PDA

View Full Version : நோட் பேட் வசதி வேண்டும்lolluvathiyar
26-08-2007, 09:44 AM
நோட் பேட் வசதி வேண்டும்

மன்றத்து நிர்வாகி அவர்களே நமது மன்றத்தில் யாகூ மெயிலில் இருப்பது போல் தமிழில் டைப் அடித்து சேமிக்க பொனாட்டிக் நோட்பேட் வசதி இருந்தால் படைப்பாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நோட் பேட் வசதி என்பது என்ன?
திரிகளின் கீழேயும் தனி மடலில் இருப்பது போலவும் மெஸெஜ் டைப் அடிக்கும் பாக்ஸ் ஒன்று இருக்க வேண்டும். டைடில் பாக்ஸ் கூட இருந்தால் நல்லது. சப்மிட்/போஸ்ட் என்பதற்க்கு பதில் சேவ் பெட்டி இருக்க வேண்டும். அதில் உருப்பினர்கள் தங்கள் படைப்புகளை டைப் அடித்து யாருக்கும் அனுப்பாமல், எங்கும் போஸ்ட் செய்யாமல் சேவ் (Save) செய்து வைத்து கொள்ளும் ஒரு வசதி. இதை அவர்கள் மட்டுமே திரும்ப பார்க்க முடியும். எடிட் மூலம் திருத்தவும் முடியும். தேவை முடிந்தவுடன் அழித்து விட முடியும்.

நோட் பேட் வசதி பயன்கள் என்ன?
இதனால் மிகவும் அருமையான பயன் இருகிறது. பிரௌசிங் செண்டரில் படைப்புகளை தயார் செய்பவர்கள். தங்கள் படைப்புகளை நேரம் கிடைக்கும் போது சிறிது சிறிதாக டைப் அடித்து போல்ட் கலர் பன்னி சேமித்து வைத்து கொள்ளலாம். பொருமையாக செய்யலாம். என்று தங்கள் படைப்பு திருப்திகரமாக முடிந்ததாக கருதுகிறார்களோ என்று அதை காப்பி பேஸ்ட் மூலம் மன்றத்தில் விரும்பும் இடத்தில் பதித்து விடலாம்.

இதுவரை அப்படி ஒரு வசதி இல்லாததால் அரைகுறையாக தயார் செய்தததை எங்கு சேமிப்பது என்று தெரியாமல் இருப்பதால். அரைகுரையாகயோ அல்லது தவறுகளை சரி செய்யாமலோ பதித்து விடுகிறார்கள். இப்படி ஒரு வசதி இருந்தால் படைப்பை மீண்டும் நன்றாக படித்து பார்த்து திருத்தி நன்றாக மனதிருப்தி அளித்தவுடன் பதிப்பார்கள். இதனால் தேவையற்ற குப்பைகளை மன்றத்தில் தவிர்க்கலாம் என்று நான் கருதுகிறேன். இன்னும் நல்ல படைப்புகள் வர வாய்பிருகிறது.

நாம் ஒன்று தயார் செய்து கொண்டிருக்கையில் இடையில் அலைபேசி அழைப்பு வந்து போக வேண்டி இருந்தால் உடனே தயார் செய்தவற்றை அரைகுறையாக முடித்து பதிக்க வேண்டிய அவசியம் இல்லை. சேவ் செய்து விட்டு சென்று விடலாம். அடுத்த முரை வரும் பொது பொருமையாக தொடரலாம்.

கதை வரலாறு கட்டுரை போன்ற மிக பெரிய படைப்பு படைக்கும் ஆற்றல் உடையவர்கள் சிலர் எகலப்பை மூலம் தான் இதுவரை படைத்து தயாரித்து கொண்டிருந்தனர். இப்பொழுது போனாட்டிக் கீபோர்டில் டைப் அடிக்கும் வசதியை இருப்பதால். மேலும் இந்த வசதியும் இருந்தால், புதியவர்களும் கூட இந்த வசதியை பயன் படுத்தி சற்று பெரிய படைப்புகள் படைப்பார்கள். நிரைய நன்பர்கள் இனையத்தில் பல தளங்களை பார்வை இட்டு அதிலிருந்து தகவல் மூலமும் பொழிபெயர்த்தும் பொருமையாக நல்ல படைப்புகளை தயார் செய்யலாம்.

