PDA

View Full Version : தமிழ் ஃபாண்ட் உதவி தேவை?



அரசன்
26-08-2007, 05:20 PM
மன்ற நண்பர்களிடம் ஒரு சந்தேகத்தை விடுக்கிறேன். தெரிந்தவர்கள் உடனே தீர்த்து வைக்கவும்.

அதாவது நான் வேர்ட் டாகுமெண்ட்டில் தமிழ் மொழியில் தட்டச்சு செய்ய வேண்டும். இகலப்பையில் வேர்டில் சரியாக அடிக்க முடியவில்லை. அதனால் எந்த ஃபாண்டை பயன்படுத்த வேண்டும். வேர்ட் டாகுமெண்டில் தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்ய வேண்டும். பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி

ஓவியன்
26-08-2007, 06:08 PM
அன்பு நண்பரே!

வேர்ட்டிலே ஒருங்குறியீடு(யுனிக் கோட்) வேலை செய்யாதென நினைக்கின்றேன், அதனால் நான் தட்டச்சு செய்து சேமித்து வைப்பதற்கு நோட் பாடையே பாவிப்பதுண்டு. உங்களுக்கு வேர்ட்டிலே தான் சேமிக்க வேண்டுமென்றால் எனக்கு தெரிந்த ஒரு வழியைக் கூறுகிறேன், அதாவது முதலில் நீங்கள் தமிழிலே ஒருங்குறியீடு துணையுடன் நோட் பாட்டிலே தட்டச்சு செய்ய வேண்டும். பின்னர் அதனை நம் மன்றத்தின் முகப்பின் அடியிலுள்ள கொன்வேர்ட்டர் மூலம் பாமினி எழுத்துருவுக்கு மாற்றி அதனை வேர்ட் டொக்யுமெண்டிலே கொப்பி செய்து சேமிக்கலாம். இது ஒன்றே எனக்குத் தெரிந்த வழி இல்லையெனின் நேரடியாக எதாவது ஒரு தமிழ் எழுத்துருவைக் கொண்டு தட்டச்சு செய்ய வேண்டும். ஆனால் அதற்கு தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டுமே...........

இதனை விட சிறந்த வழிகள் இருந்தால் யாரேனும் கூறுங்கள் எனக்கும் அது பயன்படும்...............!!!

பாரதி
27-08-2007, 01:29 AM
மைக்ரோசாஃப்ட் வேர்டில்தான் தட்டச்ச வேண்டும் என்று நினைத்தால் லதா எழுத்துரு உபயோகப்படுத்திப் பாருங்கள். ஆனால் மன்றத்தில் அதை காப்பி செய்து பேஸ்ட் செய்யும் போது, சில எழுத்துக்கள் மாறி வரலாம். எளிதான வழி - இகலப்பை கொண்டு நோட்பேடில் தட்டச்சுவதுதான். அதை அப்படியே காப்பி செய்து, மன்றத்தில் இருக்கும் கன்வெர்ட்டரில் தந்து ஒருங்குறியாக மாற்றி பதிப்பதுதான்.

இன்பா
09-10-2007, 08:27 AM
Arial Unicode Ms இந்த font உபயோகித்தால் தமிழில் தட்டச்சு செய்யலாம். முயன்று பாருங்கள்.

தமிழ்ச்சூரியன்
10-10-2007, 10:18 PM
Arial Unicode Ms இந்த font உபயோகித்தால் தமிழில் தட்டச்சு செய்யலாம். முயன்று பாருங்கள்.


நண்பர் வரிப்புலி அவர்கள் கூறியது போல் முயன்று பாருங்களேன்.

diwa
13-10-2007, 07:54 AM
அரசரே நீங்கள் உங்களது கணினியில் முரசு அஞ்சல் மென்பொருளை உபயோகப்படுத்தி
தமிழில் டைப் செய்து அதனை வேர்டில் காப்பி பண்ணுங்கள் .பிறகு பான்டை
இணை மதிக்கு மாற்றவும் .

