PDA

View Full Version : அண்ணன் தம்பி.



சாராகுமார்
24-08-2007, 03:30 PM
அண்ணன் தம்பி

பள்ளியில் தகராறு
ஒன்றாக நின்றார்கள்..

தெருவில் தகராறு
ஒன்றாக நின்றார்கள்..

சொந்தத்தில் தகராறு
ஒன்றாக நின்றார்கள்..

சொத்து தகராறு
தனியாக நின்றார்கள்..

வெட்டு குத்து
என்றார்கள்.

அமரன்
24-08-2007, 03:38 PM
அவர்களுக்கு ஆபத்து
கூட்டணி அரசியல்...
அவனுக்கு ஆபத்து
கட்சியில் கல்தா..

பாசத்தில் இதேல்லாம் சகஜமப்பா எனும் நிலை.
அதை அழகு கவியில் சொன்ன சாராகுமாருக்கு பாராட்டுக்கள்.

மனோஜ்
24-08-2007, 03:52 PM
உண்மைதான் சாராகுமார்
பணம் என்றால் பினமும் வாயை பிளக்கும் என்பார்களே அது இதுதான் அதை கவிதையாக கொடுத்தது அருமை வாழ்த்துக்கள்

அக்னி
24-08-2007, 07:37 PM
அழியா பந்தங்களை
எதிர்க்கும்போது ஒற்றுமை...
அழியும் சொத்துக்களை
பிரிக்கும்போது வேற்றுமை...

ஒரு பிரிவினையில் தோன்றும் பிரிவினைகளை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்...
பாராட்டுக்கள் சாராகுமார்...

இலக்கியன்
24-08-2007, 09:11 PM
இதைத்தான் கவியரசு கண்ணதாசன் சொன்னார் அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே. வாழ்த்துக்கள் தொடரட்டும்

சாராகுமார்
28-08-2007, 05:46 PM
நன்றி அமரன்,மனோஜ்,அக்னி, இலக்கியன் அவர்களே நன்றி.

இளசு
29-08-2007, 08:30 PM
யாதார்த்தம் ஒரு கசப்பான மருந்து..
பாராட்டுகள் சாராகுமார்!

ஆதவா
31-08-2007, 07:59 AM
கிட்டத்தட்ட இதேமாதிரி ஒரு கவிதை ராக்கியின் பாகப்பிரிவினை படித்தேன். இங்கே சொத்துப் பிரிதலில் இரு பிணங்களின் மனம் சண்டையிடுகிறது. அந்த கவிதையில் சொத்து பிரிதலுல் இரு மனங்கள் பிணமாக்கப்பட்டு மண்டியிடப்படுகிறது.

கவிதைக்கான கரு மிகப்பழையது. ஈரிரு வரிகளாய் எழுதியிருந்தாலும் இன்னும் கொஞ்சம் வித்தியாசப்படுத்தியிருக்கலாம். தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம். இது என் கருத்து மட்டுமே/

வாழ்த்துக்கள்.

சாராகுமார்
31-08-2007, 09:04 AM
யாதார்த்தம் ஒரு கசப்பான மருந்து..
பாராட்டுகள் சாராகுமார்!

நன்றி இளகிய மனசு படைத்த இளசு அவர்களே.

சாராகுமார்
31-08-2007, 09:10 AM
ஆதவா அவர்களுக்கு நன்றி.உங்கள் நல் கருத்துக்களை கண்டிப்பாக ஏற்றுக்கொள்கிறேன்.சிலர் படிப்பதில்லை,சிலர் பிடித்த நண்பர்களின் பதிப்புக்களை மட்டும் படிப்பார்கள்.உங்கள் மாதிரி பல நண்பர்கள் மட்டுமே எங்களை மாதிரி புதியவர்களின் பதிப்பை படித்து பின்னுட்டம் இடுவது மிக்க மகிழ்ச்சி.நன்றி.

ஓவியன்
07-09-2007, 02:35 AM
ஒரு பாடல் வரிகள் வரும், ''பூமியை வெல்ல போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு............!!!"

ஆனால் இந்தக் கலியுகத்திலே யார் தான் ஆசையத் துறக்க முன் வருகிறார்கள்........?

அப்படி ஆசை விட அன்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் சகோதரர்கள் கிடைப்பதென்பது காலத்தின் பரிசு........