
04-06-2011, 11:10 AM
முதல் பதிவிலிருந்து முழுமையாகப் படித்து முடித்துவிட்டேன். சிந்தனையூடே சிரிக்கவைத்து, சிரிப்பினூடே சிந்திக்கவைத்து சாமா சாஸ்திரிகளும் விச்சு, கிச்சுவும் செய்யும் காலட்சேபம் அற்புதம். தொடரும் காலட்சேபத்துக்காய் காத்திருக்கிறேன் அண்ணா.

சிவா.ஜி
04-06-2011, 04:13 PM
நிவாஸின், மற்றும் ரவீயின் சிரிப்பும், அமரன், ஆதவா தங்கை கீதத்தின் உற்சாக வரவேற்பும்....என்னை....இல்லையில்லை....சாமா சாஸ்த்ரிகளை...தொடரசெய்திருக்கிறது.....தொடருகிறேன்.

Ravee
05-06-2011, 01:03 AM
என் அண்ணன் இறந்ததற்கும் கரண்ட் கட் ஒருவிதத்தில் காரணமாக இருந்தது!



என்ன சொல்லுறீங்க ஆதவா ... சமீபத்தில் இது நடந்ததா ..... உங்களுக்கு என் வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன்.

M.Jagadeesan
05-06-2011, 09:08 AM
தொழில்முறை காலட்சேபம் செய்பவர்கள் கூட தங்களிடம் பிச்சை வாங்கவேண்டும். அருமை ; தொடரட்டும் காலட்சேபம்.

அக்னி
05-06-2011, 09:49 AM
என்ன ட்ரெய்லரே ஓடிட்டிருக்கு...
சாமா சாஸ்திரிகள் மேடையில அமர்ந்திட்டாரா இல்லியா...
திரையைத் தூக்குங்கப்பா விரைவா...

நாஞ்சில் த.க.ஜெய்
05-06-2011, 04:52 PM
அருமையான கதாகாலட்சேபம் என்னையும் வரிசையில் அமர செய்து விட்டது ..ம் தொடருங்கள் நண்பரே .....

சிவா.ஜி
06-06-2011, 01:36 PM
திமிக்கிடத் திமிக்கிட வாத்ய மிருதங்க...பிரம்மானந்த ஹரே கஜானன
தாண்டவனே ஜகனே...

சாமா: ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே....

காலட்சேபத்துக்கு வந்திருக்கற எல்லாருக்கும் என் சார்பாவும், இந்த அம்பிகள் சார்பாவும் நமஸ்காரம்.....எப்பையோ எங்க பாட்டனார் காலத்துல வாங்கிப்போட்ட ஒரு கிரவுண்ட் நிலத்துல வீடு கட்டலாம்ன்னு போன வருஷம் ஆரம்பிச்சேன்.....இடத்த யாரோ புண்ணியவான் ஆக்ரமிச்சிருந்தான்...அவனோடப் போராடி, ஹைகோர்ட் வாசலை ஏறி எறங்கி அத மீட்டெடுக்கறதுக்குள்ள எனக்கு ஒரு வருஷத்துக்கு மேல ஆயிடுத்து.. வீடு கட்ட சேத்து வெச்ச பணத்துல பாதி கரைஞ்சுடுத்து....அதான் திரும்பவும் சப்ளாக்கட்டையைத் தூக்கிட்டேன்....

கிச்சு: மாமூ இப்ப இன்னாத்துக்கு உன் புராணத்தப் பாட்ற...நாட்ல எம்மாம் விஷயம் நடக்குது...அத்தப் பத்திப் பேசுவியா...உன் சொத்தப்பத்திப் பேசற...

சாமா: ரொம்ப நாளைக்கு அப்புறமா வந்திருக்கோமில்லியா...அதாண்டா அம்பி என் சொந்த சோகத்தைக் கொஞ்சம் பொலம்பிட்டேன்....

விச்சு: பாவம் மாமா நீங்க...ஏற்கனவே பார்வதி மாமி நடமாட்டத்துல இப்ப இருக்கிற வீடு எப்ப விழுமோன்னு தவிச்சுப்போய்...நித்ய கண்டம் பூரண ஆயுசா வாழ்ந்துண்டிருக்கேள்...புது வீடு கட்ட முடியாமத் தவிக்கறேள்....இந்த பய பேச்சைக் கேக்காதீங்கோ...இவாள்ளாம் யாரு...நம்ம சொந்த மனுஷா...அவாளாண்ட சொல்றதுல என்ன தப்பு....