ஆஸ்கார்பாரதி
13-10-2007, 08:18 AM
இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.

ithu migavum panulatha irunthu thanks

கஜினி
13-10-2007, 08:22 AM
XP உடயோகிப்பவர்களுக்கு தமிழ் கட்டாயம் வருமே. Regional&Language ல் சென்று தமிழ் மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு தட்டச்சு செய்யுங்கள். ஆனால் அதற்கு தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

leomohan
14-10-2007, 03:10 PM
கொஞ்சம் சிரம பட்டாலும் உங்கள் கணினியில் உள்ள லதா யூனிகோட் எழுத்துருவிலேயே பழகுங்கள் நண்பரே. மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பிற்பாடு.

கணினி கல்வி பகுதியில் முன்பொருமுறை படங்களுடன் விளக்கியிருக்கிறேன்.

தமிழ் விசைபலகை அமைத்த பிறகு Start -> Run -> சென்று OSK என்று தட்டினால் விசைபலகை தமிழ் எழுத்துரு அமைப்பு முறை காட்டும்.

சுமார் 15 நிமிடம் பழகினால் 30 வார்த்தைகள் ஒரு நிமிடம் வரை அடிக்க முடியும்.

உதயா
19-11-2007, 04:50 PM
இகலப்பையில் வேர்டில் சரியாக அடிக்க முடியவில்லை. அதனால் எந்த ஃபாண்டை பயன்படுத்த வேண்டும். வேர்ட் டாகுமெண்டில் தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்ய வேண்டும். பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி

என்ன நண்பரே.. ஈகலப்பையை விட ஒரு தட்டச்சு இயந்திரம் வேண்டுமா? என்ன பிரச்சனை என்று கொஞ்சம் விவரமா சொல்லுங்களே.

தாங்கள் லோட் செய்துள்ளது ஆபிஸ் 2000?

mgandhi
01-02-2008, 07:31 PM
ஈகலப்பையை எப்படி தரவிரக்கம் செய்வது அதன் சுட்டியை தயவு செய்து தரவும் நன்பர்களே அத்துடன் தமிழ் பிழை திருத்தியின் சுட்டியையும் தரவும்.

மயூ
01-02-2008, 07:41 PM
http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3
இங்கே இ-கலப்பை இறக்கலாம்!! பிழைதிருத்தி இலவசமாக இதுவரை இல்லை!!! ஆபீஸ் 2003 க்கு ஒரு பொதியை வாங்கி நிறுவுவதன் மூலம் சொற்பிழை திருத்தியைப் பயன்படுத்தலாம்!

mayakrishnan
04-02-2008, 07:47 AM
XP உடயோகிப்பவர்களுக்கு தமிழ் கட்டாயம் வருமே. Regional&Language ல் சென்று தமிழ் மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு தட்டச்சு செய்யுங்கள். ஆனால் அதற்கு தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

XP உபயோகிப்பவர்கள் regional & languageல் தமிழ் மொழியை தேர்ந்தெடுக்க முடியவில்லையென்றால் கூட தமிழில் எழுத முடியும். நான் word மட்டுமல்ல, அனைத்து office 2007 formatகளிலும் தமிழில் தான் எழுதுகிறேன். அதோடு windows explorerஇல் கூட fileகளின் பெயர்களை தமிழில் சேமிக்க முடியும்!

இதற்கான தொழில்நுட்ப விளக்கம் தெரியாது! ஆனால் XP service pack 2 (professional) + இகலப்பை + microsoft office 2007, இவ்வளவு தான் நான் வைத்திருப்பது!

சாலைஜெயராமன்
04-02-2008, 03:14 PM
NMH Writer தரவிறக்கம் செய்து கொண்டால் Regional & Language Setup எதுவும் செய்யவேண்டாம். Note Pad, Office Word 2003 போன்ற அனைத்திலும் அதுவாகவே பதிவு செய்து கொண்டுவிடும். உதவிக்கு கீபோர்டின் மாதிரிவடிவமும் வருகிறது. மிகப்பயனுள்ள மென் பொருள். முயன்று பாருங்கள். திரு பாரதி தந்த இந்தத் தகவல் மிகவும் பயனுள்ள ஒன்று. e-Kalappai யை விட பல மடங்கு சௌகரியங்கள் இதிலுண்டு.