சில சமயங்களில் எதையோ நினைத்து திரி தொடங்கி அது பிறரின் மனம் புன்படும் படி ஆகிவிடுகிறது. இந்த வசதி இருந்தால் அதை மீண்டும் ஒரு படித்து பார்க்கும் போது தான் அப்படி பட்ட வாசங்களை தவிர்க்கலாம்.

பின்னூட்டங்களுக்கு இது அவ்வளவாக உதவாது.
இது சாத்தியமான ஒன்றாக தான் நான் கருதுகிறேன். இடபற்றாகுரை ஏற்படுவதை தவிர்க்க கோட்டா வைத்து கொள்ளலாம். பதித்து முடித்த படைப்புகளை மக்களை தங்கள் நோட் பேடிலிருந்து நீக்கும் படி அறிவிப்பு அங்கேயே வைத்து விடலாம்.

நான் இதுவரை செய்யும் முரை தயார் செய்து அந்த பாதி பைலை யாகு பிரிப்கேஸில் பதித்து விடுவேன். முடிந்த பின் மன்றத்தில் பதிப்பேன். நான் எனது பெண் டிரைவில் ஏகலப்பை வைத்திருப்பதால் எனக்கு சிரமம் தெரியாது. எகலப்பை பழக்கமில்லாத புதியவர்களுக்கு மன்றத்தில் இந்த வசதி தந்தால் நன்றாக இருக்கும்.

நான் பயன்படுத்தும் இன்னொரு முரை. தனி மெயிலில் டைப் அடித்து அதை அவ்வபோது எனக்கே அனுப்பி விடுவேன். பிறகு ரிப்ளை மூலம் திருத்தி மீண்டும் எனக்கே அனுப்புவேன். ஆனால் இதில் எக்கசக்க வேலை கூடுகிறது. அடிகடி நிரைய மடல்கள் சேர்ந்து விடுகிறது ஒரு படைப்புக்கு. பிறகு பழையதை அழிக்க வேண்டும்.

ஆவன செய்யுங்கள்
நன்றி

இதயம்
26-08-2007, 09:49 AM
எல்லா கணினிகளிலும் நோட் பேட் இருக்கும் போது ஏன் தனிப்பட்ட முறையில் மன்ற பக்கத்தில் கேட்கிறீர்கள் என புரியவில்லை. கணினியில் உள்ள நோட்பேடையே பெயர் கொடுத்து சேமிக்கலாம், அதில் எழுதியவற்றை திருத்தலாமே..? அது மட்டுமல்லாமல் இது விண்டோஸ் செயல்முறை தொகுப்பிலேயே இருப்பதால் தனியாக நிறுவ வேண்டும் என்றோ, அல்லது கணினியில் இல்லை என்றோ சொல்ல முடியாது. அதை விடுத்து உங்களுக்கு நீங்களே அஞ்சல் அனுப்பும் முறை விநோதமாக இருக்கிறது. இது பற்றிய மேலதிக விபரங்களை மற்ற நண்பர்கள் தருவார்கள்..!

lolluvathiyar
26-08-2007, 09:52 AM
எல்லா கணினிகளிலும் நோட் பேட் இருக்கும் போது ஏன் தனிப்பட்ட முறையில் மன்ற பக்கத்தில் கேட்கிறீர்கள் என புரியவில்லை.

நோட் பேடில் தமிழில் பொனாட்டிகில் டைப் அடிக்க முடியாது இதயமே. பிரௌசிங் சென்டரில் தயார் செய்பவர்கள் வசதிக்காக கேடிகிறேன். எந்த பிரொவ்சிங் சென்டரிலும் இகலப்பை நிறுவி வைப்பதில்லை. சில சென்டரில் நாமாக நிறுவ முயன்றால் தகராறு செய்கிறது.

leomohan
26-08-2007, 10:33 AM
நோட் பேடில் தமிழில் பொனாட்டிகில் டைப் அடிக்க முடியாது இதயமே. பிரௌசிங் சென்டரில் தயார் செய்பவர்கள் வசதிக்காக கேடிகிறேன். எந்த பிரொவ்சிங் சென்டரிலும் இகலப்பை நிறுவி வைப்பதில்லை. சில சென்டரில் நாமாக நிறுவ முயன்றால் தகராறு செய்கிறது.

மன்றத்தின் முகப்பு பக்கத்தில் கீழ் பகுதியில் இந்த வசதி உள்ளது நண்பரே.

alaguraj
26-08-2007, 11:09 AM
மன்றத்தில் பதிவு செய்யாதவர்களும், லாகின் பண்ணாதவர்கள் இதை பயன்படுத்தாலாம்.

