PDA

View Full Version : நன்றி

இலக்கியன்
25-08-2007, 02:14 PM
எழுதாமறையாக இருந்தவனை
எழுதவைத்த நண்பிக்கு நன்றி

குடத்துள் விளக்காக இருந்தவனை
குன்றிலே ஏற்றிவைத்தீர் நன்றி

நண்பனாக வந்த என்னை
உன் இதயதில் அணணாவாக
இடம் தந்தாய் நன்றி

நம் நட்புக்கு பாலமாக இருந்த
அந்த மலர்களுக்கும் நன்றி

கூண்டுக் கிளிபோல இருந்த-என்
சிந்தனையை சிறகுகள் விரித்து
பறக்கவைத்தாய் நன்றி

வீணாக இருந்த என் பேனாவுக்கு
ஒரு அர்த்தம் கொடுத்தாய் நன்றி

அன்புக்கு நன்றி சொல்ல என்
கவி நயதில் வார்தைகள் இல்லை
நன்றி

இது என் கன்னிக்கவிதை

அக்னி
25-08-2007, 02:21 PM
நட்பு,
உறவாடலின் உன்னத
இணைப்புப்பாலம்...
இரத்த உறவுகள்,
இயல்பாய் வந்தவை...
நட்பின் வரவுகள்,
இயைந்து வருபவை...
நட்புக்குள் நன்றி,
வேண்டப்படுவதில்லை எனினும்,
நன்றி சொல்ல,
என்றும் தகுமே...

பாராட்டுக்கள் இலக்கியன்...

இலக்கியன்
25-08-2007, 02:26 PM
நட்பு,
உறவாடலின் உன்னத
இணைப்புப்பாலம்...
இரத்த உறவுகள்,
இயல்பாய் வந்தவை...
நட்பின் வரவுகள்,
இயைந்து வருபவை...
நட்புக்குள் நன்றி,
வேண்டப்படுவதில்லை எனினும்,
நன்றி சொல்ல,
என்றும் தகுமே...

பாராட்டுக்கள் இலக்கியன்...

ஆம் இந்தக்கவிதை என் கன்னிப்படைப்பாக அமைந்தது எனது கவியாக்கத்துக்கு தூணாக இருந்த அந்த சகோதரிக்கு என் நன்றியை தெரிவிக்கும் பாங்கில் எழுதியது

சாராகுமார்
25-08-2007, 02:33 PM
அன்பாக இருங்கள்

நட்புடன் பழகுங்கள்

நட்புக்கு நன்றி தேவையில்லை.
இலக்கியம் படைக்க வாழ்துக்கள் இலக்கியன் அவர்களே.

அக்னி
25-08-2007, 02:35 PM
ஆம் இந்தக்கவிதை என் கன்னிப்படைப்பாக அமைந்தது எனது கவியாக்கத்துக்கு தூணாக இருந்த அந்த சகோதரிக்கு என் நன்றியை தெரிவிக்கும் பாங்கில் எழுதியது

அடடே... கன்னிக் கவிதையா..?
கவிதையின் கீழே குறிப்பிட்டுவிடுங்களேன்...

கன்னிக்கவிதைக்காக 100 iCash.

இலக்கியன்
25-08-2007, 02:43 PM
அன்பாக இருங்கள்

நட்புடன் பழகுங்கள்

நட்புக்கு நன்றி தேவையில்லை.
இலக்கியம் படைக்க வாழ்துக்கள் இலக்கியன் அவர்களே.

நன்றிக்கவிதை படைத்த நட்பு இதயத்துக்கு எழுதிய என் கன்னிப்படைப்பு நன்றி சாராகுமார்

சிவா.ஜி
25-08-2007, 02:52 PM
கன்னிப்படைப்பையே நன்றி நவிலலாக படைத்த இலக்கியன் அவர்களை பாராட்டுகிறேன்.நட்பு ஓர் உயர் உறவு..அது எதையும் எதிர்பார்ப்பதில்லை நன்றியையும் சேர்த்து...இருந்தும் வீணாய் இருந்த பேனாவை எழுத வைத்து,தன்ன தானென அடையாளம் கண்டுகொள்ள வைத்த அந்த நட்புக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.

பூமகள்
25-08-2007, 02:53 PM
கூண்டுக் கிளிபோல இருந்த-என்
சிந்தனையை சிறகுகள் விரித்து
பறக்கவைத்தாய் நன்றி

வீணாக இருந்த என் பேனாவுக்கு
ஒரு அர்த்தம் கொடுத்தாய் நன்றி

அழகான கவி.. எதுகை மோனை அருமை.
கவித்திறன் வெளிக்கொண்டுவந்த நண்பிக்கு நன்றி சொல்லும் உங்கள் சிந்தனைக்கு பாராட்டுக்கள்..
வாழ்த்துக்கள்.:icon_good:

கவிக்காக 200 இபணம் அன்பளிப்பு..

Narathar
25-08-2007, 02:54 PM
இலக்கியா நீர் சும்ம கிறுக்கினாலும் அதுவும் இலக்கியமே.................
வாழ்க நீவிர்
வாழ்க உமது கவிப்பயணம்!!!!!

நாரயணா!!

இலக்கியன்
25-08-2007, 02:55 PM
அடடே... கன்னிக் கவிதையா..?
கவிதையின் கீழே குறிப்பிட்டுவிடுங்களேன்...

