PDA

View Full Version : சத்தமாய்..!!

பூமகள்
26-08-2007, 11:21 AM
http://img30.picoodle.com/img/img30/9/8/27/poomagal/f_29702980302m_6d3083a.jpg

பேரலையோடு
பரள் பேசும்
புதுக்கவிதை
சங்கமச் சத்தம்...

பூ அவிழ
பூக்காம்பு கேட்டு
மயங்கும் மரகத
வனப்புச் சத்தம்..

இளவெயில் பட்டு
இலையூஞ்சல் ஆடும்
குயில் பாட்டு
குழையும் சத்தம்...

மூங்கில் காட்டில்
முட்டும் காற்று
முத்தம் தந்து
முனகும் சத்தம்..

மெல்விரல் படின்
இலை மூடும்
தொட்டாச்சிணுங்கி
நாணிச் சிணுங்கும்
வெட்கச் சத்தம்...

காதல் மொழி
பேசும் அழகு
பேடைக்கிளி இரண்டும்
கொஞ்சும் சத்தம்...

நள்ளிரவு நிலாநேரம்
நீரின் மேலே
தவளை தாவும்
தளுக் சத்தம்...

வண்டு வரும்
பூச்செண்டு அறியும்
ரம்மிய கமக
ரீங்காரச் சத்தம்...

கேட்கா சத்தம்
கேட்கும் நித்தம்
கேள்விக் குறியாய்
வாழ்க்கை மட்டும்..

வாழச் சொல்லி
வார்த்தை முட்டும்
சத்தமே சத்தமாய்..
சொல்லும் மனதின்
சத்தம்...!!

இணைய நண்பன்
26-08-2007, 11:34 AM
அழகான கவிவரிகள்.சத்தமாய் சொல்லிவிட்டீர்கள்...நன்றி

பூமகள்
26-08-2007, 11:37 AM
அழகான கவிவரிகள்.சத்தமாய் சொல்லிவிட்டீர்கள்...நன்றி
நன்றி சகோதரரே...!

சிவா.ஜி
26-08-2007, 01:03 PM
மூங்கில் காட்டில்
முட்டும் காற்று
முத்தம் தந்து
முனகும் சத்தம்..
மூங்கிலை முட்டும் காற்றின் ஓசையை முத்த சத்தமாய் வர்ணித்தது அழகு.
மெல்விரல் படின்
இலை மூடும்
தொட்டாச்சிணுங்கி
நாணிச் சிணுங்கும்
வெட்கச் சத்தம்...
மிக அழகான..நாசூக்கான அந்த சுருங்கலை..நாணத்தோடு ஒப்பிட்ட நயமான வரிகள் பிரமாதம்.
வாழச் சொல்லி
வார்த்தை முட்டும்
சத்தமே சத்தமாய்..
சொல்லும் மனதின்
சத்தம்...!!
முத்தாய்ப்பான இந்த வரிகள்..புத்துணர்ச்சியூட்டும் வரிகள்.
புதுப்பூவாய் பூத்து நிற்கும் நல் கவிதை பூமகள் அளித்த இந்த புதுக்கவிதை.வாழ்த்துக்கள் பூமகள்.

பூமகள்
26-08-2007, 02:07 PM
மூங்கிலை முட்டும் காற்றின் ஓசையை முத்த சத்தமாய் வர்ணித்தது அழகு.
மிக அழகான..நாசூக்கான அந்த சுருங்கலை..நாணத்தோடு ஒப்பிட்ட நயமான வரிகள் பிரமாதம்.
முத்தாய்ப்பான இந்த வரிகள்..புத்துணர்ச்சியூட்டும் வரிகள்.
புதுப்பூவாய் பூத்து நிற்கும் நல் கவிதை பூமகள் அளித்த இந்த புதுக்கவிதை.வாழ்த்துக்கள் பூமகள்.

முத்தாய்ப்பாக நன்கு புரிந்து கொண்டு தந்த ஆய்ந்த உங்களின் விமர்சனத்திற்கு நன்றிகள் சிவா.

jpl
26-08-2007, 04:59 PM
ஆம் ஆழிப் பரளாய் ஒரு கவி பூமகளிடமிருந்து..

பேரலையோடு
பரள் பேசும்
புதுக்கவிதை
சங்கமச் சத்தம்...

வாழச் சொல்லி
வார்த்தை முட்டும்
சத்தமே சத்தமாய்..
சொல்லும் மனதின்
சத்தம்...!!

மௌனமாய் கவியில்,வாழ்க்கையை வாழ இயற்கையோடியியந்து சத்தமாய் சொல்லும் பூ மகளுக்கு ஒரு பாமாலை தொடுக்கலாம் இனிமையாக.

