PDA

View Full Version : நோக்கியாவில் விண்டோஸ் லைவ் சேவைகள

சுட்டிபையன்
25-08-2007, 10:35 AM
நோக்கியாவில் விண்டோஸ் லைவ் சேவைகள
மொபைல் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவுடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

அதாவது மைக்ரோசாப்ட் விண்டோஸ் லைவ் சேவைகளை மொபைல் போன்களுக்கு வழங்க இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி விண்டோஸ் லைவ் ஹாட்மெயில் மற்றும் லைவ் மெசஞ்சர் சேவைகளை அதன் அதி திறன் சீரீஸ்-60 மொபைல்களில் நோக்கியா வழங்கவுள்ளது.

துவக்கத்தில் இந்த சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. பிறகு இதற்கு கட்டணம் வசூலித்து மைக்ரோசாஃப்ட் மற்றும் நோக்கியா ஆகியவை இதன் மூலம் கிடைக்கும் வருவாயை பகிர்ந்து கொள்ளும்.

"இந்த சந்தைக்காக நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்... மொபைல் போன் தயாரிப்பில் மிகப்பெரிய நிறுவனம் நோக்கியா..." என்று மைக்ரோசாஃப்ட் ஆன்லைன் சேவைகள் வர்த்தகப் பிரிவு தலைவர் ஸ்டீவ் பெர்கோவிட்ஸ் தெரிவித்துள்ளார்.

விண்டோஸ் லைவ் ஹாட்மெயில் சேவைகள் மற்றும் விண்டோஸ் லைவ் மெசஞ்சர் சேவைகள் நோக்கியாவின் சீரீஸ்-40 மொபைல்களிலும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வழங்கப்பட உள்ளன.
ஏற்கனவே இரண்டு நிறுவனங்களும் சில தொழில்நுட்ப கூட்டுறவுகளை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தனது மொபைல் தேடல் எந்திர சேவையில் மைக்ரோசாஃப்டின் லைவ் தேடல் (Microsoft Live Search) சேவைகளை நோக்கியா ஏற்கனவே உள்ளடக்கியுள்ளதும் தெரிந்ததே.

மைக்ரோசாஃப்டின் ஆன்லைன் வர்த்தக சேவைகள் பிரிவு தலைவர் பெர்கோவிட்ஸ் மேலும் தெரிவிக்கையில், விண்டோஸ் லைவ் தேடல் எந்திரங்களின் வகைகளை தொடர்ந்து மேம்படுத்தி தங்களது விண்டோஸ் மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் வாப் என்று அழைக்கப்படும் ஒயர்லெஸ் அப்ளிகேஷன் புரோடோகால் ஆகியவற்றிற்கும் பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.

எங்கெல்லாம் நுகர்வோரிடத்தில் இதற்கான தேவைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் மைக்ரோசாஃப்ட் சந்தைகளை உருவாக்கும். எது வாடிக்கையாளர்களை அதிகம் அடைகிறதோ அதில் முதலீடு செய்வதுதான் சிறந்தது என்று கூறிய பெர்கோவிட்ஸ், நோக்கியா இதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் என்றார்.

இந்த ஒப்பந்தத்திற்கான அடிப்படை பணிகள் கடந்த ஒரு ஆண்டுகாலமாக நடைபெற்றது என்றும், இது இரு தரப்பிலும் நிறைய கற்றுக் கொள்ள கால அவகாசத்தை தூண்டியது என்றும் நோக்கியா நிறுவன துணைத் தலைவர் நிகெல் ரன்ட்ஸ்டார்ம் தெரிவித்தார்.

நன்றி எம்.எஸ்.என் இந்தியா.