சாமா: ரொம்ப சரியாச் சொன்னேடா அம்பி. நோக்கு இன்னைக்கு மாமி கையால பாயசம் செஞ்சுக்கொடுக்கச் சொல்றேன்....

விச்சு: அய்யோ மாமா...நேக்கு பாய்சன் வேண்டாம்.....

சாமா: படவா....இரு ஆத்துக்கு வா....மாமிக்கிட்ட சொல்லி உன் தலையில நங்குன்னு கொட்டச் சொல்றேன்....

விச்சு:(முணுமுணுப்பாய்) பாயசத்துக்கு இந்தக் குட்டேத் தேவல)

சாமா: என்னடா முணுமுணுக்கற....

கிச்சு: அத்த வுடு மாமு...நீ ஸ்டெயிட்டா மேட்டருக்கு வா....

சாமா: இந்த ஒரு வருஷத்துல நாட்ல என்னவெல்லாம் நடந்துடுத்து.....அய்யா ஆறாவது முறை அமைக்க முடியாததை...அம்மா மூணாவது முறையா அமைச்சுட்டார். அதோட தன்னோட அதிரடியையும் ஆரம்பிச்சுட்டார்.புதுக்கட்டிடம் புறக்கணிப்பு, வீடு வழங்கல்....நிறுத்திவைப்பு, சமச்சீர் பாடப்புத்தகங்கள் ஓரங்கட்டல்.....செம ஸ்பீடுலன்னா போய்ண்டிருக்கார்.

கிச்சு: மெட்ரோ ரயிலுக்கும் ஆப்பு வெச்சிட்டாங்களே மாமூ. இம்மாம் பெரிய சென்னைக்கு மோனோ ரயில் திட்டம் ஒத்து வருமா....அத்தக் கொஞ்சம் கண்டுக்கினா நல்லாருக்கும்...

சாமா: நோக்கும் நேக்கும் தெரியறது.....டிராஃபிக்ல கஷ்டப்படறவா நாமதானே....அவாளுக்கு யார் எடுத்துச் சொல்றது.....அப்படி மத்திய அரசுக்கு ஏதோ நல்லதை எடுத்துச் சொல்லப் போன யோகா குருவையே பொட்டலமாக் கட்டிக் கொண்டுபோய்ட்டாளே

விச்சு: நாம ஏதாவது சொன்னா நம்மள பொட்லமெல்லாம் கட்டமாட்டா...பார்சல் பண்ணிப்புடுவா....எதுக்கு வம்பு...?

சாமா:நேக்கு ஒரு விஷயம் புரிய மாட்டேங்குதுடா அம்பி.....மடியில கணமிருக்கறவாத்தானே பயப்படனும்...இந்த காங்கிரஸ் கவர்மெண்டு ஏன் பயப்படறா....?

கிச்சு: இன்னா மாமு....வெரல் சூப்புறக் கொழந்தைக்கு கூட தெர்யுமே....குரு சொல்றா மாதிரி..ப்ளாக் மணி பார்ட்டிங்களையெல்லாம் லைட் போட்டுக் காமிச்சா....அவங்கக் கட்சியில தாடித்தாத்தா மட்டுந்தான்...பார்லிமெண்டுல ஒண்டியா ஒக்காற வேண்டியிருக்கும். அதுகூட சோனியாம்மா சொன்னாதான் ஒக்காறுவாரு....இல்லாங்காட்டி...கம்முன்னு நின்னுக்கினே இருப்பாரு.....இவரு சிங்கா...மன்க்கா

விச்சு: மன்க்கா....அப்படீன்னா என்னடா கிச்சு...?

கிச்சு: அதாம்ப்பா....மௌணமா...பேசாமா இருப்பாங்களே தொறவிங்களோ இன்னாவோ....

சாமா: அட அபிஷ்ட்டு...அது தொறவியில்லடா கடங்காரா...துறவி....உன் நாக்குல தர்ப்பையைப் போட்டு பொசுக்க...

கிச்சு: அக்காங்...அதேதான்......அதுக்கு இன்னாத்துக்கு மாமு....மெர்சலாகுற....கூல் மாமு கூல்.....

