PDA

View Full Version : அந்திப்பொழுது



சிவா.ஜி
24-08-2007, 07:57 AM
ஆதவனின் அக்னிக்கரங்கள்
ஆதரவாய் அடங்கி
அரவணைக்கும்
அந்திப்பொழுது...!

கதிரவன்
கடல்மங்கையைக்
கூடுவதைக் கண்ட
வானமங்கை முகம் சிவக்கும்
அந்திப்பொழுது.....!

கடந்து செல்லும்
குமரிப்பெண்ணின்
முந்தானை உரசலாய்
முகம் தடவும்
தென்றலோடொரு
அந்திப்பொழுது....!

நங்கூரமிட்ட நாவை
நர்த்தனமாட வைக்கும்
குறும்பலைகளின்
குதியாட்டத்தில் ஓர்
அந்திப்பொழுது....!

இருள் போர்வையில்
மருள் நீங்கிய
குஞ்சு நண்டுகளின்
கடல் விடுத்த
கரையுலா காண
அந்திப்பொழுது...!

கவியோரெல்லாம்
கவிதை படைக்க
காட்சிதரும் இந்த
கடற்கரையின்
அந்திப்பொழுது...!

பூமகள்
24-08-2007, 08:07 AM
கதிரவன்
கடல்மங்கையைக்
கூடுவதைக் கண்ட
வானமங்கை முகம் சிவக்கும்
அந்திப்பொழுது.....!


அழகான கவி.... வர்ணனை அழமாய் அந்திப்பொழுது பற்றி.... அசத்திவிட்டீர் சிவா.ஜி அவர்களே... பாராட்டுக்கள்...!:icon_08:

"ஆழ்கடல் ஆழும்
ஒளிரும் மின்மினி
மீன்களால்
ஒளியைப் பாய்ச்சும்
ஓர் அந்திப் பொழுது..:nature-smiley-002: !!"

வாழ்த்துக்கள்... கலக்குங்கள்...சிவா.ஜி சகோதரரே..!

சிவா.ஜி
24-08-2007, 08:16 AM
நன்றி பூமகள்
அசத்தலான இன்னுமொரு வர்ணனையை அந்திப்பொழுதுக்கு அளித்துள்ளீர்கள்..அருமை.

அமரன்
24-08-2007, 08:55 AM
வாவ். சூப்பர்(தமிழில் எப்படி சொல்வது) எத்தனை பொழுதுகள் பார்த்தாலும் அதிகாலையும் அந்தியும் தரும் சுகமே தனி. அதில் சொக்கி சிவா தந்த கவி இனிமை. ஆதவனவன் (இவருக்கு இதே வேலையாகிவிட்டது) அக்னிக்கரங்களால் வானமகளுக்கு டாட்டா காட்டிவிட்டு கடல்பெண்ணை அணைக்கிறானாம். அதைபார்த்து வானதேவதை கோபத்தில் சிவக்க கடல்கன்னி வெட்கத்தில் சிவப்பாள்.அழகான காட்சிக்கு அபாரமான கற்பனை. முந்தானை உரசல்போல வருடிச்செல்லுமாம் தென்றல் (சிவாவின் வயது புரியுது. எனக்கு துப்பட்டா முனைதான் உரசுது மக்கா). கலக்கல். நங்கூரமிட்ட நா நர்த்தனமிடுகிறது. ஏன்..? ஜொள்ளா அல்லது பள்ளா? எனக்கு இரண்டுமே...சிவாவுக்கு..? அந்த அலையின் ஜதிகேற்ப ஒயிலாக நடந்து வரும் நண்டுகள்.....சிவா ஒரு நல்ல ரசிகனே. பாராட்டுக்கள் சிவா. தொடருங்கள்.

செவ்வட்டக் கொடி
ஏறுகையிலும்
இறங்கையிலும்
சிவக்கும் வானம்
இராணுவ வீரன் போல்...!

இறங்குகையில் மட்டுமே
காண்போம் நாம்
சிவக்கும் கடல்
சுதந்திரத் தியாகிபோல்...!

இலக்கியன்
24-08-2007, 09:07 AM
கதிரவன்
கடல்மங்கையைக்
கூடுவதைக் கண்ட
வானமங்கை முகம் சிவக்கும்
அந்திப்பொழுது.....!

மிகவும் பாரட்டுக்கள் சிவா ஜி அழகான சொல் நயம் விளையாடுகின்றது. தொடர்ந்து படையுங்கள்

ஷீ-நிசி
24-08-2007, 09:12 AM
கவிதை எழுதும் கவிஞர்கள் அனைவருக்கும், அமைதியாய் கற்றுகொடுக்கும் ஆசான் தான்... இந்த அந்திப்பொழுது...