ஷீ-நிசி
26-08-2007, 05:17 PM
செம புகைப்படம். செம கவிதை.. பூமகள் வாழ்த்துக்கள்!

சாராகுமார்
26-08-2007, 05:24 PM
சத்தமான கவிதையை சத்துடன்,அருமையாக படைத்து விட்டீர்கள்.படமும் வெகு அற்புதம்.

பூமகள்
26-08-2007, 05:35 PM
ஆம் ஆழிப் பரளாய் ஒரு கவி பூமகளிடமிருந்து..
மௌனமாய் கவியில்,வாழ்க்கையை வாழ இயற்கையோடியியந்து சத்தமாய் சொல்லும் பூ மகளுக்கு ஒரு பாமாலை தொடுக்கலாம் இனிமையாக.

மிக்க நன்றி சகோதரரே...! தொடந்து விமர்சியுங்கள்..!

பூமகள்
26-08-2007, 05:37 PM
செம புகைப்படம். செம கவிதை.. பூமகள் வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி ஷீ−நிசி. உங்களின் வாழ்த்து கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

பூமகள்
26-08-2007, 05:38 PM
சத்தமான கவிதையை சத்துடன்,அருமையாக படைத்து விட்டீர்கள்.படமும் வெகு அற்புதம்.

மிக்க நன்றி சாரா அண்ணா..!

அமரன்
26-08-2007, 06:21 PM
அன்றாடம் கேட்கும்.
பலசத்தங்கள் கவித்துவத்தோடு.
வாழ்வைக் கற்றுக்கொடுக்கும்
பல* கருத்துகளோடு.

இயற்கையிடம் மனிதனும்
பூமகளிடம் நானும் கற்கப் பல உண்டு.
பரள் என்பதின் அர்த்தம் அதிலொன்று.
பாராட்டுக்கள் பூமகள். தொடருங்கள்.

இனியவள்
26-08-2007, 06:23 PM
அழகிய கவிதை பூமகள் வாழ்த்துக்கள்

பூமகள்
27-08-2007, 05:34 AM
இயற்கையிடம் மனிதனும்
பூமகளிடம் நானும் கற்கப் பல உண்டு.
பரள் என்பதின் அர்த்தம் அதிலொன்று.
பாராட்டுக்கள் பூமகள். தொடருங்கள்.
இயற்கை மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கும் விசயங்கள் ஏராளம். அதைப்படிக்க காலம் இன்றி காலச் சக்கரத்தில் சிக்கித் தவிக்கும் மனித இனம்.
மிக்க நன்றி அண்ணா. உங்களிடம் இருந்து தான் நான் நிறைய கற்க வேண்டி உள்ளது.. இப்படிச் சொல்வது உங்கள் தன்னடக்கத்தைக் காட்டுகிறது.

பூமகள்
27-08-2007, 06:31 AM
அழகிய கவிதை பூமகள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோதரி.. தொடர்ந்து விமர்சியுங்கள்.

அக்னி
27-08-2007, 11:05 AM
மௌனத்தின் ஸ்வரங்கள்
சலனமில்லாத சங்கீதம்...
மௌனித்த சத்தங்கள் அல்ல...
மனதால் ஒருமித்தால்,
சாந்தி தரும்
மௌனத்தின் சங்கீதம்...

பாராட்டுக்கள் பூமகள்...
படத்தின் உள்ளேயும் வரிகளைச் செதுக்குங்கள்...
இன்னமும் ரசிக்க வைக்கும்...
சத்தமில்லாத சந்தம் நிறைந்த கவிதை சிறப்பு...

பூமகள்
27-08-2007, 11:16 AM
படத்தின் உள்ளேயும் வரிகளைச் செதுக்குங்கள்...
இன்னமும் ரசிக்க வைக்கும்...
சத்தமில்லாத சந்தம் நிறைந்த கவிதை சிறப்பு...
அழகான பின்னூட்டக் கவி.... அசத்தி விட்டீர்கள்.. அது எப்படித்தான் 5 வரிகளில் நாங்கள் நினைத்ததை சொல்லிவிட முடிகிறது உங்களால்????
அசத்துங்கள்... தொடர்ந்து....:4_1_8:
அப்படியே செய்கிறேன் நண்பரே... தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றிகள் கோடி..!

அக்னி
27-08-2007, 11:35 AM

நான் வியப்பேன் எப்படி இப்படி தொடர்ந்தும் கவிதைகளைத் தருகின்றீர்கள் என்று...
நீங்கள் என்னை உயர்த்த முயல்கின்றீர்கள்...
உண்மை என்னவென்றால், உங்கள் கரு செருகப்பட்ட வரிகளைத்தான் இடுகின்றேன்...
ஆதலால், முழுப் புகழும், உயர்வும், படைப்பாளிகளுக்கே....

