PDA

View Full Version : நக்கல் வாழ்கை வரலாறு - லொள்ளுவாத்தியார்lolluvathiyar
24-08-2007, 12:32 PM
லொள்ளுவாத்தியாரின் வீர வாழ்கை நக்கல் வரலாறு

மன்ற உறுப்பினர்களே, கீழே கொடுக்கபட்டுள்ள
அரசியல் விளையாட்டு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11897)
என்ற ஆதவா ஆரம்பித்த ஒரு நக்கல் திரியில் ஓவியர் ஒரு கட்சி நடத்த மனோஜ் ஒரு கட்சி நடத்த நானும் லொள்ளர்கள் முன்னேற்ற கலகம் என்ற அரசியல் கட்சி ஆரம்பித்து அனைவரும் அவ்வபோது ரகளை செய்து வருகிறோம். பிரச்சாரம் கன்னாபின்னா என்று போய் கொண்டிருகிறது.
அதில் என்னிடம் மோத வேண்டாம் அப்புறம் என் வரலாற்றை சொல்ல வேண்டி வரும் என்று அடிக்கடி லொள்ளு நக்கல் பண்ணி வந்தேன். அப்போது ஓவியர் என்னை ஒரு கேள்வி கேட்டார். இவரு பெரிய ழோழர் பரம்பரை சும்மா பேச வந்துட்டாரு என்று. அதிலிருந்து நக்கலாக லொள்ளுவாத்தியார் வாழ்கை வரலாறு எழுத முடிவு எடுத்து இதோ பதித்து விட்டேன்.

இது முழுவதும் வித்தியாசமான கற்பனையே

லொள்ளுவாத்தியார் ஏதோ சாதாரண ஆள் என்று நினைத்து விடாதீர்கள், நாட்டுக்காக என்னேன்ன தியாகங்கள செய்த பரம்பரையில் இருந்து வந்தவர் என்பதை சுருக்கமாக கூறுகிறேன். லொள்ளுவாத்தியார் தந்தையார் ஜில்லுவாத்தியார் தஞ்சையை சேர்ந்தவர். இதிலிருந்தே தெரியவில்லை ழோழ நாட்டை சேர்ந்தவர் என்று. ஏதோ ஜில்லுவாத்தியார் பரம்பரை ராஜ ராஜ சோழருக்கு தளபதியாகவோ அல்லது மெய்காப்பளராகவோ இருந்திப்பார் என்று நினைக்க வேண்டாம்?

ஜில்லு வாத்தியார் சோழ அரசாங்கத்தில் வடாம்பாளூர் அரச பரம்பரை. எங்கள் மூதாதையார்களில் ஒப்பற்ற கழுவாமுடித்தேவர் என்று அரசர் ஒருவர் இருந்தார். .கிகி 600 ஆம் ஆண்டு சாளுக்கியருடன் நடந்த போரில் சாளுக்கியரை வென்று வீரமரணம் அடைந்தார். எப்படி என்றா கேட்கிறீர்கள் இவருடைய குதிரை இவர் மேல் விழுந்து நசுக்கி விட்டது. ஆம் இவருக்கு குதிரைக்கு தீனி போடும் வீர வேலை போர்களத்தில் சோழ சக்ரவர்த்தி தந்திருந்தார். ஆகையால் இவரை குதிரை கீழ் துஞ்சிய வடாம்பாளர் என்று அழைக்க பட்டார். இவரை பற்றிய திருகுனசம்மந்தமில்லார் பாடிய பாடல் ஒன்று கூட உள்ளதாம்.

பரிதி கீழ்
தடுக்காமல் விழுந்த
வடாம் பாளார்
கழுவா மடைய விந்தை
அருள் ஈசனே

லொள்ளு வாத்தியார் பரம்பரை எத்தனை நன்மைகள் செய்தார்கள் தெரியுமா. எத்தனை கோவில்கள் கட்டி தொண்டு செய்தார்கள் தெரியுமா? சொல்கிறேன் கேளுங்கள் ஆற்று மண்ணால் அதுவும் ஆற்றுக்கு நடுவிலே ஆற்றில் தண்ணீர் ஓடாத போது சுமார் 1000 மில்லிமீட்டர் உயரம் கோவில்கள் எழுப்பினார்கள். பசி என்று யார் வந்தாலும் 50 அரிசி தானம் செய்யும் தான பரம்பரை.

