PDA

View Full Version : எடிட்டர் பாக்ஸ் "Phonetic Keyboard" தேவையா?

ஷீ-நிசி
25-08-2007, 02:26 PM
கடந்த சில மாதங்களாய், நம் தமிழ் மன்றத்தில் படைப்புகள் அல்லது பின்னூட்டம் பதிக்க மன்றத்திற்குள்ளேயே பதிக்கும் வகையில் Phonetic Keyboard முறை கொண்டுவரப்பட்டது. இது தமிழில் பதிக்க உதவி செய்தாலும், இடையூறும் அதிகம் இருக்கிறது..

பிரச்சினைகள்:

1. முதலில் நட்சத்திரங்கள் தோன்றுவது

2. quote செய்யும் பதிப்புகளின் முடிவில் எண்டர் கீயை அழுத்தினால் தமிழ் எழுத்துரு கடைசி எழுத்துக்களில் மாறிவிடுகிறது.

3. சில சமயங்களில் எண்டர் கீ அழுத்தினால், பதிக்கும் எழுத்துக்கள் எடிட்டர் பெட்டியை விட்டு வெளியில் பதிகிறது... குறிப்பாய் தனிமடல் அனுப்புகிற இடங்களில்.

4. எண்டர் கீ அழுத்தினால் அடுத்த லைனில் வந்தாலும் ஸ்க்ரோலிங் ஆவதில்லை.

ஆலோசனைகள்:

1. முன்னம் இருந்த English Keyboard மட்டுமே இருக்கலாம்.

2. அப்படி அவசியம் வேண்டுமென்றால்.. English Keyboard default mode ஆக இருக்கவேண்டும்.

3. இந்த பிரச்சினைகள் எல்லாம் களையப்பட்டு, பின்னர் இது உபயோகத்திற்கு கொண்டுவரலாம்.

நண்பர்களே, உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்...

அமரன்
25-08-2007, 02:29 PM
எனக்கும் இதே பிரச்சினை. உங்கள் ஆலோசனைகளை நானும் வழிமொழிகின்றேன். இரண்டும் இருக்கலாம். ஆங்கிலப் பலகை டிஃபொல்ட்டாக இருக்கலாம்.. நிர்வாகியின் கவனத்துக்கு நமது விண்ணப்பத்தை கொண்டுசென்று விட்டேன் ஷீ. நன்றி.

இதயம்
25-08-2007, 02:31 PM
உங்கள் ஆலோசனைகளை நான் வழிமொழிகிறேன்.

சக்திவேல்
25-08-2007, 02:38 PM
ஒரு சிலருக்கு இதில் சிரமம் இருக்காது என்று நினைக்கிறேன். பலருக்கு சிரமமாக இருப்பதால், Phonetic Keyboard ஐ தெரிவாக வைத்துக்கொள்ளலாம். English Keyboard ஐ default ஆக வைத்துக்கொள்ளலாம்.

lolluvathiyar
26-08-2007, 12:33 PM
சில பிரச்சனைகள் இருந்தாலும் பொனாட்டிக் கீபோர்ட் வசதி உன்மையில் ஒரு வரபிராசதம். பிரௌசிங் சென்டரில் இருந்து பதிப்பவர்களுக்கு அருமையான வசதி.
எல்லா இடங்களிலும் எகலப்பையை தூக்கி செல்ல முடியுமா

ஓவியா
26-08-2007, 01:15 PM
எனக்கு சிரமத்தை விட வசதியே அதிகம்.

மன்றத்தின் சிபாரிசையே (எதுவானாலும்) ஏற்றுக்கொள்கிறேன்

நன்றி
வணக்கம்.

சிவா.ஜி
26-08-2007, 01:20 PM
வாத்தியார் சொல்வது யோசிக்கவேண்டியது. இருந்தாலும் நிர்வாகத்தின் முடிவு எதுவானாலும் சம்மதமே.

ஓவியன்
26-08-2007, 02:15 PM
சில பிரச்சனைகள் இருந்தாலும் பொனாட்டிக் கீபோர்ட் வசதி உன்மையில் ஒரு வரபிராசதம். பிரௌசிங் சென்டரில் இருந்து பதிப்பவர்களுக்கு அருமையான வசதி.
எல்லா இடங்களிலும் எகலப்பையை தூக்கி செல்ல முடியுமா

உண்மையே, பழையவர்கள் இ−கலப்பையை வைத்துச் சமாளித்து விடலாம். ஆனால் இந்த Phonetic Keyboard புதியவர்களுக்கும் புரோவுசிங் செண்டரில் இருந்து மன்றத்தை உபயோகிப்பவர்களுக்கும் ஒரு வரப் பிரசாதமே.........

ஆகவே English Keyboard ஐ default mode ஆக வைத்துக் கொண்டு Phonetic Keyboard ஐயும் வைத்திருப்பது நல்லது என்பதே என் கருத்து...

ஆதவா
27-08-2007, 05:18 AM
அறிஞருக்கு இதனை நினைவுறுத்துகிறேன்..

இராசகுமாரன்
28-08-2007, 04:11 AM
சிலர் இந்த புதிய வசதியினால் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்சனைகளினால் மகிழ்ச்சி இல்லை என்பதை அறிவேன்.
இந்த பிரச்சனைகளை களைய ஆராய்ந்து பார்த்தேன், ஆனால் நேரம் போதாமையால் அது முழுமையடையவில்லை.