அதிகமாகப் பயனடைந்த பயனாளிகளில் நானும் ஒருவன். ஏனெனில் எனக்கு பழைய தமிழ் தட்டச்சு முறையில்தான் அதிகப் பரிச்சியம். மேலும் இதில் அனைத்து எழுத்துறுவின் வடிவங்களையும் நம் சௌகரியத்திற்கு ஏற்றால்போல் பயன் படுத்திக் கொள்ளலாம் என்பதுவே இதன் தனிச்சிறப்பு.

மேலும் தகவலுக்கு இங்கு சுட்டவும் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=313034&postcount=1)

நாகரா
05-02-2008, 04:21 AM
NMH Writer தரவிறக்கம் செய்து கொண்டால் Regional & Language Setup எதுவும் செய்யவேண்டாம். Note Pad, Office Word 2003 போன்ற அனைத்திலும் அதுவாகவே பதிவு செய்து கொண்டுவிடும். உதவிக்கு கீபோர்டின் மாதிரிவடிவமும் வருகிறது. மிகப்பயனுள்ள மென் பொருள். முயன்று பாருங்கள். திரு பாரதி தந்த இந்தத் தகவல் மிகவும் பயனுள்ள ஒன்று. e-Kalappai யை விட பல மடங்கு சௌகரியங்கள் இதிலுண்டு.

அதிகமாகப் பயனடைந்த பயனாளிகளில் நானும் ஒருவன். ஏனெனில் எனக்கு பழைய தமிழ் தட்டச்சு முறையில்தான் அதிகப் பரிச்சியம். மேலும் இதில் அனைத்து எழுத்துறுவின் வடிவங்களையும் நம் சௌகரியத்திற்கு ஏற்றால்போல் பயன் படுத்திக் கொள்ளலாம் என்பதுவே இதன் தனிச்சிறப்பு.

மேலும் தகவலுக்கு இங்கு சுட்டவும் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=313034&postcount=1)

பயனுள்ள தகவல் அன்பரே! மிக்க நன்றி

Gurudev
22-02-2008, 12:24 PM
ஏற்கனவே பல மாதங்களுக்கு முன் இவ்விடயம் அலசப்பட்டுவிட்டது.
வேட் இல் எப்படி ரைப் செய்வது என்பதனை பற்றி அறிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் பண்ணி போஸ்ட் #3 ஐ பார்க்கவும்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7453&highlight=keyman

அனுராகவன்
22-02-2008, 11:57 PM
நன்றி நீங்கள் சொன்னபடியே நானும் செய்தேன்..
ம்ம் என் நன்றி

ஓவியா
23-02-2008, 12:07 AM
எனது கணினியில் தமிழ் ஃபாண்ட் இறக்குமதியானவுடன், கணினியின் எஜமானி ஃபாண்டுகளெல்லாம் சிறிதாக உருமாறி விட்டன!!

என்ன செய்ய?

எந்த தமிழ் ஃபாண்ட் சிறந்தது?

உதயா
23-02-2008, 04:15 AM
ஈகலப்பை கொண்டு வேர்ட்2007 எப்படி எழுதுவது என்று சில விளக்கங்கள் கீழே கொடுத்துள்ளேன். இது தங்களின் சந்தேகத்தை தீர்க்கும் என நினைக்கிறேன்.

1) Select font : TheneeUni
Press : ALT2
இப்போது நான் ஈகலப்பை தமிழில் எழுதுகிறேன்

2) Select font : TSCU_Paranar
Press : ALT2
இப்போது நான் ஈகலப்பை கொண்டு தமிழில் எழுதுகிறேன்

3) Select font : TSCU_Comics
Press : ALT2
நான் இப்போது ஈகலப்பை கொண்டு எழுதுகிறேன்.