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

தெரிவு செய்க (.) thaminglish

lolluvathiyar
26-08-2007, 12:23 PM
என் கேள்வியை எனக்கு விளக்க தெரியவில்லை என்று கருதுகிறேன்.

நான் உனிகோடில் டை அடித்த விசயத்தை பதியாமல் சேவ் செய்து வைத்து பிறகு திருத்தி பதிக்கும் வசதி போன்றது நான் கேட்பது.
நோட் பெட் என்று நானே பெயரிட்டு விட்டே. அதை எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை

அமரன்
26-08-2007, 12:28 PM
வாத்தியாரே...! நிறைவு செய்யாத மின்மடல்களை சேமித்து வைப்பதுபோன்ற ஒரு வசதி கேட்கின்றீர்கள் போலும். நிர்வாகியின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றேன். முடிவு கிட்டும் வரை நிறைவுசெய்யாத பதிவுகளை உங்களுக்கே நீங்கள் தனிமடல் செய்து சேமித்துக்கொள்ள்லாமே...
நன்றி
=அமரன்

lolluvathiyar
27-08-2007, 06:59 AM
வாத்தியாரே...! நிறைவு செய்யாத மின்மடல்களை சேமித்து வைப்பதுபோன்ற ஒரு வசதி கேட்கின்றீர்கள் போலும்.

அப்பாடா, நான் சொதப்பி சொதப்பி கேட்ட கேள்வியை நீங்கள் சரியாக புரிந்து கொண்டீர்கள். நன்றி அமரன்

நான் சேவ் டிராப்ட் வசதி வேண்டும் என்று கேட்டிருக்க வேண்டும்.
ஆனால் அது மடல் அனுப்ப அல்ல, படைப்புகளை தயாரித்து நாம் மட்டும் பார்வையிட்டு எட்டி செய்யும் வகையில் சேமித்து வைக்க.

Narathar
27-08-2007, 08:34 AM
என் கேள்வியை எனக்கு விளக்க தெரியவில்லை என்று கருதுகிறேன்.

நான் உனிகோடில் டை அடித்த விசயத்தை பதியாமல் சேவ் செய்து வைத்து பிறகு திருத்தி பதிக்கும் வசதி போன்றது நான் கேட்பது.
நோட் பெட் என்று நானே பெயரிட்டு விட்டே. அதை எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை


நான் இதற்காக ஒரு குறுக்கு வழியை பின்பற்றுவேன்................

ஆக்கங்களை டைப் செய்து இடைவழியில் விட நேர்ந்தால் அவற்றை அப்படியே என் முகவரிக்கே தனி மடலில் அனுப்பி விடுவேன் பின்னர் நேரம் கிடைக்கும் போது அவற்றை மீண்டும் கட் அன்ட் பேஸ்ட் செய்து உபயோகிப்பேன்............

alaguraj
27-08-2007, 08:45 AM
நோட்பேட் பயன்படுத்தாமல் வேர்ட்பேட்டில் பதிந்து சேவ் செய்து மீண்டும் வேர்ட்பேட்டிலேயோ ஒபன் செய்தால் யுனிகோட் தமிழ் அப்படியே இருக்கும். தொடர் கட்டுரை எழுதுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளது வேர்ட்பேட்...

praveen
27-08-2007, 09:33 AM
வாத்தியாரே, விடாது கேள்வி பதில் தருகிறிர்களே, உங்களைப்போல பிரவுசிங் சென்டர்களில் இருந்து பங்களிப்பவர்களுக்கு இரண்டு வழி உள்ளது.

1) ஆன் லைன் சேமிப்பு : நீங்கள் கூகிளின் DOC/Spreadsheet என்ற வசதியை பயண்படுத்தி இந்த தளத்தை ஒரு விண்டோவிலும் அந்த தளத்தை மற்றொரு விண்டோவிலும் வைத்து சேமிக்கலாம்.