லொள்ளுவாத்தியார் தாயார் மதுரையை சேந்தவர். பாண்டிய வம்சத்தில் உதிர்த்தவர். ஆகையால் லொள்ளுவாத்தியார் உடலில் வீர சோழ பாண்டிய ரத்தம் ஓடுகிறதல்லவா? ஆங்கிலேயர் காலத்தில் லொள்ளுவாத்தியாரின் தந்தை ஜில்லுவாத்தியார் அனுராதபுரத்தில் உத்தியோகத்தில் இருந்தார். அனுராதபுரம் இப்பொழுது இலங்கையில் இருக்கிறது. அங்கு வளர்ந்த லொள்ளுவாத்தியார், ஆங்கிலேய அரசுக்கு எதிராக படு பயங்கரமாக போராடிய போராளிகளில் ஒருவர். ஆங்கிலேய அரசு லொள்ளுவாத்தியாருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து விட்டது.

ஆங்கிலேயரிடம் அகபடாமால் லொள்ளுவாத்தியார் தொண்டைமான் ஆற்றை அடைந்தார். அங்கு இருக்கும் தகவல் தெரிந்த ஆங்கிலேயர் லொள்ளுவாத்தியாரை ஹெலிகாப்டரில் துரத்தினார்களாம். வீரத்தில் சிறந்த லொள்ளுவாத்தியார் யானை இரவு என்ற கடல் பகுதியில் குதித்து கடலுக்கடியில் ஒழிந்து கொண்டார். இப்பொழுது தெரிந்து விட்டதா லொள்ளுவாத்தியாரின் தைரியத்தை கடலில் குதிக்க வேறு யாருக்கு இப்படி ஒரு தைரியம் வரும்.
(பி.கு யானை இரவு கடல் பகுதி இடுப்பளவு ஆழம் தான் இருக்கும்)

பிறகு இரவு கடல் அலையால் அடித்து வர பட்டு ராமேஸ்வரத்தில் ஒதுங்கினார். அங்கிருந்து ஆங்கிலேயர்கள் கன்னில் மன்னை தூவி வடக்கு சென்று விட்டார். லோக்மானிய திலகரை சந்திக்க போகும் வழியிலேயே லொள்ளுவாத்தியார் ஆங்கிலேயரிடம் மாட்டி கொண்டார். சில காலம் சிரையிலிருந்தார். கோர்ட்டுக்கு கொண்டு செல்லும் வழியில் ஜீப் கவிழ்ந்ததால் வீரமாக தப்பித்து லொள்ளுவாத்தியார் மாறுவேடமிட்டு லாகூர் சென்றார். அங்கு லாலா லஜபுட் ராயிடம் சேர்ந்து ஆங்கிலேய அரசுக்கு எதிராக போரட முடிவு செய்தார். ஆனால் அங்கு ஒரு பிக்பாக்கட் வழக்கில் இவரை ஆங்கிலேய அரசு குற்றவாளியாக்கி பிடித்து அந்தமான் சிரையில் தள்ளி விட்டார்கள்.

இதோ ஆங்கிலேய அரசுக்கு எதிராக இவர் மீது போட பட்ட வழக்குகள்

1. தபால் பெட்டியை திருடி இரும்பு கடையில் விற்றது
2. சிறை சாலையிலும் சிறைக் கம்பி திருடி, கடத்த முயன்றது
இப்படி பல வழக்குகள்.

ஒரு நாள் ஜப்பான் அந்தமானை பிடித்து விட்டது. நேதாஜி சிறை கைதிகளை விடுவிக்க சொன்னதினால் விடுதலை செய்ய பட்டு சென்னைக்கு பக்கத்தில் கடலில் குதித்து இறக்கி விடபட்டனர். மீண்டும் இவர் ஆங்கிலேய அரசுக்கு எதிராம பல வீர தீர செயல்களை செய்தார்.