சூரியன் மாலை நேரம் கீழிறங்கி மறையும்.. கடற்கரையில் பார்த்தால்,கடலோடு ஐக்கியமாவது போல் இருக்கும்... அதை கடல் மங்கையாகவும்...

காலை முதல் மாலை வரை என்னோடு இருந்துவிட்டு இப்பொழுது கடல்மங்கையிடம் போகிறானே என்று வானம் என்னும் வான்மங்கை கோபத்தில் முகம் சிவக்கிறது.. அதுதான் இந்த அந்திப்பொழுது...

வாவ்...

சூரியன்... வான்மங்கை... கடல்மங்கை... மிக உயர்ந்த கற்பனை....


ஒருவனுக்கு ஒருத்திதானே....
சூரியனே..
உனக்கு மட்டும்
இருவரா....

காலையில்
வான் மங்கை
மாலையில்
கடல் மங்கை.....

வாழ்த்துக்கள் சிவா...

அக்னி
24-08-2007, 11:36 PM
காலையில் தட்டியெழுப்பும்
சூரியனின் கிரணங்கள்..,
மாலையில் தாலாட்டும்,
பூரிப்பின் தருணங்கள்...
தினத்தின் களைப்பை,
மனதிலும் களையும்..,
கதிர்கள்...

அருமை...
பாராட்டுக்கள் சிவா.ஜி...

jpl
25-08-2007, 01:09 AM
சிவா.ஜியின் கூற்று..


கடந்து செல்லும்
குமரிப்பெண்ணின்
முந்தானை உரசலாய்
முகம் தடவும்
தென்றலோடொரு
அந்திப்பொழுது....!

எல்லோரையும் கவர்ந்த காந்த வரிகள் இவை...

சிவா.ஜி
25-08-2007, 04:17 AM
பிரமாதம் அமரன்.உங்களுக்கும் அதே வாவ்+சூப்பர்.அழகான பின்னூட்டம்.
அதிலும் உங்கள் பார்வையின் வானச்சிவப்பை சொன்ன விதம் அருமை.
மனம் நிறைந்த நன்றி அமரன்.
நங்கூரமிட்ட நாவென்றால் கப்பலை நினைத்துதான் எழுதினேன்..ஆனால் நாக்குக்கும் அது பொருந்துகிறதென்ற உங்கள் கவிப்பார்வையில் வியக்கிறேன்.
(முந்தானையை வைத்து வயது கண்டுபிடிக்கிறார்கள்...எமகாதகர்கள்...நற..நற..)

சிவா.ஜி
25-08-2007, 04:19 AM
மிகவும் நன்றி இலக்கியன்.உங்களின் இலக்கிய கவிதை ஏற்படுத்திய தாக்கம்,ஆனால் உங்களளவு என்னால் இலக்கிய நயத்துடன் எழுத முடியவில்லை.

சிவா.ஜி
25-08-2007, 04:21 AM
அபாரமான கவிப்பார்வையில் மன்றத்தின் கவிச்செல்வன் ஷீயின் பின்னூட்டம்...மயக்குகிறது.மனமார்ந்த நன்றிகள் ஷீ−நிசி.

சிவா.ஜி
25-08-2007, 04:23 AM
காலையில் தட்டியெழுப்பும்
சூரியனின் கிரணங்கள்..,
மாலையில் தாலாட்டும்,
பூரிப்பின் தருணங்கள்...
தினத்தின் களைப்பை,
மனதிலும் களையும்..,
கதிர்கள்...

அருமை...
பாராட்டுக்கள் சிவா.ஜி...

அசத்தலான பின்னூட்டக்கவிதை....அக்னி கலக்கிட்டீங்க.நல்ல சொல்லாடல்.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இப்படிப்பட்ட பின்னூட்டங்களைப் பார்க்கும்போது. மிக்க நன்றிகள் அக்னி.

சிவா.ஜி
25-08-2007, 04:25 AM
சிவா.ஜியின் கூற்று..
எல்லோரையும் கவர்ந்த காந்த வரிகள் இவை...

ஒரே அலைவரிசயிலான எண்ண ஓட்டங்களை அறியும்போது மிக மகிழ்வாக உணருகிறேன்.மிக்க நன்றி ஜெயபுஷ்பலதா.

அமரன்
25-08-2007, 09:36 AM
நங்கூரமிட்ட நாவென்றால் கப்பலை நினைத்துதான் எழுதினேன்..ஆனால் நாக்குக்கும் அது பொருந்துகிறதென்ற உங்கள் கவிப்பார்வையில் வியக்கிறேன்.
(முந்தானையை வைத்து வயது கண்டுபிடிக்கிறார்கள்...எமகாதகர்கள்...நற..நற..)