நமது மன்றத்தில் இரண்டு விதமான எடிட்டர்களை அனுமதித்துள்ளோம். பேசிக் எடிட்டர், ஸ்டாண்டர்ட் எடிட்டர். இதை நீங்கள் UserCP --> Edit Options --> Miscellanous சென்று தேர்வு செய்து கொள்ளலாம். இதில் ஒன்றுடன் மட்டும் இந்த வசதியை வைத்துக் கொள்ளலாம், ஒன்றை முன்பு போல இகலப்பை உபயோகிப்பவர்களுக்காக விட்டு விடலாம் என நினைக்கிறேன்.

"பேசிக் எடிட்டர்"−ல் வசதிகள் மிக குறைவு, அதாவது அதில் "டூல் பார்" கிடையாது, அதனால் எழுத்தை பெரியதாக்குதல், அடிக்கோடிடுதல், வர்ணம் தீட்டுதல் போன்ற வேலைகள் செய்ய முடியாது. (ஆனால், நீங்கள் கையால் அந்த 'bbcode' கட்டளைகளை சேர்க்கலாம்) இந்த எடிட்டருடன் மட்டும் இந்த Phonetic Keyboard-ஐ இணைக்கலாம் என்று நினைத்துள்ளேன்.

அவசரத்திற்கு இகலப்பை இல்லாமல் தட்டச்சு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த "பேசிக் எடிட்டரை" தேர்வு செய்து கொள்ளட்டும். மற்றவர்கள் phonetic keyboard இல்லாத "ஸ்டான்டர்ட் எடிட்டர்" உபயோகிக்கலாம்.

ஓவியன்
28-08-2007, 04:17 AM
இந்த ஐடியா நன்றாக இருக்கிறது அண்ணா!
தற்போதைக்கு Basic ஐ இ-கலப்பை பாவிக்காதோருக்காக* விட்டு விடலாம், அந்த தட்டச்சு தேவைப்படுவர்கள் அதனை தெரிவு செய்து வைத்துக் கொள்ளலாம்.

ஷீ-நிசி
28-08-2007, 04:49 AM
சிலர் இந்த புதிய வசதியினால் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்சனைகளினால் மகிழ்ச்சி இல்லை என்பதை அறிவேன்.
இந்த பிரச்சனைகளை களைய ஆராய்ந்து பார்த்தேன், ஆனால் நேரம் போதாமையால் அது முழுமையடையவில்லை.

நமது மன்றத்தில் இரண்டு விதமான எடிட்டர்களை அனுமதித்துள்ளோம். பேசிக் எடிட்டர், ஸ்டாண்டர்ட் எடிட்டர். இதை நீங்கள் UserCP --> Edit Options --> Miscellanous சென்று தேர்வு செய்து கொள்ளலாம். இதில் ஒன்றுடன் மட்டும் இந்த வசதியை வைத்துக் கொள்ளலாம், ஒன்றை முன்பு போல இகலப்பை உபயோகிப்பவர்களுக்காக விட்டு விடலாம் என நினைக்கிறேன்.

"பேசிக் எடிட்டர்"−ல் வசதிகள் மிக குறைவு, அதாவது அதில் "டூல் பார்" கிடையாது, அதனால் எழுத்தை பெரியதாக்குதல், அடிக்கோடிடுதல், வர்ணம் தீட்டுதல் போன்ற வேலைகள் செய்ய முடியாது. (ஆனால், நீங்கள் கையால் அந்த 'bbcode' கட்டளைகளை சேர்க்கலாம்) இந்த எடிட்டருடன் மட்டும் இந்த Phonetic Keyboard-ஐ இணைக்கலாம் என்று நினைத்துள்ளேன்.

அவசரத்திற்கு இகலப்பை இல்லாமல் தட்டச்சு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த "பேசிக் எடிட்டரை" தேர்வு செய்து கொள்ளட்டும். மற்றவர்கள் phonetic keyboard இல்லாத "ஸ்டான்டர்ட் எடிட்டர்" உபயோகிக்கலாம்.

நன்றி ராஜகுமாரன் அவர்களே!

நீங்கள் சொன்ன ஆப்ஃடன்ஸ் பார்த்தேன்... இரண்டுக்கும் உள்ள வித்தியாசம், எழுத்துக்களை அழகுபடுத்துவது ஒன்று, உதாரணம் B I U இன்னொன்றில் இவை எதும் செய்ய முடியாது...

இதில் கஷ்டங்கள் ஏதுமில்லை..

phonotic keyboard -க்கு பதிலாக english keyboard defauld மோட் ஆக்கிவிடலாம்...

அல்லது miscellaneous option-ல் யாருக்கு எந்த கீபோர்டு தேவையோ, அதை செலக்ட் செய்யும் விதமாய் மாற்றிவிடலாம்...

இது என்னுடைய கருத்து....

அறிஞர்
28-08-2007, 04:55 AM
ஷீ-நிசியின் தேவை சந்திக்கப்படுகிறது...

ஷீ-நிசி
28-08-2007, 05:08 AM
நன்றி அறிஞரே!

இராசகுமாரன்
09-09-2007, 07:36 AM
இன்று மாறுதல்கள் செய்யப் பட்டன. விளக்கப் பதிவு விரைவில் கொடுக்கப் படும்.

நேரடி "போனெட்டிங்" தட்டச்சு செய்ய விரும்புபவர்கள் "பேசிக் எடிட்டர்" தேர்வு செய்து கொள்ள வேண்டும். (UserCP --> Edit Options --> Miscellaneous Options --> Basic Editor).

அதில் பாமினி விசைப் பலகையும் சேர்க்கப் பட்டுள்ளது.

இன்று முதல் WYSIWYG எடிட்டரும் முடுக்கி விடப் பட்டுள்ளது.