போஸ்டர்கள் மீது சாணி அடித்தது
பிரிட்டிஷ் போலீசின் தொப்பியை திருடுவது
போலிஸ் ஜீப்பை பஞ்சர் செய்வது
இப்படி பல வீர சாகசங்கள் செய்திருகிறார்


காந்தியை சந்தித்து அவருடன் போராட குஜராஜ் கூட சென்றார். ஆனால் அதற்குள் சுதந்திரம் கிடைத்து விட்டது.
இது தான் லொள்ளு வாத்தியாரின் வீர வரலாறு.
இப்பொழுது தெரிந்ததா லொள்ளுவாத்தியார் பரம்பரை எப்படி பட்ட பரம்பரை என்று இன்னும் ஏன் யோசிக்க வேண்டும் லொள்ளுவாத்தியாரின் லொள்ளர்கள் முனேற்ற கலகத்தில் ரத்தம் கொதிக்கவில்லை.

லொள்ளுவாத்தியாரின் பரம்பரையை பற்றி இன்னூ ஏதாவது மயிர் கூச்சும் தகவல் வேண்டுமா?

Narathar
24-08-2007, 12:51 PM
லொள்ளூவாத்தியார் வரலாற்றை படித்து கண்ணீர் விட்டு அழுது மகிழ்ந்தேன்......

அடடா!!! எப்படிப்பட்ட பரம்பரை உங்களுடையது?

உங்கள் கட்சியில் சேராமல் விட்டுவிட்டேனே???!!!!!!

மதி
24-08-2007, 01:29 PM
சூப்பர்..லொள்ளு வாத்தியாரே......!

மனோஜ்
24-08-2007, 01:54 PM
லொள்ளுவாதியாரின் வரலாற்றை படித்த இரண்டு கழுதைகள் தற்கோலை செய்து கொண்டது இன்னும் இருண்டு கழுதைகள் உயிருக்கு ஊசலாடிகொண்டிருக்கிறது

வாழ்த்துக்கள் லொள்ளுவாத்தியார் நல்ல கதை விடுறீங்க

ஓவியன்
24-08-2007, 02:05 PM
வாத்தியாரே வர வர உம்முடைய லொள்ளு உச்ச ஸ்தாயிலே போயிட்டிருக்கு............!
மொட்டந்த தலைக்கும் முழங்காலுக்கும் நீர் போட்ட முடிச்சுக்களால் நான் விழுந்து விழுந்து சிரித்து விட்டேன்............!

சூப்பரப்பு − இப்படியே போனால் என்னோட வரலாற்ரையும் எழுத வேண்டி வரும் போல இருக்கே...!!! :icon_wink1:

பூமகள்
24-08-2007, 02:06 PM
சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துவிட்டது வாத்தியாரே...!
அழகான வரலாறு..... வரலாற்றை மிஞ்சும் வரலாறு படைத்துவிட்டீர்..:nature-smiley-003:

பரிதி கீழ்
தடுக்காமல் விழுந்த
வடாம் பாளார்
கழுவா மடைய விந்தை
அருள் ஈசனே
அழகான புறநானூற்றுப் பாடல்(அது போல ஹி ஹி..). அர்த்தம் தான் புரியலை... ஆனால் சிரிப்பு மட்டும் வந்தது நன்றாய்...!!:icon_wink1:

மலர்
24-08-2007, 02:06 PM
வாத்தியாரே உம்முடைய வீரத்தை பற்றி படித்து அப்படியே அழுது விட்டேன்....
என்னே உமது பரம்பரையின் தொண்டும்...உமது வீர சாகசமும்....
வாழ்க உம் புகழ்......(வளருமா இந்த வையகம்...?)
எட்டுத்திக்கும் உம் புகழ் பரவ வாழ்த்துக்கள்....

lolluvathiyar
24-08-2007, 02:41 PM
உங்கள் கட்சியில் சேராமல் விட்டுவிட்டேனே???!!!!!!