ஹி...ஹி....வயசுக்கோளாறுங்க..

சிவா.ஜி
25-08-2007, 09:38 AM
ஹி...ஹி....வயசுக்கோளாறுங்க..

அப்படியா....ஏப்பு ஏதாவது துப்பட்டாவாவது உரசியதா....?

அமரன்
25-08-2007, 09:40 AM
அப்படியா....ஏப்பு ஏதாவது துப்பட்டாவாவது உரசியதா....?

போங்கப்பு....துப்பட்டா உரசல் பார்த்து துப்பல் வழிந்த கடுப்பில இருக்கேன்....டீட்டைல்சு கேக்கிறீங்க..

இதயம்
25-08-2007, 09:46 AM
போங்கப்பு....துப்பட்டா உரசல் பார்த்து துப்பல் வழிந்த கடுப்பில இருக்கேன்....டீட்டைல்சு கேக்கிறீங்க..

துப்பட்டா உரசியதால் துப்பலை வழியவிட்டவர்களை பற்றி துப்பு கேட்பவர்களுக்கு துப்பு கெட்டு பதில் சொல்லும் அமரா.. அந்த பெண் "உங்களை துப்பட்டா..?" என கேட்டால்....??????????:nature-smiley-002::nature-smiley-002:

அமரன்
25-08-2007, 09:49 AM
எஸ்டா செல்லம்..

இதயம்
25-08-2007, 09:53 AM
எஸ்டா செல்லம்..

பெண்களால் "மனங்கெட்டவர்கள்" எத்தனையோ பேரை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இத்தனை "மானங்கெட்டவர்களை"(!!) பார்த்ததில்லை. நான் ஆணாக பிறந்ததற்காக மிகவும் வருந்திருக்கிறேன். அடுத்த பிறவியில் பெண்ணாக பிறக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அட்லீஸ்ட், அமரனை ஆசையோடு துப்பலாமே..!!:p:p

அமரன்
25-08-2007, 09:55 AM
ஹி...ஹி....நான் எஸ் என்றது எஸ்கேப்பு...இப்போதும் எஸ்ஸாகிறேன்..இல்லைனா சிவா மல்லுக்கு வந்துவிடுவார்..

இதயம்
25-08-2007, 09:57 AM
ஹி...ஹி....நான் எஸ் என்றது எஸ்கேப்பு...இப்போதும் எஸ்ஸாகிறேன்..இல்லைனா சிவா மல்லுக்கு வந்துவிடுவார்..


அதானே பார்த்தேன்.! நீங்கள் லொள்ளு கட்சி உறுப்பினரோ என்று சந்தேகித்து விட்டேன்..!!:icon_hmm:

ஓவியன்
25-08-2007, 10:43 AM
ஆகா சிவா அருமை..............!

எத்தனை எத்தனை கவிதைகள் வந்தாலும் திகட்டாத விடயங்களில் ஒன்று இந்த அந்தி..............!

நீங்கள் அழகாக எளிமையாக எடுத்துச் சேர்த்த வரிகள் அருமை...........
அதற்கு நீங்கள் கையாண்ட உவமைகள் இன்னும் அருமை...........

குறிப்பாக.......
கடந்து செல்லும்
குமரிப்பெண்ணின்
முந்தானை உரசலாய்

என்ற வரிகளில் மெய்மறந்தேன் மிக்க நன்றிகள் சிவா ஒரு அழகான கவிதை சுவாசத்தை எனக்கு அளித்தமைக்கு...............!

சிவா.ஜி
25-08-2007, 10:51 AM
ஒரு கவிதையை கவியுள்ளத்தோடு ரசிக்கும் உங்களை பெரிதும் ரசிக்கிறேன்....நீங்கள் குறிப்பிட்ட வரிகளை நானும் ரசித்தே எழுதினேன்.ஆனால் கொடுமை பாருங்கள் அமரன் என் வய*தை அதில் கண்டுபிடிக்கிறார்...

ஓவியன்
25-08-2007, 11:00 AM
ஆனால் கொடுமை பாருங்கள் அமரன் என் வய*தை அதில் கண்டுபிடிக்கிறார்...

ஹீ!,ஹீ!
அதே மாதிரி அமரனோட கவிதைகளை வைத்து அவரது வயதைக் கணிக்க முயன்றால் பையன் அழத் தொடங்கிடுவார்...........!!! :sport-smiley-018: