PDA

View Full Version : துயில்கொண்ட துறவி

சுகந்தப்ரீதன்
27-08-2007, 04:22 AM
யதார்த்தத்தின் இடிபாடுகளில்
சிக்குண்டு சிதைந்துப்போன
என் சின்னஞ்சிறு உணர்வுகள்
இன்று என்நிலைகள் பலமாறியும்
ஏனோ துயில்கொண்ட துறவியாய்
துளிர்விட ம(ரி)றுக்கின்றன?!

சிவா.ஜி
27-08-2007, 06:42 AM
துயில் கொண்ட துறவி என்றாவது துயிலெழ வாய்ப்புண்டு...ஆனால் மரித்துவிட்டால் மறு எழுச்சி இல்லை.உணர்வுகளை உடனே தட்டி எழுப்புங்கள்...அழகிய சிறு கவிதை..வாழ்த்துக்கள் ப்ரீதன்.

சுகந்தப்ரீதன்
27-08-2007, 06:53 AM
துயில் கொண்ட துறவி என்றாவது துயிலெழ வாய்ப்புண்டு...ஆனால் மரித்துவிட்டால் மறு எழுச்சி இல்லை.உணர்வுகளை உடனே தட்டி எழுப்புங்கள்...அழகிய சிறு கவிதை..வாழ்த்துக்கள் ப்ரீதன்.

நன்றி சிவா..!

அமரன்
27-08-2007, 07:45 AM
பாராட்டுக்கள் சுகந்தப்ரீதன். உணர்வுகள் எப்போது மரிக்கின்றனவோ அப்போதே மனிதனின் ஆன்மா மரித்து விடும். வெறும் கூடுதான் உலாவும். தொடருங்கள்.

துயில் கொண்ட துறவி..
கலைந்து
எழுகையில் ஞானப்பிறவி.

ஞானம் விழிக்கையில்
உணர்வுகள் துளிர்க்கும்
இதுதான் மனிதபிறவி.

-அமரன்

Narathar
27-08-2007, 08:21 AM
துறவியை ச்சீக்க்ரமே துயிழெழுப்புங்கள்...................
மரித்துவிட விடாதீர்கள்

சுகந்தப்ரீதன்
27-08-2007, 09:46 AM
பாராட்டுக்கள் சுகந்தப்ரீதன். உணர்வுகள் எப்போது மரிக்கின்றனவோ அப்போதே மனிதனின் ஆன்மா மரித்து விடும். வெறும் கூடுதான் உலாவும். தொடருங்கள்.

துயில் கொண்ட துறவி..
கலைந்து
எழுகையில் ஞானப்பிறவி.

ஞானம் விழிக்கையில்
உணர்வுகள் துளிர்க்கும்
இதுதான் மனிதபிறவி.

-அமரன்

அருமையான பின்னூட்டம் அமரரே...! எனது நன்றிகள்!

சுகந்தப்ரீதன்
27-08-2007, 09:47 AM
துறவியை ச்சீக்க்ரமே துயிழெழுப்புங்கள்...................
மரித்துவிட விடாதீர்கள்

நாரதர் இருக்கையில் யார்தான் துயிலமுடியும்?
நன்றி நாரதரே...!

ஓவியன்
30-08-2007, 06:24 PM
சின்னஞ் சிறு உணர்வுகள்
சிலிர்த்து,
வெளிப்படுத்தபட வேண்டியவை!
யதார்த்த இடிபாடுகளிடை
காணாமல் போக வேண்டியவையல்ல
சுகந்த ப்ரீதா.......

இடிபாடுகள் பெரிதாகும் முன்
தோண்டியெடுத்து உயிர் கொடுங்கள்
ஒரேயடியாக மரித்து விடாமல்....

சுகந்தப்ரீதன்
01-09-2007, 07:19 AM
இடிபாடுகள் பெரிதாகும் முன்
தோண்டியெடுத்து உயிர் கொடுங்கள்
ஒரேயடியாக மரித்து விடாமல்....

நன்றி ஓவியரே...முயற்சிக்கிறேன்....முடிந்தவரை....!