PDA

View Full Version : பாகப்பிரிவினை

rocky
24-08-2007, 03:52 PM
அப்ப செத்து
அஞ்சாறு நாளாகல
சொத்தப் பிரிக்க
பங்காளில ரண்டுபேறும்
பஞ்சாயத்த கூட்டிட்டானுக,

தெண்னந்தோப்ப நானெடுத்துக்குர
வாழத்தோப்ப நீவெச்சுக்கன்னா
அண்னங்கார, அப்ப
அத்தோரம் இருக்கற
நஞ்சைய நான் வெச்சுக்கர
ஊருக்கு வெளிய இருக்குற
கரிசக்காட்ட நீவெச்சுக்கன்னா தம்பி,

இவனுக இப்படியிருக்க
பட்டுப்பொடவைய பாதியா
பிரிச்சுக்கலாம்,
காசுமாலைய உருக்கி நான்
நெக்லஸ் செஞ்சுக்குற,
ஒட்டியாணத்த வித்து நீ
வளையல் பண்னிக்கனா
மருமக,

ஒத்தையா இருக்குற
ஆத்தாலப்பத்தி எவனும்
பேசல, இவனுககிட்ட
சோறு வாங்கி திங்கறதுக்கு
பதிலா அவரோடவே போரேன்னு
பாலுங்கிணத்துப் பக்கமாப்போனா
ஆத்தா.

மனோஜ்
24-08-2007, 03:55 PM
பணம் பாதாளம் வரை பாயும் ராக்கி

பணத்தின் முன் மனிதர்களின் பாசம் பினம் பெற்ற தாயும் உற்றஉறவும் சமம் அதை அருமையாக கவிதைவடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

சாராகுமார்
24-08-2007, 04:03 PM
அருமையான கவிதை.

அமரன்
24-08-2007, 05:04 PM
கிராமத்து வாடையில் ஒரு கவிதை. நாட்டாமை படத்துல முதல் காட்சி நிழலாடுகிறது. சொத்துக்களுக்காக சொந்தங்கள் அடித்துக்கொள்ள ஒப்பந்த பந்தம் போன இடத்தை நாடுகிறாள் ஒருத்தி. இவனுக கையால சோறு திங்கிறதை விட பால் வாங்கிக்கிறது மேலானது என முடிவுசெய்த முடிவு தீயாக சுடுகிறது. நிஜம் எப்போதும் சுடுமாமே...ரொம்ப வலிக்கிறது. ராக்கி. பாராட்டுக்கள். சிலையின் முகம் அடையாளம் காணமுடிகிறது. கவர்வதற்காக இன்னும் செதுக்கலாம். தொடருங்கள்.

அக்னி
24-08-2007, 07:14 PM
பெத்தெடுத்த உள்ளங்கள்,
பித்துப்பிடிக்குது...
சொத்துப்பிரிக்க அல்லாடும்,
பிள்ளைகளைப் பார்த்து...

கிராமிய நடையில் வந்த கவிதை அழகானாலும்,
சில சொற்பதங்கள் எழுத்துப் பிழையா அல்லது, கிராமிய நடையா என்ற சந்தேகத்தைத் தோற்றுவிக்கின்றது.
தவிர்த்து விட்டுப் பார்த்தால், கிராமிய வாழ்நிலைகளில், உயில் என்ற ஒன்று இல்லாமல்,
பெரியோர்கள் முன்னிலையில்
பிரித்துக் கொள்ளும், தீர்த்துக்கொள்ளும் அந்த சூழ்நிலையை
மனக்கண்ணில் தெளிவாக நிறுத்திய கவிதைக்குப் பாராட்டுக்கள் ரொக்கி...
தொடருங்கள்...

வித்தியாசமான கவிதைக்காக 200 iCash.

சிவா.ஜி
25-08-2007, 04:46 AM
உத்த உசுரு போனதால அங்க ஒத்த உசுரு அல்லாடுது..மத்த மகனுங்க..சொத்தப் பிரிக்க சத்தம் போடறானுங்க.எத்தச்சொல்ல ஏதச்சொல்ல..பாவி மக்க பெத்தவள பரிதவிக்க விட்டுட்டாங்களே.....
சம்பாதிச்சிக்க இதென்ன பணமா...அம்மாவ வாங்க முடியுமா...?
அருமையான கவிதை ராக்கி.தொடருங்கள்...வாழ்த்துக்கள்.

பிச்சி
25-08-2007, 05:31 AM
கவிதை ரொம்ப சூப்பர் ராகி அவர்கலே! கிராமத்து ஸ்டைலில் பின்னியிருக்கீங்க. ரொம்ப நல்ல கரு.