சாமா: கூல்ன்னு சொல்லி சிவாஜியில பட்டையைக் கெளப்பின சூப்பர் ஸ்டார்.....இப்ப ஹாட் நியூஸாயிட்டார். சிங்கப்பூர்லருந்து பூரண நலத்தோட திரும்பி வர்னுன்னு அவரோட ரசிகர்கள்ளாம் ஹோமமும், பூஜையும் பண்ணிண்டிருக்காளாம்....அவரே சொன்னா மாதிரி....நான் குதிரை...கீழ விழுந்தாலும்...டக்குன்னு எழுந்துடுவேன்னு....எழுந்து வந்துட்டார்னா போறும்.

விச்சு: கவலையேப் படாதீஙோ மாமா....அவரு ஜம்முன்னு வந்து நிக்கத்தான் போறாரு......

சாமா: ரொம்ப சந்தோஷண்டா அம்பி. செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள்ள, பிரதமராண்டப் பேசி 1000 மெகாவாட் கரண்ட்டை அம்மா அழைச்சுண்டு வந்துடுவாரா.....

கிச்சு: அதென்னா செப்டம்பர் 15 மாமு...?

சாமா: அன்னையிலருந்துதானேடா இலவச மிக்ஸியும், ஃபேனும் கொடுக்கறதா சொல்லியிருக்கா....அதுகளையெல்லாம் ஓட்டறதுக்கு கரண்ட்டு வேணாமா....?

விச்சு: சரியாப் பாயிண்ட்டைப் பிடிச்சேள் மாமா......

சாமா: நான் பாயிண்ட்டைப் பிடிக்கறது இருக்கட்டுண்டா அம்பி.....நம்ம சி.பி.ஐ க்காரா...ஏர்செல் சிவசங்கரனை விசாரிக்க ஆரம்பிச்சுட்டாளாமே.....அவா...நல்லப் பாயிண்ட்டாப் பிடிச்சாள்ன்னா....திஹார்ல இன்னொரு ரூமையும் புக் பண்ணிப்பிடலாம்......

கிச்சு: ஆரம்பத்துல ஒரு கச்சேரியில நீ சொன்னா மாதிரி அப்ப ‘எஸ்’ எழுத்துல பேரு தொடங்கறவங்களுக்கு பேஜார்ன்றா மாதிரி.....இப்ப ’தயா’ ந்னு பேர் ஆரம்பிக்கறவங்களுக்கு டைம் சரியில்லன்னு நெனைக்கிறேன்....

சாமா: போறுண்டா.....இன்னைக்கு நம்மக் காலட்சேபத்த இத்தோட நிறுத்திக்கலாம்.....

கோரஸாக....

கதை கேட்ட உங்களுக்கும்
கதை சொன்ன எங்களுக்கும்
மங்களம்....சுப மங்களம்..........

Ravee
06-06-2011, 02:20 PM
ஆஹா பிரம்மாதம் ஒய் ஆனாலும் ...... அய்யாவுக்காக டெல்லியிலே ஒரு வீடு பாக்குற சங்கதி , வடிவேல் .. இடி விழுந்த வேல் ஆனா சங்கதி எல்லாம் சொல்லுவேள்ன்னு எதிர் பார்த்தேன் அடக்கி வாசிசுட்டேளே ... ஒய் .. ரொம்ப நாள் சென்டு வந்தாலும் நோக்கு டச்சு விடலை காணும் ... அடுத்து வரும்போது முன்னகூட்டியே சொல்லிடும் ஒய் ... கும்பகோணம் சீவல் ஸ்பெசலாய் ஆர்டர் போட்டு வாங்கியாறேன்...... :lachen001:

அக்னி
06-06-2011, 04:17 PM
சாமா வந்தா சாதாவா இருக்குமா...
ஸ்பெஷல் ககாசே தான்...

அரசியல் நெடி தூக்கலா இருந்தாலும், நடுநிலையா சாமா சாஸ்திரி ககாசே நடத்தினத்துக்காக...
ஒரு 'ஓ' போடலாமா... வேண்டாம்...
அவரோடதே ரிப்பீட்டு...
திமிக்கிடத் திமிக்கிட வாத்ய மிருதங்க...

சிவா.ஜி
06-06-2011, 04:51 PM
ரவீ நீங்க சொன்ன எல்லாம் இதுக்குமேல வரும். ரொம்ப நாளைக்கு அப்புறம் முதல் பதிவில்லையா....இனி பாத்துக்கலாம்.