பி.கு:
படத்தில் பொதிந்தாலும், கீழேயும் வரிகளைக் கொடுத்துவிடுங்கள். தவறுதலாக படங்கள் தோன்றாவிட்டாலும் வரிகள் அழியாதல்லவா...

நன்றி!

பூமகள்
27-08-2007, 11:45 AM
படத்தில் பொதிந்தாலும், கீழேயும் வரிகளைக் கொடுத்துவிடுங்கள். தவறுதலாக படங்கள் தோன்றாவிட்டாலும் வரிகள் அழியாதல்லவா...
நன்றி!

அப்படியே செய்கிறேன் அண்ணா.
நன்றிகள் உங்களின் ஆலோசனைக்கு. இதோ எடிட் செய்து விடுகிறேன்.

அக்னி
27-08-2007, 12:17 PM
காட்சியுடன் கலந்த கவிதையில் கலக்கும்போது,
சூரியனின் இளஞ்சூட்டில், மெல்லத் தூவும் மழைச்சாரலில் நனையும்,
சிலிர்ப்பான சுகம் உள்ளத்தில்...
இல்லையா பூமகள்..?
நன்றி, கருத்திற்கொண்டமைக்கும் உடன் செயலில் காட்டியமைக்கும்...
தொடருங்கள்...

பூமகள்
27-08-2007, 12:25 PM

உண்மைதான் அக்னியாரே...:icon_clap: இன்னும் அழகாக கவித்துவத்துடன் படம் இருக்கிறது இப்போது... சூரியனின் இளவெயில் பட்டு கவி வரிகள் பொன்னாய் மின்னுவது போல் எனக்கு தோன்றுகிறது இப்போது...! :nature-smiley-008:

நன்றிகள் அண்ணா உங்களின் விமர்சனத்திற்கு..!:grin:

ஓவியன்
28-08-2007, 03:06 AM
வாழச் சொல்லி
வார்த்தை முட்டும்
சத்தமே சத்தமாய்..
சொல்லும் மனதின்
சத்தம்...!!

வாழச் சொல்லி!,
சத்தமின்றி சகாப்தம்
படைக்கச் சொல்லி!,
சத்தங்களை வைத்து
சந்தங்களை
சத்தமாக்கிய தங்கையின்
கவி வரிகள்
என்றென்றும் இனிக்கும்
சத்தமாய்...................!

பாராட்டுக்கள் பூமகள் சத்தத்துடன் சுத்தமான ஒரு சந்தக் கவியை வடித்தமைக்கு..........!!! :nature-smiley-002:

பூமகள்
28-08-2007, 05:19 AM

நன்றிகள் ஓவியன் அண்ணா..:icon_give_rose:
அழகு ததும்பும் பின்னூட்டம்.. :aktion033:
தொடர்ந்து எழுதச் சொல்லி தூண்டும் உங்களின் விமர்சனங்களே..

இலக்கியன்
28-08-2007, 09:42 AM
கவிதையின் சத்தம்
காதில் ஒலித்தது
பூமகள் உன்
பூபாளமாய்
வாழ்த்துக்கள் சகோதரி

சுகந்தப்ரீதன்
28-08-2007, 09:54 AM
வாழச் சொல்லி
வார்த்தை முட்டும்
சத்தமே சத்தமாய்..
சொல்லும் மனதின்
சத்தம்..!

சத்தமில்லாமல்
நித்தம் நித்தம்
எத்தனை சத்தம்?
என்னுள் மட்டும்!

கலக்குங்க அக்காவா...தங்கையான்னு சொல்ல முடியல...!
வாழ்த்துக்கள்!

பூமகள்
28-08-2007, 10:19 AM
கவிதையின் சத்தம்
காதில் ஒலித்தது
பூமகள் உன்
பூபாளமாய்
வாழ்த்துக்கள்

நன்றி இலக்கியரே தங்களின் விமர்சனத்திற்கு.

பூமகள்
28-08-2007, 10:21 AM
சத்தமில்லாமல்
நித்தம் நித்தம்
எத்தனை சத்தம்?
என்னுள் மட்டும்!

கலக்குங்க அக்காவா...தங்கையான்னு சொல்ல முடியல...!
வாழ்த்துக்கள்!

[COLOR="DarkGreen"]அருமையான பின்னூட்ட கவி.. நன்றி சகோதரர் ப்ரீதன் அவர்களே..

ஆதவா
31-08-2007, 07:53 AM
சத்தமில்லாமல் மெளனமாய் கவிதை.... சத்தம் என்ற பெயரோடு..

