PDA

View Full Version : திரி தொடங்கப்பட்ட திகதியும் மாதமும்



ஓவியா
26-08-2007, 11:41 AM
அவைத் தலைவருக்கும், உதவிக் கரங்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

ஒரு பதிவினை யார் பதிக்கிறார்கள் என்று காணும் வாய்ப்பு நமக்கு இருக்கின்றன அள்ளவா, அதுபோல் அதன் பக்கத்தில் அந்தத்திரி எப்பொழுது (என்று) தொடங்கப்பட்டது என்று அதன் திகதியும், மாதமும், வருடமுன் இணந்தே இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும், நமக்கும் இது புதுத்திரியா இல்லை பழையத்திரியா என்று அடையாலம் கண்டுக்கொள்ள வசதியாக இருக்குமே.

நம் செழிப்பான மன்றத்திற்க்கு வரும் புது வரவுகளுக்கும், நமக்கும் மற்றும் வெளியிலிருந்து காண்பவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்


உதாரணம்:

Thread / Thread Starter
நெறி மறந்த நிமிடங்கள்
சிவா.ஜி (26/08/07)
(நான் கூறுவது இங்கு இந்தத்திரி தொடங்கப்பட்ட திகதியும் மாதமும் என்றும் காணும்படி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்)


Last Post
Today 12:15 PM
by சிவா.ஜி

Replies
0


Views
1

Forum
பண்பட்டவர்களுக்கான பதிப்புகள்.

இதனை அவைக்குழு கலந்து ஆலோசித்து நல்ல முடிவை தருமாறு இக்கணம் கேட்டுக்கொள்கிறேன்.

மன்ற வைரங்களே, நீங்களும் தங்களின் ஆலோசனைகளை அள்ளி வழங்குங்களேன்.

பணிவான வணக்கங்களுடன்
ஓவியா.

இணைய நண்பன்
26-08-2007, 11:45 AM
உங்கள் ஆலோசனையை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

ஓவியா
26-08-2007, 11:59 AM
அப்பாடா ஓட்டு போட ஒராளாவது வந்தீகளே!! நன்றி.

மன்ற போலிஸ்காரங்க அக்கினி, ஓவியன் இருவரும் ஒன்னுமே சொல்லாமல் சென்று விட்டனர்!!

அக்னி
26-08-2007, 12:09 PM
பார்த்துவிட்டு, நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம்...
சிறப்பான சிந்தனைதான்...
செயற்படுத்த முடியுமானால், நன்றாகவே இருக்கும்...

lolluvathiyar
26-08-2007, 12:29 PM
ஆம் அப்படி இருந்தால் குழப்பமில்லாமல் இருக்கும். சில பழைய திரிகளை நான் திறந்து குழப்பி விட்டேன்

ஷீ-நிசி
26-08-2007, 12:36 PM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Doubt1.jpg

ஓவியா
26-08-2007, 01:00 PM
ஆஹா ஷீ,

சரி இன்றய பதிவுகளை (மொத்தமாக) கானும் today's posting தட்டி பாருங்கள், அதில் இன்றய நாள் நாம் மேலே எழுப்பி பின்னூட்டமிட்ட திரிகளையும் காணலாம் ஆனால் அது எப்பொழுது பதிந்த திரி என்று காண இயலாது, ஒரு திரியை திறந்து அந்தன் முதல் பின்னூட்டத்தை கண்டால் மட்டுமே (உங்கள் படம்) திரி பதித்த திகதியை காணலாம்.

ஓவியா
26-08-2007, 01:05 PM
பார்த்துவிட்டு, நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம்...
சிறப்பான சிந்தனைதான்...
செயற்படுத்த முடியுமானால், நன்றாகவே இருக்கும்...

மிக்க நன்றி அக்னி சார்.

நம் மன்றம் சிறப்பாக செயல் பட என்றும் பாய்ந்து வந்து சேவை செய்யும் என் கரங்கள். :sport-smiley-019:

அமரன்
26-08-2007, 01:18 PM
ஓவியா அக்காவுக்கு...!
உங்கள் ஆலோசனையை குறை சொல்லவோ அல்லது தட்டிக்கழிக்கவோ இந்தக் கேள்வியை கேட்கவில்லை. உதவிபுரியும் நோக்குடனே/அறிந்துகொள்ளும் நோக்கத்துடனே கேட்கின்றேன்.


நம் செழிப்பான மன்றத்திற்க்கு வரும் புது வரவுகளுக்கும், நமக்கும் மற்றும் வெளியிலிருந்து காண்பவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்
எப்படி என்பதை விபரிக்க முடியுமா? தவறாக நினைக்க மாட்டீர்கள் என நினைக்கின்றேன்.
அன்புத்தம்பி
=அமரன்

ஓவியா
26-08-2007, 02:18 PM
ஓவியா அக்காவுக்கு...!
உங்கள் ஆலோசனையை குறை சொல்லவோ அல்லது தட்டிக்கழிக்கவோ இந்தக் கேள்வியை கேட்கவில்லை. உதவிபுரியும் நோக்குடனே/அறிந்துகொள்ளும் நோக்கத்துடனே கேட்கின்றேன்.