2) இது ஒரு குறுக்கு வழி, நீங்கள் செய்யப்போவதும் (தேர்ந்தெடுப்பதும் இது தான்), நமது தளத்தில் நீங்கள் திறந்த ஒரு பழைய திரியில் சென்று இறுதியில் உள்ள ஒரு உங்கள் போஸ்டில் (அல்லது இதுவரை நீங்கள் பதிந்த்த பதிவுகளில் தேவையில்லாதது எது என்று உங்களுக்கு தோன்றுகிறதோ அங்கு சென்று) தற்காலிக பணியகம்\சேமிப்பகம் என்று தலைப்பிட்டு அந்த பதிவில் உங்கள் பதிப்புகளை சேர்த்து, புதுப்பித்து வாருங்கள், தொடர்ந்து அதே திரியை மட்டுமே பயன்படுத்துவதால் அது நியு போஸ்டில் தோன்றாது, மற்றவர்களுக்கும் உங்கள் பதிப்புகள் தெரியாது, ஒருவேளை அந்த பதிப்பை பார்க்க நேரிட்டாலும், அது வழக்கமான உங்கள் பதிவு என்று நினைத்து கொள்வர்:medium-smiley-025:. அந்த திரியையும், போஸ்ட்டையும் நியாபகத்தில் வைத்து கொள்ளுங்கள், (உங்கள் சிக்நேச்சரில் ஒரு சிறு புள்ளி வைத்து அதன் லிங்காக அந்த போஸ்ட்டை வைத்து கொண்டு தூள் கிளப்புங்கள்).

இதற்கும் வழக்கம் போல 1 இபணம் தந்து விடாதீர்கள். கூடுதலாக போட்டு கொடுங்கள்.:nature-smiley-003::nature-smiley-002:

ஓவியன்
27-08-2007, 10:04 AM
இது ஒரு குறுக்கு வழி
ஆமா!
எப்போவாவது திடு திடுப்பென மன்றம் வரவேண்டியது........
வந்ததும் வராமல் குறுக்கு வழிகளைச் சொல்லித் தரவேண்டியது......

ம்,ம்........

கலக்குங்க அசோ.......! :thumbsup:

lolluvathiyar
27-08-2007, 10:35 AM
நன்றி ஆசோ, அருமையான யோசனை


உங்களைப்போல பிரவுசிங் சென்டர்களில் இருந்து பங்களிப்பவர்களுக்கு இரண்டு வழி உள்ளது.


இனைய தொடர்பு மட்டுமே நான் பிரௌசிங் சென்டரில் செய்கிறேன். மற்றபடி பெரிய படைப்புகள் தயார் செய்வது ஆபிஸில் தான் எகலப்பை உதவியுடன். புதியர்களுக்கு பயன் படட்டுமே என்ற நோக்கத்தில் தான் இந்த கருத்து தெரிவித்தேன்இதற்கும் வழக்கம் போல 1 இபணம் தந்து விடாதீர்கள். கூடுதலாக போட்டு கொடுங்கள்
அது பழைய வாத்தியார். இப்ப திருந்திட்டாரு. பிடியுங்கள் 100 இபணம்


ஆமா!
எப்போவாவது திடு திடுப்பென மன்றம் வரவேண்டியது........
வந்ததும் வராமல் குறுக்கு வழிகளைச் சொல்லித் தரவேண்டியது......


யாரு கண்டா மன்றம் வரதுக்கே ஏதாவது குறுக்கு வழி வச்சிருப்பாரு.

இதன் மூலம் அறிவிக்க படுவது என்னவென்றால் ஏதாவது குறுக்கு வழி தேவைபட்டால் ஆசோவை தொடர்பு கொள்ளலாம்

அறிஞர்
27-08-2007, 03:54 PM
அசோ சொல்வது போல், பழைய் பதிப்பில் பதிந்து படிப்பவரை குழப்பிவிடாதீர்கள்....

−−−−−−
பல வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் மன்றத்தின் வேகம் தடை படுமோ என அச்சம் உள்ளது.
−−−−−
வாத்தியாரே.. நானும் நாரதர் போன்று.. என் மடலுக்கே அனுப்பிவிடுவேன்.

இங்கு டைப் பண்ணி.. காப்பி பண்ணி.. ஜிமெயில் சேர்த்துவைக்கலாம்.
−−
இங்கு அந்த வசதி கொண்டு வர இயலுமா என கலந்தாலோசித்து சொல்கிறேன்.

Narathar
29-08-2007, 09:23 AM
−−−−−
வாத்தியாரே.. நானும் நாரதர் போன்று.. என் மடலுக்கே அனுப்பிவிடுவேன்.

.
என்ன ஒற்றுமை??
என்ன ஒற்றுமை..............???

அறிஞர்
29-08-2007, 01:57 PM
என்ன ஒற்றுமை??
என்ன ஒற்றுமை..............???

அது ஒன்றுதான் ஒற்றுமை...
நான் கலகம் மூட்டுவதில்லை... ரொம்ப நல்ல மனிதன்..