இப்பவும் ஒன்னும் மோசம் போகல் அங்கு ராஜினாமா பன்னிடலாமே
பிறகு இங்கு சேர்ந்துகலாமே

ஓவியன்
24-08-2007, 02:52 PM
இப்பவும் ஒன்னும் மோசம் போகல் அங்கு ராஜினாமா பன்னிடலாமே
பிறகு இங்கு சேர்ந்துகலாமே

என்னுடைய வரலாறு தெரிந்திருந்தால் இப்படியெல்லாம் பேச மாட்டீர்.......!!! :waffen093:

மலர்
24-08-2007, 02:57 PM
வந்துட்டாரய்யா... அடுத்த வரலார சொல்லுரதுக்கு...

மலர்
24-08-2007, 02:58 PM
என்னுடைய வரலாறு தெரிந்திருந்தால் இப்படியெல்லாம் பேச மாட்டீர்.......!!! :waffen093:

தெரிந்ததால் தான் இவ்வளவு தைரியமா வாத்தியாரால பேச முடியுது....இல்ல வாத்தியார*

lolluvathiyar
24-08-2007, 03:02 PM
என்னுடைய வரலாறு தெரிந்திருந்தால் இப்படியெல்லாம் பேச மாட்டீர்.......!!! :waffen093:


தெரிந்ததால் தான் இவ்வளவு தைரியமா வாத்தியாரால பேச முடியுது....இல்ல வாத்தியார*

ஆமாம்மா இவரு வரலாறு தான் ஊருக்கே தெரியுமே.
அதையும் நானே எழுதி இதோ இங்கு கிறுக்கு பதிலில் பதித்திருகிறேன்

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=260376&postcount=713

படிச்சு பாத்தா தெரியும் இ ந்த லார்டு லபகுதாஸ் வரலாறு

மலர்
24-08-2007, 03:11 PM
ஆகா ஓவியனின் வரலாறு நாடு அறிந்ததே.....ஓவியனின் புகழ் பரப்பிய வாத்தியாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

சாராகுமார்
24-08-2007, 03:39 PM
கலகம் கட்சி தலைவரின் வாழ்க்கை வரலாறு "இது வாழ்க்கை வரலாறு அல்ல அல்ல.அதையும் தாண்டி புனிதமானது".

மலர்
24-08-2007, 03:48 PM
புனிதமானது....... புனிதமானது........ புனிதமானது.........
சாராகுமார் எக்கோவை மறந்து விட்டீர்களே...

அமரன்
25-08-2007, 09:13 AM
அனுராத புரம், தொண்டைமான் ஆறு, யானை இறவு ம்...ம்....உங்கள் வரலாறு புரிகிறது வாத்தியாரே...!


பிறகு இரவு கடல் அலையால் அடித்து வர பட்டு ராமேஸ்வரத்தில் ஒதுங்கினார். அங்கிருந்து ஆங்கிலேயர்கள் கன்னில் மன்னை தூவி வடக்கு சென்று விட்டார்

GUN இல் மண்ணைத்தூவினால் சுடாது என்பது தெரிந்த _______ஞானி நீங்கள். சிரிக்க வைச்சு சிரிக்க வைச்சு என்னை சிறைபிடித்துவிட்டீர்கள் வாத்தியாரே...!

சிவா.ஜி
25-08-2007, 09:28 AM
அடடா..என்னே ஒரு வரலாறு...அதுவும் வாத்தியார் லொள்ளிய மன்னிக்கவும் சொல்லியவிதமிருக்கிறதே.... பிரபல சரித்திர ஆசிரியர்களே புறமுதுகிட்டு ஓடவேண்டும்.இப்படிப்பட்ட வீர வரலாறை பின்புலமாய்க் கொண்டிருக்கும் எங்கள் தானைத் தலைவரின் கட்சியில் இருக்க பெருமிதம் கொள்கிறேன்.சூப்பரப்பு தலைவா.