எப்படி என்பதை விபரிக்க முடியுமா? தவறாக நினைக்க மாட்டீர்கள் என நினைக்கின்றேன்.
அன்புத்தம்பி
=அமரன்


தவறாக நினைக்க ஒன்றுமே இல்லையே தம்பி.

நல்ல விசயங்களை என்றும் அலசி ஆராயலாம், மன்றத்திற்க்கு நன்மைதரும் விசயமாயின் அங்கு இதுபோல் கேள்வி கனைகளை தொடுப்பது சகஜமே! :weihnachten031:




ஆம் அப்படி இருந்தால் குழப்பமில்லாமல் இருக்கும். சில பழைய திரிகளை நான் திறந்து குழப்பி விட்டேன்


அமரன், அந்த கேள்விக்கு வாத்தியார் அண்ணாவின் பதிலும் பொருந்தும்.

மன்றத்தில் பல நூறு திரிகள் தினமும் மேலே வந்து போகின்றன, அவை அனைத்தையும் மனக்கண்ணில் நிருத்த முடியாது முக்கியமாக தலைபையும் ஞாபகக்த்தில் வைக்க இயலாத அப்பவி மக்கள் (என்னைபோல்) அதன் திகதி மாசம் அவைகளை கண்டு இது எவ்வளவு புதிய திரி என்று அத்திரிக்குக் செல்லாமலே கண்டுக்கொள்ளலாம்.
இது பதிவாளரின் புதிய பதிவா இல்லை பழைய பதிவா என்றும் காணலாம்.

இதனால் லாபமே தவிர எந்த நஷ்டமும் கிடையாது.


இதன் அர்த்தம் அங்கு செல்லாமலே அந்தத் திரி எப்பொழுது ஆரம்பிக்க பட்டது என்று சொல்ல வந்தேன். மற்றவர்களின் திரிகளை பார்க்காமல் தவிருங்கள் என்று சொல்லவில்லை.

ஓவியன்
26-08-2007, 02:40 PM
அக்கா எனக்கும் ஒரு சந்தேகம்......

பழைய திரி என்று எல்லோரும் போகாமல் தவிர்த்தால் பழைய நல்ல படைப்புக்கள் எங்கள் பார்வையிலிருந்து தவறி விடாதா?, அது பழையது என்ற ஒரு காரணத்திற்காகவே இதனால் தரமான படைப்பாளிகளின் தரமான படைப்புக்கள் எங்கள் கண்ணில் இருந்து படாமலே போய்விடாதா.........?

இந்த பழைய புதிய பிரச்சினை செய்தித் திரிகளைத் தவிர்ந்த ஏனைய திரிகளுக்கு ஒரு பிரச்சினையே இல்லை என்பது என் பணிவான கருத்து. செய்தித் திரிகளைத் தவிர்ந்த ஏனைய திரிகளுக்கு பதிந்த திகதியை வைத்து பழைய திரி என்று கூற இயலாது, அது வரை நாங்கள் படிக்காத திரி என்றால் அது எங்களுக்கு புதிய திரியே........

இங்கே திரியில் பதித்த திகதி வருமாறு செய்ய வேண்டாம் என்று நான் கூற வரவில்லை, மாறாக பழைய திரிகளைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்தை என்னால் ஏற்க முடியாது என்பதை வலியுறுத்தவே இந்த பதிவைப் பதிக்கிறேன்.

ஓவியா
26-08-2007, 02:46 PM
பழைய திரியை தவிருங்கள் என்று என் பதிவில் இருக்கின்றதா!!! அப்படி நான் எங்குமே குறிப்பிடவில்லையே!!

பொறுப்பாளரே,
தயவு செய்து என் முத*ல் ப*திவை மீண்டும் ஒருமுறை ப*டித்து பாருங்க*ள். ந*ன்றி

ஒரு திரி எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது என்று நம் வசதிக்காகதான் இதை அலோசிக்குமாரு கேட்டேன்.

ஓவியன்
26-08-2007, 02:55 PM
பழைய திரியை தவிருங்கள் என்று என் பதிவில் இருக்கின்றதா!!! அப்படி நான் எங்குமே குறிப்பிடவில்லையே!!.

அன்பான அக்கா!