இலக்கியன்
25-08-2007, 07:57 AM
பணம் பத்தும் செய்யும் நல்ல கரு வாழ்த்துக்கள்

rocky
25-08-2007, 03:09 PM
அனைவருக்கும் நன்றி. அனைவரும் சொல்வதுபோல் எனது கவிதைகள் அனைத்தும் வசன நடையில் இருப்பது உண்மையே. அதற்கு காரணம் அனைவருக்கும் புரியும்படி எளிமையாக எழுத வேண்டும் என்பதற்காகவே, என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன். எனக்கு கவித்துவமாக எழுதத் தெரியாது. நீங்கள்தான் கற்றுத்தர வேண்டும். இந்த பாகப்பிரிவினை கவிதையைக் கூட ஒரு வாரமாக கவித்துவமாய் எழுத முயற்ச்சித்து எனக்கே பிடிக்காததால்தான் இப்படி கிராமிய நடையில் எழுதினேன். என்னிடம் இருக்கும் கருவை உங்களிடம் சேர்க்க வேண்டும் என்பதே என் நோக்கம்.கவிதைபோல் எழுத முயற்ச்சித்து கருவைக்கெடுக்கக் கூடாது என்பதற்க்காகவே என் அறிவுக்கு எட்டும் எழிய வசன நடையில் எழுதுகிறேன். ஒப்பனைகளை அதிகமாக்கி சிற்ப்பத்தின் முகத்தை மறைக்க (கெடுக்க) நான் விரும்பவில்லை அறிஞர் அண்னா. என் முந்தைய கவிதையில் (கேள்விகள்) அனைவரும் குறிப்பிட்டது இறுதி வரிகள் நன்றாக இருந்தது, ஆனால் உறையாடல் போல் உள்ளது என்பதே. அதற்கு காரணம் அந்த இருதி வரிகள் மட்டுமே எனக்கு முதலில் தோன்றிய கரு, அந்த கருவைப் வைத்து மற்ற வரிகளை யோசித்ததாலேயே அப்படியாகிவிட்டது. மன்றத்தில் உள்ள மற்ற பெரியவர்களின் கவிதைகளைப் படித்துவிட்டு எழுதினால் ஓரளவு தேருவேன் என்ற நம்பிக்கையுள்ளது. நிச்சயம் முயற்சிப்பேன் ஆசி கூறுங்கள். மீண்டும் நன்றிகள்.

lolluvathiyar
25-08-2007, 03:16 PM
கவிதை நடை எப்படி இருந்தது என்பது முக்கியமல்ல*
கரு அதன் மடிப்புகளை மறைத்து விட்டது.

வெறும் பாராட்டு கொல் கொல்ல இது கவிதை அல்ல*
அனைத்து வீடுகளில் நடக்கும் நிஜம்.

வீட்டுக்கு வீடு வாசபடி
( நான் விவசாய குடும்பத்திலிருந்து வந்தவன். சொந்த அனுபவமும் உன்டு)

rocky
25-08-2007, 03:33 PM

நன்றி வாத்தியார் அவர்களே.

ஆதவா
31-08-2007, 07:57 AM
கவிதை என்றால் எப்படியிருக்கவேண்டும்? நால் எதுகைமோனை வார்த்தைகள் , வார்த்தை ஜாலங்கள், அழகான கரு , அசத்தலான வரியமைப்பு என்றா? இல்லை. நம் கண்கள் காண்பதை ஒரு இடத்தில் குமித்து உருவாக்கினால் அதற்கு கவிதை என்று சொல்லலாம். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் அனைத்து வரிகளுமே கவிதைதான்...

கவிதை கிராமத்து பாணியில் இருந்தாலும் வரியமைப்புகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கவேண்டும். எழுத்து மற்றும் வார்த்தைப் பிழைகள் களைய முற்பட்டிருக்கவேண்டும். ஏனெனில் இயல்பாக எழுதுவதற்கும் கிராமத்திய பாணியில் எழுதுவதற்கும் வித்தியாசங்கள் ஏராளம். கிராமத்து பாணியில் எழுதுவது அதைக்காட்டிலும் சிரமம். அந்த மொழியை சரிவர உபயோகிக்காவிடில் சரியான பதம் கிடைக்காது.

பெரும்பாலும் நகரத்தில்தான் இந்தமாதிரி நடக்கும். இன்றைக்கு காலம் செல்லும் வேகத்தில் பெற்றவர்களை மறந்துவிடுகிறார்கள். ஒவ்வொரு தம்பதியருக்கும் தனக்கும் இம்மாதிரி வந்துவிடும் என்ற அச்சம் இருந்திருந்தால் தன் பெற்றவர்களை இம்மாதிரி கைவிடுவார்களா?

பாலுங்கிணறு இல்லை ராக்கி, பாழுங்கிணறு.. பாழடைந்த கிணறு.

ஒவ்வொரு பெற்றவர்களும் தனக்கென்று சொத்து வைத்துக்கொண்டு தன் மகன்களோடு இருக்கவேண்டும். இறுதி காலத்தில் மகன்களிடமோ மருமகளிடமோ கையேந்தவேண்டிய நிலை இருக்காது. அவர்களுக்கு மகள் என்று ஒருத்தி இருந்தால் அவளிடம் கூட பிச்சை கேட்கமுடியாது.

நல்ல கவிதை. இன்னும் கொஞ்சம் முயற்சி வேண்டும்.. (குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சி.. இன்னும் கவனம் செலுத்தினால் நல்லபடியாக வரலாம்..)

rocky
01-09-2007, 03:40 PM

மிக்க* ந*ன்றி ஆத*வா. நிச்ச*ய*ம் முய*ற்சிக்கிறேன்.

பூமகள்
01-09-2007, 03:56 PM
"கஸ்டப்பட்டு வளர்த்த புள்ள
காப்பாத்துவான்னு பார்த்துபுட்டு..
கலங்கிபோயி.... கிணத்துப்பக்கம்
போறதென்ன ஆத்தா..
நாளை உனக்கும் அதான்னு
ஓம்மவனுக்கு ஒத்தவார்த்த
சொல்லி போவேன் ஆத்தா..!!"

ரொம்ப அருமையான கரு... நிதர்சனம். பெற்றோரைக் கண்கலங்க வைக்கும் பிள்ளைகளுக்கு சாட்டையடி.
வாழ்த்துக்கள்.. தொடர்ந்து படையுங்கள் ராக்கி.:icon_good:

rocky
01-09-2007, 03:59 PM

மிக்க* ந*ன்றி பூம*க*ள், ஆனால் நீங்க*ள் சொன்ன*துபோல் சொல்லிவிட்டு போக* எந்த* தாய்க்கும் ம*ன*து வ*ராது என்று நினைக்கிறேன்.