கன்னிக்கவிதைக்காக 100 iCash.

ஆம் அக்னி இப்போது இணைத்துள்ளேன் இபணத்துக்கும் நன்றி

அமரன்
25-08-2007, 02:55 PM
மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்
அன்றே சொன்னான் கவிஞன்
நன்றே சொன்னான் அவன்....
அவன்சொன்னது கடமை
நன்றி சொல்வதும் கடமை

நன்றி...
உறவுகளின் இணைப்புக்கும்
இணைவின் பிணைப்புக்கும்
சக்தி வழக்கும் காந்தம்.

இலக்கியனின் கவியாறுக்கு
வழி சமைத்ததோழிக்கு
நானும் சொல்கிறேன் நன்றி..
பாராட்டுக்கள்..தொடருங்கள்.

மனோஜ்
25-08-2007, 02:56 PM
அழகான நன்றி கவிதை இலக்கியரை இலக்கணங்கள் படிக்க வைத்த நண்பருக்கு ஒரு நட்பு கவிதை அருமை

இலக்கியன்
25-08-2007, 03:05 PM
கன்னிப்படைப்பையே நன்றி நவிலலாக படைத்த இலக்கியன் அவர்களை பாராட்டுகிறேன்.நட்பு ஓர் உயர் உறவு..அது எதையும் எதிர்பார்ப்பதில்லை நன்றியையும் சேர்த்து...இருந்தும் வீணாய் இருந்த பேனாவை எழுத வைத்து,தன்ன தானென அடையாளம் கண்டுகொள்ள வைத்த அந்த நட்புக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.

சிவாஜி உங்கள் அழகான பின்னூட்டத்துக்கு நன்றி

இலக்கியன்
25-08-2007, 03:09 PM
அழகான கவி.. எதுகை மோனை அருமை.
கவித்திறன் வெளிக்கொண்டுவந்த நண்பிக்கு நன்றி சொல்லும் உங்கள் சிந்தனைக்கு பாராட்டுக்கள்..
வாழ்த்துக்கள்.:icon_good:

கவிக்காக 200 இபணம் அன்பளிப்பு..

நன்றி பூமகள் உங்கள் கருத்துக்கும் இ பணத்துக்கும் நன்றி

இலக்கியன்
25-08-2007, 03:12 PM
இலக்கியா நீர் சும்ம கிறுக்கினாலும் அதுவும் இலக்கியமே.................
வாழ்க நீவிர்
வாழ்க உமது கவிப்பயணம்!!!!!

நாரயணா!!

நன்றி நாராயணா

இலக்கியன்
25-08-2007, 03:14 PM
மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்
அன்றே சொன்னான் கவிஞன்
நன்றே சொன்னான் அவன்....
அவன்சொன்னது கடமை
நன்றி சொல்வதும் கடமை

நன்றி...
உறவுகளின் இணைப்புக்கும்
இணைவின் பிணைப்புக்கும்
சக்தி வழக்கும் காந்தம்.

இலக்கியனின் கவியாறுக்கு
வழி சமைத்ததோழிக்கு
நானும் சொல்கிறேன் நன்றி..
பாராட்டுக்கள்..தொடருங்கள்.

அழகான கவிதையாக பின்னுட்டம் நன்றி அண்ணா

ஓவியன்
25-08-2007, 03:14 PM
உலகிலேயே மிக அழகான ஒரு விடயம் நட்பு............
அந்த நட்பிலும் தூய்மையான ஒரு ஆண் − பெண் நட்பினால் ஆசிர்வதிக்கப் படுவதென்பது வாழ்வின் வரம் என்றால் உண்மையே........

தாயாக, ஆசானாக, நண்பனாக, வழிகாட்டியாக ஒரு நண்பி கிடைத்தால் உலகினையே வளைத்து பார்க்க முடியும்..............

அந்த நட்புக்கு நன்றி சொல்ல தமிழ் அகராதியிலேயே சொற்கள் இல்லையென்றாலும் கவியெடுத்து நன்றி பகர முயன்ற இலக்கியனுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...............!

இலக்கியன்
25-08-2007, 03:15 PM
அழகான நன்றி கவிதை இலக்கியரை இலக்கணங்கள் படிக்க வைத்த நண்பருக்கு ஒரு நட்பு கவிதை அருமை

நன்றி மனோஜ்

இலக்கியன்
25-08-2007, 03:17 PM
உலகிலேயே மிக அழகான ஒரு விடயம் நட்பு............
அந்த நட்பிலும் தூய்மையான ஒரு ஆண் − பெண் நட்பினால் ஆசிர்வதிக்கப் படுவதென்பது வாழ்வின் வரம் என்றால் உண்மையே........

தாயாக, ஆசானாக, நண்பனாக, வழிகாட்டியாக ஒரு நண்பி கிடைத்தால் உலகினையே வளைத்து பார்க்க முடியும்..............

அந்த நட்புக்கு நன்றி சொல்ல தமிழ் அகராதியிலேயே சொற்கள் இல்லையென்றாலும் கவியெடுத்து நன்றி பகர முயன்ற இலக்கியனுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...............!

நட்பின் இலக்கணம் அறிந்து அழகான் பின்னூட்டம் தந்தீர்கள் நன்றி ஓவியன்