நீங்கள் அப்படிக் குறிப்பிடவில்லை, ஆனால் பழையது புதியது அறிய வேண்டுமென்றதால் புதியவற்றை பார்க்க முன்னுரிமை கொடுக்கின்றீர்கள் என்ற மறைமுக அர்த்தத்தில் எனக்குப் பட்டதாலேயே அந்தக் கருத்தை நான் பதித்தேன் − அந்தக் கருத்து தவறென்றால் மன்னித்துவிடுங்கள் உங்கள் தம்பியை........! :icon_03:

என்றென்றும் அன்புடன்
ஓவியன்......!

ஓவியா
26-08-2007, 03:05 PM
அடடா, எதற்ற்கு மன்னிப்பு, (சரி சபையில் பணிவை காட்ட இதுவும் ஒரு நல்ல ஐடியாதான்) மனித்துவிட்டேன், ஆமாம் எதுக்கு மன்னிப்பு???

கதைக்கு வருவோம்,

அன்பு ஓவியன் இந்த கேள்வி நான் எதிர்ப்பார்த்த ஒன்றுதான் நீங்கள் கேட்கவில்லையென்றால் வேறு யாராவது கண்டிப்பாக கேட்டிருக்களாம். அப்பொழுதும் இந்த பதில்தான் என்னிடமிருந்து வந்திருக்கும். இப்பொழுது அது உங்கள் கேள்வியால் சபைக்கு வந்து விட்டது, நான் தான் நன்றி சொல்ல வேண்டும் எசமான்.

நன்றிங்க பொறுப்பாளரே. :grin::grin::grin:

ஓவியா
27-08-2007, 04:09 PM
அறிஞர் சார், இந்த பக்கமும் கொஞ்சம் எட்டிப்பார்த்து பதில் போட்டு செல்லுங்களேன்.

நன்றி.

அறிஞர்
27-08-2007, 07:00 PM
ஒவ்வொருவருக்கு பல தேவைகள்.... வாவ்...
முயன்றவரை உதவுகிறோம்....
ஒரு சில நாட்கள் பொறுத்திருங்கள் ஓவியா.

mgandhi
27-08-2007, 07:33 PM
ஒவியா உங்கள் ஆலோசனையை நானும் ஏற்றுக்கொள்கிறேன்

ஓவியா
27-08-2007, 11:42 PM
ஒவ்வொருவருக்கு பல தேவைகள்.... வாவ்...
முயன்றவரை உதவுகிறோம்....
ஒரு சில நாட்கள் பொறுத்திருங்கள் ஓவியா.

சார், இது என் ஒருவளுடைய தேவை மட்டுமல்ல அல்ல!! மாறாக மன்றத்தின் மேல் எனக்குள்ள* காதல், மன்றம் இன்னும் சிறப்பாக செழிப்பாக இருக்க வேண்டும் என்பதே என் அவா. :sport-smiley-007:

இது முடியும், இது வேண்டும், இது அவசியம் என்று தெரிந்தால் கண்டிப்பாக உங்கள் நல்ல நிர்வாகம் அதனை செய்யும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை.

சிரமம் பாராது உடனே பதிலளித்த தங்களுக்கு என் பணிவான நன்றி.


நன்றி காந்தியண்ணா.

அறிஞர்
28-08-2007, 01:03 AM
இன்னும் ஒரு வாரத்தில் தாங்கள் கேட்ட வசதி கொடுக்கப்படும்.

ஓவியா
01-09-2007, 09:10 PM
மிக்க நன்றி அறிஞர் சார்.

மனம் சந்தோசமடைகிறது.

இராசகுமாரன்
09-09-2007, 07:28 AM
இன்று இந்த வசதி ஏற்படுத்தப் பட்டது.

ஓவியா
13-09-2007, 04:27 PM
ஆமாம், பார்க்க இன்பமாக இருக்கின்றது.

இச்சேவை அனைவருக்கும் பயன் கொடுக்குமாயின் அதுதான் உண்மை இன்பம்.

இராசகுமாரன் அய்யாவிற்க்கும் அட்மீன் குழுவிற்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

சாராகுமார்
13-09-2007, 04:38 PM
அருமையாக உள்ளது.அனைவருக்கும் நன்றி.

mgandhi
13-09-2007, 06:25 PM
அருமை! அருமை!! .அனைவருக்கும் நன்றி

மலர்
07-11-2007, 01:47 AM
இன்று இந்த வசதி ஏற்படுத்தப் பட்டது.

மீண்டும் கிடைக்குமா இதே வசதி......

அமரன்
07-11-2007, 06:34 AM
மீண்டும் கிடைக்குமா இதே வசதி......
மேம்படுத்தல் தொடர்கிறது..கிடைக்குமாறு செய்ய முயல்கின்றோம்..

மலர்
08-11-2007, 01:36 AM
மேம்படுத்தல் தொடர்கிறது..கிடைக்குமாறு செய்ய முயல்கின்றோம்..

நன்றி அமரன் மீண்டும் இந்த வசதி கிடைத்துவிட்டது...

இதற்காக உழைத்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்..