PDA

View Full Version : வால்ட் விட்மன்



தங்கவேல்
25-08-2007, 04:33 AM
மண்ணையும், சூரியனையும், பிராணிகளையும் நேசி! பணத்தை லட்சியம் செய்யாதே; கேட்கிறவனுக்கெல்லாம் கொடு!

அறிவில்லாதவர்கள் சார்பாகவும், பித்தர்கள் சார்பாகவும் போராடு!

உன் வருமானத்தையும், உழைக்கும் சக்தியையும் பிறருக்காக செலவிடு. யதேச்சதிகாரிகளை வெறு. கடவுள் குறித்து வாதிடாதே.

மக்களிடம் பொறுமையுடனும், சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொள்.

படிக்காத மேதைகளிடமும், தாய்மார்களிடமும் பழகு. பள்ளியிலோ, கோவிலிலோ, புத்தகத்திலோ உனக்குச் சொல்லப்பட்டவைகளை எல்லாம் மறுபரீசிலனை பண்ணு.

உன் ஆன்மாவை எதெல்லாம் அகரவுப்படுத்துகிறதோ, அதையெல்லாம் தள்ளிவிடு.

இப்படியெல்லாம் செய்தால் உன் சொற்கள் மட்டுமல்லாமல் உன் உதடு, முகம், கண்கள், உன் உடலின் அசைவு ஒவ்வொன்றிலும் கவிதை வெளிப்படும்.

-வால்ட் விட்மன் அமெரிக்க கவிஞர்

அமரன்
25-08-2007, 08:04 AM
சதவீத உண்மைக் கருத்துக்கள். படிக்காத மேதைகள் அனுபவத்தில் மேதைகளாச்சே....!நன்றி தங்கவேல்..

சிவா.ஜி
25-08-2007, 08:09 AM
அற்புதமான சிந்தனை.கவிதை ஒன்று வெளிப்பட எத்தனை தூய சிந்தனைகள்
உள்ளத்தில் தோண்றவேண்டியுள்ளது.நன்றி தங்க*வேல்.

தளபதி
25-08-2007, 10:58 AM
உன் ஆன்மாவை எதெல்லாம் அகரவுப்படுத்துகிறதோ, அதையெல்லாம் தள்ளிவிடு.
-வால்ட் விட்மன் அமெரிக்க கவிஞர்

நிதர்சனம். ஆமாம். ஆன்மாவிற்கு பிடிக்காததைச் செய்யாமல் இருக்கும்போது ஆன்மா நமக்கு உண்மையாக இருக்கும். நன்றி நண்பரே!!

ஓவியன்
27-08-2007, 03:03 AM
அருமையான கருத்துக்கள் பலரும் அடிக்கடி ஞாபகத்திலே கொள்ள வேண்டியவையும் கூட............
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் அண்ணா!.