அறிஞர்
29-08-2007, 01:58 PM
இன்னும் ஒரு சில வாரங்களில் தாங்கள் கேட்ட வசதியை.. பரிசோதிக்க இருக்கிறோம்..

மனோஜ்
29-08-2007, 02:11 PM
கோட்டவுடன் பரிசிலிக்கும் அறிஞருக்கு வாழ்த்துக்கள் இது தான் நம் மன்றம்

மாதவர்
30-08-2007, 05:11 PM
இது அசோ வழி

Narathar
31-08-2007, 07:06 AM
அது ஒன்றுதான் ஒற்றுமை...
நான் கலகம் மூட்டுவதில்லை... ரொம்ப நல்ல மனிதன்..


அப்போ என்னை கெட்டவன் என்கின்றீர்கள் !!!!!


நாராயணா!!!!

Narathar
31-08-2007, 07:08 AM
இன்னும் ஒரு சில வாரங்களில் தாங்கள் கேட்ட வசதியை.. பரிசோதிக்க இருக்கிறோம்..


நன்றி................

ஓவியா
01-09-2007, 09:09 PM
இன்னும் ஒரு சில வாரங்களில் தாங்கள் கேட்ட வசதியை.. பரிசோதிக்க இருக்கிறோம்..

மன்றம் செழிக்க எனது வாழ்த்துக்கள். கேட்ட வசதியை உடனே பரிசோதிக்க முனைந்த தலைவருக்கு நன்றிகள்.

இராசகுமாரன்
09-09-2007, 08:29 AM
இந்த "Save Draft" வசதி இன்று முதல் பரிசோதனைக்காக அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.

aren
09-09-2007, 10:45 AM
நானும் முயற்சி செய்து பார்க்கிறேன். எங்கே இதை சேமிக்கவேண்டும் என்று தெரியவில்லையே.

இராசகுமாரன்
09-09-2007, 11:00 AM
நானும் முயற்சி செய்து பார்க்கிறேன். எங்கே இதை சேமிக்கவேண்டும் என்று தெரியவில்லையே.

http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/savedraft-1.png

இது நீங்கள் திரி துவக்கும் போதும், பதில் பதிப்பு செய்யும் போதும், குவிக் ரிப்ளை செய்யும் போதும், அங்கே தட்டச்சு செய்யும் பெட்டிக்கு கீழே Submit New Thread, Submit Reply, Submit Quick Reply என்று வழக்கமாக வரும் பட்டனுக்கு அருகில், புதிதாக "Save Draft" என்ற பட்டனும் சேர்ந்து தோன்றும் இதை அழுத்தி தட்டச்சு செய்தவற்றை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

1) இந்த வசதி மூலம் ஒரு பகுதியில் ஒரு புதிய திரி மட்டுமே சேமித்து வைக்க முடியும்.

2) அதே போல, ஒரு பகுதியில் ஒரு பதில் பதிப்பு மட்டுமே சேமித்து வைக்க முடியும்.

3) இந்த வசதியை, தனிமடல் சேமித்து வைக்கவும் உபயோகிக்கலாம்.

4) சேமித்து வைத்தவற்றை மீண்டும் தொடர, அதே பகுதிக்கு வந்து Post New Thread, Post Reply பட்டனை அழுத்தினால், நீங்கள் சேமித்து வைத்திருந்த பதிப்பு மீண்டும் தோன்றும்.

5) சேமித்து வைக்கும் இந்த பதிப்புகள், அதிக பட்சம் 1 மாதத்திற்கு மட்டுமே சேமிப்பில் இருக்கும், அதற்குள் அந்த பதிப்பை உபயோகித்து விடவும் அல்லது அவை தானாக மறைந்து விடும்.

சூரியன்
09-09-2007, 11:04 AM
நல்ல உபயோகமான பகுதி

ஓவியன்
09-09-2007, 11:12 AM
பரிசோதித்தேன், நன்றாக தொழிற்படுகிறது.........

புதியன புகுத்தும் அண்ணலுக்கு நன்றிகள் கோடி..........!:icon_good:

praveen
09-09-2007, 02:11 PM
இந்த வசதி நமது நண்பர்கள், நிறைய பேர்களுக்கு, குறிப்பாக யாரெல்லாம் பொதுக்கணினி (பிரவுசிங் செண்டர், அலுவலக கணினி, நண்பர்கள் கணினி) பயண்படுத்துகிறார்களே, அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

இந்த வசதி தந்த நிர்வாகத்திற்கு நன்றிகள் பல.