Narathar
25-08-2007, 10:03 AM
என்னுடைய வரலாறு தெரிந்திருந்தால் இப்படியெல்லாம் பேச மாட்டீர்.......!!! :waffen093:
பாராட்டு கொஞ்சம் கூடிப்போச்சோ???!!!!!

lolluvathiyar
25-08-2007, 03:58 PM
லொள்ளுவாதியாரின் வரலாற்றை படித்த இரண்டு கழுதைகள் தற்கோலை செய்து கொண்டது

யாரு அந்த கழுதைகள் என்று உறக்க சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்


இன்னும் இருண்டு கழுதைகள் உயிருக்கு ஊசலாடிகொண்டிருக்கிறது


அதுக்கு உங்க ரத்தம் தான் பொருந்தும்னு மருத்தவர் சொல்லராங்கநல்ல கதை விடுறீங்க

அதுகூட இல்லீனா அரசியல்ல நிலைக்க முடியுமா கனக்குபுலி

அக்னி
25-08-2007, 04:34 PM
வாத்தியாரே...
என்வென்று சொல்ல... எப்பிடிச் சொல்ல...
உங்கள் அருமை பெருமையான வரலாறை படித்துச் சுவைத்த அனைவரும்,
பரிதாபத்திற்குரியவர்களே...
நானும்தான்...
ஈடாக... படித்த அனைவருக்கும் தலா 1 iCash எனினும் கொடுத்து விடுங்கள்...
மனதைத் தேற்ற முடியவில்லை...

நிறைவாய்ச் சிரிக்க வைத்தமைக்கு 100 iCash.

lolluvathiyar
26-08-2007, 08:23 AM
அழகான வரலாறு..... வரலாற்றை மிஞ்சும் வரலாறு படைத்துவிட்டீர்


வ*ர*லாறு இன்னும் முடிய*வில்லை பூம*க*ளே, இன்னும் நிரைய* இருக்குஅழகான புறநானூற்றுப் பாடல்(அது போல ஹி ஹி..). அர்த்தம் தான் புரியலை.

அர்த்தம் புரிந்தா அப்பரம் அரசியலில் இருக்க முடியுமா?

praveen
27-08-2007, 03:43 PM
அடுத்த பாகத்தை சீக்கிரம் தாருங்கள் Mr.லொள்-ளு வாத்தியாரே, இதை படித்து பின் சிரித்து எனது பல் சுளுக்கி கொண்டது. அதை சரி செய்ய புதிதாக படித்து தான் சிரிக்க வேண்டுமாம்.

lolluvathiyar
28-08-2007, 07:38 AM
அனுராத புரம், தொண்டைமான் ஆறு, யானை இறவு ம்...ம்....உங்கள் வரலாறு புரிகிறது வாத்தியாரே...!


என்ன புரிந்தது சற்று விளக்கமாக சொல்லுங்கள்

தங்கவேல்
31-08-2007, 01:08 PM
அழுகின தக்காளியும் , முட்டைகளையும் பரிசாக தருகிறேன்... தானை தலைவன்.. லொள்ளுவாத்தியார் வாழ்க வாழ்க..

lolluvathiyar
04-09-2007, 11:59 AM
பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

ஈடாக... படித்த அனைவருக்கும் தலா 1 iCash எனினும் கொடுத்து விடுங்கள்...
நிறைவாய்ச் சிரிக்க வைத்தமைக்கு 100 iCash.

இபணத்துக்கு நன்றி, அனைவருக்கும் என்றால் படித்தவர்கள் அனைவருக்குமா அல்லது பின்னூட்டம் இட்டவர்களுக்கு மட்டுமா.

மன்மதன்
04-09-2007, 12:12 PM
அடடா.. அடடடடா... அடேயப்பா.. :D இன்னும் இருக்குதா மயுர் கூச் தகவல்..:D

ஜெயாஸ்தா
05-09-2007, 01:33 PM
வாத்தியின் மயிர் கூச்செறியும் வீர வரலாற்றை தெரிந்துகொண்டேன். அவருக்கு என் சார்பாக எறும்புப்பல் ஒன்றை பரிசாக அளிக்கிறேன். வாத்தியாரே அதை உங்கள் கழுத்தில் அணிந்து கொள்ளுங்கள். அது உங்கள் வீரத்தை இந்த உலகுகிற்கு பறைசாற்றும்.