(பரள் னா இன்னாக்கா?)

ஒவ்வொரு சத்தங்களும் மிக அருமையாக அமைந்திருக்கிறது. வியப்பூட்டும் விஷயங்கள் இவை.. அழகு மிகுந்த கவிதை.

பூ அவிழ்ந்தால் காம்பு மயங்குமா தயங்குமா?

இளவெயில் பட்டு இலையூஞ்சல். ஒரு மரத்தின் இலை ஆடுவதைப் போல குயிலின் பாட்டு.. அடடா என்ன அருமையான கற்பனை.. பிடிங்க 200 காசு.

மூங்கில் முத்தங்கள். - செம கற்பனைங்க,. மூங்கிலின் சலசல ஓசைகள் முத்தமாய் தெரிகிறதா உங்களுக்கு...

தொட்டாச்சிணுங்கியின் நாணம். அழகான கவிதை.

கிளிகளின் கொஞ்சல் முத்தம். அது ஒரு சத்தம்.

அதென்னங்க தளுக் சத்தம்? அப்படி ஒன்றூ நான் கேள்விபட்டதே இல்லையே?

இப்படி சத்தமில்லாமல் சத்தம்போட்டு சத்தக் கவிதை எழுதினீங்கன்னா, சத்தம் துளீகூட இல்லாமல் நாங்கள் எல்லாரும் பாராட்டவேண்டியதுதான்.. வாழ்த்துக்கள் பூமகள். நீங்கள் உண்மையிலேயே பூவுக்கு மகள் தான்.

இந்த கவிதைக்கு 500 காசு.

பூமகள்
31-08-2007, 08:20 AM
(பரள் னா இன்னாக்கா?)
அதென்னங்க தளுக் சத்தம்? அப்படி ஒன்றூ நான் கேள்விபட்டதே இல்லையே?
நீங்கள் உண்மையிலேயே பூவுக்கு மகள் தான்.
இந்த கவிதைக்கு 500 காசு.

மிக்க நன்றி ஆதவா... உங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்துக்களுக்கும்..மற்றும் இ−பணம் அன்பளிப்புக்கும்.
பரள் என்றால் "பாறை" அல்லது "பாறை கற்கள்"... என்று நினைக்கிறேன். மன்றத்தின் மூத்தோர் எவரேனும் சொல்லுங்களேன்.....!

அப்புறம் உங்களின் விமர்சனங்கள் அருமை...
தளுக் சத்தம் என்பது நீரின் மேல் தவளை தாவும் போது உண்டாகும் சத்தம்.

அப்பாடா...ஆதவாவின் கேள்விக்கு பதில் கொடுத்தாச்சி.... !!:icon_cool1:

ஆதவா
31-08-2007, 08:30 AM

என்கிட்ட ஒரு நாளைக்கு மாட்டுவீங்க. அப்ப பாத்துக்கிறேன். :icon_clap:

rocky
01-09-2007, 03:54 PM
கேட்கா சத்தம்
கேட்கும் நித்தம்
கேள்விக் குறியாய்
வாழ்க்கை மட்டும்..

க*விதை மிக*வும் அருமை பூம*க*ள். குறிப்பாக (கேட்கா சத்தம்
கேட்கும் நித்தம்
கேள்விக் குறியாய்
வாழ்க்கை மட்டும்..) இந்த* வ*ரிக*ள் ம*ட்டும் என*க்கு மிக*வும் பிடித்திருக்கிற*து. அத*ற்காக* ம*ற்ற* வ*ரிக*ளை குறை சொல்ல*வில்லை. முழுக்க*விதையுமே அழ*காக* இருக்கிற*து வாழ்த்துக்க*ள். இன்னும் ஒரு சின்ன சந்தேகம், படங்களை தேர்வு செய்துவிட்டு கவிதை எழுதுவீர்களா அல்லது கவிதை எழுதிவிட்டு படங்களை பிடிப்பீர்களா. சொல்லிவிடுங்கள்.

பூமகள்
01-09-2007, 03:59 PM
மிக்க நன்றிகள் ராக்கி..
நான் கவியெழுதிவிட்டே பொருத்தமான படங்களை தேர்வு செய்வேன்.
உங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் சகோதரரே..!

இளசு
05-09-2007, 07:23 PM
வடிகட்டிய தூய சப்தம் = இசை
வடிவம் வெட்டிய மனப்பகிர்வு = கவிதை

பூமகளின் கவிதைக்குப் பாராட்டுகள்!

பூமகள்
07-09-2007, 01:57 PM
நச் சென்று சொல்லி விட்டீர்..!
அழகு பின்னூட்டக் கவி..!
மிக்க நன்றிகள் இளசு அண்ணா..!